Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா இராணுவத்தின் 53 ஆவது படையணியே இசைப்பிரியாவை படுகொலை செய்தது

Featured Replies

வன்னியில் இயங்கிவந்த ஊடகவியலாளர் சோபா (27) என அழைக்கப்படும் இசைப்பிரியாவை சிறீலங்கா இராணுவத்தின் 53 ஆவது படையணியே படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

முல்லைத்தீவில் நடைபெற்ற இறுதிக்கட்டச் சமரில் லெப். கேணல் இசைப்பிரியா கொல்லப்பட்டதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கடந்த வருடம் மே மாதம் தெரிவித்திருந்தது.

ஆனால் சரணடைந்த இசைப்பிரியாவை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 53 ஆவது படையணியின் படையினர் பின்னர் கைகள் கட்டப்பட்ட நிலையில் தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர்.

சிறீலங்கா அரசின் இந்த திட்டமிட்ட படுகொலையானது கடந்த மாதம் 30 ஆம் நாள் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் பேஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளி ஆவணத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

kamal Kunaratnaபல தமிழ் இளைஞர்களையும், பெண்களையும் சாதாரணமாக சுட்டுப் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கியிருந்த அந்தக் காணொளியில், சிப்பாய்களின் உரையாடல்களும் பதிவாகியுள்ளன.

அந்த உரையாடல்களின் மூலம் பெண்கள் கொல்லப்படுவதற்கு முன்னர் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டது தெளிவாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவில் பணியாற்றிய இசைப்பிரியா, ஒளிவீச்சு சஞ்சிகையிலும் பணியாற்றியிருந்தார். ஆனால் அவர் இறுதி நாள்வரை ஆயுதம் ஏந்திப்போராடவில்லை என தமிழ்நெற் இணையத்தளத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அகல் என்ற பெயருடைய சோபாவின் 6 மாதக் குழந்தையும் சிறீலங்கா படையினரின் தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://meenakam.com/2010/12/04/15355.html

...

Edited by Nellaiyan

இப்படியான செய்திகளெல்லாம் .. கரும்பு. செம்பு, ஈயம், பித்தளைகளின் ... கண்களில் படுவதில்லையோ??? ... பாவம். அது, எழுத்தாளர் மாநாடு என்று ஒரு ஓசி காலிடே அடிப்பம் என்று பார்த்தால் ... இங்கு மண்ணை தூவுகிறாங்கள்!!23_33_16.gif

ஓர் கருத்தாடலில் பங்குபற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க முடியாதவர்கள் இப்படித்தான் சம்பந்தம் இல்லாமல் எழுதி, தமது கற்பனைக்கு ஏற்றவகையில் ஒருவனை மலினப்படுத்தி மகிழ்கின்றார்கள். :rolleyes:

ஓர் கருத்தாடலில் பங்குபற்றி தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க முடியாதவர்கள் இப்படித்தான் சம்பந்தம் இல்லாமல் எழுதி, தமது கற்பனைக்கு ஏற்றவகையில் ஒருவனை மலினப்படுத்தி மகிழ்கின்றார்கள். :rolleyes:

ம்ம்ம்ம்ம் ... பெரிய கருத்தாடல்காரர்கள்image012f.gif

பெரிய கருத்தாடல்காரர்கள் என்று யார் கூறினார்கள்? இங்கு செய்தியில் ஓர் இளம் ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக உள்ளது. கரும்பையும், செம்மையும் நக்கல் அடிக்கும் நேரத்திற்கு இந்தப்படுகொலை பற்றி நான்கு வசனம் எழுதி போர்க்குற்றங்களை விசாரிக்கும் பகுதிகளிற்கு அனுப்பலாமே? அல்லது இது சம்பந்தமாக எடுக்கபடவேண்டிய செயற்பாடுகள் பற்றி ஏதாவது ஆராயலாமே?

kili.jpg

பாவம், இவர்களெல்லாம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ... மகிந்தவுக்கு ஆதரவளிக்க ... அதுவும் ஆங்கிலத்தில் எழுதி வந்து ... பிடிக்கிறார்கள்?????36_1_30.gif

...

