Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷோபாசக்தி - புலி படுத்தது.. நாய் நரியானது !

Featured Replies

karungurangu14761335.jpg

யாருக்கும் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியங்கள் எதுவும் எனக்கில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அது தேசம் நெட், ரயாகரன் என்னைப் பற்றி எழுதத் துவங்கிய போதே நான் இதை எழுதியிருப்பேன். தனிநபர் தூற்றல்கள், வசவுகள், இது பற்றி நான் கவலைப்பட்டிருந்தால் ஆதவன் தீட்சண்யாவுக்கு மட்டும் நான் பத்து பதில் கட்டுரைகள் எழுதியிருக்க வேண்டும். சோபா சக்தி எழுதியிருக்கும் சமீபத்திய பதிவுகளும் சரி, ஏற்கனவே எழுதியவர்களும் சரி என் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் சில உண்மைகளும் பல பொய்களுமாக கலந்து கட்டி எழுதுகிறார்கள். சோபா சக்தியைப் பொறுத்தவரை சில விஷயங்களில் நான் பேசாததை பேசியதாகச் சொல்கிறார். அவர் நிறுவ நினைக்கும் விம்பத்தைக் கட்டமைக்க நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து சில வரிகளை வெட்டி ஒட்டி தன் கருத்துக்கு வலுச் சேர்த்து என்னை அரசியல் ரீதியாக வீழ்த்தி விட்டதாக நினைக்கிறார். லண்டனின் நான் பேசிய விஷயத்தில் சோபா நான் இப்படிப் பேசியதாகச் ‘’“வன்னி யுத்தத்தில் விடுதலைப் புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்களை விடுவிக்கக் கோரியது அநீதி” சொல்கிறார் சோபாசக்தி. எதற்கு வம்பு நான் பேசியதை நண்பர் கோபி அவர் இணையத்திலேயே வெளியிட்டிருக்கிறார் அதை நீங்களே கேளுங்கள் . http://www.gopi.net/iataj/conference/2010/speeches. புலிகளிடம் அகப்பட்டிருந்த மக்கள் என்ற சொல்லில் உள்ள இலங்கை அரசு ஆதரவு தொனியை கவனியுங்கள். அத்தோடு நான் பேசாத ஒன்றை பேசியதாக இட்டுக்கட்டும் பொய்யையும் பாருங்கள்.

............................................

ஷோபா சக்தி என்னைப் பற்றி எழுதிய கட்டுரைகள் போட்ட காமெண்டுகள் சாரம் இது.

யாரோ கொடுத்த காசில் லண்டன் வருகிறாய், தெருப்பொறுக்கியும், தெருப்பெருக்கியும் சம்பாதிக்கும் பணத்தில் இந்தியா வந்து அரசியல் பேசுகிறேன்.

2.

வைட் காலர் ஜாப், கருணாநிதியின் குடும்ப பத்திரிகை

குங்குமத்தில் கூலிக்கு மாரடிப்பு.

3

முத்துக்குமாரின் ஆன்மா இவரை மன்னிக்குமா?

கமெண்ட்-4

புலிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது " என வாந்தியெடுப்பதை எப்படிப் புரிந்துகொள்வது! Maybe லண்டன் ஞானோதயம்?என்பதாக சில கட்டுரைகளையும் கமெண்டுகளையும் எழுதிய்யிருந்தார் ஷோபா.

நண்பர்கள் எக்காரணம் கொண்டும் இதற்கு பதிலளிக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்ட போதும். சில உண்மைகளை சுட்டிக் காட்ட வேண்டும் என்று எழுதுகிறேன். நண்பர்களே மன்னித்துக் கொள்ளுங்கள்.

1. என்னை லண்டனுக்கு அழைத்தவர்கள் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தினர். ஈழம் தொடர்பான விஷயங்களில் அவர்கள் என்னை நட்பு சக்தியாகக் கருதி அழைத்திருக்கலாம். iataj என்றழைக்கப்படும் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம் விடுத்த அழைப்பின் பெயரில் வெளிப்படையாகவே நான் சென்று வந்தேன். சரி லண்டன் வந்து போனதோ, இனி வரப்போவதோ இருக்கட்டும், புலம்பெயர் நாட்டில் மூன்று வேலைகள் பார்த்து நாய்படாத பாடு பட்டு காசு சம்பாதித்தாலும் இந்தியா வந்து போக கடன் வாங்கியே வந்து போகும் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கு. ஆனால் காப்பிக் கோப்பை கழுவதாக ஊரை ஏமாற்றி அங்கு அரசு கொடுக்கும் நிதியில் வாழும் சோபாசக்தி மட்டும் எப்படி வருடத்திற்கு மூன்று முறை இந்தியா வந்து போக முடிகிறது. பிரான்சில் அவர் எங்கே எந்த நிறுவனத்தில் எப்போது வேலை பார்த்திருக்கிறார் என்ற உண்மையைச் சொல்வாரா?

புலம் பெயர் நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா வர வீசாவுக்கு விண்ணப்பிக்கும் போது இந்திய தூதரகம் மூன்று வாரகால அவகாசம் கேட்கிறது. அப்ளை பண்ணுகிறவரின் வீசாவை டில்லிக்கு அனுப்பி இந்திய புலனாய்வுத்துறை முடிவு செய்த பிறகே புலத்து மக்களுக்கு இந்தியா வர வீசா கிடைக்கும் போது அதெப்படி உங்களுக்கு மட்டும் இந்தியா கேட்கும் போதெல்லாம் வீசா கொடுத்து விடுகிறது? ஒரு அரங்கக் கூட்டம் நடத்தக் கூட தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களுக்கும் தீவீர இடதுசாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்படும் போது எப்படி உங்களுக்கு மட்டும் திருவனந்தபுரத்தில் இலங்கை அரசு ஆதரவு மாநாட்டு நடத்த வசதியும் வாய்ப்பும் வருகிறது.

2. வொயிட் காலர் ஜாப்பும், கூலிக்கு மாரடிப்பதும், என்று எழுதியிருக்கிறீர்கள். கூலி கேட்டவனை அடிப்பதை விட கூலிக்கு மாரடிப்பது ஒன்றும் தவறில்லைதானே? ஆனால் நீங்கள் கேட்க வருவது நான் கூலிக்கு மாரடிக்கும் இடத்திற்கும் எனது அரசியல் ஓர்மைகளுக்கும் இடையிலான முரண் தொடர்பானது. எப்படி உங்கள் கொள்கைகளுக்குப் புறம்பான இடத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்கிறீர்கள்? அ.மார்க்ஸ் மாநிலக் கல்லூரியிலும், ஆதவன் தீட்சண்யா மத்திய அரசு நிறுவனமான பி. எஸ். என். நிறுவனத்திலும், மிக உயர்ந்த ஊதியத்தில் சலுகைகளோடு மிக பாதுகாப்பான அரசு வேலை பார்த்தார்கள். பார்க்கிறார்கள். சோபாசக்தியில் அளவுகோல்படி ஆமாம் என் பார்வையில் அல்ல சோபாசக்தியின் பார்வையின் படி பிஎஸ் என் எல் நிறுவனத்தைக் கட்டுப்படுத்தும் ஆ. ராசா ஒரு திமுக அமைச்சர் கொள்கை ரீதியாக போயஸ்கார்டனில் கும்மியடிக்கும் போது நியாயமாக ஆதவன் பிஸ். என். எல் நிறுவனத்தில் கூலிக்குமாரடிக்கக் கூடாதில்லையா? கொள்கை கோட்பாடுகளை எல்லாம் பி.எஸ்.என். எல்- ம், மாநிலக் கல்லூரியும் ஏற்றுக் கொண்ட பிறகுதான் அங்கு அவர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள் என்ற உண்மை நீங்கள் என்னை கூலிக்கு மாரடிக்கிறவன் என்று எழுதிய பின்புதான் எனக்கே தெரிந்தது. என் குடும்பத்தைக் காப்பாற்ற நான் கூலிக்கு மாரடிக்கிறேன். என்னை மாதிரியே வேலை பார்க்கிறார் உங்கள் நண்பர் சுகுணாதிவாகர் ஒரு தூய கடவுள் மறுப்பாளரான அவர் என்ன? வேலை பார்க்கும் நிறுவனத்தோடு போட்டிருப்பது சுயமரியாதை அக்ரிமெண்டா? ஆக நான் கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் ஒடுக்குமுறைக்கு எதிரான எனது குரல்களை எப்போதும் அமைதியாக்கிக் கொண்டதில்லை. சமகாலத்தில் நான் எதிர்கொள்கிற எல்லா பிரச்சனைகளிலும் நான் என் அறிவுக்குப் பட்ட மாதிரி எதிர்வினையாற்றுகிறேன். //எழிலன் வயிற்றுப் பிழைப்புக்காகவே அங்கேயிருக்கிறார் என்றொரு வாதமும் முகப் புத்தக விவாதத்தில் வந்துபோனது. ஒரு அரசியல் போராளி வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது நிலைப்பாடுகளையும் மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதே எனது உறுதியான நிலைப்பாடு. // ஆக ஷோபா என் வேலையை குறி வைக்கிறார். எல்லா அயோக்கியர்களும் ஒரு மாத ஊதியக்காரன் மீது வீசும் கடைசிக் கல்லை என் மீதும் வீசுகிறார் சோபாசக்தி. சரி செய்யுங்கள் முடிந்தால் தாக்குப்பிடிக்கிறேன் அல்லது இந்த வேலையை விட்டு விலகுகிறேன்.

