Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகை...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்ட தமிழ்ப்பத்திரிகை...

புதன்கிழமை, 02 மார்ச் 2011 10:20

கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்த் நாளந்த பத்திரிக்கை ஒன்றை ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச குடும்பத்தின் முக்கியமான ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அப்பத்திரிகை யாழிலும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து வெளிவரும் முக்கியத் தினசரியொன்றை விடுதலைப் புலிகளின் முன்னை நாள் அனைத்துலகப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் கையகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பிலிருந்து வெளிவரும் இலங்கைத் தமிழ்த் தினசரிகளில் முதன்முதலாக யாழ்ப்பாண பதிப்பை குறிந்த பத்திரிகை நிறுவனமே வெளியிட்டிருந்தது. அத்துடன் அப்பத்திரிகை நிறுவனத்தின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான நண்பரும் கூட.

அரசாங்கத்திற்கும் குறிப்பி்ட்ட பத்திரிகை உரிமையாளருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பிரகாரம் பத்திரிகையை மகிந்த குடும்பத்தின் முக்கியமான சகல அதிகாரங்களும் கைவரப்பெற்ற ஒருவா் கொள்வனவு செய்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் அவா் கொள்வனவு செய்துள்ளதான செய்தி வெளியே தெரிந்தால் தமிழ் மக்கள் குறித்த பத்திரிகையை சந்தைப்படுத்த முடியாது என்பதனால் கேபி கொள்வனவு செய்கின்றார் என்ற செய்தி கசிய விடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

மகிந்த குடும்பத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளபோதிலும் கூட குறித்த பத்திரிகையில் பங்காளர் என்ற போர்வையில் குமரன் பத்மநாதனையும் இணைத்துக் கொண்டு பத்திரிகையின் நிர்வாகத்தை அவர் கையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் திட்டமிட்டுக் கசிய விடப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

அதற்கு மேலதிகமாக மிக விரைவில் அவர்களுடன் தமிழுக்கு ஒளி என்ற பெயரில் செய்மதி மூலமான தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவையை நடாத்தி வரும் பாரிஸ் தமிழர் ஒருவரும் அவர்களுடன் கூட்டுச் சோ்ந்து மிக விரைவில் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரி்சையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியாற்றிய பலர் தற்போது அவர்களுடன் இணைந்திருப்பதாகவும், புலம் பெயர் நாடுகளில் பிரபலமாக இருக்கும் தமிழ் இணையத்தளங்களின் முக்கியஸ்தர்கள் சிலரும் அதில் உள்ளடக்கம் என்பதாகவும் பிரஸ்தாப தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

sangamam.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினக்குரல் பத்திரிகை KP வசம்?

* Wednesday, March 2, 2011, 16:05

சிறீலங்காவில் உள்ள இரண்டு முக்கிய ஊடகங்களையும் பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றையும் குமரன் பத்மநாதன் குழுவினர் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலும், யாழிலும் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகை, குகநாதனின் யாழ் ஒலி தொலைக்காட்சி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஒரு தொலைக்கட்சி நிறுவனம் ஆகியன பத்மநாதனினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியின் இயக்கத்திற்கு தேவையான நிதி உதவிகை மேற்கொண்டு, அதில் பத்மநாதன் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதாகவே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஊடகங்கள் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் ஒரு ஊடகப்பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamilthai.com

ஊடகப்பரப்புரை தமிழின விரோதக்கொள்கையுடன் செயல்படும் பொழுது நிச்சயம் பாதிப்புக்களை உருவாக்கும். ஆனால் வாசிப்பவர்களுக்கு முன் பல தெரிவுகள் வைக்கப்படும் பொழுது அவர்கள் தமது பகுத்தறிவு மூலம் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்.

மேலும், இன்றைய உலகில் இப்படி செய்தும் தமது இருப்பை துனிசியா, எகிப்து முதல் கொண்டு லிபியா வரை இழந்துள்ளன. முடிந்தால் மகிந்த கூட்டம் முகநூலை ( பேஸ்புக்) 50 USD பில்லியன்களுக்கும் குறுஞ்ச்செய்தியை (Twitter) 10 USD பில்லியன்களுக்கும் வாங்கி பார்க்கலாம்.

தினக்குரலுமா?>?

போற போக்கில் அடுத்த இலங்கை ஜனாதிபதி கே பி தான் போல :D

ஊடகப்பரப்புரை தமிழின விரோதக்கொள்கையுடன் செயல்படும் பொழுது நிச்சயம் பாதிப்புக்களை உருவாக்கும். ஆனால் வாசிப்பவர்களுக்கு முன் பல தெரிவுகள் வைக்கப்படும் பொழுது அவர்கள் தமது பகுத்தறிவு மூலம் உண்மை நிலையை உணர்ந்து கொள்வார்கள்.

