Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களிடம் ஒரிரு வார்த்தை…..

Featured Replies

சரணடைந்து சாவதற்கு முதல் அரசியல் பொறுப்பாளர் நடேசனிடம் பி பி சி தமிழோசை றோ சார்பாக விடுத்து விடுத்து ஒரு கேள்வியை கேட்டது. அதுவானது புலிகளுக்கு பின்னரான தமிழ்மக்களுக்குரிய அரசியல் அதை முன்னெடுப்பது யார் என்பதே. அதற்கு பதிலளித்த நடேசன் புலிகளுக்கு பின்னரான தமிழ் மக்களுக்கான அரசியல் என்று எதுவும் இல்லை என்பதை திட்டவட்டமாக கூறினார். இந்தக் கேள்விகளின் சுட்சுமம் என்னவெனில் புலிகள் யாரையாவது சுட்டிக்காட்டினால் அது அவர்களுக்கு மிக பிடிமானமானது. புலியை வைத்து தொடர்ந்து அரசியல் செய்யவும் இலங்கை விவகாரத்தில் தொடர்ந்து மூக்கை நுழைக்கவும் மிகச் சாதகமானது. இதற்குரிய சந்தர்ப்பத்தை நடேசன் வழங்கவில்லை.இது எஞ்சிய தமிழ்மக்களை ஒடுக்க சிங்களத்துக்கு வளங்கப்படும் சந்தர்ப்பமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள்.

புலிகள் அமைப்பு நிர்வாகமாக கட்டமைக்கப்பட்டபின்னர் ஆயுதக் கொள்வனவு அதற்கான நடவடிக்கைகள் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையின் கீழ் வந்தது. இதன் அடிப்படையில் சர்வதேசவிவகாரம் நிதி ஆயுதக்கொள்வனவு எல்லாம் காஸ்ரோவுக்கு கீழ் வந்தது. காஸ்ரோவுக்கு கீழ் அதிகாரிகளாக படித்த நெடியவன் போன்றவர்கள் ஆங்காங்கே பல நாடுகளுக்குச் சென்றார்கள். கே பி ஓரம்கட்டப்பட்டார். அதிகாரிகள் என்ற துறைசார்ந்த படிப்பு அனுபவசாலிகளை ஓரம்கட்டியது என்பது புலிகளின் போராட்ட தோல்வியில் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு காலத்தில் களங்களில் நேரடி அனுபவங்களை பெற்றவர்களும் திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்குமான முன்னுரிமை பின்தள்ளப்பட்டு துறை சார்ந்த புத்தகப்படிப்பினை முடித்தவர்களுக்கு சலுட் அடிக்கும் நிலமையானது மிகப்பெரிய சிக்கலை புலிகள் இயக்கத்துள் தோற்றுவித்தது. கே பி பலவருடங்கள் ஒதுங்கியிருந்ததன் பின்னணியும் இந்த அடிப்படையில்தான்.

இறுதிக் கட்டத்தில் தான் கே பி பிரபாகரனால் உள்ளெடுக்கப்பட்டார். அதுவும் சர்வதேச விவகாரங்களுக்கான தொடர்பாளராக. இது போராளிகள் சரணைடைவது என்ற முடிவை நெருங்கியபின் எடுக்கப்பட் முடிவாகும். தலைவர் போராளிகளை விட்டும் போரால் ஊனமடைந்த பல்லாயிரம் போராளிகளை விட்டும் வெளியேற விரும்பவில்லை. கே பி யை மீள உள்ளிழுத்தது இவர்களின் பாதுகாப்பு குறித்த அடிப்படையிலேயே அன்றி மீள ஆயுதக் கொள்வனவுக்கோ அல்லது இராணுவ நடவடிக்கை சாரந்தோ அல்ல. கே பியை மீள தொடர்பாளராக அறிவித்த போது கடல் பகுதி முழுக்க இலங்கை படைகளின் முற்றுகைக்குள் வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கே பி எதுசார்ந்த எதிர்பார்ப்புடன் மீள உள்ளிக்கப்பட்டாரோ அந்த எதிர்பார்ப்புச் சார்ந்தே அவர் பயணிக்கின்றார். புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு அரசியல் முன்னெடுப்பை புலிகளின் தளத்தில் இருந்து ஆரமப்பிக்க முற்பட்ட போதே அது இலங்கை இந்திய அரசுகளின் எதிர்பார்ப்புக்கே சாதகமாக அமையும் என்பதை உணர்ந்து அதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்காது விலகிக்கொண்டார். சிறைப்பிடித்த மக்கள் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு என்பதிலேயே அவர் முனைப்பு நகர்கின்றது.

மக்களைப் பற்றி என்றைக்குமே கவலைப்படாத மேட்டுக்குடி சார் கருத்து அரசியலும் உணர்ச்சி அரசியலும் நக அரசுவாக உருவெடுத்து இலங்கை இந்திய அரசுகளின் விருப்பத்தை தொடர்ந்து நிறைவேற்ற தேசியக் காவடியை தூக்கி தலையில் வைத்து ஆடுகின்றது. அது வன்னியில் அவலப்பட்ட மக்களுக்காக எவன் குரல்கொடுக்க முற்படுகின்றானோ அவர்களை முடக்கமுற்படுகின்றது. சிறைப்பட்ட பல்லாயிரம் போராளிகளை மீட்பதை தடுக்கமுற்படுகின்றது. அவலப்பட்ட மக்கள் சார்ந்து எவன் முனைகின்றானோ அவனை துரோகி என்கின்றது. அவலப்பட்ட மக்கள் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் வரை சிங்களத்துக்குள்ளாகத்தான் அவர்களுக்கு உதவ முடியும் என்று குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும் இந் நிலையில் சிங்களத்துக்கு உள்ளக உதவ முற்படுகின்றவர்களை துரோகி என்கின்றது.

மக்கள்ளை நிராகரித்து மக்கள் தொடர்பின்றி புலம்பெயர் தேசங்களில் அரசு அமைத்து அமர்வுகள் நடத்தி அடயாளம் தேடிக்கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திற்கு போரைச் சுமந்து அவலப்பட்ட மக்களுக்கு முடிந்தவற்றை உதவிக்கொண்டிருப்பவர்களை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கின்றது?

புலி அழியவில்லை. புலி முடியவில்லை பிரபாகரன் சாகவில்லை என்ற கருத்துக்கள் எல்லாம் இந்தியாவில் இருந்தே பெரும்பாலும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்களால் வலியுறுத்தப்பட்டது. பிரபாகரன் இறந்துவிட்டார் என்று கூற முற்பட்டவர்கள் துரோகியாக்கப்பட்டனர். புலிகளின் இருப்பும் புலி அரசியல் தளத்தின் இருப்பும் இந்தியாவுக்கே மிகத்தேவையானது. இலங்கை விவகாரத்தில் மூக்கை நுழைக்க மிக அவசியமானது. அந்தவகையில் அதன் விருப்பை இன்று நிறைவேற்றிக்கொண்டிருப்பவர்களே போராளிகள் விடுதலைக்கும் வன்னி மக்களின் மறுவாழ்வுக்கும் எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றனர். யார் உதவுகின்றானோ அவனை துரோகி என்கின்றனர்.

இன்று பல்லாயிரம் டொலர்கள் செலவளித்து இந்தியாவில் இருந்து பலரை வரவளைத்து மாவீரர் தின கொண்டாடட்டங்கள் நத்திக்கொண்டிருக்கின்றனர். மாவீரரரை பெற்றவர்கள் சகோதரங்கள் அன்றாடம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு மக்களை விட மாவீரர்கள் நேசித்த மக்களை விட அடயாளப்போட்டிதான் முக்கியம். இந்தியாவை விமர்சிப்பீர்கள் அங்கிருந்துதான் பேச்சாளர்களை அழைப்பீர்கள். இலங்கை அரசினூடாக உதவக்கூடாது ஆனால் இலங்கைக்கு பல்வேறு வகையில் அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுப்பீர்கள். எந்த ஒன்றுக்கும் அர்த்தம் கிடையாத அச்சுப் பிச்சில்லாத தேசிய உணர்சி.

