Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் ஏதும் இவனுக்குச் செய்வியளோ…?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Akka please call me…after 13.00pm…அவ்வப்போது அவனிடமிருந்து வரும் எஸ்.எம்.எஸ் இப்படித்தான் முடியும். ஒருவாரமாக அவனுடன் பேசமுடியாது போய்விட்டதை ஞாபகப்படுத்துமாப்போல 2தடவைகள் அந்த எஸ்.எம்.எஸ் ஐ அனுப்பியிருந்தான்…..

அழைப்பில் போனதும்…அக்கா…..எங்கை சத்தத்தை காணேல்ல….? என அவன்தான் பேச ஆரம்பிப்பான். எப்பிடியிருக்கிறீங்கள்….? வளமையான எனது விசாரிப்புக்கான பதிலாக அன்றும் சிரித்தபடி சொன்னான். உயிரோடை இருக்கிறனக்கா….காதொண்டு கேக்குதில்லை…ஒரே வலியாக்கிடக்கு…..என்றான். அப்ப மருந்தெடுக்கேல்லயா….? எங்களுக்கென்னக்கா மருந்து பனடோல்தான் தருவினம். அதையும் சிரித்தபடிதான் சொன்னான்.

ஆரும் கதைச்சவையோக்கா ? அவனது விசாரணைகளுக்கு பதில் சொல்லி முடியச் சொன்னான். முயற்சியை விடாதையுங்கோக்கா….! இருக்கிற கடைசி நம்பிக்கை நீங்கள்தான்…..! எனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்குதக்கா….! கட்டாயம் வெளியில வருவன்….! நானும் வாழ்ந்து காட்டுவன்….! சற்று அழுத்தமாகச் சொன்னான். இந்த நம்பிக்கையோடையிருங்கோ… கடைசிவரையும் முயற்சிப்போம்…. நம்பிக்கை உடையாத அவனது நம்பிக்கைக்கு உறுதியாய் சொன்னேன். அதற்கும் அவனது பதில் சிரிப்பாகத்தான் வந்தது.

இவனா இதுவெல்லாம் செய்தான் ? அதிசயிக்கும்படியாகவே அவனை விசாரணை செய்வோரெல்லாம் வினவுவார்களாம். இன்று ஏன்….? எதற்காக…..? எதுவும் புரியாது தண்டனை பெறும் தனது விதியைப்பற்றியும் இந்த விதியை எழுதியோர் பற்றியும் பேசுகின்ற போது எல்லைமீறிய கோபங்களை பொல்லாத சொற்களால் சபித்துக் கொள்வான்.

எத்தனையோ சாதனைகளின் பின்னின்ற சரித்திரம் அவன். அவன் படைத்த வெற்றிகளுக்காக வெளிநாடுகளிலிருந்தெல்லாம் சந்தோசங்களைப் பரிமாறும் முகமாக அவனுக்கு அவசரத்தபால்களில் கிடைத்த இனிப்புகள் அனுப்பியவர்களின் பாசம் நடிப்பாகிப்போனது பற்றி நிறையவே வலியுற்று அழுதிருக்கிறான்.

வெளியில் இருந்தவரை வாழ்த்துக்களும் அவனுக்குச் சூட்டப்பட்ட அடையாளங்களும் இன்று அசுமாத்தமின்றிப் போனது மட்டுமில்லாமல் ஒரு ஆறுதலுக்குக் கூட அவனுடன் பேசாமல் பதுங்கிக் கொண்டு விட்டார்கள். அவரவர் சொத்துக்களுடனும் தங்கள் சுகபோக வாழ்வுகளுடனும் மிதக்க இவனோ பலகோடிகள் கையில் புரண்டபோதெல்லாம் இலட்சியங்களுக்காக ஒரு துறவியாகவே மாறியதை நினைக்கின்ற போது எரிச்சலாகத்தானிருக்கும்.

கடைசிவரை கம்பிகளுக்குள் வரும்வரை அவன் வாழ்ந்தது தன்னை வருத்தியது யாவும் கனவுகளுக்காகவே என்பதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் அவனது தொடர்புகளையெல்லாம் அறுத்துக்கொண்டு சுயநலங்களாய் மாறிப்போனவர்களையெல்லாம் தனது கோபம் அடங்கும் வரை திட்டித்தீர்ப்பான். இவங்களை நம்பின என்னைச் செருப்பாலையடிக்க வேணுமக்கா….என வெறுப்போடும் வேதனையோடும் சொல்லிக் கொள்வான்.

வீரமாய் வெளிநாடுகளிலிருந்து அவர்கள் பற்றி அவரவர்களின் கற்பனைகளுக்கு ஏற்ப கதையளந்த ஆய்வாளர்களையும் ஊடகப்புயல்களையும் காணுமிடத்துக் கொன்றுபோடும் கோபம் அவனிடமிருக்கிறதைக் கூறும்போது…, ஓர் இயலாமையை தன்னால் எதையும் செய்ய முடியாத ஆற்றாமையை வெளிப்படுத்தும் அவனது குரல்.

என்று வீட்டை விட்டுப்போனானோ அன்றிலிருந்து அந்தக் கொடிய விடியற்காலைவரை அவன் மிடுக்கோடும் இலட்சியத் துடிப்போடுமேயிருந்தான். காற்று நுளையாத இடங்களிற்குள் எல்லாம் சென்று அவன் மூச்சையே நிறுத்திவிட்டு வந்ததையெல்லாம் கதைகளாய் எழுதுவதாயின் அதுவே ஒரு பெரும் வரலாறு நிறைந்த திகில்.

ஆனால் இன்று அவன் வேண்டுவதெல்லாம் தனது விடுதலை. எதுவுமே அறியாத அவனது காதல் மனைவியும் அவன் தன்னிலும் மேலாய் நேசிக்கும் 2வயதுக்குழந்தையும் தன்னால் நரகம் அனுபவிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை.

அந்தக்காலையில் விழுங்கிய நஞ்சு தன்னைத் தின்றிருந்தால் எதையும் தெரியாமல் போயிருப்பேனென்று துயரமுறும் அவனைத் தேற்றுவதற்கு வார்த்தைகள் வருவதேயில்லை. கடமைகளைச் சரிவர நிறைவேற்றுவதற்காக கலியாணம் செய்து கொண்டதும் கடமைகளுக்காக தன்னைப்பற்றிய உண்மைகள் எதையும் சொல்லாமல் அவளைக் காதலித்ததும் தனது துரோகங்களில் முதன்மையானதென மனதால் அழுகின்றான். ஏதோவொரு துணிச்சலில் ஏதோவொரு நம்பிக்கையில் எல்லாவற்றையும் செய்து முடித்து இன்று…..அவனை விடுதலை செய்யாதிருக்கும் கம்பிகளுக்கு நடுவிலிருந்து அவனது அவளுக்காகவும் அவனது குழந்தைக்காகவும் வாழவேண்டுமென்றே விரும்புகின்ற ஒரு கைதி.

