Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் சடுகுடு....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் சடுகுடு....

எஸ்,கிருஷ்ணன் ரஞ்சனா

காளையை அடக்கி, கன்னியின் வளைகரம் பிடித்தல், இள வட்டக் கல்லை தோளில் சுமந்து, தன் பலத்தை நிரூபித்தல், பெண்ணின் தந்தை சம்மதிக்காத போது ,கண் கவர்ந்த கன்னியை அதே தோளில் சுமந்து களவு போதல், சபதம் ஏற்று, பொருள் ஈட்டி, பின் கன்னியை திருமணம் செய்தல் போன்ற "ரொமாண்டிக்" நிகழ்வுகள் மனித குலத்திற்கு மட்டுமே சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. "சிக்லிட் " மீன்களிடம் அவ்வகையான குணங்கள் உள்ளன என்பது ஆச்சரியமான ஒன்று. நீங்கள் உங்கள் காதலர் மேல் வைத்துள்ள அன்பே புனிதமானது , இதய உணர்வின் வெளிப்பாட்டு களஞ்சியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம். உண்மையில் மூளையின் சில பாகங்களின் ஒத்துழைப்போடு,இச் செயல்பாடு நடைபெறுகிறது என்கிறார்கள் ஸ்டான் ஃபோர்ட் பல்கலைக் கழக பயோ லஸ்டுகள். இதே வகையான சோதனைக்கு ஆப்பிரிக்க மீனான "சிக்லிட்" வகை மீன்கள் உட்படுத்தப்பட்டன. அதில் பல ஆச்சரியமான தகவல்கள் கிடைத்துள்ளன. பெண்ணானது குறிப்பிட்ட ஆணை தனது இணையாக தேர்வு செய்யும். அந்த ஆண் ஏதோ சந்தர்ப்பத்தில் ,போட்டியிலோ அல்லது போரிலோ தோற்று விட்டால் ,தன் ஆண் மீது கொண்ட மோகமானது மாற்றம் அடைகிறது. பெண்ணின் மூளையின் சில பாகங்கள் எதிர்ப்பார்ப்பு மற்றும் துரித நடவடிக்கை ,சமயோஜித புத்தி, அதை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் பாங்கு என பலவித குணங்களின் பால் சார்ந்துள்ளது. இது ஏறத்தாழ மனித இளம் பெண்ணின் குணத்தோடு ஒத்துப் போகிறது. ஒரு பெண் ,குத்துச் சண்டை வீரனின் பால் காதலில் வீழ்கிறாள் .அவன் ஒரு போட்டியில் தோற்று விட்டால்அவளை அறியாமலேயே ,அவளது உடலில், அவனை வெறுக்கும் சில நடவடிக்கைகள் தானாகவே செயலுறுகின்றன. மனதின் பால் வேண்டுமானால் அவனை வெறுக்காமல் இருக்கலாம்.இருப்பினும் அவளது புற நடவடிக்கைகள் அவன் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலேயேஅமைந்துள்ளன என்கிறார் பால் ஹெய்டன் .இவர்மனித குண ஆய்வாளராக ,ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்.

