Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்:

10 ஏப்ரல் 2011

தூதுரகங்கள் இலங்கைக்கு மட்டும் செல்லக் கூடிய வகையில் தற்காலிக கடவூச்சீட்டுக்களை மாத்திரமே ..

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்:

இலங்கை பிரஜை ஒருவர் வெளிநாடு ஒன்றில், அகதி அந்தஸ்து கோரிய பின்னர், அவர் குறித்த நாட்டில் தங்கியிருக்கும் போது, புதிய இலங்கை கடவூச்சீட்டை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 4 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று, அகதி அந்தஸ்து கோரும் நபர்கள் பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு சென்ற பின்னர், இலங்கை கடவூச்சீட்டுகளை கிழித்து எறிந்து விட்டு, இனப்பிரச்சினை அல்லது அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக இலங்கையில் வாழ முடியாது எனக் கூறி, அகதி அந்தஸ்து கோருகின்றனர்.

அகதி அந்தஸ்து கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால், அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தவர்கள் அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். இதில் பிரித்தானிய அதிகாரிகள் திருப்தியடையும் பட்சத்தில், அகதி அந்தஸ்து கோரியவருக்கு பிரித்தானியாவில் நிரந்தரமாக வாழ விசா வழங்கப்படும். இவ்வாறு நிரந்தர நிரந்த வதிவிட விசா பெற்றவர், லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று, புதிய கடவூச்சீட்டை பெற்று, நிரந்தர வதிவிட விசாவுக்கான ஸ்டிகரை புதிய கடவூச்சீட்டில் பதிவுசெய்துக்கொள்வார். நிரந்தர வதிவிட விசா கிடைத்து, ஒரு வருடத்தின் பின்னரே அவர், பிரித்தானிய கடவூச்சீட்டை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைகளின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் இலங்கை கடவூச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாது. கடவூச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு செல்ல வேண்டும். அவ்வாறு இலங்கை செல்பவர்களுக்கு,

தூதுரகங்கள் இலங்கைக்கு மட்டும் செல்லக் கூடிய வகையில் தற்காலிக கடவூச்சீட்டுக்களை மாத்திரமே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

gtn

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/60060/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து கோரியவருக்கு புதிய கடவூச்சீட்டு வழங்குவதில்லை - அரசாங்கம்:

இங்கு இலங்கை பாஸ்போட் வைத்திருப்பவர்கள் இனி அங்கு போக வேண்டிய நிலை.

இதைபற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் யாராவது அறியத்தருவார்களா?