அவனாலே சிறைக்கு வந்தும் அவனுக்காகவே அடுத்த சிறையின் கம்பிகளின் பின்னால் காவலிருக்கும் மனைவியும் குழந்தையும் பற்றிய துயரம் அழுத்துகிற போதெல்லாம் உயிர்மீதான பிடிமானம் இன்னும் அதிகமாய் ஒட்டிக் கொள்கிறது. சாவை தன்னோடு கூட்டித் திரிந்தவன் இன்று சாவை வெறுக்கிறான். சுருங்கச் சொன்னால் சாகப்பயப்பிடுகிறான்…..வாழ விரும்புகிறான்…..எத்தனையோ கற்பனைகள் எத்தனையோ கனவுகள் அவனுக்குள் நிறைந்து கிடக்கிறது. மனவெளியெங்கும் அவனது புதிய வாழ்வுபற்றிய ஏக்கங்கள் நிறைந்து வழிகிறது.

எப்பெயப்பா நாங்க வீட்டை போவம்….? என்னோடை வாங்கப்பா…! வாரம் ஒருமுறை சந்திக்கும் போது கெஞ்சும் அவனது குழந்தை அவனது கையணைப்பிலிருந்து அவனை விட்டுப் பிரிக்கப்படும் வினாடிகளில்…..அழுதபடி குழந்தை கம்பிகளை உதைத்துக் கொண்டு போகின்ற காட்சியை காணும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவன்படுகின்ற துயரத்தை யாரால் உணர்ந்து கொள்ள முடியும் ?

கூடப்பிறந்த சகோதரங்களே அவனை மறந்து அவனுக்கு எதுவித உதவிகளும் செய்ய முடியாதென்று கைவிரித்து…. நம்பியவர்களும் நடந்து முடிந்த முடிவுகளோடு நரபலியெடுக்கப்பட்டு சுடுகாட்டின் நடுவே கைவிடப்பட்ட துயரங்களும் உயிர்களும் அவலங்களாயிருக்க அவனை யாராவது வெளியில் எடுத்துவிட்டால் போதுமென்ற முயற்சியில் இறங்கியிருக்கிறான்.

ஆயுளுக்கும் வெளியேற முடியாதவற்றையெல்லாம் அவன் பெயர் பதிவேற்றிருக்கும் அவநம்பிக்கையை விட்டு நம்பிக்கையோடிருக்கும் அவன் மீள்வதானால் பல லட்சங்கள் தேவைப்படுகிறது. சொந்த உறவுகளும் கைவிட்ட நிலையில் தன்னைத் தமிழர்கள் காப்பார்களா ? எனக் காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி.

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி, இவரை போல் இன்னும் பல்லாயிரக்கனகானவர்கள் இருக்கிறார்கள். புலி என்று ஸ்ரீ லங்கா தனது ஜெநோசைடை மறைக்க முத்திரை குத்தி வைத்திருக்கும் தமிழ் அமைப்புகள் நேரடியாக இவர்களை காப்பாற்ற செல்வது கைதிகளுக்கு ஆபத்தில் முடியும். சிங்களவன் இவர்கள் முக்கியானவர்கள் என்று ஸ்பெஷல் விசாரணைக்கு கூட்டி சென்று விடுவான்.

அதற்காக, இந்த அமைப்புகள் எல்லாம் மரபு போர் வழி முறையில் ஐ. நா. போர் சட்டங்களுக்கு உட்பட்ட ஆள் சேர்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த கைதிகளுக்கு உதவாமல் இருப்பதும் சரியல்ல.

அமைப்புகள் இவர்களுக்கு என்று நிதி சேகரித்து நேசக்கரம் மற்றும் மத/ஊர் அமைப்புகள் ஊடாக போரால் பாதிக்கப்படவர்களுக்கு உதவலாம். அவர்களை இப்போது கைவிடல் ஆகாது!

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும், மற்றயவர்களும் ஒற்றுமையாகவும் சேர்ந்தும் இதையும் செய்யலாம் இதற்கு மேலாகவும் செய்யலாம்.

நாம் என்ன செய்யலாம் செய்ய முடியாது என்பதை முடிவு செய்யும் உரிமையை முற்றுமுழுதாக சிங்களமே வைத்திருக்கின்றது. ஆனால் இதையும் மீறி புலம் பெயர் மக்கள், ஈழத்து மக்களுக்கும் புலம் பெயர் முன்னெடுப்புக்களுக்கும் உதவ வேண்டும். இரண்டுமே இரு கண்கள் போலானது.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் விடுதலை என்பது சிறிலன்கா அரசில்தான் தங்கியிருக்கு.நாடு கடந்த அரசில் இல்லைதானே?

அந்த போராளியை போல பல போராளிகள் எம்மைதிட்டிக் கொண்டிருப்பார்கள்.

.

அமைப்புகள் இவர்களுக்கு என்று நிதி சேகரித்து நேசக்கரம் மற்றும் மத/ஊர் அமைப்புகள் ஊடாக போரால் பாதிக்கப்படவர்களுக்கு உதவலாம். அவர்களை இப்போது கைவிடல் ஆகாது!

குழவி கூறியது போல் ஊர்சங்கங்கள்,பாடசாலை சங்கங்கள்,மதநிறுவனங்கள் உதவலாம்

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் பிடிக்கிறதென்றால் தேசிய தலைவரில் இருந்து அரசாங்கத்தோட இணைந்து வேலை செய்து கொண்டிருக்கும் டக்கிளஸ் தேவானந்தா வரைக்கும் இதில குற்றம் பிடிக்கலாம்.

பிரச்சனை குற்றம் காண்பதல்ல. பிரச்சனைக்கு தீர்வு என்ன.. இவர்களின் மறுவாழ்வுக்கு உத்தரவாதம் என்ன..??! சிறு சிறு உதவிகள் பரிசுத் தொகைகள்.. உண்மையில் இவர்களின் வாழ்க்கையை நிரந்தரமாக மீட்குமா என்பதும் கேள்விக்குறியே...??!

இந்த மக்களின் இன்றைய தேவை.. போராளி என்ற நிலைகளுக்கு அப்பால்.. இன்று அவர்கள் சாதாரண மக்கள்...

1. பாதுகாப்பு உத்தரவாதம்.

2. அரச மற்றும் இராணுவத்தின் தொல்லைகளின் இருந்து முற்றாக நீங்கி இருத்தல்.. நிம்மதியாக சுதந்திரமாக செயற்படுதல்.

3. அடிப்படை சமூகக் கட்டமைப்போடு ஒருங்கிணைதல்.

4. அடிப்படை கட்டுமானத் தேவைகள். வீடு.. நிலம்.. போன்றவை.

5. நிரந்தர வருவாய்க்கான வழிமுறைகள்.

6. வருவாயை பெறுவதற்கான தொடர்சியான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும். முதலீட்டு தோல்விகளில் இருந்து மீட்சிக்கு உதவுதல்.

7. ஊனமுற்றவர்களுக்கு விசேட வசதிகள்.

8. அன்றாட பணிகளை பூர்த்தி செய்யக் கூடிய நிர்வாகக் கட்டமைப்பு.

