Jump to content

ஆலயங்களில் தமிழில் வழிபாடு??????????


Recommended Posts

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் அவர்களே இணைப்புக்கு நன்றி!

ஓம் சுக்கிலாம் பரதரம் விஸ்ணம்

சதுர்புஜம் பிரஸன்ன வதனம் தியாயேத்

சர்வ விக்னோப சாந்தயே

மோஸிக வாகன மோஸிக கஸ்த்த

வாமன ரூப மகேஸ்வர புத்தர

விக்ன வினாயக பாத நமஸ்த்தே..

என்று புரியாத மொழியில் செய்யும் வழிபாட்டில் மனம் ஒன்றித்துப் போகிறதா? அல்லது புரிந்த மொழியில் செய்யும் வழிபாட்டில் மனம் ஒன்றித்துப் போகிறதா?

திருவேயென் செல்வமே தேனோ வானோர் போற்றும்

கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணுட் கருமணியே

மணியாடு பாவாய் காவாய் அருள் வாய வல்வினை நோய்

அடையா வண்ணம் ஆவடுதுறை உறையும் அமரரேறே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுக்கிலாம் பரதரம் விஸ்ணம்

சதுர்புஜம் பிரஸன்ன வதனம் தியாயேத்

சர்வ விக்னோப சாந்தயே

மோஸிக வாகன மோஸிக கஸ்த்த

வாமன ரூப மகேஸ்வர புத்தர

விக்ன வினாயக பாத நமஸ்த்தே..

என்று புரியாத மொழியில் செய்யும் வழிபாட்டில் மனம் ஒன்றித்துப் போகிறதா? அல்லது புரிந்த மொழியில் செய்யும் வழிபாட்டில் மனம் ஒன்றித்துப் போகிறதா?

சமஸ்கிரிதம் தேவ பாஷா

தமிழ் மொழி நீச பாஷா.

இந்த அடிப்படையில் தான் சமஸ்கிரித மொழி உபயோகிக்கப் பட்டது, இன்றும் உபயோகிக்கப் படுகின்றது!!!

நீஷ பாஷாவில் கதைத்தால் அந்த 'யாதுமாகி நின்ற' இறைக்கு விழங்காதாம்.அதனால் இந்தப் பிராமணர்கள் மொழிபெயர்ப்பாளர்கலாகச் செயல் படுகின்றார்களாம்!!!.

இது தான் இவர்களது விளக்கம்!!!

இணைப்புகளுக்கு நன்றிகள் நெல்லையன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகளில்.. தேவாலயங்களில் மசூதிகளில்.. அந்தந்த நாட்டு பிரதான மொழிகளிலும்.. இனரீதியான மொழிகளிலும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

சைவ/இந்து கடவுள் வழிபாட்டை விரும்புகிறவர்கள் விளங்கி வழிபாடு நடத்தும் வகையில் அந்தந்த நாட்டு பிரதான மொழிகளிலும்.. தமிழிலும்.. ஆலய வழிபாடு செய்யப்பட வேண்டும்.

இங்கிலாந்தையோ கனடாவையோ அவுஸ்திரேலியாவையோ எடுத்துக் கொண்டால் ஆங்கிலம் மற்றும் தமிழில் பூசை செய்ய வேண்டும்.

ஜேர்மனியை.. பிரான்சை எடுத்துக் கொண்டால் ஜேர்மனிய மற்றும் பிரஞ்சு மொழிகளிலும் தமிழிலும் வழிபாடு செய்யப்பட வேண்டும்.

தமிழர்களால் மற்றும் பிற நாட்டவர்களால் அதிகம் பாவிக்கப்படாத சமஸ்கிரதத்தில் பூஜை செய்வது என்பது அவசியமற்றது.

காலை மாலை என்று பூசை நடத்தும் போது காலையில் தமிழிலும்.. மாலையில் அந்தந்த நாட்டு பிரதான மொழிகளிலும் (உ +ம்: ஆங்கிலத்திலும்) பூசை நடத்தலாம். இது பெரிய விடயமல்ல.

