Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டது

Featured Replies

ஸ்ரீலங்காவின் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் மூன்றில் இரண்டு அதிகாரத்துடன் சற்று முன்னர் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சீர்த்திருத்தத்திற்கு ஆதரவாக 161 வாக்குகள் கிடைத்த அதேவேளை எதிராக 17 வாக்குகள் கிடைத்துள்ளன.

இதற்கு சார்பாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.பியசேனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 8 உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான உபேக்சா சுவர்ணமாலினி, நிமல் விஜேசிங்க, லக்ஸ்மன் செனவிரட்ண, அப்துல் காதர், மனுஸ நாணயக்கார ஏர்ல் குணசேகர, பீ திகாம்பரம், பிரபா கணேசன், ஜே ஸ்ரீ ரங்கா ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.

எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.

இறுதி நேரத்தில் நுவரெலியா மாவட்ட ஐக்கியதேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பனர் ஜே ஸ்ரீ ரங்கா அரசுக்கு ஆதரவு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/13089/57/18/d,article_full.aspx

http://www.paristamil.com/tamilnews/news_detail.php?id=2531&v=148

  • கருத்துக்கள உறவுகள்

karunanidhi.jpg

நிருபர்: இலங்கையில் அரசியல் சட்ட திருத்தம் வந்துள்ளதே அது பற்றி?

கருநா: மிக்க மகிழ்ச்சியான செய்தி.. என்னை விட மகிழ்ச்சியடைவர் யார் உளர்.. இங்கே நான் இலங்கை தமிழர்களுக்காக கழகம் செய்ததினை குறிப்பிட விரும்புகிறேன்..

1947 இல் வெள்ளையரிடமிருந்து சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே இலங்கை தமிழர்களூக்காக குரல் குடுத்த கழகம் தி.மு கழகம் எனபதை குறிப்பிடவிரும்புகிறேன்..

அன்றைய தினத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற மாநாட்டில் இலங்கை தமிழர்கள் வழங்கிடு சுயாட்சி.. இல்லையேல் ஆக்கிடுவோம் காட்டாட்சி என அறிஞ்சர் குண்ணா தலைமையில் முழங்கியதை மறக்க இயலுமா? பின்னர் 1962 இல் நடை பெற்றாமாநாட்டிலும் மதுரையில் தி.முகழகத்தின் கோட்பாடுகள் எடுத்துவைத்தோம்.. அது மட்டும் பின்னர் 1967 19681969 என அனைத்து மாநாடுகளிலும் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தொம் என்பதை சொல்லி கொள்ள விரும்புகிறேன்..

நிருபர்: எப்போது இது அமலுக்கு வரும்?

ஆக்க பொருத்தவர்கள் ஆற பொறுக்க வேண்டும்... இவ்வ்வாறு கேள்விகள் கேட்டு ராஜ பசேவை சங்கடத்திற்கு உள்ளாக்க கூடாது..தீர்வு வரும் படி விரைவு படுத்த மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்..

2.gif

அடுத்த நாள் முரசொலியில் தம்பிக்கு கடிதம்:

tblArasiyalnews_95452082158.jpg

உடன்பிறப்பே... செய்தியை கேட்டாய கழகத்தின் முயற்சியால்.. இலங்கையில் தீர்வு வர போகிறது.. உனக்கும் இது உவகையாக இருக்குமே... எனது தலைமையில் ஒரு வெற்றி விழா நடக்க தம்பி ஆவலோடு உள்ளாய்... என அண்ணனுக்கு தெரியும்.. தம்பியின் ஆசைக்கு தடை சொல்ல நான் யார்?

( கருநா பாராட்டும் துறையின் மந்திரிகள் துரைமுருகன மற்றும் ஜெகத்ரட்ச்கன் ஆகியோர் தலைவரின் அடுத்த ஆசையை புரிந்து கொண்டு மாநாட்டு வேலைகளை துவக்குகின்றனர்)

டிஸ்கி: அடுத்த தேர்தலுக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு விட்டது... ரைட்டு tongue.gif

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

தனது குடும்ப அரசியலுக்காக நாட்டின் அரசியல் சட்டங்களையும் சரத்துக்களையும் தனக்குச் சாதகமாக மாற்றிய மகிந்த சிந்தனையைப் பாராட்டும் முகமாக கழகக் கண்மணிகள் ஒரு மகா நாடு நடத்த வேண்டும் என்று கருணா நிதி அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

வாத்தியார்

*********

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் 18வது அடக்குமுறை முகமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் போக்கிரித் தமிழ் அரசியல்வாதிகளின் போலி முகங்கள் வெளிப்பட்டுள்ளது.

