Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

எழுதுப் பிழைகளைச் சுட்டிக்காட்டிய செல்வமுத்து ஆசிரியருக்கு நன்றிகள்.அத்தோடு இந்த ழ,ள,ல எங்கெங்கே பாவிக்க வேணும் என்னும் விளக்கத்தையும் எங்காவது எழுதுவீர்களா,உபயோகமாக இருக்கும்.

நன்றி.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply

அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ... நான் எந்தப்பக்கம் என்று சொல்ல முதலே பிரிச்சுப்போட்டியல் முடிஞ்சா என்னை நன்மை என்ற பக்கம் போடுங்கோ

ரசிகை மன்னிக்கனும். இடையில் குழப்பிறதா எண்ணக் கூடாது. நமக்கு பாடம் சம்பந்தமா வேலைகள் இருக்கு. -நீங்கள் இட்ட அணியிலேயே வாதாடுறம். அணித்தலைவர் பதவி பொறுப்பானது. அதில் இருந்து நீங்கி விடுங்களேன். தாழ்மையான வேண்டுகோள்..! :P :idea:

நன்மை அணியினருக்கு.

அடுத்ததாக உங்கள் அணியில் சுண்டல் வாதாட வேண்டும் அவருக்கு தனிமடல் போட்டு நீங்கள் அடுத்தாக வாதாட வேண்டும் என்று சொன்னேன். அவர் தான் விடுமுறைக்கு செல்வதால் தன்னால் வாதாட முடியாது தன்னுடைய பெயரை நீக்கிவிடுமாறு கூறியுள்ளார். ஆகவே அடுத்தது யார் வாதாட போகிறீர்கள் என அறியத்தரவும்.

நன்றி

எல்லோருக்கும் வணக்கம்

சுட்டிகேர்ள் தனக்கு நிறைய வேலை இருப்பதால் ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார். அவர் தனது கருத்தை நாளை வைப்பதாக கூறியுள்ளார். அந்த அணியி; இன்று யாராவது வைக்க விரும்பினால் வைக்கலாம் இல்லாவிட்டால் நாளை சுட்டி வைக்கும் வரையும் பொறுமை காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

வணக்கம்

நான் என்னப்பா செய்ய எனக்கு பள்ளி வேற துடங்கி விட்டது. சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறியுள்ளார். இன்று வைக்காவிட்டால் அருவி நீங்கள் இன்று இரவு உங்கள் கருத்தை வைக்கவும். அத்துடன் நன்மை அணியில் சோபனாக்கு மடல் போட்டு 3 நாள் ஆச்சு பதில் இல்லை ஆகவே சோபனாவுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுக்கவும். அவர் கருத்து வைக்காவிட்டால் அடுத்த ஆள் கருத்து வைக்கவும். என்னை பார்த்துக்கொண்டு நிக்க வேண்டாம். சரியா??

நன்றி வியாசன்.

ம்ம் சுட்டிகேர்ள் இன்று வைப்பதாக கூறி இருந்தார் அவரைக் காணவில்லை. சரி அவர் பின்பு வைக்கட்டும்.

அப்படியே ஆகட்டும் தமிழினி. அப்புறம் சோபனா வாற மாதிரி தெரியவில்லை ஆகவே அடுத்ததாக நன்மை அணியில் அஜீவன் அண்ணா தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சின்னப்புக்கு மடல் போட்டேன் பதிலைக் காணவில்லை ஆகவே அடுத்த ஆள் கருத்தை வைக்கவும்.

ஆகா சின்னப்பு எஸ்கேப்பா? சரி எனது கருத்தை நாளை முன் வைக்கின்றேன். அதற்கிடையே சின்னப்பு வந்தால் அவர் தன்னுடைய கருத்தை முன்வைக்கலாம்.

வணக்கம் எல்லோருக்கும்.

