Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

எனது கருத்தினைப் பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்த

சோழியான்

இரசிகை

குருவிகள்

வர்ணன்

அஜிவன் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் அந்தமாதிரி வாதாடுகிறீர்கள். இந்த பட்டிமன்றத்தில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

எல்லாருக்கும் - வாழ்த்துக்கள் - ஒரு- சினேகிதி போல சொல்லுறீங்க - இனியவள்! 8) -நன்றி!

கருத்துக்களை முன்வைத்த வசம்பு குருவிகள் இருவருக்கும் பாராட்டுக்கள். அடுத்தது யார்?

வசம்பு அண்ணாவின் வாதத்தை இப்பதான் படித்து முடித்தேன் தர்க்க ரீதியாக நண்றாக வாதிட்டிருக்கிறார். நன்மை அணியின் கடைசியான நம்பிக்கையை ஊட்டினார் .... வாழ்த்துக்கள் வசம்பு அண்ணா....!

மேற்கோள்:-வசம்பு வாதத்திலிருந்து-

திறைமை இல்லாத எவருக்கும் என்னதான் உதவி கிடைத்தாலும் அவர்களால் சாதிக்க முடியாது. ஆனால் திறைமையான ஒருவருக்கு இணையம் போல் ஊக்குவிப்பான ஒரு ஊடகம் கிடைக்கும் போது தன் திறைமைகளை மேன்மேலும் வளர்த்துக் கொள்ள முடிகின்றது

உண்மைதான் - திறமை உள்ளவர்கள்தான் - மென்மேலும் அதை விருத்தி செய்ய பொருத்தமான வழிகளை - தேடுவார்கள்-தேர்வு செய்வார்கள்!

நீச்சல் தெரியாதவன் - குளிக்க கடலில் குதிப்பானா?

சுருக்கமான- விவரமான வாதம் - வாழ்த்துக்கள் - வசம்பு அவர்களே! 8)

இது கொஞ்சம் ஓவறா இல்லை... ???? வசம்பர் சொன்ன நல்லவிசயங்களை எல்லாம் விட்டிட்டு சொன்ன சொதப்பல் விசயத்தைப் பாராட்டுறதுதான்...!

திறமையானவனுக்கு புல்லுக்கூட ஆயுதம் ஒத்துக் கொள்கிறேன்..... அதை அவன் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படுத்தலாம்..... எமது புலம் பெயர்ந்த திறமையானவர் எல்லாம் இணையத்தை உயர்வதுக்காகப் பயன் படுத்துகிறார்கள்.... அவையாவன:---- கடன் அட்டை மோசடி, நண்பன் கணனியை செயலிளக்கச் செய்தல், மென்பொருள் திருட்டு, திரைப்பாடல்கள், திரைப்படத் திருட்டு, திருட்டு(பணம்கட்டாமல்) இணையத் தொலைபேசி அழைப்ப்பு.... இன்னும் பல....

இதைத்தவிரவோ இல்லை இவை எவையும் செய்யாத திறமையானவர் எவராவது இருந்தால் சொல்லுங்கப்பா..... :wink:

இளையோர் - என்பதை மானுடவியல், உடற்கூற்றியல் மற்றும் உளவியல்படி பகுத்துக் கொண்டால் 11 தொடக்கம் 18 வரை ரீன் ஏஜ் ( (Teenagers) இளையோர் என்றும் அதன் பின்னர் எல்லோரும் அடல் (Adult) - முதிர் மனிதர்கள் என்றும் வரையறுக்கப்படுகின்றனர். இந்த அடல்ற் பகுதிக்குள் சில பிரிவுகள் இருக்கின்றன அதில் இளம் அடல்ற் (Young Adult) வருவது 18 - 39 வயதிற்குள்..! இந்த வகைகளின் கீழ் முதலில் இளையோரை வகைப்படுத்திக் கொள்வோம். ( முளையத்தில் இருந்து இறப்பு நிலைவரை மனித நிலை மாற்றங்களை கற்றறிந்த வகையில் பல நூல்களில் குறிப்பிட்டதன் படி இத்தரவுகள் தரப்படுகிறது. தேவையென்றால் நடுவர் Human development and Psycology எனும் நூலைப் புரட்டினாலும் இந்தத் தரவுகளை ஆதாரத்தோடு நோக்கலாம்.)

நல்லதொரு விடயத்தை விபரித்ததுக்கு நண்றிகள் குருவிகள்.... நான் சொல்லாமல் விட்டிட்டமே எண்று கவலைப்பட்ட விடயம்....

மிகவும் ஆணித்தரமாக விளக்கமாக சொல்லும் உங்கள் வாதம் சொல்லும் புலம்பெயர்ந்து வாழும் 18 வயத்துக்கு உட்படோர் இணையத்தை சீளளிவுக்குத்தான் பயன் படுத்துகிறார்கள்.... என்பதை ஆணித்தரமாக விபரித்தமை சூப்பரப்பு......... :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

ஒருவாறு இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. நாமும் பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரது வாதங்களையும் படித்து நடுவர்களது தொகுப்புரைகளையும் வழங்கியிருந்தோம்.

இனி இப்பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரி இரசிகை முன்னரே அறிவித்தபடி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை முன்வைக்கவும்.

