Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் தலைவன்?

Featured Replies

சந்தேகங்கள் எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள நிறையக் காலம் எடுக்கும். சந்தேகங்கள் இல்லாத பூரண மனிதர்கள் மிகமிக அரிது!

ஆயுதப்போட்டியும், சிறிலங்காப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான பெருத்த படைவலு வித்தியாசமும் எப்போதும் தொடர்ந்து இருந்துதான் உள்ளது (உ+ம்: சில நூறு புலிகள் இருந்த 80 களின் ஆரம்பத்தில் சில ஆயிரங்களாகத்தான் சிறிலங்காப் படைகள் இருந்தன). எனினும் ஆள்வலு இன்றி சாதுரியமான திட்டமிடல்களால் புலிகள் 2001 இல் படைவலுச் சமநிலையை அடைந்திருந்தனர். அதன்பின்னர் ஆயுதப் போட்டியை ஊக்குவிக்காமல் அரசியல் பேச்சுவார்த்தைகலின் மூலம் தீர்வு ஒன்றை எட்ட முனைந்திருதாலும், அரசியலில் சாதுரியமாகச் செயற்படமுடியாததால், சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட போரில் மிகுந்த அழிவைக் கண்டோம்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இணக்க அரசியல்தான் இருக்கும் ஒரே தெரிவு என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை, ஆனால் அதைத்தான் நான் சொல்லுகின்றேன் என்று நீங்கள் கருதுவது எனது கருத்துக்களைச் சரியாகக் கிரகிக்காமல் இருப்பதால் இருக்கலாம்.

டக்ளஸும், கருணாவும் சிறிலங்கா அரசின் சொற்படி நடப்பவர்கள் என்பதால், அவர்களால் மகிந்த அரசினால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. இதுவே சிறிலங்காச் சிறையில் இருக்கும் கேபியினதும் நிலை. இத்தகைய அரசியல் நிலைகளில் தமிழர்கள் சுயாதீனமாக தமது அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேறு ஒரு வழியும் இல்லை என்று நினைப்பதும் தவறு.

அப்ப தமிழர்களுக்காக போராடின தரப்பு இன்னும் கொஞ்சம் அறிவார்த்தமாக போராடி இருக்க வேணும் எண்டுறீயள்.... இதுக்கும் முதல் என்ன நடந்தது என்பதின் சாராம்சம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா எனும் சந்தேகம் மடும் தான் எனக்கு மிஞ்சுகிறது...

வரலாறு என்பது ஒளிப்பதும் மறைப்பதும் இல்லை... இல்லை ஒருத்தர் இருவர் தோத்துப்போய் இருப்பவர்களை நோக்கி சொல்லும் பொய்களும் இல்லை... அதையும் தாண்டி போடப்பட்ட தடைகளும் அல்ல...

தாயகத்தை தாண்டி வெளியிலை வேலை செய்ய எத்தினை பேர் உணர்வோடையும் 100% அர்ப்பணிப்போடையும் இருந்தார்கள் நீங்கள் சொன்ன மாதிரி வேண்டிய வளியிலை வேலை செய்ய....??

100% தமிழ் பேசும் மக்கள் மட்டுமே வாழ்ந்த யாழ்ப்பாணத்தில்கூட சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தி, யாழ்ப்பாணம் தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று உறைக்கவைக்கும் மகிந்தவின் இனவாத அரசியலை எதிர்க்க தமிழர் அரசியல் தலைமைகளால் முடியாதுள்ளது என்பதும் யதார்த்தமே.

இந்த நிலைக்குக் காரணம் சமாதான காலத்தில் பாவிக்கப்பட்ட சாணக்கியமற்ற அரசியலே என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். பலஸ்தீன நாட்டை சுதந்திரமாகச் செயற்படாமல், இஸ்ரேல் எவ்வளவுதான் தடுத்தாலும், பி.எல்.ஓ தற்போது மேற்கு நாடுகளின் கைப்பொம்மைபோன்று செயற்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்தாலும், பலஸ்தீனத்தை பலஸ்தீனியர்களே தற்போது (குறைபாடுகளுடன்) நிர்வகிக்கின்றார்கள். அதைப்போல தமிழர்களும் குறைபாடுகளுடன் கூடிய தீர்வு ஒன்றை சமாதானக் காலத்தில் எட்டியிருக்கு முடியும். அப்படி ஒரு தீர்வு வந்திருந்தால், அது தற்போதைய சிங்கள ஆதிக்கத்தையும், குடியேற்றங்களையும் கட்டுப்படுத்தியிருக்கும். எனினும் கிடைத்த அரசியல் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தாமல் நழுவ விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வருகின்றேன். அதாவது எங்கள் முன்னர் இருந்த தெரிவுகளை நாங்கள் தூக்கியெறிந்துவிட்டோம்.

தமிழர்கள் தேசிய இனமாக ஒன்றிணைந்து சிங்கள மேலாதிக்க அரசை அரசியல்ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய தேவை முன்னர் எப்போதுமில்லாததைத் போல தற்போது மிகவும் அதிகமாக உள்ளது. அதை உணர்ந்துகொண்டாலும், தங்களது குறுகிய நலன்களுக்காக தமிழர் அரசியல் தலைமை தங்களுக்கும் முரண்பட்டுக்கொண்டுள்ளதுதான் தற்போதைய யதார்த்த் நிலை. ஆனாலும் இந்தத் தேக்க நிலை தொடர்ந்து இருக்கும் என்றில்லை. சரியான அரசியல் தெளிவோடு தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் அரசியல் தலைமை வரும்போது மக்கள் அவர் பின்பே திரள்வார்கள் ஏனெனில் மக்கள் எப்போதும் தேசியத்தை வலுவாக நம்புகின்றவர்களாகத்தான் உள்ளனர். அதனால்தான், கட்சி பிரிந்து வட்டுக்கோட்டைத் தீர்மானம், மக்களவை, நாடு கடந்த அரசு என்றெல்லாம் தேர்தல் நடாத்தும்போதும் மக்கள் வாக்களிக்க வந்தார்கள். அதுபோலவே தாயகத்திலும் இணக்க அரசியல் நடாத்துபவர்களை ஏற்றுக்கொள்ளாமல் தமிழரசுக் கட்சிக்குத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர்.

