Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டனை அடுத்த ஆண்டு திருமணம் செய்வாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

Featured Replies

பிரித்தானியாவின் இளவரசர் வில்லியம், தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது.

அடுத்த ஆண்டு வசந்த காலத்தில், அல்லது கோடை காலத்தில் அவர்களது திருமணம் இடம்பெறுமென்றும், திருமணம் குறித்த மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படுமெனவும் அரச மாளிகை அறிவித்தது.

எட்டு வருடங்களுக்கு முன்னர் சென் அன்றூஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றபோது, அவர்கள் இருவரும் டேடிங் செய்ய ஆரம்பித்தார்கள்.

இளவரசர் சாள்ஸ், டயானாவைத் திருமணம் செய்து அடுத்த ஆண்டுடன் முப்பது வருடங்கள் நிறைவடைகின்றன.

மிடில்டன் குடும்பத்தினர், அரச குடும்பத்தினரோ, பிரபுக் குடும்பத்தினரோ அல்லவென்பது குறிப்பிடத்தக்கது.

( http://www.cmr.fm/thamilfm/Newclients/NewsDetail.aspx?ID=5426 )

இன்று நடந்த "என்கேட்ஜ்மன்ர்" நிகழ்வில் தன மறைந்த தாயாரின் மோதிரத்தை பாவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

தனது நீண்டகால பெண் நண்பி கேட் மிடில்டனை (Kate Middleton), அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வாரென பிரித்தானிய அரச குடும்பம் அறிவித்தது.

:lol: பப்பராசிகள்(paparazzi) கேட்டயும் ஒரு மாதிரி போட்டுதள்ளிவிடுவாங்கள் போல கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

.

வில்லியத்துக்கு கலியாணம் கட்டுற வயசு வந்திட்டுதா? :D இப்ப தான், பிறந்த மாதிரிக் கிடக்குது...... :wub::lol::D

.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேருக்குமே 28 வயசு. கலியாணம் கட்டிற வயசு தானே.

அதுவும் இவன் யுனிக்குப் போய் படிச்சானோ இல்லையோ.. இவளை சைட் அடிச்சிட்டான்.

ஆனால் எனக்கொரு டவுட்டு.. இவன் கொஞ்ச நாளைக்கு முன்னம் சொன்னான்.. இவளை கழற்றி விட்டிட்டன் என்று. இப்ப என்னடான்னா திடீரென்று மோதிரத்தை மாட்டி கூட்டிக் கொண்டு வந்திட்டான்.

இதில என்ன பிரச்சனை என்றால்.. நம்மூரில சாதி போல.. இவங்க மத்தியில கிளாஸ் பைத்தியம். அந்தப் பொண்ணு நடுத்தரவர்க்கம். இவன் அரச குடும்பம். இவளையும் எப்ப போட்டு தள்ளுறாங்களோ... ஏன்னா தற்போதைய அரசிக்குப் பிறகு.. யார் அரசியாவது..??!

அதுசரி.. இவருக்கு கலியாணம் என்றால் நமக்கென்ன.. இவையள் பழைய கெளரவத்தில இன்னும் வெட்டிக்கு அரச குடும்பம் என்று வாழ்ந்து கொண்டிருக்கினம். இவையிண்ட சொத்துக்களை எல்லாம் நாட்டுக்கு அர்ப்பணிச்சிட்டு.. இந்த றோயல் குடும்ப வெட்டி பந்தாவிற்கு ஒரு முடிவு கட்ட இந்த இங்கிலாந்தில யாருக்குமே துணிவில்லை என்றதுதான் பரிதாபம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி! யானை படுத்தாலும் குதிரை மட்டம் எண்ட மாதிரி அவர்கள் பரம்பரை பரம்பரையா ஆண்ட குடும்பம், இப்பவும் ஏராளமான ஆங்கிலேயர்களின் இதயங்களில் அதி உன்னதமான கௌரவத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இப்ப ஆளாமல் விட்டாலும் அவர்களின் அனுமதி பெற்றுத்தான் அநேக செயல்கள் நடைபெறுகின்றன! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் இன்னொரு அப்பாவியை கோரமாக பார்க்கலாம் பாரீசிலே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

paparazzi க்கு வேலையும் வரப்போகுது

.