ம்ம்ம் மதன் வேலைப்பளு காராணமாக நேற்று வைக்க முடியவில்லை இன்று இரவு வைப்பதாக கூறியுள்ளார். அதுவரை பொறுமை காப்பீர்

எங்கையப்பா இந்த மதன்???. இன்று இரவு வைப்பன் என்றார் ஆளுடை சத்தத்தையே காணலை. :roll: :roll:

எனக்கொரு சந்தேகம்

மூன்று நாட்களாக மதனைக் காணவில்லை. மாட்டுப் பொங்கலையும் முடித்துக்கொண்டு வந்து தன் கருத்தை அவர் வைப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவரைத் தொடர்ந்தும் காணவில்லை. ஆகையால் எதிரணியினர் யாராவது சதி செய்து அவரைக் கடத்தி விட்டரர்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது. எனவே பட்டிமன்றப் பொறுப்பாளர் இது விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மதனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லையெனில் வர்ணன்

  • தொடங்கியவர்

ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ.

சோ தூயவன் அடுத்ததாக நீங்கள் இன்று அல்லது நாளை கருத்து வைக்குறீர்களா? நன்மை அணிக்கு பிருந்தன் வரார் போல கிடக்கு எனக்கு மடல் போட்டு இருந்தார் தனக்கு கணனியில் பிரச்சினை என்று. சோ பிருந்தனுக்கா யாராவது வாதாட விருப்பமா? விருப்பம் என்றால் அறியத்தரவும்.

நன்றி

  • தொடங்கியவர்

அடுத்த பட்டி மண்றம் வைக்கிற யோசினை ஏதாவது இருக்கிறதா..??? நான் வரமாட்டனப்பா...!

நோஓஓஓஓஓஓஓஓஓ வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை.

ஏங்க பூனை குட்டிங்க... பிருந்தனுக்காக மற்ற சைட்டிலைபோய் வாதிடுங்களேன்...........இஙகாலை பூனை அங்காலை குருவி ..அங்காலை குருவி இங்காலை பூனை...விவாதாம் ஜோராயும் இருக்குமுங்க........... :lol::lol:

ஆகா பூனைக்குட்டி உங்கள் கருத்துக்கு நன்றி. ம்ம்ம்ம் எல்லாரும் கிணத்துக்கை விழுகினம் சோ நானும் விழப்போறன் என்று நிக்குறீங்கள் நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் விருப்பப்படி திங்களே கருத்து வையுங்கோ.

சோ தூயவன் அடுத்ததாக நீங்கள் இன்று அல்லது நாளை கருத்து வைக்குறீர்களா? நன்மை அணிக்கு பிருந்தன் வரார் போல கிடக்கு எனக்கு மடல் போட்டு இருந்தார் தனக்கு கணனியில் பிரச்சினை என்று. சோ பிருந்தனுக்கா யாராவது வாதாட விருப்பமா? விருப்பம் என்றால் அறியத்தரவும்.