தாயக கோட்பாடுகளை தாண்டி வேலை செய்ய வேண்டும் எண்டால் தெளிவான அரசியல் வரைபுகளை கொண்ட ஒரு இனமாக தமிழர்கள் இருந்து இருக்க வேண்டும்... மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தீர்வை பற்றி பேச அரசு முயண்ற போது புலிகளால் உடன்படவில்லை... உடன்படிக்கையில் இருந்தவைகளை கூட பின் பற்றாமல் இலங்கை அரசின் கூலிகள் புலிகளை பலவீனப்படுத்தும் போது தீர்வு எண்ட ஒண்டை இலங்கை அரசு தரும் எனும் வளியில் புலிகளால் மட்டும் அல்ல தமிழர்களாலும் சிந்திக்க முடியவில்லை...

ஏதோ கருணா பிரிஞ்சு தான் புலிகள் கொல்லப்பட்டார்கள் எண்டு இல்லை... அதையும் தாண்டி ஆள ஊடுருவும் படையினராலும் கொலைகள் நடந்த வண்ணம் இருந்தன...

சமகாலத்தில் ஒரு தீர்வு திட்டம் புலிகளால் முன் வைக்க ப்பட்டது... அயர்லாந்து, சுவிசிலாந்து போண்ற பிரதேசங்களுக்கு புலிகளின் அரசியல் குழு வந்து ஆராய்ந்து ஒரு திட்டத்தை வைத்ததை நீங்கள் ஏன் அறியவில்லை....?? சரி அந்த தீர்வுக்கு என்ன நடந்தது....?? அது சர்வதேசத்துக்கும் நோர்வேக்கும் தெரியாதா....?? இரணில் அரசு ஏன் சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது.....??

ஏன் அதைப்பற்றி பேச மாட்டோம் என்கிறார்கள்....?? நீங்கள் கூட .....???

அதைவிடுவம் அதன் பிறகு வந்த சுனாமி நிவாரணத்தை தன்னும் ரணில் அரசு தந்தா...??? சந்திரிக்கா விட்டவவா....???

இப்படி வரலாறுகள் கூட உங்களுக்கு புலிகள் அரசியல் அறிவும் சாணக்கியமும் இல்லாமல் இருந்தார்கள் எண்டு சொன்னால் நாங்கள் என்னத்தை சொல்ல.....??

நீங்கள் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள் எண்டது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்....

  • Replies 99
  • Views 11.1k
  • Created
  • Last Reply

அதைப் பற்றி பேசவே மாட்டீனம், அதை சொன்னால் இவர்களது பிழைப்பின் மூலதனமே போய் விடுமே, ஆனால் புத்தி ஒண்டும் இல்லாமல் தான் புலிகள் வெறும் பிஸ்ட்டலோட தொடங்கி சிறீமாவோ பண்டாரநாயக்க,ஜெயவர்த்தனா,ராஜீவ் காந்தி,டிக்ஷ்சித், பிரேமதாச,சந்திரிக்கா,கதிர்காமர் எல்லாம் தாண்டி வந்தவையள்,

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைக்குக் காரணம் சமாதான காலத்தில் பாவிக்கப்பட்ட சாணக்கியமற்ற அரசியலே என்பதை நாங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். பலஸ்தீன நாட்டை சுதந்திரமாகச் செயற்படாமல், இஸ்ரேல் எவ்வளவுதான் தடுத்தாலும், பி.எல்.ஓ தற்போது மேற்கு நாடுகளின் கைப்பொம்மைபோன்று செயற்படுவதாகக் குற்றச்சாட்டு இருந்தாலும், பலஸ்தீனத்தை பலஸ்தீனியர்களே தற்போது (குறைபாடுகளுடன்) நிர்வகிக்கின்றார்கள். அதைப்போல தமிழர்களும் குறைபாடுகளுடன் கூடிய தீர்வு ஒன்றை சமாதானக் காலத்தில் எட்டியிருக்கு முடியும். அப்படி ஒரு தீர்வு வந்திருந்தால், அது தற்போதைய சிங்கள ஆதிக்கத்தையும், குடியேற்றங்களையும் கட்டுப்படுத்தியிருக்கும். எனினும் கிடைத்த அரசியல் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்தாமல் நழுவ விட்டுவிட்டோம் என்றுதான் சொல்ல வருகின்றேன். அதாவது எங்கள் முன்னர் இருந்த தெரிவுகளை நாங்கள் தூக்கியெறிந்துவிட்டோம்.

அப்படி ஒரு தீர்வு தரும் சிங்களவர்கள் எனில் தந்தை செல்வா காலத்தில் அவரால் எடுக்கபட்ட அகிம்சை போராட்டங்களுக்கே ஒரு தீர்வை தந்திருக்க வேண்டும்.

சந்திரிக்கா போன்றோரின் தீர்வுப்பொதி ஒன்று உள்ளது என்பது தமது படை வலிமையை அதிகரிக்க எடுத்துக்கொண்ட நேரமாகும்.இப்படியான தீர்வு பொதியை இன்று புலிகள் இல்லாத போது ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து தந்திருக்கலாம்.அன்றி டி.எஸ் சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் தமிழர் எதனை பேசினாலும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.புலிகள் உள்ள போது மந்த கதியில் நடைபெற்ற குடியேற்றங்கள் இன்று அவர்கள் இல்லாதநிலையில் அசுரகதியில் நடைபெறுகின்றன.மொத்தத்தில் சிங்களவன் தனது கொள்கையில் மாறவில்லை. நாம் தான் அவர் மாறி இருப்பான் என கற்பனையில் எழுதுகிறோம்.

