Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலககோப்பை துடுப்பாட்டம் 2011இல் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் எவை? | நமது எதிர்பார்ப்பு / எதிர்வுகூறல்

Featured Replies

  • தொடங்கியவர்

மேற்கு இந்திய தீவுகள் அணி போட்டியின் ஆரம்பத்திலேயே பலம் மிக்கதொரு அணியாக கருதப்படவில்லை. கால் இறுதிப்போட்டிக்கு தெரிவான பிரதான எட்டு அணிகளில் முதலாவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வெளியேற்றம் ஆச்சரியத்தை தரவில்லை. போட்டியின் ஆரம்பத்தில் இந்தியா, இலங்கை அணிகளே ஏனைய அணிகளை விட பலம் மிக்கவையாக தென்பட்டன. இவை இரண்டிற்கும் அடுத்ததாக தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சமபலம் கொண்டவையாக காணப்பட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இவற்றின் பின்னால் ஆறாம், ஏழாம் இடங்களிற்குரியவையாக தென்பட்டன.

பாகிஸ்தான் அணிக்கு அதிர்ட்டம் வேலை செய்கின்றது. அத்துடன், அவர்கள் திறமையாக விளையாடுகின்றார்கள் என்பதையும் காணமுடிகின்றது. பாகிஸ்தான் அணிக்கு இரண்டு அம்சங்களும் தொடர்ந்து அமையும் பட்சத்தில் அவர்கள் அரையிறுதியிலும் வெற்றி பெறக்கூடும். இங்கு பாகிஸ்தான் அணித்தலைவரின் பந்துவீச்சும், வழிநடத்தலும் வெற்றியில் பாரிய பங்கினை வகிக்கின்றது.

அவுஸ்திரேலிய அணி போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் தாய்நாட்டில் பெற்ற வெற்றி தவிர தொடராக பல தோல்விகளை சந்தித்தது. எனினும், தொடர்ச்சியாக உலககோப்பைகளை வென்ற அணி, மற்றும் தொடர்ச்சியாக உலககோப்பை ஆட்டங்களில் தோற்கடிக்கப்படாத அணி எனும் வகையில் அதிக எதிர்பார்ப்புக்குரியதாக காணப்பட்டது. இம்முறை உலககோப்பையில் இலங்கை அணியுடனான ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி முடிவின்றி அமைந்ததாலும், பாகிஸ்தான் அணியுடனான தோல்வியும் தொடர்ந்து இவர்கள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதில் அவுஸ்திரேலிய அணிபற்றி அதிகமாக நம்பிக்கையை வைக்கமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

துடுப்பாடும் பிரதான எட்டு நாட்டு அணிகளில் தற்போது வெளியேறிய மேற்கிந்தியதீவுகள் அணி, மற்றும் வீரர்களின் உடல் உபாதை காரணமாக பலம் இழந்த இங்கிலாந்து அணிகள் தவிர ஏனைய ஆறு அணிகளும் ஏறக்குறைய சமபலம் உள்ளவையாகவே கருதவேண்டியுள்ளது. எனவே, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா எதிர் நியூசிலாந்து அணிகளின் கால் இறுதிப் போட்டிகள், இதன் தொடரான அரையிறுதி, இறுதிப்போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமையும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் இனிவரும் போட்டிகள் பங்களாதேஷ் எதிர் மேற்கிந்திய தீவுகள் போட்டி, மேற்கிந்திய தீவுகள் எதிர் பாகிஸ்தான் போட்டிகள் போல் அமையாது என எதிர்பார்க்கலாம்.