வில்லியத்துக்கு கலியாணம் கட்டுற வயசு வந்திட்டுதா? :D இப்ப தான், பிறந்த மாதிரிக் கிடக்குது...... :wub::lol::D

.

(ஏறக்குறைய) முப்பது வருடத்துக்கு ஒரு முறை தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளுவீர்கள் போல இருக்குது.

  • தொடங்கியவர்

நான் புலம்பெயர்ந்து வாழும் நாடு கனடா. இங்கும் அதியுயர் செல்வாக்கு படைத்தவர் பிரித்தானிய அரசர்/அரசி!

ஒரு சட்டம் அமுலாக்கப்படுவதற்கு முன்னர்:

1. முதலாவதாக அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வாக்குக்கு விடப்படும். அங்கு அது ஐம்பது வீதத்திற்கு மேலான வாக்குக்களை பெற வேண்டும்.

2. பின்னர் அது செனட் சபைக்கு செல்லும். இவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் அல்ல, அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள்.

3. கடைசியாக, பிரித்தானிய அரசர்/அரசியின் கனடா பிரதிநிதி (இவர் ஐந்தாண்டு காலத்திற்கு பிரதமரால் தெரிவுசெய்யப்படுவார்) இதில் கையெழுத்திடுவார்.

ஒவ்வொரு கனேடியரும், அண்ணளவாக 34 மில்லியன் மக்கள், கிடத்தட்ட 62 சதம் வரியாக செலுத்துகின்றார்கள் (விரும்பியோ விரும்பாமலோ). இந்த பணம் மூலம்:

பிரித்தானிய பிரதிநிதிக்குரிய செலவுகள்,

அவரின் அலுவலக செலவுகள்,

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் கனடாவுக்கான அரச செலவுகள்,

என கட்டப்படுகின்றன.

.... ஒவ்வொரு பிரித்தானிய குடிமக்களைப் போல் ... பிரித்தானிய தமிழர்களுக்கும், இந்த அரச குடும்ப திருமணம் மகிழ்ச்சியான செய்தியே!!! ... பல்லாண்டு வாழட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

.... ஒவ்வொரு பிரித்தானிய குடிமக்களைப் போல் ... பிரித்தானிய தமிழர்களுக்கும், இந்த அரச குடும்ப திருமணம் மகிழ்ச்சியான செய்தியே!!! ... பல்லாண்டு வாழட்டும்!

இப்படி நீங்க தான் சொல்லிக்கிறீங்க.. ஆனால்.. பிரித்தானிய பூர்வ குடிமக்களே.. இதை இன்றைய பொழுதில் அவசியமா என்று சிந்திக்கிறார்கள். நீங்களோ ஒருபடி மேல போய்.. அகதித்தமிழர்கள் களவா ஓடிவந்து.. அழையா விருந்தாளிகளா வாழும் (illegal immigrant - இப்படித்தான் பிரித்தானிய பூர்வ குடிகள் உங்களை அழைக்கிறார்கள்.. )தமிழர்களுக்கு.. தஞ்சம் அடைந்த இடத்தால் அவர்களுக்கு பூர்வீகமும் அளித்து.. அவர்கள் தம்மை அடிமைப்படுத்தி சிங்களவனிடம் ஒப்படைத்துவிட்டு ஓடிவந்துவிட்ட அரச குடும்பத்துக்கு விசுவாசமாக தமது மகிழ்ச்சியை இது விடயத்தில் வெளிப்படுத்துவதாக அறிக்கையும் விட்டுக் கொள்கிறீர்கள்.

இதே அரச குடும்பம்.. தமிழர்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக.. இந்தளவு துயர்கண்டு விட்ட போதும்.. நீங்கள் பிரித்தானிய வீதிகளில் இறங்கி அபயக்குரல் எழுப்பிய போதும் ஓர் இரங்கல் செய்தியாவது விட்டதா...????!