மேலும், இன்றைய உலகில் இப்படி செய்தும் தமது இருப்பை துனிசியா, எகிப்து முதல் கொண்டு லிபியா வரை இழந்துள்ளன. முடிந்தால் மகிந்த கூட்டம் முகநூலை ( பேஸ்புக்) 50 USD பில்லியன்களுக்கும் குறுஞ்ச்செய்தியை (Twitter) 10 USD பில்லியன்களுக்கும் வாங்கி பார்க்கலாம்.

யாழில் வந்த மிகவும் ரசிக்கக்கூடிய பதிவு இதுவாகத்தான் இருக்கும். நன்றி அகூதா. :D

  • கருத்துக்கள உறவுகள்

மேலும், இன்றைய உலகில் இப்படி செய்தும் தமது இருப்பை துனிசியா, எகிப்து முதல் கொண்டு லிபியா வரை இழந்துள்ளன. முடிந்தால் மகிந்த கூட்டம் முகநூலை ( பேஸ்புக்) 50 USD பில்லியன்களுக்கும் குறுஞ்ச்செய்தியை (Twitter) 10 USD பில்லியன்களுக்கும் வாங்கி பார்க்கலாம்.

தமிழர்களை ஏற்கனவே வெற்றிகொண்டுவிட்டார்கள். பெரிய முதலீடு செய்துதான் தமிழர்களை அடிமையாக வைத்திருக்கவேண்டிய அவசியம் மகிந்த குடும்பத்திற்கு இல்லை.

தமிழர்களை ஏற்கனவே வெற்றிகொண்டுவிட்டார்கள். பெரிய முதலீடு செய்துதான் தமிழர்களை அடிமையாக வைத்திருக்கவேண்டிய அவசியம் மகிந்த குடும்பத்திற்கு இல்லை.

தமிழர்களை எண்டு சொல்வது அவ்வளவு உண்மையாக இல்லை... எப்போதும் போல தமிழர்களில் யார் எல்லாம் பச்சோந்தியாக இருந்தார்களோ அவர்களையே மகிந்த கூட்டம் வெண்டு இருக்கின்றது... !

மற்றது அமைதியாக இருப்பது என்பதின் அர்த்தம் அடங்கி போவது எண்டும் இல்லை...

சரி ஒரு ஐந்து வீதத்தை வெற்றிகொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

அமைதியாக இருப்பவர்கள் தங்களால் இனி இயலாது என்ற உண்மையைப் புரிந்தவர்களாகவும் இருக்கலாம். பிடிக்காதவற்றைச் சகித்துக்கொண்டு வாழப்பழகியவர்கள்தானே மனிதர்கள்.

தமிழ்ப்பத்திரிகையை உண்மையில் மகிந்த குடும்பம் கையகப்படுத்தியிருந்தால், அவர்கள் துரிதமாக தமது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்று அர்த்தம். வெற்றிகொள்ளப்படாத தமிழர்களையும் வெல்லுவதற்குத் தேவையான வியூகங்களை வகுத்துள்ளார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்காக உண்மையாக உழைத்த ஊடகங்களை விட ஒட்டுக்குழுக்களால் இணையவழியாக நடாத்தப்பட்ட இணைய தளங்கள் தான் மிக அதிகம். இவர்களால் என்ன பெரிதாக செய்ய முடிந்தது??

ஊடகத்துறை (பொய்யான ) பரப்புரை மூலமோ இல்லை இராணுவ அடக்குமுறை மூலமோ தமிழர் இனத்தை சிங்களம் அடக்கமுடியாது, அடிமைப்படுத்தமுடியாது.

பிடிக்காததை சகித்தவண்ணம் வாழப்பழகுவது மனிதத்தன்மையாக இருக்கலாம். அதற்காக ஒருவரின் மகன் கடத்தப்படும் பொழுது, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்பொழுது அதையும் சகிக்க கேட்பது மனிதத்தன்மை ஆகாது.

சரி ஒரு ஐந்து வீதத்தை வெற்றிகொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

அமைதியாக இருப்பவர்கள் தங்களால் இனி இயலாது என்ற உண்மையைப் புரிந்தவர்களாகவும் இருக்கலாம். பிடிக்காதவற்றைச் சகித்துக்கொண்டு வாழப்பழகியவர்கள்தானே மனிதர்கள்.

தமிழ்ப்பத்திரிகையை உண்மையில் மகிந்த குடும்பம் கையகப்படுத்தியிருந்தால், அவர்கள் துரிதமாக தமது வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றார்கள் என்று அர்த்தம். வெற்றிகொள்ளப்படாத தமிழர்களையும் வெல்லுவதற்குத் தேவையான வியூகங்களை வகுத்துள்ளார்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!