இவற்றை எல்லாம் சிறு பண உதவிகள் பூர்த்தி செய்ய முடியாது. அவை இவர்களின் குறுகிய கால தேவைகள் சிலவற்றை பூர்த்தி செய்யப் பயன்பட்டாலும்.. பிரச்சனை அதையே நம்பி இவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க முயற்சிப்பதும் தான்.

உண்மையில்..

நாடு கடந்தவையை மற்றவையை திட்டும் நேரத்துக்கு போரை முன்னெடுத்த அரசுகளிடம் போய் இவர்களின் விடுதலைக்கும் மறுவாழ்வுக்கும் உதவி கேட்கலாம். இந்தியப் பேரரசு.. பாகிஸ்தான் அரசு.. சீன அரசு.. ஜப்பான் அரசு.. ரஸ்சிய அரசு.. பிரித்தானிய அரசு.. அமெரிக்க அரசு.. இவை எல்லாம் முன்னின்றுதான் போரை முன்னெடுத்தன. நோர்வே கூட பங்களித்தது. படகுகளை கையளித்து கண்காட்சி வைத்தது.

வெளிநாடுகளில் உள்ள குறிப்பிட்ட நாட்டு தூதரகங்களின் முன்னாள் தமிழர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டங்களை செய்து இந்த மக்களின் பிரச்சனைகளை போரின் விளைவுகளால் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பொருண்மிய சமூகக் கட்டமைப்புக்கள் தகர்க்கப்பட்டுள்ளத்தை இனங்காட்டி தீர்வுகளைக் கோரி நிற்கலாம். அது பயங்கரவாதத்திற்கு உதவுவதாக சொல்லப்பட முடியாதது. ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டம். எங்களை நாங்களே திட்டிக்கொண்டு திரிவம்.

வெளிநாடுகள்.. அவர்கள் விரும்பிய படிக்கு போரை முடித்து விட்டார்கள். ஆனால் மக்களின் மறுவாழ்வு.. போராளிகளின் உயிர் உத்திரவாதம் எதுவுமே கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி எவரும் மூச்சும் விடுவதில்லை.

நாடு கடந்த அரசோ.. புலம்பெயர் மக்களோ எதனையும் நிரந்தரமாக செய்ய முடியாது. இன்று பணப்பிரச்சனை என்றால் நாளைக்கு காணிப்பிரச்சனை வரும். நாளண்டைக்கு சிங்களக் குடியேற்றத்தால் பிரச்சனை வரும்.

எல்லாத்துக்கும் ஒவ்வொரு கதை எழுதிக் கொண்டு நம்மை நாமே திட்டிக்கொண்டு திரிவதால்.. பிரச்சனைகளின் தோற்றுவாய்கள் தீரப்போவதில்லை.

போரை தீவிரமாக முன்னெடுத்த முக்கியமான சக்திகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே இவர்களுக்கு உருப்படியான நிரந்தர தீர்வுகளை எட்டிக்கொடுக்க முடியும்.

நாடு கடந்த அரசு என்பது வெற்றிடத்தில் துளிர்விட்டிருக்கும் ஒரு முளை. அதனிடம் பெரிய எதிர்பார்ப்புக்களை முன்வைத்து நிற்பதை விட்டு.. ரடார்களும் ஆயுதங்களும் அள்ளி வழங்கி யுத்தத்தை முன்னெடுத்த அரசுகளிடம் போய் உதவி கேட்டு நில்லுங்கோ.. அழுத்தங்களை பிரயோகித்து நில்லுங்கோ.. ஆர்ப்பாட்டங்களைச் செய்து நில்லுங்கோ.. அதுதான் நியாயமானது.

நாங்கள் மெளனமாக இருந்து எங்களை நாங்களே திட்டிக் கொண்டு திரிந்தால்..

வடக்கின் வசந்தங்களும் கிழக்கின் உதயங்களும் இப்படித்தான் போட்டில இருக்கும். நிரந்தரமாக எதையும் செய்யா....

vadamarachchi_04_11_10_04.jpg

vadamarachchi_04_11_10_01.jpg

பொருந்தொகை உதவித் தொகைகளை வெளிநாடுகளில் இருந்து பெறும் சிங்கள அரசு அவற்றை சிங்கள குடியேற்றங்களை உருவாக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் நாங்களோ.. அவற்றிற்கு எதிராக எதுவும் செய்வதில்லை. குறிப்பிட்ட நாடுகளிடம் கூட கேள்வி கேட்டு நிற்பதில்லை. உதவிகள் எம்மை நோக்கி போகின்றனவா என்பதை கூட சோதிப்பதில்லை. உத்தரவாதப்படுத்த முனைவதில்லை. இப்படியான ஒரு நிலையில்.. எம்மை நாமே திட்டி இப்படியான கதைகள் எழுதுவதால் மட்டும்.. பிரச்சனைகள் தீருமா...??!

SLA blocks access road to resettled areas in Vadamaraadchi East

[TamilNet, Thursday, 04 November 2010, 05:52 GMT]

No development in Jaffna worthy of mention – German delegation

[TamilNet, Friday, 05 November 2010, 05:44 GMT]

http://www.tamilnet.com/

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல்....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

இலகு இலகு இலவச ஆலோசனை வழங்குதல்....அதனிலும் இலகு வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நாங்களும் எங்கள் குடும்பங்களும் ஒருகுறையுமில்லாமல் இருக்க மல்லாந்து பஞ்சு மெத்தையில் புரண்டு கனவுகாணுவது......

இரண்டு கடகம்.. நாலு கதிரை.. மூன்று கோழிக்குஞ்சு.. ஒரு மாடு.. ஒரு தையல் இயந்திரம்.. இதை வைச்சு மக்கள் முன்னேற முடியும் என்று 1960ம் ஆண்டுகள் கால நிலையை தான் நீங்கள் சிலர் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறதில திருப்திப்படுறீங்க போல.

உண்மையில் பிரச்சனை இவற்றையும் கடந்து உள்ளன.

முன்னாள் போராளி என்ற காரணத்திற்காக ஒரு குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவள் இராணுவக் குழுவினரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு பின்னர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். இதனை உங்களால் ஏன் தடுக்க முடியவில்லை..???!

வன்னியில் சிங்கள காடையர்களைக் கொண்ட குடியேற்றங்கள் தாறுமாறாக முளைக்கின்றன. இவர்களில் அநேகர் சிங்கள புலனாய்வுத்துறையோடு வேலை செய்பவர்கள்.

ஒரு பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற நிலையில் எப்படி மீளக்கட்டமைப்பு பணிகள் புலம்பெயர் மக்களால் அல்லது அவர்களின் பணத்தால் செய்விக்கப்பட முடியும்..???!

சிறீலங்கா அரச படைகளை தமிழர்களின் வாழ்விடங்களுக்குள் வைத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அனுமதித்துக் கொண்டு மீளக் கட்டி எழுப்பல் என்பது வெறும் கதை மட்டுமே..!

