Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய ஈழத் தமிழர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன் அறிவிப்பு: இப் பதிவு பிடிக்காதவர்கள் தயவு செய்து இதனைப் படிக்க வேண்டாம். ஒரு ஈழத் தமிழனாக இருந்து, மனம் விட்டு மன்னிப்புக் கேட்டாலும் இந்தச் செயல்களை ஆற்றுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் நான் எங்கள் இழி நிலைகளைப் பதிவாக்க முனைகின்றேன். ஈழத் தமிழன் எனும் அடையாளத்துடன் இப் பதிவினை எழுதுவதால், தமிழக உள்ளங்களிடமிருந்து எதிர்ப்பலைகள் கிளம்பலாம், ஆனாலும் பதிவில் நான் என் கருத்துக்கள் எதனையும் முன் வைக்காது, எங்கள் மக்களின் அனுபவ ரீதியான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கவுள்ளேன்!

உறவுகளே, இப் பதிவில் வரும் விடயங்கள் உங்களைக் காயப்படுத்தலாம், இவை தமிழக உறவுகள் மத்தியில் பல முரண்பாடுகளை உருவாக்கலாம். ஆனாலும் இப் பதிவில் வரும் விடயங்கள் உங்கள் மன எண்ணங்களைச் சிதைப்பதற்கானவை அல்ல. உங்களுடன் எங்களின் இழிவான குணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே! ஈழத் தமிழர்களுக்கு இப்படியும் ஒரு குணம் இருக்கிறது என்பதனை அல்லது ஈழத் தமிழர்களின் மறுபக்கத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே இப் பதிவு.

ஈழத் தமிழர்கள் எனும் இனம் புவியியலாளர்களின் கூற்றுப் படி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குமரிக் கண்டத்தில் ஏற்பட்ட பாரிய சுனாமித் தாக்கத்தின் காரணமாக இலங்கையில் குடியேறியவர்கள் அல்லது இலங்கைக்கு இடம் பெயர்ந்தவர்கள் என்பதனை யாரும் மறுத்துரைக்கவோ இல்லை மறக்கவோ முடியாது. எங்களின் எச்சங்கள், எங்களின் மரபணுக்கள் யாவும் தென் இந்தியாவிலிருந்தே தோற்றம் பெற்றிருந்தன.(இதனை விளக்கமாக ஈழத்தில் சாதியம்- பிடிக்காதவர்கள் தயவு செய்து படிக்க வேண்டாம் எனும் பதிவில் கூறியிருக்கிறேன்)

இலங்கையில் வாழுகின்ற தமிழர் எனும் இனத்தினுள்

*ஈழத்தில் ஆரம்ப காலம் தொட்டு பூர்வீகமாக வாழும் தமிழர்கள்- இந்தியாவிலிருந்து முதன் முதலாக குடியேறியவர்கள்(தற்போது இலங்கையில் வாழும் தமிழர்கள்- வட கிழக்கு பூர்வீகத் தமிழர்கள்)

*மலையகத் தமிழர்கள்: ஆயிரத்து எண்ணூறுகளின் பிற் பகுதியில் இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்களால் அழைத்து வரப் பட்டவர்களை மலையக மக்கள் என்று கூறுவார்கள். இவர்களே கொழும்புத் தமிழர் எனவும் அழைக்கப்படுகின்றார்கள்.

*தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற இஸ்லாமியர்களும் உள்ளடங்குவார்கள்.

எங்களின் கடந்த காலங்களை, எங்களுக்கே உரிய தனித்துவமான எச்சங்களை, வேர்களினை, மூதாதையர்களை(முன்னோர்களை) மறந்து விட்டு, இலங்கைத் தமிழர்களில் பெரும் பாலானவர்கள் தாம் ஏதோ வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்கள் போலப் பாசாங்கு செய்வது வருந்தத்தக்க விடயமே. ’’தமிழக உறவுகளே, உங்களோடு சொந்தம் கொண்டாடும் போதும், பழகும் போதும், இந்த விடயங்களை மறைத்துப் பழக என் மனது இடம் கொடுக்க மறுக்கிறது.