இது என்னை பொறுத்தவரை அகதி அந்தஸ்து கோருபவருக்கு சாதகமாகவுள்ளது.கனடாவை பொறுத்தவகையில் இங்கு அகதி அந்தஸ்து கோரியவர்களில் பலர் இலங்கை கடவுச்சீட்டுடன் இலங்கை சென்று வந்துள்ளார்கள்.இவ்வளவு காலமும் பாராமுகமாகவிருந்த கனடிய அரசு தற்போது புதிய சட்டமூலம்(பழைய சட்டமூலம் கிடப்பில் கிடந்தது)மூலம் அகதி அந்தஸ்து கோரியவர்கள் கனடிய பிரசையாகி கனடிய கடவுச்சீட்டுடன் தான் சொந்த நாட்டுக்கு பயணிக்க முடியும்.(இவர்கள் ஏதாவது காரணத்திற்காக எங்கு கைது செய்யபட்டாலும் கனடியதூதகரத்துக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும்)கனடிய கடவுச்சீட்டு(canadian passport) இல்லாது கனடிய தற்காலிக கடவுச்சீட்டு(canadian travel document) பெற்று பயணம் செய்பவர்கள் சொந்த நாட்டை தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும்.ஆனால் இவ்வளவு காலமும் கண்டு கொள்ளாமல் இருந்த அரசு இப்போது விமான நிலையத்திலேயே தனது பணியை ஆரம்பித்துள்ளது.அகதி அந்தஸ்து கோரியவர்களின் நிரந்தர வதிவிட அட்டையில் சகல விபரங்களும் அடங்கியிருப்பதால் அட்டையை தேய்தவுடன் அகதி அந்தஸ்துகோரியவராயின் அவர் சொந்த நாட்டுக்கு சென்று வந்தது உறுதிசெய்யபட்டால் நிரந்தர வதிவிட அட்டை,பயணத்துக்கு பாவித்த கடவுச்சீட்டு,விமானபயணச்சீட்டு ஆகியனவும் பறிமுதல் செய்யப்பட்டு பிறிதொரு நாளில் குடிவரவு குடியகல்வு அலுவலகம் செல்ல( நாலாம் மாடி போன்றது கேள்வி கேட்டே தொலைத்துவிடுவார்கள்),கணனியிலும் சிவப்புபுள்ளி போட்டுவிடுவார்கள்.இது உங்கள் வாழ் நாள் பூராகவும் இருக்கும் இங்கு பெரிய சிக்கல் உருவாகிறது.உங்களுடன் உங்கள் பிள்ளைகள் பயணம் செய்தால் அவர்களுக்கும் சிவப்பு புள்ளிதான்.ஒவ்வொரு முறையும் பயணம் செய்யும் போது சிவப்பு புள்ளியிடப்பட்டவர் தடுத்து காரணமின்றிஒருசில மணித்தியாலங்கள் விமான நிலையத்தில் தடுத்துவைக்க படுவார்கள்.சிவப்பு புள்ளியை திறந்து வாசிக்க தகுதியான உத்தியோகத்தரால் தான் முடியும்.அதுவரை விமான நிலையத்திலே கிடக்க வேண்டும்.பிள்ளைகள் தொழில் தேடும் போதும் வாகனம் செலுத்தும் போதும் சிவப்பு புள்ளியிருக்கும் எதுக்கு இடப்பட்டது என்றிக்காது.இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி உங்களுடன் கடுமையாக நடந்துகொள்வார்.உண்மையாக யாருக்கும் எதுவும் தெரியாது.பொறுப்பான வேலைகளுக்கு தெரிவு செய்ய பட்டாலும் உங்களுக்கு இந்த வேலையை தர நிர்வாகம் சம்மதிக்க வில்லை சிரமத்திற்கு மன்னிக்கவும்.என்று கடிதம் வரும்.இவற்றை பார்க்கும் போது.இலங்கை அரசின் முடிவு கனடாவிலிருப்பவர்களுக்கு சாதகமாக விருக்கிறது.மற்றைய நாடுகள் எப்படியோ எனக்கு தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு போய்வந்தால்................... குறைந்தது 10 000 அமெரிக்க டாலர்களை கொண்டு செல்வார்கள். அதனால் பொருளாதாரத்தை மெம்படுத்தலாம் தவிர ஆள்கடத்தி கப்பம் வசூலிக்கவும் துணையாக இருக்கும். இனி தமிழ் உணர்வாளர்களை சிறைபிடிக்கவும் வசதியாக இருக்கும்.

இதே சட்டத்தினை உள்ளாட்டு அரசுகளுக்கு எடுத்து சுறி உள்நாட்டு அரசுகளிடம் இருந்து பயணத்திற்கு மாத்திரம் உபயோகிக்க கூடிய கடவுசீட்டுகளை பெற வழிவகுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இலங்கை பாஸ்போட் வைத்திருப்பவர்கள் இனி அங்கு போக வேண்டிய நிலை.

இதைபற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தால் யாராவது அறியத்தருவார்களா?

கறுப்பி இலங்கை கடவுச்சீட்டு வைத்திருந்தால் அதை புதுப்பிக்கிறதிற்கோ அல்லது புதிதாக கடவுச் சீட்டு எடுப்பது என்டாலும்[10 வருடத்தின் பின் புதிதாக எடுக்க வேண்டும்] இலங்கைக்கு தான் போக வேண்டும்...இதையை காரணமாக காட்டி விரைவாக பிரித்தானியா கடவுச்சீட்டு எடுக்க பாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அகதி அந்தஸ்து வழங்கும் போது சிலருக்கு பிரித்தானியா அதன் தற்காலிக கடவுச்சீட்டொன்றில் விசா அடித்து வழங்கி இருப்பதை கண்டிருக்கிறேன். அதேவேளை ஒரு கடதாசியில் விசாவை அடித்து அனுப்பி இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

