Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜனவரி 2011 16:38

பலருடைய திருமண வாழ்வில் பிளவு ஏற்பட பேஸ்புக் காரணமாக இருந்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒன்பது மாத காலத்தில் தான் கையாண்ட விவாகரத்து வழக்குகளில் கிட்டத்தட்ட எல்லாவற்றுக்குமே பேஸ்புக் காரணமாக அமைந்துள்ளது என்று சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் வைத்திருக்கும் உறவு பேஸ்புக் மூலம் தெரியவருவதால், அது விவாகரத்தில் முடிவடைகின்றது.

குறைந்த பட்சம் இவ்வாறான வழக்குகள் முடிவடைகின்ற வரைக்குமாவது பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டாம் என வழக்கறிஞர்கள் இப்போது தமது கட்சிக்காரரகளுக்கு ஆலோசனை வழங்கிவருகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்ட தமபதியினர் கூட ஒருவர் மறறவரை வேவு பார்க்க பேஸ்புக்கைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

tamilcnn

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கன பேர் காதல் கலியாணம் என்று அதுக்கு மேலதிகமாகவும் கள்ளத் தொடர்புகளை பேணி வருகினம் என்றீங்க.

உளவுப் பணியை சிறப்புறச் செய்து கள்வர்களை காட்டிக் கொடுக்கும் பேஸ்புக் வாழ்க.

இது ஒருவகையில் நல்லது தானே. உன்னையே காதலிக்கிறன் என்று கொண்டு இன்னொருவரோடும் அல்லது இன்னும் பலரோடும் உறவுகளைப் பேணிக்கொள்ளும் இழிந்த மனிதர்களோடு வாழ்வதிலும் அவர்களை விட்டுப் பிரிவது நல்லம் தானே..! அந்த வகையில் பேஸ்புக்கின் பணியை போற்ற வேண்டும். :D:)

:rolleyes:

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகநூல் சில இடத்த காட்டியும் கொடுக்குது, பல இடத்த கட்டியும் கொடுக்குது. :)

திருமண வாழ்வில் பிளவு ஏற்பட காரணமான பேஸ்புக்!

...

tamilcnn

ஒவ்வொருத்தரின் மன நிலையை பொறுத்தே அவர்களின் செயல்பாடுகளும் இருக்கலாம். அதற்கு முகநூல் தான் காரணம் என்று குறை கூறுவது என்னவோ நியாயமாகப் படவில்லை. முகநூல் இல்லாவிட்டால் அவர்கள் தமது (கள்ளத்) தொடர்பை வைத்திருக்க வேற வழியா இல்லை? :rolleyes: வழக்கறிஞ்சர்களின் ஆலோசனை நீண்ட காலத்திற்குப் பலனளிக்குமா என்பது சந்தேகம்.

ஊரில் என்னுடன் படித்த நண்பர் ஒருவரை 25 வருடங்கள் கழித்து முகநூல் மூலம் தேடிப் பிடித்தேன். இதற்கு முகநூலுக்குத் தான் நன்றி சொல்லுவேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கன பேர் காதல் கலியாணம் என்று அதுக்கு மேலதிகமாகவும் கள்ளத் தொடர்புகளை பேணி வருகினம் என்றீங்க.

உளவுப் பணியை சிறப்புறச் செய்து கள்வர்களை காட்டிக் கொடுக்கும் பேஸ்புக் வாழ்க.

இது ஒருவகையில் நல்லது தானே. உன்னையே காதலிக்கிறன் என்று கொண்டு இன்னொருவரோடும் அல்லது இன்னும் பலரோடும் உறவுகளைப் பேணிக்கொள்ளும் இழிந்த மனிதர்களோடு வாழ்வதிலும் அவர்களை விட்டுப் பிரிவது நல்லம் தானே..! அந்த வகையில் பேஸ்புக்கின் பணியை போற்ற வேண்டும். :D:)

சவால் விடுகின்றேன் நெடுக்ஸ்

ஏலும்என்றால் கல்யாணம் கட்டுங்கள் பார்க்கலாம்

அந்த ஆசையே வரக்கூடாது தங்களுக்கு இனி.

இதுவரையில் இங்கு பெண்கள் பற்றி எழுதிய அத்தனையையும் எனது முகநூலில் போட்டு வைத்து உம்மை கட்டுபவருக்கு போட்டுக்கொடுப்பதே எனது லட்சியம் இனி....

வாழ்க முகநூல் :lol::D:D

  • தொடங்கியவர்

வாழ்க உங்கள் சேவை.

நல்லா எழுதுங்கோ விசுகு அண்ணா. நீங்கள் எழுதிற எழுத்தில யாருமே கல்யாணம் கட்டுறது என்பதை நினைச்சுப் பார்க்கவே கூடாது. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் மட்டும் தான் காரணமல்ல அவரது சந்தேகபுத்தியும் காரணமாய் இருக்கலாமா.?

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் மட்டும் தான் காரணமல்ல அவரது சந்தேகபுத்தியும் காரணமாய் இருக்கலாமா.?

