Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது - பலஸ்தீனம்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது - பலஸ்தீனம்:

13 ஏப்ரல் 2011

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது என பலஸ்தீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ

மூனின் நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை வெளிவந்துள்ளதை அடுத்தே பலஸ்தீன அரசாங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையில் பெரும் அச்சுறுத்தலாக காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துவிட்டு, ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியான முறையில் இலங்கை அரசு பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

அதன் காரணமாக பல்வேறு குழுக்களை அமைத்து அல்லது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதை சர்வதேசம் உடனடியாக நிறுத்த வேண்டும் என பலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏனைய நாடுகளின் மனித உரிமை விவகாரங்களில் அமெரிக்கா தலையீடு செய்யக்கூடாது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட மனித உரிமை அறிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக சீனா இவ்வாறு தெரிவித்திருந்தது.

GTN

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது என பலஸ்தீன அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உவையளுடன் எல்லாம் நாம் தொடர்பு வைக்கவேண்டும் என்று யாரொ சொன்னமாதிரி கிடக்கு.......

உவங்களுக்கே அரசாங்கம் இல்லை அதுக்குள்ள அறிக்கை விட வந்திட்டாங்கள்

உவையளுடன் எல்லாம் நாம் தொடர்பு வைக்கவேண்டும் என்று யாரொ சொன்னமாதிரி கிடக்கு.......

உவங்களுக்கே அரசாங்கம் இல்லை அதுக்குள்ள அறிக்கை விட வந்திட்டாங்கள்

அந்த குரங்குகளை கேக்கனும் எந்த அரசாங்கம் அறிக்கை விட்டது என்று.

அதுகளே இரண்டா பிரிஞ்சு கிடக்குதுகள்.

கமாஸ் அரசா? அல்லது அபாஸ் அரசா அறிக்கை விட்டது.

இவ்வளவு முஸ்லீம் சகோதர நாடுகள் எல்லா உதவியும் செய்தும் வெல்லமால் தத்தளிக்கிறீர்கள். பிறகு சிறிலங்லாகாவில் தலை இட வேண்டாமா?

நல்லது வாழ்க.

மூஞ்சுறு தான் போக காணவில்லையாம் விளக்குமாறை காவி போன கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிடக் கூடாது - பலஸ்தீனம்:

இதைதான் சொல்லுறது 'தான் போக வழியில்லாத மூஞ்சூறு, விளக்கு மாத்தையும் தூக்கிக் கொண்டு போச்சுதாம்!!! ; என்று.

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனத்திற்கு எதிராக சிறீலங்கா இஸ்ரேல் மொசாட்டுடன் இணைந்து செயற்பட்டவை மறந்திட்டுது போல. ஈழப் போராளிகள் பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த போதும்.. இன்றைய காலக் கட்டத்தில் இப்படியான அறிக்கைகள் வெளிவர நாம் பல்வேறு தரப்போடும் சரியான தொடர்புகளை உறவுகளை வளர்த்துக் கொள்ளாமையும் அவற்றை பலப்படுத்தி நிற்காமையும் ஒரு காரணம்.

பலஸ்தீனர்களுக்கு எமது நிலைப்பாட்டை விளக்க வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசின் போர்க்குற்றத்தை சரி வர சொல்ல வேண்டிய பொறுப்பு எமது. பலஸ்தீனர்களுக்கு மட்டுமல்ல... முழு உலகிற்கும் நாம் தெளிவாக இதை செய்ய வேண்டும். பலஸ்தீனத்தின் அறிக்கையை எமது அணுமுறைகளுக்கு வந்திருக்கும் ஆபத்தின் சமிக்ஞையாக கொள்ள வேண்டுமே அன்றி அவர்களை திட்டுவதால் எமக்கு எந்த நன்மையும் வரப்போறதில்லை.

நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவை பலஸ்தீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எம்மிடமுள்ள போர்குற்ற ஆதாரங்களை அவர்களுக்கு அளித்து விளக்க வேண்டும். இதனை உலகம் பூரா இராஜதந்திர மட்டத்தில் சந்திப்புக்களை நடத்தி செய்ய வேண்டும். அதைவிடுத்து நிலவை பார்த்து நாய் குரைப்பது போல குரைத்துக் கொண்டிருந்து எந்தப் பயனும் எமக்கு கிடைக்காது.

சிங்களவன்.. பல வழிகளிலும் இந்த போர் குற்றவிசாரணையில் இருந்து தப்ப முயற்சிக்கிறான். ஆனால் அதற்கு எதிரான எமது செயற்பாடுகள் மிகப் பலவீனமான கவலைக்குரிய நிலையில் இருக்கிறது. சிங்களவன் எம்மாலேயே தப்ப வைக்கப்பட்டிடுவானோ என்று தோன்றும் அளவிற்கு நாம் பலவீனமான செயற்பாடுகளோடு இருப்பதையே இந்த அறிக்கை எமக்கு சொல்கிறது.