3. தியாகி முத்துக்குமார் உயிர்த்தியாகம் செய்தார் அருள் எழிலன் கருணாநிதியிடம் ஊதியம் பெறுகிறார், ஆகவே முத்துக்குமாரின் ஆவி என்னை மன்னிக்காது என்பது சோபாவின் அடுத்தக் குற்றச்சாட்டு. புலி ஆதரவாளர்கள், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என்று தங்களைத் தாங்களே காட்டிக் கொண்ட சந்தர்ப்பாவாதிகள் முத்துக்குமாரை அன்றே புதைக்க நின்ற போது முத்துக்குமாரை புதைக்க விடாமல் போராடியவர்கள் நாங்கள் நான் மட்டுமல்ல எங்களோடு உங்கள் நண்பர் சுகுணாவும் வேறு வழியில்லாமல் நின்றிருந்தார். //ஒரு கட்டுரையில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைமை நிர்வாகியும் நண்பருமான வன்னி அரசு கூட முத்துக்குமாரின் உடலை வைத்துக் கொண்டு அருள் எழிலன் தான் மறியல் செய்து கொண்டிருந்தார் அவர் எந்தக் கல்லூரியில் படிக்கிறார்// என்று யாரையோ திட்டுவதாக நினைத்து என்னை வசவிக் கொண்டிருந்தார். ஆக நான் அப்போது என் வேலையைப் பற்றிக் கவலைப்பட வில்லை. உங்களின் ஆத்ம நண்பர்கள் எல்லாம் வெளிப்படையாக இயங்க பயந்து வெவ்வேறு பெயர்களில் மறைந்திருந்து தனி நபர் சண்டைகளில் ஈடுபட்ட போது நான் டி.அருள் எழிலன், அல்லது பொன்னிலா இந்த இரண்டு பெயர்களிலுமே எழுதினேன். முத்துக்குமாரை புதைத்த சந்தர்ப்பவாதிகளை முதன் முதலாக அம்பலப்படுத்தியது நான் தான். அப்போது உங்கள் நண்பர் ஆதவன் உள்ளிட்ட இலங்கை ஆதரவாளர்கள் முத்துக்குமாரை இழிவு செய்தார்கள். ஒரு பக்கம் நீங்கள், இன்னொரு பக்கம் முத்துக்குமாருக்கே துரோகம் செய்த தமிழக சந்தர்ப்பவாதிகள். இவர்களை எல்லாம் எதிர்த்து நாங்கள் சிலரும் நின்றோம். அதில் உங்கள் நண்பரும் உண்டு. இப்போது முத்துக்குமாரின் கடிதத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள் முத்துக்குமாரின் ஆவி யாரை மன்னிக்கு யாரை மன்னிக்காது என்று? கருணாநிதியிடம் கூலிக்கு மாரடித்தாலும் அருள் எழிலன் தான் எழுதிய கடிதத்திற்கு உண்மையாக இருந்திருக்கிறான் என்று முத்துக்குமாரின் ஆவி என்னை வாழ்த்தும் என்றுதான் நினைகிறேன்.

மக்களை விடுவிக்கக் கோருவது பேரினவாதிகளின் கோரிக்கையே.

.........................................

முதலில் என்னை தனிப்பட்ட ரீதியில் தாக்கிக் கொண்டிருந்த ஷோபா திடீரென என்னை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்துகிறாராம். அந்த யோக்கியதையை நீங்களும் வாசியுங்கள்.

//பு லிகளின் போராட்டமென்பது முப்பதாண்டுகால போராட்டமே. இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் செய்த சகோதரப்படுகொலைகள், ஜனநாயக மறுப்பு என்பதோடு கிளிநொச்சி வீழ்ந்தபோதே மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும் என்கிற பார்வை எல்லாம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அவர்கள் மக்களை ஏன் விடவில்லை என்றால் அதற்கு ஆயிரம் காரணம் அவர்கள் சொல்கிறார்கள். கேட்கவே வேதனையாக இருக்கிறது. ஒரு வரியில் சொன்னால் அவர்கள் யாரையும் விதிவிலக்காக நடத்தவில்லை. முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் 18 வயது நிரம்பிய அனைவரையுமே பிடித்துச் சென்றதாகவும் ஆனால் அதை விட அதிகமான மக்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாகவும், சென்ற மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தி புலிகளை நோக்கி இராணுவம் முன்னேறியதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ஒருவரைப் பிடிக்காது என்பதற்காகவோ பிடித்திருக்கிறது என்பதற்காகவோ கண்டமேனிக்கு வாந்தி எடுக்க நான் விரும்பவில்லை.

மேலேயுள்ளது 31.08.2009ல் 'கீற்று' இணையத்தில் அருள் எழிலன் எழுதியது. "கிளிநொச்சி வீழ்ந்தபோதே அவர்கள் மக்களை விட்டு நகர்ந்திருக்க வேண்டும்" என்கிற அருள் எழிலன் ஒரே வருடத்தில் குத்துக்கரணம் அடித்து 23.10.2010 லண்டன் புலிகளின் ஊடக மாநாட்டில் "வன்னி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை விடுவிக்கும்படி கேட்டிருக்க முடியாது "//

முதலில் லண்டனில் நான் என்ன பேசினேன் என்பதைச் சொல்லி விடுகிறேன் // புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி நீங்கள் ஏன் கோரவில்லை என்று சிலர் எம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள். மக்களை விடுவிக்கக் கோரி நான் ஏன் புலிகளைக் கேட்க வேண்டும். 30 ஆண்டுகளாக வன்னி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிர்வாக அலகு ஒன்று புலிகளால் அங்கு நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. அந்தப் பகுதிக்குள் சென்று மக்களைக் கொன்று குவிக்கும் இராணுவமே வெளியேறு என்பது எனது அப்போதைய கோரிக்கையாகவும், வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு என்று கேட்பது இப்போதைய கோரிக்கையாகவும் இருக்கிறது. இதுதான் நேர்மையான அரசியலே தவிற புலிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் படி கேட்க மாட்டேன். வரிக்கு வரி இப்படி இல்லா விட்டாலும் நான் பேசியதன் பொருள் இதுதான்//

