Jump to content

Recommended Posts

Posted

Kannadasan++3++.jpg

மதியை விதியினால் மாய்க்கின்றவன்!

முதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ

முகத்திலே கண்ணை வைத்தான்

முகம்பார்க்க விரும்பாது பகையான மனிதனோ

முதுகையே பார்த்து நின்றான்

சதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்

தர்மத்தை வேண்டி நின்றான்

தர்மத்தின் தேவனோ தன்மையும் பிறரையும்

சதிகாரர் கையில் வைத்தான்;

மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை

மடியிலே வைத்த மயிலே!

மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்

மதுரைமீ னாட்சி உமையே!

- கவியரசர் கண்ணதாசன்

  • Like 2
  • Replies 333
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்

கரும்பு

கடந்த ஆறு, ஏழு வருடங்களில் யாழில் இதுவரை காணாத ஆபாசமான கவிதையா/கருத்தா இது? உங்கள் நெஞ்சைத்தொட்டுச் சொல்லுங்கள்? புங்கையூரன் இணைத்த பாடலில் உள்ளதுபோன்ற தமிழில் அல்லாமல் பேச்சுத்தமிழில் கவிதை எழுதப்பட

narathar

துளசி, நீங்கள் லீனா மணிமேகலை , மற்றும் சில பெண் கவிஞர்கள் எழுதிய கவிதைகளை வாசிக்கவில்லைப் போலும். இதில் எது சரி எது பிழை என்பதை நாங்கள் தான் எமக்காகத் தீர்மானிக்க முடியும். நடைமுறை வாழ்வை இலக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

[size=5]அத்தனையும் அருமையான கவிதைகள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

[size=5]வனப்பூ[/size]

[size=5]-நிலாரசிகன்.[/size]

[size=6]நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது

எதனுடனும் ஒப்பிட முடியாதது.

கூந்தலுக்குள் நுழைந்து வெளியேறும்

விரல்களின் சிலிர்ப்பில் மின்மினிகள்[/size]

[size=6]உடலெங்கும் மின்னி மறையும்.[/size]

[size=6]விடியலுக்காக காத்திருக்கும் பறவைகளின்

செளந்தர்ய மெளனமென[/size]

[size=6]மடியில் புரள்கின்றன உன் மோனங்கள்.

இதழ்களில் பதிந்து பிரியும்

இதழ்களில் நிரம்பித்தளும்புகிறது

காதலென்னும் பெருங்கடல்.

காட்டிடையே அமைந்திருக்கும்

சிறுகுடியில் நடுவே

உடலெங்கும் பூக்கள் மலர

சிவந்திருக்கிறாய்.

வனப்பூக்களின் வசீகர வாசம்

நம் அறையெங்கும் படர்ந்திருக்கிறது.

நீண்டிருக்கும் இரவில் உன்னோடிருப்பது

எதனுடனும் ஒப்பிட முடியாதது.

ஒரு

வனப்பூவின் உயிர் நிரப்பும்

அதீத மணத்தைப்போல..[/size]

Edited by சுபேஸ்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]தலைகளைப் பறி கொடுத்தோர்!! [/size]

[size=4]மா.சித்திவினாயகம்[/size]

headless.jpg

[size=4]உண்மையிலேயே அந்தப் பலசரக்குக் கடை விளம்பரங்களைப்

படித்துப்பார்த்ததில்

மிக…மிக…சர்ச்சைக்குரியதாகவும்….சஞ்சலப்படுத்துவதாகவும்…

பயப்பட வைப்பதாகவும்…இருந்தது![/size]

[size=4]தலையுள்ள இறால்களை விட…………

தலையில்லா இறால்களுக்கும்

தலையுள்ள நெத்தலிகளை விட……………

தலையில்லா நெத்தலிகளுக்கும்

அதிக விலையும் அதிக மவுசும் என

அந்த விளம்பரங்கள் –என்னைக்குழப்பி விடுகின்றன ![/size]

[size=4]தலைகள் இருப்பதே கேவலமாகவும்

கௌரவக் கோளாறாகவும் உணருகிற நாட்கள் இது !

மண்ணுள் புதைந்த பாறாங் கல்லெனச்

சிந்திப்பதையே மறுதலித்தெறிந்து[/size]

[size=4]பழைய பித்தலாட்டக்காரர்கள்…

காலம் காலமாக விரித்துப் போட்டிருக்கிற

கட்டுக் கட்டான பொய்ப் பந்தல்களின் மேல்

தலையே இல்லாமல் – நீ தத்தி நடக்கலாம் !

