Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு தனி மனிதனதும் படுக்கையறைவரை நுளைந்து தனிமனித விவகாரங்கள் வரை விபரம் திரட்டுகின்ற இந்த நூற்றாண்டில் ஒரு பிரதேசத்து மக்களையே சாட்சியின்றிக் கொன்றொழித்த கோரம் இலங்கையில் நடந்தேறியிருப்பதை மறுபடி மறுபடி தமிழ்ப்பேசும் மக்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஆயிரமாயிரமாய்ச் செத்துப்போன அப்பாவிகளின் குருதியுறைந்து போகும் முன்னமே எஞ்சியவர்களை சிறுகச் சிறுகக் கொலைசெய்து கொண்டிருக்கிறது ராஜபக்ச குடும்ப ஆட்சி.

சாட்சியின்றி இலங்கையின் இதயப் பகுதியில் பேரினவாதம் நிகழ்த்திய கோரத்தாண்டவம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பாசிசத்தின் வேர்களை மனிதகுலத்தின் வாழ்விடங்களிலெல்லாம் படரவிடுகிறது ஒரு கூட்டம்! இலங்கை இனப்படுகொலை வெறுமனே இலங்கையின் ஏதோ ஒரு மூலையில் நடந்த தற்செயல் சம்பவமல்ல.

அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் முன்னெழும் போதெல்லாம் ஆயிரமாயிரமாய் மக்களைக் கொன்று குவித்துவிட்டு பயங்கரவாதத்தை அழித்துவிட்டோம் என மார்தட்டிக்கொள்ளலாம் என உலகின் அரச பயங்கரவாதிகளுக்கெல்லாம் ராஜபக்ச அரசு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளது. இவற்றையெல்லாம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கும் மனிதன், ஒன்றில் ஏலவே செத்துப் போனவன் அல்லது மனித குலத்தின் விரோதி என்பதைத்தவிர வேறேதுமில்லை.

முருகபூபதியின் மறுப்பு

“சர்வதேச” அரசுகளுக்கெல்லாம் கொலைசெய்வது எப்படி என்ற முன்னுதாரணத்தை வழங்கியிருக்கும் இலங்கை அரசின் எல்லைக்குள், அது வரித்திருக்கும் சர்வாதிகார வரம்புக்குள் “சர்வதேச” தமிழ் எழுத்தாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த எழுத்தாளர் முருகபூபதி இலங்கை அரசிற்கு ஜனநாயக முகத்தைத் சன்மானமாக வழங்கும் எழுத்தாளர் சமூகத்தின் முன்னோடி; மாநாட்டின் பிரதான ஏற்பாட்டாளர்.

ஊடகவியாளர்களை அனாதைப் பிணங்களாக தெருவோரத்தில் பேரினவாத நரிகளின் பசிக்குப் புசிக்கக் கொடுக்கும் இலங்கை அரச பாசிசத்தின் எல்லைக்குள்ளேயே எழுத்தாளர் மாநாடு நடத்தி கேள்விகேட்கப் போகிறார்களோ என ஒரு கணம் சிந்திக்கத் தோன்றியது. தமிழ்ச் சங்கம் அமைத்து மன்னர்களிடமே வினாவெழுப்பிய போர்குணத்தின் மரபில் பிறந்ததல்லவோ “சர்வதேச” தமிழ் எழுத்து மரபு! ஆக, ராஜபக்சவின் காலடியில் நடைபெறும் இந்த சர்வதேச விழா முன்னோடி முருக பூபதியிடம் தொடர்புகொண்டு இரண்டு விடயங்களை தெளிவுபடுத்தி அறிக்கைவிட்டால் சிக்கல்கள் தெளிவாகும் எனக் கோரியிருந்தேன்.

1. இலங்கை அரசின் இனப்படுகொலையை “சவதேச” எழுத்தாளர் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் கண்டிக்க வேண்டும்.

2. மாநாடு நடப்பதால் இலங்கை அரசின் இனப்படுகொலையையோ போர்க்குற்றங்களையோ ஏற்றுக்கொள்வதாகாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

அரசியல்?

இவை நியாயமானவை தான் என்றும் மாநாட்டுக் குழுவிடம் பேசிவிட்டு உடனடியாகவே பதில் தருவதாகவும் முருகபூபதி குறிப்பிட்டார். பின்னதாக நாம் அரசியலில் தலையிட விரும்பவில்லை என்றார்.

அரசியலில் அவர்கள் தலையிட விரும்பவில்லை என்பதன் பின்புலத்தில் புரையோடியிருக்கும் அரசியல், இலங்கை அரசின் பாசிச அரசியல்! இலங்கை அரசு சர்வதேசத்திற்கு வழங்கிய மனிதவிரோத அரசியல்!! இலங்கைத் தெருக்களிலே கொலைசெய்யபட்டு வீசியெறியப்பட்ட ஊடகவிலாளர்களின், எழுத்தாளர்களின் பிணங்களை மிதித்துக்கொண்டு கொழும்பில் மாநாடு போடத் தயாராக இல்லாத எழுத்தாளர்களை எல்லாம் அவதூறு செய்கின்ற அடக்குமுறையாளர்களின் அரசியல்!!!

