Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் மருத்துவம் படிக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகள் அடுத்த வருடம் (2011) தனது உயர்தரக் கல்வியை முடித்து விட்டு மருத்துவத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். முக்கியமாக ஆங்கில மூலம் பிரித்தானியாவில் தனது மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார்.

தற்போது ஜேர்மன் மொழியில் படித்தாலும் ஆங்கில மொழிப் பிரச்சனை அவருக்கு இல்லை

பிரித்தானியாவில் எந்த மருத்துவக்கல்லூரியில் இலகுவாக இடம் கிடைக்கும்?

எந்த மருத்துவக்கல்லூரி சிறந்தது ? ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு மருத்துவம் படிக்க வருபவர்களுக்கான நடைமுறைகள் என்ன?

எப்படியான மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றார்கள்?

பிரத்தியேகமாகப் பணம் அறவிடுகின்றார்களா?

போக்குவரத்துப் பிரச்சனைகள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றையும் கருத்திற் கொண்டு விடயம் தெரிந்தவர்களிடம் இருந்து பயனுள்ள தகவல்களை எதிர்பார்க்கின்றேன்.

வாத்தியார்

**********

கீழுள்ள இணைப்புகளில் தேடித் பார்க்கவும்.

http://www.direct.gov.uk/en/EducationAndLearning/UniversityAndHigherEducation/StudentFinance/StudentsFromOtherEUCountries/DG_10035219

http://www.direct.gov.uk/en/EducationAndLearning/UniversityAndHigherEducation/StudentFinance/StudentsFromOtherEUCountries/DG_10035218

http://www.direct.gov.uk/en/EducationAndLearning/UniversityAndHigherEducation/StudentFinance/StudentsFromOtherEUCountries/DG_184393

http://www.direct.gov.uk/en/Dl1/Directories/DG_6000071

http://www.britishcouncil.org/lithuania-education-study-uk-fees.htm

http://www.medschools.ac.uk/Students/Pages/FAQs.aspx

http://www.apply2medicine.co.uk/medical-school-application-support/free-resources-1/ucas-points-calculator-1.html

University League Table 2011(Published May 20th 2010)

எனக்குத் தெரிந்த வரையில் முதலில் Bsc மூன்று வருடங்கள் படித்த பின்பு தான் மேற்கொண்டு படிக்கலாம் என்று நினைக்கிறன். (சரியாகத் தெரியாது.) பெரும்பாலும் நுழைவுத் தேர்வு இருக்குமென நினைக்கிறேன்.

தங்குமிட வசதிகள் பொதுவாக பல்கலைகழங்கள் இருக்கும் நகரங்களில் வீடுகள் (தனியாறைகள் வாடகைக்கு கிடைக்கும்) பழக்கமான அல்லது தெரிந்த இரண்டு மூன்று மாணவர்கள்/மாணவிகள் சேர்ந்து எடுத்து இருந்தால் செலவுகளைக் கட்டுப் படுத்தலாம். அதேநேரம், பல்கலைக்கழகங்களில் அறைகள் வாடகைக்கு எடுப்பது வெளி இடங்களோடு ஒப்பிடும் போது கொஞ்சம் அதிகம். இதற்கான விபரங்கள் நீங்கள் எந்த பல்கலைகழகத்தில் விண்ணப்பித்து இடம் எடுக்கிறீர்களோ அங்கேயே விசாரித்துப் பார்க்கலாம். லண்டன் நகரத்துக்குள் தங்குமிடம் பார்ப்பது அநியாயத்துக்கு விலை உயர்வு.

கொஞ்சமேனும் இந்தப் பதிவு உங்களுக்குப் பிரயோசனப் பட்டால் சந்தோசம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் வாத்தியார் தங்களது முயற்சியை வரவேற்கின்றேன்

இது போன்ற தேவைகளுக்கும் யாழ் உதவும் என்பதற்கு ஒரு சான்றாக தங்களது தேடுதலுக்கான பதில் அமையும்

நீங்கள் ;கேட்டது கிடைக்க வாழ்த்துக்கள்

நான் பிரான்சிலுள்ள படியால் தங்களுக்கு உதவ முடியவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி உங்கள் தகவல்களுக்கும் இணைப்புக்களுக்கும் மிக்க நன்றி.

விசுகு அண்ணா உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் மகள் எந்தப் பிரிவில் படிக்க விரும்புகிறார்.