ஏன் தமிழா உனக்கு மட்டும் இப்படி ஒரு வெட்டி பந்தா...! உன்னை மனிசனாவே அவங்க மதிக்கிறதில்ல... இதில.......................! :D:wub::lol:

Edited by nedukkalapoovan

... தெரு நாய்களுக்கு கூட எம் நிலை எம் தாயகத்தில் என்ன இருந்ததில்லை!!! கேவலமாக/கேட்பாரற்று அழிக்கப்பட்டு/அவலப்படுத்தப்பட்ட எம்மை ... அரவனைத்து உள் இந்நாடுகள்(மேற்குலகம்) விட்டிருக்காவிடில் ..... ??????????? ... முதலில் இருக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருங்கள், அது பிறந்த பொன்னாட்டை அவமதிக்கும் செயலல்ல!!!

... இந்த மேற்குலகம் என்று ... அகதியோ/அகதியற்றோ நாம் கண்டிருக்காவிடில் ... ஒரு சோமாலியாவை விட பஞ்சம்/பட்டினி/வறுமை எம் பூமியில் தலை விரித்தாடியிருக்கும்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

... தெரு நாய்களுக்கு கூட எம் நிலை எம் தாயகத்தில் என்ன இருந்ததில்லை!!! கேவலமாக/கேட்பாரற்று அழிக்கப்பட்டு/அவலப்படுத்தப்பட்ட எம்மை ... அரவனைத்து உள் இந்நாடுகள்(மேற்குலகம்) விட்டிருக்காவிடில் ..... ??????????? ... முதலில் இருக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருங்கள், அது பிறந்த பொன்னாட்டை அவமதிக்கும் செயலல்ல!!!

... இந்த மேற்குலகம் என்று ... அகதியோ/அகதியற்றோ நாம் கண்டிருக்காவிடில் ... ஒரு சோமாலியாவை விட பஞ்சம்/பட்டினி/வறுமை எம் பூமியில் தலை விரித்தாடியிருக்கும்!!!!

ஒருவேளை நீங்கள் ஓடிவராவிட்டால் இந்தப் போராட்டம் எல்லோரின் ஒருமித்த பங்களிப்போடும் எப்போதோ வெற்றி பெற்றிருக்கக் கூடும். நீங்கள் ஒன்றும்.. சிங்களவனால் அடித்து விரட்டப்படுகிறீர்கள் என்று அழைத்து வைத்து மதிப்பளிக்கப்படவில்லை.. அல்லது வாழ வைக்கப்படவில்லை. சிங்களவன் கட்டுநாயக்கா தாண்டி ஓட விட நீங்கள் பிரித்தானியா ஏற்றுக்கொண்ட சர்வதேச சட்டங்களை சாட்டு வைத்து உரிமைப் போராட்டத்தை உங்களுக்கு ஏற்ப மாற்றிச் சொல்லி.. உங்களை வதைக்கும் போராட்டமாகக் காட்டி வாழ்ந்து கொண்டீர்கள். அதன் பயன்.. முள்ளிவாய்க்காலில் அழிந்தது உலகின் பார்வைக்கு பயங்கரவாதமானது.

இதில உங்களுக்கு ஒரு பிரித்தானிய அரச விசுவாசம். முதலில் உங்கள் சொந்த தாய் மீது விசுவாசம் வைத்தீர்களா என்று சிந்தியுங்கோ.. பிறகு மிச்சம் கதைப்பம். :D:wub::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியமின் திருமணத்தில் பாதுகாப்புச் செலவீனம் £20 முதல் £40 மில்லியன் ஆகலாம் எனக் கணிப்பு - வரிப்பணம் செலவிடப்படுமா?

