Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா கிரிக்கெட் வெற்றி.. வெறி... தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல். கிழக்கு பல்கலைக்கழகம் மூடல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே விரிவாக எழுதியுள்ளேன் கந்தப்பு...நான் குறிப்பிட்டு எழுதியது தாங்கள் மட்டும் தேசியவாதிகள் என்டும் மற்றவர்களை துரோகிகள் என்டும் சொல்பவர்களைத் தான் நீங்கள் இது வரை அப்படி எழுதியதாக தெரியவில்லை...நானும் யாழுக்கு எழுத வரும் போது எல்லோரும் எழுதிறதைத் தான் செய்வார்கள்,செய்வதைத் தான் எழுதுவார்கள் என நினைத்தேன் ஆனால் வந்தப் பிறகு தான் தெரிந்தது அவர்களது எழுத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்காது என ஒரு,சிலரை தவிர[அந்த ஒரு சிலரில் நீங்கள் இருந்தால் சந்தோசம்]...மற்றது நாங்கள் ஆதரவு கொடுப்பதாலோ அல்லது கொடுக்காததாலோ ஒரு அணி வெல்லப் போவது இல்லை அவர்களிடம் திறமை இருந்தால் வெல்வார்கள் நான் அவர்களிடம் இருக்கும் விளையாட்டு திறமையை மட்டுமே பார்க்கிறேன்,ரசிக்கிறேன்

தங்களது தற்போதைய எழுத்துக்களில் பெரும் தடுமாற்றம்தெரிகிறது.

அவரை இவரை எவரையும் நிலைப்படுத்தும் முன் தங்களை கொள்கை ரீதியாக நிலை நிறுத்துங்கள்.

இந்த திரியின் தலைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்களம் தனது வெற்றியை தமிழனை அடித்து கொண்டாடியுள்ளது. நீங்கள் அமைச்சர்முரளி தங்களது ஆள் அவருக்கு அங்கு பெரு மதிப்பு இருக்கிறது என்கிறீர்கள். அதாவது அடி வாங்குவதற்கு தமிழன் தயாராக இருக்கின்றான் அதை அவன் அமோகஆதரவுடன் வரவேற்கின்றான் என்பது போலிருக்கிறது தங்கள் எழுத்து. பிரபாகரன் இருந்தபோது கிழக்கிலோ ஏன் தெற்கிலோ இது போன்ற தாக்குதல் தமிழன் மீது நடக்கவில்லை. ஆனால் தங்களது அபிமானத்தலைவரின் ஆட்சியில் நடப்பதன் தார்ப்பரியம் என்னங்க....?

அதோடை கடவுளின் அருள்ளுமிருக்கனும் அப்ப தான் வெல்ல முடியும் :):D

அத்துடன் அதிஷ்டமும் இருக்க வேண்டும்! அதுதான் மும்பாய் மைதானத்தில் அதிகம் வேலை செய்யும்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:) ராஜ செந்தூரன்,

ஊரில் எப்படி உலகக் கிண்ணத்தைக் கண்டு களிக்கிறீர்கள்?? ரூபவாகினியிலா?? இங்கே இருக்கிறோம், ஆனால் எந்தப் போட்டியுமே ஒளிபரப்பப்பபடுவதில்லை. காசு கட்டி விஷேஷ அலைவரிசையிருந்தால்த்தான் எல்லாமே பார்க்கலாம்.

சரி அதை விடுங்கள், நீங்கள் யாருக்கு ஆதரவு, இந்தியாவுக்கா அல்லது இலங்கைக்கா?? நானும் ஒருகாலத்தில் பயங்கர இலங்கை அபிமாணி. அரவிந்த, ஜயசூரிய, அர்ஜுன என்றால் உயிர். ஆனால் நினைத்துப் பார்க்கும்போது இப்போது வெட்கமாக இருக்கிறது.

