Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! - பாகம் 2

Featured Replies

அன்பான புலம்பெயர் மக்களே எல்லாவற்றையும் செய்யுங்கள்...ஆனால் இதையும் படியுங்கள்! - பாகம் 2

எம் அன்பிற்குரிய மக்களே, எனது இரண்டாவது மடல் இது. போராளிகள் வெளிநாட்டில் உள்ள செயற்பாட்டாளர்கள் ,மக்கள் என பலர் எனக்குக் கடிதங்கள் அனுப்புகின்றார்கள். அதில் உங்கள் பிரச்சினைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளுங்கள், ஏன் இப்படி எழுதுகின்றீர்கள் எனக் கேட்கின்றனர்.

நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லட்டுமா?

pic643.jpg

இது எனது பிரச்சினை அல்ல மக்களே உங்கள் பிரச்சினை, உங்கள் நாட்டின் பிரச்சினை, நீங்கள்தான் நிதி கொடுக்கின்றீர்கள், நீங்கள்தான் எம் தலைவர் மீதும், இயக்கத்தின் மீதும் ஒட்டுமொத்தக் கேள்விகளைக் கேட்கின்றீர்கள். உங்கள் மத்தியில், உங்களுக்கு அருகில், உங்களுக்குத் தெரிந்தவர்கள் தவறு செய்யும் போது அதனை உரிய இடத்தில் உரியவாறு கேட்காமல் எங்கோ இருக்கின்ற தலைமை மீதும், எங்கோ செயற்படுகின்ற போராளிகள் மீதும், எப்போதோ தம் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்கள் மீதும், தியாகங்கள் மீதும் ஒட்டுமொத்தப் பழிகள் சுமத்தப்படுகின்றன. அதற்காகவே இந்த மடலை எழுதுகின்றேன்.

தாயகத்தில் இந்தவார நிலைமை என்ன?

நெடுங்கேணியில் 400 ஏக்கர் நிலம் சிங்களவர்க்கு நெற்செய்கைக்கு வழங்கப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் இதனைவிட அதிகம். வன்னியில் பயிர்ச்செய்கைக்கு உட்படாத நிலங்கள் குத்தகைக்கு சிங்கள, முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்க நடவடிக்கை. வன்னியில் 1100 பெற்றோர் இல்லாத குழந்தைகளைத் தத்தெடுக்க அரசாங்கம் தாய்மார்களை வாடகைக்குக் கேட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் மாதம் 1500 ரூபா கொடுக்கின்றது. இந்தப் பகிரங்க விண்ணப்பத்திற்கு சிங்கள, முஸ்லிம் செவிலியர்கள் விண்ணப்பிக்கின்றனர். வடக்கு-கிழக்கில் 80,000 தாய்மார் விதவையாகி இருக்கின்றனர். இவர்களில் சிலர் இராணுவத்தின் இச்சைக்கு இரையாகிக்கொண்டு இருக்கின்றனர். விடுவிக்கப்பட்ட போராளிகள் மீண்டும் வலைவீசப்படுகின்றனர்.

இவை எல்லாம் கடந்த சில வாரச் சம்பவங்கள்.

nediyavan1.jpg

ஆனால் புலம்பெயர் நாட்டு போராட்டச் செயற்பாட்டாளர்கள் எனக் கூறுவோர் செய்வது என்ன?

மாவீரர் தினம் கொண்டாடி அதில் பலகாரம் சுட்டு அதி உயர் விலைக்கு விற்று, வீரர் தியாகத்தில் மூழ்க்கிப்போன மக்கள் தலையில் மாவரைச்சுவிட்டு சேர்ந்த பணத்தில் நிர்வாகம் நடத்துகினமாம். பலகாரம் விற்கும் போது எல்லாம் நாட்டிற்குத்தான் என்றனர். மாவீரர் நாள் வருமானத்தின் வரவு செலவு என்ன? ஏன் முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் கூட, மாவீரர் நாள் நிகழ்வுக் கணக்கையாவது காட்டலாமே? இந்த வருமானத்திற்கு என்ன நடந்தது?

எதையாவது செய்வோம் என நினைத்து தன்னியல்பாக செயற்படும் மக்கள், இளையோர்கள் ஒருபக்கம். அதற்கு தாம்தான் பொறுப்பு என முத்திரை குத்தி வாழ்வோர் ஒருபக்கம். நாட்டில் மக்களுக்கு என நிகழ்ச்சிகள் செய்து அதில் பணம் சுருட்டுவோர் இன்னொருபக்கம். இவ்வாறுதான் புலத்தில் போராட்டச் செயற்பாடுகள் நடக்கின்றன.

ஆனால் மக்களாகிய நீங்கள் கேட்கலாம் ஏன் நாங்கள் மஹிந்தவை அடித்து விரட்டவில்லையா என்று. நடந்ததுதான், வாழ்த்துக்கள். ஆனால் அது அதிஸ்டவசமாக பிற ஊடகங்களின் விழிப்புணர்வு, பிரிட்டனில் உள்ள தமிழ் மாணவர்கள் சிலரின் முன்னெடுப்புத்தான் பற்ற வைத்தது. மக்களாகிய நீங்கள் அணி திரண்டீர்கள். இது யதார்த்தமான தொன்று. பின்னர் அதற்கு மகுடம் சூட முடிசூடா மன்னர்கள் முன்னுக்கு வந்து தேநீர் , பிஸ்கட் கொடுத்து பெயர் எடுத்த கதை வேறு.

அதற்குக் கூட பணம் திரட்டியுள்ளனர். பணம் திரட்டுவதற்காகவே.. திட்டம் போடும் புத்திசாலிகள் எங்கள் செயற்பாட்டாளர்கள். மஹிந்த வரப்போகின்றார், ஏதாவது செய்யவேண்டும் என்று மஹிந்த வந்த கையோடுதான். சட்டவாளர்களிடம் போட்டி போட்டுகொண்டு நின்றனர் இலண்டனில் உள்ள மூன்று அமைப்பினர். ஆனால் அதற்கு பணம் 7000 பவுண்ஸ் தேவை எனச் சொன்னபோது ஆட்கள் எஸ்கேப். பிறகுபார்த்தால் இலண்டனில் உள்ள செயற்பாட்டாளர்கள் மஹிந்தவிற்கு வழக்குப் போட காசு என தண்டலில் இறங்கினர். இறுதிவரை இந்தத் திட்டத்திற்கு என்ன நடந்தது என எவருக்கும் தெரியாது.. (மன்னிக்கவும் இதெல்லாம் இராணுவ இரகசியம் வெளியில போகவே கூடாது)

a55010dbda823abd940915b3ac68_grande.jpg

அடுத்ததாக நான் முக்கியமாகச் சொல்ல வருவது..

மாவீரர் தின வருமானம் (செலவு போக) மாவீரர் போராளி குடும்பங்களை பராமரிக்கத்தான் இந்த நிதிகள் பயன்படும் என்று பலகாரம் சுட்டு விற்றவர்கள், பூ விற்றவர்கள், ஆடம்பர நிகழ்ச்சி செய்தவர்கள் சொன்னார்கள். அதில் எவ்வளவு குடும்பங்களைப் பார்த்தார்கள்? சரி வருமானம் செலவுக்குத்தான் ஈடுசெய்யப்பட்டது என்றால் அதனை ஏன் மக்களிடம் சொல்லக் கூடாது? இலாப நட்டம் வருவது சகசம்தானே? இப்படி மக்கள், மக்கள் என்று எவ்வளவு காலம் ஏமாற்றுவார்கள்? அங்கு இருக்கின்ற மக்கள் என்ன பாவம் செய்தார்கள்? மக்களுக்கு என்று நிகழ்ச்சிகள் செய்த பணத்தில் நடந்தவை என்ன பாருங்கள் மக்களே. சில எடுத்துக்காட்டுக்கள்.