வியாழன், 18 நவம்பர் 2010 10:33

ஒரு பக்கம் பிரிட்டனில் உள்ள மக்கள் அனைவரும் அரசின் செலவீனக் குறைப்பு நடவடிக்கைகளாலும் , வேலை இல்லாத் திண்டாட்டத்தாலும் அவதியுற்று வரும் வேளையில் அடுத்த வருடம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் இளவரசர் வில்லியமின் திருமணத்திற்கு பிரமாண்டமாக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு ஆகக் கூடிய பல ஆயிரக்கணக்கான மில்லியன் பவுண்டுகளை அவரின் தந்தை இளவரசர் சார்லஸ் செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பாதுகாப்பு செலவீனங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு செலவீனம் மட்டுமே £20 முதல் £40 மில்லியன் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நாடு தற்போதிருக்கும் சூழ்நிலையில் மக்களின் பணத்தை அதிகம் செலவழிக்க நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக இளவரசர் சார்லஸ் பல வழிகளிலும் முயன்று வருவதாக கூறப்படுகிறது. திருமண செலவீனங்களுக்காக தன் தாயாரான எலிசபெத் மகாராணியிடமும் ஒரு கணிசமான தொகையை சார்லஸ் கேட்டுள்ளார் எனத் தெரிய வருகிறது. கேட்டின் பெற்றோரிடம் இதுவரை இந்த செலவீனங்கள் குறித்து எதுவும் பேசப்படவில்லையாம்.

tamilcnn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களும் உவங்கடைகண்டறியாத கலியாணங்களும். உலகத்துக்குகட்டாயம்தேவையான விசயம்விசயம் கண்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியம்ஸுக்கு கென்யாவில் நிச்சயதார்த்தம்

[18 நவம்பர் 2010, வியாழக்கிழமை 10:10 பி.ப இலங்கை]

லண்டன்,நவ.19

பிரிட்டிஷ் அரச பரம்பரையின் அடுத்த அரியணைக்குரிய இரண்டாவது வரிசை இளவரசரான வில்லியம்ஸ் சாள்ஸ் தனது நீண்டநாள் காதலியான கதே மிடில்டனை நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். கென்யாவில், விடுமுறை ஓய்விடம் ஒன்றில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக இளவரசர் வில் லியம்ஸின் லண்டன் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள் ளது.அடுத்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது.

தனது தாயாரான டயானாவுக்கு தந்தை சாள்ஸ் அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தையே வில்லியம்ஸ் தனது காதலிக்கு அணிவித்து திருமணத்துக்கான அடித்தளத்தை இட்டுள்ளார்.

பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸ், மறைந்த இளவரசி டயானா தம் பதிகளின் புதல்வர் இளவரசர் வில்லியம்ஸ். 28 வயதான இவருக்கும் ஸ்கொட்லாந்திலுள்ள பிபி நகர பல்கலைக்கழகத் தில் அவருடன் படித்த கதே மிடில்டன் (வயது 28) என்பவ ருக்கும் இடையே காதல் அரும்பியது.

மிடில்டனும் பிரிட்டனைச் சேர்ந்தவர்தான். அவரது தந்தை கோடீஸ்வர வியாபாரி.

வில்லியமும், மிடில்டனும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த மாதம் (ஒக்டோபர்) விடுமுறையில் கென்யாவுக்குச் சென்றிருந்தபோது நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

பிரிட்டிஷ் அரண்மனையிலிருந்து வெளியான அறிக்கையில் இந்தத் தகவல் முதலில் வெளியிடப்பட்ட """வில்லியம்ஸ் தனது நிச்சய தார்த்தம் பற்றிய தகவலை மகாராணி எலிசபெத் மற்றும் காதலியின் தந்தைக்குத் தெரிவித்து, திருமணத்துக்கு சம்மதம் கேட்டார்.

அவர்களின் அனுமதியின்படி இளவரசர் வில்லியம்ஸ் திரும ணம் அடுத்த ஆண்டு (2011) லண்டனில் நடைபெறும். திரு மண நாள் மற்றும் விழா விவரம் பற்றி பின்னர் முறைப்படி அறிவிக் கப்படும்' என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கேதேயிக் தந்தை மிக்கேல் மிடில்டன். தொழில் அதிபராக வுள்ளார். இவரது மனைவி கரேஸ் மிடில்டன். இவர்களது மூத்த மகள்தான் கேதே மிடில்டன்.