cichlimating.jpg

சிக்லிட் வகை மீன்கள் சிச்சலிடே குடும்பத்தைச் சேர்ந்தது. 1,300 க்கும் மேற்பட்ட இனங்கள் இந்த வகுப்பில் உள்ளதாக அறிவியல் ஆய்வு கூறுகிறது. வருடந்தோறும் புதிய வகை மீன்கள் இவ்வினத்தில் கண்டறியப்படுவதால் இவை எவ்வளவு எண்ணிக்கை என உறுதியாகக் கூறமுடியவில்லை. இவை பலதரப்பட்ட உருவ அமைப்பு கொண்டவை. மிகச் சிறியது 2.5 செ.மீ நீளமும், பெரியது 1 மீ நீளமும் உடையதாக இருக்கும். பொதுவாக , மிதமான உருவ அமைப்பு கொண்டதாகவும், சற்றே உள் நோக்கி அமுக்கப்பட்ட ,முட்டை வடிவத்திலேயும் காணப்படும். தொட்டிகளில் வளர்க்கப்படும் ஏஞ்ஜல் ,ஆஸ்கார், டிஸ்கஸ் போன்ற வீட்டு வளர்ப்பு மீன்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவை. இவை பொதுவாக ஆப்பிரிக்கா ,தென் அமெரிக்க பிரதேசங்களில் அதிகம் காணப்படும். இவைகளின் குணம், மனித குணத்தோடு அதிகம் ஒத்துப் போவதால், மனித குண ஆய்வர்களாலும், மீன்வளத் துறை ஆய்வறிஞர்களாலும் அதிக ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டது. எதிர்பாராத விதமாகவே, கடந்த 2000 ம்ஆண்டு ,இம்மீன் ஆய்வறிஞர்கள் கண்ணில் தென்பட்டது. இதன் நடவடிக்கைகள் , அவர்களை அதிகம் கவரவே ,இது தொடர்பான ஆய்வுகள் துவங்கின. இவ்வினத்தின் 3 வகை இந்தியா, பங்களாதேஷ்,இலங்கை கடல்பகுதிகளில் காணப்படுகின்றன. பாசி, கடல் தாவரம் போன்றவற்றை மட்டுமே உண்ணும் இவை ,சிறிய உயிரினங்களையும், முதுகெலும்பற்றவைகளையும் அவ்வப் போது உண்ணும்.

மனித உள்ளுணர்வு எப்போதும் பொறுப்பையும், பெருமையையும் சுமக்கும் கேந்திரமாகவே செயல்படுகிறது. இதுமனித குல மாண்பு என நினைத்துக் கொண்டிருக்கையில் ,அனைத்து முதுகெலும்பிகளும் இவ்வுணர்வால் பீடிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. அவைகளின் செயல்பாடு உள்ளுணர்வின் அடிப்படையில் நடைபெறுவதை ஆய்வு நிரூபணம் செய்து, மனிதன்---மனிதனல்லாத இனங்கள் ஒரு புள்ளியில் இணைவது ஆச்சரியமூட்டுவதாக அமைந்துள்ளது. ஆழ் மனதின் செயல்பாடும் ,மாற்றமும் இதயத்தின் செயல்பாட்டைச் சார்ந்துள்ளது. ஏதாவது நெருக்கடியான சூழ்நிலையில் தோல்வியைச் சந்திக்கும்போதோ, அல்லது போட்டியில் தோற்கும் போதோ, ஆண் வேறாகவும், பெண் வேறாகவும் சிந்தனை செய்கிறார்கள்.இங்கு தோல்வி மட்டுமே ஒரு செயலாக,கொள்கையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. பல செயல்களிலும்,இவ்வுணர்வின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. இறுதியாக இவ்வாறான உணர்வு நிலைக்கு, மனிதன் மட்டுமே ஆளாவதில்லை என்பது கண்டறியப்பட்டது. மனிதர்களுக்குப் பகுத்தறிவு உண்டு. மீன்களுக்கு இல்லை என்பது மிக முக்கிய கருதுகோள். சந்தேகங்களும், காரண, காரியங்களும் அலசி ஆராயும் போது தீர்வு கிடைக்கிறது. இது மனிதனுக்கு மட்டுமே உண்டான குணமல்ல. உராங்குடான், போன்ற குரங்குகளும் இவ்வாறான நிலைப்பாட்டை ,தாங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக உணரும் போது தேர்வு செய்து கொள்கின்றன.