Presidential styles of

Mahinda Rajapaksa

Reference style- His Excellency President Mahinda Rajapaksa

His Excellency Mahinda Rajapaksa, President of Sri Lanka

Spoken style- President Rajapaksa

http://en.wikipedia.org/wiki/Mahinda_Rajapaksa

53 வது படையணி என்பது உண்மையானது அல்ல.... நடவடிக்கை படையணி 53 வது படையணியில் இருக்கவில்லை..

571 ( D)வது படைப்பிரிவு.... மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57 வது படைப்பிரிவின் ஒரு பிரிகேட் 571 G.V. Ravipriya தலைமையிலான( TF-2 , TF- 3 TF-6 போண்ற ) நடவடிக்கை படைப்பிரிவினர் என்பதுதான் சரியானது.... பனங்காமம் முதல் கிளிநொச்சி வரைக்கும் கடுமையாக அடிவாங்கிய படைப்பிரிவு பின்னர் குறுகிய நடவடிக்கை படையணி பற்றாலியன்களாக்க பட்டு பிரிகேட்டாக செயற்பட்டது... அதில் அடங்கி இருந்த சிறப்பு படையினரின் சீருடை அணிந்தவர்களே காணொளிகளில் காணப்பட்டனர்...

உதாரணத்துக்கு...

Sri Lanka Army Special Forces Regiment

14536118428273499114659.jpg

3360380531_1b2519791d.jpg

மட்டக்களப்பு வாகரையில் ஜனாதிபதி இவர்களை சந்தித்த போது.. இதில் இருப்பவன் ஒருவனின் உருமறைப்பு ஆடையை அணிந்து இருப்பதை காணலாம்...

SL%2BArmy.jpg

Edited by தயா

53 வது படையணி என்பது உண்மையானது அல்ல.... நடவடிக்கை படையணி 53 வது படையணியில் இருக்கவில்லை..

571 ( D)வது படைப்பிரிவு.... மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57 வது படைப்பிரிவின் ஒரு பிரிகேட் 571 G.V. Ravipriya தலைமையிலான( TF-2 , TF- 3 TF-6 போண்ற ) நடவடிக்கை படைப்பிரிவினர் என்பதுதான் சரியானது.... பனங்காமம் முதல் கிளிநொச்சி வரைக்கும் கடுமையாக அடிவாங்கிய படைப்பிரிவு பின்னர் குறுகிய நடவடிக்கை படையணி பற்றாலியன்களாக்க பட்டு பிரிகேட்டாக செயற்பட்டது... அதில் அடங்கி இருந்த சிறப்பு படையினரின் சீருடை அணிந்தவர்களே காணொளிகளில் காணப்பட்டனர்...

உதாரணத்துக்கு...

Sri Lanka Army Special Forces Regiment

14536118428273499114659.jpg

3360380531_1b2519791d.jpg

மட்டக்களப்பு வாகரையில் ஜனாதிபதி இவர்களை சந்தித்த போது.. இதில் இருப்பவன் ஒருவனின் உருமறைப்பு ஆடையை அணிந்து இருப்பதை காணலாம்...

SL%2BArmy.jpg

தயா,

இத்தகைய நுணுக்கமான ஆராய்வுகளை யாழுடன் மட்டும் நிறுத்தாமல் முடிந்தால், ஆங்கில ஊடகங்களிலும் எழுதுங்கள். இந்த குற்றத்தில் 53 படையணி இல்லை, இன்னொரு பிரிவு தான் என்பது முக்கிய சான்று... உங்களின் போர் சார் அறிவு எம் சமூகத்துக்கு இன்று ஆதாரம் காட்ட உதவும் என்று நம்புகின்றேன்

..அத்துடன் ஒரு பச்சை உங்களுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.