படுத்து உறங்கலாம் ! குந்தியிருந்து பஞ்சாயத்து நடத்தலாம் ![/size]

[size=4]செத்தபிணங்கள் முரசமொலிக்க‌

எலும்புக்கூடுகள் ஊர்வலம் போகுமாம்.

சிந்திய குருதியுள் நாடுகள் அமிழ்ந்து

நமக்கென ஒருபெரு உலகம் விரியுமாம்.

கதையளந்து, வெறும் வாய்ப்பந்தல் போடலாம்!

உரலில் போட்ட தானியம் போல உன் இனத்தை – நீயேகுத்தி அரிக்கலாம் !

அழுது புரண்டெழும் வாழ்விற்கு

அர்த்தமிருப்பதாய் புரட்டுக் கூறித்

தீபாவளி ,பொங்கல், புதுவருசம் எனச் சலிப்புகளை

உற்சாகங்களாக்கி வியாபாரமாய் விற்றுத் தள்ளலாம் ![/size]

[size=4]பிரபஞ்சத்திற்கான புதிய சங்கீதங்களைச் சுடுகாடாக்கி விட்டு

அடுத்தவன் பிரக்ஞையை உன் பிரக்ஞை என்று வாதிடும்

உனக்கு – வட்டமாய் திரண்ட ஓர் தலையிருந்தென்ன ???

இல்லாமலிருந்தென்ன ??[/size]

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்
[/size]

[size=5][size=4]
சமயவேல்
[/size][/size]

[size=4]
ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல்

கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று

நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம்

ஓங்கிய அரிவாளின் கீழே

தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட

மரணம் பற்றிய பிரக்ஞையற்று

குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை;

உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள்

பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள்

எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள்

விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள்

என்று வதைபடும் மனிதர்களை விட

எத்தகு மேன்மையான வாழ்வுடன்

நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம்

என்பதை நினைத்துப் பாருங்கள்

எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள்

கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது

ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று

ஒருவரை யொருவர் கொல்வது பற்றி

உங்களால் மே என்று கூட கத்த முடியாது

எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்

உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும்

நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட

உங்களால் வரைய முடியாது.

2

இருமைகள் என்பது எதார்த்தம் எனில்

அதில் ஒரு கை அள்ளி

என் கண்களைக் கழுவுவேன்

இரவு பகலோ, இறப்போ பிறப்போ

இருமைகள் றெக்கைகளாக

ஒரு பறவைக் கூட்டமாய்

பழுப்பு வானில் பறந்து திரிவேன்

மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி

அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன்

இதுவும் அதுவும் கவ்வி முயங்கும்

இடமோ பொழுதோ வெளியோ

சிந்தும் இன்மையின் இனிமையை

பருகி மகிழ்வேன்

ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான்

எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற

ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது

அதன் வெண்மணற் பரப்பில்

கோபுரங்களும் மலைகளும் கடல்களும்

நகரங்களும் ஆகாயமும் கூட

சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும்

புதைந்து கிடக்கின்றன

என் புல் வெளியில் மரணம்

ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில்

நான் ஒரு நாகலிங்க மரமாவேன்

என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள்

பூக்களாய் தொங்கும்

எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான்.
[/size]

http://samayavel.blo...01_archive.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]பிறரைக் காயப்படுத்தித்தான்[/size]

[size=4]நம்பிக்கைகள்[/size]

[size=4]வாழவேண்டுமென்பதில்லை[/size]

[size=4]மனிதர்கள் முக்கியம்[/size]

[size=4]எனக்கு.[/size]

:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனசுகளை அணிந்து கொண்டிருக்கும் ஆகாயம்..

- லால் சலாம்.

என்னிடம்

எந்த வலையுமில்லை

வீசிப்பிடிக்க,

நீ வெறும் மீனுமல்ல

துள்ளிக்குதிக்க.

பாச

நீரூற்றுத்தான்

மனிதர்கள்.

நீ

உன்

அன்பை தெரியப்படுத்தினாய்

அங்கீகரித்தேன்

பிறகு

உன் அன்பை

எடுத்துக்கொண்டு போகிறேன்

என்கிறாய்

மெளனம் காத்தேன்.

என்

பிரியத்துக்குரிய பெண்ணே

அன்பை

கொடுக்கவும் முடியாது

எடுக்கவும் முடியாது

அது

மனசுகளை

அணிந்து கொண்டிருக்கும்

ஆகாசம்,

ஆழம் காணா கடல்,

அவ்வளவுதான்....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]
கரையில் தேடும் சிறுமி
[/size]

- தாட்சாயணி (இலங்கை)

நுரை சுழித்த

கடலின் கரையில்,

நீண்ட நாட்களாக

ஒரு சிறுமி வந்து போகிறாள்…!