.மொத்தத்தில் சிங்களவன் தனது கொள்கையில் மாறவில்லை. நாம் தான் அவர் மாறி இருப்பான் என கற்பனையில் எழுதுகிறோம்.

62 வருசமா நாம் இப்படித் தான் யோசிக்கிறம்,

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழர்களுக்காக போராடின தரப்பு இன்னும் கொஞ்சம் அறிவார்த்தமாக போராடி இருக்க வேணும் எண்டுறீயள்.... இதுக்கும் முதல் என்ன நடந்தது என்பதின் சாராம்சம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா எனும் சந்தேகம் மடும் தான் எனக்கு மிஞ்சுகிறது...

வரலாறு என்பது ஒளிப்பதும் மறைப்பதும் இல்லை... இல்லை ஒருத்தர் இருவர் தோத்துப்போய் இருப்பவர்களை நோக்கி சொல்லும் பொய்களும் இல்லை... அதையும் தாண்டி போடப்பட்ட தடைகளும் அல்ல...

தாயகத்தை தாண்டி வெளியிலை வேலை செய்ய எத்தினை பேர் உணர்வோடையும் 100% அர்ப்பணிப்போடையும் இருந்தார்கள் நீங்கள் சொன்ன மாதிரி வேண்டிய வளியிலை வேலை செய்ய....??

வரலாறு எப்போதுமே தன்னுடைய கால ஒழுங்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. தமிழர்கள் அறிவார்த்தமாகப் போராடவில்லை என்பது உண்மைதான். இல்லையேல் தற்போதைய கீழ்நிலையை அடைந்திருக்கமாட்டார்கள். சிறிலங்கா அரசிற்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதை விட்டுவிட்டு இராணுவ ரீதியாக நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்ததால்தான் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்தன என்பது தெரிந்ததுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக கோட்பாடுகளை தாண்டி வேலை செய்ய வேண்டும் எண்டால் தெளிவான அரசியல் வரைபுகளை கொண்ட ஒரு இனமாக தமிழர்கள் இருந்து இருக்க வேண்டும்... மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தீர்வை பற்றி பேச அரசு முயண்ற போது புலிகளால் உடன்படவில்லை... உடன்படிக்கையில் இருந்தவைகளை கூட பின் பற்றாமல் இலங்கை அரசின் கூலிகள் புலிகளை பலவீனப்படுத்தும் போது தீர்வு எண்ட ஒண்டை இலங்கை அரசு தரும் எனும் வளியில் புலிகளால் மட்டும் அல்ல தமிழர்களாலும் சிந்திக்க முடியவில்லை...

ஏதோ கருணா பிரிஞ்சு தான் புலிகள் கொல்லப்பட்டார்கள் எண்டு இல்லை... அதையும் தாண்டி ஆள ஊடுருவும் படையினராலும் கொலைகள் நடந்த வண்ணம் இருந்தன...

சமகாலத்தில் ஒரு தீர்வு திட்டம் புலிகளால் முன் வைக்க ப்பட்டது... அயர்லாந்து, சுவிசிலாந்து போண்ற பிரதேசங்களுக்கு புலிகளின் அரசியல் குழு வந்து ஆராய்ந்து ஒரு திட்டத்தை வைத்ததை நீங்கள் ஏன் அறியவில்லை....?? சரி அந்த தீர்வுக்கு என்ன நடந்தது....?? அது சர்வதேசத்துக்கும் நோர்வேக்கும் தெரியாதா....?? இரணில் அரசு ஏன் சந்திரிக்காவால் கலைக்கப்பட்டது.....??

ஏன் அதைப்பற்றி பேச மாட்டோம் என்கிறார்கள்....?? நீங்கள் கூட .....???

அதைவிடுவம் அதன் பிறகு வந்த சுனாமி நிவாரணத்தை தன்னும் ரணில் அரசு தந்தா...??? சந்திரிக்கா விட்டவவா....???

இப்படி வரலாறுகள் கூட உங்களுக்கு புலிகள் அரசியல் அறிவும் சாணக்கியமும் இல்லாமல் இருந்தார்கள் எண்டு சொன்னால் நாங்கள் என்னத்தை சொல்ல.....??

நீங்கள் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள் எண்டது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்....

தமிழர்களின் (உள்ளக/வெளியக) சுய நிர்ணய உரிமையை அடிப்படையைக் கொண்டுதான் எந்தத் தீர்வும் வரவேண்டும் என்பதுதான் தனிப்பட்ட ரீதியில் என்னுடைய நிலைப்பாடு. அதனால்தான் நான் இன்னமும் தமிழ்த் தேசியத்தில் நம்பிக்கைகொண்டு, தமிழன் என்று சொல்லுவதிலும் பெருமிதமாகத்தான் இருக்கின்றேன். சிலரைப் போன்று சிறிலங்காவில் பிறந்ததனால் என்னை நான் சிறிலங்கன் என்று சொல்லுவதில்லை. எப்போதும் தமிழன் என்றுதான் சொல்லிக் கொள்வேன்.

எனவே தற்போதைய தமிழரின் அரசியல் ரீதியான அடிமை நிலைமை தவிர்த்திருக்கப்படக்கூடியது என்றே நம்புகின்றேன். கவரிமான் பரம்பரையின் மானத்தைக் காப்பாற்றுவதாக நினைத்து தமிழினத்தை தற்போதைய அடிமை நிலைக்கு தள்ளிவிட்டு அதற்குப் பொறுப்பு ஏற்கமுடியாத செயலை என்னவென்று சொல்லுவது?

சமாதான ஒப்பந்தம் என்பது சிங்கள அரசுடன் பேசி ஒரு தீர்வை எட்ட அல்லது சிங்கள அரசுடன் பேசி ஒரு தீர்வை எட்டமுடியாது என்று சர்வதேசத்திற்கு உணர்த்த எடுத்த நடவடிக்கையாகவே எனது பார்வையில் தெரிகின்றது. எனினும் இந்த இரண்டிலும் தமிழர் தரப்பு தோல்வியைத் தழுவியது அரசியல் ரீதியிலும், பேச்சுவார்த்தைகளிலும் இருந்த பலவீனத்தைத்தான் காட்டுகின்றது என்பது முள்ளிவாய்க்கால் தாண்டிய வரலாற்றில் இருந்து எல்லோருக்கும் தெளிவாகத்தான் தெரிந்துள்ளது.