பொது மருத்துவம்

பல் மருத்துவம்

மிருக மருத்துவம்

தேகப்பயிற்சியாளர் (Physiotherapist)

உயிரியல் மருத்துவம் (Biomed) (ஆராய்ச்சி)

மருந்தியல் மருத்துவம்.

இப்படிப் பல இருக்கின்றன.

பொது மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்த பட்ச தகமைகள் பல்கலைக்கழகத்திற்கு கழகம் மாறும்.

பொதுவாக பட்ட முன் படிப்புக்கு (undergraduate) UCAS மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். படிப்புகள் ஆண்டு தோறும் செப்டம்பரில் ஆரம்பமாகும்.

பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான குறைந்த பட்ச தகமைகளை கோரும் அதே பட்சத்தில் பொது மருத்துவம் பல் மருத்துவம் உயிரியல் மருத்துவம் (ஆராய்ச்சி) போன்ற துறைகளுக்கு அனுமதிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித்து அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியும். UCAS மூலம் விண்ணப்பித்தாலும் அனுமதி பல்கலைக்கழகங்களூடே தரப்படும்.

http://www.ucas.ac.uk/

http://www.ucas.ac.uk/students/coursesearch/

http://www.ucas.co.uk/students/wheretostart/nonukstudents/howtoapply

http://www.ucas.ac.uk/students/choosingcourses/admissions/bmat

இந்த இணையத்தளத்தில் பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளன.

வெளிநாட்டு மாணவர்களில் ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கும் உள்ளூர் மாணவர்களுக்கும் ஒரே கட்டணம் அறவிடப்படும். மருத்துவத்திற்கு அறவிடப்படும் கட்டணம் ஆண்டுக்கு 3500 இல் இருந்து 8000 பவுண்கள் வரை வேறுபடலாம் (பாடப்பரப்பு மற்றும் பல்கலைக்கழகத்தைப் பொறுத்து.). ஐரோப்பிய ஒன்றியம் இல்லாத மாணவர்களுக்கு ஆண்டுக்கு 13000 - 18,000 பவுண்கள் வரை செலவாகும்.

உயர்தர பெறுபேறுகளோடு ஆங்கிலத்தில் புலமை சோதிக்கப்படும். ஆங்கிலத்தில் விசேட சித்தி அல்லது IELTS (கல்வி) 7.5 (out of 9) கோரப்படும். ஒவ்வொரு அலகிலும் 7 க்கு குறையாமல் எடுத்திருக்க வேண்டும்.

பொது மருத்துவக் கல்வி (வேலைத்தளப் பயிற்சியோடு) 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

பெறப்படும் பட்டங்களாக.. MBBS, MB ChB, BDS, BVS,BSc என்பனவற்றில் ஒன்றாக அமையலாம்.

அனுமதிக்கு விண்ணப்பங்களை ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்திற்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு முன்னரும் அனுப்பலாம். பள்ளிகள் பொதுவாக பெப்ரவரியிலேயே அனுப்பி வைத்து ஆகஸ்டில் அனுமதிக்கான உத்தரவாதத்தை பெற்றுக் கொள்ள செய்கின்றன.

முதன்மைப் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கு நல்ல பெறுபேறும் பிரத்தியேக மற்றும் நேர்முகப் பரீட்சைகளில் நல்ல நிலையும் அவசியம்.

http://www2.warwick.ac.uk/ போன்றன ஓரளவு இலகுவாக மாணவர்களை உள்வாங்கக் கூடியன.

தங்குமிட வசதிகளை எல்லா பல்கலைக்கழகங்களும் அளிக்கின்றன. லண்டன் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் கிழமைக்கு 70 தொடக்கம் 150 பவுண்கள் வரை பல்கலைக்கழக விடுதிகள் கிடைக்கின்றன. பிற இடங்களில் 55 தொடக்கம் கிடைக்கும். பொதுவாக தொலைபேசி இணைய வசதிகள் அளிக்கப்படும். ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் கலந்தும் என்று விடுதிகளை உங்கள் விருப்பதிற்கு தெரிவு செய்யலாம்.

கல்விக்கட்டணம் தவிர லண்டனில் மாதம் 800 பவுண்களும் பிற இடங்களில் 600 பவுண்களும் மாணவர்களுக்கு அவசியம் என்று பிரித்தானிய அரசு சிபார்சு செய்துள்ளது. இருந்தாலும் அந்தளவுக்கு செலவாகாது.