54254207.jpg

பிரித்தானியா மாவீரர் நாள் மொத்த வருமானம்:

கன்ரீன் 30,000 பவுண்ஸ்

நிதி சேகரிப்பு ( ஒவ்வொரு குடும்பத்திடம் இர்ந்தும் 50 - 500 பவுண்ஸ் வாங்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 ஆயிரம் சேர்ந்ததாகத் தகவல்)

விளம்பரம் கிட்டத்தட்ட 30,000

மண்டப விற்பனைகள் ஏனைய கொடைகள் 20,000

இதனைவிட பெரும்பாலான பொருட்கள் மாவீரர் தினத்திற்கு என இலவசமாகவே பெறப்பட்டன.

செலவு மண்டபம் 27,000

கதிரை 6000

சவுண்ட் சேர்விஸ், இன்சுரன்ஸ், உட்பட 10,000 (ஏனைய செலவுகள் தெரியவில்லை (மண்டபம், கதிரைதான் முக்கிய பெரும் செலவு)27_11_07_03.jpg

ஆகவே மிகுதி பணம் எங்கே?.. கணக்குக் காட்ட முயற்சிகள் நடக்குதாம். எப்படி? ரேடியோ விளம்பரம் (ஐ.எல்.சி ) 10,000 பவுண்ஸ். இந்த ரேடியோ தனம் மற்றும் கமல் ஆகியோரால் தொடங்கப்பட்டது. அவர்கள்தான் பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்ரீன் முகவரும் தனம் தான். அந்தக்கணக்கும் அப்படித்தான்... இதுவரைக்கும் அவற்றை கையை மீறி கன்ரீன் போகாது. ஏனென்றால் மற்றவர்கள் உணவு உருசி இல்லையாம். அடுத்ததாக பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கான செலவு என ஒரு வெட்டு. இதில் வோக்கி டோக்கி மற்றும் சிறு செலவுகள் ஆக கூடினால் 2000 பவுண்ஸ் தான் வரும். ஆனால் செக்குரிட்டி எக்ஸ்பேட் கமல் அதுக்கு ஒரு கணக்கு காட்டி சிட்டை தேடித் திரிகின்றார். இந்தக் கூத்து பிரித்தானியாவில் நடக்குது.

இந்த வருடம் விளையாட்டுப்போட்டி இலண்டனில் நடந்தது. அதில் கன்ரீன் வருமானம் 14,000 பவுண்ஸ் தனம் வாங்கிக் கொண்டுபோனார். அதனை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார். அதனை மக்களுக்கு அனுப்பப் போவதாகச் சொன்னவர் அதே கதைதான். இப்போ அதனை ஐ.எல்.சி வானொலிக்குக் கொடுத்து விட்டதாகச் சொல்கின்றார். இந்த வானொலியின் கணக்காளர் இவர்தான்.

2009 மாவீரர் நாள் கணக்கும் இதுவரை இல்லை. இப்போதான் சிட்டை தேடித் திரிவதாகச் சொல்கின்றனர். 2009 இல் தனம், ரெஜி, ரவி, கமல், ஸ்கந்தா, சுகந்தன் என்பவர்களே மாவீர தினம் நடத்தினார்களாம். இந்த வருடம் கமல், தனம் இருவருமே நடத்தினார்களாம். ஸ்கந்தா மற்றும் சுகந்தன் ஆகியோர் மண்டபம் மட்டும் எடுத்துக் கொடுத்தார்களாம். ஆனால் இவர்கள் அனைவரையும் கணக்குக் கேட்டால் தனம், கமல் ஆகியோர்கள்தான் அதற்குப் பொறுப்பு என்கின்றனர். அவர்களிடமே கேளுங்கள் என்கின்றனர். அவர்களோ காட்டுவோம் என்கின்றனர். இப்பிடித்தான் ரெஜி அதிரடியாக ஓர் அறிக்கைவிட்டுவிட்டு இப்போ அண்டகிரவுண்ட் போய்விட்டார்.

541.jpg

அடுத்ததாக பிரான்சில்.

மொத்தவருமானம் 97,000 யூரோ. செலவுகள் தெரியவில்லை முடிந்தால் அடுத்த இதழில. தருகின்றேன். ஆனால் மாவீரர் நாள் முடிந்தவுடன் அங்கும் பங்கு பிரிப்பு நடந்தது. இதனைச் சொன்னால் வெட்கக்கேடு, சொல்லாவிடில் மன அழுத்தம் வந்தே சாகவேண்டிவரும்..

பிரான்ஸ் மாவீர நாள் முடிந்தவுடன் அடுத்த நாள் தளபதி றீகன் ( பிரான்ஸ் பொறுப்பாளரை இப்படித்தான் அழைக்க வேணுமாம்) இவர் தலைமையில் ஒரு பாட்டி நடந்தது. ஏனென்றால் மாவீரர் தினத்தினை நன்றாகச் செய்ததற்கான பாட்டியாம். அதன் செலவு 470 யூரோ.

பின்னர் பங்கு பிரிக்கப்பட்டது. அதில் ரீகன் அவர்களின் பாதுகாப்புக்கு 4000 யூரோ ( நான்கு பாதுகாப்பு ஆட்கள், அவர்களின் கார் செலவு, அவரிற்கான இரண்டு வோக்கி டோக்கி தொலைபேசி செலவுகள் உட்பட)

புலிகளின் குரல் வானொலி நந்தகோபனின் மாவீரர் நாள் உரையினை ஒலிபரப்பாத படியால் புலிகளின் குரலுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய 2000 யூரோ.

புதிதாக இன்னொரு பெயரில் புலிகளின் குரல் வானொலியை உருவாக்க முதலீடு 20,000 யூரோ.

அதற்காக இந்தியாவில் ஸ்டூடியோ ஒன்று வாடகைக்கு எடுக்கவும் இரண்டு பணியாளருக்குமான செலவு 15,000 யூரோ.

பதிவு , புதிய சங்கதி, ஈழமுரசு ஆகியவற்றை பராமரிக்க ஊடகச் செலவு 5000 யூரோ..

இப்படித்தான் பிரான்ஸ் மாவீரர் நாள் வருமானத்தில் பங்கு போடப்பட்டுள்ளது.

p1.jpg

அன்பான மக்களே, வருகின்ற வருவாயில் நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்வோம் எனக் கூறும் இவர்களின் பங்கீட்டைப் பாருங்கள். மெய்ப்பாதுகாவலர்க்கும், வோக்கி டோக்கிக்கும் தமது இருப்பை நியாயப்படுத்தவும் எவ்வளவு செலவு செய்கின்றார்கள்? தளபதி அல்லது அண்ணை என்றுதான் தன்னைக் கூப்பிடவேண்டும் எனக் கூறும் றீகன் கொஞ்சக்காலம் சிறையில் இருந்தார் என்பதுதான் மக்களிடம் இருக்கும் பரிவு. ஆனால் இவர் என்ன பிரான்சில் பதுங்கித் தாக்குதலா செய்யப்போகின்றார்? மண்டைதீவுச் சண்டையில் 100 இற்கு மேற்பட்ட போராளிகளைப் பலிகொடுத்திவிட்டு சிறு காயங்களுடன் இந்தியாவிற்கு சிகிச்சைக்குச் சென்று அப்படியே தலைமைக்குத் தெரியாமல் ஐரோப்பிய நாடொன்றிற்குத் தப்பி வந்தவர்தான் இந்த ரீகன்.

பிரான்சிற்கு வந்து தனக்கு புலிகளால் ஆபத்து அவர்கள் பிடியில் இருந்து ஓடி வந்துவிட்டேன் என அசைலம் கேட்டு வென்றார். தலைமைக்கு எதிராக பலதடவைகள் பேசியுள்ளார். இயக்கம் நிதி கேட்க கதவைத் தட்டியபோதும் அவர்களை விரட்டியடித்தார். பின்னர் காஸ்ரோ அண்ணர் அவர்கள் தன்னுடன் ஒன்றாக தீவகத்தில் செயற்பட்டவர் என்பதற்காக சமாதான காலத்தில் யாருடைய கருத்தையும் கேட்காமல் றீகன் அவர்களை பிரான்சுக்குப் பொறுப்பாக நியமித்தார். இவரிடம் காசு கேட்கப்போய் பேச்சு வாங்கிய செயற்பாட்டாளர்களே இவருக்கு கீழ் பணி புரிய வேண்டிய துர்ப்பாகிய நிலை பிரான்சில் ஏற்பட்டது விந்தைதான்.