நன்றி

ரசிகை...உங்களுக்கு நாங்கள் அணி மாறியதுதான் பிரச்சனையாகி விட்டது. சோ பிருந்தனுக்காக நாங்கள் வாதாடுகின்றோம்..! எங்கள் பெயரை இரு அணியில் இருந்தும் தூக்கிடுங்க..! காரணம் சில பேரின் கற்பனைகளுக்கு நாங்கள் இடமளிக்கத் தயாரில்லை..! எமக்கு இங்கு கருத்தாடுவதால் புகழ்ச்சியோ பெருமையோ மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டிய தேவையோ இல்லை. நம்மிடம் தேவையானதுகள் தேவையான அளவில் இருக்கிறது. எனவே பிரச்சனையை இலகுவாக தீர்க்க இதுதான் ஒரே வழி..! சிரமங்கள் அனைத்துக்கும் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதென்ன இங்க விளையாட்டு நடக்குதா?????? விடிய விடிய ஆதி விடிஞ்சாபிறகு திரிசா விஜய்க்கு என்ன முறை எண்டுற கணக்கா போகுது கதை.......ஒழுங்கா ஒண்டில உறுதியா இருக்கத் முடியல.......அடிக்கடி அங்கயும் இங்கயுமா மாறிறது.... திடீர் திடீரெண்டு முடிவுகள மாத்துறது.....தொடக்கத்தில எடுக்கவேண்டின முடிவுகள வழிநடுவில எடுத்து தன்னையும் குழப்பி மற்றாக்களயும் குழப்பி....எதுக்கு?????? இனிமேலாவது தொடக்கத்தில ஒன்ற தீர்மானிச்சு அதில உறுதியா இருங்க....... எடுத்த முடிவில உறுதியா இருக்கணும் எப்பவும்...... மற்றாக்கள் (என்னையும் சேத்து) ஆயிரம் சொல்லுவினம் இதெல்லாத்தையும் கணக்கிலெடுக்க கூடாது....எங்கட கருத்தில எங்கட முடிவில நாங்க உறுதியா இருக்கணும்.......... நீங்க எங்கட அணிசார்பா கடைசியா வாதாடுங்க.......... எங்கட அணிக்கு பலஞ்சேருங்கோ...... உங்கட திறமைல நம்பிக்கை இருக்கக்கா .............முதல்லயே என்ர வாழ்த்துக்கள்...... :wink: :P

நோஓஓஓஓஓஓஓஓஓ வேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை.

இதுக்கேன் அப்படி டென்சன் ஆகுறீங்க இதில இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்க, எல்லாம் நன்மைக்கே.

கற்றவற்றைக் கொண்டு அடுத்த முறை நல்லாச் செய்யுங்கோ.

1)விதிமுறைகளை இந்த அனுபவத்தை வச்சு அடுத்த முறை முன்னமே சொல்லிப் போடுங்கோ.

2)எல்லாருக்கும் ஒரே அளவு கோலைப் பாவியுங்கோ.

3)இன்னார் இவர் ஆகவே இவருக்கு இப்படி ஒரு விதி இன்னார் இவர் இவருக்கு இன்னொரு விதி எண்டு வெளிக்கிட்டியள் எண்டால் எல்லாம் குளம்பும்.

4)சொன்னா சொன்ன நேரப்படி நடவுங்கோ.

5)முடியாது எண்டா என்னால முடியாது எண்டு சொல்லுங்கோ.

அடுத்தமுறை நல்லாச் செய்வீங்க, செய்யுங்கோ.

  • தொடங்கியவர்

எல்லாருக்கும் வணக்கம்

இவ்வளவு நாளும் இப்பட்டிமன்றம் சிறப்புற நடக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள். பட்டிமன்றம் முடியும் நேரம் தயவு செய்து ஒருவரும் அணி மாற வேண்டாம் & மாற்றுவதாகவும் இல்லை. பிருந்தன் வராவிட்டால் அதற்கு ஏற்ற ஒழுங்கு செய்யப்படும் ஆகவே அதை பற்றி கவலை வேண்டாம். அவரவர் அவரவர் அணியில் இருக்கவும். ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன்