கிளிநொச்சியை சேர்ந்த பல மக்கள் இன்னும் ஊருக்குப் போக தயங்குகின்றனர். வவுனியாவில் வாழ்ந்து கொண்டு கிளிநொச்சிக்கு போய் வியாபாரம் செய்துவிட்டு உடனே திரும்பும் நிலையிலும் உள்ளன பல குடும்பங்கள்.

இவர்களின் பாதுகாப்புக்கு நீங்கள் நேசக்கரமூடாக என்னத்தை செய்ய முடியும்..???!

பாதுகாப்பாற்ற சூழலில் எப்படி ஒரு போராளிக் குடும்பத்தை நிமிர்ந்து நிற்க சொல்ல முடியும். எத்தனை நாளைக்கு புலம்பெயர்ந்தவர்களின் கைகளில் அவர்களை தங்க வைத்திருக்கப் போகிறீர்கள்..???! இதனால் அவர்களின் வாழ்க்கையை நீங்கள் எப்படி மீட்சிப்படுத்தப் போகிறீர்கள்.

ஒரு மனிதனின் அடிப்படை தேவைகளில் அவன் தனது பாதுகாப்பை உணர்தலும் அவசியமாகிறது. அந்த உணர்வற்று தினமும் பயம் நிறைந்த சூழலில்.. அவர்களுக்கு காசு கொடுத்து கோழிக்குஞ்சு கொடுத்து சிங்கள இராணுவத்திற்கு இரையாக்கிக் கொண்டிருப்பதும் இப்போ தேசிய மீட்பாக ஏன் மனித நேயப்பணியாகவே நோக்கப்படுகிறது.

சிங்களம் யுத்தம் செய்தது. சிங்களம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டிய கடமையைக் கொண்டிருக்கிறது. யுத்தம் முடிந்தும் பயங்கரவாதம் வெல்லப்பட்டும் 150000 சிங்களப் படைகள் தமிழர்களின் நிலமெங்கும் நிறைந்து நிற்கிறது. தினமும் சந்தேக நபர்கள் கண்காணிக்கப்படுவதும்.. கைதாவதும்.. தொடர்கிறது.

இந்த நிலையில்.. வெறும் சில பத்தாயிரங்களையும் கோழிக்குஞ்சுகளையும் தையல் இயந்திரங்களையும் வைத்து எப்படி பிழைப்பை ஓட்டுவது.

அண்மையில் பார்த்தேன் வன்னியில் குடும்பப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. வன்னியில் வாழவே மக்கள் வழி இன்றி உள்ள நிலையில் யாருக்கு தைச்சு யாருக்கு அதை விக்கிறது. எல்லோருக்கும் தையல் இயந்திரத்தை கொடுப்பதால் எப்படி அதை வைச்சு வருவாய் பெறப்பட முடியும்..??!

ஒரு திட்டமும் கிடையாது. ஒரு சமூகக்கட்டமைப்பில் எப்படி பொருண்மியத்தை அடிப்படையில் இருந்து கட்டி எழுப்பிறது என்ற எண்ணக்கருவும் கிடையாது.. சும்மா காசு கொடு கொடு நாங்க நாலு பொட்டலம் கட்டி போட்டு எடுத்துப் போடுறம் என்றால்.. அதன் மூலம் மக்களுக்கு எப்படி நிரந்தர நிம்மதி கிட்டும் என்ற கேள்வியும் எழுகிறது..??!

மக்கள் தெரிவு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கினம். அவைக் கூடாக மக்களின் அடிப்படை தேவைகளை பாதுகாப்பை வெளிநாட்டு தூதரங்களின் உதவியோடு.. சிறீலங்கா அரசு உட்பட வெளிநாட்டு அரசுகளின் பங்களிப்போடு பூர்த்தி செய்வதோடு வன்னி உட்பட போரால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கை அங்கு வாழும் தமிழர்கள் தான் கட்டி எழுப்ப முடியும்.

புலம்பெயர்ந்த மக்கள் ஒரு எல்லைக்கு மேல் உதவுவார்கள் அல்லது உதவ முடியும் என்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட அவர்களின் உறவுகளுக்கு அவர்கள் உதவக்கூடும். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனநிலையை புலம்பெயர்ந்தவர்கள் விரைவாக இழந்து வரும் நிலையில்.. அது சாத்தியமில்லை.

எனவே மாற்று வழிமுறைகளூடு தேவைகளின் சரியான அளவீட்டோடு இந்த மக்கள் அணுகப்பட வேண்டுமே ஒழிய இன்னும் நாலு துணிப்பார்ச்சல்.. நாலு பிளாஸ்ரிக் பாத்திரத்தோடு அந்த மக்களின் வாழ்க்கையை மீள் கட்டுமானப்படுத்த முடியும் என்று நம்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம். அந்த மக்களின் வாழ்க்கையை நிரந்தரமாக்க அவர்களுக்கு தொடர்ச்சியான வருவாய்க்கு ஏற்ப கட்டுமானங்கள் நிர்மாணங்கள் முதலீடுகள் அவசியம். அவற்றை வெளிநாட்டு அரசுகள் தான் வழங்க முடியும். புலம்பெயர்ந்தவர்கள் அதில் ஒரு வீதத்தை தான் வழங்கலாம். இந்த யதார்த்தங்களை உள்வாங்காமல் வெறுமனவே எங்களை நாங்களே திட்டிக்கொண்டு ஆத்திரப்பட்டுக் கொண்டும் திரிவதில் எந்தப் பயனும் இல்லை.

போர் முடிந்து 18 மாதங்கள் கடந்த பின்னும் இன்னும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதோடு மக்களை புலம்பெயர்ந்தவர்களின் கையில் தங்கி இருக்க வைத்துக் கொள்வதும் நல்லதல்ல. அந்த மக்களுக்கு போரில் ஈடுபட்ட அரசுகள் நிரந்தர வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர்ந்தவர்கள் எனிச் செயற்பட வேண்டுமே தவிர.. தொடர்ந்து அவர்களுக்கு சில ஆயிரங்களைக் காட்டிக் கொண்டு குடிசைகளில் வாழ வைத்துக் கொள்வது ஏற்புடையதாக அமையாது. அது அந்த மக்களின் வாழ்க்கையை சகஜ நிலைக்கு கொண்டு வரவும் உதவாது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகடந்தவைகளும் , பேர் அவைகளும் , செயற்குழுக்களும் தனக்காக எதையாவது செய்யச் சொல்லும்படி வேண்டுகிறான். அவைகளும் அரசுகளும் காணுகின்ற இன்றைய கனவுகளுக்காக என்றோ தன்னை இணைத்து இன்று இருளில் மூழ்கி உயிரோடு வதைபடும் இவனது வேண்டுதல்களை உரியவர்களிடம் விட்டுவிடுகிறேன்…..ஈரமிருந்தால் இவனுக்காக உயிர் தர வேண்டாம் பிணைவரவேனும் உரு உதவி போதும்.