ஏன் இவரைப்பற்றி நான் கூறுகின்றேன் என்றால்.. இவர்தான் இப்போ பிரான்சில் எம் தலைவர் பிரபாகரன் 5000 பேருடன் காட்டில் இருப்பதாகவும் விரைவில் வருவார் எனவும் கூறிவருகின்றார். அதுமட்டுமல்ல வேடிக்கை என்னவெனில் தலைவருடனான தொடர்பு நந்தகோபனிடமும், நெடியவனிடமும் மட்டும் தான் உள்ளது என மேற்கோள் காட்டியும் வருகின்றார்

pic643.jpg

நந்த கோபன் தனது பொறுப்பாளரை விட்டு ஓடிவந்தவர் இவரிடமா தலைவர் தொடர்பைப் பேணுவார்? நெடியவனுக்கு மே மாதம் வரை காஸ்ரோ அண்ணருடன் மட்டுமே தொடர்புடன் இருந்தவர். இவர் என்ன செய்தாலும் காஸ்ரோ அண்ணரூடாகத்தான் வரும்.

கே.பி அவர்களுடனேயே எம் தலைவர் நேரடியாக இறுதிக்கட்டங்களில் கதைக்கவில்லை. சூசை அண்ணரூடாகவும் , அண்ணையின் தொடர்பாளர் ஊடாகவும் தான் கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. இத்தகைய சூழலில் நந்த கோபனிடமும், நெடியவனிடமும் தலைவர் 5000 பேருடன் தொடர்பில் உள்ளார் எனக் கூறும் இந்த றீகன் என்பவர் எதனை மக்களுக்குச் சொல்ல முற்படுகின்றார்?

எந்தக் கதையினைச் சொன்னாலும் சனம் காசு தருகுதில்லையே என றீகன் அல்லது பரிதி என்பவர் நந்தகோபனிடம் சொல்ல, நந்த கோபன் அவர்களினால் சொலப்பட்ட ஓர் ஐடியாவே சட்ட நடவடிக்கைக்கான நிதி சேகரிப்பு ( நந்த கோபனின் பதிவு தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது). ஏன் மாவீரர் நாள் வருமானம், பிரான்சில் இயங்கும் பலசரக்குக் கடை வருமானம், மானாட மயிலாட வருமானத்தின் ஒரு பகுதியினை உங்கள் சட்ட நடவடிக்கைக்குப் பயன்படுத்தினால் என்ன?

கனடாவில்:

ஜேர்மனி நாட்டில்..

அங்கு மாவீரர் நாள் என்றால் என்ன, நிகழ்வு என்றால் என்ன கன்ரீன் நடத்துவது என்றால் என்ன, எல்லாவற்றையும் அமைப்பிற்குப் பணி செய்யும் ஒருவர்தான் நடத்துவார்.

(ரெஸ்ரூரன்கள் நடத்தும் அமைப்பு செயற்பாட்டாளர்களுக்குத்தான் கன்ரீன் ஒப்பந்தம் கொடுக்குமாறு கீழ இருந்து சொல்லி இருக்கினமாம்)

பேளின் சங்கர் என்பவர்தான் கன்ரீன் நடத்துனர். இவர் ஆரம்பத்தில் புனர்வாழ்வுக்கழகத்தின் பேளின் இணைப்பாளராக இருந்தவர். சுனாமி காலகட்டத்தில் புனர்வாழ்வு அமைப்புக்கு ரெஸ்ரூரன்ட் வாங்கப்போகிறேன் என சுனாமி நிதியில் ரெஸ்ரூரன்ட் வாங்கினார். பின்னர் இலாபம் ஓகோ என்று வரவே புனர்வாழ்வுக்கழகம் தனக்கு சம்பளம் சரியாக தரவில்லை என்று கூறிவிட்டு ரெஸ்ரூரன்ரினை தன்வசமாக்கியவர். இதனால் புனர்வாழ்வுக்கழகத்தில் இருந்து விலத்தப்பட்ட இவர் பின்னர் அமைப்புப் பொறுப்பாளர் வாகீசனுக்கு வால்பிடித்து பேளின் துணைப்பொறுப்பாளராக வலம் வந்தவர். இப்போ சிறிரவிக்கு இலவச உணவு கொடுத்து பொறுப்பாளராகியுள்ளார். இவரின் துணைவியார் தான் நாடு கடந்த எம்.பியும் கூட. சுனாமிக்குப் பின்னர் ஆரம்பித்த ரெஸ்டூரன் இப்போ நான்கு கடைகளாகப் பெருக்கெடுத்துள்ளது. ( சுனாமி காலத்திற்கு முன்னர் இவர் மாதாந்தம் 700 யூரோவிற்கு சம்பளத்திற்குப் பணி புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் திருகுதாளங்களிற்கு புனர்வாழ்வுக்கழக பொறுப்பாளர் ரெஜி காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அங்கு உள்ளவர்களின் மனக்குமுறல்)

இப்படியானவர்கள்தான் மாவீரர் தினம் செய்தார்கள். மாவீரர் தினம் செய்த வருமானம், நிகழ்ச்சிகள் நடத்திய வருமானம், அண்மையில் மானாட மயிலாட கலைஞர்களைக்கொண்டு நடாத்திய வருமானம் எல்லாம் நாட்டில் மக்களுக்கு என்று சொல்லப்பட்டது. ஆனால் நாட்டு மக்களிற்கு எவ்வாறு இந்தப் பணம் செல்லப்போகின்றது என்பதனைப் பாருங்கள்.

மானாட மயிலாட நிகழ்ச்சி ஏற்பாடு என்ற பெயரில் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆழுக்காள் பங்கு போட்டுள்ளனர்.

குறிப்பு: மானாட மைலாட கலைஞரின் நிகழ்ச்சி அதனை புறக்கணிக்க வேண்டும் என இவர்கள்தான் முன்பு அறிக்கை விட்டதனை இணையங்களில் பார்த்துள்ளேன்.

அப்படியானவர்கள் மக்களை புறக்கணிக்க சொல்லிவிட்டு தாம் நிகழ்ச்சி நடத்துவது 11 ஆயிரம் யூரோவிற்காகவா?

இதனை வேறு யாரும் செய்திருந்தால் இவர்கள் எவ்வாறு பிரச்சாரம் செய்திருப்பார்கள்?

சரி அப்படித்தான் செய்தாலும் அந்தப் பணம் எப்படி பங்கு போடப்படப்போகின்றது என்பதனைப் பாருங்கள் மக்களே

nediyavan1.jpg

நெடியவனுக்கு நிர்வாகச் செலவு என 3500 யூரோ அனுப்பியுள்ளனர்.

மிகுதி பணத்தில் ஜேர்மனி நாட்டில் தமது செயற்பாட்டாளர்களுக்கு என நந்த கோபனின் ஏற்பாட்டில், நெடியவனின் ஆலோசனைக்கு அமைய மூன்று நாள் செமினார் ( பயிற்சிப் பட்டறை) நடத்தப்போகின்றார்கள்.

இதில் ஒவ்வொரு நாட்டிலும் இருந்து ஆகக் குறைந்தது 10 - 20 பேர் ஜேர்மனிக்கு வருகின்றார்களாம். இந்த பயிற்சிப் பட்டறையின் நோக்கங்கள்

1. மீண்டும் சீரளிந்து போன அனைத்துலகச் செயலகத்தின் கட்டமைப்பினை எவ்வாறு புதுப்பிப்பது. இதற்கு மக்களிடம் எவ்வாறான கதைகளை முன்னெடுப்பது.

2. நாடு கடந்த அரசு மற்றும் இயக்கக் கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எப்படி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது.

3. என்ன பொய்களைச் சொல்லி நிதி சேகரிப்பினை மேற்கொள்வது.

4. தாம்தான் உண்மையான புலிகள் என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்துவது.