இன்று கருணாநிதி எங்களைக் காப்பாற்றத் தவறி விட்டார், சோனிய எங்களுக்கு சொர்க்கத்தை திறந்து விட மறுத்து விட்டார் என சோகராகம் பாடும் நாங்கள் கடந்த காலங்களில் தமிழக உறவுகள் மீதான எங்களின் பார்வைகளினை மறத்தல் அல்லது மறந்து வாழ்தல் எவ் வகையில் நியாயமாகும்?

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளைத்(1987) தொடர்ந்து தான் இலங்கையின் விடயத்தில் இந்தியா துரோகம் இழைக்கத் தொடங்கியது, இந்தியா எங்களைக் காப்பாற்றவில்லையே, மத்திய அரசு எங்களை மதி கெட்டவர்களாக்கி விட்டது என்று பல்லவி பாடும் நாங்கள் இந்தக் காலங்களிற்கு முன்பதாக இழைத்த குற்றங்களைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்க வேண்டும்,

*ஆயிரத்து எண்ணூறுகளின் பின்னர்; இந்தியாவிலிருந்து இலங்கையின் மலை நாட்டிற்கு தேயிலைப் பயிர் செய்கைக்காக கொண்டு வரப்பட்ட மக்களை எவ்வாறு எங்களது ஆதிக்கவாதம் செருக்கு குணம் கொண்ட தமிழர்கள் இன்று வரை அழைக்கிறார்கள் தெரியுமா?

‘தோட்டக்காட்டார் அல்லது தோட்டக்காட்டான்.

இவ் இடத்தில் ஒரு கணம் நிற்க. இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள். ஓ, நாமெல்லோரும் வரலாறுகளை மறந்து எமக்குப் பின்னே வந்த மலையக உறவுகளை எள்ளி நகை செய்கிறோம், கிண்டலடிக்கிறோம். ஏன் எங்கள் ஊர்களுக்கு அவர்கள் வந்தால் சரி நிகர் சமனாக உரையாட மறுக்கிறோம், எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை ஏனையவரை அடிமை செய்யும் குணத்தின் அடையாளங்களா?

*இந்திய மத்திய அரசு தமிழர்கள் விடயத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழுகளில் தவறிழைத்தது என்பது நிஜம். அது உண்மை, ஆனால் இந்தியா இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறும் நாங்கள்

காலாதி காலமாக சொல்லும் பழமொழி என்ன தெரியுமா?

‘’வாடைக் காற்றினை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக் கூடாது’

(இலங்கைக்கு வட திசையில் எந்த நாட்டவர் இருக்கிறார் என்பதன் அடிப்படையில் இதனைப் பார்த்தால் நிறையப் பொருள் விளங்கும்)

இந்தப் மொழிக் கிண்டலோடு தானே எம்மூர்களிற்கு வரும் சகோதர்களோடு, எங்களின் சுயத்தை மறந்தவர்களாகப் பழகியிருக்கிறோம்.

எம் வம்சத்தினை, எங்களின் வேர்க் கொடிகளை, தொப்புள் கொடியினரை இழிழு படுத்தும் நாங்கள் எப்படி தமிழகமே எங்களைக் காப்பாற்று எனக் கூக்குரலிட முடியும்?

ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தியேழாம் ஆண்டினைத் தொடர்ந்து எமக்கிருந்த இந்திய ஆதரவு சந்தர்ப்ப சூழ் நிலைகளால், அதுவும், இந்திய இராணுவம் இலங்கையில் செய்த சதி, இந்திய மத்திய அரசினது நடவடிக்கைகள், இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா முதலியோரது நடவடிக்கைகளால் சீர் குலைந்தது என்பதை இவ் இடத்தில் நிலை நிறுத்தி ஒரு வினாவினை முன் வைக்கிறேன்.

அந்தக் காலம் முதல் இந்திய அரசிடம் பகிரங்கமாக அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரும் வரை(2002ம் ஆண்டு வரை) ‘இந்தியாவின் துணையின்றி தனித்தே வெல்லுவோம்’ எனப் பல்லவி பாடிய நாங்கள் வன்னிப் பகுதி மீதான இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்ட பின்னர் இந்தியா இன்றி ஈழத்தில் ஒரு துரும்பினையும் அசைக்க முடியாது எனக் கூறி கெஞ்சி, மன்றாடியது எவ் வகையில் நியாயமாகும்?