அக்கோய் நான் நிறைய நாளா ஒரு கேள்வியை கொண்டு ஓடித்திரியுறன்.. கேட்க ஆளில்லாமல்.. நீங்க மாட்டிக்கிட்டீங்க.

அது சரி சந்தேகப் புத்தி என்றால் அதென்ன.. ஆண்களுக்கு மட்டும் வாற ஒரு புத்தியா..??!

மனிசரா பிறந்த சிந்திக்கிற ஆற்றலுள்ள எல்லோருக்கும் அது வரத்தான் செய்யும். ஒருவர் சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் அவரை சந்தேகிக்காமல்.. சிவனே என்று கேண மாதிரி இருக்கவா சொல்லுறீங்க..???! அப்படி இருந்திட்டாலும் சொல்லுவிங்க.. அது ஒரு லூசு என்று.

ஆண்கள் சந்தேகிச்சாலும் தப்பு.. சந்தேகிக்காவிட்டாலும் தப்பு. ஆனால் பெண்கள் மட்டும் வளைச்சு துளைச்சு.. துருவித்துருவி கேள்வி கேட்டு தங்கட சந்தேகங்களை கிளியர் பண்ணுறது மட்டும் நேர்மையோ நேர்மை. இது எங்கிருந்து பிறக்கிற நியாயம் அக்கோய்..! :D:)

:lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பிழையா விளங்கிடீங்க தம்பி ................அவரது என்று நான் சொல்ல வந்தது ஆணுக்கு பெண் மீதும பெண்ணுக்கு ஆண் மீதும வந்த வரும் சந்தேகம்.........சந்தேகம் மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் வரும்,வரவேண்டும்.தெளிவது தான் ஆறறிவு படைச்ச் மனுஷனுக்கு அழகு ............

என்ன இவ மினகேடுகிரா பேஸ் புக்கில் யாரையும் பிடிசிடாளோ ?

என்ன இவர் பேஸ் புக்கில் மினகேடுறார் யாரையும் பிடிசிடாறோ ?

.தன மீது/ தன துணை மீது

நம்பிக்கையிலாத்வருக்கு தான் சந்தேகம் வரும்.

முதல்ல சந்தேகம் வரனும்.. அதுதான் ஆறறிவு என்றீங்க..

அப்புறம் என்னடான்னா.. நம்பிக்கை இல்லாதவங்களுக்குத்தான் சந்தேகம் வரும் என்றீங்க..

முடிவா என்ன சொல்லவாறீங்க.. குழப்பபமா இருக்கே..!

சந்தேகிக்கும் படி நடத்துக்கிறவங்கள சந்தேகிக்காம.. விட்டிட்டு விடுப்பா பார்ப்பாங்க. அது பிறகு வினை முந்தி.. இலவம் பஞ்சா பறக்கும்..! அப்ப ஆறறிவும் உதவாது ஒன்றும் உதவாது. உள்ளதையும் கோட்டவிட்டிட்டு.. ஊரில பெரியவங்க சொல்லுறது போல.. முகட்டை முகட்டை பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவது தான் ஆறறிவு படைச்ச் மனுஷனுக்கு அழகு .

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்.............இலவம் பஞ்சை பறக்க ஏன் விடுறீங்க தேவைக களை நிறைவு செய்தால் ஏன் வேறு தேடுறாங்க.

. தேவை காரணம் அறிந்துவரனும் பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் ( குண நலன் ) அறிந்துபெண்ணை கொடு ............தீர வர ஆராய்ந்து அறிந்து .........

இதய் மிஞ்சி பறந்தால் போனால்போகட்டும் போடா /போடி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவது தான் ஆறறிவு படைச்ச் மனுஷனுக்கு அழகு .

சந்தேகம் வராமல் எப்படி அக்கா தெளிய முடியும். சந்தேகமே படக்கூடாது அது நம்பிக்கை இல்லாதவங்க பண்ணுறது என்ற ஒரு போலியான தோற்றப்பாட்டை பெண்கள் ஆண்கள் மீது திணிப்பதையும் அதன் மூலம் தாங்கள் செய்யும் தவறுகளை அவர்கள் மறைக்கவும் அல்லது நியாயப்படுத்தவும் முற்படுவதை பல இடங்களில் காண முடிகிறது.

மன்மதன் படத்தில் சிம்பு அதனை அழகாகக் காட்டி இருந்தார். அப்படிப்பட்ட பெண் ஜென்மங்களை சந்தேகிக்காம...???! நோட்டம் விடாம.. வைச்சு அழகா பாப்பினம்..!

நாளுக்கும் ஒன்று என்று வாழ்பவனுக்கு உதுகள் பிரச்சனையில்ல. கண்ணே கண்ணே என்று ஒன்றோட கட்டிக்கிட்டு கிடந்து ஏமாறுறான் அல்லது ஏமாற்றப்படுறான் பாருங்க.. அவன் உண்மையில் பாவம். அவன் சந்தேகிக்கத்தான் வேணும்.. சந்தேகிக்கும் படி சூழ்நிலை அமைந்தா. ஏனெனில் அப்பதான் அவன் பாதிப்புக்களில் இருந்து வெளிவர முடியும். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேகத்தின் பேரில் கைது செய்ய பட்டார் ..........

