Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைக் குழந்தைகளுக்கு இரண்டு தந்தையர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Polish twins have different fathers

http://www.ndtv.com/article/world/polish-twins-have-different-fathers-75259

இதில் ஏதும் சந்தேகமிருப்பின் விஞ்ஙான அமைச்சர் நெடுக்ஸ் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

  • கருத்துக்கள உறவுகள்

What a shame! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன என்று சாத்தியம் என யாராவது கூறுவார்களா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் அந்தக் குழந்தைகள் ஒவ்வாத இரட்டையாக இருக்க வேண்டும். ஒத்த இரட்டை என்றால் ஒரு அப்பா அம்மா தான் இருக்க முடியும். அதற்காக ஒவ்வாத இரட்டைகளுக்கு எப்போதும் இரண்டு அப்பா என்று நினைக்கப்படாது. அம்மாக்கள் தப்புப் பண்ணாதவங்களா கற்புடையவங்களா இருக்கனும் என்றது இதுக்குத்தான். :lol::D

இது நிகழ்ந்திருக்க அடிப்படையில் இரண்டு சாத்தியப்பாடு உண்டு..

பரிசோதனைக் குழாய் குழந்தைகளாக இந்த இரட்டைகள் உருவாக்கப்பட்டிருந்தால்.. குழந்தை உருவாக்கத்தின் போது இரண்டு வெவ்வேறு ஆண்களின் ஆண் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

இயற்கையாக நிகழ்ந்திருந்தால்.. குறித்த பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு தொடர்பு வைத்திருப்பின் இது சாத்தியப்பட்டிருக்கும்.

பொதுவாக மனிதப் பெண்கள் அவர்களிடம் இருக்கும் சூலகங்களில் இரண்டில் ஒன்றில் இருந்து மாதத்திற்கு ஒரு தடவை என்ற முறையில் முட்டை இடுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் இரண்டு சூலகங்களும் ஒரே தடவையில் அல்லது சம காலத்தில் முட்டையிடுவதால்.. இந்த இரட்டைகள் உருவாகின்றனர். இது இயற்கையாக.

ஆனால் இப்போது ஆய்வுசாலைகளில் செய்யப்படும் முறைகளின் படி இரட்டைகள் அமைவது அதிகரித்துள்ளது.

அதுமட்டுமன்றி சில பெண்களுக்கு FSH எனும் முட்டை முதிர்வடைவதை தூண்டும் வேதியல் பொருள் சுரப்பது குறைவாக அமைவதால் அவர்களுக்கு போதிய முட்டை உருவாக அதனை செயற்கையாக அளிப்பார்கள். இதன் மூலமும் இரட்டைகள் உருவாகலாம்.

ஆனால் இரண்டு அப்பா அமைய இருக்கும் காரணங்களில் மேலே சொன்னது போல.. 1. IVF (விந்து வங்கியில் இருந்து வாங்கின விந்தில் இருந்து குழந்தைகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ) 2. குறித்த அம்மாவின் நடத்தைப் பிழை..! :o:D

------------------

தரப்பட்டுள்ள செய்தியின் பிரகாரம்.. குறித்த பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு தொடர்பு கொண்டிருப்பது தெரிகிறது. அந்த வகையில் இது அதிசயம் அல்ல. அந்தக் கணவனுக்கு செய்யப்பட்ட சதி. :lol::)

"The twins' mother became pregnant while she was having relations with her husband and also having an affair, reported broadcaster TVN 24."

The woman, whose name was not given, filed for a divorce after giving birth to the twins, one male and one female.

Edited by nedukkalapoovan

தரப்பட்டுள்ள செய்தியின் பிரகாரம்.. குறித்த பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களோடு தொடர்பு கொண்டிருப்பது தெரிகிறது.

இது உண்மையாயின், இந்த பெண் எவ்வளவு கால இடைவெளியில் மற்றைய ஆணுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்? அதாவது சில நிமிடங்களுக்குள் மற்றையவருடன் உறவு வைத்திருந்தால்தான் இது சாத்தியமா? அல்லது சில நாட்கள் கழித்து உறவுகொண்டிருந்தாலும் இது சாத்தியமா?

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாயின், இந்த பெண் எவ்வளவு கால இடைவெளியில் மற்றைய ஆணுடன் உறவு கொண்டிருக்க வேண்டும்? அதாவது சில நிமிடங்களுக்குள் மற்றையவருடன் உறவு வைத்திருந்தால்தான் இது சாத்தியமா? அல்லது சில நாட்கள் கழித்து உறவுகொண்டிருந்தாலும் இது சாத்தியமா?

இது உண்மையாயின் அல்ல.. உண்மை என்பதாகத்தான் செய்தி சொல்கிறது.

சில நிமிடங்களில் எல்லாம் அவசியமில்லை. ஏறத்தாழ 72 மணித்தியால கால இடைவெளியில் இவை நடந்திருக்கலாம். ஏனெனில் பெண்ணின் உடலில் ஆணின் ஆணணு பொதுவாக 72 மணித்தியாலங்கள் உயிர் வாழும். அந்த வகையில் தான் இந்தப் பெண்ணின் நடத்தையும் முட்டையிடலும்.. அமைந்திருக்க வேண்டும்.

கருக்கட்டிய முட்டை கருப்பையில் பதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தான் அதன் பிறப்பின் நேரம் தீர்மானிக்கப்படும். கருக்கட்டிய முட்டை உடனடியாக கருப்பையில் பதிக்கப்படுவதில்லை. அதற்கு சில நாட்களோ அல்லது வாரமோ எடுக்கலாம். அந்த வகையில் குழந்தைகள் இரண்டும் சம காலத்தில் கருப்பையில் பதிக்கப்படவும் பிறக்க வாய்ப்பும் அமைகிறது.

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் குழந்தை பிறந்ததாலேயே அம்மணி அகப்பட்டுவிட்டார் .

இல்லாவிட்டால்

கடலில்கப்பல் போனா என்ன அடையாளமா தெரியுது என்று போய்க்கொண்டேயிருக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைக் குழந்தை பிறந்ததாலேயே அம்மணி அகப்பட்டுவிட்டார் .

இல்லாவிட்டால்

கடலில்கப்பல் போனா என்ன அடையாளமா தெரியுது என்று போய்க்கொண்டேயிருக்க வேண்டியது தான்.

ஆயிரத்தில் ஒன்று பிடிபட்டுள்ளது என்கிறீர்கள். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.