உங்கள் சூழ்சிகள் மேட்டுக்குடித்தனம் தேசிய உணர்ச்சி வெறி அலட்சியம் இவைகளை கடந்து போரால் அவலப்பட்ட மக்கள் மீள எழுவார்கள். தமக்கான அரசியல் பாதையில் காலடி எடுத்துவைப்பார்கள். அதற்கு பக்கபலமாக மனிதாபிமானம் உள்ள புலம்பெயர் மக்கள் நிற்பார்கள். உங்கள் மேட்டுக்குடித்தனமும் தேசிவெறியும் உணர்ச்சி அரசியலும் மனிதாபிமானத்தின் முன்னால் தோற்பது உறுதி.

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply

சரணடைந்து சாவதற்கு முதல் அரசியல் பொறுப்பாளர் நடேசனிடம்....

முதல் வசனத்திலேயே, சரணடைந்து "கொல்லப்பட்டவர்" என்ற பெரும் உண்மையை மறைத்து கீழே எழுதப்பட்ட மிகுதி வரிகள் எல்லாமே செத்துவிட்டது.

இருந்தாலும்,

இன்று பல்லாயிரம் டொலர்கள் செலவளித்து இந்தியாவில் இருந்து பலரை வரவளைத்து மாவீரர் தின கொண்டாடட்டங்கள் நத்திக்கொண்டிருக்கின்றனர். மாவீரரரை பெற்றவர்கள் சகோதரங்கள் அன்றாடம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு மக்களை விட மாவீரர்கள் நேசித்த மக்களை விட அடயாளப்போட்டிதான் முக்கியம். இந்தியாவை விமர்சிப்பீர்கள் அங்கிருந்துதான் பேச்சாளர்களை அழைப்பீர்கள். இலங்கை அரசினூடாக உதவக்கூடாது ஆனால் இலங்கைக்கு பல்வேறு வகையில் அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுப்பீர்கள். எந்த ஒன்றுக்கும் அர்த்தம் கிடையாத அச்சுப் பிச்சில்லாத தேசிய உணர்சி.

உங்கள் சூழ்சிகள் மேட்டுக்குடித்தனம் தேசிய உணர்ச்சி வெறி அலட்சியம் இவைகளை கடந்து போரால் அவலப்பட்ட மக்கள் மீள எழுவார்கள். தமக்கான அரசியல் பாதையில் காலடி எடுத்துவைப்பார்கள். அதற்கு பக்கபலமாக மனிதாபிமானம் உள்ள புலம்பெயர் மக்கள் நிற்பார்கள். உங்கள் மேட்டுக்குடித்தனமும் தேசிவெறியும் உணர்ச்சி அரசியலும் மனிதாபிமானத்தின் முன்னால் தோற்பது உறுதி.

காலம் என்பது ஒரு செயலின் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணி. அதிகளவு நீர் விட்டு உரம் போட்டு வளர்த்தாலும் பழுக்கும் பருவம் வந்த பிறகுதான் மரத்திலிருந்து பழம் பறிக்க முடியும். எனவே, ஒரு செயல் வெற்றி பெற மூன்று முக்கிய கூறுகளில் முழுக் கவனமுடன் இருத்தல் வேண்டும்.

1.விடாமுயற்சி

2.வெற்றியைத் தீர்மானிக்கும் இடவலிமை

3.வெற்றி கனிந்து வரும் காலத்தை உணர்ந்து கொள்ளும் விழிப்புணர்வு

இந்த மூன்று கூறுகளில் எந்தவொன்று தவறினாலும் வெற்றி வாய்ப்பு நழுவி விடும். இந்த மூன்றிலும் கவனமாக இருப்பவன் உலகையே வெல்ல முடியும்.

மனவலிமையும் படைவலிமையும் இடவலிமையும் பெற்றிருந்தும், காலத்தின் வலிமையைக் கருத்தில் கொள்ளாத ஒரே காரணத்தால் நெப்போலியனும் கிட்லரும் உலகை வெல்லும் தம் முயற்சியில் படுதோல்வி அடைந்தனர். இருவருமே குளிர் காலத்தில் இரசியாவை நோக்கிப் படை எடுத்துச் சென்று தம் படையின் பெரும் பகுதியைப் பறிகொடுத்துத் தோற்றனர்.

அதே சமயத்தில் இரண்டாம் உலகப் போரின் போது இங்கிலாந்துக்கு நேர்ந்த நெருக்கடியான காலத்தைத் தமக்குச் சாதகமாப் பயன்படுத்திக் கொண்ட பல நாடுகள் அந் நாட்டின் காலணி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன.

எந்தவொரு இலட்சியப் போராட்டத்திற்கும் வெற்றியைத் தீர்மானிக்கும் காலம் ஒன்று மலர்ந்தே தீரும். அந்தக் காலம் மலரும் வரை தம் கொள்கையில் உறுதியாய் நின்று தம் வெற்றிக்கு உழைக்கும் நிலைகளை உயிர்ப்புடன் வைத்திருந்து காலம் மாறியவுடன் தீர்க்கமாய்ச் செயற்படுபவன் உறுதியாய்த் தன் இலட்சியத்தில் வெற்றி பெறுவான்.

ஞாலங் கருதினுங் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

என்பது வள்ளுவர் வாக்கு.

http://www.eelampres...m/2010/11/7119/

Edited by akootha

இன்று பல்லாயிரம் டொலர்கள் செலவளித்து இந்தியாவில் இருந்து பலரை வரவளைத்து மாவீரர் தின கொண்டாடட்டங்கள் நத்திக்கொண்டிருக்கின்றனர். மாவீரரரை பெற்றவர்கள் சகோதரங்கள் அன்றாடம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு மக்களை விட மாவீரர்கள் நேசித்த மக்களை விட அடயாளப்போட்டிதான் முக்கியம். இந்தியாவை விமர்சிப்பீர்கள் அங்கிருந்துதான் பேச்சாளர்களை அழைப்பீர்கள். இலங்கை அரசினூடாக உதவக்கூடாது ஆனால் இலங்கைக்கு பல்வேறு வகையில் அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுப்பீர்கள். எந்த ஒன்றுக்கும் அர்த்தம் கிடையாத அச்சுப் பிச்சில்லாத தேசிய உணர்சி.

மாவீரர்களின் பெற்றோரை கவனிக்கவில்லை என்கிறீர்கள்.. நாங்கள் என்ன சொல்கிறோம் நாங்கள் எந்த இடையூறும் இல்லாத சூள்நிலையை உருவாக்குங்கள் நாங்கள் கவனிக்கிறோம் எண்று...

நாளாந்தம் மாவீரர் பெற்றோரையும், முன்னைய நாள் போராளிகளையும் துன்புறுத்தி போட்டு வெளியில் விடுவீர்கள் நாங்கள் அவர்களுக்கு மீண்டும் எல்லாத்தையும் கட்டிக்கொடுப்போம்... நீங்கள் அவர்களை சுறண்டி வீட்டி இருப்பது முதல் பெண்கள் வரைக்கும் கொண்டு செல்வீர்கள்... நாங்கள் மீண்டும் செய்வோம்...

மாவீரரின் பெற்றோரும் முன்னைய நாள் போராளிகளும் கிட்டத்தட்ட மற்றயவரின் கையை எதிர்ப்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்... நாளாந்தம் அவர்களுக்கு பிச்சை போடுங்கள் என்பது தான் உங்களின் கோரிக்கையாக இருக்கிறது... அவர்கள் சொந்தக்கால்களில் நிற்பது தான் சிங்களத்தின் இறைமைக்கு இடைஞ்சலாக நிக்கின்றதே... நாளை அவர்கள் கொழுப்பேறி ஆயுதம் தூக்கி விடுவார்கள் என்பதை தான் முடிவாக வைத்து இருக்கிறார்களே...

நாங்கள் எங்களது மக்களுக்கு உணவை வழங்கி சிங்களவரின் விருப்பமான பிச்சைக்காறர்களாக பிரகடனப்படுத்த விரும்பவில்லை ... விளைநிலங்களை எடுத்து பயிர் செய்ய விதைகளையும் , நீர் இறைக்கும் இயந்திரங்களையும் பசளைகளையும் வழங்க விரும்புகின்றோம்...

அதுக்கான சூழலை உருவாக்குங்கள். என்பது தான் உங்களிடம் கேட்க்க படும் கேள்வி... அச்சுறுத்தலான சூழலில் விவசாயமும் செய்ய முடியாது நீரும் பாச்ச முடியாது பருவத்தே பயிரும் செய்ய முடியாது , அறுவடைக்கு ஆளும் பிடிக்க முடியாது...

