Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடிய தமிழருக்கு ஒரு வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு கனேடிய தமிழரும் வரும் ஐப்பசி 25 திகதி நடக்கும் உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.

பல தமிழர்கள் கவுன்சலர் (Councilor ) மற்றும் பாடசாலை நம்பிக்கையாளர் (School Trustee) பதவிகளுக்கும் போட்டியுடுகின்றனர்.

தமிழர்கள் போட்டியிடாத இடங்களில் கூட மனம் தளராது வாக்களிக்க வேண்டும்.

தகுதி உள்ள அனைவரும் முக்கியமாக பெற்றோர் இளைய வயதினரை வாக்களிக்க கூட்டி செல்ல வேண்டும்.

நேரம் இருந்தால் ஒரு சிறிய நேரத்தை ஒதுக்கி தமக்கு விரும்பிய வேட்பாளர்களுக்கு தொண்டர் வேலை செய்யலாம். இதன் மூலம் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்தல்லாம்.

1. Toronto: http://www.toronto.ca/elections/

2. Durham: http://www.durham.ca/default.asp?nr=/departments/clerk/election.htm&setFooter=/includes/clerkfooter.inc

3. Peel: http://www.peelregion.ca/council/municipal-election.htm

4. Markham: http://www.markham.ca/Markham/Departments/Clerks/AdmDiv/MunicipalElections.htm

http://www.yrdsb.edu.on.ca/page.cfm?id=TE0000001

1. நீதன் ஷான் ( மாநகரசபை ஆலோசனையாளர் )

http://www.neethanshan.ca/ http://www.facebook.com/neethan.shan http://1999movie.blogspot.com/2009/11/dear-fellow-tamil-canadians-i-had.html

2 . ஜுனைதா நேதன் ( பாடசாலை நம்பிக்கையாளர் )

http://www.juanitanathan.com/ http://www.facebook.com/group.php?gid=282960517930 http://www.canadiantamilcongress.ca/pastevents.htm

3. தீபன் விக்னேஸ்வரன் (பாடசாலை நம்பிக்கையாளர்)

http://www.vote4education.ca/main/ http://www.facebook.com/theepan.vigneswaran

1. நீதன் ஷான் ( மாநகரசபை ஆலோசனையாளர் )

http://www.neethanshan.ca/ http://www.facebook.com/neethan.shan http://1999movie.blogspot.com/2009/11/dear-fellow-tamil-canadians-i-had.html

2 . ஜுனைதா நேதன் ( பாடசாலை நம்பிக்கையாளர் )

http://www.juanitanathan.com/ http://www.facebook.com/group.php?gid=282960517930 http://www.canadiantamilcongress.ca/pastevents.htm

3. தீபன் விக்னேஸ்வரன் (பாடசாலை நம்பிக்கையாளர்)

http://www.vote4education.ca/main/ http://www.facebook.com/theepan.vigneswaran

42 வட்டாரமான ரூச் ரிவர் தொகுதியில் நீதன் சான் என்ற தமிழர் மாத்திரம் போட்டியிடவில்லை.

நமு பொன்னம்பலம்

இராமநாதவவுனியன் வேந்தன்

ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

இராமநாதவவுனியன் தனியே வேட்பு மனுத் தாக்கலோடு நின்று விட்டார்.

மற்றைய இரு வேட்பாளர்களும் ஏட்டிக்குப் போட்டியாக எங்கும் தேர்தல் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். பல பணியாளர்களை வைத்து தேர்தல் பரப்புரை பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்தத் தொகுதிக்கான மாநகராட்சி உறுப்பினரான றேமன்ட் சோ தமிழ் மக்கள் உட்பட அனைத்து மக்களினதும் நன் மதிப்பைப் பெற்றவர். கடந்த தேர்தலில் தமிழ் மக்களின் பெரும்பாலான வாக்குகள் நடா ராஜ்குமார் என்பவருக்கு அளிக்கப்பட்டபோதும் றேமன்ட் சோ 52 சத வீத வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியிருந்தார். இப்படியொரு பல மான வேட்பாளரை மீறி வெற்றி பெறுவதற்கு வாக்களிக்கத் தகுதியுள்ள தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் அவர்கள் அனைவரும் ஒரு தமிழ் வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டும். பிற இனந்தவர்களின் வாக்குகளும் கணிசமாக தமிழ் வேட்பாளருக்குக் கிடைத்தால் வெற்றி கிடைக்கும்.