அன்று சப்பிய நஞ்சு இவனைக் கொன்றிருந்தால் இவன் ஒரு அதிசயப்பிறவி….அனாமதேயமாய் வணங்கப்படும் ஆழுமையின் பேரொளி…..எதிரியின் நெஞ்சுக்கூட்டை உலுக்கிய மாவீரன்….உயர்ந்த வீரமரபுக்குரிய வெளிச்சம்….! இப்படி நிறைய இவனுக்காக எழுதியும் வீரப்பாக்கள் படித்தும் இவனை ஒரு வீரமாகப் பதிவு செய்திருப்போம்…..ஆனால் இன்று எவருமற்று ஒரு சவர்க்காரத்துக்கும் எவராவது தருவார்களா எனக் காத்திருக்கும் அவமானத்தையும் அவனது குழந்தைக்கு ஒருநேரச் சோற்றைக் கொடுக்கவே எவரையோ எதிர்பார்க்கும் இயலாமையை எங்கு போய்ச் சொல்ல…?

இலட்சியத்துக்காக வாழ்ந்தவனை இலட்சியத்துக்காகவே இரண்டு வருடங்களாய் வதைபடுபவனை ஆயுள் முழுமையும் இப்படியே ஆக்கிவிடப்போகும் அவனது விதியை மாற்றுவோர் யார்…?

இப்போதைக்கு அவனுக்காக அழவும் சிரிக்கவும் வார்த்தைகளால் ஆறுதல் கொடுக்கவும் வழியமைத்த விஞ்ஞானம் தந்த செல்லுலாபேசிக்கு மட்டுமே எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

தோழனே உனக்காக உனது மனைவிக்காக உனது குழந்தைக்காக…..எவ்வளவோ செய்ய வேண்டுமென்கின்ற மனசு மட்டுமேயிருக்கிறது….வெறுங்கையோடு நானும் கனவு காண்கிறேன்… உனக்காகவும் உனது குழந்தைக்காகவும் ஒரு அதிர்ஸ்டம் அடிக்காதா….?????

04.11.10

சாத்திரி, சாந்தி அக்கா இந்தக் கதையில் சிலவற்றை தானே தனக்கு ஏற்ற வகையில் புகுத்தி இருக்கிறாரா.. அல்லது உண்மையில் அந்தப் போராளி இப்படி சிந்தித்தானா...??!

அன்று.. அவனின் முன்னாள் அவன் அறிய போய் களத்தோடு மாண்டவர்களை எல்லாம் கண்டவன்.. தன் வாழ்க்கைக்காக இப்படி ஒரு இரங்கலை செய்வானா.. சூழ்நிலையை விளங்கிக் கொள்ளாதவனாக இருப்பானா..??!

இன்று இப்படி பேசுபவன்.. அன்று தன் முன்னாள் போய் மாண்டவர்களை ஏன் தடுக்காது விட்டான்.. அதையும் செய்திருக்கலாமே...???!

சாந்தி அக்காவின் தனிப்பட்ட ஆதங்கங்கள்.. அல்லது தனிப்பட்ட கருத்துக்கள்.. போராளிகளின் கருத்துக்களாக நுழைக்கப்பட்டிருக்கின்ற சில ஆக்கங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன். அதுவும் நேசக்கரத்தின் உதவி கோரிய நிலைகளோடு...???!

ஒரு போராளி தான் கரும்புலியாகப் போகும் போது கூட மற்றவர்கள் வாழ வேண்டும் என்று போனததைத்தான் நான் கண்டிருக்கிறேன். மற்றவர்களுக்காக தான் சாகிறேனே என்று வருந்தினதை காணேல்ல. அப்படியான இடத்தில் இருந்து பல தியாகங்களை கண்டு வந்த ஒருவன்.. இப்படி இருந்திருப்பானா.. என்பது எனது கேள்வி.

போராளிகளின் பாதுகாப்பு விடுதலை இவற்றில் அக்கறை இருப்பது அவசியம். அது தவறல்ல. அதற்காக ஒரு இலட்சிய பயணத்தில் பயணித்து மாண்டு போன மறவர்களின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக அல்லது அதை மற்றவர்களின் பிழைப்புக்கான ஒரு விளம்பரமாக வரைவதில் எனக்கு உடன்பாடில்லை.

நாடு கடந்த அரசு.. மற்றும் அமைப்புக்கள் குறித்து சாந்தி அக்காவிற்கு வேண்டும் என்றால் உடன்பாடுகள்.. முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் ஒரு உண்மையான போராளி தனது சுய நலனிலும் பார்க்க.. தனது இலட்சியத்தின் பால் அதன் நடவடிக்கைகளின் பால் அதிகம்.. அக்கறை காட்டுவான்... என்பதுதான் நிஜம்.

எத்தனையோ போராளிகள் காட்டிக் கொடுத்தால் விடுதலை என்ற போது காட்டிக் கொடுக்காது தமது வாழ்க்கை இழந்து.. அல்லது சிறையில் கழித்திருக்கின்றனர். அப்படியான எடுத்துக்காட்டுக்களும் உள்ளன.

ஒரு போராளியை சராசரி மனிதனாக காட்ட மறவர்களின் புகழை சொல்வதை இழிவு படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. உண்மையில் அவனொரு போராளியாக இருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு இழி பிழைப்பை விரும்பமாட்டான். தன் முன்னாள் மாண்டவர்களின் புகழை இழித்து தான் வாழ விரும்பி இருக்க மாட்டான். அப்படியும் போராளிகள் எம் மத்தியில் வாழ்ந்து போயுள்ளனர் என்பதையும் சாத்தி புரிந்து கொள்ள வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓம் உங்கள் விளக்கத்தை இனி போராளிகள் என்பவர்கள் பின்பற்றும்படி மொழிகிறேன்.

ஆனாலும் விசைப்பலகை வீரம் றெம்பவே வெளிவருகிறது.

தன்னினத்துக்காக போராளியான எவனும் என்றும் போராளியென்ற அடைமொழிக்கு உரித்துடையவன். அதை உங்கள் வார்த்தைகளால் கட்டிப்போடவோ மாற்றவோ முடியாது. 30ஆயிரம் மட்டுமில்லை போராடினது கடைசியில கட்டாயமாக பிடிபட்டுச் செத்ததுகள் காணாமல் போனதுகள் கண்காணாமல் வாழ்ந்த அதுகளும் போராளிகள் மாவீரர்கள் தான்.

மற்றும் உங்கள் கற்பனைக்கேற்ப கருத்து எழுதுவதுபோல இவனது கதையை நான் எழுதவில்லை. அவன் துயரை அவன் உரைத்தபடி எழுதியுள்ளேன். மிகைப்பு நகைப்பு துவைப்பு எதுவும் செய்யாமல் விடயத்தை எழுதியுள்ளேன். எனது விருப்பங்களை திணிப்பதாக அர்த்தப்படுத்திக் கொள்வது உங்கள் பணியானால் அது உங்கள் கற்பனை.

நீட்டி விளாசி ஒரு இனத்திற்காக போராடி அழிந்த சிறைப்பட்டுள்ள ஒருவனின் வலிகளை புரிந்து கொள்ளாத உங்கள் மனிதாபிமானம் அவன் மீதான கூலி காட்டிக்கொடுப்பென்ற பட்டங்கள் யாவும் அருமையாக உள்ளது.