வீடுகளில் இருந்து விரட்டி அடிக்க பட்டால் அவைகளை விட்டு விட்டுதான் ஓட வேண்டும்... இதுதான் அவர்களை வைத்திருக்கும் சூழல்...

ஆக எங்களுக்கு தேவை மக்களுக்கு பாதுக்காப்பான சூழல்... அதுக்கு தேவை தமிழர்களுக்கு இலங்கை மீதான அழுத்தம் கொடுக்கும் அளவுக்கான ஆதரவு...

இந்தியாவில் இருந்து ஆள் கூட்டி வருவதாக ஏதோ சொல்கிறீர்களே.... நாங்கள் இந்திய மக்களுக்கு எதிரிகள் எப்போதும் இல்லை... இந்திய ஆழும் ஆட்ச்சியாளரையே விமர்ச்சிக்கின்றோம்... இரண்டுக்கும் உங்களின் பகுத்தறிவு மூலம் வித்தியாசத்தை கண்டு கொள்ளுங்கள்...

இந்தியர்கள் யாரும் எங்களுக்காக பேச வருவதில்லை... தமிழர்களே பேச வருகிறார்கள்... ஏன் நாங்கள் சிங்கள ஆட்ச்சியாளரையும் தான் எதிர்க்கின்றோம் எங்களுக்காக நல்ல மனம் படைத்த சிங்களவரும் தான் பேசுகிறார்கள்...

முதலில் உங்களின் பார்வையை சரியாக்குங்கள்...

Edited by தயா

கே பி எதுசார்ந்த எதிர்பார்ப்புடன் மீள உள்ளிக்கப்பட்டாரோ அந்த எதிர்பார்ப்புச் சார்ந்தே அவர் பயணிக்கின்றார். புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு அரசியல் முன்னெடுப்பை புலிகளின் தளத்தில் இருந்து ஆரமப்பிக்க முற்பட்ட போதே அது இலங்கை இந்திய அரசுகளின் எதிர்பார்ப்புக்கே சாதகமாக அமையும் என்பதை உணர்ந்து அதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்காது விலகிக்கொண்டார். சிறைப்பிடித்த மக்கள் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு என்பதிலேயே அவர் முனைப்பு நகர்கின்றது.

KP யை தலைவர் எந்தக்காலத்திலும் உள் எடுக்க வில்லை என்பதுதான் உண்மை... ! சரியாக நிகழ்வை பாருங்கள்... KP தான் இந்தியாவுடன் பேசினேன் என்பது KP யே தன் வாயால் சொன்ன வாக்கு மூலம்... KP யால் இந்தியாவுடன் பேச முடிந்தால் ஏன் உள் இருந்து புலித்தேவன் அண்ணையாலும், நடேசன் அண்ணையாலும் பேச முடியவில்லை எனும் கேள்வி எழுகிறதே...

காரணம் இந்தியா தெரிவு செய்த ஆள் தான் KP... ! வழமையாக KP க்கு மாதாந்த கொடுப்பனவு செய்யும் புலிகள் உறுப்பினர் ஊடாக KP புலிகளின் வலையமைப்பில் முக்கிய பொறுபிலும் தலைவருடன் நேரடியான தொடர்பில் இருந்த ஒருவரிடம் கேட்டதுக்கு , அவர் கிட்டத்தட்ட வேண்டாம் எண்று சொன்ன தலைவரை இத விட்டால் வேறு வளி இப்போதைக்கு இல்லை எண்ற வற்புறுத்தலுக்கு கொடுக்க பட்ட கடிதமே KP யை சர்வதேச தொடர்பாளராக பிரகடன படுத்திக்கொள்ள வசதியானது... KP யுடன் தலைவர் பேசினார் என்பது எல்லாம் அப்பட்டமான பொய்...

சம்பந்த பட்ட உறுப்பினர்கள் இண்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பல்லாயிரம் டொலர்கள் செலவளித்து இந்தியாவில் இருந்து பலரை வரவளைத்து மாவீரர் தின கொண்டாடட்டங்கள் நத்திக்கொண்டிருக்கின்றனர். மாவீரரரை பெற்றவர்கள் சகோதரங்கள் அன்றாடம் அவலப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு மக்களை விட மாவீரர்கள் நேசித்த மக்களை விட அடயாளப்போட்டிதான் முக்கியம். இந்தியாவை விமர்சிப்பீர்கள் அங்கிருந்துதான் பேச்சாளர்களை அழைப்பீர்கள். இலங்கை அரசினூடாக உதவக்கூடாது ஆனால் இலங்கைக்கு பல்வேறு வகையில் அந்நியச் செலவாணியை ஈட்டிக்கொடுப்பீர்கள். எந்த ஒன்றுக்கும் அர்த்தம் கிடையாத அச்சுப் பிச்சில்லாத தேசிய உணர்சி.

சுகன் .நான் உங்களுடைய பல கருத்துக்களுடன் ஒத்துபோகிரவன் ..ஆனால் இந்த இடத்தில் அப்படி இருக்க முடியவில்லை..இதே போன்றுதான் BBC யும் எழுதியிருந்தது ..

"பல்லாயிரக்கணக்கான மேற்கத்தைய நாணயம்" பல்லாயிரம் என்றால் எவ்வளவு..50 , 100 , ஆயிரம்..அதை தாண்டினால் இலட்டச்கனக்கான ஆயிரம் மேற்கத்தைய நாணயம் என்று செய்தி போடுவார்களோ தெரியாது...இவர்களின் நோக்கம் என்ன..மாவீரர் தினம் கொண்டாட கூடாது..அம்சசவும் கும்சாவும் சொல்லுகிறமாதிரி..அவர்கள் பயங்கரவாதிகள், ஒரு நினைவும் வேண்டாம்..

சரி..அவர்களை நினைவு கூறுவது என்றால் என்னமாதிரி செய்யலாம்..எனக்கு UK பற்றி தெரியாது, கனடாவில என்னமாதிரி..கரும்பு இணைச்ச இளையோர் ஒன்றியமோ/ யாரோ ஒருவர் செய்த நிகழ்வை பார்த்தால், ஒரு/ இரண்டு பெரிய கலியாண வீட்டுக்கு வார சனம்..அவ்வளவு சனத்தையும் எங்கே ஒன்று கூட வைக்கலாம்? அந்தளவு பெரிய கோயில்/குளம்/ அரச இலவச/ மானிய மண்டபம் எனக்கு தெரிய இல்லை..ஹால் எடுக்கத்தான் வேண்டும்..எவளவு காசு ஹாலுக்கு? 35 - 40 ஆயிரம். பல்லாயிரம் என்பது இதிலேயே போய்விடும்..

மற்றது இந்த ஹால் விடயம் சாமத்திய வீட்டுக்கும்தானே நடக்குது..பிறந்தநாளுக்கும் நடக்குது..மற்றாக்களுக்கு சொல்லிகாட்டலம் 50 ஆயிரத்துக்கு ஹால் எடுத்தது என்று..அதவைவிட வேறுவழியை சொன்னால் அந்த காசை மிச்சம் பிடிக்கலாம்.

மற்றது பேச்சாளரை கூட்டிகொண்டுவாறது இந்தாவில இருந்து மானநட மயிலாட பார்க்கலாம் என்றால் என் இந்தர்ற்கு கூப்பிடக்கூடாது..

நான் நினைக்கிறன்..இப்படியான நிகழ்வுகள் தாயாக இணைப்பை வலுப்படுத்தும் என்று .

மற்றது அங்கே உள்ள போராளிகள், அவர்களில் பெற்றோர், மாவிரர்களின் பெற்றோர் தொடர்பாக..அவர்களின் நிலையை மேம்படுத்த எல்லோரும் ஏதாவது செய்யவேண்டும், அதற்காக 3 வது ஆள்..BBC போன்றவர்கள் விவரணம் சொல்லக்கூடாது, அவர்கள் துன்பப்படும் போது நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று...

நாங்கள் என்னவென்று செய்வது..(தனிப்பட்ட ரீதியில் அல்லது சிறு குழுவாக செய்வதை தவிர்த்து)? அரசாங்கள் ஒரு சதமும் ஒதுக்கவில்லை இந்தமுறை வரவு செலவு திட்டத்தில்..அதைபற்றி செல்ல இந்த ஆசாமிநாதன்களுக்கு துணிவில்லை/ நடுநிலையில்லை இந்தவகையில் இங்குள்ளவர்களை குறைசொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது...