ஆனால் இரு தமிழ் வேட்பாளர்களின் போட்டி தமிழ் வாக்குகளை நிச்சயமாகப் பிரிக்கும். இதனால் றொரன்ரோ மாநகர சபைக்கான முதல் தமிழ் உறுப்பினர் தெரிவு செய்யப்படும் வாய்ப்பும் இந்த முறையும் இல்லாமல் போகப்போகிறது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அனைத்துத் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

நீதன் அவர்கள் மார்க்கம் பகுதியில் பாடசாலை நம்பிக்கையாளர் பதவி வகித்து பெருமதிப்புப் பெற்றவர். இளம் வயதில் அவரது வளர்ச்சி அபரிதமானது. தற்போது மாநகரசபை உறுப்பினராகப் போட்டியிடுகின்றார்.

Juanita Nathan

நீதன் பாடசாலை நம்பிக்கையார் பதவியில் இருந்து மாநகரசபைக்குப் போட்டியிடுவதால், நீதனின் ஆலோசனையின் பேரில் அந்த இடத்துக்கு Juanita Nathan போட்டியிடுகின்றார். இவரும் சுமார் 10 வருடங்கள், பாடசாலை மற்றும், இளைய சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

இதில் நடக்கின்ற ஒரு விளையாட்டையும் சொல்லவேண்டும். நீதனின் பெயர் கொண்ட இன்னுமொருவர் அதே பாடசாலை நம்பிக்கையார் பதவிக்குப் போட்டியிருகின்றார். அவருக்கும் முந்திய நீதனுக்கும் சம்பந்தமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முகுந்தன்,

நீதன் போட்டியிருகின்ற அதே பகுதியில் பாடசாலைநம்பிக்கையாளருக்குப் போட்டி போடுகின்றார். அவரும் மிகவும் திறமை வாய்நத இளைய சமூகத்தில் இருந்து வந்தவரே.

யோசப் மோகன்

மார்க்கம் பகுதியில் போட்டியிருகின்ற என்னுமொரு தமிழர். கனடாவில் 21 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்தாலும் தமிழ் மறக்காத தமிழன். இருக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவு சொல்லப்படுகின்றது. பலருடைய வீடுகளில் இவவரது விளம்பரத்தை மற்றவர்களை விட அதிகம் கண்டிருக்கின்றேன்.

-------------------------------

நமு பொன்னம்பலம் என்னு ஒருவர் போட்டியிடுகின்றார். ஆனால் அவர் சிறிலங்கா அரசின் செயற்பாட்டில் இயங்குவர் என்று கதை அடிபட்டது. மக்கள் தான் அவதானமாகக் கண்காணித்து வாக்களிக்க வேண்டும். நீதனுக்கு எதிராகப் போட்டியிட இறக்கப்பட்டிருக்கின்றார். சிறிலங்கா கையாள் என்பதை நிருபிக்கும் வண்ணம் நெருப்பு என்ற சிங்களப் பிராச்சார ஊடகத்திலும் இவரது விளம்பரம் கட்டுரையாக வரையப்பட்டுமிருந்தது.

  1. ரொறொன்ரோ மாநகர சபைக்கான தேர்தல் ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி நடைபெற உள்ளது.
  2. அன்று வாக்களிப்பு நிலையங்கள் காலை 10 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
  3. இதே ஒக்ரோபர் 25 ஆம் நாளில் ஒன்ராறியாவில் உள்ள மமற்றைய நகர சபைக்கான தேர்தல்களும் நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
  4. ஒக்ரோபர் 16ஆம் 17ஆம் திகதிகளில் உங்களது வாக்களிப்பு நிலையங்களில் முன்கூட்டியே வாக்களிக்க முடியும்.

இதே தேர்தலில் மக்கள் நகர முதல்வர் மாநகர சபை உறுப்பினர்கள் (city counsillors) மற்றும் பாடசாலை சபை உறுப்பினர்கள் (School Board Truslees) தெரிவு செய்கிறார்கள் ரொறொன்றோ மாநகரசபைக்கு ஒரு நகர முதல்வரும், 44 மாநகர சபை உருப்பினர்களும்,39 பாடசாலை சபை உறுப்பினர்களுமாக மொத்தம் 84 உறுப்பினகளை ரொறொன்றோ மாநகர மக்கள் தெரிவு செயிய உள்ளார்கள்.

இதை பற்றிய விவரங்களை தொலைபேசியில் 311 இலக்கங்களை அழுத்துவதன் மூலம் நீங்கள் பெறலாம். ரொறொன்றோ மாநகர சபைக்கான இணையத்தளத்திலும் இத்தேர்தல் சம்பந்தமான விபரங்களை தமிழ் மொழி உட்பட 24 மொழிகளில் பார்வையிடலாம்.

