Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் இரண்டாவது நினைவஞ்சலி

Featured Replies

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி (புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி )அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பிப்ரவரி 14 அன்று நினைவூட்டப்படுகின்றது. வன்னியில் தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றழிக்கப்பட்டு இருந்த வேளையில் தன் இறுதி மூச்சை விடும் வரைக்கும் ஊடகப் பணியாற்றிய அன்னாரை என்றென்றும் நினைவு கூறுவோம்

அன்னாரின் நினைவஞ்சலி கூட்டங்கள் சில புலம்பெயர் நாடுகளிலும் நினைவுகூறப்படுகின்றது. இது தொடர்பான செய்திகளை இங்கு இணைத்தால் மேலும் அறியக்கூடியதாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 2ஆம் ஆண்டு நினைவு இன்று

110211%20008.jpg

ஒரு ஊடகவியலாளன் தனது பணியை வெறுக்கும் அல்லது நொந்துகொள்ளும் சந்தர்ப்பங்களில் ஒன்று, இணைந்து பணியாற்றும் சக ஊடகவியலாளன் ஒருவரது இழப்பை பற்றி செய்தி எழுதுவது, அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாகச் சொல்வதாகும்.

இவ்வாறான கொடுமையான சந்தர்ப்பங்களை கடந்த 15 ஆண்டுகள் ஊடகப் பணியில் பல தடவை சந்திக்க நேர்ந்தமை இந்தத் துறையில் இருந்து ஒதுங்கி விடுவோம் என்று எண்ணியபோதிலும், இதே இழப்புக்கள்தான் இன்னும் செய்ய வேண்டும் என்ற ஓர்மத்தையும் தக்க வைத்துக்கொண்டிருகின்றன.

மயில்வாகனம் நிமலராஜன், நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் (ஜி.நெல்லை நடேசன்), மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் (தராகி) வரிசையில் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் இழப்பு பற்றிய செய்தியையும் எமது உறவுகளுக்கு அறிவிக்க நேர்ந்த காலகட்டம் மிகவும் இக்கட்டானது.

முன்னயை ஊடகயவிலாளர்கள் போன்று நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தியும் மிக இக்கட்டான காலகட்டத்தில் மக்களுடன் நின்று மக்களிற்காகப் பணியாற்றியவர். அதுவும் இறுதிப்போரை சிறீலங்கா அரசாங்கம் வன்னிமீது தொடுத்த நிலையில் இடம்பெயர்ந்தவாறே தனது ஊடகப் பணியைத் தொடர்ந்தவர்.

2009ஆம் ஆண்டு இதே நாளில் (பெப்ரவரி 12) அவர் முல்லைத்தீவு தேவிபுரத்தில் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து தங்கியிருந்தபோது சிறீலங்கா படையினர் வீசிய எறிகணை அவரது உயிரைப் பலியெடுத்தது.

இதில் கொடுமை என்னவென்றால், தனது தந்தை சாவைத் தழுவிக்கொண்டதைக்கூட அறியாத அவரது மூன்று அகவை மகள் அவரது உடலத்தின் அருகில் இருந்து அப்பா, அப்பா என தட்டியெழுப்பிக் கொண்டிருந்தது.

1990 களில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்து 19 வருடங்கள் தமிழ் மக்களிற்குப் பணியாற்றிய இந்த ஊடகன், மக்களிற்கு நன்றாக விளங்கும் வகையிலும், இயல்பான மொழிநடையிலும் தனது ஆய்வுகள் முன்வைப்பது மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

ஊடக அடக்குமுறை உச்சக்கட்டத்தில் இருந்து, ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வன்னி செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலத்தில், வன்னிக்கு வெளியே இருந்த ஊடகவியலாளர்கள் உயிரச்சுறுத்தல் காரணமாக உண்மையைச் சொல்ல முடியாது தவித்தபோது, உள்ளே இருந்து மக்களின் அவலங்களை உலகறியச் செய்தது மட்டுமன்றி, போர் முறைகள் பற்றி நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அதன் போக்கு பற்றியும் பக்குவமாய் எடுத்துக் கூறியவர்.

இவரது இழப்பின்போது வழமைபோன்று அறிக்கை வெளியிட்டிருந்த பிரான்சின் எல்லைகளற்ற ஊடயகவிலாளர் அமைப்பும், கொழும்பின் தமிழ். சிங்கள, ஆங்கில ஊடக அமைப்புக்களும் இன்றுவரை தொடரும் ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதுதான் யதார்த்தம்.

நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களை நாம் இழந்தபோது அவரைப் பற்றிய தாயக ஊடகவியலாளர்களின் நினைவுப் பகிர்வுத் தகவல்களைக் கொண்டு நான் எழுதிய செய்தியை கீழே இணைத்திருக்கின்றேன். இந்தச் செய்தி சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் ஊடகத்துறைக்கு விட்டுச் சென்ற பணியையும், வெற்றிடத்தையும் எமக்கு உணர்த்தும் என நம்புகின்றேன்.

- பரா பிரபா

புலம்பெயர் மக்களால் நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி மரணம்

(வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009)

புலம்பெயர்வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூத்தி சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் சாவடைந்துள்ளார்.

முல்லைத்தீவு, தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழ். மண்டைதீவை பூர்வீகமாகக் கொண்ட இவர், இன்று பொலநறுவைக்குள் இருக்கும் மட்டக்களப்பின் தமிழ் மண்ணான மன்னம்பிட்டியில் பிறந்து வளர்ந்து பின்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து தனது பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்தார்.

அத்துடன், ஊடகத்துறையில் 1990-களில் ஈடுபடத் தொடங்கிய இவர், தொடக்க காலத்தில் புலிகளின் குரலில் நிகழ்ச்சி எழுதுதல் மற்றும் "வெளிச்சம்" சஞ்சிகை உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் கவிதைகள், சிறுகதைகளை எழுதி வந்தார்.

1990-களின் பிற்பகுதியில் அரசியல் மற்றும் படைத்துறை ஊடகப்பணியில் ஈடுபட்டார்.

ஈழநாதத்தில் படைத்துறை பத்தியை எழுதி வந்த இவர், ஈழநாட்டிலும் ஊடகவியலாளராக செயற்பட்டு அரசியல் படைத்துறை ஆய்வுகளையும் எழுதி வந்தார்.

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் மீட்கப்பட்ட நிலப்பகுதிகளின் பதிவுகளை இவர் திறம்பட செய்தார்.

தொடர்ந்து, 2003 ஆம் ஆண்டு தொடக்கம் புலம்பெயர் ஊடகத்துறைக்கு இவரின் பணிகள் திறம்பட தொடங்கின.

அன்று முதல் கடைசிவரை புலம்பெயர் ஊடகங்களில் இவரின் பங்கு பணிகள் முதன்மையானவையாக தாயக விடுதலைப் போராட்டத்தின் கருத்துக்களை கட்டியெழுப்புவதில் இருந்து வந்தன.

தாயகத்தில் இருந்து தாயகத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள் வழியாகவும், வானொலிகள் வழியாகவும், அச்சு ஊடகங்கள் வழியாகவும், இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி ஆவார்.

ரி.ரி.என் தொலைக்காட்சி, ஐ.பி.சி வானொலி, பின்னர் ஐரோப்பிய தொலைக்காட்சி மற்றும் பல புலம்பெயர் இணைய ஊடகங்கள் வாயிலாக இவர் பணியாற்றினார்.

http://www.pathivu.com/news/15156/57/2/d,article_full.aspx

saththijamurththi1.jpg

saththijamurththi2.jpg

saththijamurththi3.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அச்சத்த்திளும் பயத்திலும் நடுங்கி கொண்டு, எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்ற பயத்தில் சரிவர ஒரு ஊடாக்வியாலனை கெளரவித்து வழியனுப்ப முடியாத் சோகத்தில் தமிழினம் இருந்தது. உலகுக்கெல்லாம் செய்தி சொன்னவர்......செய்தியாகிபோனார் .

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கங்கள்.

ஆழ்ந்த இரங்கல்கள்! இவரின் பிரிவில் வாழும் அவரது அன்பு மகளுக்கும், குடும்பத்தினருக்கும் இறைவன் துணை இருப்பாராக!!

ஆழ்ந்த அனுதாபங்கள், அவரின் குடும்பத்தினருக்கு!

... ஒரு சிறிய கவலை, நல்ல ஊடகவியலாளர், ஆனால் இறுதி காலங்களிலாவது உண்மை நிலையை/யதார்த்த நிலையை எமக்கு தெரிவிக்க தவறி விட்டார்!

நினைவுநாள் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

candle_animated-gif.gif

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கங்கள்..!

  • 3 weeks later...

நினைவுநாள் வணக்கங்கள்..!

இந்த புரியாத வயதில் அந்த சின்னச்சிறு குழந்தையின் செயல் நெஞ்சை பிசைகிறது. அந்த குடும்பம் அமைதியாக வாழ வழி பிறக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.