கிட்டத்தட்ட 400 பேர்களை எதிர்பார்த்து செய்யப்படும் இந்தப் பட்டறைக்கு செலவு என்ன தெரியுமா மக்களே? நீங்களே கணக்குப் போடுங்கள்.. வடை, ரோல், தேநீர், சாப்பாடு, தங்குமிடம், போக்குவரத்து… இவ்வாறு நீளும் செலவுகள். அத்துடன் தென் இந்தியாவில் இருந்து சிறப்புப் பேச்சாளர்கள் வேறு.

ஆகவே மக்களுக்கு மக்களுக்கு எனச் சொல்லிச் செய்யும் நிதிகள் எல்லாம் எப்படிக் கரைகின்றன பாருங்கள்.

எதையுமே செய்யவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எதனை முதல் செய்ய வேண்டும். அங்கு மக்கள் என்ன பாடுபடுகின்றார்கள்? பசித்த வயிற்றுக்குத்தானே முதல் எதையாவது செய்ய வேண்டும்.

மீண்டும் ஒருமுறை தாயகத்தின் நிலைமையினைப் பாருங்கள்

நெடுங்கேணியில் 400 ஏக்கர் நிலம் சிங்களவர்க்கு நெற்செய்கைக்கு வழங்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் இதனைவிட அதிகம்.

வன்னியில் பயிர்ச்செய்கைக்கு உட்படாத நிலங்கள் குத்தகைக்கு சிங்களவன், முஸ்லிம் மக்களுக்கு கொடுக்க நடவடிக்கை.

வன்னியில் 1100 பெற்றோர் இல்லாத குழந்தைகளைத் தத்தெடுக்க அரசாங்கம் தாய்மார்களை வாடகைக்குக் கேட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் மாதம் 1500 ரூபா கொடுக்கின்றது. இந்தப் பகிரங்க விண்ணப்பத்திற்கு சிங்கள, முஸ்லிம் செவிலியர் விண்ணப்பிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் 80,000 தமிழச்சிகள் விதவையாகி இருக்கின்றனர். இவர்களில் சிலர் இராணுவத்தின் இச்சைக்கு இரையாகிக்கொண்டு இருக்கின்றனர்.

மேற்கூறப்பட்டது சிங்கள அரசின் கொடுமைகள் என்றாலும்.. நாம் அந்த மக்களுக்கு உதவுவதன் மூலம் சிலவற்றை நிறுத்த முடியும், தடுக்க முடியும்.

வயல் செய்ய, தோட்டம் செய்ய பணம் கொடுங்கள் அவர்களின் நிலம் குத்தகைக்கு போகாது.

அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளைத் தத்தெத்தால் சிங்களச் செவிலியரிடம் எம் பிள்ளைகள் போகமாட்டார்கள்.

விதவைகளுக்கு உதவுங்கள். பிறரிடம் கை நீட்டத் தேவை இல்லை.

பசிக்கு உணவு அளியுங்கள்.. அளித்தால்தானே உங்கள் சுதந்திரப் பசிக்காக அவர்கள் போராடுவார்கள்? அல்லது எம் நாடு என்பதனை அவர்கள் பிரதிபலித்துக்கொண்டே இருப்பார்கள்.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு.. போராட்டம், மக்கள், சுதந்திரம் என புலம்பெயர் நாடுகளில் நிகழ்ச்சிகளையும் , தினங்களையும் நடத்தி மக்களை மூடர்களாக்கி நிதியினை வசூலித்து தமது இருப்பினைப் பாதுகாக்கும் சில நாடுகளின் செயற்பாட்டாளர்களைக் கேள்வி கேழுங்கள் பதில் இல்லையேல் தூக்கி எறியுங்கள். இதனால் எம் தலைவனும், மாவீரர்களும் மகிழ்ச்சியடைவார்கள் மக்களே.

நன்றி வணக்கம்

இப்படிக்கு,

செஞ்சுடர்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் வாழ்பவன் என்ற ரீதியில் இதில் பிரான்ஸ் பற்றி எழுதப்பட்டவற்றில் எனக்கு உடன்பாடில்லை. வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே.

இது ஒரு நல்ல விதையாக எனக்கு தெரியவில்லை. நாட்டுக்காக உழைத்தவரையெல்லாம் திருடன் மோசடிக்காறன் என்பது எம்மை நட்டாற்றில் கொண்டுபோய் விட்டுவிடும். அதேநேரம் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்ய அவர்கள் படும்பாட்டை நேரில் பார்த்தவன். இங்கு யாரும் தற்போது அள்ளிக்கொடுப்பதில்லை. 5 ஈரோக்கள் கொடுப்பதற்கும் ஆயிரம் கேள்விகள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒதுங்குவது சுலபம். ஆனால் அவற்றை தங்கவைப்பதற்கு அவர்கள் படும்பாடு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சுடர் எழுதியது போன்றுதான் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

ஆனாலும், என்ன விசுகு, தயா, நெல்லையன் போன்றவர்கள் இவற்றை எல்லாம் நம்பி திருந்தவா போகின்றார்கள். திருந்தித்தான் ஆவார்களா? இவர்களைப் போன்றவர்களை நம்பித்தானே புலத்தில் உள்ள செயற்பாட்டாளர்கள் உள்ளனர்.

ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுகின்றவன் இருக்கத்தானே செய்வான். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்.

இங்கே நானும் ஒரு விடயத்தினை பகிர்ந்து கொள்கின்றேன். காஸ்ட்ரோ அவர்கள் நெடியவனுடன் இறுதிக்காலத்தில் அதாவது, 5 தொடக்கம் 10 நாட்கள் வரை தொடர்பிலேயே இருந்ததில்லையாம். இதனை பிரித்தானியாவில் உள்ள ஒரு அம்மையாருக்கு அவரே அழுதவாறே கூறியிருக்கின்றார்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நம்புவது நம்பாதது முக்கியமில்லை

இதன் உண்மைத்தன்மை

மற்றது இதனுடைய பாதகம்

புரிந்து கொண்டு பொறுப்புடன் எழுதுங்கள்

செஞ்சுடர் எழுதியது போன்றுதான் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

ஆனாலும், என்ன விசுகு, தயா போன்றவர்கள் எல்லாம் இவற்றை எல்லாம் நம்பி திருந்தவா போகின்றார்கள்.

ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுகின்றவன் இருக்கத்தானே செய்வான். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்.

கொய்யால... நாங்கள் திருந்துறதுக்கு அறிவுரை சொல்லும் தகுதியிலா நீர் இருக்கிறீர்...??? உமது வேசம் கலைஞ்சு கனகாலம்... !

KP ஆதரவு தளம் , புலி எதிர்ப்பு தளம் , எண்டு பல வேசம் போட்டு உடைபட்ட நீர் இங்கை வந்து இப்ப புலம் பெயந்தவையிலை கரிசனை வேசம் போட்டு எங்களுக்கு அறிவுரை சொல்லுறீரோ...?

நீர் எழுதினதுகள் இங்கை குப்பையாக இன்னும் கிடக்கு... ! நல்லா கஸ்ரப்படுகிறீர்...??

இங்கே நானும் ஒரு விடயத்தினை பகிர்ந்து கொள்கின்றேன். காஸ்ட்ரோ அவர்கள் நெடியவனுடன் இறுதிக்காலத்தில் அதாவது, 5 தொடக்கம் 10 நாட்கள் வரை தொடர்பிலேயே இருந்ததில்லையாம். இதனை பிரித்தானியாவில் உள்ள ஒரு அம்மையாருக்கு அவரே அழுதவாறே கூறியிருக்கின்றார்.

கடைசி யுத்தத்திலை நடந்ததுகளை எல்லாம் விரல் நுணியிலை வச்சு இருக்கிறீர்.... ஆனால் ஆமிக்காறன் சனத்தை கொண்டது உங்களுக்கு தெரியவே தெரியாது இல்லை....??

சிங்கள ஆமியோடை சேந்து நிண்டு தமிழர்களுக்காக போராடுற அமைப்பு எல்லாம் உங்களுக்கு நல்லவை இல்லை.....???

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செஞ்சுடர் எழுதியது போன்றுதான் புலம்பெயர் நாடுகளில் இடம்பெற்று வருகின்றன.