இருவரும் அவர்களது முடிவுரைகளை முன்வைத்த பின்னர் நாம் எமது முடிவுகளை அறியத்தருவோம்.

நன்றி.

குருவிகள் இன்னும் சில நல்ல தகவல்களை முன்வைத்துள்ளனர்.

வாழ்த்துக்கள்.........

விவாத களத்தில் இருப்பதால் இது போதும்.

நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்

உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) :P :P

வணக்கம்

ஒருவாறு இரு அணியினரதும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுவிட்டன. நாமும் பல சிரமங்களுக்கு மத்தியில் அனைவரது வாதங்களையும் படித்து நடுவர்களது தொகுப்புரைகளையும் வழங்கியிருந்தோம்.

இனி இப்பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் சகோதரி இரசிகை முன்னரே அறிவித்தபடி தீமை அணித்தலைவர் முதலிலும், நன்மை அணித்தலைவர் இறுதியாகவும் உங்கள் முடிவுரைகளை முன்வைக்கவும்.

இருவரும் அவர்களது முடிவுரைகளை முன்வைத்த பின்னர் நாம் எமது முடிவுகளை அறியத்தருவோம்.

நன்றி.

யப்பாடா.. ஒரு மாதிரி உலகபோர்- அதுதாங்க நம்ம பட்டிமன்றம் முடிவுக்கு வர போகுது எண்டு சொல்லுறீங்க! 8)

நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்

உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) :P :P

என்னை அபிப்பிராயத்தை பொறுத்தவரை - ரொம்ப நல்ல விசயம்தானே - வினித்- நன்றி 8)

யாழ்களம் - ஒரு இராட்சத - ஊடகம்- எவ்ளோ உறுப்பினர்கள்- எவ்ளோ கருத்தாளர்கள் - யாழ்- யாழ்தான் -! 8)

நெதர்லாண்ட் இல் இருக்கும் ஒரு இனையதளத்தில்

உங்கள் பட்டிமன்றம் பேச்சுகளை இனைத்துள்ளேன்

http://www.tamilstudenten.nl/forums/viewto...php?p=1848#1848

(அனுமதிப்பிர்கள் எனற நம்பிக்கையில் இனைத்துள்ளேன்) :P :P

ஆகா..சரி..ரசிகர் கூட்டம் மொய்க்கப்போகுது... :roll:

நடுவர்களே! எனது தொகுப்புரையை திங்கட் கிழமைக்கிடையில் பதிகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். :lol:

நல்ல விடயம் வினித்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம் வினித்

எங்கே ஒடிகொண்டிருக்கும் சோழியன் அண்ணாவை காணலையே :roll:

வணக்கம் எல்லாருக்கும்.பூனைக்குட்டி நேரமெடுத்து எல்லாரட்டயும் விளக்கம் கேட்டிருக்கு.நான் பேசாம உண்மையான பேரில படத்தையும் போட்டு யாழில எழுதலாமென்று இருக்கிறன்....அப்பதான் பூனைக்குட்டி சுதந்திரமா எழுதுறன் என்று நம்புமாம்.:lol:

  • தொடங்கியவர்

சோழி அண்ணா சோழி அண்ணா சோழிஅண்ணா??

திங்கள் வைக்கிறன் என்று சொன்னீங்கள் எங்கையண்ணா போட்டீங்கள்.??

சோழி அண்ணா சோழி அண்ணா சோழிஅண்ணா??

திங்கள் வைக்கிறன் என்று சொன்னீங்கள் எங்கையண்ணா போட்டீங்கள்.??

:(:)

சோழியன் அண்ணாவின் -அணித்தலைவர் தொகுப்புரை - அவர் அணிக்கு பலம் சேர்ப்பதாக இருக்கிறது- பாராட்டுக்கள்! 8)

தங்களின் உடல் நலம் தேற பிரார்த்திக்கிறேன் -!

  • தொடங்கியவர்

அப்பாடா சோழி அண்ணாடை பெயரை ஏலம் விட்ட உடனே வந்து வைச்சுட்டாரா? நன்றிகள் சோழி அண்ணா. அடுத்ததாக இளைஞன் சீக்கிரம் வைக்கவும்

சோழியான் உங்கள் தொகுப்புரையை மிகவும் சுருக்கி விட்டீர்கள். அதற்கு உங்கள் உடல்நிலையே காரணம் என நினைக்கின்றேன். சீக்கிரம் உங்கள் உடல்நிலை தேறி மீண்டும் உற்சாகமாக ஓட இறைவனை நானும் வேண்டுகின்றேன்.

சோழியன் பாவம்

இந்த நேரத்தில் நோய்வாய்ப்பட்டிருக்கக் கூடாது.

அவர் மீண்டு சுகமாக பிராத்திக்கிறேன்.

நன்றி! நன்றி!! சுகயீனம் ஒரு காரணமல்ல.. நம்ம பூனைக்குட்டி அவர்கள் பெரும்பாலானவற்றை தொகுத்து எழுதியதாலும்.. இறுதியில் நம்ம அணியைச் சேர்ந்த குருவிகளே கருத்தை பதிந்ததாலும்.. அவற்றுக்கு மேலாக ஏதாவது கூற என்ன இருக்கிறது?! :lol:

சோழியான்

அப்போ இப்போது நீங்கள் பூரண நலம். மிக்க மகிழ்ச்சி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.