வெளி உலகத் தொடர்பில்இருந்தும் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்பது மிக ஆபத்தான ஒன்றாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த குரங்குகளை கேக்கனும் எந்த அரசாங்கம் அறிக்கை விட்டது என்று.

அதுகளே இரண்டா பிரிஞ்சு கிடக்குதுகள்.

கமாஸ் அரசா? அல்லது அபாஸ் அரசா அறிக்கை விட்டது.

இவ்வளவு முஸ்லீம் சகோதர நாடுகள் எல்லா உதவியும் செய்தும் வெல்லமால் தத்தளிக்கிறீர்கள். பிறகு சிறிலங்லாகாவில் தலை இட வேண்டாமா?

நல்லது வாழ்க.

மூஞ்சுறு தான் போக காணவில்லையாம் விளக்குமாறை காவி போன கதை தான்.

இதைத்தான் நாமும் புரிந்து கொள்ளணும்

எமக்குள் இருக்கும் பிரிவுகளும் இதேபோல் நாளை எம்மை தூற்றவும் எம்மை பெறுமதியற்றதாக்கவும் உதவும்.

தாங்கள் எழுதியதை வாசித்ததும் எனக்கு இது தான் உறைத்தது.

தங்களது கருத்துக்கு எதிரான வாதமல்ல. பயம் மட்டுமே.

இஸ்ரேல் செய்தது சரியானதுதான் என்று அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். ஆகவே தொடரட்டும் இஸ்ரேல் நடவடிக்கைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு போன்றவை பலஸ்தீன அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு எம்மிடமுள்ள போர்குற்ற ஆதாரங்களை அவர்களுக்கு அளித்து விளக்க வேண்டும்.

பலஸ்தீனரிடம் ஒரு சிறிலங்கா முஸ்லிம் போய் சலாம் அலைக்கும் என்று போட்டு என்ன பொய்யை சொன்னாலும் நம்புவார்கள் .....

அவர்களிடம் நாங்களோ அல்லது நாடுகடந்த அரசோ என்ன சொன்னாலும் எடுபடாது...

அமேரிக்கா,ஜக்கியநாடுகள் சபை என்றாலே இவர்களுக்கு பிடிக்காது அதுதான் அவர்களின் அறிக்கைக்கு எதிர் அறிக்கை விடுகிறார்கள்.....

அதாவது உலக முஸ்லிம் மையவாதம் சிந்தனை......

Edited by putthan

இந்தக் கால் இல்லாததுகளுக்கு, மானசீகமான ஆதரவு எம்மெல்லோரிடமும் கடந்த காலங்களில் இருந்தது! ... புலத்தில் கூட ... இவர்களுக்கு ஆதரவாக ... வீதிகளில் எம்மவர்களும் இறங்கினார்கள்!! ... இறுதியில் ...????????!!!!!!!!

இது அரசியல். இன்று பாலஸ்தீனம் அங்கீகாரத்தை வேண்டி நிற்கின்றது. அதற்கு அது சிங்களத்தை, ஒரு நாட்டை வேண்டி நிற்கிறது. எம்மிடம் அதற்கு இன்று ஒன்றும் தேவை இல்லை.

ஆனால், நாளை ஒரு நாடாக அது மலரும் பொழுது, பாலஸ்தீனம் எம்மை ஆதரிக்கும் அரசியலில் நாம் ஈடுபடல் வேண்டும்.

- Fayyad to request $5 billion to launch Palestinian state

http://www.haaretz.com/news/international/fayyad-to-request-5-billion-to-launch-palestinian-state-1.355757

- US public supports Palestine statehood. Israel is resorting to last-ditch efforts to prevent a Palestinian statehood declaration.

http://english.aljazeera.net/indepth/opinion/2011/04/20114137555564355.html

- Israel to lobby Canberra on Palestine

http://www.theaustralian.com.au/news/world/israel-to-lobby-canberra-on-palestine/story-e6frg6so-1226038083885

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே யாழில் இதை ஆட்சேபித்து ஒரு பயனும் இல்லை. சில வேலைகள் மூலம் எங்கள் அதிருப்தியைக் காட்ட வேணும். நான் செய்யப் போறது இது தான்: அடுத்த முறை பஸ் தரிப்பிடத்தில இஸ்ரேலுக்கெதிராக கையெழுத்து வேட்டை நடத்துற பலஸ்தீனர் என்னிடம் கையொப்பம் கேட்டு வந்தால் "இது உங்கள் உள்நாட்டுப் பிரச்சினை, நாங்கள் இதில் தலையிட முடியாது" என்று சொல்லி அனுப்பி விடப் போகிறேன். வேணுமெண்டால் மகிந்தவிண்ட விலாசத்தைக் கொடுத்து அங்க போய் கையொப்பம் வாங்கு என்று சொல்லவும் விருப்பம். எல்லாத்தையும் விட செருப்பைக் கழட்டி நாலு சாத்துச் சாத்தத் தான் விருப்பம். இந்த நாட்டில உள்ள பிடிச்சுப் போட்டு விடுவான் என்ற காரணத்தால மட்டும் அதைச் செய்யப் போறதில்லை! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.