சினிமா பைத்திய சக்தி TV / FM நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியான ஸ்ரீரங்காவின் சுயரூபம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக கூட்டமைப்பை விட (ஐ.தே.க. ?) தமிழர் கூட்டமைப்பு அதிகமாக எதிர்த்துள்ளதை பாராட்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டாது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இதைப்பத்தி, அவன் எதிர்த்தான் இவன் எதிர்த்தான் எனச் செய்திகள் வருகின்றனவேயொளிய அத்திருத்தச்சட்டம் எதை உள்ளடக்கியுள்ளது? தற்போதைய அரசியலமைப்புச்சட்டத்திலிருந்து எவ்வகையில் மக்களின் ஜனநாயக உரிமைகட்குப் பாதகமாக அமைகின்றது என்பதைப்பத்தி அங்க தங்களால்தான் நுனிநாக்கு ஆங்கிலம் பேசத்தெரியும் எண்டுசொல்லிக்கொண்டு பாராளுமன்றம்போன கூத்தமைப்போ அன்றேல் அவர்களது வரையறுக்கப்பட்ட பத்திரிகைக் கம்பனிகளோ இதுவரை ஏன் மக்களுக்க எடுத்துச்சொல்லவில்லை? வாக்குப்போடுவதற்கு மட்டுமே மக்களா?

1) அரசியலமைப்பின் 18 -வது திருத்தம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேறி யுள்ளது. அரசியலமைப்புத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வருவதாயின், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தாக வேண்டும்.

இந்நிலையில்இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைத்து அதனை நிறைவேற்றுவதே இலங்கை அரசின் முதற் பணியாக இருக்க வேண்டும்.

2) ஆனால் அரசோ தனக்கு சாதகமாக அரசியலமைப்பை மாற்றியமைக்கும் வியூகத்தை அமைத்து அதை நிறைவேற்றி வருகின்றது. அதன் ஒரு கட்டமே, 18 -வது அரசியல மைப்பு திருத்தச் சட்ட மூலமாகும்.

3) ஏற்கனவே, இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்படும் அரசமைப்புக்கான 18 ஆவது சட்டத் திருத் தத்தில், 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட அற்ப சொற்ப வசதிகளை யும் பறிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகிறது.

அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது போன்று, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விடயங்களை இல்லாமற் செய்வதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இன்னும் அதிக தொலைவுக்கு இழுத்துச் செல்லும் ஜனாதிபதியின் திட்டத்தில் ஒரு பகுதியே இந்தச் சதிவலை.

த எக்கனோமிஸ்ட் : Eighteenth time unlucky

http://www.economist.com/node/16992141?story_id=16992141

சனல் 4 புளக்

http://blogs.channel4.com/world-news-blog/concerns-over-new-powers-for-sri-lanka-

president/13892#comment-6541

உலகம் சிறிலங்காவில் இருந்து படிக்கும் பாடங்கள்:

http://www.worldpoliticsreview.com/articles/6357/world-citizen-the-lessons-of-sri-lanka

ஜனநாயகமே, நீ என் செய்வாய்?

அரசமைப்புக்கான பதினெட்டாவது திருத்தம் அமோகமாக நிறைவேறிவிட்ட பூரிப்பில் திளைத் திருக்கிறது அரசாங்கம்.

அபிவிருத்தி, உலக நாடு களின் வளர்ச்சிக்கு நிகராக முன்னேறும் இலக் குடன் செயற்படுவது, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துதல், அதற்கு வகை செய்யும் விதத்தில் தொழில் வளங்களைப் பெருக்குதல், வறுமையை ஒழித்தல் என்ற சித்தாந்தங்களை ஒப்பேற்றுதல் குறித்து அரசு இனி வாய் பிளக்கப் பேசும். அரசமைப்புத் திருத்தத்தை ஆதரித்து, அரசுக்கு மக்கள் பலம் உண்டு என்று காட்டி, கடந்த புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவேனும் தான் வழங்கிய வாக்குறுதிகளில் அற்பசொற்பத்தை யேனும் செயற்படுத்துவதில் முனைப்புக் காட்டத் தானே வேண்டும்....?

ஜனநாயகம் என்ற முத்திரையுடன் நினைத் ததைச் செய்வதற்கு மேடை அமைக்கப்பட்டு விட்டதால் செய்நன்றி மறந்து செயற்படும் தன்மை, சுபாவம் உடனடியாக உருவெடுக்காது என நம்பலாம்.

அரசாங்கம், தான் நினைத்ததை வலுவூன்றிச் செய்து முடிப்பதற்கு அதன் பக்கத்துக்குச் சாய்ந்து வாக்களித்த மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சாராத எதிரணிக் கட்சிகளைச் சேர்ந்த பதினேழு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் கட்சிகளுக்கும், வாக்காளர்களுக்கும், நாட்டுக்கும் செய்த துரோகம் கண்டனத்துக்குரியதாகும்.