இடைக்கால நிர்வாகத்திற்கான பேச்சுவார்த்தைகள், சிரான் கட்டமைப்பின் தோல்வி என்பனவற்றில் சர்வதேச நாடுகள் மூலம் இலங்கையரசிற்கு அழுத்தம் கொடுக்கமுடியாமல் இருந்தது தமிழரின் இராஜதந்திரத் தோல்விதான். அரசியல் ரீதியான அழுதங்களுக்குப் பதிலாக இராணுவ ரீதியில் மக்கள் படை என்று யாழில் கண்ணிவெடிகள் வைத்ததும், கதிர்காமரைப் போட்டதும், பிற்காலத்தில் தமிழர்களின் வாக்குகளை வென்று தற்போது சிறையில் இருக்கும் சரத் பொன்சேகாவின் கொலைமுயற்சியும்தான் சர்வதேச நாடுகளின் ஆசியுடன் புலிகளின் அழிவுக்குக் காரணமாக நின்றன என்பதையும் வரலாறு பதிந்துதான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு தீர்வு தரும் சிங்களவர்கள் எனில் தந்தை செல்வா காலத்தில் அவரால் எடுக்கபட்ட அகிம்சை போராட்டங்களுக்கே ஒரு தீர்வை தந்திருக்க வேண்டும்.

சந்திரிக்கா போன்றோரின் தீர்வுப்பொதி ஒன்று உள்ளது என்பது தமது படை வலிமையை அதிகரிக்க எடுத்துக்கொண்ட நேரமாகும்.இப்படியான தீர்வு பொதியை இன்று புலிகள் இல்லாத போது ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து தந்திருக்கலாம்.அன்றி டி.எஸ் சேனநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள குடியேற்றம் தமிழர் எதனை பேசினாலும் இன்று வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது.புலிகள் உள்ள போது மந்த கதியில் நடைபெற்ற குடியேற்றங்கள் இன்று அவர்கள் இல்லாதநிலையில் அசுரகதியில் நடைபெறுகின்றன.மொத்தத்தில் சிங்களவன் தனது கொள்கையில் மாறவில்லை. நாம் தான் அவர் மாறி இருப்பான் என கற்பனையில் எழுதுகிறோம்.

தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் மூன்றாம் தரப்பின்றிய தமிழர் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்குமான ஒப்பந்தகள் ஆகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா இருந்தது..!

நோர்வேயின் சமாதானச் செயற்பாடுகளில் சர்வதேசம் இருந்தது. எனவே சர்வதேச மயப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளை இலகுவில் ஒரு தரப்பு மீறமுடியாது. இத்தகைய காரணத்தால்தான் புலிகள் ரோக்கியோ மாநாட்டிற்குப் போகவில்லை. போயிருந்தால் புலிகள் தரப்பு ரோக்கியோப் பிரகடனத்தின் கையொப்பம் இட்டிருக்குவேண்டிய நிலைவந்திருக்கும்.

மேலும் பேச்சுவார்த்தைக்குப் போவதனால், அல்லது பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பங்கெடுப்பதனால் மாத்திரம் ஒரு தரப்பு கேட்பது எல்லாவற்றையும் தந்துவிடும் என்று நான் சொல்லியதில்லை. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்திற்கும் நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகள் மஸ்தியஸ்தம் வகித்தும் இரு தரப்பும் உடன்படும் தீர்வு தற்போதைக்குக் கிட்டாது என்பது நன்றாகத் தெரிந்துதான் இருக்கின்றது. எனினும் அவர்கள் தற்போதும் பொறுமையாக தீர்வை நோக்கிச் மந்த கதியில் என்றாலும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்கள் பேச்சுவார்த்தைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்காது செயற்பட்டதனால்தான் தற்போது எதுவித உரிமைகளும் இல்லாத அடிமை நிலையில் உள்ளனர். இந்த அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கு, புலிகளின் மீள்வருகைதான் ஒரே வழியென்று நம்புவர்களுக்கும் தெரியும் அப்படியொன்றும் நடக்காது என்பது!

வரலாறு எப்போதுமே தன்னுடைய கால ஒழுங்கில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. தமிழர்கள் அறிவார்த்தமாகப் போராடவில்லை என்பது உண்மைதான். இல்லையேல் தற்போதைய கீழ்நிலையை அடைந்திருக்கமாட்டார்கள். சிறிலங்கா அரசிற்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுப்பதை விட்டுவிட்டு இராணுவ ரீதியாக நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்ததால்தான் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் பக்கம் சாய்ந்தன என்பது தெரிந்ததுதானே.

எனக்கு குழப்பம் இப்பதான் தோண்றுகின்றது... தமிழர்கள் எண்டு நீங்கள் இங்கை விளிப்பது யாரை புலிகளையா....???

அப்படி புலிகள் எண்டு நீங்கள் கருதியவர்களாக இருந்தால் எப்போது சர்வதேசம் எண்டு நீங்கள் சொல்லும் இந்தியா, பிரித்தானியா , அமெரிக்கா , அதன் மூலம் ஐரோப்பா வின் எதிர்ப்பு புலிகளுக்கு எதிராக தோண்றியது....??? காரணம் யாராக இருந்தார்கள்...??

எனக்கு தெரிய பிறேமதாசா காலம் வரையோ டி பி விஜயதுங்க காலத்திலோ அப்படி ஒரு எதிர்ப்பும் புலிகளுக்கு இருக்கவில்லை.... அப்ப புலிகள் எப்ப பயங்கரவாதிகள் ஆனவை.....?? யாரால் ஆக்கப்பட்டவை எண்டதும் உங்களுக்கு தெரிந்து இருக்க வேணுமே....??