=======================================================================================================

1. Scarborough - Rouge River எனப்படும் 42வது வட்டாரத்தில் நீதன் சண், நமு பொன்னம்பலம், வேந்தன் ராமனாதவவுனியன் உட்பட 9 பேர் மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

2. Inside toronto votes இணையதளத்தின் படி இவ்வட்டாரத்தில் உளள 47 ஆயிரம் வாக்காளார்களில் அதிகூடிய (20%) வாக்காளர்களாக இலங்கையிலிருந்து வந்தவர்களே இருக்கிறாாகள். இரண்டாவ்தாக கரீபியன் நாட்டவர்களும் (15%) அடுத்து பிலிப்பன்ஸ்(11%) மற்றும் இந்தியர்களும் (11%) இருக்கிறார்கள்.

3. நமு பொன்னம்பலம் யார்?

இவருக்கும் கனடாவில் ஏற்பட்ட பல விடுதலை முயற்சிகளின் பின்னடைவுகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளதாக நம்பப்படுகின்றது.

http://www.eddappar.com/84.stm.

4. நீதன் ஷான் யார்?

டொராண்டோவின் முன்னணி பத்திரிகை புதிதாக ஆறு மாநகரசபை ஆலோசகர்கள் தெரிவுசெய்யப்பட சாத்தியமனவர்களில் நீதன் ஷான் அவர்களையும் முன்னுரைந்துள்ளது. இது அவரின் தகுதியை வெளிப்படுத்தி நிற்கின்றது.

http://www.thestar.com/opinion/editorials/article/871259--six-new-faces-for-shaking-up-toronto-city-council

Edited by akootha

அ) தேர்தல் ஐப்பசி 25

எங்கே வாக்களிப்பது: http://app.toronto.ca/vote2010/whereToVote.do

ஆ) ஐப்பசி சனி 16 மற்றும் ஞாயிறு 17 தினங்களில் முன் கூட்டியே வாக்களிக்கலாம்.

முழுத் தகவலும் தமிழில் : http://www.toronto.ca/elections/pdf/voters-tabloid-tamil.pdf

இ) கனேடிய தமிழர்கள் இந்த வாக்களிப்பு பற்றி மேலும் அறிய:

"Your Voice! Your Vote!"

In carrying out it's duties to educate the community, the Tamil medias have also been doing shows interviewing Tamil candidates who are contesting for various positions in the GTA at various times. Below is a listing of times we have so far. We will keep you posted as we get more listings from other stations. In the mean time, please tune in to hear the candidates and we urge you to make an informed choice:

Television:

TVi - Thursday, Oct 14 | 9:00 PM (TONIGHT: Featuring many Tamil Candidates in the GTA)

TamilOne - TBA

Radio:

CTR - Tuesday, Oct 19 | 9:00 PM plus more shows TBA

Tamil Star Radio - Friday, Oct 15 | 9:00 PM

Edited by akootha

இது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் தேர்தல்.இங்கு ஒரு வேறுநாட்டு அடியாட்கள் பங்கு பற்றவில்லை.பழக்கதோசம் இன்னமும் இன்னும் பலர் கனேடிய தேர்தலிலும் தேசியம் பேசிக் கொண்டு திரிகின்றார்கள்.ரேமன்ட் சோ செய்த அளவிற்கு ஒரு தமிழனும் செய்யமாட்டான்.முதல் முறையாக தெரிவுசெய்யப்பட்ட தமிழரென மார்க்கம் நகராட்சிக்குள் புகுந்தவர் தமிழரை கண்டாலே விலகி ஓடுபவர்.மற்றவர் கேட்காத எலக்சனில்லை.இருக்காத பாட்டியில்லை.இவரின் உண்மை முகம் தான் என்ன? தமிழன் என்றாலே சுத்தப் பிறந்தவனா?

ரேமன்ட் சோவிற்கு சவுத் கொரியா பிரதமர் வந்து பரப்புரை செய்கின்றார்.தமிழருக்கு அவர் செய்த சேவைகள் தேவையாயின் பட்டியலிடத் தயார்.(சுவிஸ் முரளியின் மகனின் மகனின் பெயரில் ஒரு பாக் திறந்தது ஒரு உதாரணம்).இது நம்ம கவுன்சிலரிடம் எமக்கு கிரிகெட் விளையாட நிரந்தரமாக ஒரு மைதானம் இல்லையென அலைந்ததுதான் மிச்சம்.இருக்கின்ற 4 சிங்களவன் இந்தியனை பிடித்து மைதானமும் எடுத்து பவிலியனும் கட்டிவிட்டான்.திறப்பு விழாவிற்கு போன எமது கவுன்சிலர் பற்றை மற்றப் பக்கமாக பிடித்து படத்திற்கு போஸ் கொடுக்கின்றார்.