எங்குமே நான் மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரவும் இல்லை எழுதவும் இல்லை. உண்மையில் புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டே பயங்கரவாத இலங்கை அரசின் குற்றச்சாட்டு. புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லித்தான் வன்னி மக்கள் மீது கிளஸ்டர், பாஸ்பரஸ், உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி கொத்துக் கொத்தாய் பச்சைப் படுகொலைகளை இந்தியாவின் துணையோடு நடத்தியது இலங்கை. ஆக புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்ற கோரிக்கை இலங்கை அரசின் கோரிக்கை மட்டுமல்ல இந்திய அரசின் கோரிக்கையும்தான். இந்த இரண்டு கொலைகார கிரிமினல்களின் கோரிக்கையை நான் ஏன் புலிகளை நோக்கி வீச வேண்டும் என்பதே இன்றுவரை என்னிடம் உள்ள கேள்வி. நான் சொன்ன கருத்தை இன்றுவரை நான் மறுக்கவே இல்லை. நான் பேசியது முழுக்க முழுக்க சரியாது. இலங்கை அரசின் அந்த படுபாதக கோரிக்கையைத்தான் சோபாசக்தி அவர்களே நீங்களும் ரயாகரனும் அப்போதும் இப்போதும் முன்வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.வன்னி மக்களோ கடந்த முப்பதாண்டுகளாக புலிகளின் நிர்வாக ஒரு சிறிய அளவிலான சிவில் நிர்வாக அலகிற்குள் வாழ்ந்தார்கள். அதில் ஏராளமான சாதக, பாதங்களும் உண்டு. ஆனால் எந்த விதத்தில் நோக்கினாலும் அந்த வாழ்வு சிங்கள பேரினவாத இராணுவத்தின் ஆட்சியை விட சிறந்தது என்பது என் கருத்து. அதை இன்று காலம் நிரூபித்திருக்கிறது.

புலிகள் மீதான எனது விமர்சனம்

...........................................................

சரி அப்படி என்றால் கீற்றில் நீங்கள் வேறு மாதிரி எழுதியிருப்பதாக ஷோபா சொல்கிறாரே? என்று கேட்கலாம். மே மாதம் 13- வரை புதுமாத்தளன் மருத்துவமனை வரை எனக்கு நேரடியான தொடர்புகள் இருந்தது. மார்ச் மாத இறுதியில் கூட நண்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தெஹல்காவுக்கு ஒரு ஆங்கிலப் பேட்டியை கடுஞ்சமருக்கு மத்தியில் எடுத்துக் கொடுத்தேன்.( எனக்கு ஆங்கிலம் தெரியாது என்பது தனிக்கதை) இன்று மாற்றிப் பேசுகிற மருத்துவர் சத்தியமூர்த்தி கூட அப்போது புலிகள் மக்களை பிடித்து வைக்கவில்லை என்றார் அப்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தவர் அப்படிப் பேசினார். இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு புலிகள் மக்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்கிறார். இராணுவம் மக்களைக் கொல்லவில்லை என்கிறார். வன்னிக்குள் இருந்தவரை புலிகளே கடவுள் என்றவர்கள் யாழ்பாணம் சென்ற பிறகு மாற்றிப் பேசினார்களே அவர்கள் சொன்ன தகவல்கள்தான் புலிகள் மக்களைப் பிடித்தார்கள் என்று. (இந்தத் தகவல்களை மே மாதம் இறுதியில் முகாம்களில் இருந்தபடியே கைத் தொலைபேசியில் என்னிடம் பரிமாறிக் கொண்டார் அந்த நண்பர்) எனக்கு அவர்கள் மீதும் வருத்தம் இல்லை இலங்கையோடு ஒப்பிடும் போது நெருக்கடி குறைவான தமிழகத்திலேயே ஈழ விடுதலைக்கு உண்மையாக இல்லாத சந்தர்ப்பவாதிகள் தங்களின் சுய லாப ஓட்டு வேட்டைக்கு ஈழத்தைப் பயன்படுத்தும் போது உயிர்வாழ்தலே நெருக்கடிக்குள்ளாகி பேரினவாத இராணுவத்திடம் சிக்கியிருக்கும் மக்களும், பிரமுகர்களும் இலங்கை அரசோடு இணைவதை புரிந்து கொள்ள முடிகிறது. போர் பற்றிய குழப்பம் இப்போது அரசோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் என்று அவர்கள் கொடுத்த தகவல்கள் எனக்குள் ஏற்படுத்திய அயர்ச்சி காரணமாகவே எழுதினேன். இன்னொன்றையும் இங்கே சொல்கிறேன். உங்கள் நண்பர் ஒரு நாள் இரவு தொலைபேசினார். நான் போனை எடுத்தவுடம் ஓ வென கதறியழுதார். என்ன இப்படியழுகிறார் என்று எதுவும் பிரச்சனை இருக்கும் போலிருக்கு என்று கேட்டால் ‘’புலிகள் மக்களை இப்படிக் கொல்லலாமா? என்று கேட்டார். ஒருவர் அழுதபடியே கேட்கிறாரே இவரிடம் போய் என்ன விவாதிப்பது என்று சரி சரி விடு.... அப்படியும் சொல்றாங்க என்று மழுப்பலாக பேசினேன். மூன்று நாட்கள் கழித்து அந்த நபர் ஒரு இணையதளத்தில் இப்படி எழுதியிருந்தார் “புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்களை நெருக்கிப் பிடித்துக் கேட்டாலே புலிகள் மக்களைக் கொன்றதை ஒத்துக் கொள்கிறார்கள்” என்று எழுதினார் அந்த அழுகை மனிதர். இப்போது ”என்று தகவல்கள் வருகின்றன" என்று உறுதியில்லாமல் நான் எச்சரிக்கையாக எழுதியதை இந்த தந்திரக்கார நரி புலிகள் மக்களை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று நான் எழுதியுள்ளதாக சித்தரிக்கின்றது. எனக்குத் தகவலைச் சொன்ன யாழ்பாணத்து மாமனிதர்களோ பேஸ்புக்கில் ஷோபா என்னைச் சித்தரித்து எழுதியதில் லைக் போடுகிறார்கள்.

ஆனால் போர் முடிந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் பிறபகுதி ஒன்றில் ஒரு மனிதரைச் சந்தித்தேன் அவர் போரின் தன் இரண்டு குழந்தைகளையும் தவற விட்டவர் என்பதோடு மனைவியையும் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு பலி கொடுத்து சித்திரவதையான ஒரு வாழ்வை வாழ்ந்தார். (இவரைப் பற்றி இதற்கு மேல் என்னால் இங்கே எழுத முடியாது) அவர் சொன்னார் புலிகள் யாரையும் விதிவிலக்காக கருதவில்லை. பிரபாகரன் தன்னுடைய எல்லா குழந்தைகளையுமே கள முனையில் வைத்திருந்தார். அவர் உண்மையில் தப்பிச் செல்ல நினைக்க வில்லை. தப்பிச் சென்ற மக்களை தடுக்கவும் இல்லை. குடும்பத்தோடு பத்திரமாக யாழ்பாணத்திற்குத் தப்பிச் சென்றவர்களும் உண்டு என்றார். அப்படித் தப்பிச் சென்றவர்களை புலிகள் சுடவில்லை என்றும் சொன்னார். பிறகு ஒரு ஒரு இளம் பெண்ணைக் கேட்ட போது சிறுமிகளைப் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தது உண்மைதான் என்றார். அவர் கூட புலிகள் பொதுமக்கள் யாரையும் சுட்டுக் கொல்லவில்லை என்றார். நான் மீண்டும் மீண்டும் கேட்ட போதும் அப்படித்தான் சொன்னார். இது தொடர்பாக சில வாக்குமூலங்கள் என்னிடம் உள்ளன ஆனால் அவைகளை என்னால் வெளியிட இயலாது நண்பர்களே.