அவ்வாறு வளர்த்துவிடப்பட்டவர்களிடம் இன்று காணப்படுவது ஒன்றே ஒன்றுதான், நான் தலைவனாகிவிடவேண்டும். அதிகார வர்க்கம் என்றுமே தன் கையில் இருக்கும்போதுதான் தன் மதிப்புக் கூடும் என்பதுதான் இன்றிருக்கும் சிலர்(நான் யாரையும் பெயரோ அல்லது பதவியோ குறிப்பிடவில்லை) எண்ணும் ஒன்றாகும். அதற்கு முதலில் சரியான தலமைத்துவப் பண்பு அவசியம் என்பதை உணரத்தலைப்படுகின்றார்களில்லை.

..... தொடரும்......... தொடரும்......... தொடரும்......... தொடரும்....

..... தொடரும்......... தொடரும்......... தொடரும்......... தொடரும்....23_30_126.gif

தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் மூன்றாம் தரப்பின்றிய தமிழர் தரப்புக்கும் சிங்களத் தரப்புக்குமான ஒப்பந்தகள் ஆகும். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா இருந்தது..!

நோர்வேயின் சமாதானச் செயற்பாடுகளில் சர்வதேசம் இருந்தது. எனவே சர்வதேச மயப்பட்ட அரசியல் பேச்சுவார்த்தைகளை இலகுவில் ஒரு தரப்பு மீறமுடியாது. இத்தகைய காரணத்தால்தான் புலிகள் ரோக்கியோ மாநாட்டிற்குப் போகவில்லை. போயிருந்தால் புலிகள் தரப்பு ரோக்கியோப் பிரகடனத்தின் கையொப்பம் இட்டிருக்குவேண்டிய நிலைவந்திருக்கும்.

மேலும் பேச்சுவார்த்தைக்குப் போவதனால், அல்லது பேச்சுவார்த்தையில் தொடர்ந்து பங்கெடுப்பதனால் மாத்திரம் ஒரு தரப்பு கேட்பது எல்லாவற்றையும் தந்துவிடும் என்று நான் சொல்லியதில்லை. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்திற்கும் நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகள் மஸ்தியஸ்தம் வகித்தும் இரு தரப்பும் உடன்படும் தீர்வு தற்போதைக்குக் கிட்டாது என்பது நன்றாகத் தெரிந்துதான் இருக்கின்றது. எனினும் அவர்கள் தற்போதும் பொறுமையாக தீர்வை நோக்கிச் மந்த கதியில் என்றாலும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்கள் பேச்சுவார்த்தைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்காது செயற்பட்டதனால்தான் தற்போது எதுவித உரிமைகளும் இல்லாத அடிமை நிலையில் உள்ளனர். இந்த அடிமை நிலையில் இருந்து மீள்வதற்கு, புலிகளின் மீள்வருகைதான் ஒரே வழியென்று நம்புவர்களுக்கும் தெரியும் அப்படியொன்றும் நடக்காது என்பது!

அப்ப உலக ஆதரவுடன் செய்து கொண்ட திம்பு ஒப்பத்தங்களுக்கு என்ன ஆனது....?? இந்திய இலங்கை ஒப்பந்தம்.....?? எப்படி அந்த ஒப்பந்தங்களை மீறி திலீபன் சாகடிக்க ப்பட்டார்...?? குமரப்பா புலேந்தி அம்மான் ...??

அதை ஒட்டி 8000 மேற்பட்ட தமிழ் மக்கள் எப்படி கொல்லப்படனர்....??

சரி நோர்வே அரசின் அனுசரனையுடனான MOU வுக்கு என்ன ஆனது....??? அதில் உள்ள முக்கிய சரத்துக்களான தமிழ் மக்களின் பாதுகாப்பு , சுந்தந்திரமான நடமாட்டம் , மீள் குடியேற்றம் இப்படி எது இலங்கை அந்த 9 வருடங்களால் அரசால் கடைப்பிடிக்க பட்டது...

எனக்கு விளங்க இல்லை எந்த அடிப்படையில் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் எண்டு....??

நான் நினைக்கிறன் நீங்கள் மிகவும் மறதி நோய்க்கு ஆள்பட்டு இருக்கிறீர்கள் எண்டு...

Edited by தயா

... இன்று குறிப்பாக புலத்தில் தோன்றியிருக்கும் ...."யார் தலைவன்".... போட்டியானது, யுத்தத்தின் பின் மே18இற்கு பின்னர் தோன்றியது அல்ல ஆயுதப்போராட்டம் தோன்றிய ஆரம்ப காலங்களில் .. 70களின் இறுதிகளில் ... தலைமைப்போட்டி தொடங்கி முழு வீச்சடைந்து பின் ஓய்வுற்று .... மீண்டும் பின் இன்று முழு வேகத்துடன் புயலாக ... குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் தண்டச்சோறுகளாக வாழும் பிணங்களிடையே ... தோன்றியிருக்கிறது!!!

... ஆனால் ...

... அத்ற்கு முன்னமே ... உபதலைவன் ... பதவிக்கு களத்தில் ... களத்தில் ... மிகப்பெரிய போட்டி தொடங்கி விட்டது, அது புலமெங்கும் கடந்த காலங்களில் வியாபித்தது!!! .... புலிகளின் இன்றைய அழிவுகளுக்கு ஓர் முக்கிய காரணம் ... இந்த உபதலைவன் ... போட்டியும், அதன் பிரதிபலனாக விளைந்த குழிபறிப்புக்கள்/காட்டிக்கொடுப்புகள்/சேறடிப்புகள் மூலமும் நிகழ்ந்து முடிந்திருக்கிறது!!!!!!

... குறிப்பாக இறுதிப்போருக்கு முன்னதாக ... யுத்த நிறுத்த காலத்துக்கு சற்று முன் என்றும் கூறலாம் ... தொடங்கிய ... யார் உபதலைவன்?????? .... போட்டி ... இன்று புலத்தே அதனது போட்டியாளர்களின் வாரிசுகளால் ... யார் தலைவன்??? ... ஆக பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!