உங்களுக்கு இப்படி வீரம்பேசவே முடியும். எங்களால் அவர்களுக்காக ஒரு நேரக்கஞ்சியைக் கொடுக்கவே பிச்சை கேட்க முடியும்.

நன்றி வணக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசரனும் கையில கிடந்த லட்சங்களை சுட்டிக்கொண்டு லணடன் கனடாவெண்டு போயிருக்கலாம். கடைசிவரை இலட்சியமெண்டு தன்ரை வாழ்கையை நாசமாக்கினது காணாமல் குடும்பத்தையும் சிறையில் விட்டுவிட்டுவிட்டு இன்னும் வீரனா இல்லை துரோகியா என விசைப்பலகை வீரங்களின் வாயில் துரோகியாகிப்போனதுதான் மிச்சம்.

இவனைப்போல போன ஒருவரின் தங்கையை விபச்சாரியென்று பட்டம் கொடுத்ததும் இதே தமிழ்ச்சாதிதான். தனது இலட்சியத்துக்காக துரோகியாய் வாழ்ந்து கடைசியில் எதிரியை அழித்து வீரச்சாவடைந்தவனையே துரோகியென்றது அரசியல்படை , ஊரும் உறவும் அவனது அக்கா தங்கைகளை விபச்சாரிகள் என வசைசொல்லி ஒதுக்கியதும் தாயகத்தை நேசித்தவர்களை அதற்காக வாழ்ந்தவர்களையுதான். இந்த வரிசையில் எத்தனையோ போராளிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் துரோகிகளாக :lol::):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விசரனும் கையில கிடந்த லட்சங்களை சுட்டிக்கொண்டு லணடன் கனடாவெண்டு போயிருக்கலாம். கடைசிவரை இலட்சியமெண்டு தன்ரை வாழ்கையை நாசமாக்கினது காணாமல் குடும்பத்தையும் சிறையில் விட்டுவிட்டுவிட்டு இன்னும் வீரனா இல்லை துரோகியா என விசைப்பலகை வீரங்களின் வாயில் துரோகியாகிப்போனதுதான் மிச்சம்.

இவனைப்போல போன ஒருவரின் தங்கையை விபச்சாரியென்று பட்டம் கொடுத்ததும் இதே தமிழ்ச்சாதிதான். தனது இலட்சியத்துக்காக துரோகியாய் வாழ்ந்து கடைசியில் எதிரியை அழித்து வீரச்சாவடைந்தவனையே துரோகியென்றது அரசியல்படை , ஊரும் உறவும் அவனது அக்கா தங்கைகளை விபச்சாரிகள் என வசைசொல்லி ஒதுக்கியதும் தாயகத்தை நேசித்தவர்களை அதற்காக வாழ்ந்தவர்களையுதான். இந்த வரிசையில் எத்தனையோ போராளிகள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் துரோகிகளாக :lol::):D

அப்ப துரோகிகள் எல்லாருக்கும் மாவீரர்கள் பதவிகளை குடுத்தால் பிரச்சினை முடிஞ்சு போச்சு, டக்கிளசும் மாவீரன்,கருனாவும் மாவீரன்,பிள்ளையானும் மாவீரன், சங்கரியும் மாமாவீரன், இந்த அரிய கருத்தை சொன்ன சாந்தியும் மாவீரீ :blink::huh: :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப துரோகிகள் எல்லாருக்கும் மாவீரர்கள் பதவிகளை குடுத்தால் பிரச்சினை முடிஞ்சு போச்சு, டக்கிளசும் மாவீரன்,கருனாவும் மாவீரன்,பிள்ளையானும் மாவீரன், சங்கரியும் மாமாவீரன், இந்த அரிய கருத்தை சொன்ன சாந்தியும் மாவீரீ :rolleyes::wub: :wub:

ஓமோம் மாவீரன் சித்தன் என உங்களை இன்றிலிருந்து கவுரவப்படுத்துகிறோம். இனி நீங்கள் தான் மாவீரன். எரிஞ்சுபோற வயிற்றுக்கு ஓயாமல் தீனிபோட்டுக் கொண்டு தன்னினத்துக்குகாக போராடியவர்களையெல்லாம் துரோகி முத்திரையடிக்கும் உங்கள் 'போர்' அடித்த போராட்டம் வாழட்டும். போராளிகள் எல்லாரும் சாகட்டும். அதிபுத்திசீவியான மாவீரர் சித்தன் அவர்களின் கொள்ளைகள் வாழட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓமோம் மாவீரன் சித்தன் என உங்களை இன்றிலிருந்து கவுரவப்படுத்துகிறோம். இனி நீங்கள் தான் மாவீரன். எரிஞ்சுபோற வயிற்றுக்கு ஓயாமல் தீனிபோட்டுக் கொண்டு தன்னினத்துக்குகாக போராடியவர்களையெல்லாம் துரோகி முத்திரையடிக்கும் உங்கள் 'போர்' அடித்த போராட்டம் வாழட்டும். போராளிகள் எல்லாரும் சாகட்டும். அதிபுத்திசீவியான மாவீரர் சித்தன் அவர்களின் கொள்ளைகள் வாழட்டும்.

போராட்டத்தின்மூலம் ஆதயம் தேடுபவருக்கு அது விரைவில் போரடித்து விடும் எனப்து உண்மைதான், ஆனால் எமக்கோ அதுவே சுவாசம், அதுபோரடிப்பது எமது இறுதிச்சுவாசத்தில் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராளியினதும் அவனது குடும்பத்தினதும் துன்பத்தை எளிதாக எடுத்துக் கொள்வதாக நினைக்க வேண்டாம். ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது: நா.க அரசும் பேரவையும் தங்கள் சட்ட, ராஜ தந்திர, நிர்வாகச் செலவுகளுக்கே நிதி மூலம் போதாத நிலையில் அந்தரிக்கும் இது போன்ற குடும்பங்களுக்கு உதவ இயலாது என்று சொன்னால் சாந்தி என்ன சொல்வார்? இந்த அமைப்புகள் எல்லாப் பணத்தையும், வளங்களையும் அவதிப் படும் போராளிகளுக்கு மக்களுக்குக் கொடுத்து விட்டால் அவர்களின் பணி பாதிக்கப் படாதா? ஒரே கல்லில் இரு மாங்காய் மாதிரி சிங்களவன் இந்த அமைப்புகளின் பணத்தையும் பறித்துக் கொண்டு, அவற்றை முடக்கி விடக் கூடும். இந்த அமைப்புகளை நாங்கள் அவசியமில்லாத அங்கங்களாக இப்போது முடக்கி வைத்தால் பத்து வருடத்திற்கு ஒரு தடவை இவனது போன்ற ஆயிரக் கணக்கான துன்பக் கதைகளை சிங்களவன் உருவாக்கிக் கொண்டே இருப்பான், நாங்கள் மீண்டும் அது முக்கியமா இது முக்கியமா என்று பட்டி மன்றம் நடத்தி எரிந்து விழுந்து, சிங்களவன் மீண்டும் வென்று...இந்தச் சக்கரம் நிற்காது சுழலும். இந்தப் பட்டி மன்றத்தை விட நல்ல விஷயம், இந்த அமைப்புகளை மறைமுகமாக அல்லது நேரடியாக சாடுவதை விடுத்து சில்லம் பல்லமாக இருக்கிற எங்கள் ஏனைய தமிழ் அமைப்புகளின் உதவியைப் பெறுவது தான். இது என் கருத்து.