போருக்குப் பின்னர் பௌத்த பேரினவாத பாசிச இலங்கை அரசுக்கு எதிராகவும் போரை நடத்திய விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்தியாவுக்கு எதிராகவும் எவளவோ எழுதியிருக்கிறேன். அதில் எல்லாம் புலிகள் மீதான் இந்த விமர்சன ஊடாட்டத்தையும் நீங்கள் கவனிக்க முடியும். புலிகள் மீது ஒரு மென்மையான விமர்சனமும் இலங்கை அரசு மீது கடுமையான விமர்சனமும் இருக்கும். முன்பு புலிகளை கடவுள் என்றவர்கள் இன்று இலங்கை அரசை நக்கிப் பிழைக்கும் போது நான் எப்போதுமே புலிகளை கடவுள் என்று சொன்னதில்லை. அவர்கள் இருந்த போது நான் இன்னும் கடுமையாக விமர்சித்திருக்க வேண்டும். இருக்கும் போது விமர்சிக்காமல் விட்டு விட்டு இல்லாது போன இப்போது விமர்சிப்பது தொடர்பான குற்ற உணர்வு என்னிடம் இப்போது இருக்கிறது.

2002 -ல் ஜெயலலிதா ஆட்சியில் வைகோ, நெடுமாறன் ஆகியோர் பொடாவில் கைதாகி சிறையில் இருக்கிறார்கள். மோசமான அந்தக் காட்டாட்சியில் (கருணாநிதியின் இன்றைய ஆட்சியை அந்த ஆட்சியைக் கொண்டு சமன் செய்கிறேன் என்று நினைக்க வேண்டாம். ஜெ, கருணா இருவருமே காட்டாட்சி நடத்துவதில் சளத்தவர்கள் அல்ல) புலிகளைப் பற்றி பேசினாலே பாவம் என்ற எண்ணம் ஊடக உலகில் விரவிக் கிடந்த போது நான் சுப. தமிழ்செல்வனை நேர்காணல் செய்து அந்த மாயையை உடைத்தேன். அன்றிலிருந்து இறுதிவரை சுமார் பத்துக்கும் மேற்பட்ட நேர்காணல்களை புலித் தலைவர்களிடம் பெற்று வெளியிட்டிருக்கிறேன். இதற்காக பத்து காசையோ அல்லது வேறெந்த சலுகைகளையோ நான் யாரிடமும் பெற்றுக் கொண்டதில்லை. ஆனால் தமிழார்வலர், தமிழ் தேசியவாதி என்ற முத்திரை வந்து விழுந்ததுதான் மிச்சம். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத படிப்பறிவற்ற ஒருவனுக்கு தமிழார்வலன் என்கிற முத்திரை விழுந்த கதை இதுதான். நான் தமிழ் தேசியவாதி அல்ல தனித் தமிழ்நாட்டை நான் ஆதரிக்க மாட்டேன் என்று ஏற்கனவே பல இடங்களில் பதிவு செய்தும் இந்த என் மீது குத்தப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர் அழிய மறுக்கிறது நான் என்ன செய்ய?

நான் செய்த தவறு

சமகாலத்தில் தண்டகாரண்யா மக்கள் மீது இந்தியா ஒரு போரைத் தொடுத்திருக்கிறது. மெல்லக் கொல்லும் இந்திய அரசு கொஞ்சம் கொஞ்சமாக மக்களையும், மாவோயிஸ்டுகளையும் அவர்களிடம் நிலங்களையும் வேட்டையாடி வருகிறது. காஷ்மீர் மக்கள் முழு அளவிலான ஒரு மக்கள் வன்முறையில் இந்தியாவுக்கு எதிராக கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள். கல்லெறியும் சிறுவனின் நகங்களை இந்தியாவால் பிடுங்க முடிகிறதே தவிற காஷ்மீரிகள் தேசிய இன விடுதலை உணர்வை இன்று வரை பிடுங்க முடியவில்லை. காஷ்மீர், தண்டகாரண்யா மக்கள் மீதான இந்தியாவின் போருக்கு எதிராக இந்தியா முழுக்க அறிவுவீகள், இடதுசாரிகள், ஊடகவியலாளர்களின் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் எதிப்பைத் தாண்டி ஈழப் போருக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பட்டங்கள் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், புலி ஆதரவாளர்கள் என்னும் வட்டத்தைத் தாண்டி நடக்கவில்லை என்பது ஒரு உண்மை. புலிகள் ஈழ விடுதலைப் போரை கையெடுத்துக் கொண்டதோடு இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை கண்கொண்டும் கண்டதில்லை என்பதோடு. சிங்ளனுக்கு எதிராக போராடும் ஏகாபோக உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டு என்று இலங்கைக்கு எதிராக போராடிய சக்திகளை தடுத்தும் வந்திருக்கிறார்கள். பின்னர் பேரினவாத அரசுகள் இணைந்து நடத்திய யுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் போன போது அனைத்து சக்திகளும் தங்களுக்காக போராட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது கடைசி வரை முழுமையாக நடக்க வில்லை. புலிகளின் அரசியல் நடைமுறைகள் அவர்கள் நம்பிய சக்திகள், மேற்குலகத் தொடர்புகள் அரசுகளை நம்பியிருந்தமை, இந்தியாவின் நிர்ப்பந்தத்தில் சரணடைந்தமை, அரசியல் அற்ற வெற்று இராணுவக் கண்ணோட்டம் என என்று புலிகள் மீது எனக்கும் விமர்சனம் உண்டு இதை நான் எந்த இடங்களிலும் மறைத்ததில்லை. இதில் நான் ஏதோ எழுதி விட்டு மறுத்தது போலவும் பேசி விட்டு பம்முவது போலவும் ஏன் பாவ்லா காட்டுகிறீர்கள் சோபாசக்தி.

சுமார் ஐம்பதாயிரம் மக்கள் வரை இனக்கொலை செய்யப்பட்டு போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் இந்தியாதான் எமக்கு விடுதலை பெற்றுத் தரும் என்று நம்புகிற ஈழ மக்களும் இருக்கிறார்கள். இந்தியா மட்டுமல்ல சீனாவோ, மேற்குலக நாடுகளோ அமெரிக்காவோ எந்த ஒரு நாடும் ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அக்கறையில் ஈழ மக்களுக்கு ஒரு போதும் உதவப் போவதும் இல்லை. விடுதலை பெற்றுக் கொடுக்கப் போவதும் இல்லை. (இதை லண்டனிலும் சொன்னேன்) இனியும் இவர்களை நீங்கள் நம்பினால் மிச்சம் மீதியிருக்கும் மக்களையும் இவர்கள் அழித்து விடுவார்கள் இதுதான் உண்மை. இதற்கு மேல் உங்கள் பாடு. அடுத்து காஷ்மீரில் கூட அடிப்படைவாதக் குழுக்கள், பாகிஸ்தான், இந்திய ஆதரவுக் குழுக்கள், தனி காஷ்மீர் கேட்டு போராடுகின்றன. இந்த எல்லா பிழையான போலிக் குழுக்களைக் கடந்து இந்தியா, பாகிஸ்தானில் இரும்புக்கரங்களில் இருந்து விடுதலை காஷ்மீர் கோரும் அமைப்புகளும் உண்டு. குழுக்கள் அவர்களின் அரசியல் பிழைகள், கொலைகள், காட்டிக் கொடுத்தல், என எல்லாம் போராளிக் குழுக்களிடம் இருந்தாலும் காஷ்மீர் மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய விடுதலை உரிமை உண்டா இல்லையா? அது போல ஈழத்திலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புகளும் படுகொலைகளும், அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஆயுதப் போராட்டம் இருந்தாலும் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமை உண்டா இல்லையா?