புலிகளை எனக்கு பிடிக்காததற்கு இதுதான் பெருங்காரணம்.புலம் பெயர்ந்த நாடுகளில் யாரென்றேதெரியாமல் அவனவனை தூக்கிவிட்டு பின்னர் முழித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை எனக்கு பிடிக்காததற்கு இதுதான் பெருங்காரணம். புலம் பெயர்ந்த நாடுகளில் யாரென்றேதெரியாமல் அவனவனை தூக்கிவிட்டு பின்னர் முழித்தது.

புலிகளை எனக்கு பிடிக்காததற்கு இதுதான் பெருங்காரணம்.

இந்த வசனத்தை எழுதாது தங்களால் முடிக்கமுடியாது

பிரதி எடுத்து வைத்துள்ளீர்களா

ஒட்டி விடுவதற்கு.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனிக்கிழமை காலை 9.30 மணியில் இருந்து ஞாயிறு இரவு 8.00 மணி வரை முற்கூட்டிய வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. எனவே 25ம் திகதி வேலை, வேறு பிரச்சனைகளால் வாக்களிக்க முடியாதவர்கள் இந்த நாட்களைப் பயன்படுத்தி வாக்களித்துக் கொள்ளலாம்.

ஆயினும் இந்த வாக்களிப்பு நிலையங்கள், குறித்த பிரதேசத்தில் 1, அல்லது 2 இடங்களில் மட்டுமே இருக்கும். மற்றபடி, வழமையாக உங்கள் பகுதிகளில் ஒதுக்கப்பட்ட வாக்களிப்பு நிலையமாக இருக்கமாட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

உங்கள் பகுதியில் மேற்குறித்த தமிழ் பிரதிநிதிகளாக வரவிருப்பவர்கள் போட்டியிட்டால் அவர்களின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அது பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

எனவே மறக்காமல் வாக்களிப்பது உங்களின் கடமையும், தேவையுமாகும்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த..... இரண்டு நிமிட ஒளிப்பதிவில்,

கனடா தமிழரின் வாக்குரிமையின் முக்கியத்துவத்தை அழகாக சொல்லியுள்ளார்கள்.

எமக்கு, ஒரு அரசியல் கட்சியின் பலம் வேண்டும். நாங்கள் பட்ட துன்பம் போதும்.

உங்கள் நாட்டு நிலவரத்தைப் பார்த்து....... புத்தியாக நடந்து கொள்ளுங்கள் கனடா மக்களே......

நெடுகவும்....... இரண்டு வேலை செய்து... உடம்பை கெடுக்காமல், ஒரு மணித்தியால லீவு எடுத்து வாக்குப் போடுங்கள்.

.

Edited by தமிழ் சிறி

ஒக்தோபர் 13, 2010

ஊடக அறிக்கை

ரொறன்ரோ மாநகர அவைத் தேர்தல் - வட்டாரம் 42 மற்றும் ஸ்காபரோ கிழக்கு வட்டாரம் 22

ரொறன்ரோ மாநகர அவைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்தோபர் 25, 2010 அன்று நடைபெறவுள்ளது. முன் கூட்டிய வாக்களிப்பு 16, 17 இல் நடைபெறவுள்ளது.

திரு நீதன் சண்முகநாதன் (சண்) அவர்கள் முதல் முறையாக மாநகர அவைத் தேர்தலில் வட்டாரம் 42 இல் போட்டியிடுகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு சண் அவர்கள் மார்க்கம் கல்வி அவைக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது தெரிந்ததே.

வட்டாரம் 42 இல் தமிழர்கள் மிகச் செறிந்து வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் ஒருமனதோடு சண் அவர்களுக்கு வாக்களித்தால் அவரது வெற்றி உறுதி என்பதில் அய்யமில்லை.

தற்போது இந்த வட்டாரத்தை பிரதிநிதிப்படுத்தி வருபவர் திரு Chow ஆவார்;. அவருக்கு அகவை 73 ஆகும். 1991 இல் இருந்து தொடர்ச்சியாக ஆறுமுறை வெற்றி பெற்று 19 ஆண்டுகள் மாநகரஅவை உறுப்பினராக இருந்து வருகிறார். அவரது வயதுக்கு மதிப்புக் கொடுக்கும் அதேவேளை அவர் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்கும் தருணம் இதுவாகும். அந்த ஓய்வை நாமே கொடுக்கலாம்.

