Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Wag the Dog

Featured Replies

ஜஸ்டின் கேட்ட சில கேள்விகளுக்கு ஓடி ஒழிக்காமல் பதில் அழிக்கவேண்டுமாயின் சில உலக அரசியல் உண்மைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்.உலக அரசியலுக்கு மட்டுமல்ல அரசியல் செய்யும் எவருக்குமே அது பொருந்தும்.எமது இயக்கங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.எமது மக்களை,போராளிகளை கூட அதற்கு பலி கொடுப்பதற்கு தயங்கவில்லை.ஒன்றுமே செய்யாத உத்தமர்களில்லை நாம்.அதேபோல் எப்போதும் உண்மைகளை மட்டும் சொன்ன அரிச்சந்திரர்களுமல்ல.இவைகள் எல்லாமே எமது விடுதலை என்ற பெயரில் நடாத்தப்பட்டவேள்விகள்.இலங்கை அரசும்,இந்திய அரசும் எமக்கு செய்தது,செய்வது மகாதுரோகம்.ஆனால் அவற்றை மிகைப்படுத்தி உலகிற்கு விற்க முனைப்பட்டோம்.மக்களையும் அதுதான் உண்மையெனெ நம்ப பெரிய பிராயத்தனம் எடுத்தோம்.

அப்படியெனில் உண்மையில் நடந்தவைகள் தான் என்ன? அதைத்தான் இப்போது துண்டுதுண்டாக பலரும் எழுதுகின்றார்கள்.இந்தியா அனைத்து இயக்கங்களுக்கு பயிற்சி,ஆயுதங்கள் கொடுத்தது உண்மை.ஏன் கொடுக்கின்றார்கள் என விளங்கியிருக்காவிட்டால் எமது பிழை.அதை விட இந்தியாவிடம் இருந்து பெறுவதை எல்லாம் பெற்றுவிட்டு இந்தியாவை சுத்துவம் எனநினைத்தது அதைவிட பிழை.இவ்வளவும் செய்பவர்கள் தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் தான் இயக்கங்கள் இருக்கவேண்டும் என நினைத்தார்கள்.

முள்ளில் விழுந்தசீலையை பட்டும் படாமல் எடுத்துகொண்டு நாம் மாறியிருக்கவேண்டும் அல்லது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டியிருக்கவேண்டும் எதையாவது நாம் பெற்றிருக்கலாம்.எப்போது இரண்டு விரலை தூக்க நினைத்தோமோ அழிவு அன்றே ஆரம்பமானது.ஏன் 20 வருடங்கள் எடுத்ததெனில் இந்தியாவிலும் பலமான ஒரு அரசும் இலங்கையில் அதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு அரசும் வரவில்லை.நேரமும் காலமும் வர முடித்துவிட்டார்கள்.இதே கருத்தை நானும் கடந்த 20 வருடங்களாக பலருடனும் சொல்லி மல்லுக்கட்டியதுதான் மிச்சம்.இனி அடுத்த படியையாவது விளங்கிக்கொண்டால் நல்லது.

இனிமேல் கட்டப்பொம்மன் கதை சினிமா எடுக்கத்தான் உதவும்.

மேலே எழுதப்பட்ட கருத்திற்கு 'Wag the dog' (ஒரு அரசியல் அலசல்) என தலைப்பு ஆங்கிலத்தில் இடப்பட்டுள்ளது.

இந்த சொல்லு ஆங்கிலத்தில் "இடியம்" (idiom) என சொல்லப்படுவது. எந்தமொழிக்கும் இயல்பாக ஒரு சொல்வரிசை இருக்கும். மொழிக்கு மொழி இலக்கணங்கள் வேறானவை. ஆதலாலும், பண்பாட்டை ஒட்டியே மொழிகள் வளர்வதாலும் அந்தந்த மொழிக்கென்று தனியான மரபு வழக்குகளும் மாறும். இது ஆங்கிலத்தில் இடியம் எனப்படுகிறது (http://www.koodal.com/article/tamil/ilakkiyam.asp?id=163).