தமிழகத்தை அன்னியப்படுத்தல்

அறுபது ஆண்டுகளாத் தொடரும் இன அழிப்பின் ஒவ்வொரு பிரதான காலத்திலும் தமிழ் நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் தன்னலமற்ற போராட்டம் நடந்திருக்கிறது. பெரினவாதம் கொன்று போடும் ஒவ்வொரு மனிதனதும் கடைசி நம்பிக்கைகளில் ஒன்றாக தமிழகம் இருந்திருக்கிறது. இதனால் தான் இலங்கை அரசு கூட தமிழக மக்களுக்குப் பயந்தது போல இதுவரை யாருக்காகவும் அச்சமடைந்ததில்லை எனலாம். இந்திய அரசோடு இணைந்து பல அரசியல் நாடகங்களை ஏற்பாடுசெய்துதான் தமிழகத்தின் எழுச்சியைக் கட்டுப்படுத்தினோம் என்று படுகொலைகளின் முக்கிய சூத்திரதாரி கோதாபய ராஜபக்சவே ஒத்துக்கொள்கிறார்.

தமிழகத்தை கையாள்வதற்காகவும் போராட்டங்களைத் திசைதிருப்பவும் மில்லியன்களை செலவு செய்திருக்கிறது இலங்கை அரசு.

கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை இனச்சுத்திகரிப்புச் செய்யும் இலங்கை அரசிற்கு எதிராக மரணபயத்தின் மத்தியிலும் சிறுகச் சிறுகப் போராட்டங்கள் உருவாகின்றன. இன்று இலங்கை அரசினதும் அதன் அடிவருடிகளதும் பிரதான நோக்கங்களில் ஒன்று சாகடிக்கப்படும் ஈழத் தமிழர்களை தமிழகத் தமிழர்களிடமிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தலாகும்.

புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்காக வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பொரிங்க்டர் என்ற நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது ராஜபக்ச அரசு. புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள் இந்த நிறுவனத்தின் பணியைத் தாம் கையிலெடுத்துக்கொண்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசு இன்ப்படுகொலை நிகழ்த்திய போது மூச்சுகூட விடத் திரணியற்றிருந்த இவர்களில் பலர், இப்போது தமிழ் நாட்டைச் சார்ந்த யாரும் மாநாடு குறித்து வாய் திறக்கக் கூடாது என்கிறார்கள். இலங்கை அரச பிரித்தாளும் தந்திரத்தின் எழுத்தாளர் வேடம் இது.

இறுதி நோக்கம்

“சரவதேச” எழுத்தாளர் மாநாடு குறித்து ஏனைய எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும், போராளிகளும், கட்சிகளும், தமது கருத்துக்களைச் சொல்லவே உரிமை மறுக்கும் இந்த அரச ஆதரவுக் கும்பல், இலங்கை அரசு தமிழ்ப் பேசும் மக்கள் மீது நடத்தும் உளவியல் யுத்தத்தின் தமிழ்ப் பேசும் பிரதினிதிகள். மாநாட்டின் உள் நோக்கம் குறித்தோ அன்றி இலங்கை அரசின் அடக்கு முறை குறித்தோ பேச முற்படும் ஒவ்வொரு மகக்ள் பற்றுள்ள மனிதனையும் “புலி” ஆதரவாளர்கள் என முத்திரை பதித்து அன்னியப்படுத்த முனைகிறார்கள்.

ஆக மாநாட்டின் இறுதி நோக்கம்,

1. இலங்கை அரசின் இனப்படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் அங்கீகரித்தல்.

2. இலங்கை அரச பாசிசத்தை மறைத்து அது ஜனநாயக அரசு என அறிவித்தல்.

3. இலங்கை அரச எதிர்ப்பாளர்களைப் புலிகள் என அடையாளப்படுத்தி அன்னியப்படுத்தல்.

4. தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் அரச எதிர்ப்பாளர்களிடையே பிளவுகளை உருவாக்குதல்.

இவற்றை ஏற்பாட்டளர்களோ அல்லது மாநாட்டின் ஆதரவாளர்களோ மறுக்க மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் அரசியல் பேச மாட்டார்கள்!