சிக்லிட் மீன்களில் ஆண் மீனானது அருகில் உள்ள போது பெண் மீனின் மூளைப்பாகம் அதிக பரவசத்தை அடைகிறது. இது சந்ததியை பெருக்கும் எண்ணத்திற்கும், மகிழ்ச்சிகரமான ஊடல் ,கூடலுக்கும் வழி வகை செய்கிறது. அப்போது ,பெண் மீனின் உடல் முழுவதும் சில அதிர்வுகளும், உடலுறவிற்குத் தேவையான நடவடிக்கைகளும், ஆணை எந்த விதத்தில் எல்லாம் தன்னை நோக்கி ,விரைந்து கவர வைக்கலாம் என்ற நோக்கமும் வெளிப்படுவதை நாம் உற்று நோக்கும் போது உணர முடிகிறது. அப்போது பெண் அதிக உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் ,ஆண் சற்று கம்பீரமாக அடக்கி வாசித்து, தன்னை கட்டுப்படுத்திய நிலையிலும் காணப்படும் . இங்கு ஆண்---பெண் மீன்களின் மூளை ,இச் சூழ்நிலையில் எவ்வாறு இயங்குகிறது என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது மனித மூளைச் செயல்பாட்டோடு ஒத்துப் போனது. சக மனிதனையோ,அல்லது பிற ஜீவன்களையோ அல்லது பூவையோ ஏன் உடனடியாக பிடித்துப் போகிறது என்று உறுதியாக கூறமுடியாது. உணர்விலி நிலையில் உடலில் ஏற்படும் சில மாற்றங்கள் இவை என்றே இன்று வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இம் மூளையின் செயல்பாடு, சில சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு தன்னை மாறுபடுத்தியும் கொள்கிறது. உதாரணமாக தாய்--சேய் பாதுகாப்பு, டெஸ் ஜார்டினின் ஆய்வு ,மீன்களின் குணத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. மூன்று தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டது. நடுவில் உள்ளதில் மட்டும் பெண் மீனும், இருபக்க தொட்டிகளில் திடமான ஆண் மீன்களும் விடப்பட்டன. ஒரு நாளைக்கு 20 நிமிடம் மட்டும் பெண் மீனை ஒரு தொட்டி மாற்றி மற்றொரு தொட்டி என ஆணோடு பழக விட்டனர். மூன்றாம் நாள் ,பெண், தனக்கான ஜோடியை தேர்ந்து எடுத்திருந்தது!!சற்று உடல் பருத்தும், தூக்கலான சிவப்பு அல்லது நீல நிறம் கொண்ட ஆண்களே அவை. அதே சமயம் பிற ஆண்களோடும் இம் மீன்கள் நட்பை வளர்க்க முனைந்த போது, இரு ஆண்களுக்கு இடையில் பிரச்சனை எழுந்தது. அது ஜோடி சேர்ப்பதில் துவங்கி ,எல்லை பிரச்சினை வரை இட்டுச் சென்றது. இவ்வகை மீன்களை பொறுத்தவரை, சண்டையில் ஈடுபடுவது சகஜம். இதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. தங்கள் உடல் வலிமையை பறைசாட்டுதல், எல்லை பாதுகாப்பு, எல்லோருடைய கவனத்தையும் கவர்தல் ,என ..........ஆண்களுக்கான சண்டையை 20 நிமிடங்களுக்கு மட்டுமே பார்வையிட்ட பெண் மீனின் மூளை சோதனை செய்யப்பட்டது. அதில் வெற்றி பெற்ற ஆணை நோக்கியே செயல்பாடு இருந்தது. இச்சோதனை, பல்வேறு சந்தர்ப்பங்களில் 15 க்கும் மேற்பட்ட பெண் மீன்களை கொண்டு ஆய்வகங்களில் சோதனையிடப்பட்டு கண்டறியப்பட்டது. ஆச்சரியமூட்டும் வகையில் அனைத்து பெண் மீன்களும், வெற்றி பெற்ற ஆணையே விரும்பின.தன் கணவன் அல்லது காதலன் தோற்ற போது, சோர்வுடன் அவனை கைவிட தயாராகின. சில கொஞ்சமும் தயக்கமின்றி , தன்னை கவர்ந்த ஆடவனுடன் சேர்ந்து வாழவும் துணிந்தன. இங்கு பெண் மீன் ஒரே சமயத்தில் பல ஆண்களோடு உடலுறவு கொள்ளும். இவைகளின் பருவகால வாழ்வு 4 வகையாக பிரிக்கப்படுகிறது. 1. சம வெளியில் குஞ்சு பொரித்தல் 2. மறைவிடத்தில் பொரித்தல் 3. முட்டைகளை வாயில் வைத்து பொரித்தல் 4. குஞ்சுகளை வாயில் வைத்து வளர்த்தல்.