அவள் எதைத் தேடுகிறாள்…?

சிப்பிகளும்,சோகிகளும்…

தேடும் வயதுதான்…

என்றாலும்,

அது குறித்த ஆர்வம்

அவளுக்கிருப்பதாய்

இன்னும் அறியப்படவில்லை!

அவள்

அலைகளுக்கிடையில்

நுரை பிடிக்க

முயற்சித்தாளுமில்லை!

நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது

அவள் விழிகளில்…

அவளறியாத எதையோ…

அவளிடமிருந்து யாரோ…

பறித்துவிட்டார்கள்…

அவளறிய…

அது என்னவென்று

தெரியவில்லை அவளுக்கு…

உலகில்

சிப்பிகளுக்கும்,சோகிகளுக்கும்

மேலாக…

எதுவோ இருக்கிறதுதான்…!

அவளறிய…

அது என்னவென்று

தெரியவில்லை அவளுக்கு…

நுரை சுழித்த

கடலின் கரையில்

அவள் எதையோ…

தேடிக்கொண்டிருக்கிறாள் !

http://www.oodaru.com/?p=5589

Posted

அவள்

அலைகளுக்கிடையில்

நுரை பிடிக்க

முயற்சித்தாளுமில்லை!

நெடுந்துயர் விரவிக்கிடக்கிறது

அவள் விழிகளில்…

அவளறியாத எதையோ…

அவளிடமிருந்து யாரோ…

பறித்துவிட்டார்கள்…

அவளறிய…

அது என்னவென்று

தெரியவில்லை அவளுக்கு…

தொட்டுவிட்டது.............. இணைப்புக்கு நன்றி கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலை உதிர் காலம்...

வருடம் ஒன்றுக்குள்

பருவங்கள் ஆறாம்

செடிகள் உயிர் பெற்று நிற்க

இலைகள் கூதிர் காலத்திற்குள்,

பயணப்பட்டு கூம்பி உலர்ந்து

தரையில் போடும் பல வண்ண

கோலம்.

Edited by யாயினி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பழஞ்சொல், அல்லது உதிரபலி, அல்லது பழங்குடி அல்லது பிணங்களின் வெள்ளை அறிக்கை, அல்லது உங்களது சாவுப் பத்திரம், இறுதியாக மிஞ்சப்போவது எதுவுமேயில்லை.....

கொற்றவை

கோமான்களே

கனவான்களே

கைவிடப்பட்ட

எம் மக்களின்

கனவுகளை தோட்டாக்களாக்கும் பேராற்றலில் திளைத்தவர்கள்

நினைவூட்டத் தவறுவதேயில்லை

எங்கள் மூத்திரம் மரங்களின் வேர்களில் கலந்திருந்தது

பூக்களில் நாற்றம் வீசியதில்லை

மணக்கும் அப்பூக்களை கொன்றறுத்துச் சூடியதில்லை

பசியென்ற சொல் சதையானபிறகே

தோளிலேறும் வில்

எளிய வேட்டை

இப்படியாகத்தான்..........

சில

காலம் முன்பு வரை

இப்போது

நாங்கள் புதிய வாடைகளை நுகர்கிறோம்

உடல்களில் சாம்பல் நிறம் தேமலெனப் பரவுகிறது

நாசி கந்தக வாசத்தில் கருகி எரிகிறது

தொப்புள் துவள்கிறது

எம் வியர்வையில் வாசம் இல்லை

அடர்த்தியான வனங்களின் ஊடே

நிர்வாணமாய் இருந்த பாறைகள்

பிணங்களை உடுத்தத் துவங்கி வெகு காலமாயிற்று

எங்கள் மண் நிறமிழந்து இருக்கிறது

சிதறி விழும் நிழல்கள் சிவப்பைக் கக்குகின்றது

பிள்ளைகள்

மணல்களை, பாறைகளை, மரங்களை

மற்றும்

இதுவரை கேள்விப்பட்டிராத

மரணத்தின் விழிகளை

வரைந்து பார்த்து மகிழ்கின்றனர்

அதில்

அழித்தொழிப்பின் இளிநகை செங்கோடுகளாக நெளிகிறது

சொல்லியிருக்கிறோம்

எங்கள் சிறார்களுக்கு

இயற்கையின் பிதாமகர்கள்...