... ஈழத்தமிழ் மக்களின் சாபக்கேடு .... இவர்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் நீங்கள் மிகவும் மறதி நோய்க்கு ஆள்பட்டு இருக்கிறீர்கள் எண்டு...

வழமை போன்று உங்கள் கணிப்பு பிழையாகத்தான் உள்ளது. :D

அப்ப எந்த அடிப்படையிலை சர்வதேச தலையீடுகள் MOU க்கு முன்பு வந்த ஒப்பந்தங்களில் இருக்க இல்லை எண்டுறீயள்....?? :unsure: :unsure: :unsure:

ரோக்கியோ மாநாட்டில் வந்தவர்கள் யார் புலிகளை தடை செய்யாதவர்கள்....?? ஒரு பக்க சார்பு நிலையில் உங்களுக்கு நடுநிலை கிடைக்கும் எண்டு எப்படி நினைக்கிறீர்கள்....??

இது இணைத்தலைமை நாடுகளின் கூட்டறிக்கை அது.... அதில் இங்கைக்கு எதிராக ஏதும் சொல்லப்பட்டு இருக்கிறதா....??? இதில் நடுநிலமை எங்கை இருக்கிறது......???

http://www.yarl.com/forum3/index.php?showtopic=11152

உலகுக்கு ( நீங்கள் சொல்லும் மேற்க்கு நாடுகள்) இலங்கையில் நடந்த வன்கொடுமைகள் தெரியவே தெரியாது எண்டுறீயளா....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உலக ஆதரவுடன் செய்து கொண்ட திம்பு ஒப்பத்தங்களுக்கு என்ன ஆனது....?? இந்திய இலங்கை ஒப்பந்தம்.....?? எப்படி அந்த ஒப்பந்தங்களை மீறி திலீபன் சாகடிக்க ப்பட்டார்...?? குமரப்பா புலேந்தி அம்மான் ...??

அதை ஒட்டி 8000 மேற்பட்ட தமிழ் மக்கள் எப்படி கொல்லப்படனர்....??

சரி நோர்வே அரசின் அனுசரனையுடனான MOU வுக்கு என்ன ஆனது....??? அதில் உள்ள முக்கிய சரத்துக்களான தமிழ் மக்களின் பாதுகாப்பு , சுந்தந்திரமான நடமாட்டம் , மீள் குடியேற்றம் இப்படி எது இலங்கை அந்த 9 வருடங்களால் அரசால் கடைப்பிடிக்க பட்டது...

எனக்கு விளங்க இல்லை எந்த அடிப்படையில் நீங்கள் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் எண்டு....??

இதில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றிற்கும் புலிகளில் எதுவித குற்றமுமில்லை, எல்லாம் வெளியாரின் தவறுதான் என்ற தர்க்கம்தான் முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எந்த அடிப்படையிலை சர்வதேச தலையீடுகள் MOU க்கு முன்பு வந்த ஒப்பந்தங்களில் இருக்க இல்லை எண்டுறீயள்....?? :unsure: :unsure: :unsure:

இந்திய - இலங்கை ஒப்பந்தமும், 2002 MOU தான் சர்வதேச நாடுகளின் கையொப்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள். பிறவற்றில் சர்வதேச நாடுகளின் அனுசரணை இருந்தாலும், அவை தமிழர் தரப்புக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள். அவற்றில் ஒரு தரப்பு மீறியிருந்தால், முறைப்பாடு செய்ய வழிவகைகள் இருக்கவில்லை.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் தற்போதும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ளது. அதிலுள்ள சில அம்சங்கள் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்று அதனை ஒத்துக்கொள்ளாத தரப்பு குறை சொல்லிப் பிரயோசனமில்லை.

2002 போர் நிறுத்த உடன்படிக்கை, அவ்வுடன்படிக்கையில் உள்ள சரத்தின் பிரகாரம் இலங்கையரசால் முறையாகக் கைவிடப்பட்டது. எனவே அனுசரணையாகச் செயற்பட்ட நோர்வே உட்பட பிற நாடுகளால் உடன்படிக்கைக்கு மேலாக ஒன்றும் செய்யமுடியவில்லை!

சர்வதேசத் தலையீடுகளைத் தமிழர்க்ளுக்குச் சாதகமாகப் பாவிக்க முடியாத நிலைதான் இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று ஏன் நாம் தேடுவதில்லை?

இதில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றிற்கும் புலிகளில் எதுவித குற்றமுமில்லை, எல்லாம் வெளியாரின் தவறுதான் என்ற தர்க்கம்தான் முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் சொல்லப்படுகின்றது.

புலிகளின் தவறுகள் என்பதை விட புலிகளின் இயலாமை என்பது தான் உண்மையாக இருந்தது...! சிறுபான்மை இனமாக தமிழருக்குள் சிறு சதவீதமான புலிகளை வைத்துக்கொண்டு , தப்பி ஒடி தங்களின் வாழ்வை பார்க்கும் மக்களுக்கு நடுவில் நிண்டு கொண்டு, இருந்த புலிகளை எதிர்ப்பதே குறியாக இருந்த தமிழ் ஆயுத குழுக்களையும், சமாளித்துக்கொண்டு புலிகளால் மேலும் நகர முடியவில்லை என்பதே உண்மையாக இருந்தது...

நீலன் திருச்செல்வம், கதிர்காமர் எண்று சந்திரிக்காவின் நண்பர்களால் செய்யப்பட்ட புலிகள் பயங்கரவாதிகள் எனும் பிரச்சாரம் போண்ற நகர்வுகளுக்கு எதிராக செயற்படும் தலைமை புலம்பெயந்த நாட்டில் இருக்கவில்லை.. அப்படி ஒண்டை உருவாக்க பெரும் அளவில் பெறப்பட்ட நிதி பெரும் தடையாக இருந்தது... நடவடிக்கை எடுத்தால் தான் மக்கள் நிதி தருவர் எனும் நிலை இங்கே இல்லாமல் புலிகள் பெயரை சொன்னாலே போதும் எனும் நிலை கூட அனுகூலமாக இருக்கவில்லை...