  • Replies 70
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய அணித்தலைவர் தனது 36வது வயதில் ஓர் செஞ்சரியுடன் தனது நீண்ட உலகபோப்பை பயணத்தை நிறைவு செய்தார் என்று கூறலாம். கடந்த இரண்டு உலககோப்பைகள் போலல்லாது இம்முறை கால் இறுதிப்போட்டியிலேயே அவுஸ்திரேலிய அணியின் வெளியேற்றம் பரிதாபகரமானது. பாகிஸ்தானுடனான ஆரம்பசுற்று போட்டியில் வெற்றி பெற்று இருப்பின் அரையிறுதிவரை செல்ல இலகுவான வாய்ப்பு காணப்பட்டது. இன்று அவுஸ்திரேலிய அணி தோற்றாலும்.. இன்னமும் இரண்டு மேலதிக வருடங்களிற்கு Ponting அவர்கள் விளையாட சாத்தியம் இருந்தாலும்.. அவரது தலமையின் கீழ் கடந்த காலங்களில் அவுஸ்திரேலிய அணி பெற்ற வெற்றிகளை, கிரீடங்களை மறக்க முடியாது. இங்கிலாந்து அணிக்குவீரர்களின் உடல், உள நிலமைகள் காரணமாக மேலும் பல இக்கட்டுகள் ஏற்பட்டுள்ளன. இலங்கை அணிக்கு சனிக்கிழமை கால் இறுதிப்போட்டியில் இலகுவான வெற்றி கிடைக்கக்கூடும்

130447.jpg

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்..நான் போன வருடம் சொன்னான் தானே இந்த முறை அவுஸ் அடிவாங்கும் என்று...அதே மாரி நடந்திட்டு

அதோடை அவுஸ் தெரிவு செய்த ஸ்பிரிங் போலர் கரிசா..ஜயோ கடவுளே அவட்ட பந்து வீச்சு நல்லா இல்லை.. அவர விட நல்ல சுழல் மன்னன் இருக்கிரார் அவுஸ் ரீம்மில் ஆனா அவர இந்த உலக்க கோப்பையில் தெரிவு செய்ய வில்லை அவுஸ்ரெலியாவிலும் அரசியல் தான் போல ..அவட்ட பெயர் டொரி..நல்லா சுழல் பந்து போடக் கூடியவர்....

அவர் இவர் தான்..இவர தெரிவு செய்து இருக்கனும் விக்கேட் வேட்டை நடத்தி இருப்பார்

:D:)

127493.jpg

Edited by பையன்26

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய வீரர்களின் தெரிவின் பின்னால் அரசியல் உள்ளது பற்றி தெரியவில்லை. ஆனால், அணியைத்தெரிவு செய்வதில் அணித்தலைவர் Ponting அவர்களிற்கு அதிக செல்வாக்கு காணப்பட்டது. முக்கிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்தவகையில் இந்திய அணியுடனான ஆட்டத்தில் பந்துவீசவில்லை. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் மோசமாக பந்துவீசியது தோல்வியை உறுதி செய்தது.

இன்றைய தென் ஆபிரிக்கா எதிர் நியூசிலாந்து கால் இறுதிப்போட்டியில் அணிகளின் எந்தவொரு வீரர்களின் LBW ஆட்டமிழப்பும் இடம்பெறவில்லை; சற்று அரிதாக நடைபெறும் விடயம் இது. நியூசிலாந்து அணி இம்முறையுடன் ஆறாவது தடவையாக உலககோப்பை அரையிறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. குழு பீயில் முதலாவது இடத்தை பெற்றாலும்.. மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா அணிகளிற்கு அடுத்ததாக தென் ஆபிரிக்கா அணி இன்று பரிதாபகரமாக வெளியேறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய வீரர்களின் தெரிவின் பின்னால் அரசியல் உள்ளது பற்றி தெரியவில்லை. ஆனால், அணியைத்தெரிவு செய்வதில் அணித்தலைவர் Ponting அவர்களிற்கு அதிக செல்வாக்கு காணப்பட்டது. முக்கிய மூன்று வேகப்பந்துவீச்சாளர்களும் எதிர்பார்த்தவகையில் இந்திய அணியுடனான ஆட்டத்தில் பந்துவீசவில்லை. குறிப்பாக இறுதிக்கட்டத்தில் மோசமாக பந்துவீசியது தோல்வியை உறுதி செய்தது.