நிர்மலன், இதை உங்களுக்கு எழுதியது யார் என்று தெரியாதா? உங்கள் பிரித்தானிய இயக்குனர் திலகம் லெஸ்டர் எல்லாளன் தான் இதை இங்கு பலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். <_<

ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுகின்றவன் இருக்கத்தானே செய்வான். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளுங்கள்.

இந்த எழுத்துத்திலகத்தினதும், உங்கள் எல்லோருடைய படங்களும் விரும்பின் இங்கு இணைக்கிறேன், தொப்பிகளை அளவாக அவற்றுக்கு பொருத்துங்கள் :lol:

அனைத்துல செயலகத்தாருக்கு வணக்கம்.

ஈழத்தில் நடு தேருவில் இன்நலுறும் எம் மகளுக்கும் போராளிகளுகும் உதவுங்கள்.

'ஊரெல்லாம் பதுக்கியும் ஒதுக்கியும் வைத்திருக்கின்ற பணத்தில் இருந்து சுவிஸ் மக்களுக்கு கடனை அடைத்து விடுங்கள்"

http://thamilarasu.com/index.php?option=com_content&view=article&id=390:2011-01-06-17-59-07&catid=1:latest-news&Itemid=1My link

எதிர்வரும் வெள்ளி சனி ஞாயிறு (சனவரி 7-8-9) நாட்களில் தாங்கள் அனைவரும் பிரான்சில் அவசர அவசரமாக ஒன்றுகூடுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி.

உங்களுக்கு இருக்கிற அவசரத்தில் இக்கடித்தை அல்லது இக்கருத்தை வாசிக்க நேரம் இருக்குமோ தெரியவில்லை. இருப்பினும் மக்கள் முன்வைக்கின்ற இக்கருத்தினை கவனத்தில் எடுக்காமால் என்ன அவசர சந்திப்பு வேண்டிக்கிடக்;குது என்று இதனை தாங்கள் படிப்பீர்கள் என்ற நப்பாசை எமக்குள் இன்னமும் இருக்கின்றது.

இயக்கத்துக்குள் இருக்கின்ற உட்கட்டமைப்புக்களை எங்களுக்கு தெரியாது...தெரியவும் முற்படவில்லை. ஏன் என்றால் எங்களைப் பொறுத்தரை போராட்டமென்றால் "தலைவர் - போராளிகள் மாவீரர்கள்" என்றுதான் போராட்டத்தைப் காண்கிறோம்.

ஆனால் கட்ந்த ஒன்றரை வருடங்களாக "அனைத்துலக செயலகம்" " கஸ்றோ" " கேபி " "நெடியவன்" என்று நீண்ட பட்டியல் ஊடகங்களில் உலாவிவருவதை நாங்கள் நன்கு அவதானித்து வருகின்றோம்.

அதிலும் குறிப்பாக முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு வெறுமன சீனா இந்தியா இந்த உலக நாடுகள் மட்டுமல்ல விடுதலைப் புலிகிள் வெளிநாட்டுக்கிளைகளின் வலையமைப்பான அனைத்துலக செயலகத்துக்கும் கணிசமான பங்கிருக்கு என்று அறிந்த போது எங்களுடைய மனம் வெந்து வேரறுந்து போய் நிற்கின்றது.

நாங்கள் ஒன்றாய்...நூறாய்...ஆயிரமாய்...லட்சமாய்....உங்களிடம் தந்தது மட்டுமல்லாது உங்களை முழுமையாக நம்பியே வீதிகளில் விடிய விடிய விழித்திருந்து போராட்டம் நடத்தினோம். நீங்கள் நட என்றால் நடந்தோம்....ஒடு என்றால் ஓடினோம்....வீதிக்கு இறங்கென்றால் இறங்கினோம்....இதெல்லாம் எதற்காக என்றால் எங்கள் சொந்தங்களை பேரழிவில் இருந்து காப்பாற்றத்தான். எங்கட இயக்கத்தை காப்பாற்றத்தான்....ஆனால் முள்ளிவாய்காலில் எல்லாம் பேரிடியா வந்து விழுந்து விட்டது.

நாங்கள் கத்தினது...கதறினது வீணாப் போயிட்டுதே என்ற பெருங்கவலை நெஞ்சமெல்லாம் சூழந்து கொண்டது.

நாங்கள் நிலமிலந்தாலும்...வளமிழந்தாலும்...எங்களிடம் லட்சிய உறுதியிருக்கின்றது என்ற மனப்பலத்துடன் எமது போராட்டத்தை தொடருவோம் என்ற நம்பிக்கையில் இருந்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வெளிநாடுகளில் நடப்பவற்தை நினைத்ததால் முள்ளிவாய்காலை விட மிக மோசமான அழிவுக்கு தமிழினத்தை இட்டுச் சென்று விடுமோ என்ற பயமிருக்குது.

முள்ளிவாய்கால் பேரழிவுக்கு மட்டுமல்ல இதற்க்கும் அனைத்துல செயலகத்தார் மீதே பலரும் கை காட்டுகின்றனர் மட்டுமல்ல நாங்களும் கண்கூடாக காண்கிறோம்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் கண்டவற்றை ஒரு பட்டியலிட்டால் இக்கடிதம் போதாது. இருபினும் நாங்கள் ஒன்றையும் மறக்கவில்லை...மறக்கவும் மாட்டோம் என்பதற்கு சில உதாரணங்களை இங்கு தருகின்றேன்.

- துரோகி...துரோகி..என்று ஊரெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கின்ற துரோகி பட்ட கலாச்சாரத்தை தொடக்கி வைத்து இன்று வரை தொடருகின்ற இந்த அவருப்பு அரசியலை நடாத்தி வருகின்றீர்கள்.

- தாயக மக்களுக்கு இன்னமும் எஞ்சியிருக்கின்ற ஓரேயொரு நம்பிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு. ஆனால் அதறக்கு முரணாக புலத்தில் தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்தீர்கள். ஆனால் தாயக மக்கள் Nதிசய கூட்டமைக்கு ஆதரவளித்து உங்களை முற்றாக புறக்கணித்தார்கள்.

- மடுப்பகுதியில் சண்டை நடைபெற்ற காலத்துக்கு பின்னர் வெளிநாட்டில் இருந்து ஐந்து சதம் காசு கூட வன்னிக்கு போகவில்லை என்று நம்பகமாக தெரிகின்றது.

இந்நிலையில் இன்று வரை நீங்கள் சேர்த்து பதுக்கி வைத்திருக்கின்ற பல மில்லியன் பணத்துக்கு என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள். எல்லாம் மக்கள் இந்தக் குளிருக்குள்ளும் வெட்கைகுள்ளும் உழைச்சுத் தந்த காசு.

இப்படி நிறையக் பட்டியல் மக்களாகிய எங்களிடம் இருக்கின்றது.

நீங்கள் அவசர அவசரமாக ஒன்றுகூடுகிறீர்கள்....பதுக்கி வதை;திருக்கின்ற பணத்தை இன்னும் பத்திரப்படுத்த இடம் தேடுவதற்கு கூடுகிறீர்களோ....அல்லது இன்னும் யாரை யாரையெல்லாம் துராகி ஆட்களாம் என்று பெயர் பட்டியல் வாசிக்க கூடுகிறீர்களோ.....அல்லது நாடு கடந்த தமிழீழ அரசை எப்படி எப்படியெல்லாம் முடக்க யோசிக்க கூடுகிறீர்களோ...சத்தியமாய் எங்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் நாங்கள் உங்களிடம் வைக்கின்ற கோரிக்கை இதுதான்.

