Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் - கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் மீது புழுதிவார வருகின்றார்கள் - கே.பியின் வழிகாட்டலில் ரவியும், வழுதியும்!

மார் 8, 2011

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான மக்களின் ஆதரவினை சிதைக்கவும் காலத்திற்கு காலம் எதிரி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றான். அந்த வகையில்தான் இதுவும் எனும்போதும், தமிழ் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியுள்ளது.

‘எதிரியினை விட துரேகிகள்தான் ஆபத்தானவர்கள்’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையினை மனதில் நிறுத்தி, விடுதலைக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அந்த வகையில் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் மீது புழுதி வாரி இறைப்பதற்காகவும், புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் விடுதலைப் புலிகள் மீதான கரிசணையை சிதைப்பதற்காகவும் சிறீலங்காவுடன் இயங்கிக்கொண்டிருக்கும் கே.பி என்ற குமரன் பத்மநாதன் புதிய வடிவம் எடுத்து வருகின்றார்.

அண்மையில் ஊடகங்கள் சிலவற்றை இவர் தன்வசப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த ஊடகங்கள் எவ்வாறு இயங்கப்போகின்றன. விடுதலைப் புலிகளை, யாரெல்லாம் கொச்சைப்படுத்தப் போகின்றார்கள் என்பதையெல்லாம் மக்கள் அறிந்துகொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரையை இங்கே தருகின்றோம்.

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சில நாளிதளினை விலைக்கு வாங்கியுள்ள கே.பி அதில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செய்தியினை வெளியிடும் நோக்கில் சு.ரவி என்பவரை பயன்படுத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான வரலாற்றுக் கருத்துக்களை மக்களிடம் முன்வைக்கவுள்ளார். இந்த சு.ரவி தான் ஒரு காலத்தில் விடுதலைப் புலிகள் என்ற மாத இதழிற்குப் பொறுப்பாக இருந்தவர். தற்போது சிறீலங்கா அரசுடன் சேர்ந்தியங்கிக்கொண்டு கே.பியின் ஆலோசகராகவும் இவரே செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

ஒரு சாதாரண ஊடகவியலாளராக இருந்த சு.ரவி, விடுதலைப் புலிகள் இதழிற்கு பொறுப்பாக இருந்த காலத்தில் பல ஆய்வுகளை எழுதி இன்னும் பல ஊடகவியலாளர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டார். அதில் ஒருவர்தான் பொபி. அமெரிக்காவில் இருந்த பொபி, வழுதி என்ற பெயரில் பல கட்டுரைகளினை எழுதியவர். இறுதியில் ‘அவர் சென்ற வழியில்...' என தலைவருக்கு முடிவுரை எழுதி, மக்களின் எதிர்ப்பினால் காணாமல் போனாவர். சு.ரவிக்கும் வழுதிக்கும் இடையிலான நட்பு முள்ளிவாய்கால் வரை தொலைத்தொடர்பில் நீடித்தது. தற்போது வன்னியில் கைகோர்த்து ஒன்றாக உணவருந்தும் அளவிற்கு சென்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்ற இறுதி மாத காலகட்டப் பகுதிகளில் அமெரிக்காவில் உள்ள பொபியுடன் தொடர்பினை வைத்திருந்த சு.ரவி, அரசியல் துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்களுடன் தொடர்பில் இருந்தார். சு.ரவி என்பவர்தான் பொபி என்பவர் ஊடாக இறுதிக்கட்டத்தில் அமெரிக்காவின் கப்பல் வருகின்றது இந்தா வந்துகொண்டிருக்கின்றது என்று தமிழ் மக்களை நம்பவைத்துக்கொண்டிருந்தவர்கள்.