அங்கே உள்ளவர்களுக்கு உதவுது என்பது தலையாய தேவை, அது இலகுவானதும் அல்ல..சிங்களவன் நல்லவன், வல்லவன் என்று சொல்லி நமோ நமோ பாடாமல் 5 சதம் கொடுக்க முடியாது..அதற்காக அப்படி செய்யாமல் அவர்களை சிறைகளில்/ திறந்தவெளி சிறைச்சாலைகளில் வைத்து அரசியல் செய்த நாங்கள் அரசியல் வாதிகளும் அல்ல..

இந்த இரட்டை பாதையை எவ்வாறு கொண்டு செல்லகிறோம் என்பதில்தான் எமது தலைவிதி நிர்ணஜிக்கப்படப்போகுது...

KP யை தலைவர் எந்தக்காலத்திலும் உள் எடுக்க வில்லை என்பதுதான் உண்மை... ! சரியாக நிகழ்வை பாருங்கள்... KP தான் இந்தியாவுடன் பேசினேன் என்பது KP யே தன் வாயால் சொன்ன வாக்கு மூலம்... KP யால் இந்தியாவுடன் பேச முடிந்தால் ஏன் உள் இருந்து புலித்தேவன் அண்ணையாலும், நடேசன் அண்ணையாலும் பேச முடியவில்லை எனும் கேள்வி எழுகிறதே...

காரணம் இந்தியா தெரிவு செய்த ஆள் தான் KP... ! வழமையாக KP க்கு மாதாந்த கொடுப்பனவு செய்யும் புலிகள் உறுப்பினர் ஊடாக KP புலிகளின் வலையமைப்பில் முக்கிய பொறுபிலும் தலைவருடன் நேரடியான தொடர்பில் இருந்த ஒருவரிடம் கேட்டதுக்கு , அவர் கிட்டத்தட்ட வேண்டாம் எண்று சொன்ன தலைவரை இத விட்டால் வேறு வளி இப்போதைக்கு இல்லை எண்ற வற்புறுத்தலுக்கு கொடுக்க பட்ட கடிதமே KP யை சர்வதேச தொடர்பாளராக பிரகடன படுத்திக்கொள்ள வசதியானது... KP யுடன் தலைவர் பேசினார் என்பது எல்லாம் அப்பட்டமான பொய்...

சம்பந்த பட்ட உறுப்பினர்கள் இண்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள்...

கிட்டத்தட்ட வேண்டாம் வேணும் என்றெல்லாம் முடிவெடுக்கக் கூடிய விசயம் இல்லை இது. எங்கட எண்ணங்களுக்கு ஒருவனின் செயல் ஒத்துவரவில்லையாயின் அனை றோ இலங்கை புலனாய்வாளன் துரோகி என்பது ஒன்றும் புதிதில்லை.. முழுசா மூன்று மாதங்க'ளுக்கு மேல் கே பி வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டிருக்கின்றர். இந்த மூன்று மாதத்தில் ஒருமுறையாவது புலிகள் தாங்கள் கே பி யை நியமிக்கவில்லை என்று அறிக்கை விட்டார்களா? இந்த அறிவிப்பானது ஒன்றும் நாலுபேருக்கு தெரிந்த விடயம் இல்லை. உலகிற்கே தெரிந்த விடயம். புலிகளின் குரல் உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட விடயம். இன்று சிங்களத்தின் பிடிக்குள் போனவுடன் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாற்றிப் பேசுகின்றீர்கள். உள்ளிருந்தவர்களுடன் பேசுவதற்கு இந்தியா முதலில் விரும்ப வேண்டுமே. எவரும் செவிசாய்க விரும்பாமல் தலமையை முடிப்பதில் குறியாய் இருக்கும் நெருக்கடியான நிலையில் கே பி சர்வதேச தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார்.

LTTE appoints Pathmanathan as head of international relations

[TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT]

The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday.

Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations.

Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter.

LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors.

http://www.tamilnet.com/art.html?artid=28224&catid=13

http://www.tamilguardian.com/article.asp?articleid=2128

இங்கே ஓர் யதார்த்தம் உள்ளது, அலசுங்கள்.. :rolleyes:

கே.பி.யின் உதவியுடன் கனேடிய வங்கியொன்றிலிருந்து 200 கோடி அமெரிக்க டொலர்களைக் கடன் பெற நடவடிக்கை.

நன்றி: லங்காநியூஸ்வெப்.

http://www.pathivu.com/news/14277/57/200/d,article_full.aspx

இது யதார்த்தமா அல்லது கதையா? 200கோடி அமெரிக்க டாலருக்கு எத்தனை பூச்சியங்கள் உள்ளன தெரியுமா? $20,000,000 இருபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை பெற இலங்கை அரசாங்கம் கேபியை பயன்படுத்தப்போகின்றது? :D கனடாவில் உங்கள் குஞ்சாத்தையா வங்கி நடாத்துகின்றார்? சர்வதேச காவல்துறையால் தேடப்படுகின்ற ஓர் குற்றவாளியை, பயங்கரவாதியை, ஆயுத கடத்தல் முகவரை நம்பி அவர் பெயரில் ஓர் கனேடிய வங்கி இருபது மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்குமா? இதை கனேடிய அரசாங்கமும், கனேடிய புலனாய்வுத்துறையும் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்குமா? திரும்பவும் யதார்த்தம் என்றுவிட்டு கதை விடுகின்றீர்கள் அகூதா. கிளிப்பிள்ளையாக யாரோ கூறுவதை இங்கு ஒப்பேற்றாமல் உங்கள் சொந்த மூளையை பாவித்து ஏதாவது கூறுங்கள்.

மாவீரர்களின் பெற்றோரை கவனிக்கவில்லை என்கிறீர்கள்.. நாங்கள் என்ன சொல்கிறோம் நாங்கள் எந்த இடையூறும் இல்லாத சூள்நிலையை உருவாக்குங்கள் நாங்கள் கவனிக்கிறோம் எண்று...

நாளாந்தம் மாவீரர் பெற்றோரையும், முன்னைய நாள் போராளிகளையும் துன்புறுத்தி போட்டு வெளியில் விடுவீர்கள் நாங்கள் அவர்களுக்கு மீண்டும் எல்லாத்தையும் கட்டிக்கொடுப்போம்... நீங்கள் அவர்களை சுறண்டி வீட்டி இருப்பது முதல் பெண்கள் வரைக்கும் கொண்டு செல்வீர்கள்... நாங்கள் மீண்டும் செய்வோம்...

மாவீரரின் பெற்றோரும் முன்னைய நாள் போராளிகளும் கிட்டத்தட்ட மற்றயவரின் கையை எதிர்ப்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறார்கள்... நாளாந்தம் அவர்களுக்கு பிச்சை போடுங்கள் என்பது தான் உங்களின் கோரிக்கையாக இருக்கிறது... அவர்கள் சொந்தக்கால்களில் நிற்பது தான் சிங்களத்தின் இறைமைக்கு இடைஞ்சலாக நிக்கின்றதே... நாளை அவர்கள் கொழுப்பேறி ஆயுதம் தூக்கி விடுவார்கள் என்பதை தான் முடிவாக வைத்து இருக்கிறார்களே...

நாங்கள் எங்களது மக்களுக்கு உணவை வழங்கி சிங்களவரின் விருப்பமான பிச்சைக்காறர்களாக பிரகடனப்படுத்த விரும்பவில்லை ... விளைநிலங்களை எடுத்து பயிர் செய்ய விதைகளையும் , நீர் இறைக்கும் இயந்திரங்களையும் பசளைகளையும் வழங்க விரும்புகின்றோம்...

அதுக்கான சூழலை உருவாக்குங்கள். என்பது தான் உங்களிடம் கேட்க்க படும் கேள்வி... அச்சுறுத்தலான சூழலில் விவசாயமும் செய்ய முடியாது நீரும் பாச்ச முடியாது பருவத்தே பயிரும் செய்ய முடியாது , அறுவடைக்கு ஆளும் பிடிக்க முடியாது...