(அப்படித்தான் எக்கணமும் உங்களை எங்கள் முன் உச்சரித்து, அனுபவித்து, எங்கள் உடல் பதறுமளவுக்குச் சொல்வீர்கள். முட்டாள்களே... இவ்வார்த்தைகளை நீங்கள் எமக்கெதிராக உச்சரிக்கையில் எமது பற்கள் இறுகி உதிர்வதை எப்போதும் கண்டதில்லை நீங்கள். )

மாசற்ற ரப்பர் பொம்மைகளை அனுப்பி வைப்பார்களென்று

உறுதி அளித்திருக்கிறோம்

எங்கள் உடல் சூட்டின் உரிமைகள்

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குள் சேர்க்கப்பட்டுவிட்டது

ஒளிக்கற்றைகள் பேராசைமிக்க விழிகளைக் கொண்டு

பதுங்கு குழிகளுக்குள் இருக்கும்

சிறார்களின்

புன்னகைகளைப் பிடுங்கிச் செல்கிறது

அவை

எம் குடியினருக்கான அருங்காட்சியகத்திற்காக சேர்க்கப்பட்டுவருவதாக

அரசின் சமாதானத் தூதுவர் புன்னகையுடன்

எம் சிறுமிகளின் இளமுலைகளை கண்டுணர்ந்து

சொல்லிச் செல்கிறார்

தானியங்கிகள் கூட

இரும்புக்குறிகளை ஈணித்தள்ளுகிறது

எம்

பெண் மக்களைக் காணும் பொழுது

ஆதிக்கம் தனது கொடிய சங்கை ஊதிப் பிளிறுகிறது

வனம் தனது தூக்கத்தை இழக்கிறது

போர் தொடங்குகிறது

சதை, நிணம், உங்களது அரிய பார்வையில்

ஊளையாகி சீழ் வீசும் எமது மண் மிதக்கும் கைப்பிடி இதயம்

வழியும் குருதி

கைதூக்கிய சொற்கள்

அனைத்தும் களைத்து விழுகிறது

உடல்களுக்கு தாக்குதல் ஓரிருமுறை

யோனிகளின் சிதைவு எண்ணிக்கைக்குள் அடங்குவதில்லை

(எப்பொழுதும் பேரழிவுக்கு முன்னும் பின்னும் யோனிகள் கருகி எரிவது ஏனென்று தெரியவில்லை. பாலியல் வல்லுறவுக்கு முன்னும் பின்னும் அன்னையின் முகமும் தெரிவதில்லை. பெண்களுக்கு முகமே யோனிகளாய் இருக்கிறது.... புணருங்கள் ஆண்களே)

உங்களது வரைபடத்தில் சுழல்கிறது புவி

உங்களின் கரங்களுக்கு

சிலுவைகளில் இடமில்லை

ஆதிக்கம் அவ்வாறே என்பதற்கு எங்களிடம்

பிணத்தை

பிணச்சூட்டை

கருகிய மரத்தை

கந்தக நிலத்தை

இப்படியாக....

கிழிக்கப்பட்ட

நைய்யப்பட்ட

குருதியோடிய

இன்னும்......

துப்பாக்கிகள் நுழைக்கப்பட்ட

பார்த்து மகிழ்ந்த

வெந்து தணிந்த

சிதைந்த

சிறிய

பெரிய

முதிர்ந்த

விழிகள்

கரங்கள்

சதைகள்

மற்றும் இறுதியின் இறுதியாக

எல்லாச் சிதைவுகளுக்கும் சாட்சியாக இருக்கும்

மரத்த யோனிகளைத் தவிர

யெது வுமில்லை

எங்களுக்கு

எதுவுமில்லை

எதுவுமே........................யில்லை.

கற்களையெரித்து சாம்பலாக்கும் ஆற்றலை

மின் தகனங்கள் கொண்டிருக்கவில்லை

துரதிருஷ்டம்

சாபத்திற்கு உண்டந்த பலம்

தங்களது மேன்மை பொருந்திய

இருதய அளவிலும் சிறிதாய்ப் போனது

எம்மக்கள் வயிறு

குடல்கள் தின்னத் துவங்கிய எங்கள் வயிற்றின் தசை நார்களில்

வெளிப்படுகிறது உறைந்துபோன

எங்கள் கனவுகள்

கண்ணீர்

இழந்த எமது

இளமை

வரலாற்றின் பக்கங்கள்

நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்

எப்பொழுதும்

சகித்துக்கொள்வதில்லை

அது

கணிக்கும்

கண்காணிக்கும்

அழிவின் தும்மலை அறிவித்து

வாரிக்குடிக்கும்

எம்மக்களின் கையில் திணிக்கப்பட்ட

உங்களது

ரப்பர் பொம்மைகளும்

வாசலில் சிரிக்கும்

சுத்தமான நறுமணம் கமழும் உங்களின் பிணங்களின் இளித்த

புன்னகை கண்டு

நிறையட்டும்

உங்கள் வயிறு

இயற்கையைச் செரிக்க

இம்மண்ணில் பெருவயிறு

எவருக்கும்

இல்லை

இல்லை

இல்லை

இனி இடம்பெயர

யெதுவுமே

இப்படி எதுவுமே

இனி

எப்பொழுதுமே

எதுவுமே

இருக்கப்போவதில்லை.