சு.ரவி, பொபி ஆகிய இருவரும் தற்போது தமிழர் தாயகப் பரப்பில் கே.பியுடன இணைந்து சிறீலங்கா அரசின் பல முனைப்புடனான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது உறுதியாகத் தெரியவந்துள்ளது. முள்ளிவாய்க்கால் போரின் போது அதாவது சித்திரை மாத காலப்பகுதியில் தயா மாஸ்ரர் என்பவருடன் சிறீலங்காப் படையினரிடம் சு.ரவியும் சரணடைந்தார். கே.பியின் முன்மொழிவில் சிறீலங்கா அரசின் சில தமிழின அழிப்பின் வேலைக்காக பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

தற்போது கே.பியின் செயலாளராக கடமை ஆற்றிக்கொண்டிருக்கின்றார். இவர்தான் இந்த ஊடகங்களை தமிழ் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்போகின்றார். இதற்காக தற்போது வன்னியில் உள்ள சில ஆய்வாளர்களிடம் ஆராய்ந்து வருவதாகவும் கே.பியின் ஊடகத்தில் பணியாற்றுவதற்க்காக சிலர் அழைக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக சு.ரவிக்கு கிளிநொச்சி தருமபுரத்தில் வீடு ஒன்றும் எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு அண்மையில் யாழ்ப்பாணத்தில் இருந்து உந்துருளி ஒன்றும் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரம் பகுதி தற்போது ரவியின் கோட்டை என அங்குள்ள மக்களால் அழைக்கப்படுகின்றது.

இந்நிலையில் வழுதி என்பவர் கே.பியுடன் கே.பி ஊடாக சிறீலங்கா அரசுடன் இணைந்து பல அபிவிருத்தி என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக சொல்லிக்கொண்டு அங்குள்ள தமிழ் மக்களின் மனங்களை மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.

வன்னியில் கே.பியின் திட்டத்தில் முதலில் அவரின் தெல்லிப்பழை மகா ஜனாக் கல்லூரியில் படித்த நண்பர்கள் பின்னர் அவரது உறவினர்கள்தான் வேலைக்காக இணைத்துக் கொள்ளப்பட்டனர். தற்போது நண்பர்கள், உறவினர்கள் ஊடாக வருபவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில்தான் கே.பி., பொபி, சு.ரவி ஆகியவர்கள் தற்போது உலகத்தில் பரந்துவாழும் தமிழ் மக்களை இலக்காக கொண்டு அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை வன்னியில் முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வேலைத் திட்டங்களுக்காக சிறீலங்கா இவர்களுக்கு சில சலுகைகளையும் வழங்கியுள்ளது. தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள சிறீலங்கா அரசு, வன்னியில் பல ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளின் கட்டுமானங்களையும் தன் வசப்படுத்தியுள்ளது தெரிந்ததே. அந்தவகையில் கிளிநொச்சியின் அன்பு இல்லம், பாரதி இல்லம், காந்தறூபன் இல்லம், செஞ்சோலை வளாகம், பூநகரியில் உள்ள மரமுந்திரிகை தோட்டம், முழங்காவில் சோழன் பண்ணை, வட்டக்கச்சி கல்மடு சேரன் பண்ணை, முத்தையன் கட்டு சோழன் பண்ணை போன்ற நிலப்பரப்புக்களை கே.பியிடம் சிறீலங்கா அரசு ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கே.பியின் பன்னாடுகளில் உள்ள ஆதரவாளர்களை முதலீட்டுக்கு தூண்டுவதன் ஊடாக வருமானம் பெறுவது அரசின் திட்டங்களில் ஒன்று என்பதும் தெரியவருகின்றது. ஏற்கனவே இங்கு சிலர் முதலீடுகளை மேற்கொண்டு சிறீலங்கா அரசிற்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்து வருகின்றனர். இதனை மேலும் அதிகரிப்பதே அரசின் திட்டம் எனவும் இதற்காக புலம்பெயர்ந்த பெரும் பணம் படைத்தவர்களை வளைத்துப்போடும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கே.பியினை வைத்து தமிழர்களின் போராட்டத்தை சிதைப்பது மட்டுமல்ல, தமிழ் மக்களின் வளங்களையும் சுறண்டுவதே அரசாங்கத்தின் திட்டம்.

sangathie

மேற்குறிப்பிட்டுள்ள கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்று பல விடயங்களை அம்பலப்படுத்துகின்றது.