நன்றி

வணக்கம்

அதெப்பிடி ஒராள மட்டும் பொறுப்புள்ளவரெண்டு சொல்ல முடியும்????? இதன் மூலம் என்ன சொல்ல வாறீங்க????? எங்கட அணில இதுவரைக்கும் வாதாடின ஒருத்தருக்கும் பொறுப்பில்லையெண்டுறீங்களா??????கடைசி கருத்து வைக்கிறவரும் மற்றாக்கள மாதிரி தன்ர கருத்த வச்சா போதுமே.....அணித்தலைவர்தானே பிறகு எல்லாத்தையும் தொகுத்து தன்ர கருத்து வைப்பாார்????? அணித்தலைவரின் கடைசிக் கருத்துதானே முக்கியம்......அனுபவசாலியெண்டு எதவச்சு சொல்லுறீங்க?????? உணர்ச்சிவசப்பட்டு எழுதுறவையையெல்லாம் அனுபவசாலியெண்டா அனுபவசாலியளுக்கு வேற சொல்லெல்லோ தேடவேணும்?????? சரி அப்ப எங்கட அணில வாதாடின தல அண்ணன் அனுபவசாலியில்லயா முகத்தார் மாமா அனுபவசாலியில்லயா????? எத வச்சு அனுபவசாலியெண்டு தீர்மானிக்கிறீங்க???? பல தரப்பட்ட கருத்து வச்சதெண்டா அனுபவசாலியாகலாமோ???????? நான்கூடத்தான் பலதரப்பட்ட கருத்து வச்சன்?????? நானென்ன அனுபவசாலியோ?????? வேடிக்கையா இருக்கண்ணா.......சரி நீங்க அணித்தலைவரெண்டுற முறைல சொல்லுங்கோ அணித்தலைவரின்ர சொல்லக் கேக்க வேண்டிய கடமை எங்களுக்கிருக்கு....அத மதிக்கிறன்.....அணிய கொண்டு நடத்தி வெற்றிய சந்திக்கவேண்டிய பொறுப்பிருக்கு உங்களுக்கண்ணா....அதுக்கு நான் ஒத்துழைப்பத் தரத்தான் வேணும்......மற்றாக்ககெல்லாம் ஒழுங்கு மாறேக்க பேசாம இருந்த தலைவர் பூனைக்குட்டி மாறேக்க மட்டும் ஏன்.....????????? அதெல்லாம் எதுகஇகெனக்கு திங்கள் என்ர கருத்த வைக்கிறன் இல்லாட்டி ஞாயிறு அதுவரைக்கும் பொறுத்துக்கோங்கையாமாரே........

 

வணக்கம் பூனைக்குட்டி அவர்களே! களத்திலே எவரையும் குறைத்து மதிப்பிடுவது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் அல்லது இயல்பில் திறமைசாலிகளாகவே இருப்பார்கள். ஆகவே.. ஒன்றை வைத்து ஒருவரை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும், ஒருவரின் சில இயல்புகளை வைத்து இவரால் இதைச் செய்ய முடியும் என ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும். அந்த தீர்மானம் சிலசமயம் பிழையாகலாம். எனினும் ஒரு நம்பிக்கை. அவளவுதான்.

யாழ் பழைய கருத்து களத்தில் இருந்து இளைஞன், குருவிகள் போன்றவர்களின் கருத்துகளுடன் வாசிப்பு பழக்கம் உள்ளவன் என்ற ரீதியிலே, அவருடைய விவாதத் திறனில் ஒரு நம்பிக்கை எனக்குள் உண்டு. அத்துடன் கவிதை, அறிவியல் கட்டுரைகள் என அவர் எழுத்துவன்மையிலும் நம்பிக்கை உண்டு.

நீங்கள் இதுவரை 525 கருத்தகளை முன் வைத்துள்ளீர்கள். ஆனால் தங்களது கருத்துகளை ஒன்றாக திரட்டியபோது.. 473 கருத்துகளை வாசிக்க முடிந்தது. அத்தனை கருத்துகளிலும்.. உங்களுடைய எந்தவொரு சொந்த ஆக்கமும் இல்லை. புதிய தலைப்பிலே தாங்கள் எந்தவொரு கருத்தையுமே எழுதவுமில்லை.. அதற்காக பட்டிமன்றத்தில் கருத்து வைக்கும் திறமை இல்லையோ என தாங்கள் கேட்கலாம். அது நியாயமானதே!

தங்களது திறமையையும், ஆர்வத்தையும், தன்னம்பிக்கையையும் வரவேற்கிறேன்.

ஆனாலும், என்னைப் பொறுத்தளவில், குருவிகளின் எழுத்துகள் என்னுள் ஏற்படுத்திய நம்பிக்கையை, தங்களது எழுத்துகள் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் தாங்கள் கருத்தாட வந்த காலம் குறைவாகவும் இருக்கலாம்.