- ஊரெல்லாம் பதுக்கியும் ஒதுக்கியும் வைத்திருக்கின்ற பணத்தில் இருந்து சுவிஸ் மக்களுக்கு கடனை அடைத்து விடுங்கள். பாவம் அவர்கள்...விடுதலைக்கு வாரி வாரி வழங்கியர்கள் இன்று பைத்தியமாய்...குடும்பங்கள் பிரிந்தவர்களாய் இருக்கின்றனர். ( உதாரணத்துக்கு அiசாயச் சொத்தில் இருந்து மூன்றை விற்றுக் கொடு;த்தாலே சுவிஸ் கடன் பிரச்சனையை முடிக்கலாம் )

- முள்ளிவாய்காலில் இருந்து தப்பிப்பிழைத்து வந்து வெளிநாட்டில் வந்து தஞ்சம் அடைந்திருக்கின்ற போhரளிகளை சிங்களத்தின் கைக்கூலிகள் என்று தாங்கள் கூறுவதை விட்டுவிட்டு அவர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலை கூறுங்கள். காவல்துiறியிடம் காட்டிக் கொடுக்காதீர்கள்

- நாடு கடந்த தமீழீழ அரசாங்கத்தை முடக்கி வைப்பதை நிறுத்துங்கள்..அதற்கு எதிராக சேறுபூசுவவையும் நிறுத்துங்கள். ஏன் என்றால் மக்களாகிய நாங்கள் வாக்களித்து வளர்தெடுத்த எங்களின் "தமீழீழ அரசு". எங்களை கொச்சைப் படுத்தாதீர்கள்.

- நாங்கள் எங்களின் விடுதலை ஆத்மாவாக வணங்குகின்ற விடுதலைப் புலிகள் அமைப்பு தாங்கள் லாவகமாக புறந்தள்ளிவிட்டு நீங்கள் மட்டுமே; இயக்கம் என்ற மனநிலையை மாற்றி விடுதலைப் புலிகளின் தலைமைக்கு கட்டுப்படுங்கள்.

- "கேபி குழு" அந்தக் குழு...இந்தக்குழு என்று மாபெரும் விடுதலைப் போராட்ட அமைப்பi வெறும் குழுவா அரசியாலாக மாற்றி தங்கள் சார்ந்த ஊடகங்களில் எழுதுவதை நிறுத்துங்கள்..எங்களுக்கு அருவருப்பாக இருக்கின்றது.

- குறைந்தபட்சம் அடிப்படை உண்மைகளை மக்களுக்குச் சொல்லுங்கள். உங்களுடை கதிரைகளுக்காக பொய்கள் மேல் பொய்களை அடுக்கி எமது விடுதலைப் போராட்டத்தை பொய்யாக்காதீர்கள்.

சாதரணமாக ஒரு கட்டிய பாலம் ஒன்று இடிந்து விழுந்தால் அதற்கு பொறுப்பாக இருந்தவர்கள் பதவி விலகுவார்கள். அதுபோல் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு கணிசாமான பொறுப்பை எடுக்க வேண்டிய அனைத்துலக செயலககாரர்களிடம் இந்த அடிப்படை பண்பை நாங்கள் எதிர்பார்கவில்லை.

இந்த 6 கோரிக்கைகளையாவது குறைந்தபட்டசம் தாங்கள் நிறைவேற்றுவீர்கள் எனில் சந்தோசமாக இருக்கும்...நம்பிக்கைக்கு உரியதாக இருக்கும்.

நன்றி

வெளிநாட்டு தமிழ் மக்கள் சார்பாக

யாழவன்

... நிர்மலன், நீங்கள் குத்தி முறியவே ... உந்த எழுத்துக்கள் யார் மூலம் வருகிறது என்று புரிகிறது! ... ராஜ் மோகனின் தரவுகளும் பல தேடல்களை செய்ய முனைப்பூட்டுகிறது! ... விரைவில் ...

... இங்கிருக்கும் சேரமான்களும், அதியமான்களும் எமக்குள் சேறை இறைத்துக் கொண்டிருக்க, இலங்கை அரசு எந்தளவில் ஆக்ரோஷமாக புலத்தில் வேலை செய்ய முனைகிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்!

எட பாவிகளே எல்லாவற்றையும் கொச்சைபடுத்தினீர்கள் மாவீரர் தின் நிகழ்வையும் கொச்சை படுத்த தொடங்கி விட்டீர்கள்.

ஒரு பண்பே இல்லையா?

மாவீரர் நாளில் பணம் உழைத்தார்கள் என்றால் உழைத்திட்டு போகட்டும். யார் முன் வந்தீர்கள் மாவீரர் நாள் ஒழுங்கு செய்ய. சிங்களத்திடம் முகம் காட்ட வேண்டும் என்று ஒளிப்பவர்கள் தான் முழுப்பேரும்.

முள்ளிவாய்க்கால் மவுனத்தின் பின் செயற்படுக்காக நான் கொடுத்தது வெறும் 50 பவுன் மாத்திரமே இந்த மாவீரர் தின நிகழ்வுக்காக. இந்த காசால் அவர்கள் பணக்காரர் ஆனால் பரவாயில்லை.

மாவீரர் தின நிகழ்வை சிறப்பாக செய்திருந்தார்கள்.

காட்டி கொடுத்தே ஒரு இனம் அழிந்தததஊ என்றால் ஈழத்தமிழன் தன்.

  • தொடங்கியவர்

பிரான்சில் வாழ்பவன் என்ற ரீதியில் இதில் பிரான்ஸ் பற்றி எழுதப்பட்டவற்றில் எனக்கு உடன்பாடில்லை. வெறும் வார்த்தை ஜாலம் மட்டுமே.

இது ஒரு நல்ல விதையாக எனக்கு தெரியவில்லை. நாட்டுக்காக உழைத்தவரையெல்லாம் திருடன் மோசடிக்காறன் என்பது எம்மை நட்டாற்றில் கொண்டுபோய் விட்டுவிடும். அதேநேரம் இது போன்ற நிகழ்ச்சிகளை செய்ய அவர்கள் படும்பாட்டை நேரில் பார்த்தவன். இங்கு யாரும் தற்போது அள்ளிக்கொடுப்பதில்லை. 5 ஈரோக்கள் கொடுப்பதற்கும் ஆயிரம் கேள்விகள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒதுங்குவது சுலபம். ஆனால் அவற்றை தங்கவைப்பதற்கு அவர்கள் படும்பாடு.

அண்ணண் எனக்கும் உங்கட கருத்துத்தான் அண்ணா. இந்தக்கட்டுரை பலபேருக்கு மெயிலில் ரெயில் பெட்டி போல போய்க்கொண்டிருக்கு. இது ஏதோ ஒரு உள்குத்துடன் திட்டமிட்டுச்செய்யப்பட்டும் ஒருபரப்புரை போலத்தான் கிடக்கு...ஆனாலும் நான் இதை இங்கை இணைக்கக்காரணம் இதற்கு ஒரு முடிவுகட்டி இந்தக்கட்டுரையை பொய் என்று நிரூபிக்கும்வகையில் இந்தகட்டுரையில் குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு தரவையாவது யாராவது ஒருவர் புரூவுடன் பொய்யென்று நிருபிக்கட்டுமென்றுதான்....துரதிஷ்ட வசமாக இன்னும் யாரும் அதை எழுதவில்லை...காத்திருப்பம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது கொச்சைப் படுத்தலை தொழிலாய்க் கொண்டு வரைந்த கட்டுரை போலவே இருக்கின்றது.

2009 இற்கு முதல் மாவீர நாள் நிகழ்சிகளின் செலவு காட்டப்படா காரணம் மக்கள் அறியாதது அல்ல. இனிமே அதை செய்ய வேண்டிய தேவை நிர்வாகத்தின் முதன்மைப் பணியுமாகும். புலிகள் இருக்கும் வரை அவர்கள்மீதே சேறு பூசும் அரச உழவு அமைப்பு, இன்று, எமது செயற்பாடுகள் மீது சேறுபூசம் செயல் வழமையானதுதான். அதை நாம் விழிப்போடு அவதானிப்போம்.

தவிர, அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்? என்று காத்திருக்கும் நிர்மலன் போன்றோர் எல்லாம். அண்ணனுக்காக வெக்கம் கெட்டு அழும் சூழ்நிலைகளையும் கொடுத்துவிடும்!

  • தொடங்கியவர்

2009 இற்கு முதல் மாவீர நாள் நிகழ்சிகளின் செலவு காட்டப்படா காரணம் மக்கள் அறியாதது அல்ல. இனிமே அதை செய்ய வேண்டிய தேவை நிர்வாகத்தின் முதன்மைப் பணியுமாகும்.