- யுத்தம் முடிந்தும் மக்கள் உள-மனோரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

- 500கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

- நாள் ஒன்றுக்கு நான்கு தற்கொலைகள் , முக்கியமாக இளம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

- இவை மாற இரண்டு தலைமுறை செல்லலாம் - வைத்தியர்

An alarming increase in suicides is being reported in former war zones in the North, according to psychological experts. Despite the atmosphere of euphoria that prevailed in some areas following the war victory, many people in the North are still traumatised.

A psycho-social consultant from the Wanni, Dr Thayalini Thiagarajah said that people in the North are still highly traumatized. 
“People are suffering from post traumatic stress disorder, depression,
acute stress disorder, and other mental diseases,” she said.

An increase in the reported cases of suicide is the latest outcome of
the situation.

“The suicidal rate is high, especially among women. At present, around
500 patients with mental illness have been identified. According to sources from
 Kilinochchi hospital, four people commit suicide daily,” Thiagarajah
pointed out.

There are thousands of young widows currently in the Wanni.

What is worse, those identified as suffering from mental illness in the Wanni, often find it difficult to get treatment. This is because there is a severe lack of
psychiatrists, counselors and social workers in the Wanni, according to Thiagarajah. “How long is it going to take for people to have ‘holistic
healing’ and lead a normal life? May be a couple of generations,” she
said.

http://www.thesundayleader.lk/2010/11/07/increase-in-suicides/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதரி சாந்தி, உங்களது ஆதங்கம் விளங்குகிறது. எனக்கும் , நாம் செய்த, செய்து வரும் சமூக சேவைகளுக்காக ஸ்பொன்சர் தேடி அலைந்த அனுபவம் உண்டு. பலர் ஒரு ஐந்து மணி துளி சாமத்திய வீட்டுக்கு இருபாதாயிரம் பவுண்ட்ஸ் செலவழிப்பார்கள் ஆனால் தமிழ் அநாதை குழந்தைக்கு ஐம்பது பவுண்ட்ஸ் கொடுக்க நூற்றி எட்டு கேள்வி கேட்டு பத்து தடவை அவர்கள் வாசல்படி மிதிக்க வைப்பார்கள்.

அக்கா, நான் இப்போது தமிழரிடம் பணம் கேட்டு மெனக்கெடுவதில்லை. நமது தமிழரிலும் பார்க்க வெளிநாட்டுக்காரரே கூட பணம் அள்ளித்தருகிரார்கள். என்ன வெளிநாட்டுகாரரிடம் உதவி பெற அவர்களின் முறையில் அவர்களை அணுகவேண்டும்.

மற்றும், எனக்கு ஒரு இளைப்பாறிய வெளிநாட்டு தமிழரை தெரியும். அவர் முன்பு ஒரு கார் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர். அவரும் உதவி கேட்டு நொந்துவிட்டு ஒரு நூதன ஐடியாவுடன் வந்தார். அவர் பழைய கார்களை அடிமட்ட விலைகளில் வாங்கி தானே அதை திருத்தி பின் திருப்பி விற்று வரும் இலாபத்தில் தனது ஊரில் பொருளாதாரத்தால் பாவிக்கப்பட்டவர்களுக்கு பொருள் உதவி செய்து வருகிறார். இவரால் படித்து இவரது ஊரில் முன்னேறியவர்கள் பற்பலர். இவரால் மூன்று வேளை உணவருந்துவவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள். மனுஷரும் எழுபத்தி நாலு வயதிலும் பம்பரமாக சுழல்கிறார்.

என்ன செய்ய சொல்ல வருகிறேன் என்றால், உங்களது முயற்சி கட்டாயம் பலன் அளிக்கும். எனக்கும் வருங்காலத்தில் நேரம்/பொருள் கிடைக்கும்போது கட்டாயமாக உதவுவேன்.

Edited by KuLavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்களின் விடுதலை என்பது சிறிலன்கா அரசில்தான் தங்கியிருக்கு.நாடு கடந்த அரசில் இல்லைதானே?

அந்த போராளியை போல பல போராளிகள் எம்மைதிட்டிக் கொண்டிருப்பார்கள்.

குழவி கூறியது போல் ஊர்சங்கங்கள்,பாடசாலை சங்கங்கள்,மதநிறுவனங்கள் உதவலாம்

புத்த பகவான், லேடஸ்ட் நியூஸ் கேட்கலையே? எங்கட மத அமைப்பினர் லண்டனில இருந்து ஊருக்கு எட்டாயிரம் பவுண்ட்ஸ் காண்டாமணி அனுபினமாம்.

எங்கட கவுண்டமணிகளை நினைச்சால் சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. பகவான், எனக்கு மன தளம்பலை கட்டுப்படுத்த ஏதாவது தியான போஸ் சொல்லித்தாங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராளியினதும் அவனது குடும்பத்தினதும் துன்பத்தை எளிதாக எடுத்துக் கொள்வதாக நினைக்க வேண்டாம். ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது: நா.க அரசும் பேரவையும் தங்கள் சட்ட, ராஜ தந்திர, நிர்வாகச் செலவுகளுக்கே நிதி மூலம் போதாத நிலையில்

இதற்கு ஒரு பச்சை போட்டுள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சாந்தி, உங்களது ஆதங்கம் விளங்குகிறது. எனக்கும் , நாம் செய்த, செய்து வரும் சமூக சேவைகளுக்காக ஸ்பொன்சர் தேடி அலைந்த அனுபவம் உண்டு. பலர் ஒரு ஐந்து மணி துளி சாமத்திய வீட்டுக்கு இருபாதாயிரம் பவுண்ட்ஸ் செலவழிப்பார்கள் ஆனால் தமிழ் அநாதை குழந்தைக்கு ஐம்பது பவுண்ட்ஸ் கொடுக்க நூற்றி எட்டு கேள்வி கேட்டு பத்து தடவை அவர்கள் வாசல்படி மிதிக்க வைப்பார்கள்.

அக்கா, நான் இப்போது தமிழரிடம் பணம் கேட்டு மெனக்கெடுவதில்லை. நமது தமிழரிலும் பார்க்க வெளிநாட்டுக்காரரே கூட பணம் அள்ளித்தருகிரார்கள். என்ன வெளிநாட்டுகாரரிடம் உதவி பெற அவர்களின் முறையில் அவர்களை அணுகவேண்டும்.