ஒரு விசயத்தை விளங்கி கொள்ளுங்கோ... சிங்களவன் தலைமை எப்பவும் சிங்களவனாக மட்டும் தான் இருக்கிறார்கள்... ஆனால் தமிழனுக்கு வாறதுகள் மட்டும் தான் எப்பவும் பச்சோந்தியாக மட்டும் இருக்கிறார்கள் ... இதுதான் தமிழனை இந்த நிலைக்கு கொண்டு வந்தது... இதை சரியாக விளங்கிக்கொண்டால் எங்கட சனத்துக்கு ஏன் இந்த நிலை எண்டதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்....

தமிழனுக்கு எப்பவும் சிறந்த தலைமைக்கு தேவையான முகாமைத்துவ பண்பு கிடையாது... தலைமை பண்பும் கிடையாது... ! அப்படி இரண்டும் இருந்தால் ஆழுமை கிடையாது.... அப்படி ஆழுமை இல்லாதவர்களால் யாரையும் சார்ந்து இருக்க மட்டும் தான் முடிகிறது... அப்படி இருப்பவர்கள் ஒட்டு மொத்த தமிழர்களின் அடையாளம் கிடையாது...

இந்த விடயம் தான் புலிகளின் தலைமையையும் புலிகளையும் அழித்தால் தமிழரின் தலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை சிங்களவனை போல சர்வதேசம் சரியாக புரிந்து கொண்டது... இதன் விளைவு தான் இப்ப தமிழர்கள் அனுபவிப்பது...

ஆனால் இது தான் நிரந்தரமானதும் இல்லை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி கையகப்படுத்திய முக்கிய ஊடகங்கள் - புலம்பெயர் மக்களுக்கெதிராக மிகப்பெரும் சதி அம்பலம்

சிறீலங்காவில் உள்ள இரண்டு முக்கிய ஊடகங்களையும், பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றையும் கே.பி ஒட்டுக்குழுவினர் கையகப்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பிலும், யாழிலும் இருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகை, குகநாதனின் யாழ் ஒலி தொலைக்காட்சி மற்றும் பிரித்தானியாவில் இருந்து இயங்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆகியன கே.பி ஒட்டுக்குழுவினர் முழுமையாக கையகப்படுத்தியுள்ளனர்.

ஏற்கனவே ஐரோப்பாவில் கே.பி ஒட்டுக்குழுவினரின் பத்திரிகைகளை இடையிடையே வெளியிடுவதும், தற்போது கொழும்பிலிருந்து அச்சடித்து ஐரோப்பா மற்றும் கனடா அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் முயற்சிகளும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஊடகப் பொறுப்பாளர் ஒருவரை அண்மையில் கே.பி கொழும்புக்கு அழைத்து சந்தித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் விடுதலை இயக்கத்துக்கு சேறு பூச முற்பட்ட இணையத்தளம் ஒன்று தனது பணிகளை இடைநிறுத்தியிருந்தது. இவ்விணையத்தளத்தின் உரிமையாளரை கே.பி அழைத்து அத்தளங்களை மீள இயக்குவது தொடர்பாக பேசியுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் தொலைக்காட்சியின் இயக்கத்திற்கு ஏற்கனவே தேவையான நிதி உதவிகளை மேற்கொண்டுள்ளதாகவும், புலம்பெயர் மக்களை குறிவைத்து ஏற்கனவே இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது எனவும், இந்திய - சிறீலங்கா கைக்கூலிகள் அத்தொலைக்காட்சியில் பணியாளர்களாக உள்ளனர் எனவும் கொழும்புச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த ஊடகங்கள் மூலம் வருங்காலத்தில் மிகப்பெரும் ஒரு ஊடகப்பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு கே.பி தனது முன்னைய விசுவாசிகளை உலகெங்கும் களமிறக்கியுள்ளார். ஐரோப்பாவில் இருந்தே கே.பியின் முக்கிய சகா சகல நடவடிக்கைகளையும் ஒருங்கிணைப்பதாக மேலும் அக்கொழும்புச் செய்தி தெரிவிக்கின்றது.

http://www.pathivu.com/news/15500/57//d,article_full.aspx

நன்றி - பதிவு இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

அவன்... இவன்..... என்று ஆளுக்கால் கூக்குரல் இடுவதை விடுத்து.... அனைத்துலக ரீதியில் ஈழதோழ்xகர்கள் சார்பாக ஒரு நேர்மையான ஊடகம் தேவை ... டிவி சானல் வங்கி முதற்கொண்டு அனைத்துயும் ஆரம்பித்து அவனவனையும் கடனளாக ஆக்க வேண்டும் இதான பொருளாதாரம் இன்றைய உலக போக்கு பிளீஸ் பிளீஸ்... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.