இந்தியாவுக்கு நான் எப்போதுமே ஆதரவாக இருந்ததில்லை. ஏனென்று தெரிவதில்லை, சிறு பராயத்தில் நண்பர்கள் இந்தியா என்றவுடன் ஓடியோடிப் பார்த்தபோது எனக்கு ஒரே வியப்பு. ஏனிப்படி என்று கேட்டுக்கொள்வேன். 1987 உடன் எல்லாமே மாறிப் போச்சு.

நினைத்தாலும் இந்தியாவை ஆதரிக்க முடியாது, சிறிலங்கா?? அது தோற்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ரகுநாதன்,

ரூபவாகினியில் இதுவரை நேரடி ஒளிபரப்பு இல்லை. இறுதிப்போட்டிக்கு ஒருவேளை இருக்குமோ தெரியாது. நான் இங்கு பார்ப்பது ஸ்டார் கிரிக்கட் சானலில். இதில் நேர்முக வர்ணனை இந்தியாவுக்குச் சார்பானதாகவே இருக்கும். ஆதரவு? இங்கே going with the flowதான். ஸ்ரீலங்கா அணிக்குத்தான் ஆதரவு. விளையாட்டு வேறு, அரசியல் வேறு என்ற கொள்கைதான் எனக்கும். இது எனது சொந்த நிலைப்பாடு. இதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் கிடையாது. நீங்கள் ஸ்ரீலங்கா அணிக்கு ஆதரவில்லை என்று எழுதியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த நிலைப்பாடு. அதை மதிக்கிறேன்.

நான் இங்கு அதிகமாகப் பழகும் அனைவரது நிலைப்பாடும் அதுவே.

கிட்டத்தட்ட இங்குள்ள அனைத்து வீடுகளிலும் அரையிறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா விளையாடியபோது டி.வி.க்கு முன்னால்தான் அனைவரும் இருந்தனர். ஸ்ரீலங்கா வெற்றிபெற்றபோது ஆரவாரமும் கேட்டது. வெளிநாடுகளில் நிலைமை வேறுவிதமாக இருக்கும் என்று தெரியும்.

இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா விளையாடுவதால் நாளைக்கு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படும். சனிக்கிழமை இரவு கொத்துரொட்டிக்கு கடை தேடி அலைய வேண்டும் போலிருக்கிறது. இடையிடையே மின்சாரம்வேறு நின்று விளையாட்டுக் காட்டுகிறது. பார்க்கலாம், நாளை என்ன நடக்கிறது எனறு.

Edited by Raja Senthooran

  • கருத்துக்கள உறவுகள்

:) விளையாட்டை விளையாட்டாகப் பார்ப்பதில் தவறில்லை, ஆனால் விளையாட்டைப் பாவித்து அரசியல் நடத்துவதுதான் தவறு.

சிங்கள அணியில் அர்ஜுன ஜயசூரிய போன்ற கீழ்த்தரமான இனவாதிகளும் இருந்திருக்கிறார்கள்.

உங்கள் விருப்பை நீங்கள் செய்வதுதான் சரி. அதை யாரும் உங்கள்மேல் திணிக்க முயன்றால் அது தவறு.

வாழ்த்துக்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
<_< தாய்நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்காக இந்த உலகக்கிண்ணத்தை தான் விளையாடுவதாக சங்கக்கார அறிவித்திருக்கிறார். அந்த தாய்நாட்டிற்காக உயிநீத்தவர்களின் பட்டியலில் தமிழர் பெயர் இருக்கப்போவதில்லை என்பது திண்ணம். கடைசியில் அவரும்......
  • கருத்துக்கள உறவுகள்

திரு ரகுநாதன் ஐயா

அவரது தனிப்பட்ட விருப்புகளைப்பற்றி நாம் கதைப்பதற்கில்லை

ஆனால் அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லியபடி அவர் அரசியல் செய்வதை பாருங்கள்.

மீண்டும்ஒருமுறை அவர்மேலே எழுதியுள்ளதை வாசியுங்கள்

நான் இங்கு அதிகமாகப் பழகும் அனைவரது நிலைப்பாடும் அதுவே.