அவர்கள் முக்கியமான அரசியலைப் பேசியிருக்கிறார்கள். நாங்கள் நிர்வாணமான பிற்போக்குக் கூட்டம் என்றும் கொலை செய்யும் அரசியலைக் கூட நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்றும் அவர்களின் முகத்தில் அவர்களே அறைந்து கூறியிருக்கிறார்கள்.

http://inioru.com/?p=18266

  • Replies 50
  • Views 4k
  • Created
  • Last Reply

[மாநாட்டின் உள் நோக்கம் குறித்தோ அன்றி இலங்கை அரசின் அடக்கு முறை குறித்தோ பேச முற்படும் ஒவ்வொரு மக்கள் பற்றுள்ள மனிதனையும் “புலி” ஆதரவாளர்கள் என முத்திரை பதித்து அன்னியப்படுத்த முனைகிறார்கள்.

மாநாடு பற்றி சாதகமான வகையில் கருத்து கூறுபவர்களை இலங்கை அரசின் அடிவருடிகள், கைக்கூலிகள், ஒட்டுண்ணிகள், எட்டப்பர்கள் என்று பறைசாற்றி அந்நியப்படுத்தும்போது இவ்வாறானதொரு எதிர்வினை பற்றி கவலைப்படுவான் ஏன்?

புலம் பெயர் தமிழர்களைப் பிரிப்பதற்காக வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ட்ஸ் பணத்தை வழங்கும் ஒப்பந்தம் ஒன்றை பொரிங்க்டர் என்ற நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளது ராஜபக்ச அரசு. புலம் பெயர் அரச ஆதரவு லும்பன்கள் இந்த நிறுவனத்தின் பணியைத் தாம் கையிலெடுத்துக்கொண்டு கச்சிதமாக நிறைவேற்றுகிறார்கள். இலங்கை அரசு இன்ப்படுகொலை நிகழ்த்திய போது மூச்சுகூட விடத் திரணியற்றிருந்த இவர்களில் பலர், இப்போது தமிழ் நாட்டைச் சார்ந்த யாரும் மாநாடு குறித்து வாய் திறக்கக் கூடாது என்கிறார்கள். இலங்கை அரச பிரித்தாளும் தந்திரத்தின் எழுத்தாளர் வேடம் இது.

நல்லதொரு நகைச்சுவை. ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் பிரிந்துதானே உள்ளார்கள். தொடர்ந்தும் தமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டுதானே உள்ளார்கள். தமிழர்கள் தமக்குள் ஒற்றுமையாக இருந்து உள்ளார்களா? அப்படி காணப்பட்டிருப்பின் இவ்வளவு அவலங்களும், அழிவுகளும் ஏற்பட்டு இருக்குமா? தமது முதுகு கடிப்பதற்கு மற்றவனை ஏன் குற்றம் சொல்வான்? அது யாருங்கோ பொரிங்க்டர் நிறுவனம்? புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக இலங்கை அரசு மூன்று மில்லியன் பவுண்சை அவர்களுக்கு வருடா வருடம் வழங்குகின்றதா? :) உங்களிடம் ஆதாரம் உள்ளதா? மூன்று மில்லியனுக்கு எத்தனை சைபருங்கோ உள்ளது?

இந்த விடயம் சம்பந்தமாக இங்கிலாந்து பாராளுமண்றில் பாராளுமண்ற உறுப்பினரால் பேசப்பட்டு பிரதமரிடம் கேள்வியும் கேக்க ப்பட்டு இருக்கின்றது... :wub:

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101027_ukprimeonlanka.shtml

இலங்கையின் அந்தஸ்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்கு மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி எவ்வளவு முயற்சிக்கின்ற போதிலும், அங்கு படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக மேலும் ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அவை குறித்து உறுதி செய்வதற்கு ஒரு சர்வதேச பக்கசார்பற்ற விசாரணை அவசியம் என்ற தனது கருத்துடன் பிரிட்டிஷ் பிரதமர் உடன்படுகின்றாரா என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டிருந்தார்.

Edited by தயா

வருடம் ஒன்றிற்கு மூன்று மில்லியன் பவுண்சை புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை அரசு வழங்குகின்றது என்கின்ற ஆதாரத்தை காட்டுங்கள். பீ.பீ.சி செய்தியில் இதுபற்றி ஒன்றும் குறிப்பிடப்படவில்லையே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நகைச்சுவை. ஏற்கனவே புலம்பெயர் தமிழர்கள் பிரிந்துதானே உள்ளார்கள். தொடர்ந்தும் தமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டுதானே உள்ளார்கள். தமிழர்கள் தமக்குள் ஒற்றுமையாக இருந்து உள்ளார்களா? அப்படி காணப்பட்டிருப்பின் இவ்வளவு அவலங்களும், அழிவுகளும் ஏற்பட்டு இருக்குமா? தமது முதுகு கடிப்பதற்கு மற்றவனை ஏன் குற்றம் சொல்வான்? அது யாருங்கோ பொரிங்க்டர் நிறுவனம்? புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக இலங்கை அரசு மூன்று மில்லியன் பவுண்சை அவர்களுக்கு வருடா வருடம் வழங்குகின்றதா? :) உங்களிடம் ஆதாரம் உள்ளதா? மூன்று மில்லியனுக்கு எத்தனை சைபருங்கோ உள்ளது?