பொதுத் தேர்தலின்போது தாம் சார்ந்திருந்த கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து, அக் கொள்கைகளைக் கடைப்பிடித்து மக்களுக்குச் சேவையாற்றுவதாக உறுதி அளித்தவர்கள், கட் சிக்கும் வாக்காளர்களுக்கும் துரோகம் செய்துவிட்டு அரசுக்குச் சார்பாக வாக்களித்திருக்கிறார்கள்.

தாம் சார்ந்த கட்சியின் நிலைப்பாடு, தவறு என்று கருதினால் தாங்கள் யோக்கியமான அரசி யல்வாதிகள் என்று கூறுவதானால், அவர்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகியிருக்கவேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினா மாச் செய்திருக்கவேண்டும். இந்த இரண்டில் எதனைச் செய்தாலும் தமக்குச் சொகுசு தந்த பதவி பறி போய்விடும் என்பதால் கட்சி தாவி வாக் களித்திருக்கிறார்கள். இவர்களைப் போன்ற பச் சோந்திகளை இனங்காண முடியாத அரசியல் கட்சித் தலைமைத்துவங்கள் கண்டனத்துக்குரி யன. வாக்காளர்கள் முதலில் கட்சிகளின் தாரதம் மியங்களைக் கருத்தில் கொண்டு, அதன் பின் னரே வேட்பாளர்களை ஆதரிக்கிறார்கள். எந்தக் கஷ்டத்தின் மத்தியிலும் எந்த வகையான பசை களையும் பதவிகளையும் நாடாது தமது கட்சிக்கு விசுவாசமாகவும் மக்களுக்கு வாக்காளர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யாதிருக்கக்கூடிய வேட்பாளர்களாகத் தெரிவு செய்வதில் கட்சிகள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதனை புதன்கிழமை நடைபெற்ற கட்சித் தாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

மந்திரத்தால் மாங்காய் விழுத்துவது போன்று அரசாங்கம் கடைசி நேரத்தில் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை கவர்ந்திழுத்தமை அரசியல் துரோகம் என்பது ஒருபுறம். தமது தரப்பு எதிர்க் கட்சியாக இருந்து கடைசி நிமிடத்தில் கட்சித் தாவல் நடை பெற்றால் தமக்கு ஏற்படக்கூடிய ஏமாற்றமும் பாதிப்பும் எந்தகையதாக இருக்கும் என்பதனை ஆளும் தரப்பு சிந்தித்துப் பார்த்தி ருக்கவேண்டும்.

அத்தகைய நெறிமுறையையும் கண்ணியத் தையும் இலங்கை அரசியலில் எதிர்பார்க்க முடிய வில்லை. மக்கள் ஆட்சி என்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற போர்வையில் தங்கள் சொந்த நலன்களில் மட்டுமே குறிவைத்துச் செயற்படுவது என்ற ஈன நிலைக்கு இந்த நாடு வந்துவிட் டது. எடுபிடி, அம்பு, சேனை, நிதி மூலம் எங்கு ஏராளம் என்று பார்த்துப் பக்கம் மாறு வது ஜன நாயகத்தின் குணாம்சம் ஆகிவிட்டது இந்த நாட்டில்!

அரசியல்வாதிகளின் இந்த அதர்மக் குணாம்சம் இனிக் கட்டவிழப்போகும் சர்வாதிகாரத்தில், மேலும் எழுமா அல்லது தாழ்ந்து புதையுமா என்பதனை முடிவு செய்யும் பொறுப்பு மக்கள் கைக்கு வருமா என்பது சந்தேகமே! ஜனநாயகமே நீ பாவம், இனி என் செய்வாய்? என்றாகி விட்டது!

[ உதயன் ] - [ Sep 10, 2010 04:00 GMT ]

மறைந்த ஊடகவியாளர் லசந்த விக்ரமசிங்கவின் மனைவி கட்டுரை வரைந்துள்ளர்.

http://www.globalpost.com/dispatch/asia/100910/why-the-world-must-stop-sri-lanka%E2%80%99s-decline#comment-7379

1. சரிந்துவரும் சனநாயகத்தை சீர்தூக்க சர்வதேசம் முன்வரவேண்டும்

2. மே 2009 க்குப்பின் உலகம் எதிர்பார்த்ததை விட தவறான பாதையில் சிறிலங்கா பயணித்தவண்ணம் உள்ளது.

இந்த அரசியல் சட்ட மூலம் இலங்கையின் சனநாயகத்தை கேள்விக்குறியாகியுள்ளது - அமெரிக்க

அமெரிக்க இராஜங்க திணைக்களம் உத்தியோக பூர்வமாக அதிருப்தியை வெளியுட்டுள்ளது.

http://www.voanews.com/english/news/asia/US-Condemns-Sri-Lanka-Amendment-102695059.html

  • கருத்துக்கள உறவுகள்

கதறி அழுது நாம் சொன்னவைகளை அசட்டை செய்த உலகம் அனுபவிக்கணும்

அதை நான் பார்க்கணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.