Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! - ஒரு தமிழனின் மறுமொழி

Featured Replies

சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! - ஒரு தமிழனின் மறுமொழி

karunayy122.jpg

அன்புள்ள தாமரை அவர்களே,

தாங்கள் அண்ணன் சீமானுக்கு எழுதியிருக்கும் மடலை முழுமையாக படிக்க நேர்ந்தது. அதில் முன்வைக்கப்பட்டிருக்கும் காங்கிரஸை அழிக்க வேண்டும் என்ற தங்களுடைய தீர்க்கமான பார்வை ஒரு வரலாற்றுப்பார்வை. தமிழர்கள் போராடும் போதெல்லாம் வட இந்திய துணை ராணுவப்படைகளை களமிறக்கி சுட்டுப்பொசுக்கியே கறை படிந்த கைகளையுடையது கட்சி காங்கிரஸ் கட்சி. இந்தக் கட்சி இன்னொருமுறை தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டில் ஏறினால் இருக்கும் கொஞ்ச நஞ்ச போராட்ட சக்திகளையும் அடக்குவதற்கு ஒரு நிகழ்சிநிரலை அரங்கேற்றுவார்கள் என்பது திண்ணம்.

இந்த இன எதிரி காங்கிரஸ் படை இன்று தமிழ்நாட்டில் அரசியலில் காணப்படும் ஒரு நிச்சயமற்ற தன்மையை பயன்படுத்தி மீன்டும் ஆட்சியில் பங்கு கொள்ளவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ பார்க்கிறது. நான் கூறும் நிச்சயமற்ற நிலை என்பது கருணாநிதிக்குப் பின் தி.மு.க. உடையும் என்பதே. எனவே இந்த தேர்தலிலேயே ஏதாகிலும் இடங்களைப் பிடித்து அதிகாரத்தில் பங்குகொள்ளவாவது முடிந்தால் கருணாநிதிக்குப்பின் தங்கள் அதிகாரத்தை விரிவாக்கிக் கொள்ளலாம் என்று காங்கிரஸார் கணக்கு போட்டிருக்கின்றனர்.

அப்படி ஒரு நிலைமையை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸுக்கு வாய்ப்பு கிட்டுமானால் அது எந்த இடத்தில் கொண்டுப் போய் தமிழர்களை விடும் என்பதற்கு ஒரு பழங்கதையை நினைவு கூற விரும்புகிறேன். ஒரு குளிர்பாலைவனத்தில் கூடாரமடித்து தங்கியிருந்த ஒருவனிடம் ஒரு நாள் இரவு ஒட்டகம் ஒன்று வந்து, ‘அண்ணே, அண்ணே, வெளியில் ஒரே குளிராக இருக்கிறது, என்னுடைய மூக்கை மட்டும் உன் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ள இடம் கொடேன்’ என்று கெஞ்சியது. அந்த மனிதனும் இரக்கப்பட்டு ‘சரி ஒட்டகமே, உன் மூக்கை வைத்துக்கொள்’ என்று அனுமதித்தானாம். சிறிது நேரத்தில் அந்த ஒட்டகம், ‘அண்ணே, அண்ணே….ரொம்ப குளிராக இருக்கிறது, என் தலையை மட்டும் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ள அனுமதி கொடேன்’ என்று கெஞ்சியது. கூடாரத்திற்குரியவனும் இரக்கப்பட்டு,’சரி, தலையை மட்டும் வைத்துக்கொள்’ என்று கூறினானாம். பின் சிறிது நேரம் களித்து அந்த ஒட்டகம், ‘அண்ணே, அண்ணே, குளிர் தாங்க முடிய வில்லை, என் பாதி உடம்பை மட்டும் கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ளட்டுமா?’ என்று கேட்டது. அந்த மனிதனும் இரக்கப்பட்டு, ‘சரி, பாதி உடம்பை கூடாரத்திற்குள் வைத்துக்கொள்’ என்று கூறினான். ஒட்டகம் ஒருவாறாக கூடாரத்திற்குள் தன் பாதி உடம்பை நுழைத்தது. ஆனால் மறுகணமே கூடாரத்திற்குரிய அந்த மனிதனை ஒட்டகம் உதைத்து வெளியே தள்ளி துரத்தியது. தான் மட்டும் கூடாரத்தை ஆக்கிரமித்துக் கொண்டது.

காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது என்பதை இந்தக் கதை நமக்கு தெள்ளென சொல்கிறது. இந்த வாய்ப்பை – மூக்கை நுழைக்க இடம் கொடுக்கும் வாய்ப்பை - இன்று காங்கிரஸுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்போவது யார்? விடை தெளிவாக இருக்கிறது. கருணாநிதிதான்! நாளை கூடாரத்தையே ஆக்கிரமிக்கப் போகும் காங்கிரசை அவரது மகன்களாலேயே முறியடிக்க முடியாமல் ஒட்டுண்ணி பிழைப்பும், இந்திய தேசிய வழிபாடும், இறையாண்மை போலித்தனமும் என்று தமிழகம் நூறு ஆண்டுகள் பின்னோக்கி செல்லப்போகிறது.

அன்புள்ள தாமரை அவர்களே, இந்த நிலை ஏற்படுவதை தவிர்க்க இன்று என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டுமல்லவா? அதைத்தானே அண்ணன் சீமான் செய்கிறார்? செய்ய மட்டுமில்லை, தான் செய்வதை அவர் ஒளிவு மறைவு இன்றி ஒப்புக்கொள்கிறார். ஜெயலலிதா காங்கிரசுப் பக்கம் சாய்ந்தால் ஜெயலலிதாவையும் சேர்ந்து எதிர்க்கப்போவதாக வெளிப்படையாகவே அறிவித்து விட்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்? தாங்கள் அண்ணன் சீமானிடம் கேட்டிருக்கும் கேள்விகளில் ஒன்று:

“உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?”

தாமரை அவர்களே, தயவு செய்து இலங்கையின் அன்றைய போர் நிலைமையையும், விடுதலைப்புலிகளின் முடிவுகளையும் தமிழகத்தின் காறித்துப்பும் நிலையிலுள்ள கண்றாவி அரசியலோடு ஒப்பிடாதீர்கள். அன்று ரணில் விக்ரமசிஙேக்கு புலிகள் ஆதரவளித்திருந்தால் இன்று நிலைமை வேறாக கூட இருந்திருக்கலாம். தலைமைக்கு ஆலோசனை கூரியவர்கள் தவறுகள் இழைத்திருக்க வாய்ப்புண்டு. புலிகள் தங்களை விடுதலைப்போராளிகளாக சொல்லிக்கொண்டார்களே தவிர, அரசியல் வாதிகளாக சொல்லிக்கொள்ள வில்லை. எனவே அத்தகைய முடிவை மேற்கொண்டிருக்கலாம். மேலும் அவர்களது விடாப்பிடியான முடிவுகள்தான் இன்றைக்கு புலிகள் இயக்கத்தை இன்றும் தமிழரின் பிரதிநிதியாக உலக அரங்கில் சொல்ல வைக்கிறது. அவர்களுக்கு கருணாநிதி, ‘கொள்கையை விட்டுக்கொடுக்கவும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினாரே! அதனை மறந்து விட்டீர்களா?

ஒருமுறை லெனின் தன்னுடைய அமைச்சர்கள் வெளிநாட்டு அமைச்சர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப் போகவிருந்த வேளையில், லெனினிடம் கலந்தாலோசித்தார்கள். அப்போது அமைச்சர்கள் “அவர்கள் (வெளிநாட்டு அமைச்சர்கள்) முதலாளித்துவ பாணியில் உடை அணிந்திருப்பார்கள். நாமும் அப்படியா போவது?” என்று கேட்டார்கள். அதற்கு லெனின் என்ன சொன்னார்? “சோஷலித்தின் நோக்கத்தை ஈடேற்ற வேண்டுமானால் பாவாடை கட்டிக்கொண்டு கூடப் போங்கள்’ என்றார் லெனின். அண்ணன் சீமான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது ஒன்றும் அருவருப்பானது இல்லை என்பது விளங்கியிருக்கும்.

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா? - இது நீங்கள் சீமான் அவர்களிடம் கேட்கும் மற்றொரு கேள்வி.

காங்கிரஸை ஒழிப்பதுதான் தலையாயக் குறிக்கோள் என்று சீமான் அவர்கள் ஏறகனவே கூறி விட்டாரே.

மேலும் நீங்கள் கேட்கிறீர்கள்...‘அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும்.