கரும்பு பிபிசியின் ஆங்கிலச் செய்தியை வாசித்தால் நல்லது.

http://www.bbc.co.uk/news/world-south-asia-11606899

Bell Pottinger ஒத்துக்கொள்ளவா போகின்றார்கள்!

கரும்பு பிபிசியின் ஆங்கிலச் செய்தியை வாசித்தால் நல்லது. http://www.bbc.co.uk/news/world-south-asia-11606899. Bell Pottinger ஒத்துக்கொள்ளவா போகின்றார்கள்!

[The Sri Lankan government is paying a top British PR firm about £3m ($4.7m) a year to try to enhance the country's post-war image, the BBC understands.

இங்கு புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக இந்தப்பணம் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதா? எனவேதான் ஆதாரம் கேட்டேன். புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்கு வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ஸ் செலவு செய்யவேண்டுமா? புலம்பெயர் தமிழர்கள் என்ன நகமும் சதையும் போல் தமக்குள் அவ்வளவு ஒற்றுமையானவர்களா? :wub: ரொம்பத்தான் ஓவர் பில்டப்புங்கோ. :)

post-war image என்பது புலம்பெயர் தமிழரை பிரிப்பதை குறிக்கின்றது? :unsure:

"குத்து மதிப்பாக இன்னொருவர் 10 மில்லியன் பவுண்சை வருடாவருடம் நிறுவனம் ஒன்றிற்கு புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக இலங்கை அரசு கொடுக்கின்றது என எழுதி இருப்பார். யாழில் பெட்டியில் இப்படியொரு தேடல் தேவைதானா? "

கருத்துக்களை நம்பமறுத்தாலும், உறுதிப்படுத்தப்பட, நம்பிக்கைக்கு உரிய தளங்களின் செய்திகளும் இணைக்கப்படுவது உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்காக இந்தப்பணம் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதா? எனவேதான் ஆதாரம் கேட்டேன். புலம்பெயர் தமிழரை பிரிப்பதற்கு வருடத்திற்கு மூன்று மில்லியன் பவுண்ஸ் செலவு செய்யவேண்டுமா? புலம்பெயர் தமிழர்கள் என்ன நகமும் சதையும் போல் தமக்குள் அவ்வளவு ஒற்றுமையானவர்களா? :wub: ரொம்பத்தான் ஓவர் பில்டப்புங்கோ. :)

post-war image என்பது புலம்பெயர் தமிழரை பிரிப்பதை குறிக்கின்றது? :unsure:

புலம்பெயர் தமிழரை குழப்பமான நிலையில் வைத்திருப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிகளைக் கையாள்கின்றது. இதெற்கெல்லாம் நிறையப் பணம் தேவை. ஆனால் செலவழிக்கும் பணத்தையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்பட்டால்தான் முடியும்.

இலங்கை தூதுவராலயங்களில் செயற்படுபவர்கள் சும்மா விசா குத்தும் வேலை மட்டும் செய்ய வரவில்லை என்பது தெரிந்ததுதானே.

புலம்பெயர் தமிழரை குழப்பமான நிலையில் வைத்திருப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிகளைக் கையாள்கின்றது. இதெற்கெல்லாம் நிறையப் பணம் தேவை. ஆனால் செலவழிக்கும் பணத்தையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்பட்டால்தான் முடியும். இலங்கை தூதுவராலயங்களில் செயற்படுபவர்கள் சும்மா விசா குத்தும் வேலை மட்டும் செய்ய வரவில்லை என்பது தெரிந்ததுதானே.

நிச்சயமாக. அதேசமயம் நம்மவர்கள் பலதையும் மிகைப்படுத்துகின்றார்கள். தமது இயலாமைகளை மறைப்பதற்கு இலங்கை அரசை குறைகூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்கின்றார்கள். யாராவது எதையாவது கூறினால் உடனடியாக அவர் சிறீ லங்கா அரசுக்கு ஆதரவான கைக்கூலி என்று கூறுவது வழமையாகிவிட்டது. இலங்கை அரசாங்கம் நிச்சயம் த.வி.பு வின் செயற்பாடுகளை முடக்கவே செய்யும். இது யதார்த்தம். ஆனால் அதற்காக ஒவ்வொரு விடயத்தையும் சிறீ லங்கா அரசுடன் தொடர்புபடுத்தி கண் மூக்கு வாய் வைத்து அதை மலினப்படுத்தி தாம் மட்டுமே ஜாம்பவான்களாக கோலோச்ச வேண்டும் என்று சிலர் விரும்புகின்றார்கள்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. அதேசமயம் நம்மவர்கள் பலதையும் மிகைப்படுத்துகின்றார்கள். தமது இயாமைகளை மறைப்பதற்கு இலங்கை அரசை குறைகூறி அதன் பின்னால் ஒளிந்து கொள்கின்றார்கள். யாராவது எதையாவது கூறினால் உடனடியாக அவர் சிறீ லங்கா அரசுக்கு ஆதரவான கைக்கூலி என்று கூறுவது வழமையாகிவிட்டது. இலங்கை அரசாங்கம் நிச்சயம் த.வி.பு வின் செயற்பாடுகளை முடக்கவே செய்யும். இது யதார்த்தம். ஆனால் அதற்காக ஒவ்வொரு விடயத்தையும் சிறீ லங்கா அரசுடன் தொடர்புபடுத்தி கண் மூக்கு வாய் வைத்து அதை மலினப்படுத்தி தாம் மட்டுமே ஜாம்பவான்களாக கோலோச்ச வேண்டும் என்று சிலர் விரும்புகின்றார்கள்.