கலைஞர் தங்களைக் காப்பாற்றவில்லையே, கருணாநிதி தமிழர்களுக்குத் துரோகம் செய்து விட்டார் எனக் கூறும் நாமெல்லோரும்; இருபத்திரண்டு தமிழ் மந்திரிகளைப் பாராளுமன்றம் அனுப்பியவர்கள் தானே?

அந்த இருபத்திரண்டு பேரில் யாராவது ஒருவராவது மலையகத் தமிழர்களுக்காக மனம் திறது சுய நலமற்றுப் பேசினார்கள் என்று நிரூபிக்க முடியுமா? ஆனால் ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை தன்னால் இயன்ற வரை குரல் கொடுக்கும் மனோ கணேசனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஈழ யுத்தம் தொடங்க முன்பதாக மலையக மக்களின் சம்பள உயர்வு கோரிய போராட்டங்கள், தொழிற்சங்கப் போராட்டங்கள், 1977ம் ஆண்டு போராட்டம் முதலிய பல சம்பவங்கள் இடம் பெறுகையில் ஒரே நாட்டினுள் இருந்தும் கை கட்டி வாய் பொத்தி நின்று வேடிக்கை பார்த்து விட்டு,

வன்னியில் எங்கள் தலைக்கு மேல் அவலம் வந்த வேளையில் மட்டும் எந்த முகத்தைக் கொண்டு ‘கலைஞர் ஐயா காப்பாற்றுங்கோ’ எனக் கேட்க மனம் வந்தது?

சமாதான காலத்தில் ஈழத்திற்கு தமிழகத்திலிருந்து வியாபார நோக்கோடு வந்திருந்த (2002ம் ஆண்டின் பின்னர்) ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை முதலிய பல தமிழக ஊர்களைச் சேர்ந்த புடவை வியாபாரிகளை ‘இவர்கள் இந்திய உளவுத் துறையான ‘ராவின்(Raw) உளவாளிகள்’ எனக் கூறி பட்டப் பகலில் வீதியில் வைத்து அடித்து விரட்டிய நாங்கள் எந்த முகத்தினை வைத்துக் கொண்டு ‘தமிழகமே எங்களை மன்னித்து, மோட்சம் அளி’ எனக் கதற முடியும்?

மேற் கூறப்பட்டுள்ள என் மனக் கருத்துக்களோடும், வினாக்களோடும் இந்த விவாத மேடை உங்களுக்காய் விரிகிறது.

இப் பதிவு தொடர்பான உங்களது கருத்துக்களை, விவாதங்களை, எதிர்க் கருத்துக்களை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

டிஸ்கி: ஒரே நாட்டினுள் பல் வேறு பிரிவுகளாகப் பிரிந்து, வேற்றுமைகளோடு வாழும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நல்ல செயல் என்ன தெரியுமா? தமிழனுக்கு என்று ஒரு தனி நாடு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் அந்தத் தனி நாட்டிலிருந்தே பல சிறிய நாடுகள் வேற்றுமையின் காரணமாக சுதந்திரம் வேண்டிப் போராடத் தொடங்கியிருக்கும். பின்னர் குட்டிக் குட்டித் தமிழ்த் தேசங்கள் தோன்றியிருக்கும். யாருடைய நல்ல செயலோ தெரியவில்லை இப்படியான ஒரு நிலமை தோன்றவில்லை.

‘’தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு’’ எனச் சொல்லியவர் இந் நேரம் இருந்திருந்தால்.............???

(மிகுதியை நீங்கள் விரும்பியபடி முடித்துக் கொள்ளுங்கள்)

http://tamilnattu.blogspot.com/2011/04/blog-post_1619.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கருத்துக்களை.....

இறந்து விடாத படி, நீரூற்றி வளர்ப்பதற்கென்றே... ஒரு கூட்டம் உள்ளது.