தி.மு.க., அ. தி. மு.க. இருக்கும் வரை அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யவாவது தமிழர்களுக்கு உரிமை இருக்கும். காங்கிரஸு ஆட்சியில் இருந்தாலோ தமிழர்கள் அனைவரும் ‘இந்திய தேசிய பக்தர்கள்’ ஆக்கப்பட்டு விடுவார்கள் – ஈழம் சிங்களமயமாவதைப்போல. ஆந்திராவைப்போல, கர்னாடகாவைப்போல, மகாராஷ்டிராவைப்போல, பிஹாரைப்போல, குஜராத்தைப்போல தமிழகமும் மாறும். தாமரை அவர்களே, அத்தகைய மாற்றத்தை விரும்புகிறீற்களா?

உங்களுடைய அடுத்த கேள்வி - ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அடுத்த தேர்தல் வரை நீங்கள் குறிப்பிடுவது எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை தயவு செய்து நினைவில் வைத்திருங்கள்.

சீமான் அவர்களின் வியூகத்தை திருமாவுடன் ஒப்பிட்டு நீங்கள் கேட்பது: அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

வை.கோ. அவர்கள் அவ்வாறு செய்வதால்தான் அவரால் தொடர்ந்து தமிழீழ ஆதரவாளராக, உலகத் தமிழரின் ஒரே குரலாக இருக்க முடிகிறது. கருணாநிதியோடு சேர்ந்திருத்தால் வை.கோ. இன்று காணாமல் போயிருப்பார் என்று தோன்ற வில்லையா உங்களுக்கு? திருமாவளவன் காணாமல் போகும் கட்டத்தை நோக்கி விரைந்து போய்ய்கொண்டிருக்கிறார். அவருக்காக பரிதாபப்படுங்கள்.

காங்கிரஸை ஒழித்திட உங்கள் அலோசனை வரவேற்கத்தக்கது. நீங்கள் சொல்கிறீர்கள்: ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை."

அதற்கு என்ன வழி என்று சொன்னீர்களா தாமரை அவர்களே? அண்ணன் சீமான் அதற்கொரு வழியாக அ.தி.மு.க.வை ஆதரிக்கும் முடிவெடுத்திருக்கிறார். அதையும் எதிர்க்கிறீர்கள். வேறு என்ன மாற்று வழியை முன்வைக்கிறீற்கள். கருணாநிதியை ஆதரிப்பதையா? அதன்மூலம் நாம் எதை ஒழிக்க விரும்புகிறோமோ அது கூடாரத்தை ஆக்கிரமித்த கதையாகி விடும்.

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும் - இந்த கேள்வியில் உங்கள் அக்கறை புரிகிறது.

ஆனால் தனிமைப்படுத்துவது எப்படி தாமரை அவர்களே?

உங்களுடைய ஆலோசனை சரியாகவே வருகிறது உங்கள் மடலில்: ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

ஆனால் இதனால் தமிழ் தேசிய வாதிகள்தான் தனிமைப்ப்படுவார்கள். கருணாநிதியும், காங்கிரஸும் அடுத்து ஆட்சியை பங்கு போட்டுக்கொண்டால் தமிழ் தேசியச் சிந்தனை தரைமட்டமாக்கப்படும். மக்கள் ஏற்கனவே இலவசங்களின் கைப்பாவைகளாகி கிடக்கின்றனர். இந்த லட்சணத்தில் கருணாநிதியை வைத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று தமிழர் கட்சியமைப்பை வலுப்படுத்த முடியுமா? இன்றைய நிலையில் அ.தி.மு.க. ஆட்சியமைத்தால் வை.கோ. அவர்களும் அண்ணன் சீமான் அவர்களும் ஊர் ஊராகச் செல்லவாவது வாய்ப்பு கிடைக்கும். கருணாநிதி ஏற்கனவே அந்த முயற்சிகளை தடை செய்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து பாருங்கள் தாமரை அவர்களே.

ஈழதேசம்.கொம்மிற்காக நிலவரசு கண்ணன்..