இதன் விளக்கம் என்ன என பார்த்தால்: Idiom Definitions for 'Wag the dog' ( http://www.usingenglish.com/reference/idioms/wag+the+dog.html )

To 'wag the dog' means to purposely divert attention from what would otherwise be of greater importance, to something else of lesser significance. By doing so, the lesser-significant event is catapulted into the limelight, drowning proper attention to what was originally the more important issue. The expression comes from the saying that 'a dog is smarter than its tail', but if the tail were smarter, then the tail would 'wag the dog'.

ஒரு முக்கிய விடயத்தை அதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை திட்டமிட்டே திசை திருப்புவதாக இதன் அர்த்தம் அமையலாம்.

நாய், அதன் வாலை விட புத்திசாலித்தனமாது. ஆனால் "வால் நாயை விட புத்திசாலித்தனம்" என்பதே "Wag the dog".

  • கருத்துக்கள உறவுகள்

இனி அடுத்த படியையாவது விளங்கிக்கொண்டால் நல்லது.

அடுத்த படி என்ன? எங்கு, யாரால் செயற்படுத்தப்பட வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் கேட்ட சில கேள்விகளுக்கு ஓடி ஒழிக்காமல் பதில் அழிக்கவேண்டுமாயின் சில உலக அரசியல் உண்மைகளை விளங்கிக்கொள்ளவேண்டும்.உலக அரசியலுக்கு மட்டுமல்ல அரசியல் செய்யும் எவருக்குமே அது பொருந்தும்.எமது இயக்கங்களும் அதற்கு விதிவிலக்கல்ல.எமது மக்களை,போராளிகளை கூட அதற்கு பலி கொடுப்பதற்கு தயங்கவில்லை.ஒன்றுமே செய்யாத உத்தமர்களில்லை நாம்.அதேபோல் எப்போதும் உண்மைகளை மட்டும் சொன்ன அரிச்சந்திரர்களுமல்ல.இவைகள் எல்லாமே எமது விடுதலை என்ற பெயரில் நடாத்தப்பட்டவேள்விகள்.இலங்கை அரசும்,இந்திய அரசும் எமக்கு செய்தது,செய்வது மகாதுரோகம்.ஆனால் அவற்றை மிகைப்படுத்தி உலகிற்கு விற்க முனைப்பட்டோம்.மக்களையும் அதுதான் உண்மையெனெ நம்ப பெரிய பிராயத்தனம் எடுத்தோம்.

அப்படியெனில் உண்மையில் நடந்தவைகள் தான் என்ன? அதைத்தான் இப்போது துண்டுதுண்டாக பலரும் எழுதுகின்றார்கள்.இந்தியா அனைத்து இயக்கங்களுக்கு பயிற்சி,ஆயுதங்கள் கொடுத்தது உண்மை.ஏன் கொடுக்கின்றார்கள் என விளங்கியிருக்காவிட்டால் எமது பிழை.அதை விட இந்தியாவிடம் இருந்து பெறுவதை எல்லாம் பெற்றுவிட்டு இந்தியாவை சுத்துவம் எனநினைத்தது அதைவிட பிழை.இவ்வளவும் செய்பவர்கள் தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் தான் இயக்கங்கள் இருக்கவேண்டும் என நினைத்தார்கள்.

முள்ளில் விழுந்தசீலையை பட்டும் படாமல் எடுத்துகொண்டு நாம் மாறியிருக்கவேண்டும் அல்லது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டியிருக்கவேண்டும் எதையாவது நாம் பெற்றிருக்கலாம்.எப்போது இரண்டு விரலை தூக்க நினைத்தோமோ அழிவு அன்றே ஆரம்பமானது.ஏன் 20 வருடங்கள் எடுத்ததெனில் இந்தியாவிலும் பலமான ஒரு அரசும் இலங்கையில் அதற்கெல்லாம் தலையாட்டும் ஒரு அரசும் வரவில்லை.நேரமும் காலமும் வர முடித்துவிட்டார்கள்.இதே கருத்தை நானும் கடந்த 20 வருடங்களாக பலருடனும் சொல்லி மல்லுக்கட்டியதுதான் மிச்சம்.இனி அடுத்த படியையாவது விளங்கிக்கொண்டால் நல்லது.