கிட்டத்தட்ட இங்குள்ள அனைத்து வீடுகளிலும் அரையிறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா விளையாடியபோது டி.வி.க்கு முன்னால்தான் அனைவரும் இருந்தனர். ஸ்ரீலங்கா வெற்றிபெற்றபோது ஆரவாரமும் கேட்டது.

இறுதிப்போட்டியில் ஸ்ரீலங்கா விளையாடுவதால் நாளைக்கு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படும். சனிக்கிழமை இரவு கொத்துரொட்டிக்கு கடை தேடி அலைய வேண்டும் போலிருக்கிறது.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

நாங்கள் இப்படி எழுதுவதால் மட்டும் அவரை மாற்றிவிட முடியுமா என்ன?? எம்மில் இன்னும் பலர் இந்தியாவையும், இலங்கையையும் ஆதரிக்கிறார்கள். எம்மால் எதையுமே செய்ய முடியாது. அது அரசியலாகத்தான் இருந்தாலும் கூட, அது அவர்களது விருப்பம்.

சரி விடுங்கள், அவரவருக்கு அவரவர் விருப்பம். எதையும் எவரின் மேலும் திணிப்பதற்கு இங்கு யாருமே குழந்தைகள் அல்லர். அவர் கூறியபடியே விளையாட்டு வேறு அரசியல் வேறு என்றால் மகிழ்ச்சிதான். அதுவரையில் நிம்மதியாக இருங்கள். நீங்கள் செய்வதில் உள்ள நியாயப்பாடு உங்களுக்குத் தெரியும். அதுபோல அவருக்கும் ஒரு நியாயம் இருக்கலாம்.

சிங்களவரது அரசியலை அவர் ஆதரிக்காதவரை அவர் உங்களுக்கு எதிரானவர் இல்லை என்பதையும் நினைவில் வைத்திருங்கள்.

அதுசரி, அதேன் அந்த " ஐய்யா" என்கிற விழிப்பு??!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது தற்போதைய எழுத்துக்களில் பெரும் தடுமாற்றம்தெரிகிறது.

அவரை இவரை எவரையும் நிலைப்படுத்தும் முன் தங்களை கொள்கை ரீதியாக நிலை நிறுத்துங்கள்.

இந்த திரியின் தலைப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்களம் தனது வெற்றியை தமிழனை அடித்து கொண்டாடியுள்ளது. நீங்கள் அமைச்சர்முரளி தங்களது ஆள் அவருக்கு அங்கு பெரு மதிப்பு இருக்கிறது என்கிறீர்கள். அதாவது அடி வாங்குவதற்கு தமிழன் தயாராக இருக்கின்றான் அதை அவன் அமோகஆதரவுடன் வரவேற்கின்றான் என்பது போலிருக்கிறது தங்கள் எழுத்து. பிரபாகரன் இருந்தபோது கிழக்கிலோ ஏன் தெற்கிலோ இது போன்ற தாக்குதல் தமிழன் மீது நடக்கவில்லை. ஆனால் தங்களது அபிமானத்தலைவரின் ஆட்சியில் நடப்பதன் தார்ப்பரியம் என்னங்க....?

நான் எதற்காக என்னை கொள்கை ரீதியாக முன் நிறுத்த வேண்டும்...நான் என்ன தேர்தலிலா நிற்கப் போகிறேன் :D ...கிழக்கு பல்கலைகளகத்தில் எத்தனை தமிழ் மாணவர் படிக்கிறார்கள்? எத்தனை சிங்களவர்கள் படிக்கிறார்கள்? 10 ற்கு 3 என்ட வீதத்தில் கூட இருக்காது...எல்லோருமாக சேர்ந்துஅந்த சிங்கள மாணவரை திருப்பி அடிக்க தெரியாதா?...இதற்கு எதற்கு பிரபாகரன்,கருணா

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்காவை ஆதரிப்பவன் மானங்கெட்ட பயல் .. கிந்தியாவை ஆதரிப்பவன் மொள்ளமாறி பயல் ..