Eeladhesam.com <eeladhesam@hotmail.co.uk>

... முந்தநாள் வரை பிரபாகரனை சுட வேண்டும், புலிகளை அழிக்க வேண்டும் என்று இந்திய இலங்கை அரசுகளுடன் சேர்ந்து வேட்டையாடித் திரிந்த செல்வம் அடைக்கலநாதனோ, சுரேஸ் பிரேமச்சந்திரனோ, தராகி சிவராமோ, ... இன்று தமிழ்த்தேசியத்தோடு சேர்ந்து இயங்கவில்லையா???

அல்லது நேற்று வரை பிரபாகரனோடு ஒன்றாக இருந்த ... கேபி, கருணா, ராமதாஸ், திருமா, கஸ்பர், ... என்று எல்லோரும் சேர்ந்து புதைகுழி தோன்றி புதைக்கவில்லையா???

அரசியலில் எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை!!!

... யாரை பாவிக்க முடியுமோ அவனைப் பாவி!!! அதை விடுத்து ... பிரபாகரை தூக்க வேண்டும் என்றவளோடு கூட்டா????? .... என்றால் நாம் வரலாற்றில் யாருடனும் கூட முடியாது???? அது இந்தியாவோ, அமெரிக்காவோ, சீனாவோ, ..... எதுவானாலும்!!!

Edited by Nellaiyan

சீமானும், தாமரையும் தமிழின அழிவுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவிய இரண்டு கயவர்களையும் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

தமிழ் உணர்வுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் இனத்துக்கு நன்மை செய்யும் (போலி இந்தியம், போலி இந்துத்துவம், போலி திராவிடம் போன்ற கொள்கைகளை கைவிட்டு) ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானும், தாமரையும் தமிழின அழிவுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவிய இரண்டு கயவர்களையும் ஆதரிப்பதை நிறுத்த வேண்டும்.

தமிழ் உணர்வுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் இனத்துக்கு நன்மை செய்யும் (போலி இந்தியம், போலி இந்துத்துவம், போலி திராவிடம் போன்ற கொள்கைகளை கைவிட்டு) ஒரு புதிய கட்சியை உருவாக்க வேண்டும்.

உங்களுடைய ஆவல் நியாயமானதுதான்.............

ஆனால் 80வீதம் மூடநம்பிக்கைகளையும் கொண்ட ஒரு நாட்டில் நல்வன் ஆட்சியை பிடிப்பது என்பது வெறும் கனவு. அது கைதேர்ந்த கயவர்களால்தான் முடியும்.

தந்திரமாக கயவர்களை பயன்படுத்தி அவர்களுக்கு ஆப்பு இறுக்க வேண்டும் என்றுதான் நெல்லையன் சொல்கிறார் என்று நினைக்கிறன்.

Edited by இணையவன்

கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81391

... ... நேற்றைய தினம் இரகுநாதன் தமிழ்நெட்டிலிருந்து ஓர் மொழி பெயர்ப்பை இங்கு இணைத்திருந்தார். ம்ம்... நாமும் நினைத்தோம் உந்த அமெரிக்காவோ, மேற்குலகம் எங்களுக்காக ஏதாவது செய்யப் போகிறதென்று!!!!???? அப்படி இருந்த அற்ப ஆசைகள் கூட தவிடு பொடியாகிக் கொண்டு போய் கொண்டிருக்கிறது!! இங்கு என்னடாவென்றால் வெட்டுவம், கொத்துவம் ... அதுவும் ஒரு கை ஓசையாக ... அந்த ஒரு கையும் தற்போது எமது கையில் முழுமையாக இல்லை ... தொங்கிக்கொண்டிருக்கிறது!!!!!!!!!!!!

... நாம் தமிழகத்தில் ஏற்படுத்திய நேசக்கரங்களோ ... இன்றோ, நாளையோ என சேடம் இழுத்தபடி இருப்பவர்கள்!!! அதற்கு மேல் சாதி எனும் சாக்கடைகளில் வீழ்ந்த திருமாவும், ராமதாசும், அப்படி ஒரு சிலவும்!! அதில் உந்த சாதீய சாக்கடைகள் எமக்கு விரலைக் காட்டி விட்டார்கள்! இன்று இருப்பதோ உந்த சீமான் மட்டும்தான்!! சீமானும் தனிமரமாக தமிழக சாக்கடையில் வீழ்ந்து நீந்தி கரை ஒதுங்க முடியாது!!!! அவனும் கரை சேர ஓர் கட்டுமரம் தேவை!! அதனை உணராது, நாமோ நடுரோட்டில் நிற்பவர்கள், நீயும் நடு ரோட்டில் வா என்கிறோம்????!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

உறவாடிக் கெடுப்பதும் ஒருவகைப் போர்த் தந்திரமே.இன்றைய நிலையில் சூழச்சியைச் சூழ்சியால் வெல்ல வேண்டும்.