இளவரசர் வில்லியம்ஸின் திருமணத்திற்கு அவரது தந்தை சார்ள்ஸ் ஒப்புதல் கொடுத்துள்ளார். இதேபோல் கேதேவின் பெற் றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் திருமணத்தை அடுத்த ஆண்டு பிரமாண்டமான முறையில் நடத்த சார்ள்ஸும், பிரிட்டிஷ் அரண்மனை நிர்வாகி களும் முடிவு செய்துள்ளனர்.

கோடை காலத்தில் திருமணத்தை நடத்துவது நல்லது என்று சார்ள்ஸுக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறினார்கள். இதையடுத்து திருமணத்தை கோடை காலத்தில் நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

இந்தத் திருமணத்திற்கு பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திருமண விருந்தில் அனைத்து நாடுகளின் உணவு வகை களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலுமிருந்து சிறப்பு சமையல் நிபுணர்களை பிரிட்ட னுக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

uthayan

uthayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளவரசர் வில்லியம்ஸுக்கு கென்யாவில் நிச்சயதார்த்தம்

[18 நவம்பர் 2010, வியாழக்கிழமை 10:10 பி.ப இலங்கை]

லண்டன்,நவ.19

திருமண விருந்தில் அனைத்து நாடுகளின் உணவு வகை களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலுமிருந்து சிறப்பு சமையல் நிபுணர்களை பிரிட்ட னுக்கு வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பசுமதியோடை ஆட்டுறைச்சியும் கத்தரிக்காய்க்கறியும் என்ரை பொறுப்பு :lol:

  • தொடங்கியவர்

கல்யாண செய்தியை விட ஆச்சரியமானது செய்தியை வெளிப்படுத்திய விதம். வில்லியம்ஸ், மணப்பதற்கு பெண்ணின் தந்தையின் அனுமதியை கேட்டிருப்பதை [என்னவோ அவர் இராணி வீட்டு சம்பந்தம் வேண்டாம் எனவும் மாப்பிள்ளையாக இளவரசர் வேண்டாம் எனவும் சொல்வார் போல] எல்லாம் சுட்டிக் காட்டி பாரம்பரியத்திற்கும் சம்பிரதாயத்திற்கும் முக்கியத்துவம் தரும் அரச பரம்பரை அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டது டிவிட்டரில்! அதுவும் சார்லஸின் அறிவிப்பாக மணமகன் வில்லியத்தின் அதிகார பூர்வ டிவிட்டரிலிருந்து. அடுத்த சில நிமிடங்களில் எலிசபத் மகாராணியாரும் வாழ்த்தியது டிவிட்டரில் தான்! மகாராணியாரின் பேஸ்புக் வாலில் வாழ்த்துகள் குவிந்துக் கொண்டிருக்கின்றன.

யாரிந்த கேத்தரீன் மிடில்டன்? பக்கெல்பரி என்னும் ஊரில், குழந்தைகள் பார்ட்டிக்கு பொருட்கள் சப்ளை செய்யும் மைக்கேல் மற்றும் கரோல் மிடில்டன்னின் மூத்த மகள் தான், கேத்தரீன் மிடில்டன். என்ன தான் இவர்கள் மில்லியனர்களாக இருந்தாலும், அரச குடும்பத்தோடு ஒப்பிட்டால் மிடில்டன் குடும்பம் நடுத்தர வர்க்க குடும்பம் தான். அதுவும் கேத்தரீனின் தந்தை முன்னாள் பைலட். தாயார் முன்னாள் ஏர் ஹொஸ்டஸ். கேத்தரீன் வில்லியம்ஸை டேட் செய்து கொண்டிருந்ததைக் கண்டு புகைந்தவர்களுக்கு, இந்தச் செய்தி வாய்க்கு அவல்.

இளவரசர் வில்லியம்ஸ் ஆண்ட்ரு பல்கலைக்கழகத்தில் படிக்கப் போகிறார் என நன்றாகத் தெரிந்து தான் தன் மகளை அங்கே படிக்க அனுப்பினார் என்று எல்லாம் அளந்து விட்டவர்களும் உண்டு. ஆம்,கல்வி கற்க சென்ற இடத்தில் தான் இருவருக்கும் காதல் அரும்பியது!