டிஸ்கி:

வீட்டில மதியாணம் தின்ன சோறு இருக்கா? தன்னிலையை பார்த்து தனது குழந்தை குட்டிகளை படிப்பிவன் உண்மையான பயல்... வீட்டுல போய் பிள்ளை குட்டிகளை படிக்கவையுங்க அப்பு.. இங்கிட்டு என்ன ஜெனிவா மீட்டிங்கா நடக்குது உலக சமாதனாம் பேச?

நான் எதற்காக என்னை கொள்கை ரீதியாக முன் நிறுத்த வேண்டும்...நான் என்ன தேர்தலிலா நிற்கப் போகிறேன் ...கிழக்கு பல்கலைகளகத்தில் எத்தனை தமிழ் மாணவர் படிக்கிறார்கள்? எத்தனை சிங்களவர்கள் படிக்கிறார்கள்? 10 ற்கு 3 என்ட வீதத்தில் கூட இருக்காது...எல்லோருமாக சேர்ந்துஅந்த சிங்கள மாணவரை திருப்பி அடிக்க தெரியாதா?...இதற்கு எதற்கு பிரபாகரன்,கருணா

திருப்பி அடிச்சா உங்கட தலைவர் கருணாய் தான் அவங்களை சிங்களவனிடமிருந்து காப்பாற்றுவாராக்கும். அடுத்தநாள் அந்த நாயே இவங்கள் வன்னிப்புலி ஆதரவாளர்கள் என்று போட்டு தள்ளும்.

Edited by செந்தமிழாளன்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா என்ற பெயருடையவனை எல்லாம் தலைவனாக ஏற்று கொள்ளுவதில்லை.. கருணா என்ற பெயரே யூதாசுக்கு ஒப்ப இருக்கிறது எங்கிட்டும் :D

... இலங்கை/நியூசிலாந்து அரை இறுதி ஆட்டம் நடந்து கொண்டிருக்கையில், தூர இடம் போக வேண்டி வந்தது ... போகும்போது BBC Radio5 Live கேட்டுக் கொண்டு போய் வந்தேன்!! ...

... வர்ணனையாள்ர்களில் முன்னால் இங்கிலாந்து வீரர்கள் சிலரும், ஆஸ்திரேலியாவிற்கு பின்னர் விளையாடிய முன்னால் இங்கிலாந்து வீரர் ரொனி கிறேயும், ஓர் முன்னால் சிங்கள வீரரும்(பெயர் ஞாபகத்துக்கு வர மறுக்குது) ...

... ஒரு கட்டத்தில் ரொனி கிறே ... திருகோணமலையின் அழகும், அங்குள்ள கடற்கரைகளும், கொழும்பிலிருந்து 8 மணி நேர பயணமாம், இப்போ இலங்கையில் எவ்வித பிரட்சனையும் இல்லை ... என்றெல்லாம் வர்ணிக்க தொடங்கி விட்டார், கிறிக்கெட்டை மறந்து! .. அப்போ மற்றைய சிங்கள வர்ணனையாளர், ரொனி கிறேக்கு .. நீங்கள் இலங்கையில் உல்லாச பிரயாணத்துக்கு நியமிக்கக்கூடிய ஓர் சிறந்த அம்பாஷிடர் என்று புகழாரமும் சூட்ட .....

... பின் அரையிறுதி ஆட்டம் முடிவுறும் தறுவாயில் ... வேறொரு வர்ணனையாளர் ரொனி கிறேயிடம் ... இந்த ஆட்டம் முடிவுற மொகாலிக்கு (இந்தியா/பாகிஸ்தான் ஆட்டம் நடந்த மைதானம்) செல்கிறீர்களா??? .. அதற்கு ரொனி கிறே ... இல்லை, நான் இங்கு நிற்கப்போகிறேன், எனது சிறந்த நண்பர் ஒருவர் சிறிலங்கன் எயாபோஸில் அதிகாரி, அவருடன் சில வேலைகள் உள்ள்து ... மீண்டும் கிறிக்கெட் வர்ணனை, இலங்கைக்கான உல்லாச பிரயாணிகளுக்கான அழைப்பாக மாறியது ...