இனிமேல் கட்டப்பொம்மன் கதை சினிமா எடுக்கத்தான் உதவும்.

இணையம் மூலம் எல்லாம் விரல் நுனியில் வந்து சேரும் தற்காலத்தில், உலக அரசியல் விளங்க அரசியல் பட்டதாரியாக இருக்க வேண்டியதில்லை. இங்க வருகிற எல்லாருக்கும் அது கொஞ்சம் விளங்கும். ஆனால் எங்கள் பிரச்சினைக்கென்று இருக்கும் தனித்துவம் பற்றிய புரிதல் வெறும் உலக அரசியல் அறிவினால் மட்டும் வராது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். உதாரணத்திற்கு: பிரபாகரனதும் மாவீரர்களதும் கதைகள் இனிப் படமாக மட்டுமே இருக்கும் என்று ஒரு தமிழனான நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் உலக அறிவு இந்தப் போராட்டத்தின் நேர்மை பற்றி உங்களுக்கு எதுவுமே படிப்பிக்கவில்லை, மாறாக புத்தகத்தில் படித்த சித்தாந்தங்களுக்குள் எப்படி இந்தப் போராட்டம் அடக்கப் படவில்லை என்ற நுண்ணிய "தரவுகள்" மட்டுமே உங்களிடம் உண்டு. இது என் கணிப்பு. தவறாகவும் இருக்கலாம். இனிக் கேள்விகள்:

1. எந்த மாதிரியான தீர்வை இந்தியாவுடன் இணங்கிப் போய் பெற்றிருக்கலாம் என்கிறீர்கள்? பதில் சொல்ல முதல் வ.ரா. பெருமாளையும் இப்பவும் ஓடித் திரியும் டக்ளசையும் நினைத்து விட்டுப் பதில் தாருங்கள்?

2. மிகைப்படுத்தி எதை விற்றார்கள்? பத்துப் பேரைக் கொன்றவனும் பதினைந்து பேரைக் கொன்றவனும் ஒரே மாதிரியான கொலை வெறி கொண்டவனாக இருக்கையில் இலக்கங்களுக்கு ஏதாவது பெறுமதி உண்டா?

  • தொடங்கியவர்

இலங்கையின் அமெரிக்க சார்பிற்கெதிராக இலங்கைக்குள் தனது காலை சற்று ஆழமாக பதிக்க நினைத்த இந்தியா, 83 கலவரத்தை பாவித்து தான் இலங்கையில் காலூன்றுவதற்கு தமிழர்களுக்கு உதவுதல் போல் செயற்படத்தொடங்கியதைத்தான் தான் நான் "வாக் தெ டோக்" என எழுதினேன்.

83 உடன் தமிழர் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டத்தற்கு இந்தியா தான் மிக முக்கிய காரணம்(நாம் இன்றும் புலிகளென்றுகொண்டுதிரிகின்றோம்).இந்தியா வேண்டுமெனின் ஒருநாளிலேயே பிரபா,உமா முதலியவர்களை பிடித்து இலங்கையிடம் ஒப்படைத்திருக்கலாம்.முழு இயக்கத்திற்கும் வடக்கிற்கு கொண்டுபோய் பயிற்சியும்,ஆயுதங்களும் கொடுத்திருக்க தேவையில்லை.வேண்டுமெனில் தமிழ்நாட்டில் வைத்து ஆயுதத்தை மாத்திரம் கொடுத்திருக்கலாம்.இயக்கங்களை எடை போடுவதற்கும் தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் அவர்களை வைத்திருப்பதற்கும் தான் வடக்கிற்கு பயிற்சிக்கு அனுப்பினார்கள்.யூ.என் முதல் எமது பிரச்சனையை கொண்டுபோனார்கள்.84,85 பகுதிகளில் செய்திகளை பார்த்தால் தெரியும்.பிளேனில் சாப்பாடு போட்டத்திலிருந்து திம்பு பேச்சுவார்த்தை வரை.ஜே.ஆர் அப்போதே சொல்லியிருக்கலாம் இது உள்நாட்டுப்பிரச்சனை நான் தீர்க்கின்றேன் நீங்கள் ஏன் இதற்குள் வருகின்றீர்கள் என்று.அவருக்கே தெரியும் இந்தியாவின் நோக்கமும் பலமும்.