-------

கிரிக்கெட் விளையாட்டில், சூதாட்டம் கொடி கட்டி பறக்கும் போது.....

பணத்துக்கு, ஆசைப்பட்ட விலையாட்ட வீரர்களினாலும் தோல்வி ஏற்பட்டிருக்கலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் விளையாட்டில், சூதாட்டம் கொடி கட்டி பறக்கும் போது.....

பணத்துக்கு, ஆசைப்பட்ட விலையாட்ட வீரர்களினாலும் தோல்வி ஏற்பட்டிருக்கலாம்.

:lol: :lol: :lol:

கால் பந்து விளையாட்டிலும் சூது இருக்கு அண்ணை..உங்கட கதையை பார்த்தா கிரிக்கெட்டில் மட்டும் தான் சூது மாரி..!

நான் பார்த்த மட்டில் பாக்கிஸ்தான் வீரர்கள் தான் கூட சூதிலை ஈடுபட்டவை.. நியுஸிலாந்து வீரர்கள் ஈடு பட்டதாய் நான் கேல்வி பட வில்லை

  • தொடங்கியவர்

அணிகளின் பலவீனத்தை, தோல்விகளை விலைபோதலின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது. இன்னொரு வகையில் கூறுவதானால் விலைபோதலும் பலவீனமே.

பாகிஸ்தான் அணிக்கு தற்போது கிடைக்கவேண்டிய மதிப்பும் மரியாதையும் வேறு. ஆனால்.. பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள், கையூட்டுக்கள் சம்பந்தமாக ஒழுக்க கண்காணிப்பு குழுக்களினால் விசாரணைக்கு ஈடுபடுத்தப்பட்டதும், தண்டிக்கப்பட்டதும் அணியை பாரதூரமாக சிதறடித்துள்ளது. உண்மையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் போதைப்பொருட்கள், கையூட்டுக்கள்.. இவைகளில் சம்பந்தப்படாமல் விளங்கியிருந்தால் இன்று துடுப்பாட்டத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்கப்பட்டு இருப்பார்கள். பாகிஸ்தான் அணிபோல் வேறு எந்த நாட்டு அணியும் அண்மைக்காலத்தில் விசாரணைகளிற்கும், சந்தேகங்களிற்கும் உள்ளாகவில்லை. இப்படியான இக்கட்டான நிலையிலும் பாகிஸ்தான் அணி அரையிறுதிவரை முன்னேறியது அவர்களின் பலத்தினை காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி தான் மச்சான்

  • தொடங்கியவர்

காலிறுதிப் போட்டிகளில் விளையாடிய அணிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிகளிற்கு அடுத்ததாக பலவீனமான அணியாக இங்கிலாந்து அணி தள்ளப்பட்டது. Pietersen, Yardy, Ajmal, Broad, Collingwood இவர்களில் இருவராவது இன்று விளையாடக்கூடிய நிலமையில் இல்லை. பந்துவீச்சாளர் Andersonம் விளையாடவில்லை. தென் ஆபிரிக்காவுடன் விளையாடியபோது இடம்பெற்ற அணியோ அல்லது இந்தியாவுடன் விளையாடும்போது இடம்பெற்ற அணியோ இன்று இலங்கையுடன் விளையாடவில்லை. எனவே, இலகுவான வெற்றி இலங்கை அணிக்கு கிடைத்தது. வழமையான இங்கிலாந்து அணி விளையாடி இருந்தால் இன்றைய இலங்கை எதிர் இங்கிலாந்து காலிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு படுதோல்வி ஏற்பட்டிருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான் எந்த அணி கோப்பை தூக்கும் என்று நினைக்கிறீங்கள்...

இந்தியாவுக்கு சிறிலங்காவுக்கும் தான் கூட சான்ஸ் இருக்கு என்று எனக்கு படுது..!!