உறவாடிக் கெடுப்பதும் ஒருவகைப் போர்த் தந்திரமே.இன்றைய நிலையில் சூழச்சியைச் சூழ்சியால் வெல்ல வேண்டும்.

சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல நினைப்பவர்கள் குறைந்தபட்சம் புலிகள் மீதான தடைகளையாவது நீக்கலாம்.

அதை அமெரிக்க செய்யும் என்று நம்பி ஏமாந்து போகாவிட்டால் நல்லது.

அமெரிக்காவில் குடிகொண்டிருக்கும் தமிழனப் படுகொலையாளன் சவஎந்திர சில்வாவின் பொய்ச்சிங்கள நிகவில் தைரியமாக கேளிவிக் கணைகளை தொடுத்து, பிரசுரங்களையும் விநியோகித்த அந்த நாலு வீரத் தமிழர்களுக்கும் நன்றிகள்.

உங்கள கருத்துகளை படிக்க படிக்க சிரிப்புதான் வருது! இவ்வளவு தன்நிலையற்றவர்களா நாம்? வெட்கம்! வெட்கம்! வெட்கம்! வெட்கம்! இவ்வளவு நடந்தும் இவ்வளவு நடந்தும் சுயத்தை இழந்தும் அறிவு வரலையா? கொல்லச் சொன்னவனும் கொலை செய்தவனும் கூட்டாளியாக முடியுமென்றால், யாரை தண்டிக்க இந்த நாடகம்? பொய்யே மெய்யானதா? இல்லை மெய்யே பொய்யானதா?

இன்னும் அசின் நடித்த படத்தையும், கலைஞர் தொலைக்காட்சியயையும் பார்க்காமலா இருக்கின்றீர்கள்? முட்டிகிட்டு சாவனும், எரிந்து செத்தாலும் திருந்தாதவர்களன்றோ நீங்கள்.

கடிதம் ,தந்தி இதை தவிர தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு வேறு ஒன்றும் தெரியாதோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கடிதம் ,தந்தி இதை தவிர தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு வேறு ஒன்றும் தெரியாதோ? :lol:

தெரியும்.................. கூட்டணி வைக்கிறது!

கடிதம் ,தந்தி இதை தவிர தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு வேறு ஒன்றும் தெரியாதோ? :lol:

இலவசம் , சட்டமன்றத்தில் தீர்மானம்..

தேர்த்தல்க்கால கொடுப்பனவு( க்வாட்டரும் புரியானியும்) கொடுத்து ஓட்டுக்களை வாங்கத்தெரியுமே.... :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடிதம் ,தந்தி இதை தவிர தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கு வேறு ஒன்றும் தெரியாதோ? :lol:

சண் தலைப்புச்செய்திகள்

அழகிரிக்கு தலையிடி

ஸ்ராலினுக்கு வயிற்றுவலி

முதல்வருக்கு லேசான மூட்டுவலி

ஏழைகளுக்கு ரிவி இலவசம்

அகில இந்தியாவில் தமிழுக்கு நான்காம் இடம்(ஆனால் தமிழ்நாட்டிலை இங்கிலிஸ் முதலாமிடம்)

தமிழ்நாட்டு மீனவர் குறித்து முதல்வர் மீண்டும் டில்லிக்கு அவசர தந்தி

கனிமொழியின் கவிதைக்கு கலைஞர் பாராட்டு

தயாளு அம்மாளும் ராசாத்திஅம்மாளும் ஒரே நேரத்தில் முதல்வரை சந்திக்க தடை

எம்ஜியாருடன் தான் ஒன்றாக திரிந்து ஒரே கோப்பையில் உணவு உண்டதை நடிகை ரதியின் மகளான ரம்பையின் திருமணவிழாவில் நினைவு கூர்ந்தார்

காவேரியில் தண்ணீர் மட்டம் அதே நிலையில்......

மேலதிக செய்திகளுக்கு.........இங்கேயே தொடர்ந்து இருங்கள்.

வணக்கம்.

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.