மற்றும்படி, தங்களை உசாதீனப்படுத்தவோ அல்லது புண்படுத்தும் நோக்கிலோ நான் செயற்படவில்லை என்பதை பணிவன்புடன் தங்களுக்கு கூறுகிறேன்.

தாங்கள் தங்களது கருத்தை திங்கள் கிழமைக்கிடையில் பதிவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.

அடுத்ததாக தூயவன் கருத்தை முன்வைத்தால், அதற்கு பின் வரும் முறையில் தங்களுடைய கருத்தை பதியுங்கள்.

வணக்கம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் எழுதியது:

நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்க விரும்புகின்றேன். அதற்கு குருவிகள் ஒத்துழைப்பாரா?

மேற்கோள் விடயத்தில் என்னையும் புூனைக்குட்டி காட்டியமைக்காக ஒன்று சொல்லவிரும்புகின்றேன். நான் குருவிகளுக்கு முன் வாதத்தை வைக்க போகின்றேன் என்று சொன்னதற்கு எமது அணித் தலைவர் வேண்டுகோள் விடுப்பதாகச் சொன்னப்பட்டதால் தான். எனவே அவரின் விருப்பத்திற்காகத் தான் நான் குருவிகளுக்கு முதல் வாதத்தை வைக்கவிரும்புவதாக நான் விருப்பப்படுவதாகக் காட்டிக் கொண்டேன்.

எனவே நான் எம் அணியின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து தான் மாற்றம் பெற்றேனே தவிர, எனது சுயவிருப்பில் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன இங்க விளையாட்டு நடக்குதா?????? விடிய விடிய ஆதி விடிஞ்சாபிறகு திரிசா விஜய்க்கு என்ன முறை எண்டுற கணக்கா போகுது கதை.......ஒழுங்கா ஒண்டில உறுதியா இருக்கத் முடியல.......அடிக்கடி அங்கயும் இங்கயுமா மாறிறது.... திடீர் திடீரெண்டு முடிவுகள மாத்துறது.....தொடக்கத்தில எடுக்கவேண்டின முடிவுகள வழிநடுவில எடுத்து தன்னையும் குழப்பி மற்றாக்களயும் குழப்பி....எதுக்கு?????? இனிமேலாவது தொடக்கத்தில ஒன்ற தீர்மானிச்சு அதில உறுதியா இருங்க....... எடுத்த முடிவில உறுதியா இருக்கணும் எப்பவும்...... மற்றாக்கள் (என்னையும் சேத்து) ஆயிரம் சொல்லுவினம் இதெல்லாத்தையும் கணக்கிலெடுக்க கூடாது....எங்கட கருத்தில எங்கட முடிவில நாங்க உறுதியா இருக்கணும்.......... நீங்க எங்கட அணிசார்பா கடைசியா வாதாடுங்க.......... எங்கட அணிக்கு பலஞ்சேருங்கோ...... உங்கட திறமைல நம்பிக்கை இருக்கக்கா .............முதல்லயே என்ர வாழ்த்துக்கள்......  :wink:  :P

எனக்கு ஒன்று மட்டும் விளங்குகின்றது. குருவிகளும், புூனைக்குட்டியும் அண்ணன், தங்கையாக முற்பிறப்பிலோ, அல்லது இப்போவோ இருக்கவேண்டும். :wink: :wink:

அது தான் குருவிகள் செய்வதைப் போல தானும் செய்யவேண்டும் என்றும், அல்லது வீட்டில் நடக்கும் இருவருக்கும் இடையில் நடக்கும் சண்டை போல எப்பவுமே முட்டிக் கொள்கின்றனர். :lol:

  • தொடங்கியவர்

மற்றவர்கள் போல் சிரமம் தராது. கேட்டவுடன் கருத்து வைத்தமைக்கு நன்றி தூயவன்.

அழகாக உங்கள் கருத்தை வைத்துள்ளீர்காள் வாழ்த்துக்கள்.