இந்த இரண்டில் ஒன்றுக்கு தான் :):D

  • தொடங்கியவர்

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளில் எவை அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாடி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால்.. அரையிறுதி, இறுதிப்போட்டிகள் விறுவிறுப்பாகவும், ஒவ்வொரு அணி வீரர்களினதும் உச்சதிறமைகளின் வெளிப்பாடாகவும் அமையவேண்டும். அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் சொதப்பல் விளையாட்டை பார்க்கமுடியாது. மேற்கண்ட நான்கு அணிகளில் குருட்டு அதிர்ட்டத்தின் அல்லாது இறுதிவரை திறமையாக விளையாடும் அணி வெற்றிபெறவேண்டும் என்பதே எனது அவா.

  • கருத்துக்கள உறவுகள்

மச்சான்..நான் போன வருடம் சொன்னான் தானே இந்த முறை அவுஸ் அடிவாங்கும் என்று...அதே மாரி நடந்திட்டு

அதோடை அவுஸ் தெரிவு செய்த ஸ்பிரிங் போலர் கரிசா..ஜயோ கடவுளே அவட்ட பந்து வீச்சு நல்லா இல்லை.. அவர விட நல்ல சுழல் மன்னன் இருக்கிரார் அவுஸ் ரீம்மில் ஆனா அவர இந்த உலக்க கோப்பையில் தெரிவு செய்ய வில்லை அவுஸ்ரெலியாவிலும் அரசியல் தான் போல ..அவட்ட பெயர் டொரி..நல்லா சுழல் பந்து போடக் கூடியவர்....

அவர் இவர் தான்..இவர தெரிவு செய்து இருக்கனும் விக்கேட் வேட்டை நடத்தி இருப்பார்

:D:)

127493.jpg

டொரி காயம் காரணமாக அவுஸ் அணியில் தெரிவு செய்யப்படவில்லை.

Their two frontline spinners, Nathan Hauritz and Xavier Doherty, were unavailable due to injuries, as were fast bowlers like Clint McKay and Ryan Harris, who could have added variety

http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/current/story/507960.html

Doherty out of final ODI with back pain

http://www.espncricinfo.com/the-ashes-2010-11/content/story/499180.html

Australia could not even opt for their second choices in each discipline, with Shaun Marsh and Xavier Doherty not considered due to injuries of their own.

Hussey, Hauritz out of World Cup

http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/content/story/499890.html

  • தொடங்கியவர்
70161828.png
  • தொடங்கியவர்

ரைடர் உபுலை அருமையான ஓர் பிடி மூலம் ஆட்டம் இழக்கச்செய்தார். நியூசிலாந்து எதிர் இலங்கை ஆட்டம் இறுதிவரை விறுவிறுப்பாக அமைந்தது. இலங்கை அணி இறுதி ஆட்டத்திற்கு தெரிவானதில் அதிகமான ஆச்சரியத்திற்கு எதுவும் இல்லை. அண்மைக்காலத்தில் இலங்கை அணி மிக நன்றாக விளையாடினார்கள். அத்துடன், அனுபவம் வாய்ந்த வீரர்கள், புத்திசாதுர்யமான அணித்தலைவர் ஆகியோரின் பங்களிப்பு இலங்கை அணி இறுதிவரை செல்வதற்கு உதவியாக அமைந்தது. போட்டி நடைபெற முன்னர் நேற்றுநியூசிலாந்து அணித்தலைவர், இலங்கை அணித்தலைவர் ஆகியோர் தமது எண்ணக்கிடக்கைகளை பரிமாறினார்கள். இலங்கை அணித்தலைவரின் கூற்றை பார்த்தபோது இரு அணித்தலைவர்களின் வேறுபாடுகளை குறிப்பாக அவரது முதிர்ச்சித்தன்மையை காணமுடிந்தது. எவ்வாறாயினும், இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்குரிய ஆற்றல் இலங்கை அணிக்கு உள்ளதா என்பது கேள்விக்குறி. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் நடுத்தர துடுப்பாட்டவீரர்களின் திண்டாட்டம் நம்பிக்கையின்மையை மேலும் வலுதாக்குகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மச்சான்டை கிரிக்கெட் ஆய்வை இன்னும் காண வில்லை :):D