வீடுகளில் இருந்து விரட்டி அடிக்க பட்டால் அவைகளை விட்டு விட்டுதான் ஓட வேண்டும்... இதுதான் அவர்களை வைத்திருக்கும் சூழல்...

ஆக எங்களுக்கு தேவை மக்களுக்கு பாதுக்காப்பான சூழல்... அதுக்கு தேவை தமிழர்களுக்கு இலங்கை மீதான அழுத்தம் கொடுக்கும் அளவுக்கான ஆதரவு...

இந்தியாவில் இருந்து ஆள் கூட்டி வருவதாக ஏதோ சொல்கிறீர்களே.... நாங்கள் இந்திய மக்களுக்கு எதிரிகள் எப்போதும் இல்லை... இந்திய ஆழும் ஆட்ச்சியாளரையே விமர்ச்சிக்கின்றோம்... இரண்டுக்கும் உங்களின் பகுத்தறிவு மூலம் வித்தியாசத்தை கண்டு கொள்ளுங்கள்...

இந்தியர்கள் யாரும் எங்களுக்காக பேச வருவதில்லை... தமிழர்களே பேச வருகிறார்கள்... ஏன் நாங்கள் சிங்கள ஆட்ச்சியாளரையும் தான் எதிர்க்கின்றோம் எங்களுக்காக நல்ல மனம் படைத்த சிங்களவரும் தான் பேசுகிறார்கள்...

முதலில் உங்களின் பார்வையை சரியாக்குங்கள்...

ஆக அங்க இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் அவர்களுக்கு நீங்கள் பிச்சை போடமாட்டீர்கள் சிங்களத்திடம் எடுங்கள் என்று சொல்கின்றீர்கள். இப்ப அதுதான் நடக்கிறது. நீங்கள் எங்க உழவியந்திரமும் வார்ட்டர் பம்மும் கொடுக்கிறீர்கள்? இந்தியனும் சிங்களவனும் தான் கொடுக்கின்றார்கள்.

உங்கள் தேசியச் சுதிக்கு பலிக்கடவாக்கப்பட்ட மக்களை பிச்சைக் காரராக பார்க்கும் உங்கள் மேட்டுக்குடித் திமிர் எங்கே மக்களை மக்களாக மதித்து அவர்கள் அபிவிருத்திக்கு உழவியந்திரங்கள் வழங்கும் அவர்கள் எங்கே? இப்ப கொடுக்கும் உழவியந்திரங்களால் மக்களுக்கு கொழுப்பு வைக்காதோ?

செயலாளர் நாயகமம் மாண்புமிகு அமைச்சரின் கூற்றை கேட்டாவது திருந்துங்கள்.

இது யதார்த்தமா அல்லது கதையா? 200கோடி அமெரிக்க டாலருக்கு எத்தனை பூச்சியங்கள் உள்ளன தெரியுமா? $20,000,000 இருபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை பெற இலங்கை அரசாங்கம் கேபியை பயன்படுத்தப்போகின்றது? :D .

நல்ல அலசல். ஆனால் நீங்கள் மேலால் மேய்ந்து சென்றுவிட்டீர்கள்.

அது எவ்வளவு காசு என்பதை விட "அவரை வைத்து பணம் எங்கு என்றாலும் கறப்பதே" நோக்கம் என்பது தான் உள் செய்தி.

சர்வதேச காவல்துறையால் தேடப்படுகின்ற ஓர் குற்றவாளியை, பயங்கரவாதியை, ஆயுத கடத்தல் முகவரை நம்பி அவர் பெயரில் ஓர் கனேடிய வங்கி இருபது மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்குமா? இதை கனேடிய அரசாங்கமும், கனேடிய புலனாய்வுத்துறையும் பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்குமா? திரும்பவும் யதார்த்தம் என்றுவிட்டு கதை விடுகின்றீர்கள் அகூதா. கிளிப்பிள்ளையாக யாரோ கூறுவதை இங்கு ஒப்பேற்றாமல் உங்கள் சொந்த மூளையை பாவித்து ஏதாவது கூறுங்கள்.

கீழ் இதற்கு பதில் ஏற்கனேவே தந்து உள்ளீர்கள் :rolleyes:

"இன்றுதான் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிட்டேன். வலைத்தளம் ஊடாக நன்கொடை அளிக்கக்கூடிய உ+ம்: paypal வசதியை ஏற்படுத்தினால் சமயம் கிடைக்கும்போது நம்மாலும் ஓர் சிறிய உதவியை வழங்கமுடியும்."

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நெல்லையன்.. இன்று சுகன்.. அவ்வளவுதான்..! :lol::D:rolleyes:

"இன்றுதான் குறிப்பிட்ட நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிட்டேன். வலைத்தளம் ஊடாக நன்கொடை அளிக்கக்கூடிய உ+ம்: paypal வசதியை ஏற்படுத்தினால் சமயம் கிடைக்கும்போது நம்மாலும் ஓர் சிறிய உதவியை வழங்கமுடியும்."

நான் என்ன கனடாவில் வங்கியா நடத்துகிறன்? ஒன்றிற்கு ஒன்று பொருத்தமில்லாமல் பதில் கூறுகின்றீர்கள். நான் மாதத்திற்கு ஐந்தோ பத்து டாலர் நன்கொடை கொடுத்தால் அது 20மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு சமம்? அது சரி... அப்படியே உங்கள் பார்வையில் இப்போ சாந்தி அக்கா, சாத்திரி அண்ணாவின் நேசக்கரம் அமைப்பில் 100கோடி யூரோக்கள் உள்ளன? அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் நேசக்கரம் முழித்துக்கொண்டு உள்ளது? :rolleyes:

ஆக அங்க இருக்கும் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் அவர்களுக்கு நீங்கள் பிச்சை போடமாட்டீர்கள் சிங்களத்திடம் எடுங்கள் என்று சொல்கின்றீர்கள். இப்ப அதுதான் நடக்கிறது. நீங்கள் எங்க உழவியந்திரமும் வார்ட்டர் பம்மும் கொடுக்கிறீர்கள்? இந்தியனும் சிங்களவனும் தான் கொடுக்கின்றார்கள்.

உங்கள் தேசியச் சுதிக்கு பலிக்கடவாக்கப்பட்ட மக்களை பிச்சைக் காரராக பார்க்கும் உங்கள் மேட்டுக்குடித் திமிர் எங்கே மக்களை மக்களாக மதித்து அவர்கள் அபிவிருத்திக்கு உழவியந்திரங்கள் வழங்கும் அவர்கள் எங்கே? இப்ப கொடுக்கும் உழவியந்திரங்களால் மக்களுக்கு கொழுப்பு வைக்காதோ?

செயலாளர் நாயகமம் மாண்புமிகு அமைச்சரின் கூற்றை கேட்டாவது திருந்துங்கள்.

சமத்துவம் பேசும் உங்களுக்கு மாவோ என்ன செய்தார் என்பது புரியாமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை...

இருக்கிற அடிப்படை பிரச்சினை தீருங்கள் நடக்க வேண்டிதை செய்ய இலகுவாக இருக்கும் எனும் மூல கருத்தை புரிய முடியவில்லை எனும் போது மேலதிகமாக உங்களுக்கு என்னதை புரிய வைக்க முடியும்...

அந்திவாரமே இல்லாமல் இருக்கும் வீட்டுக்கு கூரை போட நிக்கிறதுக்கு பெயர் உதவி இல்லை... முதலில் மக்களின் உடமைகளை பாதுகாக்க கூடிய சூழலை உருவாக்க வக்கிலாமல் நிண்டு கொண்டு காசை கொட்டுத்து எந்த தீர்வும் இல்லை... அது முடிவும் நில்லாத நிலை தான்...

எனக்கு உங்களை விட அதிகமான உறவுகள் வன்னியை சேர்ந்தவர்கள்... அவர்கள் எங்களுக்கு பொருள் தேடி தரும் அளவுக்கு கடுமையான உழைப்பாளிகள் வசதியானவர்கள் ( அனேக குடும்பங்கள் போராளி, மாவீரர் குடும்பம்)... அவர்கள் இண்று வன்னியில் எங்களால் வாழமுடியாது எண்று வெளியேறி வறணியிலும் , மிருசுவிலிலும் ,( எனக்கு சொந்தமாக இருந்த காணிகள் உட்பட) குடியேறி இருக்கிறார்கள்... ! அது அவர்களின் நிரந்தரமான வாழ்விடம் இல்லை... அவர்களுக்கு வீடுகள் கட்ட காசும் இருக்கும் வயல்களை செய்ய அனுமதியும் நெல்லுக்கும் காசும் கொடுக்கலாம்... ஆனால் இது அவர்களி நிரந்தர வாழ்வு இல்லை... அவர்களின் எதிர்காலம் இண்டைக்கும் கேள்விக்குறியே...