ஆணின் உடல் முழுவதும் பளிச்சென நிறம் கொள்ளுதல், ஆங்காங்கே மஞ்சள் நிற புள்ளிகள் தென் படுதலும் அவை பருவத்திற்கு தயாராக உள்ளது என்பற்கான அடையாளம். ஆசன வாயின் அருகில் போலியான விந்து முட்டைகளை இட்டு, தான் தயார் என்பதை கோடிட்டு காட்டும். வாயில் கரு முட்டையை சுமந்து வரும் மீனின் வாயில் விந்தை பீய்ச்சி விடும். சமயம் கிடைக்கும் போது உடலுறவுகொள்ளும். இங்கு உடலுறவு என்பது உடல் இச்சையையும், நட்புறவையும் வளர்க்கும் செயல்பாடாக மட்டுமே ஆய்வறிஞர்களால் கருதப்படுகிறது. பொரிக்காத முட்டைகளை ,நீரின் ஓட்டத்தோடு தன்னை மூழ்கச் செய்து கழுவி கைவிடுகிறது. இவற்றில் சில இன பெண் மீன்கள் மியூகஸ் கிளாண்ட்ஸ் மூலம் சுரக்கும் சுரப்பி நீரை தோல் மூலம் தனது குஞ்சுகளுக்கு தாய்ப்பால் போல் ஊட்டும். அப்போதும் ஆண் --பெண் உடலுறவில் ஈடுபடுவதில் தயங்குவதில்லை. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழக ஆய்வறிஞர்கள் கடந்த பத்து ஆண்டுகள் நடத்திய ஆய்வறிக்கை பல தகவல்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதில் அவர்கள் முக்கியமாக கூறும் கருத்து "பெண் மீன் எப்போதும் ஹீரோக்களை மட்டுமே விரும்பும்"!!

வீட்டில் வளர்க்கப்படும் ஏஞ்சல் ,ஆஸ்கர் வகை அழகு மீன்களும் இவ்வினத்தை சேர்ந்தவை. இதை ஜெர்மன் பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது. இவர்களின் கருத்துப் படியும் ,பெண்ணின் மூளை எப்போதும் ஆணின் செயல்பாட்டை உற்று கவனித்தவாறே உள்ளது. தனது குஞ்சுகளை காப்பதில் மனித இனத்தைப் போல் பெண்ணே அதிக அக்கறை கொள்கிறது. தனது குஞ்சுகளுக்கு ஆபத்து நேரிடும் என தான் கருதும் எதுவும் அங்கே இருக்கவோ, வரவோ அனுமதிப்பதில்லை. சக மீன்களையே சில சந்தர்ப்பங்களில் இக்காரணங்களுக்காக கடித்து கொன்று விடும் நிகழ்வும் உண்டு. தம்பதிகளுள் அடிக்கடி கருத்து வேறுபாடு நிகழ்ந்து பிரிதல் ஏற்படுகிறது. அப்போது ஆண் தனக்கு ஒவ்வாத பெண் மீனோடு உறவு கொண்டு மனைவியை கோபமூட்டும். அந்த சமயங்களில் பெண் தனிமையில் தனது குஞ்சுகளை பாதுகாத்தவாறு காலம் தள்ளும். இது அவைகளுக்கு சிரம காலமாகும். பின் தகுந்த துணையை தேர்ந்தெடுத்து, முன்னாள் கணவனோடு மோதவிடும் ,அல்லது கொன்று விடும்!!

மனிதர்களைப் போலவே சிக்லிட் வகை மீன் இனத்திலும் "பெண்ணே" தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறாள். ஆச்சரியம் தானே!!!

http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=3749

  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களைப் போலவே சிக்லிட் வகை மீன் இனத்திலும் "பெண்ணே" தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறாள். ஆச்சரியம் தானே!!!

நான் இதை வன்மையாக ஆட்சேபிக்கின்றேன்.

( என்னப்பா நீங்க சொன்னமாதிரி எழுதிப் போட்டன்.) :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது பாழாய்போன மனிதனிடம் இருந்து தான் கற்றுக்கொன்டிருக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இது மீனை வைச்சு மனிதர்கள் தாங்கள் நினைக்கிறதை எழுதின மாதிரித் தான் தெரியுது.