அதை எதிர்த்து நடவடிக்கை எடுக்கப்பட்ட போது நடந்த நிகழ்வுகள் எல்லாருக்கும் தெரியும்....! அது இன்னும் பாதகமான சூழலையே தோற்றுவித்தது...! சுற்றிவர துரோகத்தை வைத்துக்கொண்டு அதை களைய முன்வராதவர்கள் புலிகள் அரசியல் போதவில்லை என்பது கூட கேவலமானது...

2000 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரையான புலிகளின் போர் நிறுத்ததில் இருந்து வெளிவராததின் காரணம் கூட புலிகளால் ஆயுத ரீதியில் எட்ட வேண்டிய இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்து கொண்டதாலே....

Edited by தயா

இந்திய - இலங்கை ஒப்பந்தமும், 2002 MOU தான் சர்வதேச நாடுகளின் கையொப்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள். பிறவற்றில் சர்வதேச நாடுகளின் அனுசரணை இருந்தாலும், அவை தமிழர் தரப்புக்கும், சிறிலங்கா அரசிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள். அவற்றில் ஒரு தரப்பு மீறியிருந்தால், முறைப்பாடு செய்ய வழிவகைகள் இருக்கவில்லை.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் தற்போதும் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ளது. அதிலுள்ள சில அம்சங்கள் நடைமுறைப்படுத்தப் படவில்லை என்று அதனை ஒத்துக்கொள்ளாத தரப்பு குறை சொல்லிப் பிரயோசனமில்லை.

2002 போர் நிறுத்த உடன்படிக்கை, அவ்வுடன்படிக்கையில் உள்ள சரத்தின் பிரகாரம் இலங்கையரசால் முறையாகக் கைவிடப்பட்டது. எனவே அனுசரணையாகச் செயற்பட்ட நோர்வே உட்பட பிற நாடுகளால் உடன்படிக்கைக்கு மேலாக ஒன்றும் செய்யமுடியவில்லை!

சர்வதேசத் தலையீடுகளைத் தமிழர்க்ளுக்குச் சாதகமாகப் பாவிக்க முடியாத நிலைதான் இருந்தது. அதற்கு என்ன காரணம் என்று ஏன் நாம் தேடுவதில்லை?

முதலில் சர்வதேச நாடுகள் எண்டு நீங்கள் குறிப்பிடுபவர்கள் யார்....??? மேற்க்கு நாடுகளும் ஜப்பானுமா....?

இவர்கள் வெளிப்படையாக புலிகளை எதிர்த்து கொண்டு தமிழரின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்க கூட மாட்டாமல் வெறும் இலங்கை அரசின்மீதான ஆதரவு கருத்துக்களை சொல்லி கொண்டு எப்படி தமிழர்களுக்கு ஒரு தீர்வை தருவார்கள் எண்டு நம்புகிறீர்கள்....??

சரி இணைத்தலைமை நாடுகளை கூட்டி அமைத்தவர்கள் யார்....??

  • கருத்துக்கள உறவுகள்

இதில் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றிற்கும் புலிகளில் எதுவித குற்றமுமில்லை, எல்லாம் வெளியாரின் தவறுதான் என்ற தர்க்கம்தான் முள்ளிவாய்க்கால் அழிவுக்கும் சொல்லப்படுகின்றது.

புலிகள் என்பவர்கள் யார் கிருபன்

ஒவ்வொருமுறையும் அவர்கள் நேரடியாகச்சொல்லாவிட்டாலும் மறைமுகமாக சொல்லியே வந்தனர்.

யாழ்ப்பாணத்தை விடக்கூடாது 5000 பேர் வாருங்கள் என்றனர். எத்தைனே பேர் போனோம்.

மகிந்த ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்தில் ஒருவர் வாருங்கள் போரை இனி இழுக்கமுடியாது போரை முடிவுக்கு கொண்டுவருவோம் என்ற போது எத்தனைபேர் விரும்பிப்போனோம். வெளிநாட்டிலிருந்து எத்தனைபேர் போனோம்.

போகத்தான் வேண்டாம் இந்த நாட்டிலிருந்து இந்த தொகை வேண்டும் என்றபோது எவ்வளவு கொடுத்தோம்ஆள் பலமும் இல்லை பணபலமும் இல்லை என்பது எங்களுக்கு தெரியாது இருந்திருக்கலாம். ஆனால் எதிரிக்கும் துரோகிகளுக்கும் அதற்கு உதவியவர்களுக்கும் தெரிந்துவிட்டது புலிகள் சமாதானத்துக்கான கதவை திறந்துவைத்தபடி இவையெல்லாம் தம்மிடம் இன்னும் இருக்கிறது என்று வெளியில் காட்டியபடி பின் வாங்கி பின்வாங்கிச்சென்று இறுதியில்..........???

Edited by விசுகு

40,000 போராளிகளைத் தாருங்கள் யாழ்ப்பாணத்தை மீட்டுத்தருகின்றேன், 100000 போராளிகளைத் தாருங்கள் முழு ஈழத்தையும் மீட்டுத்தருகின்றேன் ..

நிலவன்...

முதலில் இவ்வாறு தலைமை கேட்டாதா என்பதே மிகப்பெரிய கேள்வி????!!!!! ... அதற்கப்பால் அதன் சாத்தியப்ப்பாடுகளும், நடைமுறை சிக்கல்களும் என்பது வேறு விடயம்!!! அதற்கப்பால் ...