(குறளி இதழில் வெளிவந்துள்ள கவிதை)

http://saavinudhadug...og-post_10.html

Posted

வரலாற்றின் பக்கங்கள்

நிகழ்வுகளின் பாவக் கணக்குகளை சேமித்து வருகிறது

இயற்கை எல்லாவற்றையும்

எப்பொழுதும்

சகித்துக்கொள்வதில்லை

அது

கணிக்கும்

கண்காணிக்கும்

அழிவின் தும்மலை அறிவித்து

வாரிக்குடிக்கும்

உண்மை........... கசப்பான உண்மை . பகிர்வுக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]பரிசு[/size]

[size=6][size=4]காலபைரவன்[/size][/size]

kiss.jpg

[size=5]
எல்லையற்ற

கருணை நிரம்பிய

இவ்வுலகில்தான்

ஒரு தற்கொலையை மேற்கொண்டு

சிறு முத்தத்தை

சமப்படுத்த வேண்டியிருக்கிறது
[/size]

http://kalabairavan....og-post_10.html

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=6]
உடன் நடக்கும் நீ
[/size]

எம் கோபாலகிருஷ்ணன்

விநோதமான பாதை அது,

மூர்க்கம் உலராத வெயில் போர்த்தி

நீண்டும் நெளிந்தும் போகிறது,

தொலைவானில்

வட்டமிட்டுப் பறக்கிறது கழுகுக்கூட்டம்,

இதோ உடன் நடக்கும் உன் முகம்

நான் முன்பு அறியாதது,

இப்பாதையில் என்னுடன்

எது வரையிலும்

உடன்வருவாய் என்றும் தெரியாது,

பாதங்களைத் தடுமாற்றி

நடை சிதைக்கும் நன்னிலம்,

முகம் அறைந்து விரட்டும் ஈனக்காற்று,

நல் வருகையல்ல உமது

என

எச்சமிட்டுப் பறக்கிறது அண்டங்காக்கை,

இருவரும் நடக்கிறோம்,

இன்னுமொரு தப்படியில்

கண்ணிவெடிகள் நம்மை சிதறடிக்கலாம்

வெட்டவெளிகள் கைநீட்டி

மார்நோக்கி துப்பாக்கிகளை நீட்டலாம்

உள்ளதனைத்தும் களவாடப்படலாம்,

அல்லது

இதுவொன்றுமே நிகழாமல் போகலாம்

நீயும் நானும்

இப்பாதை கிளை பிரியும் தொலைவு வரை

இப்படியே நடக்கலாம்,

இப்போதைக்கு

உடன் நடந்து செல்கிறோம்,

நீயும் நானும்.

http://solvanam.com/?p=22516

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=5]
ஒரு பிரியமான எதிரியின் மரணம்
[/size]

கிரிஷாந்

po-krishanth.jpg

மரணம் ,இரவின் மௌனத்தை

நச்சரித்துக் கொண்டிருக்கிறது .

கோப்பையில் தேங்கிய தேநீரின்

அழுத்த நெடி

அறையெங்கும் கவிந்திருந்தது .

புத்தகமொன்றின் கீழே

கசக்கி வைக்கப்பட்டிருந்தது

என் நீண்ட நாள் எதிரியின் புகைப் படம் .

அவன் இறந்து போனான் .

நான் அவனை

அவனில்லாத ஆட்டங்களை

ரசிக்க முடியாதவனாக இருந்தேன் .

அவன் ,நான் நேசிக்கும்

வேற்று மொழிப் பாடலை ஒத்தவன்

புரிந்து கொள்ள என்னால்

அவன் இறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது .

என் நண்பர்கள் ,"அவன் உன்னைத்

தோற்கடிக்கப் பார்க்கிறான் "என்றார்கள்

என் அயலார் ,"அவன் உன்னை

சாகடிக்கப் போகிறான் "என்றார்கள் .