பெட்டை மீனுக்காக ஆண் மீன்.. சண்டை போட்டுச்சாம்.. அதில வெற்றி கண்ட ஆண் மீனை பெட்டை மீன் பிடிச்சுச்சாம்... இது எங்கையோ பழைய தமிழ் இலக்கியங்களில் வந்த கணக்கா எல்லோ இருக்குது.

சும்மா பெட்டை மீன் போடுற நாலு முட்டைக்கு விந்து பாச்சிற வேலைக்கு.. எதுக்கு சண்டை போட்டு.. பெட்டையை இம்பிரஸ் பண்ண வேணும். ஐயோ ஐயோ... இதுகள் ஒன்றுமே திருந்தப் போறதில்லை. அதுவும் மீன் சும்மா விந்தை தண்ணில பாச்சி விட்டாவே அதுபோய் முட்டையோட ஒட்டிக்கும். இதில.. வீரமாம்.. விளையாட்டாம். வேஸ்ட் ஒவ் எனேஜி.

இந்த பெட்டைக்காக ஆண்களை சண்டை போடத் தூண்டுற இந்த உபயோகமற்ற பொறிமுறையை மாத்தி அமைக்கனும்..!

அடுத்த கூர்ப்பின் தேர்வு அப்படி அமைய இயற்கையை வலியுறுத்துகிறேன். :wub::D

இதில அறிவியல் வேற...???! :D :D

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெட்டைக்காக ஆண்களை சண்டை போடத் தூண்டுற இந்த உபயோகமற்ற பொறிமுறையை மாத்தி அமைக்கனும்..!

அடுத்த கூர்ப்பின் தேர்வு அப்படி அமைய இயற்கையை வலியுறுத்துகிறேன். :wub::D

இதில அறிவியல் வேற...???! :D :D

எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விட்டு ஏமாந்து "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று சொல்கிற மாதிரி இருக்கே :D

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாப் பழத்திற்கு கொட்டாவி விட்டு ஏமாந்து "சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்" என்று சொல்கிற மாதிரி இருக்கே :wub:

எட்டிற பழங்கள் எல்லாம் சாப்பிடுறதிற்கு உகந்ததாக இருப்பதில்லை. சூத்தை.. அணில் அரிச்சது.. எலி கடிச்சது.. காகம் கொத்தினது.. புழு பூந்தது.. மண் ஒட்டினது.. கண்டினது.. இப்படி பல இருக்கும். அதுகளை வைச்சுக் கொண்டு என்ன சா சா.. என்ன அருமை என்று வியந்து கொண்டா இருக்க முடியும். சீ சீ என்று தூக்கி வீசிவிட்டு போய்க்கிட்டு இருப்பதுதான் புத்திசாலித்தனம்..! :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டிற பழங்கள் எல்லாம் சாப்பிடுறதிற்கு உகந்ததாக இருப்பதில்லை. சூத்தை.. அணில் அரிச்சது.. எலி கடிச்சது.. காகம் கொத்தினது.. புழு பூந்தது.. மண் ஒட்டினது.. கண்டினது.. இப்படி பல இருக்கும். அதுகளை வைச்சுக் கொண்டு என்ன சா சா.. என்ன அருமை என்று வியந்து கொண்டா இருக்க முடியும். சீ சீ என்று தூக்கி வீசிவிட்டு போய்க்கிட்டு இருப்பதுதான் புத்திசாலித்தனம்..! :wub: :wub:

அப்படியே போய் ஏடன் தோட்டத்திலுள்ள நடுமரக் கனியைப் புசிப்பது நல்லது. அதுதான் எதுவித களங்கமுமற்ற மிகவும் புனிதமான பழம். தங்களினால் எச்சில்படுவதற்கு. ஆதாம்- ஏவாள் ஏடன் தோட்டத்தை நீங்கிய காலத்தில் இருந்து காத்திருக்கின்றது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே போய் ஏடன் தோட்டத்திலுள்ள நடுமரக் கனியைப் புசிப்பது நல்லது. அதுதான் எதுவித களங்கமுமற்ற மிகவும் புனிதமான பழம். தங்களினால் எச்சில்படுவதற்கு. ஆதாம்- ஏவாள் ஏடன் தோட்டத்தை நீங்கிய காலத்தில் இருந்து காத்திருக்கின்றது. :wub:

எனக்கு வேற வேலை வெட்டி இல்லாமல் இந்தப் பழங்களோட மிணக்கடுற எண்ணமில்லை. நீங்களே பறிச்சு சாப்பிடுங்கோ.. ஏன்னா நீங்க தான் அவற்றைப் பற்றி நல்லா அறிஞ்சு வைச்சிருக்கீங்க. :wub: :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேற வேலை வெட்டி இல்லாமல் இந்தப் பழங்களோட மிணக்கடுற எண்ணமில்லை. நீங்களே பறிச்சு சாப்பிடுங்கோ.. ஏன்னா நீங்க தான் அவற்றைப் பற்றி நல்லா அறிஞ்சு வைச்சிருக்கீங்க. :wub: :wub:

நன்மை தீமையை உணரச் செய்யும் நடு மரத்தின் கனிகளை உண்ணாமல் இருந்து ஏட்டுச் சுரைக்காய் ப(க)டித்துச் சுவைப்பதில் மினக்கெட்டு ஒரு பலனுமில்லை இல்லையென்று உணரும் காலம் வரும்போது பழம் கடிக்கப் பல்லும் இல்லாமல் இருப்பீர்கள் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நன்மை தீமையை உணரச் செய்யும் நடு மரத்தின் கனிகளை உண்ணாமல் இருந்து ஏட்டுச் சுரைக்காய் ப(க)டித்துச் சுவைப்பதில் மினக்கெட்டு ஒரு பலனுமில்லை இல்லையென்று உணரும் காலம் வரும்போது பழம் கடிக்கப் பல்லும் இல்லாமல் இருப்பீர்கள் :wub:

பழம் கடிக்க பல்லு இல்லாட்டில் கத்தியால வெட்டி சாப்பிடுறது.. இல்ல சாறு பிழிஞ்சு யூஸ் செய்து சாப்பிடுறது..! ஐயோ இது தெரியாம எவனாவது பழம் தின்னப் போய் வெளவால் கணக்கா வலையில மாட்டுவானா என்ன..! :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

--------

ஜார்டினின் ஆய்வு ,மீன்களின் குணத்தை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தியது. மூன்று தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டது. நடுவில் உள்ளதில் மட்டும் பெண் மீனும், இருபக்க தொட்டிகளில் திடமான ஆண் மீன்களும் விடப்பட்டன. ஒரு நாளைக்கு 20 நிமிடம் மட்டும் பெண் மீனை ஒரு தொட்டி மாற்றி மற்றொரு தொட்டி என ஆணோடு பழக விட்டனர். மூன்றாம் நாள் ,பெண், தனக்கான ஜோடியை தேர்ந்து எடுத்திருந்தது!!சற்று உடல் பருத்தும், தூக்கலான சிவப்பு அல்லது நீல நிறம் கொண்ட ஆண்களே அவை. அதே சமயம் பிற ஆண்களோடும் இம் மீன்கள் நட்பை வளர்க்க முனைந்த போது, இரு ஆண்களுக்கு இடையில் பிரச்சனை எழுந்தது. அது ஜோடி சேர்ப்பதில் துவங்கி ,எல்லை பிரச்சினை வரை இட்டுச் சென்றது. இவ்வகை மீன்களை பொறுத்தவரை, சண்டையில் ஈடுபடுவது சகஜம். இதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. தங்கள் உடல் வலிமையை பறைசாட்டுதல், எல்லை பாதுகாப்பு, எல்லோருடைய கவனத்தையும் கவர்தல் ,என ..........ஆண்களுக்கான சண்டையை 20 நிமிடங்களுக்கு மட்டுமே பார்வையிட்ட பெண் மீனின் மூளை சோதனை செய்யப்பட்டது. அதில் வெற்றி பெற்ற ஆணை நோக்கியே செயல்பாடு இருந்தது. இச்சோதனை, பல்வேறு சந்தர்ப்பங்களில் 15 க்கும் மேற்பட்ட பெண் மீன்களை கொண்டு ஆய்வகங்களில் சோதனையிடப்பட்டு கண்டறியப்பட்டது. ஆச்சரியமூட்டும் வகையில் அனைத்து பெண் மீன்களும், வெற்றி பெற்ற ஆணையே விரும்பின.தன் கணவன் அல்லது காதலன் தோற்ற போது, சோர்வுடன் அவனை கைவிட தயாராகின.