அகதி அந்தஸ்துக்கு தகுதியற்ற பலரும் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்பதை உலகம் நன்கு அறியும். இலங்கையில் இருந்து கடவுச் சீட்டோடு நுழைந்துவிட்டு பின் அதனை சேதப்படுத்தி விட்டு அகதி அந்தஸ்துப் பெற்றோர் பலர். அது மோசடி தானே. அந்த வகையில் இந்த நடவடிக்கைகளை உலகம் வரவேற்கும். அவர்களுக்கும் இலங்கை அகதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு தேவை இருக்கிறது.

நம்மவர்களின் மோசடிகளை உலகம் திரண்டு தடுக்கும் போது நேர்மையாக வருபவர்களுக்கு தொந்தரவும் வாய்ப்பும் அதிகம் இருக்கும். உண்மையில் அரசியல் ரீதியில் பாதிக்கப்பட்ட ஒரு தமிழ் குடும்பத்திற்கு இலங்கையில் வைத்தே பிரித்தானிய தூதரகம் அகதி அந்தஸ்து வழங்கி இருக்கிறது. அப்படியானவர்களோடு ஒப்பிடும் போது மோசடிக்காரர்கள் அகதி அந்தஸ்து வாங்கினதே அதிகம்.

Edited by nedukkalapoovan

அகதி அந்தஸ்து வழங்கும் போது சிலருக்கு பிரித்தானியா அதன் தற்காலிக கடவுச்சூட்டொன்றில் விசா அடித்து வழங்கி இருப்பதை கண்டிருக்கிறேன். அதேவேளை ஒரு கடதாசியில் விசாவை அடித்து அனுப்பி இருப்பதையும் கண்டிருக்கிறேன்.

அகதி அந்தஸ்துக்கு தகுதியற்ற பலரும் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளனர் என்பதை உலகம் நன்கு அறியும். இலங்கையில் இருந்து கடவுச் சீட்டோடு நுழைந்துவிட்டு பின் அதனை சேதப்படுத்தி விட்டு அகதி அந்தஸ்துப் பெற்றோர் பலர். அது மோசடி தானே. அந்த வகையில் இந்த நடவடிக்கைகளை உலகம் வரவேற்கும். அவர்களுக்கும் இலங்கை அகதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு தேவை இருக்கிறது.

நம்மவர்களின் மோசடிகளை உலகம் திரண்டு தடுக்கும் போது நேர்மையாக வருபவர்களுக்கு தொந்தரவும் வாய்ப்பும் அதிகம் இருக்கும். :D:)

முன்பெல்லாம் இப்படியான முறையில் தான் பலருக்கு தற்காலிக வதிவிட அனுமதி கொடுத்திருந்தார்கள் நானும் கண்டிருக்கிறேன், அதை வைத்து குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு நிரந்தர வதிவிட அனுமதி எடுத்திருந்தார்கள் . இனி சட்டத்ரணிகள் காட்டில் ஆடை மழை தான் போல :D

மேலதிக விபரம் நேரடியாக Home Office க்கு சென்று/ தொடர்பு கொண்டு கேட்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இறுதி யுத்தத்தில் படுகாயப்பட்டவர்களில் சிலர் பாங்கொக் வந்து ஐ.நாவில் அகதி அந்தஸ்த்து கோரி வருடக்கணக்காக பாங்கொக்கில் உள்ளார்கள்.அதிலும் சிலர் கப்பலில் கனடா வந்து இறங்கி உள்ளார்கள்.அகதி அந்தஸ்த்து குடிவரவு திணைக்களத்தால் இழுத்து அடிக்கப்படுகிறது.

அகதி எனப்படுபவர்கள் நாட்டில் இருக்க முடியாமல் தப்பி ஓடியவர்களே.தமது உயிரைக்காக்க ஓடுபவர்கள் சிலர் தமது தஸ்தாவேஜுகளுடன் ஓடுவார்கள்.பலர் கையில் அகப்பட்டதோடு ஓடுபவர்கள்.