ஆண்ட்ரு பல்கலைக்கழகத்தில் ஆர்ட்ஸ் படித்துக் கொண்டிருந்தபோது, முதல் வருடம் முடிந்த பின்னர், “இது எல்லாம் சரிப்பட்டு வராது படிப்புக்கு குட்பை சொல்லலாம்” என வில்லியம்ஸ் பிளான் செய்துக் கொண்டிருந்தபோது, ஆர்ட்ஸ் வராட்டி படிப்புக்கு டாட்டாவா? பப்பி ஷேம். உனக்குள்ள ஏதாவது திறமை இருக்கும்டா என்ற கேத்தரீனின் அறிவுரையினால் தான் திரிஷா இல்லாட்டி திவ்யா, ஆர்டஸ் இல்லாட்டி ஜியாகிரபி என படிப்பைத் தொடர்ந்தார் வில்லியம்ஸ்.

நண்பி கேத்தரீனின் அறிவாளி என்பது எல்லாம் படிப்பில் மனதை மாற்றியது மூலம் வில்லியம்ஸூக்கு உறைத்தாலும், அழகியாக கண்ணுக்கு பட்டு, பட்டாம்பூச்சி பறந்து மண்டையில் பல்பு எரிந்து காதலியானது எல்லாம் கேத்தரீன் ஒரு நாள் கேட் வாக்கிய போது தான். அன்று கேத்தரீனின் அழகு ஊரில் இருக்கும் எல்லார் கண்ணுக்கும் பட்டது என்பது வேறு விஷயம். வார இறுதிகளில் வீட்டுக்கு கூட்டி வந்து, தந்தைக்கு அறிமுகப்படுத்தி, சேர்ந்து வாழ்ந்து, ஸ்விஸ்ஸுக்கு சுற்றுலா என்றெல்லாம் காதல் களை கட்டியதில் ஆரம்பத்தில் இராஜா வீட்டுக் கன்னுக் குட்டியின் மேய்ச்சல், இதுவும் கடந்து போகும் என்ற நெருங்கியவர் கருத்தெல்லாம் கருகிப் போனது.

காதல் கத்திரிக்காய் முற்றி சந்தைக்கு வந்த போது இருந்து எல்லாக் கேமரா கண்களும் இவர்கள் மீது தான். கண் போடாதீர்கள் கண் போடாதீர்கள் என கேமராக்களுக்கு வேண்டுகோள், சட்ட வில்லங்கம் எல்லாம் வைத்தும் கண் போட்ட விளைவு நான்கு வருட காதலுக்கு இருவரும் குட்பை சொன்னார்கள். காதல் கைகூட வில்லையெனில் என்ன, கவலைப்படாதே சகோதரி என கேத்தரீனும் அவரின் சகோதரியும், வேர் இஸ் த பார்ட்டி என போட்ட ஆட்டமும் வெளிவந்த போட்டோக்களும், வில்லியம்ஸின் பசலைத்தீக்கு பெட்ரோல் ஊற்றியது.

விளைவாக ஊடல் முடிந்து கூடினார்கள்.

கூடியவுடன் கல்யாணந்தான் கட்டிக்கலாமா என வில்லியம்ஸ் இப்போ கேட்பார், எப்போக் கேட்பார் என்று காத்திருந்த கேத்தரீனிடம் கடைசியில் கென்யாவில் தன் அம்மா டயானாவின் நிச்சயதார்த்த மோதிரத்தை நீட்டி கல்யாணத்தை கன்பர்ம் செய்தார்.

ஒருவழியாய் கல்யாணம் என்று எல்லாரையும் விட சந்தோஷப் பெருமூச்சு விடுவது வில்லியம்ஸின் தம்பி ஹாரி. தனக்கு ரூட் கிளியர் என்பதால் அல்ல. இதன் மூலம் அக்கா வேண்டுமென்ற அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறதாம். பல வருடங்களுக்கு முன்னே அப்பாவிடம் சொல்லியிருக்கலாம்!

இன்னொரு குரூப், இவர்கள் காதலின் மீது இவர்களை விட அதிகமாய் நம்பிக்கை வைத்து பயங்கரமாய் முதலீடு செய்து இருவர் புகைப்படம் இருக்கும் காபி மக், டவல் என நினைவுப் பொருட்களை எல்லாம் எப்பொழுதோ தயார் செய்து வைத்தவர்கள்.