ஆனால்

நீ அவர்களை விடவும் மகத்தானவன் .

இருளும் ஒளியும் உறையும்

இந்தக் காலத்தை

நானும் ஒரு நாள் கடப்பேன்

அதுவரை,இந்த

அப்பழுக்கற்ற ஒரு வார்த்தையை

உன் மீது சார்த்துகிறேன்

"மன்னித்து விடு ".

http://www.uyirmmai....s.aspx?cid=6092

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

தேவை ஒரு நாயார்...

   

ஹேமா

 

po%20-%20hema.jpg

 

நிலவு பார்த்து நித்தம்

குரைத்துக்கொண்டிருக்கிறது

எப்போதும்

நான் பார்க்கும் அந்த நாய்.

கடிக்காவிட்டாலும்

குரைப்பதென்பதே

அடையாளமாய்

ஆக்கப்பட்டிருக்கிறது

அதற்கு.

கடிக்காவிட்டாலும்

குரைக்காத நாயை

நாயென்று சொல்வீர்களா

நீங்கள் ?

கடித்தும் குரைத்தும்

நாயின் சாகசங்களோடுதான்

மனிதன் இப்போ

என்றாலும்....

வாலில்லாமலோவெண்டு

நினைத்துச் சிரித்ததுண்டு

நிமிர்த்தமுடியாததாலோ !

கடித்தால் பாசிசமாம்

குரைத்தால் ஜனநாயகமாம்

இரண்டுமாய் 

இருப்பான் மனிதன்

அவன் அடையாளம் அது.

கடிக்காவிட்டாலும்

குரைக்கும் நாயொன்று

இருத்தல் நல்லது

என்னால்

குரைக்கவோ கடிக்கவோ

முடியவில்லை.

யார் வந்தாலும்

வாலாட்டிக்

கொண்டிருக்கிறேன்

என் இயல்போடு

இன்றளவும் நான்!!!

 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6122

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
சுப்பர் கவிதை...கவிதை என்டால் இது தான் கவிதை...இதை விட‌ அழகாய் ஒருத்தராலும் சொல்ல முடியாது
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

திரும்பாத முத்தம்

மனுஷ்ய புத்திரன்

 

இடப் படாத முத்தமொன்று

இரவின் முடிவற்ற கரிய தோள்களில்

வந்தமர்ந்தபோது

பனிக் காலத்தின் ஆயிரம்

உறைந்த கண்கள்

அதை உற்றுப் பார்த்தன 

 

இடப்படாத அந்த முத்தம்

தன் கூச்சத்தின்

இறகுகளைப் படபடவென

அடித்துக்கொண்டது 

 

திசை தப்பி வந்த

வேறொரு உலகத்தின் பறவையென

அன்பின் துயர வெளியின் மேல் அது

பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது 

 

அதற்கு

தான்

அந்த கணம் வந்தமர்ந்த

இடம் குறித்து

எந்த யோசனையுமில்லை

ஒரு தந்திரமில்லை

ஒரு கனவு இல்லை 

 

நடுங்கும் கைகளால்

நான் அதைப் பற்றிக்கொள்ள

விரும்பினேன் 

 

இடப்படாத அந்த முத்தம்

சட்டென திடுக்கிட்டு

எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம் 

 

யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத

காதலின் ஒரு தானியத்தை

அதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன்

 

இடப்படாத முத்தங்கள்

எதையுமே பெற்றுக்கொள்வதில்லை

எவ்வளவு தூரம் பறந்தாலும்

அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை 

 

அவை

பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன

பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன 

 

ஒரு வேளை

நீ அந்த முத்தத்தை

இட்டிருந்தால்

அது முத்தமாகவே இல்லாமல்

போயிருக்கலாம்

 

http://nathiyalai.wordpress.com/2007/08/20/thirumbaatha-muththam/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அலறல்களின் பாடல்

கவின் மலர்

 

 
hasif.JPG

 

 

வன்புணர்

முலைகளை வெட்டியெறி

பிறப்புறுப்பில் கடப்பாரையைச் செலுத்து

தெறிக்கும் குருதிச் சிவப்பு

உன் தெய்வங்கள் வீற்றிருக்கும்

கோயிலின் சுற்றுச்சுவருக்கு வண்ணமாகிறது

 

வன்புணர்

முந்திரிக் காட்டில்

நிர்வாணமாக்கு

அவள் உடைகள்

உன் கடவுளை அலங்கரிக்கின்றன

 