இது முற்றிலும் உண்மை 2009 ற்கு முன் நடந்ததை கேட்க எந்த நாதாரிக்கும் உரிமையில்ல...ஆனால் அதற்கு பின் எழும் வதந்திகளை உரியவர்கள் தெளிவுபடுத்தினால் மேலே எழுதப்பட்ட கட்டுரை போன்ற கதைகள் மக்களிடம் எடுபடாது...ஏனென்றால் 2009 ற்கு பின் அனைவர்க்கும்தெரியும் எப்படி நிலைமைகள் குழப்பமாக உள்ளன என்று..எனவே இப்பிடியான கதைகள் எடுபடாத படி செயற்படவேண்டியது சம்பத்தப்பட்டவர்கள் பொறுப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா... நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

அப்படியெனில் அனைத்துலக தொடர்பகத்தாரின் காட்டில் மழைதான்.

என்ன செய்ய உங்களை குற்றம் சாட்டி என்ன பயன். பிரபாகரன் அப்படியொரு கூட்டத்தினை வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமெல்லாம்...

அடப் பாவிகளா... நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

அப்படியெனில் அனைத்துலக தொடர்பகத்தாரின் காட்டில் மழைதான்.

என்ன செய்ய உங்களை குற்றம் சாட்டி என்ன பயன். பிரபாகரன் அப்படியொரு கூட்டத்தினை வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமெல்லாம்...

ஏன் நிர்மலன் நீர் பொறுப்பு எடுத்து செய்யலாம் தானே. என்னை கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்.

பிற்கேன் மாவீரர் தின் ஒழுங்கமைப்பாளர்கள் மீது குற்றம் சாட்டிறியள்.

அடிக்க போறம் ஏ.கே வேண்ட காசு தா என்டா கேட்டவை.?

நாங்கள் கொடுத்த நன்கொடைக்கு சிறப்பாக நடாத்தி முடித்தார்கள்.

சரி அடுத்த வருடம் யார் என்று பார்த்து அவர்களுக்கும் மாவீரர் ந்னகொடை நிதி கொடுக்க ஆயுத்தமாகவே இருக்கிறோம்.

மற்றைய காழ்ப்புணர்சியை இதில் ஒட்டாதீர்கள்.

அதுதான் ஈழத்தமிழன் என்றால் நாய்கள் என்று சந்தி சிரிக்குது.

ஞாயிற்றுகிழமை தென் சூடானுக்கு சுதந்திர விடுதலை. ஈழத்தமிழன் இருந்ததையும் இல்லாமல் செய்தான்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாவீரர் நாளுக்கான சகல கணக்கு வழக்குகளையும்

அதில் வரவுகளைப்பெறும் வழிகளையும் செலவுகளை எப்படி செய்வது என்பது பற்றியுமான முழுப்பொறுப்பையும் திரு. நிர்மலன் அவர்கள் எடுத்துச்செய்யவேண்டும்.

அதிலுள்ள சிக்கல்களில் உதாரணமாக ஒன்று :-

மண்டப ஒழுங்குக்கு மட்டும் ஆயிரம் பேரைக்கெஞ்சவேண்டும். காசு இருந்தாலும் மண்டபம் தர ஆளில்லை. அப்படியே எடுத்துவிட்டாலும் கடைசி நிமிடம்வரை எந்த விலாசத்தில் என்று அறிவிக்கமுடியாது. அறிவித்தால் அதை ஏதோ ஒரு வழியில் எம்மவர்களே முடக்கிவிடுவார்கள். பயங்கரவாதிகள் கூடுகிறார்கள் என்று இங்குள்ள அரசாங்கத்திடம் அல்லது சிங்களத்திடம் போட்டுக்கொடுத்துவிடுவார்கள். அதையும்; மீறி செய்தால் மண்டபவத்துக்கு துப்பாக்கியுடன் வருவார்கள். வீரம் காட்ட அல்லது அதை அங்கு வைத்துவிட்டு காவல்துறையை அழைக்க.

அப்படி காவல்துறை வந்தால் அதற்கு பொறுப்பெடுத்து நிர்மலன் தான் உள்ளே போகவேண்டும்

Edited by விசுகு

இளநீர் கிடைக்காவிடினும் கோம்பையாவது சூப்புவமென்றால் அதற்கும் விடமாட்டீர்கள் போலிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இளநீர் கிடைக்காவிடினும் கோம்பையாவது சூப்புவமென்றால் அதற்கும் விடமாட்டீர்கள் போலிருக்கு?

ஐயாவுக்கு

புதுவருடம் இப்பதான் முறிந்தது போல............. :o

  • தொடங்கியவர்

ஐயாவுக்கு

புதுவருடம் இப்பதான் முறிந்தது போல............. :o

கிகீகீ....இளநீர் அடிச்சுத்தான் முறிஞ்சிருக்கு...........அதுதான் இளநீல ஸ்டாட் பண்ணிப்புட்டன்..... :D .

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையாளரின் நோக்கம், மாவீர்ர தினம் செயய் இவ்வளவு காசு அடிக்கின்றார்கள். அதனால் மாவீரர் தினம் செய்யாதீர்கள். விளையாட்டுப் போட்டி, மற்றும் புலிகளின் நிகழ்வுகளைச் செய்ய இவ்வளவு காசு அடிக்கின்றார்கள். அதனால் அதையும் செய்யாதீர்கள். சொல்லப் போனால், போட்டி, பொறாமை,.....

இந்தக் கட்டுரையாளரின் செயற்பாட்டில் நம்பிக்கை வரவில்லை, ஏனென்றால் அவர் யார், யார் புலத்தில் செயற்பாட்டில் செயற்படுகின்றார் என்பதை அடையாளப்படுத்துவதிலேயே குறியாக இருக்கின்றார்.

இரண்டாவது கடைசி நேரம் வரை முள்ளிவாய்க்காலில் இருந்ததாகத் தன்னை முதலாவது கட்டுரையில் சொன்ன அவரால், புலத்தில் யார், யார் செயற்பாட்டார்கள் எனக் கடந்த கால வரலாற்றைச் சொல்ல முடிகின்றது என்றால், அது சாத்தியமான ஒன்றல்ல. அதில் ஏதோ பொய் இருக்கின்றது.

அடப் பாவிகளா... நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

அப்படியெனில் அனைத்துலக தொடர்பகத்தாரின் காட்டில் மழைதான்.

என்ன செய்ய உங்களை குற்றம் சாட்டி என்ன பயன். பிரபாகரன் அப்படியொரு கூட்டத்தினை வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமெல்லாம்...

ஆக மொத்தம் எதையுமே யாரும் செய்யக்கூடாது அப்படி செய்தால் நீங்கள் உண்மையை கண்டு பிடிச்சு வெளிப்படுத்துவியள்....??? அண்ணை புலி எண்ட பெயரிலை செய்யுறதுகளை மட்டும் இல்லாமல் சிங்களவனும் அவன் ஒட்டுண்ணீயளும் செய்யுறதுகளையும் கண்டு பிடிக்க உங்களாலை முடியாதோ....??

அண்ணை இது உங்களுக்கை இருக்கும் ஒரு வித வியாதி.... தமிழர் கொஞ்சப்பேர் கூடினாலே ஐயோ காசடிக்கிறான் எண்டுற வருத்தம்...

நீங்கள் யாருமே எதுவுமே செய்யாத போது காசுக்காக தன்னும் எதையாவது செய்ய வேண்டும் எண்டு நினைக்கிறாங்களே... இப்படித்தான் இருக்கு எங்கட எண்ணம்... !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப் பாவிகளா... நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

அப்படியெனில் அனைத்துலக தொடர்பகத்தாரின் காட்டில் மழைதான்.

என்ன செய்ய உங்களை குற்றம் சாட்டி என்ன பயன். பிரபாகரன் அப்படியொரு கூட்டத்தினை வளர்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

பார்ப்போம் எத்தனை நாளைக்கு இந்த ஆட்டமெல்லாம்...