என்று... ஈழத் தமிழனும், தமிழகத் தமிழனும் இணைய விரும்புகின்றானோ....

அன்றே... இக்கதைகளும், கொடிகட்டிப் பறக்கும்.

1940ம் ஆண்டுக் கதைகளை கிளறி , ருசி பார்ப்பதை விட...

மூன்றாம், தலை முறையை ஒற்றுமைப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியான கருத்துக்களை.....

இறந்து விடாத படி, நீரூற்றி வளர்ப்பதற்கென்றே... ஒரு கூட்டம் உள்ளது.

என்று... ஈழத் தமிழனும், தமிழகத் தமிழனும் இணைய விரும்புகின்றானோ....

அன்றே... இக்கதைகளும், கொடிகட்டிப் பறக்கும்.

1940ம் ஆண்டுக் கதைகளை கிளறி , ருசி பார்ப்பதை விட...

மூன்றாம், தலை முறையை ஒற்றுமைப் படுத்த முயற்சிக்க வேண்டும்.

பெருமளவிலான தமிழக உறவுகள் ராஜபக்சாவை போர்குற்றவாளியாக தண்டிப்பதில் மும்முரமாக நின்று உழைக்கும் இக்காலகட்டத்தில், ஏன் இப்படியான் பதிவுகள் மூலம் பழையதை கிண்டுகிறார்கள் என்றுதான் புரியவில்லை, இதை ஒதுக்கிவிட்டு போக இது சாதாரனகட்டுரை அல்ல ,இன்றையதேதியில் தமிழக உறவுகள் அதிகம் இருக்கும்,படிக்கும்,வலைபூக்களை வைத்திருக்கும் தமிழ்மணத்தின் மணிமகுடமாக அலங்கரித்து நிற்கிறது, இதற்கான எதிர்வினையை நாம் நிச்சயம் காட்ட வேண்டும் என்பதற்காகவே இங்கு இணைத்தேன்.

இதே இந்தியாவிலிருந்து கையில் அகப்பட்ட பொருள்களோடு வியாபார நோக்கத்திற்காகத் தானே ஈழத்திற்கு எங்கள் மூதாதையர்கள் வந்து குடியேறி, இலங்கைத் தமிழர் எனும் அடையாளத்தை எம்மிடத்தே தந்து விட்டுச் சென்றார்கள்.

கட்டுரை எழுதியவர் ,ஈழத்தமிழன் வந்து ஏறு குடிகள், என்ற கருத்தை வலியுறுத்துக்கிறார் போல கிடக்குது...அ

த்துடன் அவர்களுக்கு உரிமை கேட்க தகுதியில்லை என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.

தமிழும்,சைவமும் ஆயுதம் மூலம் வடக்கு கிழக்கு பூர்வீக குடிகளுக்கு புகுத்தப்பட்டது என்பதுதான் ..உண்மை..வியாபார நோக்குடன் வந்தவர்கள் ஒரு பிராந்த்தியத்தை ஆக்கிரமிக்கமுடியாது என்பது வரலாறு.

கட்டுரையாளர் தனிப்பட்ட கோபம்,அல்லது வேறு ஒரு காரணத்திற்காக இதை எழுதியுள்ளார்.

எங்கள் ஊர்களிற்கு வரும் மலைய சகோதர்களில் ஒரு சிலரை குறத்தி, குறவன் எனப் பேசிக் கலைக்கிறோம். இது எங்களின் ஆதிக்க வாதமா? இல்லை

கிளிநோச்சியில் 77,83,இனகலவரங்களுக்கு பின்பு வந்த மலையக மக்களை வரவேற்றதும் அதே ...குற்றம் சாட்டபட்ட தமிழந்தான் என்பதை கட்டுரையாளர் குறிப்பிடாதமக்கு என்ன காரணமோ?

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் (கென்பாம்) போன்ற இடங்களில் மலையக தமிழர்கள் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள்.இதனை டேவிட் ஐயா போன்றவர்கள் முன்னின்று செய்தார்கள்.

தமிழ் நாட்டு மக்களையும் ஈழத்தமிழரையும் பிரிப்பதில் இந்திய உளவுப்படை சாதுரியாமாக வேலை செய்கிறது.இதன் பிரதிபலிப்பு தான் இப்படியான கட்டுரைகள்.