இலங்கையின் இனி தமிழ் மக்கள் சேர்ந்து வாழ முடியாது என்பது என் கருத்து. ஆனால் இன்று ஈழத் தமிழர்களிடமே இந்தக் கருத்து இருக்கிறதா? ஈழம் என்ற தனிநாட்டுக் கோரிக்கையில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்களா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இந்தக் குழப்பம் பல மாதங்களாக நிலவுகிறது. ஆக ஈழம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஈழ மக்களும் அவர்களை வழிநடத்தப் போகிற ஈழ இயக்கங்களும்தானே தவிற நான் தமிழகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருப்பதில் இனி அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்படும் தேசிய இனம் என்கிற அளவில் ஈழ மக்களுக்கு பிரிந்து போகும் உரிமை உண்டு. அதை நான் எப்போதும் ஆதரிப்பேன். ஈழத்துக்காக இயக்கம் கட்டுவதா? வேண்டமா? என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம்.என்னுடைய புலி ஆதரவு நிலைப்பாடுகளில் அரசியல் பிழைகள் இருப்பதையும் ஏதோ ஒரு வகையில் நானும் புலிகளின் அழிவில் ஊடக ரீதியாக விமர்சனப்பார்வையற்று துணை போய் இருக்கிறேன் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். மிக வலிமையான முறையில் அவர்களிடம் சில விமர்சனங்களை வைத்திருக்கலாம். அவர்கள் ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ வைத்திருக்கலாம். மற்றபடி மக்கள் விடுதலை தொடர்பான விஷயங்களில் நான் பேசிய விஷயங்கள் உள்ளிட்டு நான் பேசியதை சரியென நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக சோபாசக்தி, ரயாகரன், அ.மார்க்ஸ், ஆதவன், அல்லது இங்குள்ள புலி ஆதரவாளர்கள் விடும் வீரவசனங்கள் இதை எதையும் நான் எப்போதும் பொருட்படுத்தியதில்லை.

இனியொரு

.....................

மற்றபடி உங்களையோ ஆதவன் தீட்சண்யாவையோ, அ,மார்க்ஸை, சுகன் குறித்தோ எழுதியதில் அவதூறுகள் எதுவும் இல்லை.மார்க்ஸ், ஆதவனின் இலங்கைப் பயணங்கள் குறித்து நான் எதுவும் எழுதியதும் இல்லை. மார்க்ஸ், ஆதவன் இருவருமே டக்ளஸை சந்தித்து விட்டு வந்து ஆதவன் வக்கிரமான தன் எழுத்தை எழுதியபோதும் நான் அதற்காக அலட்டிக் கொண்டதில்லை. ஆனால் நான் உட்பட நண்பர்கள் எழுதிய எந்தக் கட்டுரைக்காவது நீங்கள் பதில் சொன்னதுண்டா? இக்கேள்விக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள் சோபா சக்தி. நான் உட்பட நண்பர்கள் எழுதிய கட்டுரைகளில் சில தகவல் பிழைகள் இருக்கும் அந்த தகவல் பிழைகளை எடுத்து வைத்துக் கொண்டு ஒட்டு மொத்த கட்டுரையையும் நிராகரித்து இதெல்லாம் அவதூறு என்று திசை திருப்பும் வேலையை கச்சிதமாக கன காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது லும்பினியிலும் அப்படியான ஒரு தகவல் பிழையை எடுத்து வைத்துக் கொண்டு உங்கள் மீதான குற்றச்சாட்டை நிராகரிக்கிறீர்கள் தவிறவும் இலங்கை அரசை ஆதரிக்கிற எவரும் நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டா ஆதரிக்கிறார். லும்பினி கட்டுரையில் என்னை இனியொரு இணைய தள ஆசிரியர் என்று குறிப்பிடிருக்கிறீர்கள். இது தேசம் நெட், ரயாகரன் இவர்கள்தான் முதல் முதலாக இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியது. அதையே நீங்களும் அருள் எழிலன் இன்யொரு, குங்குமம் இதழ்களில் ஆசிரியர் குழுவில் இருப்பதாக எழுதி ஆள்காட்டி வேலை செய்திருக்கிறீர்கள். குகநாதனிடம் அருள் செழியன் இழந்த பணத்தை மீட்டது தொடர்பாக பிரச்சனை வந்த போது இனியொருவையும் புதிய திசைகளையும் சேர்த்தே அடித்தார்கள். நானே தோழர் நாவலனிடம் நான் இனியொருவில் எழுதுவதால்தான் உங்களுக்கு தர்மசங்கடங்கள் எழுகின்றன. அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கடந்த ஒன்றரை மாதங்களாக நான் இனியொரு பக்கமே செல்வதில்லை. இந்த உண்மை உங்களால் தீபக்கிற்கு முன்னால் பிரான்சில் வைத்து தாக்கப்பட்ட நண்பர் அசோக் யோகனுக்கும் தெரியும். தவிறவும் புதிய திசைகள் தோழர்களின் வேலைத்திட்டங்களின் ஒரு அங்கமாக இனியொரு இருக்கிறது. கருணாநிதியிடம் கூலிக்கு மாரடிக்கும் என்னை மாதிரி தனி நபர்களால் தோழர்களுக்கும் கெட்ட பெயர் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு ஒதுங்கினேன் இதுதான் உண்மை. இப்போது நான் இனியொருவிலும் இல்லை வேறெந்த இணையதளங்களிலும் இல்லை.

நீங்கள் எழுதும் லும்பினி இணையதளத்தை வசுமித்ர, மீனா இவர்களை ஆசிரியர்களாக் கொண்டு வெளிவருவதாகச் சொல்லப்படும் லும்பினியை இயக்குவது யார்? அசாதி என்ற பெயரில் தொழில் முதலாளிகள் மீதான் விமர்சனம், பிலால்முகம்மது என்னும் பெயரில் கீற்று மீதான் விமர்சனம், அங்குலிமாலா என்ற பெயரில் சீமானை அடித்து நொறுக்குவது என்று வெவ்வேறு பெயரிகளில் எழுதிய அந்த நபரை உங்களைப் போல நானும் ஆள் காட்டவா? ஆக மறைந்திருந்து கூலிக்கு மாரடிக்கிறவன் எல்லாம் யோக்கியவான் அருள் எழிலன் என்ற பெயரிலேயே எழுதும் நான் கூலிக்கு மாரடிக்கிறவனா? இதுதான் உங்கள் தலித், பின் நவீனத்துவ நீதியா?

நீங்கள் ஒரு அரசு ஆதரவாளர்

.........................................................