அட விடுங்க- பூனைக்குட்டிக்கு தெரிந்தது - ஒன்லி விதண்டாவாதம்தான் - அவரை போய்- சட்டென்று- வாதத்தை வையுங்க என்று சொன்னால்- பாவம் அந்த குழந்தை என்ன செய்யும்? :lol:

தனக்கு தெரிந்ததை தானே முதலில் எடுத்து விடும்! 8)

பாராட்டுக்கள் தூயவன்!

பட்டிமன்றத்தில வாதிட நானும் வாறேன் - என்று பெயரை கொடுத்தீங்க- சொன்னமாதிரியே - உரிய நேரத்தில்-உங்கள் வாதத்தை வைத்தீங்க! - அது அழகு!

நடுவர்கள்-ஏற்பாட்டாளர்கள்- அணிதலைவர்கள்- மற்ற எல்லாருக்கும்- உங்கள் பண்பை காட்டி இருக்கிறீர்கள்!

வாழ்த்துக்கள்! 8)

என்ரையப்பு இப்பிடி பிரச்சனைகள் இந்த பட்டி மன்றத்தாலை இருக்கிறதா...........சா...நல்ல காலம் நான் முன்னுக்கு கருத்தை வைச்சது இருந்தாலும் எங்கடை சனத்தின்ரை ஒற்றுமையை மற்ற நாட்டவன் ரீயுசன் எடுத்து படிச்சாலும் வராதப்பா.............

சரி தூயவன் இவ்வளவு கருத்து மோதலுக்குள்ளும் கலங்காமல் உங்களின் வாதத்தை திறம்பட வைச்சிருக்கிறீயள் வாழ்த்துக்கள்

38388861.congrats.gif38388861.congrats.gif38388861.congrats.gif38388861.congrats.gif

மேற்கோள்:

எங்கடை சனத்தின்ரை ஒற்றுமையை மற்ற நாட்டவன் ரீயுசன் எடுத்து படிச்சாலும் வராதப்பா.............

இப்பிடி பப்ளிக் ல உண்மையை போட்டு உடைக்கிறதா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி தூயவன் இவ்வளவு கருத்து மோதலுக்குள்ளும் கலங்காமல் உங்களின் வாதத்தை.................

முகத்தார்

இப்ப நான் எவ்வித சண்டைக்கும் போகமல் புத்தர் ஆகி விட்டேன் என்றா நினைக்கின்றீர்கள்? இது ஓயாத அலைகள்!!

எங்கே லக்கிலுக், வசம்பு, சுகுமாரு.............. ஒண்டிக்கொண்டி பார்த்து விடுகின்றேன் :evil: :evil:

தூயவன் உங்கள் வாதம் நன்றாக இருக்கின்றது.

தூயவா சூப்பரப்பு...! வாழ்த்துக்கள்.

அதிலும் கல்தடக்கினால் கல்லைத்தூக்கிப் போடாமல் கால்விரலை வெட்டச் சொன்னது இன்னும் சூப்பர் அப்பு..

பாப்பம் வசம்பண்ணா உதுக்கு என்ன கூத்து அடிகிறார் எண்று... :P :P :P

நல்ல தெளிவான கருத்தோட்டம்.. பாராட்டுக்கள் தூயவன்..! :P :idea:

என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால் தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... :lol::)

என்னங்க இது.... தங்களை தானே மெச்சிக்கிறாங்க... என்ன சொல்லிகிறேனுங்க என்றால்  தங்கட கட்சிகாரனை மெச்சிகாரான்களுங்க ....கண்ணாடியை பார்த்து உங்களை நீங்க மெச்சிக்குங்க.... :lol:  :)

இது நல்லால்ல சொல்லீட்டன்.... பின்விளைவுகள் மோசமாய் இருக்கும்... :evil: :evil: :evil:

இது நல்லால்ல சொல்லீட்டன்.... பின்விளைவுகள் மோசமாய் இருக்கும்... :evil: :evil: :evil:

:lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.