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ண பைனலில் இந்தியா அணி சிறப்பாக விளையாடி கிண்ணத்தை சுவிகரித்தது என்பதை விட‌ இலங்கை அணி மற்ற போட்டிகள் மாதிரி பைனலில் சிறப்பாக விளையாட‌தால் தான் தோல்வியை தழுவியது என்பது என் கருத்து...முதலாவது சங்கர‌க்கார‌ டொஸ் வின் பண்ணி இருக்க கூடாது...சிறப்பாக பந்து வீசிய பந்து வீச்சாளர்களை பைனலில் சேர்க்காமை,முர‌ளியும் ஏனோ,தானோ எனப் பந்து வீசியது[காயம் என சொல்லப்பட்டது]...களத் தடுப்பாட்டம்[பீல்டிங்] துப்பர‌வாக சரியில்லை...முன்னனி துடுப்பாட்ட‌க்கார‌ர் சோபிக்கா விட்டாலும் மத்திய,பின்னனி துடுப்பாட்டக்கார‌ர் சேர்ந்து 274 எடுக்க முடியுமாயின்?...பேசாமல் முதலில் இந்தியாவை முதலில் துடுப்பாட‌ விட்டு இருக்கலாம்...எனக்கு என்னவோ இது வேணும் என விட்டுக் கொடுத்து விளையாடின மாதிரி இருக்கு...கடைசியாக இந்தியா,பங்காளதேச‌ம்,இலங்கை ஆகிய 3 நாடுகள் சேர்ந்து தான் போட்டியை நட‌த்தின பைனலில் இந்தியா,இலங்கை மோதியது ஏன் பைனலை பங்காளதேச‌த்தில் வைக்காமல் இந்தியாவில் வைத்தனர்?...உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள்.

நியாயமான கேள்வி :unsure:

போட்டிகள் தொடங்க முன்பே எந்தெந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இறுதி போட்டி முகாலியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.ஆனால் இறுதியில் இலங்கை இந்தியா மோதும் என யாருக்கும் முன்பு தெரியாது.நடந்து முடிந்த போட்டிகளின் படி தான் இந்தியா, இலங்கை இறுதி போட்டிக்கு தெரிவானார்கள்.இந்தியாவும் இலங்கையும் இறுதி போட்டியில் சந்திப்பதால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட போட்டி இடத்தை மாற்ற முடியாது. அத்தோடு அம்பயர் பாகிஸ்தானை சேர்ந்தவர்.அவரையும் மாற்ற வேண்டும் என்று சொல்வீர்கள் போல.

இலங்கை இலங்கையில் நியூசிலாந்துக்கு எதிராக 220 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.ஆனால் இந்தியாவுக்கு எதிராக 275 ஓட்டங்கள் எடுத்து அவர்களின் நல்ல மட்டையடியை எடுத்துக் காட்டுகிறது. இந்தியாவின் முதல் 8 மட்டையடியாளர்கள் ஒருவர் வெளியேறினாலும் மற்றவர் நின்று ஆடக்கூடிய நிலையில் 275 ஓட்டங்கள் அவர்களுக்கு பெரிதான ஓட்டங்கள் இல்லை.சில போட்டிகளில் 420 கூட அடித்துள்ளார்கள்.(2011 இன் அதி கூடிய ஒட்டங்கள்)

இலங்கையின் பந்தெறிபவர்களில் மலிங்கவை தவிர யாரும் சோபிக்கவில்லை.அத்தோடு புதிய பத்தெறிபவரையும் இணைத்து அவரும் எதுவும் சாதிக்கவில்லை.முரளியின் பந்துக்கு ஆசிய குழுக்கள் விளாசுவது தெரிந்ததே. :)

விழுந்தும் சில சனம் மீசையில மண் ஒட்டவில்லை எண்டு சொல்லவீனமாம் . தாங்க முடியல இந்த சொறிலங்கா அபிமானிகளிட கூத்து :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போட்டி முகாலியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

மும்பாய் என்று வரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.