---------

இந்த, மீனில் இருந்து தான்...... மனிதன் கூர்ப்படைந்தான் என நினைக்கத் தோன்றுகின்றது.fish1.gif

ஆனால்.... இது உயிரியல் விதிப்படி சாத்தியமில்லை என நினைக்கின்றேன்.

ஏனென்றால்.... மனிதன் ஒரு பாலூட்டி விலங்கு.

மற்றும் படி மனிதனின் குணங்கள் எல்லாம் அச்சு, அசலாக இந்த மீனுக்கும் பொருந்துகின்றது.fish3.gif

.

பழம் கடிக்க பல்லு இல்லாட்டில் கத்தியால வெட்டி சாப்பிடுறது.. இல்ல சாறு பிழிஞ்சு யூஸ் செய்து சாப்பிடுறது..! ஐயோ இது தெரியாம எவனாவது பழம் தின்னப் போய் வெளவால் கணக்கா வலையில மாட்டுவானா என்ன..! :wub: :wub:

காலம் போனா கத்தியால வெட்டி சாப்பிட்டாலும் சூசு பிழிந்து சாப்பிட்டாலும் சமிபாடு அடையாது. பழத்தின் சுவையை உணர்வதும் சிரமமாக இருக்கும். :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போனா கத்தியால வெட்டி சாப்பிட்டாலும் சூசு பிழிந்து சாப்பிட்டாலும் சமிபாடு அடையாது. பழத்தின் சுவையை உணர்வதும் சிரமமாக இருக்கும். :wub:

இப்படியா நாங்க சொல்லி எங்களையே ஏமாத்திக்கிறம். வயசான தாத்தா பாட்டிங்களோ.. நல்லா பழம் சாப்பிட்டு என்ஜோய் பண்ணுறாங்க..! அவங்க யாரும் இப்படி சொல்லுறதில்ல. ஆனால் சில இளந்தாரிங்க தான் இப்படி காலத்தை பழம் சாப்பிடுறதில வீணடிக்க கதையளந்து கிட்டு இருக்காங்க..!

இளமையில் கல்வி சிலையில் எழுத்து. இளமையில் ஏட்டுச் சுரக்காய் தான் நல்லது. ஏன்னா அதற்குரிய வயசு அது. அதைவிட்டிட்டு அந்த வயசில பழம் கனி என்று அலைஞ்சு திரிஞ்சிட்டு.. அப்புறம் பழம் கனி அலுத்துப் போனதும்.. கொட்டாவி விட்டுக் கொண்டு இருப்பதிலும்..????!

காலம் போனாலும்.. கத்தியால வெட்டி சாறு பிழிஞ்சு பழம் கனி சாப்பிடலாம்.. அது ருசிக்கும்..! :wub: :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காலம் போனா கத்தியால வெட்டி சாப்பிட்டாலும் சூசு பிழிந்து சாப்பிட்டாலும் சமிபாடு அடையாது. பழத்தின் சுவையை உணர்வதும் சிரமமாக இருக்கும். :wub:

-------

காலம் போனாலும்.. கத்தியால வெட்டி சாறு பிழிஞ்சு பழம் கனி சாப்பிடலாம்.. அது ருசிக்கும்..! :wub: :wub:

பருவத்தே.... பயிர் செய்ய வேண்டும் என்பது நம் முன்னோர் வாக்கு.

பருவம் தவறி எந்தக்காரியம் செய்தாலும்.... அது பயன் பெறுவதில்லை.

நாக்கின் நரம்புகள், உடலின் உள்ளுறுப்புகள் வயது போகப், போக தமது வீரியத்தை இழந்த பின் ஜூசைக் குடிச்சு என்ன பிரயோசனம்.