.................சந்தேகம் தெளிவடையும்போது அவர் குற்றம் அற்றவர் r என விடுவிக்கக் படலாம்.

அல்லது குற்றம் நிரூபிக்கக் பட்டு தண்டிக்கப்படலாம். .....வேணுமென்று அவரை தண்டிக்கக்

முடிவு செய்தால் சோடனை செய்து (இட்டுக்கட்டி )..குற்றவாளியாகக் படலாம்

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

தெளிவது தான் ஆறறிவு படைச்ச் மனுஷனுக்கு அழகு .

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்.............இலவம் பஞ்சை பறக்க ஏன் விடுறீங்க தேவைக களை நிறைவு செய்தால் ஏன் வேறு தேடுறாங்க.

. தேவை காரணம் அறிந்துவரனும் பாத்திரம் அறிந்து பிச்சை இடு கோத்திரம் ( குண நலன் ) அறிந்துபெண்ணை கொடு ............தீர வர ஆராய்ந்து அறிந்து .........

இதய் மிஞ்சி பறந்தால் போனால்போகட்டும் போடா /போடி

சந்தேகத்திற்கு காரணம்.. தன்னை தானே நம்பாதது என்பதைக் காட்டிலும் வழமைக்கு மாறான சந்தேகத்தை உண்டுபண்ணக் கூடிய நடத்தைகளை மறுதரப்பார் காண்பிப்பது தான் என்று நினைக்கிறேன். போராட்டத்தில் கூட வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது மட்டுமன்றி கடினப் பணி உளவுப் பணிதான்.

அப்படியான உளவுப் பணியை எப்படி அக்கா வெறும் தீர விசாரிச்சு.. அறிய முடியும். எந்த பொம்பிளை தரப்பு உண்மையைச் சொல்லி கலியாணம் முடிக்கும். எல்லாம் முடிஞ்ச பிறகுதான்.. எனக்கு இன்னொருத்தனோட பழக்கம் இருந்தது என்பதே வெளில வரும். இப்படிப்பட்ட ஆக்களட்ட இருந்து எப்படி தீர அல்லது தீவிர விசாரணை நடத்திறது.

முட்டிக்கு முட்டி தட்டியா..???!

இதில நிறைய சிக்கல்கள்.. குறைபாடுகள் உள்ளன. அந்த வகையில் அளவான உளவுப்பணி அல்லது கண்காணிப்பு ஒருவர் மீது இருப்பது எப்போதும் நல்லதே. அதற்கு சந்தேகம் என்று பெயரிடுவதைக் காட்டிலும் ஒரு கண்காணிப்பு என்று வைத்துக் கொண்டால்.. பலரும் கட்டுப்பாட்டோடு நடக்கவும் முயற்சிப்பார்கள். அது வீட்டுக்கும் நாட்டிற்கும் நல்லதைத் தரும். அதைவிடுத்து நம்பிக்கை இல்லாதவை தான் சந்தேகிக்கிறது என்று சொல்லிக் கொண்டு முழுக்க முழுக்க களவு செய்யுற ஆக்களைக் காட்டிலும்.. சந்தேகிக்கிறது எவ்வளவோ மேல்..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்பு ஒருவர் மீது இருப்பது எப்போதும் நல்லதே. :D

கரிசனையான கவனிப்பு .............இருப்பது நல்லதே...............சரிங்க. ஏற்றுக் கொள்கிறேன். :D :D

யாழ் பக்கம் வாரதால ஒருத்தரும் சட்டத்தரணியிடம் போக இல்லைத்தானே? :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பக்கம் வாரதால ஒருத்தரும் சட்டத்தரணியிடம் போக இல்லைத்தானே? :D:D:D

யாழில் சோடி சேர்ந்தவங்க எல்லாம் ஒன்றில் செற்றிலாகிட்டாங்க.. இல்ல கழண்டிருப்பாங்க. அதுக்கப்புறம்... வாற பிரச்சனைகள் யாழுக்கு தெரிய வராது தானே..! :lol::D

  • 2 weeks later...

சந்தேகப் பேர்வழிகளுக்கு சிறு ஆதாரம் கிடைத்தாலும் ஒரு குடும்ப வாழ்க்கை நாசமாகிவிடும்.

கணவன், மனைவி ஒவ்வொருவரும் ஒருவர் மேல் ஒருவர் உண்மையான பாசமும், கனிவும் ஏற்படுத்திக்கொண்டால் மட்டுமே இருவரும் மகிழும் உண்மையான இல்வாழ்க்கை அமையும். இதில் இருவரும் பங்காளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் மட்டும் தான் காரணமல்ல அவரது சந்தேகபுத்தியும் காரணமாய் இருக்கலாமா.?

இது சொந்த வலிமாதிரி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.