ஒரு இனக்குழுமத்தின் மீது அரச படைகள் கண்மூடித்தனமாக ஸெல்களையும் , குண்டுகளையும் கொட்டி, உணவையும் அவர்களுக்கு செல்லாமல் தடுத்தால் அந்த ஓட்டு மொத்த இனமும் அகதி அந்தஸ்த்துக்கு தகுதியானவர்கள்.

ஒரு சிலரின் தவறுக்காக எல்லோரையும் தண்டிப்பது என்பது வெறும் பம்மாத்து.இந்தியாவில் இருந்து களவாக வெளிநாட்டுக்கு எப்படி எல்லாம் வந்து அகதி அந்தஸ்த்து கோருகிறார்கள் என 2G அளவுக்கு :lol: எழுதலாம்.ஆனால் அங்கு அப்படி கடவுச்சீட்டை அங்கு போய் தான் எடுக்க வேண்டும் என்றொரு சட்டம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ தோழர்கள் இன்னும் நாடு நாடாக திரிவது மனதிற்கு மிகவும் கடினமாக இருக்கிறது சொந்த நாட்டுக்கான கருத்துருவாக்கம் ஓவ்வோர் நெஞ்சிலும் உருவாகவேணும் தி ரெபுஜீச் கென்றி போர்டு அகதியாக வந்து ஒரு சாம்ராஜ்யத்தினை உருவாக்கினார்

car-logo-ford.gif

அதை போல ஈழ தோழர்களும் புதியதொரு அத்தியாயாம் அதாவது அனைவருக்கும் சங்கூதும் அத்தியாயாம் .....அதை செய்ய கிளம்பவேண்டும் :)

தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழித்து போடுவொம் என்பதெல்லாம் ஓல்டு பேசன் .... கவிதை கட்டுரை எழுதி கிழித்து கொண்டு இருந்தால் விடுதலை சும்மா வராது.. அவனுங்களும் இரங்கல் கவிதை கருநா போல எழுதி கடாசி விடுவார்கள்...

கத்தி கத்தி மாதிரி ஸார்பா இருக்கணும்.. எவனும் கை வைக்கும் முன்பு ஆயிரம் தடவை ரூம் போட்டு யோசிக்கணும்.. முள்ளிவாய்கால் காட்டிய பெருமகன்களுக்கு கிள்ளி வாய்க்கால் காட்ட வேணும்..

எவனும் ஈழ த்தினை அங்கிகரிக்க தேவையே இல்லை .. அதென்னெ பெட்ரோல் அது இல்லையென்ரா நடந்து போவார்கள்..முதல் தேவை இனி எவனும் கை வைக்க கூடாது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=XAC-UnJQIYY

மற்றும்படி தொடர்ந்து

ctrl +c

ctrl+v

ம்ம் ஏனும் ஆகலில்லா

டிஸ்கி:

லைப் இஸ் சம் டைம் ரம்மி சம் டைம் டம்மி :mellow:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

இங்க மாற்று கருத்து மாணிக்கங்கள் யாரும் ராலேது ? :(

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாய் வந்தவர்கள் மட்டும் தான் கடவுச்சீட்டு முடிந்தால் திரும்பிப் போக வேண்டுமா?வேலைவாய்ப்பு,கல்வி,ஸ்பொன்சர் விசாவில் வந்தவர்கள் புது கடவுச் சீட்டு வேண்டுமென்றால் அல்லது புதுப்பிக்க வேண்டும் என்டால் இலங்கைக்கு போகத் தேவை இல்லையா?...இதில் என்ன மாற்றுக் கருத்து வேண்டி கிடக்குது ஒவ்வொருவரும் தாங்கள் இருக்கும் நாட்டில் உள்ள ஹோம் ஒபிஸ் போய் தங்களால் இலங்கைக்கு போக முடியாது என்டால் அந்தந்த நாடுகள் அவர்களுக்கு அந்த நாட்டு கடவுச்சீட்டு அல்லது இலங்கை தவிர்ந்த வேற நாடுகளுக்கு பிரயாணம் செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவார்கள்...இதில் உள்ள் பாதகத்தை விட சாதகமே அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
S1005830288_125x125.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.