கல்யாண அறிவிப்பிற்குப் பின் இருவரும் அளித்த பேட்டியில் காதல் கொப்பளித்தது. கல்லூரிக் காலத்தில் அவளுடைய சுவரில் என்னுடைய பத்து இருபது போட்டோக்கள் இருக்கும் என வில்லியம்ஸ் சொன்னதும், சே சே அது எல்லாம் லெவிஸ் விளம்பரம் என கேத்தரீன் சொன்னதும், ஆமாம் நான் லெவிஸ் அணிந்த போட்டோக்கள் அவை என வில்லியம்ஸ் சொல்லியது எல்லாம் அட அட! இவளை இம்ப்ரஸ் செய்ய சமையல் எல்லாம் செய்தேன். முதலில் அவள் அப்பாவிடம் கல்யாணம் பற்றிக் கேட்டால் வேண்டாம் என சொல்லி விடுவாரோ என பயந்தேன் என்றெல்லாம் சொல்லும் போது சாதாரண சாமானியனாகத் தெரியும் வில்லியம்ஸ், அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் விலக வாய்ப்பு இருக்க வேண்டுமென்றுதான் இவ்வளவு நாட்கள் காதலித்தும் கல்யாணத்திற்கு காலம் கடத்தியதற்கு காரணம் என்று தெரிவிக்கும் போது சாம்ராஜ்யாதிபதி ஆகிவிடுகிறார்!

எப்பொழுது கல்யாணம் என்று தக்க சமயத்தில் அறிவிக்கிறோம் என சொல்லியிருந்தாலும். அடுத்த வருடம் ஆகஸ்ட்டில் என்று ஆருடம் சொல்லுகிறார்கள். எந்த தேதியில் என்று புக்கிங் கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டது.

முப்பது வருடங்களுக்குப் பின்னர் நடக்கும் அரச குடும்பத்துக் கல்யாணம் [கிழவி கேமிலா கல்யாணம் எல்லாம் கணக்கில் இல்லை] என்பதால் கோலாகலம் கொடி கட்டிப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சமயத்தில் ஆடம்பரம் தேவையா என்று கேள்வி கேட்பவர்களுக்கு, இது முதலீடு, இதனால் டூரிசம் வளரும், டிவியில் காட்டி விளம்பரத்தில் காசு பார்க்கலாம், ஜாலி மூடில் மக்கள் செலவு செய்தால் மந்தமாவது மண்ணாங்கட்டியாவது என்று பதில் பீரங்கி குண்டாய் வருகிறது. இதற்கு முன் நடந்த பல அரசகுடும்பத்துக் கல்யாணங்கள் பொருளாதார மந்தகதிக்கு நடுவில் தான் என வரலாறு கூறுகிறது!

பத்து வருட நட்பு, எட்டு வருடக் காதல், நடுவில் பிரிவு, எவ்வளவோ பிரச்னைகள், எதற்கும் கலங்காமல் கடுப்படையாமல் ஒரு வார்த்தை வெளியில் சொல்லாமல் இருந்தவர், இனி மேல் எதையும் பார்ப்பார் என மிடில் கிளாஸ் மிடில்டன், இராயல் பேமிலிக்கு ஒத்து வருவாரா, மீடியாவைத் தாக்குப் பிடிப்பாரா, கல்யாணம் காலத்தைக் கடந்து நிற்குமா என்ற சந்தேகங்கள் புறந்தள்ளப்படுகின்றன.

பெண்ணின் கல்யாண உடை எப்படியிருக்கும் அரசாங்க விடுமுறை இருக்குமா என்ற பைசா பிரயோஜனம் பெறாத எதிர்பார்ப்புகளை விட அனைவரும் வேண்டிக் கொள்வது , அரச குடும்பத்திலிருந்து பெண் எடுக்காதது ஒன்று மட்டும்தான் வில்லியம்ஸுக்கும் அவர் அப்பா சார்லஸுக்கும் இருக்கும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.