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத் துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை எழுத்தாளரான நீங்கள் எப்போதாவது இலங்கை அரசை அம்பலப்படுத்தி எழுதியதுண்டா? எப்போதுமே உங்கள் கட்டுரை இலங்கை அரசை விமர்சனம் செய்வது போலத் துவங்கும் கடைசியில் இங்குள்ள ஈழ விடுதலை ஆதரவாளர்களையும், புலிகளையும் டிரவுசரைக் கழட்டி விட்டு அமைதியாகிவிடும். ஒரு கட்டுரையில் ஒரு பகுதியை மட்டும் கணக்குக் காட்டாதீர்கள். எப்போதும் உங்களின் எழுத்து எதிர்ப்பியக்கங்களை பல வீனப்படுத்தவும் இயக்கம் கட்டுகிறவர்களை ஏளனம் செய்யவுமே பயன்பட்டிருக்கிறது. இலங்கை அரசை எதிகொள்ளும் எங்களை மாதிரி ஆட்களை அம்பலப்படுத்துகிறேன் ஆயாசப்படுத்துகிறேன் என்று இலங்கை அரசை மறைமுகமாக அதன் கொலை முகத்தில் இருந்து பாதுகாக்கின்றீர்கள். அதற்கு உறுதுணையாக கட்டுரையில் உள்ள தகவல் பிழைகளைப் பிடித்துத் தொங்குவீர்கள். நான் எங்குமே இலங்கை அரசை ஆதரித்ததும் இல்லை நான் புலிகளின் ஆதரவாளன் இல்லை என்று மாற்றிப் பேசியதும் இல்லை. நான் இப்போதும் இலங்கைக்கு எதிரான விவாகரங்களில் உறுதியாக இருக்கிறேன். நீங்கள் பௌத்தம், தம்மம், என்று இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று அறிவு பயங்கரவாதத்தை எமக்கு எதிராக வீசுகிறீர்கள்.

இலங்கை அரசு இன்று உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களோடும் எதிர்ப்பியக்கங்கள் மீதும் ஒரு உளவியல் போரை தொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய புதிய ஊடக அமைப்புகள், புரட்சி அமைப்புகள் எல்லாம் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பலான இந்த அமைப்புகள் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற தன்னார்வக்குழுக்களாக உள்ளனர் சமீபத்தில் சென்னை வந்து மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்ற ராகவன் கூட sldf அமைப்பில்தான் வேலை செய்கிறார். ஆனால் இவர்களுக்கும் அரசுக்குமான் தொடர்பு அது தொடர்பான ஆதரங்களை எடுப்பது எதுவும் சிரமமான காரியங்கள். என்கிற நிலையில் பல்வேறு தகவல்பிழைகளுடனே பல கட்டுரைகளை எழுத முடிகிறது இது ஏதோ எனக்கு மட்டும் என்று நினைத்து வீடாதீர்கள். எல்லோருக்கும் நேரும் தர்மசங்கடம்தான் இது. ஆனால் அந்தத் தகவல் பிழையை எடுத்து ஒரு கட்டுரையையே நிராகரிக்கிற போக்கை என்னவென்று சொல்வது?

கலகத்தின் பெயரால் பேரினவாதத்தை ஆதரிக்கிறவர் நீங்கள்.

.............................................

பெருந்தொகையான சிறுபான்மை தமிழ் மக்களைக் கொன்ற சிங்கள பேரினவாதம் அதன் மத அடையாளமான பௌத்தத்தை இன்று ஈழம் எங்கும் நிரவி வருகிறது. இந்துக் கோவில்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டு பௌத்த விஹாரைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராக செய்து வரும் அடையாள அழிப்பை இலங்கையில் பௌத்தம் செய்கிறது. தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வாழ்வுரிமையை மறுத்து நிற்கிற இலங்கைச் சூழலை பாசிசம் என்று நான் சொல்கிறேன். இல்லை நீங்கள் சொல்வது தவறு அங்கு நிலவுவது பாசிசம் அல்ல என்றால் அதை நிரூபியுங்கள். இதுவரை நீங்கள் நம்பியதாகவும் பேசியதாகவும் சொல்லப்பட்ட அரசியலைப் பேச தடையாக இருந்த புலிகள் இப்போது இல்லை. ஆனால் அதற்கப்பாலும் இலங்கைக்கு எதிரான எதிர்ப்புச் சக்திகள் இப்போது இலங்கைக்கு வெளியே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.அந்தக் சக்திகளோடு இணைந்து நீங்கள் பயங்கரவாத இலங்கை அரசுக்கு எதிராக போராடுவீர்கள் என்றுதான் போருக்குப் பின்னர் உங்களை எதிர்ப்பார்த்தேன். ஆனால் நீங்களோ இலங்கைக்கு எதிராக வெளியில் உருவாகும் எதிர்ப்புச் சக்திகளை தந்திரமாகத் தாக்கத் துவங்கி விட்டீர்கள்.

இக்கட்டுரையில் சுயவிமர்சனமாக என்னை நான் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டதும். அதை உணர்வதும் உங்களுக்காகவோ என்னைத் தாக்குகிறவர்களுக்காகவோ அல்ல மாறாக நான் எப்போதும் துணையாக நிற்கும் ஈழ மக்களுக்காக ஆமாம் ஏதோ ஒரு வகையில் மக்களுக்காக போராடுகிறார்கள் என்றே புலிகளை ஆதரித்தேன். எதிர்காலத்தில் அந்த மக்கள் நலனையே பிரதானமாகக் கொண்டு செயல்படுவேன். ஆனால் நீங்கள் உங்களுக்கு அந்த மாதிரி ஏதாவது அரசியல் நோங்கங்கள் உள்ளனவா? அ.மார்க்ஸ் எதைச் சார்ந்து இயங்குவாரோ அதற்கு தூபம் போடுகிற சீடப்பிள்ளைகள் நீங்கள் ஆனால் நான் யாருக்கும் எப்போதும் சீடனாக இருந்ததில்லை. தொண்ணூறுகளில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட பின்னடவை ஒட்டி மார்க்ஸ்சிஸ்டுகள் மீது தலித் அரசியலை ஆயுதமாக்கி உங்கள் ஆசான் அடிக்காத அடியா? அதைத்தானே நீங்கள் ஈழத்தில் செய்தீர்கள். இப்போது காலாவதியாகிப் போன பின்நவீனத்துவத்தை விட்டு விட்டு காந்தியிசம், நபிகள் நாயகம் என்று மாறி மாறி இப்போது அவர் சி,பி.எம் கட்சியில் செட்டிலாகியிருக்கிறார். நீங்களோ உங்களை டிராஸ்கியிஸ்ட் என்று உளறிக் கொண்டிருக்கிறீர்கள். தண்டகாரண்யாவிலும், ஈழத்திலும் இந்தியா நடத்திய போரை ஆதரிக்கிற அல்லது மௌனமாக இருக்கிற ஒரு கட்சியை எப்படி பின் நவீனத்துவாதிகள் ஆதரிக்க முடியும் என்ற கேள்வியையாவது உங்கள் ஆசானிடம் கேளுங்கள்.

அதே சீனப் பழமொழியை உங்களுக்கு இப்படிச் சொல்கிறேன்.

" தயவு சென்ற வழியே அப்படியே சென்று விடுங்கள் ஒரு போதும் நீங்கள் திரும்பி வர வேண்டாம் நீங்கள் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் எதிரி.........எதிரிகள்".

Posted by ஆதிரை at

athirai.blogspot.com/

Edited by நிழலி

  • தொடங்கியவர்

ஷோபா சக்தியினதும் பிரறதும் பின்னூட்டல்கள்

பைத்தியக்காரன் said...

வார்த்தைகளை அள்ளிவிடாமல், போகிற போக்கில் அவதூறுகளை தெளிக்காமல், நிதானமாக இடுகையை எழுதியிருக்கிறீர்கள்.

இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...

அவதூறுகளையே இலக்கியமாக எழுதுபவர்கள் என்று பதில் சொல்லியிருக்கிறார்கள்?

தொடர்ந்து எழுதுங்கள்... உங்களை அறிந்தவர்களுக்கு நீங்கள் யாரென்று தெரியும். அறியாதவர்கள், இந்த இடுகையின் வழியே உங்களை அறிந்துக் கொள்வார்கள்.

தோழமையுடன்

பைத்தியக்காரன்

Anonymous said...