எங்களுக்கு இலங்கைஅரசிற்கெதிராக போராட ஆயுதம் தந்து வளர்த்து, பின் எங்களை அழிக்க உங்களால் முடியாது என இலங்கைக்கு ஆயுதமும் உதவியும் கொடுத்து இப்போ சர்வதேசத்திடம் இருந்து போர்க்குற்றங்களில் இருந்தும் காப்பாற்ற நிற்கின்றார்கள்.பொருளாதார ரீதியில் சீனாவோ அல்லது வேறு நாடுகளோ இலங்கைக்கு உதவலாமே ஒழிய அரசியல் நிலைப்பாட்டில் இந்தியாவின் பிடியில் தான் இலங்கை.இதற்கு தமிழனை தான் பலி கொடுத்தார்கள்.

ஜஸ்டினுக்கு எனக்கு தெரிந்ததை வேறொரு பதிவில்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவம் கிறிக்கட விளையாட அதே இலங்கையில் இந்திய ராணுவம் மடிந்து கொண்டிருந்ததும் இந்தியாவின் சாணக்கிய அரசியலோ?

  • கருத்துக்கள உறவுகள்

Edited by nunavilan

83 உடன் தமிழர் பிரச்சனை சர்வதேச மயப்படுத்தப்பட்டத்தற்கு இந்தியா தான் மிக முக்கிய காரணம்(நாம் இன்றும் புலிகளென்றுகொண்டுதிரிகின்றோம்).

யூ.என் முதல் எமது பிரச்சனையை கொண்டுபோனார்கள்.84,85 பகுதிகளில் செய்திகளை பார்த்தால் தெரியும்.பிளேனில் சாப்பாடு போட்டத்திலிருந்து திம்பு பேச்சுவார்த்தை வரை.

சர்வதேச மயப் படுத்தப்பட்டது ??

தமிழர் பிரச்சனை இந்தியாவைவிட்டு வெளியே போகாமல் இருக்க முடிந்த மட்டும் இந்தியா முயன்றது. ஐ.நா வுக்கு எங்கே கொண்டு சென்றது ?

ஆதாரம் ?????

ஜே.ஆர் அப்போதே சொல்லியிருக்கலாம் இது உள்நாட்டுப்பிரச்சனை நான் தீர்க்கின்றேன் நீங்கள் ஏன் இதற்குள் வருகின்றீர்கள் என்று.அவருக்கே தெரியும் இந்தியாவின் நோக்கமும் பலமும்.

ஜே.ஆர் / அத்துலத் முதலி ஒன்றுக்கு பல தடவை சொல்லியிருக்கிறார்கள்.

லங்காபுவத் புலம்பிய‌தே அதுதானே. "இந்தியாவில் பயிற்சி பெற்ற மார்க்சிச தமிழ் பயங்கரவாதிகள்...."

பொருளாதார ரீதியில் சீனாவோ அல்லது வேறு நாடுகளோ இலங்கைக்கு உதவலாமே ஒழிய அரசியல் நிலைப்பாட்டில் இந்தியாவின் பிடியில் தான் இலங்கை.

கடந்த 30+ வருடங்களை அவதானித்தால் இந்தக் கூற்று ஒரு கேலிக்கூற்றாகத்தான் இருக்கும்.

இந்தக் கூற்றின் மெய்த்தன்மையை நிரூபிக்க அதிகம் வேண்டாம் ஒரே ஒரு உதாரணம் தரவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.