பொதுவாக பாதுகாப்பு உத்தரவாதம் உண்டு. இருந்தாலும் நீங்களா போய் சோழிகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வந்தால் பல்கலைக்கழகம் எதுவும் செய்ய முடியாது. கள்வர்கள் தொல்லை சில இடங்களில் அதிகம்.

மற்றும்படி நல்ல சந்தோசமான வாழ்க்கை பல்கலைக்கழகங்களில் கிடைக்கும். எதுவும் அளவோட இருந்திட்டா நல்லம். (ஆண் நண்பர்கள் பெண் நண்பிகள் தொடர்பில் தெரிந்தவர்களோடு நட்பை வைத்துக் கொள்வது வரவேற்கத்தக்கது. கண்டவர்களையும் நம்பக் கூடாது.)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் , உங்கள் நேரத்தை கணக்கெடுக்காது எழுதிய தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

வாத்தியார்

**********

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் உங்கள் மகள் எந்தப் பிரிவில் படிக்க விரும்புகிறார்.

பொது மருத்துவம்

பல் மருத்துவம்

மிருக மருத்துவம்

தேகப்பயிற்சியாளர் (Physiotherapist)

உயிரியல் மருத்துவம் (Biomed) (ஆராய்ச்சி)

மருந்தியல் மருத்துவம்.

இப்படிப் பல இருக்கின்றன.

பொது மருத்துவம் உள்ளிட்ட பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்த பட்ச தகமைகள் பல்கலைக்கழகத்திற்கு கழகம் மாறும்.

பொதுவாக பட்ட முன் படிப்புக்கு (undergraduate) UCAS மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். படிப்புகள் ஆண்டு தோறும் செப்டம்பரில் ஆரம்பமாகும்.

பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கான குறைந்த பட்ச தகமைகளை கோரும் அதே பட்சத்தில் பொது மருத்துவம் பல் மருத்துவம் உயிரியல் மருத்துவம் (ஆராய்ச்சி) போன்ற துறைகளுக்கு அனுமதிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சைக்கு சமூகமளித்து அதில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடியும். UCAS மூலம் விண்ணப்பித்தாலும் அனுமதி பல்கலைக்கழகங்களூடே தரப்படும்.

நன்றி நெடுக்ஸ்

தங்களது கள உறவுக்கான நேரத்துக்கும் கருத்துக்கும்

மற்றவர்களும் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்

இன்று பல கனேடியர்கள் அயர்லாந்தில் மருத்துவம் படிக்கின்றார்கள்.

http://www.cmaj.ca/cgi/content/full/162/6/868

இங்கிருந்து அமெரிக்கா செல்லவும் முடியும். பல மிகத்திறமையனவர்கள் அமெரிக்கா செல்ல விரும்புவதுண்டு. :lol:

இங்கிலாந்துடன் ( http://www.globaleducationcounsel.org/study-in-united-kingdom/study-in-united-Kingdom.htm ) இதனையும் ஒரு தெரிவாக பார்க்கலாம்.

1.அயர்லாந்தின் மருத்துவ அமைப்பு

http://www.rcpi.ie/EducationAndTraining/Pages/EducationFrequentlyAskedQuestions.aspx

2. பல்கலைக்கழகங்கள்

There are 7 medical schools in the island of Ireland: 6 in the Republic, & 1 in Northern Ireland:

University of Cork;

3 in Dublin - The Royal College of Surgeons of Ireland; Trinity College, & University College;

University of Galway;

University of Limerick (4 year graduate entry course only);

Queen's University, Belfast, Northern Ireland.

http://www.ucc.ie/iumc/consortium-brochure-mar02.htm

3. செலவு

Dublin is more expensive than Galway, for rent (and pints). Though in the former location, it is possible to live on €1000 (£700) a month for rent, food and a bit of a (thrifty) social life.

Try to shop in supermarkets and not convenient stores, cook all your own food etc and you'll be fine.

As an EU student you are entitled to free fees paid for by the Irish Government. However, the registration cost for these free fees is €800 (£550) per annum.

மேலும்: http://www.thestudentroom.co.uk/showthread.php?t=435686

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரிபியன் தீவுகளையும் ஒருக்கா பார்க்கலாம். இப்ப பெரியளவில் பார்ப்பது எங்கே ரெசிடென்சி செய்தது என்று. USA செய்தால் மற்ற நாடுகளுக்கு போவது சுலபம். கனடா அவுஸ்திரேலியா, UK சரியாக தெரியாது ..அனால் UK ரெசிடென்சி வைத்து USA வேலை செய்ய முடியாது. Generally USA better than all other places..I would say plan according to that...

எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன் ஜீவாவிற்கோ,அல்லது வாத்தியாருக்கோ அல்லது வேறு யாருக்காவதுபயன்பட்டால் புண்ணியமே.

எனது மூத்த அக்காவின் மகள் கனடாவில் யுனிவெர்சிடி ஒப் டொரொன்டோவில் லைfவ் சயன்ஸ் செய்து 90% மேல் அவரேஜும் எடுத்தா இருந்தும் எம் கற் எனும் பரீட்சையில் நல்ல மாக்ஸ் எடுக்கவில்லையோ மன்ன்னவோ மருத்துவ அனுமதி கிடைக்கவில்லை.அமெரிக்கா சென்று மன்கட்டன் யுனிவெர்சிடியில் காசுகட்டி மருத்துவம் படித்தா.முதல் வருடம் மாத்திரம் $50,000 மேல் முடிந்ததாக வும் பின்னர் லோன் எடுத்துபடித்ததாகவும் சொன்னா.இப்போ அங்கேயே வேலை பார்கின்றா.அவா சொல்லித்தான் மற்ற அக்காக்களின் ஒரு மகன்,ஒரு மகள் கரேபியயனில் மருத்துவம் படித்தார்கள்.செலவும் குறைவு அமெரிகன் யூனிவெர்சிடி லோனும் எடுக்கலாம்.3 வருடங்கள் கரேபியன் 2வருடங்கள் அமெரிக்கா பின் கனடாவில் ரெசிடென்சி.ஆனால் யாரும் மருத்துவராக வரவேண்டும் என்ற கனாவில் இருந்தாலொழிய அதைப்போல் ஒரு கஸ்டம் இல்லை என எனது மருமகன் அடிக்கடி சொல்வார்.மக்மாஸ்டரில் இப்ப ரெசிடென்சி செய்கின்றார் 30 வயது ஆகின்றது தன்னுடன் படித்தவர்களெல்லாம் ஏதோ துறையி பெரியவர்களாகி கலியாணமும் கட்டிவிட்டதாகவும் தான் இன்னமும் புத்தகத்துடன் மாரடிப்பதாகவும் இனி தயவு செய்து உங்கள் பிள்ளைகளை டொக்ரராக போஸ் பண்ண வேண்டாமென்றும் சொல்வார்.

அதைவிட இந்தியாவில் பெங்களூரில் மணிப்பால் என்ற இடத்திலும் ஒரு அக்காவின் மகன் பல்வைத்தியம் படிக்கின்றார் அங்கு மருத்துவமும் படிக்கலாம் அதுவும் உலக அங்கீகாரம் பெற்ற யூனிவேர்சிடி தான்..

வாத்தியாருக்கு இங்கிலாந்தில் தான் உதவிதேவை என்றால் சில தொடர்புகளை தந்துதவ முடியும் அவர்களின் பிள்ளைகள் சிலர் அங்கு மருத்துவர்களாக இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட இந்தியாவில் பெங்களூரில் மணிப்பால் என்ற இடத்திலும் ஒரு அக்காவின் மகன் பல்வைத்தியம் படிக்கின்றார் அங்கு மருத்துவமும் படிக்கலாம் அதுவும் உலக அங்கீகாரம் பெற்ற யூனிவேர்சிடி தான்..

இந்தியா, இலங்கை போன்ற வேறு நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரெலியா போன்ற நாடுகளில் வேலை செய்ய வேணுமென்றால் அந்த நாடுகளில் நடைபெறும் பரீட்சையில் சித்தி பெற வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அகூதா,வல்கானோ,அர்ஜுன்,கந்தப்பு அனைவருக்கும் எனது நன்றிகள்

உங்கள் தகவல்கள் வித்தியாசமாக இருந்தாலும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்.

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

arjun, on 28 October 2010 - 03:10 AM, said:

அதைவிட இந்தியாவில் பெங்களூரில் மணிப்பால் என்ற இடத்திலும் ஒரு அக்காவின் மகன் பல்வைத்தியம் படிக்கின்றார் அங்கு மருத்துவமும் படிக்கலாம் அதுவும் உலக அங்கீகாரம் பெற்ற யூனிவேர்சிடி தான்..

இதைபற்றி அறிவதற்கு உதவ முடியுமா அர்சுன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.