/ புலிகளிடம் மக்களை விடுவிக்கக் கோருவதை அநீதியாக கோரிக்கையாகவே நான் பார்க்கிறேன்.// இது உங்களது FBல் நீங்களே எழுதியதுதானே. இதுதானே உங்களது கருத்து. பின்னே நீங்கள் பேசாத ஒன்றை நான் பேசியதாக நீங்கள் சொல்வதில் என்ன தர்க்கமிருக்கிறது.

புலிகளின் ஆதரவாளர்களுக்கு நான் பதில் சொல்வதில்லையா? அடப் போங்கப்பா தோழர் தியாகுவுடன் விவாதித்து 100 பக்கங்களில் புத்தகமே வந்துள்ளது. யமுனா ராசேந்திரன், முதற்கொண்டு சபேசன், சாத்திரிவரை எத்தனை விவாதங்கள் - எத்தனை மறுப்புகள்...'அவதூறு மட்டுமே சொல்பவர்களுக்கு ஷோபா பதில் சொல்வதில்லை' என உங்கள் கருத்தைத் திருத்திக்கொள்ளுங்கள்.

அப்புறம் டக்ளஸின் ஆதாரவானன் நான் என மறுபடியும் உங்கள் அவதூறை ஆரம்பித்துவிட்டீர்கள். இது குறித்து ம.க.இ.க. மருதையனுக்கு போட்ட மனுவே இன்னும் பெண்டிங்கில் இருக்கிறது. இப்ப நீங்க வேறயா! நான் கூட அருள் எழிலன் இந்திய உளவுத்துறையின் உளவாளி என ஒரு பொய்யை எழுத முடியும். என்னிடமும் தானே கீபோர்ட் இருக்கிறது. எனக்குக் கேலிச் சித்திரம் வரையவும் வரும். ஆனா; அது உண்மையாகிவிடாது.

அப்புறம் வேலை விசா என்று ரொம்பத்தான் ஆடுறீங்க. கடந்த மாதம்வரை ஒரு கல்லூரியில் அடிமட்டப் பணியாளாராக வேலை செய்தேன். எனக்குக் கங்காணியாய் இருந்தவர் 'ஈரோஸ்' அழகிரி. சம்பளப் பட்டியலை உங்களுக்கு இப்போதே அனுப்பிவைக்கவா? அல்லது இந்தியா வரும்போது கையோடு கொண்டு வரவா? நல்லாக் கேங்கறாங்கய்யா டீடெயிலு!

வேலையற்றவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதிக் கொடுப்பனவை பெற்றால் தவறா? அது நமக்குச் சும்மா வழங்கப்படுவதில்லை. நமது ஊதியத்தில் பிடித்துவைக்கப்பட்ட தொகையையே வேலையில்லாத நாட்களில் பெற்றுக்கொள்கிறோம். பிரஞ்சுத் தொழிலாளர் வர்க்கம் ரொம்பப் போராடிப் பெற்ற உரிமையுங்க இது. இதில கை வையாதீங்க!!

அப்புறம் விசாப் பிரச்சினை...மூன்று வாரமல்ல மூன்று மாதமே தூதுவரக வாசலில் காத்துக்கிடந்த அனுபவம் எனக்கு உண்டு. ஏங்க வருடம் ஓர்முறை இந்தியாவுக்கு புத்தக சந்தைக்காகவும் எனது பெற்றோர்களைப் பார்க்கவும் நான் வருவது உங்களுக்குப் பிடிக்கலையா?

இலங்கை அரசை எதிர்த்து நான் பேசினதேயில்லையா? ரொம்பத் தவறு தோழர். சும்மா கேட்கிறேன்.. 'ம்' நாவல் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன? அது அரச ஆதரவு நாவலா? வேண்டுமானால் நான் புலியை ஆதரித்து எழுதியது இல்லை எனத் திட்டுங்கள். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு தகவலுக்காகக் கேட்கிறேன் அருள் எழிலன் உங்களது Face Book - Infoல் உங்களுக்குப் பிடித்த புத்தகம் Mmm என நீங்கள் எனக் குறிப்பிட்டிருப்பது 'ம்' நாவலையா

நீங்கள் மறுபடியும் மறுபடியும் உளவாளி கைக்கூலி என்று அவதூறு சொல்வதிலேயே கருத்தாக இருக்கிறீர்கள். பதில் சொல்லியே என் காலம் கழியட்டும்..பரவாயில்லை.

வேறு கேள்விகள் ஏதாவது உண்டா அருள் எழிலன்?

-ஷோபாசக்தி

Anonymous said...

//இதில் நீங்கள் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு உரிய பதில்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை...//

நான் அளித்திருக்கும் பதில்கள் போதாது என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் கேள்விகளைத் தொகுத்துத் தாருங்கள் பைத்தியகாரன். நான் உடனடியாகவே பதில் அளிப்பேன். இதுவொரு இருபத்துநான்கு மணிநேர சேவை.

தங்கள் பணியில்

ஷோபா

Anonymous said...

ஷோபா உங்களுக்கான பதில் இதோ, உங்களையும் உங்கள் குழுவினரையும் வளர்மதி மிகச் சரியாக கணித்து எழுதியிருக்கிறார். ஒவ்வொரு முறை ஈழ ஆதரவாளார்கள் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் நீங்களும் சரி உங்கள் ஆதரவாளர்களும் சரி பதில் சொன்னதில்லை. ஆனால் பதில் சொன்னது போன்ற சலிப்பை இங்கே கொட்டுகிறீர்கள். தோழர் தமிழச்சியை உங்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நண்பரே எல்லா காலத்திலும் எல்லோரும் கேணக்..... இருந்து விடுவதில்லை. உங்களுக்கான என் பதில் இதோ,,,,

நான் லண்டனில் பேசியதைத்தான் f,b, யிலும் எழுதினேன். இந்தக் கட்டுரையிலும் எழுதினேன். இன்னொரு முறை வேண்டுமென்றாலும் சொல்கிறேன். மக்களை விடுவிக்க புலிகளை நோக்கி கோரிக்கை வைப்பது பேரினவாத இலங்கை அரசின் கோரிக்கையே.... புரிந்ததா? இதுதான் நான் சொன்னது ஆனால் நீங்கள்........ நான் புலிகள் மக்களை பிடித்து வைத்திருப்பதாக எழுதுவதாகச் சொல்கிறீர்கள்.......இது பற்றி விரிவாக கட்டுரையில் உள்ளதே???????

# இந்தக் கட்டுரை தொடர்பாக எழுதும் போதே எனக்குத் தெரியும் தியாகு நூலையும் ஒரு கணக்கில் கொண்டு வருவீர்கள்.

# நீங்கள் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளன் என்பதோடு இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன். இது அவதூறு அல்ல. நீங்கள் sldf அமைப்பில் உறுப்பினராகவோ, தொடர்புடையவராகவோ இருக்கின்றீர்களா? அந்த அமைப்பை இலங்கையில் இருந்து நடத்துகிற ராகவன், ரங்கன் ஆகியோர் இப்போது இலங்கை செல்வதற்கு முன்னால் சென்னைக்கு வந்து அ.மார்க்ஸ் அவர்களைச் சந்தித்துச் சென்றார்களா? sldf அமைப்பிற்கும் ஈ.பி.டி.பி அமைப்பிற்கும் தொடர்புண்டா? யாழ்பாணத்தில் சிங்களக் குடியேற்றக்காரர்களுக்கு ஆதரவாக sldf செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது அது உண்மையா? நேற்று உங்கள் இணையதளத்தில் ராகவன் தொடர்பாக ஒரு கட்டுரை போட்டு விட்டி அதை ஏன் உடனடியாக நீக்கினீர்கள். அல்லது நான் பொய் சொல்கிறேனா?