அதிகம் அலட்ட விரும்பவில்லை;



  • இந்தியர்களே இந்தியர்களை மதிப்பதில்லை

  • யாழ்ப்பாணத்தவர் தமக்குள்ளேயே சாதீயப் பிரிவுகளை அமைத்து தமக்குள்ளேயே மனிதர்களைத் தாழ்த்தியும் உயர்த்தியும் வைத்திருந்தார்கள்.

  • ஈழத்தில் இல்லாத பெருஞ்செல்வந்தர்கள் தமிழகத்தில் உள்ளார்கள்.அதிக எண்ணிக்கையிலும் உள்ளார்கள். கல்விமான்களும், கலைஞ்ஞர்களும், சமய குரவர்களும் உள்ளார்கள்.இது ஈழத்துக் குழந்தைகளுக்கும் தெரியும்.

  • "தோட்டக் காட்டார்" என்னும் பதம் அவர்கள் பாமரர்களாக இருந்தமையினால் வந்திருக்கலாம். தமிழகத்தில் இருந்து 18ம் நூற்றாண்டில் வந்தவர்கள் என்பதனால் உருவாகவில்லை.

  • ஈழத்தவர் தமிழக மண்ணை உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்கின்றார்கள்.(அன்றும் இன்றும் என்றும்)

  • "தோட்டக் காட்டார் " என்னும் பதம் இன்று வளக்கொழிந்து போய் விட்டது. இளம் சந்ததியைச் சேர்ந்தவர்கள் பாவிப்பது அரிது.

  • இந்த மலையகத் தமிழர்கள் வன்னி மற்றும் கிழக்கு மாவட்டங்களில் குடியேறியுள்ளார்கள். இந்த மண் ஏனைய மலையகத்தமிழர்களையும் என்றும் அன்போடு வரவேற்கும்.


  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=vjS3ZG5B1Es

என்னடா இவ்வளவு நாளா ஒன்னும் நடக்கிலயேன்னு பார்த்தேன் நடத்திட்டாங்க :(

இவர்களது சூழ்நிலை அங்கு அப்படி என்று நினைக்கின்றேன்.இவர்களுக்கு ஒன்றில் புலியை கடித்துக்குதறுவது அல்லது இந்தியாவுக்கு சிஞ்சக் அடிப்பது.இவரது வலைப்பூவை பரர்த்தேன் நடுநிலமை என்ற பெயரில் புலியில் அவ்வளவு வெறி.இவர்களை பெரிய மனிதர்கள ஆக்கினால் நாங்கள் தான் மடையர்கள்.

மே 19 இன் பின் தமிழ்நாட்டில் தோன்றியுள்ள ஈழத்தமிழர் ஆதரவை (முக்கியமாக வலைத் தளங்களில்) குறிவைத்து மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ள ஒரு நஞ்சுப் பதிவு, நாங்கள் உங்களுக்கு எவ்வளவு கொடுமைகள் செய்திருக்கிறோம். பிறகேன் நீ எங்களுக்கு ஆதரவளிக்கிறாய்? என அழகாக வாழைப் பழத்தில் ஊசி ஏற்றியுள்ளார் பதிவர்.

ஈழத்து அரசியல்வாதிகள் மலையகத் தமிழரின் உரிமைகளுக்காக போராடவில்லை என்பதை கூறும் பதிவர், அவர்கள் ஈழத்து தமிழர்களின் விடுதலைக்கும் உரிய முறையில் போராடாதபடியால்தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்ததென்பதை கெட்டித்தனமாக மறைத்து விட்டார்.

இப்படித்தான் புலத்தில் கருணா பிரிவின் போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாற்றுக்கருத்தாளர்கள் கிழக்கு மக்களின் மனதில் விஷத்தை விதைக்க முயன்றார்கள் ஆனால் எடுபடவில்லை. அப்பொழுதுதான் தங்களை புத்திஜீவிகளாகக் காட்டிக் கொள்பவர்களின் கோரமுகத்தை கண்டு கொண்டேன்.

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.