சரிதான். மீண்டும் கட்டுரைக்கு வந்தால், சபா. நாவலன் சரியாகத்தான் தனது வாதங்களை வைத்திருக்கின்றார் என்று அனுமானிக்கமுடிகின்றது. முருகபூபதி உண்மையிலேயே தமிழ் எழுத்தாளர்களை ஒன்றிணைக்க முயல்கின்றாரா அல்லது இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு முண்டு கொடுக்க முனைகின்றாரா என்பது மாநாடு முடிவடைந்த பின்னர் நிச்சயம் தெரியவரும். ஆனால் அதுவரை காத்திருப்பது "வந்தபின் காப்போன்" இன் செயற்பாடுகளை ஒத்ததாக இருக்கும்.

மாநாடு சம்பந்தமாக கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை, ஏற்கனவே மிகவும் விரிவாக மாநாடு சம்பந்தமான வேறு ஓர் தலைப்பில் எனது கருத்தை கூறி உள்ளேன். மாநாட்டிற்கு சாதகமான வகையிலும், பாதகமான வகையிலும் வருமுன் காப்போம் நடவடிக்கைகளை எடுப்பவர்கள் தாராளமாக எடுங்கள். மாநாடு மூலம் புலம்பெயர் தமிழர்கள் பிரிந்தார்களா இணைந்தார்களா அல்லது எதுவித பாதிப்பும் ஏற்படவில்லையா என்பதை பின்னர் பார்ப்போம்.

சர்வதேச எழுத்தாளர் மாநாடின் பின்னணியில் .. : சபா நாவலன்

கொழும்பில் ஊடகவியலாளனுக்கு (ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் கைது ) நேற்று நிகழ்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்?

இந்த இலட்சணத்தில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு சர்வதேச தமிழ் எழுத்தாளர் எதை சாதிக்க போகிறார்கள்?

அடுத்தது 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையிலிருந்து தப்பிப் பிழைத்து வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஊடகவியலாளன் திசநாயகம் எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பிற்கு வழங்கியிருக்கும் செவ்வியைக் காது கொடுத்துக் கேட்டுப் பாருங்கள்.

புலம்பெயர் தமிழரை குழப்பமான நிலையில் வைத்திருப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வழிகளைக் கையாள்கின்றது. இதெற்கெல்லாம் நிறையப் பணம் தேவை. ஆனால் செலவழிக்கும் பணத்தையெல்லாம் ஆதாரத்துடன் நிரூபிப்பதற்கு இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகச் செயற்பட்டால்தான் முடியும்.

இலங்கை தூதுவராலயங்களில் செயற்படுபவர்கள் சும்மா விசா குத்தும் வேலை மட்டும் செய்ய வரவில்லை என்பது தெரிந்ததுதானே.

உங்களுக்கு சபா நாவலனை தெரியுமா...??

தெரிஞ்சால் யாழுக்கை ஒருக்கா அழைத்து வாங்கோவன்.... நல்ல மனுசன் , நல்ல விசயங்களை தான் சொல்லுறது... ஆனால் சில நேரங்களிலை என்ன சொல்லுது எண்டு விளங்குது இல்லை, அவருக்கே விளக்கம் இருக்கோ எண்டு சந்தேகமாய் கிடக்கு... கொஞ்சம் தெளிவு நாங்கள் பெறலாம், உரையாடலாம்... ???

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சபா நாவலனை தெரியுமா...??

:)

தெரிஞ்சால் யாழுக்கை ஒருக்கா அழைத்து வாங்கோவன்.... நல்ல மனுசன் , நல்ல விசயங்களை தான் சொல்லுறது... ஆனால் சில நேரங்களிலை என்ன சொல்லுது எண்டு விளங்குது இல்லை, அவருக்கே விளக்கம் இருக்கோ எண்டு சந்தேகமாய் கிடக்கு... கொஞ்சம் தெளிவு நாங்கள் பெறலாம், உரையாடலாம்... ???