இப்படி இருக்கும் எதையும் புரிந்து கொள்ள முயலாமல் உங்களால் காசை கொட்டு இங்கை ஒண்றையும் செய்யாதே எனும் கோசங்கள் மட்டும் தான் போட முடிகிறது... இது எங்களுக்கை புதிசும் இல்லை... இந்த ஒலிகளை நாங்கள் கடந்த 30 வருசத்துக்கும் மேலாக கேட்டுக்கொண்டு தான் இருக்கிறம்... ஆனால் உங்களாலை ஒரு துரும்பை கூட நகர்த்த முடியவில்லை... ஆதரவாளர்களை சேர்க்கவும் முடியவில்லை... அது தாயகத்திலையும் சேர்த்து.. !

உங்கட மாண்பு மிகு அமைச்சை எத்தினை பெண் பிள்ளைகளுக்கு பிள்ளையள் குடுத்து உதவினவர் என்பதும் எங்களுக்கு தெரியும்... அதனாலை அவரை அமத்த சொல்லுறது நல்லது..

Edited by தயா

நான் என்ன கனடாவில் வங்கியா நடத்துகிறன்? ஒன்றிற்கு ஒன்று பொருத்தமில்லாமல் பதில் கூறுகின்றீர்கள். நான் மாதத்திற்கு ஐந்தோ பத்து டாலர் நன்கொடை கொடுத்தால் அது 20மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கு சமம்? :rolleyes:

சர்வதேச காவல்துறையால் தேடப்படுகின்ற ஓர் குற்றவாளியை, பயங்கரவாதியை, ஆயுத கடத்தல் முகவரை நம்பி அவர் பெயரில் ஓர் கனேடிய வங்கி இருபது மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்குமா? - கொடுக்காது.

எனவே அதே சட்டத்திற்கு அமைய தனி நபர் கொடுக்கலாமா?

அவருக்கு எப்படி ஒரு வங்கி கனடாவில் கொடுப்பது சாத்தியம் இல்லையோ அதே மாதிரித்தான் தனி நபர் கொடுப்பதும் சட்டத்திற்கு முரணானது.

Edited by akootha

அன்று நெல்லையன்.. இன்று சுகன்.. அவ்வளவுதான்..! :lol::D:rolleyes:

அப்ப என்ன என்னை திரும்ப போகச் சொல்லுகிறீர்களோ???36_1_30.gif

... நல்ல சான்ஸை தப்ப விட்டு விட்டேன், கேபியின் அசிடென்ட் செக்கட்டறி ஜெனரல் போஸ்ட் கிடைத்திருக்கும்!!!! .... வீணாக பாண்டருடன் ..........!!!!!!!!!!! ... பிறீ காலிடே எல்லாம் வீணாகி விட்டது!!! ... கரும்போ/சுகன் விடாதையுங்கோ, உதுதான் சந்தர்ப்பம் கேபியின் இதயத்தில் புகுருவதற்கு!!!!!! ... எழுத்தாலர் மாநாட்டுக்கு போகும் போது கேபியையும் கட்டி அணைத்து வரலாம்!!! .... 15_3_39.gif

நல்ல அலசல். ஆனால் நீங்கள் மேலால் மேய்ந்து சென்றுவிட்டீர்கள். அது எவ்வளவு காசு என்பதை விட "அவரை வைத்து பணம் எங்கு என்றாலும் கறப்பதே" நோக்கம் என்பது தான் உள் செய்தி.

செய்தியிலும் வெளிச்செய்தி, உட்செய்தி, நடுச்செய்தி என்று உபபிரிவுகள் உள்ளனவோ? நான் மேலே என்னால் முடியும்போது ஏதாவது உதவிசெய்யமுடியும் என்று கூறியது கேபியிற்காக அல்ல, குறிப்பிட்ட நிறுவனம் மூலம் செய்யப்படுகின்ற சேவைகளிற்காக. தமது சேவைத்திட்டங்களை அவரகள் நன்றாக செய்யும்போது தொடர்ந்து பங்களிப்பு வழங்குவேன் - அதாவது நேசக்கரம் போல். இங்கு உங்கள் பிரச்சனைகள் தொடர்ந்தும் கேபியையே சுற்றிச்சுற்றி வருகின்றன. இங்கு உள்குத்தல் யாதெனில் கேபியின் பெயர் வெளியில் வரக்கூடாது, அவர் பிரபலம் அடையக்கூடாது என்பதே. ஏற்கனவே கூறிவிட்டேன் கடுகு செல்லும்விதம் ஆராய்வார், பூசணிக்காய் மறையும் விதம் தெரியாது. :rolleyes:

இங்கு உங்கள் பிரச்சனைகள் தொடர்ந்தும் கேபியையே சுற்றிச்சுற்றி வருகின்றன. இங்கு உள்குத்தல் யாதெனில் கேபியின் பெயர் வெளியில் வரக்கூடாது, அவர் பிரபலம் அடையக்கூடாது என்பதே. ஏற்கனவே கூறிவிட்டேன் கடுகு செல்லும்விதம் ஆராய்வார், பூசணிக்காய் மறையும் விதம் தெரியாது. :rolleyes:

சரி அப்படி கடன் எடுக்க வசதியானவர், ஒரு அரசுடன் இணைந்து வேலைசெய்பவர், அரசு என்ற பலத்துடன் நிற்பவர், ஏன் தனிப்பட்ட மக்களிடம் உதவி கேட்க வேண்டும்?

Edited by akootha

கிட்டத்தட்ட வேண்டாம் வேணும் என்றெல்லாம் முடிவெடுக்கக் கூடிய விசயம் இல்லை இது. எங்கட எண்ணங்களுக்கு ஒருவனின் செயல் ஒத்துவரவில்லையாயின் அனை றோ இலங்கை புலனாய்வாளன் துரோகி என்பது ஒன்றும் புதிதில்லை.. முழுசா மூன்று மாதங்க'ளுக்கு மேல் கே பி வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பாக செயற்பட்டிருக்கின்றர். இந்த மூன்று மாதத்தில் ஒருமுறையாவது புலிகள் தாங்கள் கே பி யை நியமிக்கவில்லை என்று அறிக்கை விட்டார்களா? இந்த அறிவிப்பானது ஒன்றும் நாலுபேருக்கு தெரிந்த விடயம் இல்லை. உலகிற்கே தெரிந்த விடயம். புலிகளின் குரல் உட்பட அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட விடயம். இன்று சிங்களத்தின் பிடிக்குள் போனவுடன் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மாற்றிப் பேசுகின்றீர்கள். உள்ளிருந்தவர்களுடன் பேசுவதற்கு இந்தியா முதலில் விரும்ப வேண்டுமே. எவரும் செவிசாய்க விரும்பாமல் தலமையை முடிப்பதில் குறியாய் இருக்கும் நெருக்கடியான நிலையில் கே பி சர்வதேச தொடர்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதாவது KP இந்தியாவால் வலை வீசி தேடப்படாத ஒருவர் எண்டு சொல்ல வாறியளோ...?? அப்படி தேடப்படாத ஒருவரால் தான் இந்தியாவுடனும் இந்திய மாண்பு மிகு அமைச்சர், பாராளுமண்ற உறுப்பினர்களோடு பேச முடிந்தது ஆக்கும்...

தேடப்பட்ட ஒருவருடன் இந்தியாவால் எப்படி பேச்சுவார்த்தை செய்ய முடிந்தது என்பதை தங்களால் விவரிக்க முடியுமா...??

இது KP யின் பேட்டி DBSJ உடனானது...

Q: What do you mean? What did Vaiko do or not do in this matter?

