Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி

Featured Replies

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம்பேர் வெளிநாடுகளிலிருந்து வரமுடியுமாக இருந்தால், பாதிக்கப்பட்ட உங்கள் கிராமங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு நீங்கள் ஏன் வரக்கூடாது? புலம்பெயர்ந்துள்ள மக்கள் தாயக தேசத்துக்கு நேரடியாக வாருங்கள். அங்குள்ள யதார்த்தநிலைமையை நேரடியா பாருங்கள்.

இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் ந.வித்தியாதரன் சுவிஸில் நடைபெற்ற சுற்றத்து முற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது புலம்பெயர்ந்துவாழும் மக்களை நோக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது:-

தமிழ் தேசியத்திற்கான பாதை புதிய கட்டத்திற்குள் பிரவேசிக்கவேண்டிய காலம் வந்திருக்கின்றது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்ட இடத்திலிருந்து உரிமைகளை மீட்க ஜனநாயக வழியில் போராடுவதற்கான பொறுப்பு எம் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. எனவே, வடக்கு - கிழக்கில் ஜனநாயக வழியில் உறுதியோடு போராடக்கூடிய இளைஞர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இந்த பணிக்காக ஊடகத்துறையிலிருந்து தற்போது விலகியிருக்கும் நான் முழுமையாக ஈடுபடத்தயாராக இருக்கிறேன். இதற்கான முழுப்பொறுப்புக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுச்செயற்படவேண்டும்.

ஆயுதப்போராட்டத்தை இலங்கை அரசு தோற்கடித்துவிட்டது என்பதற்காக எமது உரிமைகளையும் இறைமையையும் விட்டுவிடமுடியாது. அதை மீட்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு இப்போது அனைத்து தமிழ் மக்களுக்கும் உள்ளது.

ஆயுதப்போராட்டத்தின் மூலம் உரிமைகளை - இறைமையை - மீட்கப்போராடிய எங்களை வரலாறு வேறு திசைக்கு திருப்பிவிட்டது. ஆனாலும் ஜனநாயக பாதை ஊடாக எமது பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து உரிமை - இறைமை என்ற இலக்கை நாம் அடையவேண்டும். ஜனநாயக வழியில் செல்லும்போது நாம் யாரிடமும் மண்டியிடமுடியாது.

இலங்கை அரசு தற்போது வைத்திருக்கும் தீர்வு ஒன்றே ஒன்றுதான். சிங்களதேசம் என்ற தீர்வை தவிர மகிந்த ராஜபக்சவிடம் வேறு எந்த தீர்வும் இல்லை. போர்முடிவடைந்த பின்னர் அரசுத்தலைவர் மகிந்தவை நான் சந்தித்தபோது, தற்போது பிரிக்கப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கை இணைத்து தமிழ்மக்களுக்கான தீர்வை வழங்கவேண்டும் என்று கோரியபோது, அதற்கு அவர் வடக்கு கிழக்கு இணைப்பு என்பது ஒருபோதும் நடக்கவேநடக்காது. அது விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து புதைக்கப்பட்டுவிட்டது என்று கூறினார். இந்த மனநிலைதான் இலங்கை அரசுக்கு இருக்கிறது.

எனவே, ஜனநாயக வழியில் உறுதியுடன் போராடக்கூடிய இளைஞர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கிராமங்கள்தோறும் கிளைகள் அமைக்கவேண்டும். இந்த இரு கட்டமைப்புக்களும் இணைந்து செயற்படவேண்டும். புலம்பெயர் தேசங்களிலும் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பின்கீழ் இந்த கட்டமைப்புக்கள் இணைந்து செயற்படவேண்டும். இந்த பணியில் இணைந்து செயற்படுவதற்காக ஊடகத்துறையிலிருந்து தற்போது விலகியுள்ள நான் தயாராக உள்ளேன்.