வன்புணர்

பள்ளிச்சீருடையில் ரத்தம் படரச் செய்

பின் முள்காட்டில் தூக்கியெறியுமுன்

அக்குழந்தையின் பால் மணத்தை

உன் மேனியில் வழித்து எடு

அதுவே

கோயிலின் தெய்வீக மணமாகிறது

 

வன்புணர்

மொட்டைமாடியில் இருந்து வீசியெறி

அவளின் அலறல்

பக்திப் பாடலாகிறது

 

வன்புணர்

அவள் கதறலை அணுஅணுவாய் ரசி

அவள் கண்ணீர்

புனிதத் தீர்த்தமாகிறது

 

வன்புணர்

அடையாளம் தெரியாமல்

அவளைச் சிதைத்து

சிதையில் இடு

அச்சாம்பல்

பிரசாதத் திருநீறாகிறது

 

வன்புணர்

அவள் மூச்சை நிறுத்து

இத்தனை காலம்

அவள் உதிர்த்த

புன்னகைகள் கோக்கப்பட்டு

உன் கடவுளின் கழுத்தில்

மலர்மாலையாகின்றன

 

இனி

நீ வல்லாங்கு செய்ய

சேரிவாழ் பெண்கள் எவரும் இலர்

காமுற்ற நீ

கோயிலுக்குள் நுழைகிறாய்

 

உன் முந்தைய வன்புணர்ச்சிகளின்

சாட்சியங்களைச் சுமக்கும்

அக்கோயிலுக்குள்

நீ அடியெடுத்து வைக்க வைக்க

பெண் கடவுளர்களின் கற்சிலைகள்

நடுங்கத் தொடங்குகின்றன!

 
 

http://kavinmalar.blogspot.co.uk/2013/01/blog-post_25.html

  • 2 weeks later...
Posted

இறந்தவனின் ஆடைகள்

இறந்தவனின் ஆடைகளை

எப்படிப் பராமரிப்பதென்றே

தெரியவில்லை

இறந்தவனின் ஆடைகளை

அத்தனை சுலபமாய்

அணிந்துகொண்டுவிட முடியாது

அதற்காகவே

காத்திருந்தது போலாகிவிடும்

அவை

இறந்தவனின் இடத்தில்

இருந்துவிட்டுப் போகட்டும்

என்றிருக்க இயலாது

இறந்தவர்களோடு

அவ்வளவு இயல்பாய்

உறவுகள் சாத்தியமல்ல

தானமெனக் கொடுக்கலாமெனில்

இறந்தவனின் சாயல்கள்

எதிர்பாரா இடங்களில்

எதிர்பாரா உடல்களிலிருந்து

நம்மை நோக்கி வரும்

இறந்தவனின் ஆடைகளை

அழித்துவிடலாம்தான்

இறந்தவனைத்

திரும்பத் திரும்ப அழிக்க

கைகள் நடுங்குகின்றன

இறந்தவனின் ஆடைகள்

ஆடைகள் போலில்லை

இறந்தவனின் தோலாக இருக்கிறது

(அபு என்கிற பக்கீர் முஹம்மதிற்கு)

ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு

நன்றாகக் குளிக்க வேண்டும்

வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது

இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத

தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது

அடிக்கடித் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்

இரண்டுமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும்

குழந்தைகளை இயல்பாகக் கொஞ்சவேண்டும்

மர்மமாகப் புன்னகைப்பவர்கள்

கேட்காமலேயே நம் கனிவை வழங்குபவர்கள்

செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்

எல்லோரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாச்சு விரைவாக

தப்பிச் சென்றுவிட வேண்டும்

நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்

தனித்த அறை ஒன்றில்

மனங்கசந்து அழும்போது

கதவு தட்டும் ஓசைகேட்டு

கண்களைத் துடைத்துக்கொள்ள வேண்டும்

எல்லையற்றது

இந்த உலகின் தீமை

எல்லையற்றது

இந்த உலகின் கருணை

 

http://ariyavai.blogspot.ca/2012/08/blog-post_9596.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீந்தக் காத்திருக்கும் விண்மீன்

கயல்

 