A: While I was trying to bring about a ceaefire on one side the political commissar Nadesan (Balasingham Mahendran) was also trying for one. At one stage pro-LTTE sympathisers in the DMK (Dravida Munnetra Kazhagham) like chief minister Karunanidhi’s daughter and Rajya Sabha MP, Kanimozhi along with the Catholic priest Fr. Jegath Gaspar Raj had been negotiating with Central govt minister P.Chidambaram about a possible ceasefire

With Indian Parliamentary elections being held and AIADMK Leader Jayalalitha taking up a pro-LTTE stance the DMK-Congress combine was getting worried about losing. So Chidambaram came up with an idea. He wanted the LTTE to issue a unilateral statement with two main points. One was to agree to silence arms and surrender them in due course. The other was to accept a political settlement as an alternative to Tamil Eelam.

What I heard was that Chidambaram himself had “unofficially” drafted the statement for the LTTE to release under its name. The guarantee given was that New Delhi would exert pressure on Colombo when the statement was released and bring about a ceasefire pending negotiations.

Though Nadesan had been advised not to leak details of the move to people like Nedumaran and Vaiko, he had at one point of time consulted K. Mahendran the Tamil Nadu legislator from CPI(Marxist). The CPM was an election ally with Vaiko’s MDMK in the AIADMK led alliance. Mahendran had leaked details of the plan to Vaiko.

Both were worried that the Congress and DMK would get the credit for a ceasefire and do well in the elections. So they wanted to sabotage it. Vaiko then got angry at the LTTE and warned Nadesan that if the tigers opted for an alternative to Tamil Eelam then the MDMK and other Tamil Nadu parties supportive of the LTTE would permanently withdraw their support to the LTTE.

Nadesan was given the false hope that the AIADMK led alliance will sweep the seats in Tamil Nadu and the BJP will form the govt in New Delhi. Then pressure could be put on Colombo for a ceasefire. Any ceasefire before elections could help the DMK –Congress.

So this man Nadesan abandoned the idea of releasing a statement. Chidambaram could do nothing. All because of Vaiko. They were so selfish that they prevented a possible ceasefire thinking they will do well at the polls.

கடைசியா KP ஒண்டிலையும் சம்பந்த படாமல் சும்மா இருந்தவர் ... கேள்விப்பட்ட விசயத்தை சொன்னவர் எண்டு சொல்லிப்போடாதேங்கோ....!

நடேசன் அண்ணையின் சரண் அடைதல் கூட இந்திய திட்டம் எண்டது மட்டும் உறுதி... அதை KP இண்டு வரை அறிவிக்கவில்லை..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன என்னை திரும்ப போகச் சொல்லுகிறீர்களோ???36_1_30.gif

நெல்லை.. நான் அப்பிடிச் சொல்லுவனா? :rolleyes: குழம்புபவர்களுக்கு ஒரு செய்தியா இருக்கட்டுமே எண்டு சொன்னன்..! :D

கரும்போ/சுகன் விடாதையுங்கோ, உதுதான் சந்தர்ப்பம் கேபியின் இதயத்தில் புகுருவதற்கு!!!!!! ... எழுத்தாளர் மாநாட்டுக்கு போகும் போது கேபியையும் கட்டி அணைத்து வரலாம்!!! ....

நீங்கள் புலிவாலை பிடித்து புலிகளின் இதயத்தில் குடிகொள்ள முயற்சிப்பதுபோல் என்னையும் நினைக்கின்றீர்கள் போல. ஆட்களின் வாலை பிடித்து முன்னுக்கு வருவதென்றால் இங்கு நான் கருத்துக்களத்தில் இருந்து விவாதம் செய்துகொண்டிருக்க மாட்டேன்.

சுகன் .நான் உங்களுடைய பல கருத்துக்களுடன் ஒத்துபோகிரவன் ..ஆனால் இந்த இடத்தில் அப்படி இருக்க முடியவில்லை..இதே போன்றுதான் BBC யும் எழுதியிருந்தது ..

"பல்லாயிரக்கணக்கான மேற்கத்தைய நாணயம்" பல்லாயிரம் என்றால் எவ்வளவு..50 , 100 , ஆயிரம்..அதை தாண்டினால் இலட்டச்கனக்கான ஆயிரம் மேற்கத்தைய நாணயம் என்று செய்தி போடுவார்களோ தெரியாது...இவர்களின் நோக்கம் என்ன..மாவீரர் தினம் கொண்டாட கூடாது..அம்சசவும் கும்சாவும் சொல்லுகிறமாதிரி..அவர்கள் பயங்கரவாதிகள், ஒரு நினைவும் வேண்டாம்..

சரி..அவர்களை நினைவு கூறுவது என்றால் என்னமாதிரி செய்யலாம்..எனக்கு UK பற்றி தெரியாது, கனடாவில என்னமாதிரி..கரும்பு இணைச்ச இளையோர் ஒன்றியமோ/ யாரோ ஒருவர் செய்த நிகழ்வை பார்த்தால், ஒரு/ இரண்டு பெரிய கலியாண வீட்டுக்கு வார சனம்..அவ்வளவு சனத்தையும் எங்கே ஒன்று கூட வைக்கலாம்? அந்தளவு பெரிய கோயில்/குளம்/ அரச இலவச/ மானிய மண்டபம் எனக்கு தெரிய இல்லை..ஹால் எடுக்கத்தான் வேண்டும்..எவளவு காசு ஹாலுக்கு? 35 - 40 ஆயிரம். பல்லாயிரம் என்பது இதிலேயே போய்விடும்..

மற்றது இந்த ஹால் விடயம் சாமத்திய வீட்டுக்கும்தானே நடக்குது..பிறந்தநாளுக்கும் நடக்குது..மற்றாக்களுக்கு சொல்லிகாட்டலம் 50 ஆயிரத்துக்கு ஹால் எடுத்தது என்று..அதவைவிட வேறுவழியை சொன்னால் அந்த காசை மிச்சம் பிடிக்கலாம்.

மற்றது பேச்சாளரை கூட்டிகொண்டுவாறது இந்தாவில இருந்து மானநட மயிலாட பார்க்கலாம் என்றால் என் இந்தர்ற்கு கூப்பிடக்கூடாது..

நான் நினைக்கிறன்..இப்படியான நிகழ்வுகள் தாயாக இணைப்பை வலுப்படுத்தும் என்று .

மற்றது அங்கே உள்ள போராளிகள், அவர்களில் பெற்றோர், மாவிரர்களின் பெற்றோர் தொடர்பாக..அவர்களின் நிலையை மேம்படுத்த எல்லோரும் ஏதாவது செய்யவேண்டும், அதற்காக 3 வது ஆள்..BBC போன்றவர்கள் விவரணம் சொல்லக்கூடாது, அவர்கள் துன்பப்படும் போது நாங்கள் ஏதும் செய்யவில்லை என்று...

நாங்கள் என்னவென்று செய்வது..(தனிப்பட்ட ரீதியில் அல்லது சிறு குழுவாக செய்வதை தவிர்த்து)? அரசாங்கள் ஒரு சதமும் ஒதுக்கவில்லை இந்தமுறை வரவு செலவு திட்டத்தில்..அதைபற்றி செல்ல இந்த ஆசாமிநாதன்களுக்கு துணிவில்லை/ நடுநிலையில்லை இந்தவகையில் இங்குள்ளவர்களை குறைசொல்ல அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது...

அங்கே உள்ளவர்களுக்கு உதவுது என்பது தலையாய தேவை, அது இலகுவானதும் அல்ல..சிங்களவன் நல்லவன், வல்லவன் என்று சொல்லி நமோ நமோ பாடாமல் 5 சதம் கொடுக்க முடியாது..அதற்காக அப்படி செய்யாமல் அவர்களை சிறைகளில்/ திறந்தவெளி சிறைச்சாலைகளில் வைத்து அரசியல் செய்த நாங்கள் அரசியல் வாதிகளும் அல்ல..

இந்த இரட்டை பாதையை எவ்வாறு கொண்டு செல்லகிறோம் என்பதில்தான் எமது தலைவிதி நிர்ணஜிக்கப்படப்போகுது...