அவர் நேற்று ஜிரிவியில் "வெளிச்சம்" நிகழ்ச்சியில் ரவி சுந்தரலிங்கத்துடன் கலந்துகொண்டிருந்தார். புதிய திசைகள் என்ற அமைப்பும், "இனியொரு" தளமும் இருக்கும்போது யாழில் வந்து மினக்கெடமாட்டார். அவர் நன்றாக விளங்கப்படுத்துவார், ஆனால் கேட்பவர்களுக்கு "போர்" அடிக்கும். "போர்" அடிக்கும் என்பது அவருக்கும் நன்றாகத் தெரியும்!

என்னை பொறுத்தவரை அரச உதவியில்லாமல் இந்த மகாநாடு நடைபெறுகின்றதென்றால் இலங்கையில் நடாத்துவது சரியே.அது எங்கட நாடு.நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்படியான நிகழ்வுகள் மூலம் மெதுவாக அங்கே காலூண்டவேண்டும்.

மாநாடு நடப்பதற்கும் போர்குற்றத்திற்கும் என்ன தொடர்பு.நாவற்குழியில் இருக்கும் பொதுமக்களே துணிந்து கதைக்கின்றார்கள்.நாங்களும் ஒழிந்துகொண்டிருந்து அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்காமல் இனி மெல்ல இறங்க வேண்டும்.

இன்றும் தமிழ்நாட்டுக்காரனின் கையெழுத்துவேட்டையுடன் நின்றால் அதோ கதிதான்.நாங்கள் அனுப்பாத fஅக்ஸ்சா,கடிதமா,ஊர்வலமா,ரெக்கோட் மெசேஜுகளா எல்லாம் தான் செய்தோம் ஒருவனுக்கும் கேட்கவில்லையா?.கனேடிய அரசு இப்போது இன்னமும் எங்களை போட்டு இறுக்க நிற்கின்றது பல விதத்திலும்.

20 வருடமா நாங்கள் சொன்னது உங்களுக்கு கேட்கவில்லை இப்போ நீங்கள் சொல்வது எங்களுக்கு கேட்குதில்லை என்கின்றார்கள்.

நீங்கள் எந்த உலகத்திலை வாழுகிறீர்கள்... நேற்று முன் தினம் ஒரு ஊடகவியலாளர் இங்கிலாந்தில் இருந்து போனவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்... எல்லைகள் அற்ற ஊடகர் அமைப்பு , பிரித்தானிய தூதரகம், போண்றவை மூலம் குடுத்த அழுத்ததால் இப்ப விடுவிக்க பட்டு இருக்கிறார் என்கினம்...

அனேகமாக நாடு கடத்தப்பட்டு இருக்கலாம்...

சிங்களவன் தனக்கு சாதகம் இல்லாத ஒண்டையும் அங்கை நிகழ விட இல்லை எண்டது உங்களுக்கு எப்ப விளங்கும்...

"நீங்கள் எந்த உலகத்திலை வாழுகிறீர்கள்... நேற்று முன் தினம் ஒரு ஊடகவியலாளர் இங்கிலாந்தில் இருந்து போனவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்... எல்லைகள் அற்ற ஊடகர் அமைப்பு , பிரித்தானிய தூதரகம், போண்றவை மூலம் குடுத்த அழுத்ததால் இப்ப விடுவிக்க பட்டு இருக்கிறார் என்கினம்...

அனேகமாக நாடு கடத்தப்பட்டு இருக்கலாம்...

சிங்களவன் தனக்கு சாதகம் இல்லாத ஒண்டையும் அங்கை நிகழ விட இல்லை எண்டது உங்களுக்கு எப்ப விளங்கும்..."

இவர் சற்று காலத்திற்கு முன்பு ஒரு திரியில் எழுதினார், கிடத்தட்ட இந்த தொனிப்பட " ஊருக்கு போய் வாருங்கள், உண்மையை காணுங்கள், அங்கு எல்லாம் நன்றாக இருக்கிறது என". :blink:

நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் ஆனால் நித்திரை கொள்பவர்கள் மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முடியுமா ?

Edited by akootha

ஓடிவந்து ஒழிச்சுக்கொண்டு வீரவசனம் பேசுவது சிலருக்கு கைவந்த கலை.

இலங்கையில் இருக்கும் அனைவரும் சிங்கள அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கவேண்டுமென யார் சொன்னது.மனோ கணேசன் இல்லையா கூட்டமைப்பு இல்லையா?

நாவற்குழியென்ன பிரான்ஸிற்கும் லண்டனுக்குமிடையிலா இருக்கு.

எல்லாம் நல்லா இருக்கு என்று எழுதவில்லை நீங்கள் ஊளையிடுவது போலில்லை என்றுதான் எழுதினேன் .இப்படி ஊளையிடுபவர்கள் தான் அடுத்த நிமிடமே குத்துக் கரணம் அடிப்பவர்களென்றும் எழுதினேன்.