- புலத்தில் இருந்த்து அண்ணாந்து கொண்டு துப்பும் கட்டுரைகளை வரைபவர்கள்

முள்ளிவாய்காலின் பின்னர் அங்கிருக்கின்ற மக்களுக்கு ஏதாவது உருப்படியா செய்ய ஒன்றை சொல்ல முடியுமா ?

- தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற போராளிகளில் ஒருவரையாவது விடுவிக்க முனைந்தாhர்களா ?

சும்மா இங்க இருந்து கொண்டு தேசியம் என்ற பெயரில் தமிழ்தேசிய சிந்தனையை அழிக்க வேண்டாhம்.

விடுவிக்கப்பட்டுள்ள போராளிகளின் எதிர்காலம் என்பது மிகவும் கேள்விக்குறியாகவுள்ளது. போராளிகளின் குடும்பங்கள் அவர்களை தங்களுடன் இணைக்க அஞ்சுகின்றனர். குறிப்பாக பெண் போராளிகளின் நிலை மிக மோசம்.

சமீபத்தில் விடுவிக்கப்பட்ட 12 பெண் போராளிகளை அவர்களது குடும்பம் அரவணைக்க மறுத்த நிலையில் 11 பேர் மீண்டும் இராணுவ முகாமில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் 1 ஒருவர் இரவு பொழுதில் எங்கு செல்வது என்ற நிலையில் அவலப்பட்ட போது வானில் வந்த கும்பல் ஒன்று அவரை கடத்தி பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்படி கதைகள் ஆயிரம்.

குடும்பத்தாலும் சமூகத்தாலும் போராளிகள் புறக்கணிகப்படும் பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம் என்னவாகும் ? அவர்களின் முடிவுகள் எப்படி இருக்கும் ?

இதெல்லாம் ஆழமாக சிந்திக்க வேண்டியவை.

புலத்தில் இருந்து கொண்டு கேபி கேபி என்று கொக்கரிக்கின்றவர்கள் இந்தப் பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க தயாரா ?

- தேசியத் தலைவரின் பாசத்துக்குரிய செஞ்சோலை சிறார்களை இன்று மடுவில் உள்ள கத்தோலிக்க இல்லமொன்றில் பத்திரமாக ஒப்படைத்து அவர்களுக்கான மேம்பாட்டை கேபி செய்து வருகின்றார்.

- விடுவிக்கப்பட்ட போராளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொண்டு அவர்களை சமூகத்தில் இணைக்கின் பணியில் இருக்கின்றார்.

- மேற்குறிபிட்டு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இல்லங்கள் - மையங்கள் எல்லாம் கேபியிடம் சிறிலங்கா கொடுத்துள்ளது என்பது உண்மையெனில் அதனை அவ்வாறே தொhடர்சியாக மீள இயங்க வைப்பது என்பது நல்லதுதானே.

- ஈழவிடுதலைப் போராட்ட நூற்றாண்டுகளில் வன்னியே எப்போதும் பிரதான பாத்திரம் வகிக்திருந்தது.

அந்தவகையில் வன்னி மக்கள் ஈழவிடுதலைக் ஆற்றிய பங்கு மிக முக்கியமானது.

அந்த மக்களுக்கு உதவு புலத்தில் இருந்து கொண்டா பணியாற்ற முடியும் ?

இறுதியாக

கேபி ஒரு சிறிலங்காவின் பிடிக்குள் இருக்கின்ற ஒரு கைதி.

அவரிடம் நாங்கள் ஒன்றும் எதிர்பார்க கூடாது.

இதுவரை அரசியல் குறித்து கேபி இதுவரை அறிய முடியவில்லை

புலத்தில் இருந்து கேபி கேபி என்று கொக்கரிக்கின்றவர்கள் தமிழீழ இலட்சித்தை அடைவதற்தான் உருப்படியான வேலைத்திட்டத்தை கூற ஒன்றுமில்லாட்டியும் குறைந்தபட்சம் அந்த மக்களின் மீள்வாழ்வுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்பதனை அறியப்படுத்துங்கள்.