மாவீரர் மக்களுக்கா தமது வாழ்வை தியாகம் செய்தவர்கள் நீங்கள் உங்களுக்காக அவர்களை தூக்கிப் பிடிக்கின்றீர்கள். அவர்கள் தியாகத்தை மதித்தால் மாவீரர் தினத்தை முன்னிட்டு லண்டனில் இருந்து இவ்வளவு மக்களுக்கு புனர்வாழ்வுக்கு உதவி கனடாவில் இருந்து, இப்படித்தான் அது நடக்கவேண்டும். அதை விடுத்து வருடத்தில ஒரு நாள் ஓட்டுமாட்டுப் பண்ணி மண்டபம் புக்பண்ணி தமிழ்நாட்டில இருந்து நாலஞ்சு எமோசனல் கேசுகளை கூப்பிட்டு மூச்சு முட்ட கத்திப்போட்டு இடைக்கிட மாவீரர் பெயரால தாம் தூம் எண்டு பரதநாட்டியமும் ஆடிப்போட்டு தேசியக் கடமை முடிஞ்சுதெண்டு பேவது எந்தவிதத்தில் நினைவு கூரல்? இத்தனை வருடத்தில் இறந்த உறவுகளை நினைவு கூர எண்டு ஒரு மண்டபம் சட்டரீதியாக அமைக்க முடிந்துதா? அறிவு ரீதியான வழிகாட்டல் என்று எதுவும் இல்லை உணர்ச்சி அரசியலில் மட்டுமே நடக்கின்றது. இதை விமர்சிக்கின்றோம்.

மானாட மயிலாடவுக்கு கூப்பிட்டால் மாவீரர் தினத்துக்கு கூப்பிடக் கூடாதா என்று கேட்கின்றீர்கள். மாவீரர் தினத்தையொட்டி மானா மயிலாடத்தான் நடக்கின்றது.

மாவீரர்கள் பயங்கரவாதிகள் இல்லை போரளிகள் என்பதை சட்டரீதியாக வென்று அவர்களை வணங்க ஒரு மண்டபத்தை அமைக்க அறவுரீதியாக போராடி கெளரவமாக மவீரர் தினத்தை நினைவுகூர்ந்து தாயக மக்களுக்கு உதவுவதில் எந்த விமர்சனமும் இல்லை. ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு கடமை முடிந்ததென்று எழுந்து செல்வதில் உடன்பாடில்லை.

அப்ப என்ன என்னை திரும்ப போகச் சொல்லுகிறீர்களோ???36_1_30.gif

... நல்ல சான்ஸை தப்ப விட்டு விட்டேன், கேபியின் அசிடென்ட் செக்கட்டறி ஜெனரல் போஸ்ட் கிடைத்திருக்கும்!!!! .... வீணாக பாண்டருடன் ..........!!!!!!!!!!! ... பிறீ காலிடே எல்லாம் வீணாகி விட்டது!!! ... கரும்போ/சுகன் விடாதையுங்கோ, உதுதான் சந்தர்ப்பம் கேபியின் இதயத்தில் புகுருவதற்கு!!!!!! ... எழுத்தாலர் மாநாட்டுக்கு போகும் போது கேபியையும் கட்டி அணைத்து வரலாம்!!! .... 15_3_39.gif

நம்பிக்கை தானே வாழ்க்கை... :rolleyes:

சர்வதேச காவல்துறையால் தேடப்படுகின்ற ஓர் குற்றவாளியை, பயங்கரவாதியை, ஆயுத கடத்தல் முகவரை நம்பி அவர் பெயரில் ஓர் கனேடிய வங்கி இருபது மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக கொடுக்குமா? - கொடுக்காது. எனவே அதே சட்டத்திற்கு அமைய தனி நபர் கொடுக்கலாமா? அவருக்கு எப்படி ஒரு வங்கி கனடாவில் கொடுப்பது சாத்தியம் இல்லையோ அதே மாதிரித்தான் தனி நபர் கொடுப்பதும் சட்டத்திற்கு முரணானது.

இங்கு நான் கேபியிற்கு பணம் கொடுக்கவில்லையே. ஓர் சேவை நிறுவனத்திற்கு வழங்குகின்றேன். நான் தாயகத்தில் வாழ்ந்தமையால் அதை செய்கின்றேன். கனேடிய வங்கி ஓர் தனிநபர் அல்லவே. ஓர் தனிநபரிற்கும், ஓர் நிறுவனத்திற்குமான வித்தியாசம்கூட உங்களுக்கு தெரியவில்லை. :D

இனி கூறுவீர்கள் கனேடிய வங்கியும் கேபியிற்கு கொடுக்கவில்லை நிறுவனத்திற்குத்தானே கொடுக்கின்றார்கள் என்று. அப்படிப்பார்க்கும்போது முதலாவது விடயம் நீங்கள் இணைத்த செய்தியே தவறு. நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு கனேடிய வங்கியிடம் ஏன் கேபியின் பெயர் அல்லது செல்வாக்கு பயன்படுத்தப்படவேண்டும்? உங்கள் செய்தியின் அடிப்படையே தவறு. அல்வா தீத்துவதில் தவறு ஏற்பட்டுள்ளது அதை முதலில் திருத்தம் செய்யுங்கள். அடுத்ததடவை கிளிப்பிள்ளையாக ஒப்புவிக்காமல் common senseஐ பாவித்து பதில் கருத்து வையுங்கள். :rolleyes:

இங்கு நான் கேபியிற்கு பணம் கொடுக்கவில்லையே. ஓர் சேவை நிறுவனத்திற்கு வழங்குகின்றேன். நான் தாயகத்தில் வாழ்ந்தமையால் அதை செய்கின்றேன். கனேடிய வங்கி ஓர் தனிநபர் அல்லவே. ஓர் தனிநபரிற்கும், ஓர் நிறுவனத்திற்குமான வித்தியாசம்கூட உங்களுக்கு தெரியவில்லை. :rolleyes:

அந்த அமைப்புக்கு அவர்தான் "எல்லாமே" என பதியப்படுள்ளது, பார்த்துகொள்ளுங்கள். வீணாக வம்பை விலைக்கு வாங்காதீர்கள்.

http://www.nerdo.lk/?page_id=764

சரி அப்படி கடன் எடுக்க வசதியானவர், ஒரு அரசுடன் இணைந்து வேலைசெய்பவர், அரசு என்ற பலத்துடன் நிற்பவர், ஏன் தனிப்பட்ட மக்களிடம் உதவி கேட்க வேண்டும்?

அதை கேபியிடம் கேளுங்கள். இங்கு எனது main focusகேபி அல்ல, ஓர் சேவை நிறுவனம். ஆதரவற்ற குழந்தைகள், மக்களிற்கு உதவி கேட்கின்றார்கள். ஏதோ ஐந்தோ பத்து டாலர் உதவித்தொகை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு செல்கின்றது. இதனால் பலர் தாம் தீம் என்று நிலத்துக்கும் முகட்டுக்குமாக குதிக்கின்றார்கள். தமக்கு மட்டும் அறிவு உள்ளதாகவும், தம்மை ஏமாற்றமுடியாது என்றும் ஆனால் வெளிநாட்டில் உள்ள அப்பாவி மக்கள் விபரம் தெரியாமல் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணம் கொடுத்து ஏமாறப்போகின்றார்கள் என்றும் இந்த அறிவாளிகள் நினைக்கின்றார்கள். :rolleyes:

அந்த அமைப்புக்கு அவர்தான் "எல்லாமே" என பதியப்படுள்ளது, பார்த்துகொள்ளுங்கள். வீணாக வம்பை விலைக்கு வாங்காதீர்கள். http://www.nerdo.lk/?page_id=764

இது சிறீ லங்கா அரசின் பிரச்சனை, எனது பிரச்சனை அல்ல. அவர்கள் மொழியில் ஓர் முன்னாள் பயங்கரவாதிக்கு, ஆயுத கடத்தல் முகவரிற்கு சேவை நிறுவனம் ஒன்றில் செயலாளராக சட்டரீதியாக பதிவுசெய்து இயங்க வைப்பது அவர்கள் பிரச்சனை. இங்கு விடயம் யாதெனில் குறிப்பிட்ட நிறுவனம் சட்டரீதியாக இலங்கையில் இயங்குகின்றது, சட்டவிரோதமாக இயங்கவில்லை. இங்கு கனடாவில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சமூக சேவைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். சமூக சேவையில் ஈடுபடும் ஓருவரை அவர் ஓர் குற்றவாளி என்கின்ற காரணத்திற்காக அவரது சேவையை அவர் செய்யமுடியாதவாறு நாம் தடுக்க முடியாது. அப்படிச்செய்வோனாமால் அது சட்டரீதியாக குற்றம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.