தேவாலயங்களில் மசூதிகளில் செய்ய முடிகிறது என்றால் ஏன்.. சைவ / மற்றும் இந்துக் கோவில்களில் செய்ய முடியாது..??! முடியும்.

கோவிலில் பூசை செய்வதால் தான் தமிழ் வளரும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் கோவில்களில் தமிழில் பூசை செய்வது தமிழின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று சொல்லலாம்.

Link to comment
Share on other sites

எங்கட தேவாலையத்தில் தினமும் ஆங்கில மொழியில் பிராத்தனை நடந்தாலும் மாதத்தில் ஒரு வாரம் தமிழ் சமூகத்திற்கு தமிழிலும், ஒரு வாரம் அனைவருக்கும் இலத்தீன் மொழியில் பிராத்தனைகள் செய்யப்படும். (இலத்தீன் மொழியில் செய்யப்படும் வாரத்தில் மிகக் குறைவாகவே மக்கள் ஆலயத்துக்கு வருவார்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டால்..............நானும் பூணூல் போடாமல் தேவாரம் திருப்புகழ் படிச்சு பூசையாக்கலாமோ? :wub:

சரி எல்லாம் ஓகே எண்டாலும்....... உந்த துடக்கு கழிப்புக்கு என்ன தேவாரம் படிக்கலாம்???? :rolleyes:

ஆராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா . சபேசனை போலை ஆக்கள் இந்தப்பக்கம் தலைகாட்டப்படாது இப்பவே சொல்லியாச்சு ^_^

ஏனெண்டால் இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோனகாதையாய் இருக்கக்கூடாது எண்ட ஒரு பயம் தான் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டால்..............நானும் பூணூல் போடாமல் தேவாரம் திருப்புகழ் படிச்சு பூசையாக்கலாமோ? :wub:

சரி எல்லாம் ஓகே எண்டாலும்....... உந்த துடக்கு கழிப்புக்கு என்ன தேவாரம் படிக்கலாம்???? :rolleyes:

ஆராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா . சபேசனை போலை ஆக்கள் இந்தப்பக்கம் தலைகாட்டப்படாது இப்பவே சொல்லியாச்சு ^_^

ஏனெண்டால் இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோனகாதையாய் இருக்கக்கூடாது எண்ட ஒரு பயம் தான் :(

குமாரசாமி அண்ணா,

ஒரு பெரிய நீர்துப்பூசனிக்காயா வாங்கி, குங்குமம் தடவி, அதுக்கு முன்னாலயிரிந்து , பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்!!!

பில்லி சூனியம் பெரும் பகையகல........

நானாங்கயிற்றை நல் வேல் காக்க,,,,

தொடருங்கள்... துடக்கு சொல்லிக்கொள்ளாமல் பறக்கும்!!!

Link to comment
Share on other sites

அப்பிடியெண்டால்..............நானும் பூணூல் போடாமல் தேவாரம் திருப்புகழ் படிச்சு பூசையாக்கலாமோ? :wub:

சரி எல்லாம் ஓகே எண்டாலும்....... உந்த துடக்கு கழிப்புக்கு என்ன தேவாரம் படிக்கலாம்???? :rolleyes:

ஆராவது தெரிஞ்சாக்கள் சொல்லுங்கோப்பா . சபேசனை போலை ஆக்கள் இந்தப்பக்கம் தலைகாட்டப்படாது இப்பவே சொல்லியாச்சு ^_^

ஏனெண்டால் இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டுபோனகாதையாய் இருக்கக்கூடாது எண்ட ஒரு பயம் தான் :(

கு.சா. உங்கள் போன்ற அனுபவசாலிகள் துடக்கு என்றால் என்ன என்பதையும் அது ஏன் கழிக்கப்பட வேண்டும், எவ்வாறு ஏற்படுகிறது, இது ஐயரின் மந்திரத்தால் எவ்வாறு இல்லாமல் போகிறது, அந்த மந்திரத்தின் அர்த்தமென்ன போன்றவற்றை விரிவாக விளக்கினால் புலம்பெயர்ந்த இளையவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.