... எண்ணிக்கை .... வளைகுடா யுத்தம் 1, 2 இல் நேச நாட்டுப்படைகளுடன் ஒப்பிடுகையில் ஈராக்கிய இராணுவ ஆட்பலம் மிக அதிகம்!! தாக்குப்பிடிக்க முடிந்ததா???? ... இத்தனைக்கும் ஈராக் ஒரு சுதந்திர நாடாகவும், அதன் பின்னே பல நாடுகள், மறைமுகமாக சில வல்லரசுகள் இருந்தும் ....????????????????????? யூகோஸ்லாவியா யுத்தம், ஆப்கான் யுத்தன் என இப்படி அண்மையில் நிகழ்ந்த சில யுத்தங்களை கூறலாம்!!! உண்மையில் இவ் யுத்தங்களின் ஆட்பலமா முன்னணி வகித்ததென்றால் இல்லை ஆயுதபலமே, அதுவும் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஆயுதங்கே இவ் யுத்தங்களின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது!!!

இனி எம் யுத்தத்துக்கு வருவோம் ... சரி ஒரு லட்சம் பேரை திரட்டியாயிற்று, அவர்களுக்கான ஆயுதங்கள்????? சர்வதேச நாடுகள் எமக்கு தரப்போகின்றதா??? இல்லை அதனை 9/11இற்கு பின்னான சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்க போகின்றதா???? இவ்வளவு ஆட்பலம் திரட்டப்பட்டால் அதனை பராமரிக்க நிதி/உணவு/உடைகள்???? ... அதற்கு மேல் நாம் ஒரு லட்சத்தை திரட்ட சிங்களம் தன்னை தயார் படுத்த முடியாது தத்தளித்திருக்குமா????

... நடந்து முடிந்த எம் யுத்தம் ... ஆட்பலத்துக்கு அப்பால் ஆயுதபலமே தீர்மானித்தது!!! இறுதி யுத்ததில் ஆயுதங்கள் இருந்தும், எதிரியின் முன் அவை பாவிக்கப்பட முடியாத நிலை தோன்றியது(யுத்ததில் இருந்து வந்தவர்கள் கூறுகிறார்கள்)!!! அதற்கு எதிரியல்ல காரணம், எதிரியோடு யுத்தத்தில் கைகோர்த்த வல்லரசுகள்!!! அவ்வல்லரசுகளின் நவீன தொழில் நுட்பம் முன் எம்மால் ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விட்டது!!!

... இன்று எவர் விரும்பியோ விரும்பாமலோ ... இலங்கையானது, வளைகுடாவில் அமெரிக்காவிற்கு ஒரு இஸ்ரேல் போல, சீனாவின் ஒரு விளையாட்டு பொருளாக மாறிவருகிறது!!!! ... இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா கொடுத்த ஆயுதங்களும், தொழில் நுட்பமும் ... இதுவரை இந்தியாவிடமே இல்லாதவைகள் என கூறுகிறார்கள்!!!

ஆகவே எமது யுத்தத்தை எம் ஆட்பலமென்ன .... சர்வதேச வல்லரசுகளே தீர்மானித்த சக்திகளாக இருந்தது!!!

.. விலை போகாத, கொள்கைப்பற்றுடைய, நேர்மையான ... ... எம் தலைமைதான்!! ... ஆனால் சர்வதேச அரசியல்/இராணுவ மாற்றங்களுக்கெற்ப, தம்மை/எம்மை நெளிவு சுழிவுகளினோடு கொண்டு செல்ல தவறிவிட்டது!!

... இவைகள் முடிந்தவைகள்!!! அதனை திரும்பத்திரும்ப கிளறுவதில் எவ்வித பயனுமில்லை!!! ஆனால் ...

... இத்தலைமையினால் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் இன்று ..... தண்டச் சோற்றுக்காக .... கதிரைகளுக்காக ... கையில் அகப்படுவதை சுருட்டுவதற்காக ..... இருக்கும் எச்ச சொச்சங்களையும் அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே வேதனையான விடயம்!!!!!!

  • தொடங்கியவர்

அன்று, ஆனையிறவுப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னரான திட்ட விளக்கத்தின்போது தலைவன் தளபதிகளுக்கு தெரிவித்திருந்தார். . .

ஆனையிறவுப் படைத்தள வீழ்ச்சிக்குப் பின்னர் பால்ராஜ் வழங்கிய செவ்வியை இத்துடன் இணைக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன்....................... - .. விலை போகாத, கொள்கைப்பற்றுடைய, நேர்மையான ... ... எம் தலைமைதான்!! ... ஆனால் சர்வதேச அரசியல்/இராணுவ மாற்றங்களுக்கெற்ப, தம்மை/எம்மை நெளிவு சுழிவுகளினோடு கொண்டு செல்ல தவறிவிட்டது!!

இறுதிவரை சர்வதேச அரசியல் கள நிலமைகளுக்கு ஏற்பதான் எம் போராட்டம் நகர்த்தப்பட்டது அதனால்தான் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறவும் இல்ல!

  • தொடங்கியவர்

சர்வதேச ஒழுங்கில் காய்நகர்த்தல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள் என்பது தவறு... சர்வதேசத்தின் போக்கினை கருத்திற் கொண்டே அவர்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கைகளை கணித்தார்கள்... அதன் அடிப்படையில் பன்னாட்டு மதியுரைஞர்களின் கருத்துக்களைச் செவிமடுத்தே அவர்கள் சில ஆய்வுகளுக்கு உட்படுத்தினர். சமராய்வுப் பணியகத்தின் செயற்பாடு முதன்மை பெற்றது. காலத்தின், புவியியல், சாஸ்திரம், என்பனவற்றின் அடிப்படையிலேயே சில முடிவுகள் எடுக்கப்பட்டன...

.. கிளறி ... மீண்டும் "தூ* வேண்டாம்! ... வாங்கியது/தந்தது போதும்! :lol:

நன்றி...

வசிக்க நல்லயிருந்துச்சு..

என்ன வழக்கம்போல துரோகிகளும் தியாகிகளும் குண்டுச்சட்டிக்கில குதிர ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வேற வேற ஆக்கள், அதே யார் சரி எண்டு விவாதம். உருப்படியாய் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.