மற்றும், எனக்கு ஒரு இளைப்பாறிய வெளிநாட்டு தமிழரை தெரியும். அவர் முன்பு ஒரு கார் தொழிற்சாலையில் வேலை பார்த்தவர். அவரும் உதவி கேட்டு நொந்துவிட்டு ஒரு நூதன ஐடியாவுடன் வந்தார். அவர் பழைய கார்களை அடிமட்ட விலைகளில் வாங்கி தானே அதை திருத்தி பின் திருப்பி விற்று வரும் இலாபத்தில் தனது ஊரில் பொருளாதாரத்தால் பாவிக்கப்பட்டவர்களுக்கு பொருள் உதவி செய்து வருகிறார். இவரால் படித்து இவரது ஊரில் முன்னேறியவர்கள் பற்பலர். இவரால் மூன்று வேளை உணவருந்துவவர்கள் பல நூற்றுக்கணக்கானவர்கள். மனுஷரும் எழுபத்தி நாலு வயதிலும் பம்பரமாக சுழல்கிறார்.

என்ன செய்ய சொல்ல வருகிறேன் என்றால், உங்களது முயற்சி கட்டாயம் பலன் அளிக்கும். எனக்கும் வருங்காலத்தில் நேரம்/பொருள் கிடைக்கும்போது கட்டாயமாக உதவுவேன்.

சாந்தி போன்றவர்களும் நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பெரியவர் போன்றவர்களும் இன்னும் இருப்பதால் தான் கடவுள் உலகத் தமிழர்கள் மேல் இன்னும் நெருப்பு மழை பொழியாமல் பொறுமை காக்கிறார் என நினைக்கிறேன். இந்த இடத்தில் நாம் இன்னும் வீணாக்கிக் கொண்டிருக்கும் நிதி வளங்கள் பற்றிய ஒரு உதாரணத்தையும் சொல்ல வேண்டும். கனடாவில் இயங்கும் ஒரு யாழ் பிரபல பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் வருடாந்தம் இரவு விருந்தும் நடனமும் வைத்து பணம் சேர்ப்பார்கள். அதை அப்படியே ஒரு கனேடிய மருத்துவ மனைக்குக் கொடுப்பார்கள். எந்த மருத்துவ அமைப்புக்கும் பணம் கொடுக்கலாம் தவறில்லை. ஈராண்டுகள் முன்பு ஐரோப்பா போன பொழுது இந்த நிகழ்வுக்கு வருடா வருடம் போய்வரும் ஒரு பழைய மாணவரைச் சந்தித்தேன். நானும் பழைய மாணவன் என்பதால் உரிமையோடு ஊருக்கு இன்னும் அதிகம் செய்யலாமே எனக் கேட்டேன். அவர் சொன்னார் பாடசாலைக்கு பேருந்து வாங்கிக் கொடுத்தார்களாம். கம்பியூட்டர் வாங்கிக் கொடுத்தார்களாம். ஊரில் பள்ளிக் கூடத்தில் விசாரித்தால், பாடசாலைப் பேருந்தை ராணுவம் தான் அடிக்கடி வந்து கொண்டு போகுதாம். கம்பியூட்டர்களில் பாதி அதிபரின் மகனின் பாவனைக்காக அவரது வீட்டில் முடங்கி விட்டதாம் (இப்போது அந்த அதிபரும் உயிரோடு இல்லை!). கஷ்டப் பட்டுத் தேனி போல புலத் தமிழன் உழைக்கிற காசை பொறுப்பான வழியில் செலவு செய்யக் கூட சில அமைப்புகளால் முடியவில்லை என்பதற்கு இது நல்ல உதாரணம்.

உனக்கான மாற்று வாழ்க்கையை என்னால் கொடுக்க முடியாத போது அட்வைஸ் செய்வது போன்ற ஒரு அராஜகம் கிடையாது

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பழைய மாணவன் என்பதால் உரிமையோடு ஊருக்கு இன்னும் அதிகம் செய்யலாமே எனக் கேட்டேன். அவர் சொன்னார் பாடசாலைக்கு பேருந்து வாங்கிக் கொடுத்தார்களாம். கம்பியூட்டர் வாங்கிக் கொடுத்தார்களாம். ஊரில் பள்ளிக் கூடத்தில் விசாரித்தால், பாடசாலைப் பேருந்தை ராணுவம் தான் அடிக்கடி வந்து கொண்டு போகுதாம். கம்பியூட்டர்களில் பாதி அதிபரின் மகனின் பாவனைக்காக அவரது வீட்டில் முடங்கி விட்டதாம் (இப்போது அந்த அதிபரும் உயிரோடு இல்லை!). கஷ்டப் பட்டுத் தேனி போல புலத் தமிழன் உழைக்கிற காசை பொறுப்பான வழியில் செலவு செய்யக் கூட சில அமைப்புகளால் முடியவில்லை என்பதற்கு இது நல்ல உதாரணம்.

உண்மைதான்

நாங்களும் எமது ஊர் பாடசாலைக்கு 4 புதிய கணணிகள் வாங்கிக்கொடுத்தோம்

நான் ஊர் போனபோது பார்த்தால் அவை ஒரு ரூமில் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள்.

மீண்டும் இயங்க முடியாதநிலையில்..................

கரண்டும் இல்லை

அதை பாவிக்கத்தெரிந்த ஆட்களும்இல்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குழவி,

உங்களது தனிமடல் பெட்டி நிறைந்துள்ளதுபோலுள்ளது. தனிமடல் போட முடியாதுள்ளது. கவனியுங்கள்.

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலி சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் மீது வன்முறைகள் - கோமா நிலையில் இளைஞர் வைத்தியசாலையில் :

27 ஆகஸ்ட் 2012

வவுனியா சிறைச்சாலையினை தொடர்ந்து காலி சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது கடந்த வாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல் கைதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைத்தாக்குதலில் கோமா நிலையில் மயக்கமுற்ற இளைஞரொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே உண்மைகள் வெளிவந்துள்ளது.

யாழ்ப்பாணம் கண்டி வீதி கொடிகாமம் பகுதியை சேர்ந்தவரான சுந்தரம் சதீஸ்குமார் (வயது34) என்பவரே இவ்வாறு கோமா மயக்க நிலையில் காலி களுவாப்பிட்டிய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திருமணமான இவருக்கு கவிதா எனும் மனைவியும் சாகித்யா எனும் சிறு குழந்தையும் உண்டு.இது வரை காலமும் புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் கடந்த 21ம் தகிதியே காலி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 24ம் திகதி வெள்ளிக்கிழமை வழைமை போன்று தனது கணவனை பார்வையிடப்போன கவிதாவிற்கு அவர் காலி சிறைக்கு மாற்றஞ்செய்யப்பட்டமை தொடர்பாக அறியத்தரப்பட்டது. அதையடுத்து காலி நிறைக்கு தேடி சென்றவேளையிலேயே கோமா நிலையினில் தனது கணவரை அவர் கண்டுள்ளார். எனினும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஏனையோர் பற்றியோ தகவல்களை பெறமுடியாதுள்ளது.எனினும் பலர் சிகிச்சை வசதிகள் மறுக்கப்பட்ட நிலையினில் சிறைகளள் தடுத்து வைக்ப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

http://www.globaltam...IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.