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

ஈழநேசன்

  • கருத்துக்கள உறவுகள்

திரு வித்தியாதரன் அவர்கட்கு, தங்கள்கோரிக்கை எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. அதுசரி உங்கட மச்சினனும் தாங்கள் பணிபுரியும் பத்திரிகையின் உரிமையாளரும், தற்போதைய தமிழக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினருமாகிய அன்றை காலங்களில் யாழ மக்களின் சிறுசேமிப்பின் மீது சப்ராயுனிக் எனும்பெயரில் வாய்கரிசி போட்டவருமான சரவணபவான் அவர்களது கடசித்தளபதிகளில் ஒருவரான திரு சமபந்தன் ஐயா அவர்கள் கூறியிருக்கிறார் எதிர்காலத்திலும் இந்தியவுடனஇ இணைந்து செயற்படுவோமென(தமிழர் இனஅழிப்பினில்?) அதுகிடக்கட்டும் கழுதை, எனக்கு என்னதெரிய வோண்டுமென்றால், கடந்த நாடாளுமன்றத்தேர்த்தலில் கூட்டமைப்பு தங்கள் மச்சினனுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பக்கொடுத்ததன்மூலம் எதிர்கட்சிகளது தேர்தல்தொடர்பான செய்திகள் வெளியாகாதவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தீர்களோ அது எந்த வித்த்தில் நியாயம் எண்டுதெரியவேணும் கண்டியளோ. தங்களுக்கு அண்மையில் நல்லபத்திரிகையாளன் என விருது கிடைத்ததை அறிந்தேன் மிச்சம் கவலையாக இருக்குப்பாருங்கோ காரணம் என்னவெண்டால் கடந்ததேர்தலில் கஜேந்திரன் அவர்கள் தாங்கள் ஆசிரியராகப் பணிபுரியும் பத்திரிகையில் பலஆயிரக்கணக்காகச் செலவுசெய்து, தார்மீகரிதியில் தாங்களாகவே இலவசமாக பிரசுரிக்கவேண்டிய செய்தியினை விளம்பரமாக வெளியிட்டதற்கு, அதேதினம் வெளியாகும் பத்திரிகையில் கடந்த காலத்தில் எமது தேசத்திற்குள் சொல்லாமற்கொள்ளாமல் வந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட இந்தியக் கொலைப்படையுடன் சேர்தியங்கி மண்டையன் குழு எனும் பெயரில் கொலைப்படையை நடாத்திய அதன் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனது மறுப்பறிக்கையைச் அவ்விளம்பரத்திற்கான செய்தியாகப் போட்ட புண்ணியாவனாகிய உங்களைது கதையினை எங்கேயாவது கூறுங்கள்.

வித்தியின் இக்கருத்துகள்,, இன்று லங்காவின் நிலையை தெளிவாக சொல்கிறது! ஆனால் ...

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி

.... இங்கிருந்து கட்டியெழுப்ப வந்து கொட்டினால், அது நிலைத்திருக்குமென/அழிக்கப்படமாட்டாதென்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?????????????? ... லங்காவின் கடந்த 60 வருடகால காட்சிகள்/சாட்சிகள்பாடங்கள் நம்க்கு போதாதா???????????

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி

KingCobra.jpg

இதெல்லாம் சரிப்பட்டு வராது.. ஈசல்... எறும்பு கஸ்டபட்டு கட்டிய புத்தில் .. நல்ல பாம்பு புகுந்து கொண்டு தெய்வீகமாக ஆகி முட்டை பால் என சாப்பிடுவது போல ... சிங்களவன் பறிக்க மாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது...