சாருகானையும்,கமலகாசனையுமே அல்கய்டா என்று அமெரிக்காவில் பிடித்துவைத்து விசாரிக்கின்றார்கள்.கைது நடக்கவில்லை என்று யார் சொன்னது?

அதற்கு பயந்து புலத்தில் இருந்து அறிக்கை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கப் போகின்றீர்களா?.தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் வித்தியாசம் உள்ளது.இப்படி ஒரு மகாநாடு இப்போ வெற்றியாக நடந்தால் நாளை நாமும் எமது மண்ணில் ஒரு விழாவை வைக்கலாம் தானே.

உங்களுக்கொன்றில தற்கொலைதாக்குதல் அல்லது ஒழிச்சு நிக்கிறது.

முகத்திற்கு முகம் நின்று அரசியல் செய்யப்பழகுங்கோ.

உங்களுக்கு சபா நாவலனை தெரியுமா...?? தெரிஞ்சால் யாழுக்கை ஒருக்கா அழைத்து வாங்கோவன்.... நல்ல மனுசன் , நல்ல விசயங்களை தான் சொல்லுறது... ஆனால் சில நேரங்களிலை என்ன சொல்லுது எண்டு விளங்குது இல்லை, அவருக்கே விளக்கம் இருக்கோ எண்டு சந்தேகமாய் கிடக்கு... கொஞ்சம் தெளிவு நாங்கள் பெறலாம், உரையாடலாம்... ???

வெட்டுவதற்கு ஓர் கடா தேவைப்படுகின்றது? பாவம் சபா நாவலன். விட்டுவிடுங்கள். :blink:

... ஒரு எழுத்தாளன் ... தன் சுற்றம், தான் வாழும் சமூகம், தன் இனம், தன் மொழி/மதம், தான் வாழும் காலத்தில் நடக்கும்/நடக்கப்போகும் சம்பவங்கள்/மாற்றங்களே அவனை எழுத தூண்டுகிறது மட்டுமல்ல ஓர் எழுத்தாளன் தோற்றுவிக்கப்படுகிறான்!!! ... இதற்கு நம் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல!!!

... ஏன் இங்கு யாழில் எழுதுகிறோமோ/கிறுக்குகிறோம்???? ... நாம் எழுத்தாளர்கள் அல்ல என்ற போதிலும் ... நாம் வாழும் சூழலில் சூழலில்/எம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்களும்/மாற்றங்களுமே!!

... ஓர் எழுத்தாளன் தான் வாழும் சமூகத்தின் இன்னல்களை தெரிவிக்க முடியாது!!!! தன் இனத்தின் அவலங்களை அங்கு கூற முடியாது!!!! ... என்றால் என்ன தேவை இருக்கிறது அவன் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு????????

ஒருவேளை இந்த மாநாட்டு அமைப்பாளர்கள் ... வன்னியிலோ அல்லது வேறெங்கும் வடகிழக்கிலோ இம்மாநாட்டை நடத்தி, அங்கு நடைபெறும் சம்பவங்கள்/அவலங்கள்/அவைகளுக்கான தீர்வுகள் என்று கதைக்க முற்பட்டிருப்பின் இம்மாநாட்டை ஆதரித்து இருப்போம்!!!!!!!!

ஆனால் ...இலங்கை தீவில் மனித அவலங்கள் என்று அப்படி எதுவுமே நடைபெறவில்லை!!!! ... இலங்கை தீவு அமைதியாக இருக்கிறது!!!!!! அங்கு சிறுபான்மை இனம் சந்தோசமாக வாழ்கிறது!!!!! அவர்கள் தம் நிகழ்வுகளை இடையூறுகள் எதுவுமின்றி சுதந்திரமாக செய்கிறார்கள்!!!!!!!!! .... இவைகளே அங்கு சொல்லப்பட வேண்டிய செய்திகள் ... என்ற பின் அடைமொழிகளில் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது!!!!!!

ஓடிவந்து ஒழிச்சுக்கொண்டு வீரவசனம் பேசுவது சிலருக்கு கைவந்த கலை.

இலங்கையில் இருக்கும் அனைவரும் சிங்கள அரசுக்கு சாதகமாகத்தான் இருக்கவேண்டுமென யார் சொன்னது.மனோ கணேசன் இல்லையா கூட்டமைப்பு இல்லையா?

நாவற்குழியென்ன பிரான்ஸிற்கும் லண்டனுக்குமிடையிலா இருக்கு.

எல்லாம் நல்லா இருக்கு என்று எழுதவில்லை நீங்கள் ஊளையிடுவது போலில்லை என்றுதான் எழுதினேன் .இப்படி ஊளையிடுபவர்கள் தான் அடுத்த நிமிடமே குத்துக் கரணம் அடிப்பவர்களென்றும் எழுதினேன்.