#உங்களை உளவாளி என்று நான் எந்த இடத்திலும் சொல்ல வில்லை உங்களை ஒரு இலங்கை அரசின் ஆதரவாளர் என்று மட்டுமே சொல்கிறேன்.

# வேலையில்லாதவர்களுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையைப் பெறுவது தவறு என்று நான் எங்குமே சொல்லவில்லை. அதை பெற்றுக் கொள்கிற நீங்கள் எங்குமே வேலைக்குச் சென்றதில்லை என்கிறேன். இங்குள்ள ஈழ ஆதரவாளர்கள் புலம்பெயர் நாடுகளுக்கு ( எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது) சென்று வர கடும் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது நீங்கள் மட்டும் எப்படி நினைக்கும் பொழுது இந்தியா வர முடிகிறது என்று கேட்டேனே தவிற எங்குமே நீங்கள் இந்தியா வரக்கூடாது என்று சொல்லவில்லையே?

டி.அருள் எழிலன்.

Anonymous said...

//இலங்கை அரசின் ஆதரவாளன் என்று சொல்கிறேன்//அருள் எழிலன்.

நான் இலஙகை அரசின் 'உளவாளி' என்பதிலிருந்து இலங்கை அரசின் 'ஆதரவாளன்' மட்டுமே என்ற டீ பிரமோஷன் கிடைத்தது ஒரு வகையில் மகிழ்ச்சியே. இனி அருள்எழிலனோடு விவாத்தைத் தொடர்வதற்கு ஒரேயொரு வழி மட்டுமே உண்டு. எனது 15 வருடகால எழுத்துகளிலிருந்து இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு பத்திகூட வேண்டாம், ஒரேயொரு சொல்லை அருள்எழிலனோ அல்லது இலங்கை அரசின் ஆதரவாளன் என என்னைக் குற்றம் சுமத்துபவர்களோ எடுத்து வைக்கட்டும். இப்படியே அரசியலை விட்டே ஓடிப் போய்விடுகிறேன்.

- ஷோபாசக்தி

Anonymous said...

//ஷோபாவின் இணையதளத்தில் இலங்கை அரசுக்கு எதிராக எதுவுமே எழுதியதில்லை. //

அப்டீங்களா அருள் எழிலன். நான் 'அப்படி எழுதினேன்' 'இப்படி எழுதினேன்' என நானே சொல்வது சற்றுக் கூச்சத்தைக் கொடுத்தாலும் நீங்கள் கேட்பதால் பதிலளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இது சும்மா ஒரு சாம்பிள்தான். படித்துப்பாருங்கள். இந்தக் கட்டுரையில் கண்டிக்கப்படுவது இலங்கை அரசா அல்லது கஸகஸ்தான் அரசா என இனி நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

http://www.shobasakthi.com/shobasakthi/?p=503

- -ஷோபாசக்தி

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் எழிலனும், ஸோபாசக்தியும் தங்களக்குத் தாங்களே கிச்சுக்கிச்சுமூட்டி சந்தோசப்படுகினம் எண்டு. அதன் மூலம் யாரையோ திருப்திப்படுத்தி தாங்களும் இன்னமும் யாருக்கோ விசவாசிகள் எனத் தெரிவத்துக்கொள்கிறார்கள். கவனம் யாழ் இணையத்தை குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டும் குப்பைமேடாக்கிப்போடப்போயினம்.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர்களுக்கிடையே புடுங்குப்பா டு போல கிடக்குது........

நான்நினைத்தேன் புலிபடுத்தது ,,நாய் நரியானது என்ற தலைப்பில் ஷோபாசக்தி கடை எழுதியிருக்கிறார் என்று.... :D

கொஞ்ச நாளாக சோபா சக்தி அருள் எழில் இவர்களின் பின்நூட்டம்களினால் face book திண்டாடுது..மாறி மாறி ஒருவர் மீது ...

Edited by வீணா

இப்பல்லாம் அதிகமான இணையங்களில் தோழர்களின் புடுங்குப்பாட்டுத் தொல்லைதான்.

தாங்க முடியல்லை சாமி.

  • கருத்துக்கள உறவுகள்

சபாஸ் சரியான போட்டி...உண்மையாகவே அவர்களுக்குள் பிரச்சனையா அல்லது வேண்டுமென்றே இருவரும் பிளான் பண்ணி நடிக்கிறார்களா?...ஏன் நிழலி இதை கதைப்பகுதியில் இணைத்தார் எனப் புரியவில்லை :D

இவர்களின் குத்துப்பாடு இவ்வளவிற்கு தெருச்சண்டைபோல் வந்திருக்கக்கூடாது.

ஆனால் புலம்பெயர் தமிழன் இன்னமும் படம் காட்டும் தமிழனை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்து எம் முதுகில் சவாரிசெய்வதை அனுமதிகக்கூடாது.அவர்களின் பிரச்சனையே வேறு.

  • தொடங்கியவர்

.ஏன் நிழலி இதை கதைப்பகுதியில் இணைத்தார் எனப் புரியவில்லை :D

இதை எங்கு இணைப்பது என்று குழம்பி பிறகு, சரி எழுத்தாளர்களின் சண்டை 'கதை கதையாம்' பகுதியில் இருக்கட்டும் என்று இணைத்தேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//இவர்களின் குத்துப்பாடு இவ்வளவிற்கு தெருச்சண்டைபோல் வந்திருக்கக்கூடாது.ஆனால் புலம்பெயர் தமிழன் இன்னமும் படம் காட்டும் தமிழனை தமிழ்நாட்டில் இருந்து வரவழைத்து எம் முதுகில் சவாரிசெய்வதை அனுமதிகக்கூடாது.அவர்களின் பிரச்சனையே வேறு. //

வணக்கம். நானும் ஒரு தமிழ்நாட்டுத் தமிழன். நீங்கள் ஈழத்துக்காக நிற்கிறீர்கள் என்றால் சோபாஷக்தியைக் கடக்காமல் போகமுடியாது, இப்போது. விடுதலைப்புலிகள் மீதான விமர்சனம் என்ற பெயரில் தமிழகத்தில் படைப்பாளிகள் கும்பல் ஒன்று குடித்துக் கும்மாளமிட்டுக்கொண்டு ஈழத்துக்கு எதிரான சிங்களதேசியப் பின் ஆதரவு வழங்கும் பணியை செவ்வனே செய்துவருகிறது. இந்த களத்தில் ஒரு முனையாக சோபாஷக்தியும் இன்னொரு முனையாக அருள் எழிலனும் மல்லு கட்டுகிறார்கள். புலத்தில் உட்கார்ந்துகொண்டு தமிழகத்திலிருந்து ஒருவனை வரவழைத்து முதுகுசொறிவதாக நினைப்பது அபத்தம். இப்படி நினைக்கும் நீங்கள் களத்தையும் புரியாமல் புலத்தையும் புரியாமல் ’இன உணர்வை உசுப்பி’விட்டுப் பேசியதை ரசிக்கத்தானே செய்தீர்கள். இன்னமும் தமிழ்ப் பண்பாட்டு, விழுமியங்களைக் காவுகொள்ளும் திரைப்பட கேவலங்களை புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள்தானே டாலர்களை அள்ளிக்கொடுத்து வளர்க்கிறீர்கள். அதை முதலில் நிறுத்த ஏதாவது செய்தீர்கள் என்றாலே அது பெரிய பணியாக இருக்கும். மற்றபடி முடிந்துபோனாலும் முடிக்கப்படக்கூடாத தேசியத்தின் மீதான விவாதத்தின் பேரில் இயங்கும் ஆள்களின் சண்டையை கருத்துச் சண்டையாக மாற்றுவதுதான் ’குத்துப்பாடு’கள் நிற்க உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.