எனவே ஈழத்தோழர்கள்... ஆளுக்கொரு அந்த மண்ணின் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு வர வழைத்து அணுகுண்டு போன்ற ஆக்க பூர்வமான படிப்புகளை வழங்குவதோடு... சுயசார்பு குறித்த பொருளாதாரம் குறித்த பொருளாதார வல்லுனர்கள்களையும் உருவாக்க வேண்டும்... அப்பத்தான் ஈழம் என்றால் கைவைக்க எவனுக்கும் அச்சத்தினை வருங்காலத்தில் உருவாக்க முடியும்... :lol:

டிஸ்கி:

அத்தோடு உதவிகள் என்பது கே.பி ஊடக என்பதினை விட(பாதி சிங்களவன் பாக்கெட்டுக்கு போகும்) தனியாக சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஊடக உதவிகளை நேரடியாக வழங்க வேண்டும்... அவன் விட விலையெனின் அவ்வாறான தொண்டு நிறுவனங்களை உள்ளே அரசியல் முயற்சியுனூடாக உள்ளே நுழைக்க வேண்டும்....அதில்தான் உலகம் முழுவதும் பரந்துள்ள தோழர்களின் வெற்றி அடங்கியுள்ளது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

வித்தி இப்ப பக்கா அரசியல்வாதியாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்திவாரம் இல்லாமல் வீடுகட்ட முயலும் வித்தியாதரன் சிலவேளை சிந்தி;கத்தவறி இருக்கலாம். தமிழனுக்கு இன்னும் சரியான அடித்தளம் இலங்கையில் கிடைக்கவில்லை. மீண்டும் கட்டியெழுப்பினால் தமிழனின் வீடு மறுபடியும் உடையும் என்பதைச் சொல்ல விரும்புகின்றேன். முதலில் தமிழர் பிரச்சனைககு விடிவும் முடிவும் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் வித்தியாதரன்.. என்னோய் கதைக்கிறீர்.. பைத்தியக்காரத்தனமாய்...

எத்தனை காணியை பூமியை வைச்சு அசைலம் அடிக்க வந்து நாங்க பட்ட கஸ்டத்தையா புலிகளும் அங்க உள்ள ஆக்களும் பட்டவை. நாங்க இல்லைன்னா புலிகள் போராடி இருக்கத்தான் முடியுமா...??!

நீர் சும்மா கிடவும்.. நாங்கள் லண்டனிலும் ரொரண்டோவிலும் பாரீசிலும் சிட்னியிலும் ஆளுக்கொரு கட்சி வைச்சு யாழ்ப்பாணத்தில் ஈழம் அமைக்கிற இராஜதந்திரம் செய்து காட்டிறமோ இல்லையோ என்று இருந்து பாரும்...!

புலிகளுக்கு எவ்வளவு கொடுத்தம். அவ்வளவும் வீணாப் போகியும் கவலைப்படல்ல நாங்க. இங்க நாங்க எப்படியாவது வெள்ளைக்காரன சுத்தி சுழிச்சிடுவம். விட்டதை எடுத்திடுவம்.

ஊருக்கு சும்மா திருவிழா அது இதென்று பிள்ளைகளை கூட்டி வந்து நாடு காட்டிறதே.. தலைவர் காட்டின பாதையில் அமைந்த ஒரு தேசியக் கடமை தான். அதைப் புரிஞ்சு கொள்ளாமல் கதைக்கிறீர் நீர். இப்படிக்காட்டாட்டா எங்கட அடுத்த சந்ததிக்கு தமிழீழம் பற்றி தெரிய வராதோய்.

பிறகு நீர் அங்க இருந்து என்னத்தை வெட்டிப் புடுங்குவீர். இப்பவும் நாங்கள் 50,000 பேர் வந்ததால 50,000 புலிகளை புகலித்தில் உருவாக்கி இருக்கிறம்..! இருந்து பாரும் அந்த இளசுகள் லண்டனிலும் அமெரிக்காவிலும் காதல் செய்தே அணுகுண்டு தயாரிச்சு சிங்களவன் தலையில கொட்டி.. தமிழீழம் மீட்காட்டி.. மீண்டும் சொல்லுறம்.. இருந்து பாரும்.

அதைவிட்டிட்டு.. அங்க வா.. சிங்களவனிடம் முதலீடு செய்து சிறீலங்காவை கட்டி எழுப்பச் சொல்லுறீர். உமக்கும் கேபிக்கும் உள்ள லிங்கை எங்கட புலம்பெயர் ஆய்வாளர்கள் உரிச்சிக்காட்டிட்டினம். எனியும் ஏமாற நாங்கள் என்ன முட்டாள்களே.