டக்ளஸ் காட்டில் அடிக்கும் மழைதானே, உங்களுக்கு வெள்ளம் கொண்டு வரவேண்டும். அந்த வகையில் உங்கள் காழ்புணர்ச்சி றொம்ப நியாயமானதுதான்!

இளநீர் கிடைக்காவிடினும் கோம்பையாவது சூப்புவமென்றால் அதற்கும் விடமாட்டீர்கள் போலிருக்கு?

செய்யும் தொழிலோடு சம்பந்தப்படும் உதாரணம்.

உங்கள் மாதிரி ஆட்களால் தான் கருணாநிதி இன்னமும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கின்றார்.

தமது தலைவர்கள் பிழைவிட மாட்டார்கள் என்ற மோட்டு நம்பிக்கையில் அடிமட்டத்தவர்,அதைவிட அள்ளக்கைகள்.

உங்களுக்கு விசயம் விளங்கும் போது காலம் கடந்துவிட்டுவிடும்.ஒரு நாள் நீங்கள் எல்லோரும் தலையில் கை வைக்கும் போது என்னையும் ஒருக்கா நினையுங்கோ.

தம்பிமாரே சுத்தமாக இருந்து மற்றவனை நம்பி இப்போ நடுரோட்டுக்கு வந்தபின் நம்பியவன் செய்த அநியாயங்களெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவர இவ்வளவு விபரமில்லாமலா நானிருந்தேன் என்ற எண்ணமும் இவங்களா இப்ப்டியெல்லாம் செய்தாங்கள் என்றவிரக்தியுமே இப்போ மிச்சம்.

தேவையெனில் பெயர் விபரங்கள் கூட சொல்லலாம்.

அண்மையில் தான் லண்டனில் பொறுப்பாளர்கள் சிலரின் படங்கள் வேறுஒரு இணையத்தில் பார்த்தேன்.பல தெரிந்த முகங்கள். போராட்டத்தை பற்றி அப்போ நாங்கள் கதைக்கும் போது அந்தப் பக்கமே தலைவைக்காத பலர் எப்படியெல்லாம் உதுக்குள்ள பூந்தாங்களென்று விளங்கவில்லை.அதுவும் ஸ் இல பெயர் தொடங்குபவர் எனது கண்களையே நம்ப முடியவில்லை.

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களே உங்களுக்கு வாலி ஸ்டைல்....

எல்லாப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே(யாருன்னு புரிஞ்சா சரி)

நீயும் நதிபோல ஓடிக்கொண்டிரு

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் பேர்வைக்குமே

உன்னை உள்ளத்தில் ஊர்வைக்குமே...

Edited by நெருப்பு நீலமேகம்

உங்கள் மாதிரி ஆட்களால் தான் கருணாநிதி இன்னமும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கின்றார்.

தமது தலைவர்கள் பிழைவிட மாட்டார்கள் என்ற மோட்டு நம்பிக்கையில் அடிமட்டத்தவர்,அதைவிட அள்ளக்கைகள்.

உங்களுக்கு விசயம் விளங்கும் போது காலம் கடந்துவிட்டுவிடும்.ஒரு நாள் நீங்கள் எல்லோரும் தலையில் கை வைக்கும் போது என்னையும் ஒருக்கா நினையுங்கோ.

தம்பிமாரே சுத்தமாக இருந்து மற்றவனை நம்பி இப்போ நடுரோட்டுக்கு வந்தபின் நம்பியவன் செய்த அநியாயங்களெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவர இவ்வளவு விபரமில்லாமலா நானிருந்தேன் என்ற எண்ணமும் இவங்களா இப்ப்டியெல்லாம் செய்தாங்கள் என்றவிரக்தியுமே இப்போ மிச்சம்.

தேவையெனில் பெயர் விபரங்கள் கூட சொல்லலாம்.

அண்மையில் தான் லண்டனில் பொறுப்பாளர்கள் சிலரின் படங்கள் வேறுஒரு இணையத்தில் பார்த்தேன்.பல தெரிந்த முகங்கள். போராட்டத்தை பற்றி அப்போ நாங்கள் கதைக்கும் போது அந்தப் பக்கமே தலைவைக்காத பலர் எப்படியெல்லாம் உதுக்குள்ள பூந்தாங்களென்று விளங்கவில்லை.அதுவும் ஸ் இல பெயர் தொடங்குபவர் எனது கண்களையே நம்ப முடியவில்லை.

ஓம் அண்ணை நீங்கள் சொன்னா சரிதான்... தலைவராக வாறவை எல்லாரும் சுயநலவாதிகள்... ! சக முட்டாள்கள்...!

இதை சொல்லுற நீங்கள் ஒரு புத்திஜீவி....

கலைஞர் ஈழத்தமிழருக்கு தீங்கு செய்தார் சரி... தமிழக மக்களுக்குமா...??? என்ன ஒரு அறிவாந்த அரசியல் ஞானம் உங்களுக்கு...

ஆனா கலைஞரை விட யாரும் தமிழகத்துக்கு அதிக நன்மையை செய்யவில்லை எண்டு தானே புள்ளிவிபரம் தெரிவிக்குது...

ஒருவேளை நீங்கள் ஒபாமா மாதிரி, ஜோர்ஜ் புஸ் மாதிரி, கோடன்புறவுண் மாதிரி சிறப்பான சுயநலமே இல்லாத தலைவர்களை தேடுகிறீர்களோ....??

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் மாதிரி ஆட்களால் தான் கருணாநிதி இன்னமும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருக்கின்றார்.

தமது தலைவர்கள் பிழைவிட மாட்டார்கள் என்ற மோட்டு நம்பிக்கையில் அடிமட்டத்தவர்,அதைவிட அள்ளக்கைகள்.

உங்களுக்கு விசயம் விளங்கும் போது காலம் கடந்துவிட்டுவிடும்.ஒரு நாள் நீங்கள் எல்லோரும் தலையில் கை வைக்கும் போது என்னையும் ஒருக்கா நினையுங்கோ.

தம்பிமாரே சுத்தமாக இருந்து மற்றவனை நம்பி இப்போ நடுரோட்டுக்கு வந்தபின் நம்பியவன் செய்த அநியாயங்களெல்லாம் ஒவ்வொன்றாக வெளிவர இவ்வளவு விபரமில்லாமலா நானிருந்தேன் என்ற எண்ணமும் இவங்களா இப்ப்டியெல்லாம் செய்தாங்கள் என்றவிரக்தியுமே இப்போ மிச்சம்.

தேவையெனில் பெயர் விபரங்கள் கூட சொல்லலாம்.

அண்மையில் தான் லண்டனில் பொறுப்பாளர்கள் சிலரின் படங்கள் வேறுஒரு இணையத்தில் பார்த்தேன்.பல தெரிந்த முகங்கள். போராட்டத்தை பற்றி அப்போ நாங்கள் கதைக்கும் போது அந்தப் பக்கமே தலைவைக்காத பலர் எப்படியெல்லாம் உதுக்குள்ள பூந்தாங்களென்று விளங்கவில்லை.அதுவும் ஸ் இல பெயர் தொடங்குபவர் எனது கண்களையே நம்ப முடியவில்லை.

பச்சையாய் பலருக்கும் தெரிந்த உண்மைகளே, உமக்கு உமக்கு புரியாததாய் இருப்பது, பலரும் பார்க்கின்றோம் இங்கு.

இவற்றை விடவா நாம் உமது கருத்துக்குள் புதையல்கள் தேடவேண்டும்?

உமது கண்ணுக்கும் முன்னால் வைக்கப்பட்ட பொருளைக்கூட, குருடன் போல் பதில் சொல்லும் உமது ஞானப்பார்வை, உமது பிடரிக்குப் பின்னால் உள்ளதையா சரியாகாச் சொல்லப் போகின்றது.

தான் திருவாய் மலர்வதில், எவளவு அடுத்தவனால் உள்வாங்கப் படுகின்றது, என்ற கவலை சிறிதும் இல்லாமல் உளறிக்கொண்டிருப்பவன் பைத்தியக் காறன். இந்த வகையில் நீர் மிக முற்றியவன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.