சாருகானையும்,கமலகாசனையுமே அல்கய்டா என்று அமெரிக்காவில் பிடித்துவைத்து விசாரிக்கின்றார்கள்.கைது நடக்கவில்லை என்று யார் சொன்னது?

அதற்கு பயந்து புலத்தில் இருந்து அறிக்கை மாத்திரம் விட்டுக் கொண்டிருக்கப் போகின்றீர்களா?.தனி மனிதனுக்கும் அமைப்புக்கும் வித்தியாசம் உள்ளது.இப்படி ஒரு மகாநாடு இப்போ வெற்றியாக நடந்தால் நாளை நாமும் எமது மண்ணில் ஒரு விழாவை வைக்கலாம் தானே.

உங்களுக்கொன்றில தற்கொலைதாக்குதல் அல்லது ஒழிச்சு நிக்கிறது.

முகத்திற்கு முகம் நின்று அரசியல் செய்யப்பழகுங்கோ.

அண்ணை அரசியலுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... நாங்கள் ஒளிச்சு நிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை... நீங்கள் எங்களின் சுதந்திரமான நடமாட்டத்துக்கு உத்தரவாதம் வாங்கி தந்தால்...

வெள்ளை கொடியோடை அரசியலுக்கு எண்டு வந்தவைக்கே என்ன நடந்தது எண்டு தெரியவில்லை... மனோ கணேசன் தேசிய கட்ச்சியான ஐக்கிய தேசிய கட்ச்சியுடன் சேர்ந்து நிண்டதால் தான் நிலைச்சு நிக்கிறார்.... இதுக்கும் முன்னம் வெளி நாடு ஒண்டுக்கு பாதுகாப்பு தேடி போக புறப்பட்டது கூட ஊடகங்களில் வந்தது... முதலில் உங்களை Update பண்ணுங்கோ...

அங்கை நாவற் குளியில் சனம் குரல் குடுத்தது உண்மைதான்... ஆனால் இப்ப என்ன நிலை எண்டு விசாரித்து தன்னும் பாத்தனீங்களோ... ??? ஏன் செய்திகள் ஒண்டையும் காணம்...?? எதை இருட்டடிப்பு செய்கிறார்கள்...???

கொழும்பிலை கொஞ்ச பல்கலைகளக மாணவர்கள் குரல் குடுத்தவை அவர்களின் நிலை என்ன...??

மண்டைக்கு வாய்க்கும் தொடர்பில்லாமல் பினாத்தாமல் வேலையை பாரும்...

உமக்கு அரசியல் எண்ட சொல்லை தவிர ஒரு நாசமும் விளங்கம் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

:blink: நல்ல போடு தயா,

அதுக்காக உங்களுக்கு ஒரு பச்சை !!!!!

சரி தமிழர் அரசியல் தான் விளங்காதமாதிரி குழப்பும் கருத்துக்களை வைக்கவில்லை. அமெரிக்க - இஸ்லாமிய பிரச்சனையும் 9/11 அரசியலும் தான் சூனியம்.

"சாருகானையும்,கமலகாசனையுமே அல்கய்டா என்று அமெரிக்காவில் பிடித்துவைத்து விசாரிக்கின்றார்கள்.கைது நடக்கவில்லை என்று யார் சொன்னது?"

இதில் உள்ள "ஹாசன்" ஒரு முஸ்லீம் பெயராக பார்க்கப்படுகின்றது. அதனாலேயே பலர் மேலதிக விசாரணைக்கு உள்ளக்கப்படுகின்றார்கள். கைது செய்யப்படுவதில்லை.

அதையும், தாயகத்தில் பிறந்து புலத்தில் இருந்து வரும்போது சிங்களம் செய்யும் கைதுகளை சமன்படுத்தி தனது பிசுபிசுத்த கருத்தை நியாயப்படுத் துகின்றார்.

இவ்வளவு அழிவையும் நடாத்திப் போட்டு வெள்ளைகொடிபிடிக்க வெட்கமாயில்லை.பாதுகாப்பு வாங்கித் தந்தா அரசியியல் செய்வீங்களோ?

2009 முதல் சொல்லியிருக்கலாம் .சுதந்திரத்திற்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம்.அப்படி ஒரு சொல்லே அவர்களுக்கு தெரியாதே.இதை நான் சொல்லவில்லை உலகம் சொல்லுது. மறந்துபோனேன் நீங்கள் தான் உங்களுக்குள்ளேயே ஒரு உலகம் வைத்திருக்கின்றீர்களே.

அந்த உலகத்தைவிட்டு ஆயுளுக்கும் வெளியில் வரமாட்டீர்கள் போலிருக்கு.வெளியால வராத ஆட்களுக்கு தான் என்னநடந்தது என்று கண்ணால பார்த்தோமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.