அங்க சனம் கஸ்டப்பட்டால் தான் நாங்க இங்க இருந்து வந்து உதவ முடியும். ஒரு கலேர்ஸ் காட்ட முடியும். அவங்களும் அரசாங்கப் பணத்தில நல்லா வாழ வெளிக்கிட்டிட்டா அகதி நாய்கள் என்று வெள்ளைக்காரன் மட்டுமல்ல.. ஊர் சனமும் எல்லே திட்டும். புலிகளை குற்றம் சொல்லியே அசைலம் அடிச்ச எங்களுக்கு நீர் பாடம் எடுக்கிறத நிறுத்தும் கண்டீரே.

வேணும் என்றால் சொல்லும் நல்லூருக்கு வர வேண்டாம் என்று. நாங்கள் எங்க சுருட்டியாவது நல்லூர் போல ஒரு கோவில ஐரோப்பாவில ஒரு குட்டித் தீவை வாங்கி கட்டி தமிழ் தேசியம் வளர்த்துக் காட்டிறமோ இல்லையோ என்று பாரும். :lol: :lol:

இதுதான் புலம்பெயர் தமிழ் மா(ம)க்களின் இன்றைய மனநிலை வித்தியாதரன். அதைப் புரிஞ்சு கொண்டு அடுத்த நகர்வுகளைக் கவனியுங்கோ. :D

Edited by nedukkalapoovan

ஒரு பச்சை குத்தியிருக்கு......வித்தியாதரனுக்கு சுழிச்சு அரசியல் நடத்ததெரியாது போல கிடக்குது.....சிங்களவனை எப்படி சுழிக்கிறது என்று எங்களுக்கு தெரியும் உவர் வித்தியாதரன் இப்ப புதுசா பாடம் எடுக்கிறார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வித்தி சொலுறதில பழழை இல்லை என்பது என் அபிப்பிராயம்.இந்தகருத்தை நானும் முன்பு எழுதியிருக்கிறேன்.கட்டி எழுப்பிறது என்டால் கோட்டை கோபுரம் மட்டும் என்டு அர்த்தம் இல்லை.அடிப்படை வாழவாதாரமே இல்லாத போரினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களின் வாழ்வுக்கு உவுவதும் அவர்களை எழுப்பி விடுவதும் கூட கட்டி எழுப்புதல் என்ட வரையறுக்குள் தான் வரும்.எந்தப்போரால் நாங்கள் இங்கிருக்கிறோமோ அதே போரால் தான் அதுகள் கொட்டிலும் இல்லாமல் இருக்குதுகள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் திருவிழாவுக்கு 50 ஆயிரம் வெளிநாட்டவர்கள் வரமுடியுமானால் சீரழிந்துள்ள தாயகத்தை கட்டியெழுப்ப வருவதற்கு ஏன் தயக்கம்? புலம்பெயர்ந்த தமிழர்களிடம் வித்தியாதரன் கேள்வி

எனவே, ஜனநாயக வழியில் உறுதியுடன் போராடக்கூடிய இளைஞர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கிராமங்கள்தோறும் கிளைகள் அமைக்கவேண்டும். இந்த இரு கட்டமைப்புக்களும் இணைந்து செயற்படவேண்டும். புலம்பெயர் தேசங்களிலும் இந்த கட்டமைப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பின்கீழ் இந்த கட்டமைப்புக்கள் இணைந்து செயற்படவேண்டும். இந்த பணியில் இணைந்து செயற்படுவதற்காக ஊடகத்துறையிலிருந்து தற்போது விலகியுள்ள நான் தயாராக உள்ளேன்.

- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி

ஈழநேசன்

மீண்டும் எழுபதுகளுக்கு மக்களை அழைத்துச் செல்லும் முயற்சி

எல்லாக் கட்டமைப்புக்களையும் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் கொண்டு வந்தால்

குரங்கின் கையில் பூமாலை போல் ஆகி விடும்

வாத்தியார்

**********

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.