ரொறன்ரோ மாநகர அவையில் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. நன்றாகப் படித்த, அறிவு, ஆற்றல், இளமை, பட்டறிவு, துடிப்பு, சமூக ஈடுபாடு, சமூக நீதி எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் தேசியத்தை உள்ளம், மொழி இரண்டினாலும் நேசிக்கின்ற சண் போன்ற வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது தமிழ்மக்களது கடமையாகும். அது எல்லோருக்கும் நன்மையையும் பெருமிதத்தையும் தேடித்தரும். மேலும் ரொறன்ரோ மாநகர அவையின் செயற்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றத்தையும் கொண்டு வரலாம்.

உங்கள் வரிகள், குறிப்பாக சொத்துவரி, ஆண்டாண்டு உயர்ந்து கொண்டு போகின்றது. ஆனால் அதற்கான மேலதிக பயன் வரியிறுப்பாளர்களுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை. அதுமட்டும் அல்லாது மாநகர அவை உறுப்பினர்கள் முதல் வேலையாக தங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்வதை ஒரு கோட்பாடாக வைத்துக் கொண்டுள்ளார்கள். இதில் Chow அவர்களும் அடக்கம்.

இங்கு வெளியாகும் ரொறன்ரோ ஸ்ரார் ஆங்கில நாளேடு (13-10-2010) நீதன் சண் அவர்களை (http://www.thestar.com/opinion/editorials/article/871259--toronto-election-six-new-faces-for-city-council) வழிமொழிந்துள்ளது. இது சண் அவர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

42 ஆவது வட்டாரத்தில் மேலும் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்கள் தமிழ்மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். தமிழ்த் தேசியத்தை ஆதரிக்காதவர்கள். குறிப்பாக நமு என்பவர் தமிழ்த் தேசிய நீரோட்டத்தோடு தீவிரமாக முரண்பட்டுக் கொண்டு வருபவர். திரு. சண் அவர்களுக்கு விழுகிற தமிழ் வாக்குகளைப் பிரிப்பதே இவர்களது நோக்கமாகும்.

நீதன் சண் போலவே ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் அவைக்கு அஷ்வின் பாலமோகன் ஸ்காபரோ கிழக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடுகிறார். இந்தப் பதவிக்கு இவர் எல்லா விதத்திலும் பொருத்தமான ஒரு படித்த பட்டதாரி இளைஞராவர்.

எனவே நடைபெற இருக்கும் தேர்தலில் உங்கள் விலைமதிக்க முடியாத வாக்குகளை சண் அவர்களுக்கும் அஷ்வினுக்கும் அளித்து அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள் என அன்போடும் உரிமையோடும் கேட்டுக் கொள்கிறோம்.

-30-

உந்த கிளிப்பில் உள்ளவர்தான் 1999 கதாநாயகன் சுதன் மகாலிங்கம்.

வாக்கு நாங்கள் கட்டாயம் போடவேண்டும்.அதுவும் சரியான நபருக்கு போட வேண்டும்.கொஞ்சமாவது பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தால் யார் சரியான பிரதிநிதி என தீர்மனிப்பது ஒன்றும் கஸ்டமல்ல..

எனது மனைவியும் ஒரு போலிங் ஸ்டேசனில் கடமையாற்ற உள்ளார்கள்.(நல்ல காசு)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு உலகத்தில் உள்ள எல்லோரும் பழக்கம் என்பதை அறிந்து கொண்டுள்ளோம் அர்ஜன்

முதல்வன் ஆனமையால் இப்படி அறியக்கூடியதாக உள்ளது போல. :lol:

கனேடிய தமிழர் பேரவையால் "வாக்களி" என்ற ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டு பல பயனுள்ள தகவல்களை தாங்கி நிற்கின்றது.

http://www.vaakkali.com/index.html

வாக்களிக்க வசதியாக தமிழில் சில தகவல்கள்:

http://www.elections.ca/vot/eth/VIG_Tam.pdf

அஸ்வின் பாலமோகன் - பாடசாலை நம்பிக்கை நிறுத்தினராக வர போட்டியிடுகின்றார்.

தேர்தல் தொகுதி இலக்கம் 22 , ஸ்காபரோ கிழக்கு, ரொறொன்ரோ.

http://www.electashwin.ca/index/

பார்த்தி கந்தவேள் - பாடசாலை நம்பிக்கை நிறுத்தினராக வர போட்டியிடுகின்றார்.

தேர்தல் தொகுதி இலக்கம் 18 , ஸ்காபரோ தென் மேற்கு, ரொறொன்ரோ.

http://parthi2010.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.