... சிறு சந்தேகம், இந்த ரொனி கிறே போன்றவர்களை உல்லாசபிரயாணிகளை வரவ்ழைக்க, சிங்களம் காசுக்கு அமர்த்தியுள்ளதோ என்று ... அவன் எதனை, எவ்வாறு, எப்படி பாவிக்க வேண்டுமென்று கணிப்பிட்டு காய்களை நகர்த்துகிறான் .... நாமோ????????

... நாளை இறுதி ஆட்டத்திற்கு, எனது மகன் விளையாடும் கிளப்பில் வந்து பார்க்க சொல்லி கூப்பிட்டார்கள் .. அங்கு சில சிங்களவர்கள், இன்னும் சில தமிழர்கள் சிங்களவர்களாக ... அங்கு சிங்கள அணிக்காக போடப்படும் ஒவ்வொரு கூக்குரல்களும், கரகோசங்களும் ... எம்மக்கள் போட்ட அவலக்குரல்களின் எதிரொளிகள் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்க ... வேண்டாம், அங்கு அதனை கேட்டும்/பார்க்கும் நிலையில் ... இல்லை!

... விளையாட்டை விளையாட்டாக எடுப்போம் ... என்றாலும் உள்மனது இடம் தர மறுக்கிறது!!! ...

... அதற்கு மேல் அரசியல் ... இலங்கை .. இந்தியா ... அமெரிகா ... சீனா ... ... இப்படி எந்த நாடாகிலும் ... எம் எதிரியை சரியாக இனம் காணுவோம்!! ... எல்லோரையும் எதிரியாக்குவதை தவிர்ப்போம், எமக்கென்று ஒரு வாழ்வு வரும் மட்டிலாவது!!! ... எதிரியின் நண்பனையும் எமது இராஜதந்திரத்தில், எம் நண்பனாக்குவோம்!!!!

Edited by Nellaiyan

எனக்கு பிடித்தகிரிக்கெட் நேர்முகவர்ணையாளர்களில் முதலாவது டொனி கிறேக் தான்.இவர் இலங்கையை பற்றி எப்போதும் புகழ்வது உண்மை அது நெல்லையன் சொல்லும் காரணமாகவும் இருக்கலாம்.இவரிடம் ஒருமுறை உலகில் எங்கிருந்து கிரிக்கெட் பார்க்க விரும்புகின்றீர்கள் என்று கேட்டதற்கு"கண்டியில் சிலோன் டீ குடித்தபடியே"என்று சொன்னார்.

இவர் ஒரு சவுத் ஆபிரிக்கன் பின்னர் இங்கிலாந்துக்காக விளயாடி கப்டனாகவும் இருந்தார் இலங்கைக்கும் வந்தார்.அவுஸ்திரேலியாவிற்காக இவர் விளையாடவில்லை.அவுஸ்திரேலிய கரி பெக்கர் தொடங்கிய இரவு பகல்,கலர் யூனிபோர்ம்,கலர் பந்து கிரிக்கெட் ஆட்டத்திற்கு வலது கை இவர்தான்.இன்று நடக்கும் இந்த இரவுபகல் கலர் ஆட்டமெல்லாம் கரி பெக்கர் தான் ஆரம்பித்துவைத்தது.

எங்களுக்குத்தான் உலகத்தில் எவரையும் பிடிக்காதே, எல்லோருக்கும் புத்திமதி சொல்பவர்களாயிற்றே நாம்,எவர் சொல்லையும் கேட்டதெரியாதவர்களே நாம்.எங்களை அழித்தவர்களை நாம் பகஸ்கரிக்க வேண்டுமெனில் எங்களுக்கு இருக்க கூட நாடு இல்லை, சாப்பிட சாப்பாடு இல்லை ,உடுக்க உடுப்பு இல்லை எதுவும் இல்லையென்று ஆகிவிடும்.

இனியாது உறவுகளை வளர்த்து உருப்படியாக எதுவும் செய்வோம்.

அப்பப்ப உண்மைகளையும் எழுதிறீர்களே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.