சும்மா

கேபிபற்றி விடிஞ்சா பொழுதுபட்டா செய்தி போடுவது

அல்லது உருத்திரகுமாரனுக்கு கடிதம் எழுதுவது

இதெல்லாம் மேசைக்கு எடுக்கிற விசயங்கள் இல்லலை.

தாயக மக்களுக்கு இன்று அதிகூடுதலான தேவையாக அடிப்படை வாழ்வாதாரங்கள், வசதிகள் உள்ளன. இதில் அனைவரும் உடன்படுகிறார்கள். இதை யாரும் நேர்மையுடன் செய்தால் அதை எதிர்ப்பவர்கள் இல்லை.

ஆகக்குறைந்த சுதந்திரமும் உரிமையும் தமிழனுக்கு இருந்தாலே மேலே கூறப்பட்டுள்ள உதவிகளை செய்யமுடியும். அவை இன்றும் தமிழனுக்கு இல்லை. எவன் எம்மை அழிக்க நினைக்கின்றானோ, எவன் எங்களின் வாழ்வாதாரத்தை மறுக்கின்றானோ அவனுடன் சேர்ந்துதான் எமது மக்களுக்கு உதவக்கூடிய வழியை அவன் விட்டிருக்கின்றான்.

அந்த எதிரி விட்ட வழியால் உதவ முனைபவர்கள் தாராளமாக உதவலாம். அதேவேளை இந்த வழியால் உதவுவது ஒரு நீண்டகால இன அழிப்பிற்கே உதவும். எனவே நாம் நீண்டகால அரசியல் தீர்வை பெற்றால் மட்டுமே சாத்தியம் என எண்ணி செயற்படுவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரி இதை நிச்சயம் செய்யத்தூண்டும் போதெல்லாம் இவற்றை சாதுருரியமாக நாம் அனைவரும் தாண்டி செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மே 18 2009 க்குப் பின்னர் (அல்லது அதற்கும் முன்னர்) சாதுரியமாக எதனைத்தான் செய்தார்கள்? கடந்த இரண்டு வருடங்களில் நடந்தவற்றைப் பார்த்தால் தமிழர்கைன் தலைமைகள் என்று சொல்வோர் தலையைத் தொலைத்த கோழி மாதிரித்தான் அங்கும் இங்கும் ஓடுகின்றார்கள் என்று தெரிகின்றது. இவர்களுக்கு தாயகத்தில் மக்கள், முன்னாள் போராளிகள் படும் கஷ்டம் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது. தெரிந்தாலும் கொள்கைகளைச் சாட்டி தெரியாமல் இருப்பார்கள். இல்லாவிட்டால் போராட்டத்தின் பின்னர் இதெல்லாம் சகஜம் என்று தத்துவம் பேசுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வருவார் என்று நம்பிக்கையூட்டி நான் எழுதுகின்ற கருத்துக்களை யாழ். களம் தூக்குகின்றது. அப்படியானால் தலைவர் இல்லை என்பதனை யாழ். களம் உறுதிப்படுத்துகின்றதா?

தயவுசெய்து ஒரு அஞ்சலிக் குறிப்பையும் போட்டுவிட்டு எனக்கும் பதில் தாருங்கள்.

கருத்தினை எங்கேயும் சுதந்திரமாக எழுத விடுகின்றார்கள் இல்லையே!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வருவார் என்று நம்பிக்கையூட்டி நான் எழுதுகின்ற கருத்துக்களை யாழ். களம் தூக்குகின்றது. அப்படியானால் தலைவர் இல்லை என்பதனை யாழ். களம் உறுதிப்படுத்துகின்றதா?

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: வழுதி சிங்கள அரசுக்கு சார்பாக எழுதப்போகிறார் என்றால், அவரின்ர முதலாவது வாந்தியை கக்க விட்ட புதினப்பலகையும் அரசுக்கு ஆதரவாகத்தான் இனி எழுதுமோ ?? தெரியாமல்த்தான் கேட்கிறன், வழுதி புழுதி வாரிக் கொட்டியதும் முதன் முதலில் புதினப்பலகையிலதானே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.