இணையும் புள்ளிகளைப் பொறுத்து

வட்டமென்றும்

சதுரமென்றும்

செவ்வகமென்றும்

அறுங்கோணமென்றும்

அறிதலின்படி பிரபஞ்சம் வடிவங்களாலானது

அதனதன்

சுற்றளவு

பரப்பளவுகளை

கணக்கிடுவதே வேலையாயிருந்தது

அளவீடுகள் தப்பிப் போய்ப்

பட்டாம்பூச்சியின் இறக்கையில் விழுந்தேன்

தேனுண்ட மயக்கத்தில்

திளைத்திருந்த அதன் மென்னுடம்பு

அதிர்வில் உயரப் பறக்கலாயிற்று

மந்திரப் பாயில் பயணிப்பது போல

சறுக்கியும்  தவழ்ந்தும்  விரிந்த

அதனுலகில் அலகுகளேதும்

நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை

இருளடையாத ஆன்ம வெளிச்சத்தில்

எந்த சுடருக்கும் நிழல்களேயில்லை

ஒளிபொருந்தியப் பயணமொன்றில்

விண்மீன்கள் நானென்ற  பிரம்மையிலாழ்ந்தேன்

பிரபஞ்சம் சுதந்திரமயமானது

எண்ணிலடங்காப் புள்ளிகளிருந்தும்

வடிவங்களற்ற அதனுலகம்

பிடித்துப் போய்  வாழ்க்கை முழுவதற்குமாய்

அதனோடே வாசம் செய்ய

நானுமொரு புள்ளியாய்

வாழ்ந்து மறைய

வலுவானதொரு

காரணம் தேடிக் கொண்டிருக்கிறேன்…

 

http://kayalsm.blogspot.co.uk/2012/12/blog-post_3.html

Posted

தொலையாத உரு

 

மாற்றத்திற்கில்லை ஓய்வு.
அவ்வப்போது அடுப்புத்தணலாக மூண்டெழுகிறது வயிறு.
ஓசைகள் தெறித்ததிரும் காதுச்சவ்வுகள்.
எவரெவவோ என் கனவுகளைப் பயங்கரங்களாக்கி மறைகின்றனர்.
நித்திரை தரும் இரவுப் பூதம்.
அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது.
தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம் அருகில் வருகின்றன.
நாடுமில்லை
இருப்பதற்கொரு வீடுமில்லை
இது என் பெயருமில்லை
அடையாளங்களற்ற நான் அகதியுமில்லையாம்.
உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து படிகளின்றி இறங்க
யாருமற்ற காட்டுக்குள் என்புகளைப் பாம்புகள் நொருக்குகின்றன.
முன் குவிந்த ஆடைகளிலிருந்து எதுவொன்றும் அணிய முடியவில்லை.
கடிகார முட்களின் வேகம் குரூரத்தைக் குத்துகிறது.
அந்தரித்த நித்திரையில் அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்.
அதுவல்லாப் போதில் அந்நியம் சுற்றிக் கிடக்கிறது.
‘எதுவும் எதுவும் எனதல்ல. அதுவும் இதுவும் எனதல்ல. இதுவும் அதுவும் எனதல்ல’
நீ அந்நியமானவள் என்கிறது இம்மொழி.
தோல்நிறம் நீ எவளோவெனச் சொல்கிறது .
இவை உனக்கல்ல என்பதாக அலுவலகங்கள்.
மிரண்ட கண்களின் குற்றத்தால் அடையாளஅட்டை கேட்கப்படுகிறது.
தொலையட்டுமே என்று எறிபட்ட ஏதோ ஒரு உயிரினமாக
வீதிகளின் இருள் மறைவில் இன்னும் துலையாது அலைகிறது இவளுரு.
 
தர்மினி
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் சாயல்

சித்ரா

கால் பரப்பி அவிந்து அவிந்து

வெளியே தின்னப்பட்டு கொண்டிருக்கிறது

காமம்.

கால் மேல் கால் போட்டு

காமத்தை மேசைக்கு வரவழைக்க

தெரிந்து வைத்திருக்கிறது

உன் காதல்.

மூச்சு முட்ட கழுத்தை நெரிக்கிறது

காதலோடு உபரியாக வந்த

உன்

நிபந்தனைகளற்ற அன்பு

படுக்கையறை சிணுங்கல்களை

பக்கத்து அறையில்

தன்முறைக்கு

காத்திருப்பவளுக்கு கேட்காமலிருக்க

பார்த்து கொள்கிறது

உன் கம்பீரம்

மெல்லியதிலும் மெல்லிய அரிய ஆடையென்று

நடுதெருவில் நிர்வாணமாகவே நடத்தபடுவது அறியாத

ராஜாவின் பூரிப்பில் தெரிகிறது

என் சாயல்.

 

 

http://www.vallinam.com.my/issue51/poem3.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதையிலும் உங்கள் சாயல் தெரிகிறது என்று சொல்லலாமா! :D 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும்  வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும்.  புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது.  அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன.  இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக  தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது.  சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து  தேர்வு செய்யப்பட்ட  ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில்  மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன.  இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள்.  ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.