  • கருத்துக்கள உறவுகள்

பருவத்தே.... பயிர் செய்ய வேண்டும் என்பது நம் முன்னோர் வாக்கு.

பருவம் தவறி எந்தக்காரியம் செய்தாலும்.... அது பயன் பெறுவதில்லை.

நாக்கின் நரம்புகள், உடலின் உள்ளுறுப்புகள் வயது போகப், போக தமது வீரியத்தை இழந்த பின் ஜூசைக் குடிச்சு என்ன பிரயோசனம்.

அது பழமை மொழி தானே. இப்போ பச்சை வீடுகளில் 365//24/7 பயிர் செய்யலாம். பழம் பிடுங்கலாம். அறிவும் தொழில்நுட்பமும் வாழ்க்கை முறைகளை மாறி விட்டன. இன்னும் பழைய காலத்தில் இருக்க முடியாது. இளமையில் கல்வி என்பது அவசியமாகி விட்டுள்ளது அறிவியலை வளர்க்க.

எந்த உறுப்பையும் எப்ப வேண்டும் என்றாலும் துடிப்போடு வைக்கக் கூடிய அளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கிறது. ருசிச்சு ருசிச்சு பழம் தின்னத்தானா வசதி இல்லாமல் இருக்கும். அதுக்கும் வசதிகள் வந்து கொண்டே இருக்கும். :wub: :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது பழமை மொழி தானே. இப்போ பச்சை வீடுகளில் 365//24/7 பயிர் செய்யலாம். பழம் பிடுங்கலாம். அறிவும் தொழில்நுட்பமும் வாழ்க்கை முறைகளை மாறி விட்டன. இன்னும் பழைய காலத்தில் இருக்க முடியாது. இளமையில் கல்வி என்பது அவசியமாகி விட்டுள்ளது அறிவியலை வளர்க்க.

எந்த உறுப்பையும் எப்ப வேண்டும் என்றாலும் துடிப்போடு வைக்கக் கூடிய அளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கிறது. ருசிச்சு ருசிச்சு பழம் தின்னத்தானா வசதி இல்லாமல் இருக்கும். அதுக்கும் வசதிகள் வந்து கொண்டே இருக்கும். :wub: :wub:

கண்ட, குளிசைகளை போட்டு.... உடம்பை துடிப்போடு வைத்திருக்கச் சொல்கிறீர்களா?

அதன் பக்க விளைவுகளின் ஆபத்தை எந்த தயாரிப்பாளரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

ஏன் சும்மா.... வில்லங்கத்தை, விலைக்கு வாங்குவான்.

பேசாமல்.... உடம்பில் உள்ள ஹோமோன்கள் சுரக்க ஆரம்பிக்கும் போதே.... நாமும் அதற்கு இசைவாக நடக்கப் பழக வேண்டும்.

காட்டு மரங்கள் கூட.... குளிருக்கு இலையை கொட்டி, வெய்யிலுக்கு பூப் பூத்து, காய் காய்கிறதே...

இயற்கைக்கு விரோதமாக நடந்தால்..... எல்லாம் கெட்ட காலம் தான்..... :wub::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ட, குளிசைகளை போட்டு.... உடம்பை துடிப்போடு வைத்திருக்கச் சொல்கிறீர்களா?

அதன் பக்க விளைவுகளின் ஆபத்தை எந்த தயாரிப்பாளரும் வெளிப்படையாகச் சொல்வதில்லை.

ஏன் சும்மா.... வில்லங்கத்தை, விலைக்கு வாங்குவான்.

குளிசைகள் போடப் போகவேண்டிய இடம்

81211947.gif

  • கருத்துக்கள உறவுகள்

குளிசைகள் போடப் போகவேண்டிய இடம்

81211947.gif

வயாக்கரா குளுசை போட்டு.... இறந்தவர்களின், சுடலை வாசலில் நட்டு வைத்துள்ள மரங்களில் கூட காமம் தெரிகின்ற‌து. Just_Cuz_06.gifBananeyessss.gif

படத்தை நன்கு ரசித்தேன் கிருபன். :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.