Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் இன்று!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இளவரசர் வில்லியம் – கேட் திருமணம் இன்று!

Posted by uknews On April 29th, 2011 at 5:34 am /

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியமும் அவரின் காதலியான கேட் மிடில்டனும் இன்று வெள்ளிக்கிழமை திருமணம் செய்யவிருக்கின்றனர். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இத்திருமணம் வைபவம் நடைபெறவுள்ளது.

இத்திருமண வைபத்தின்போது மணமகளான கேட் மிடில்டன் அணியுள்ள திருமண மோதிரத்திலுள்ள கல் இலங்கையின் அரியவகை நீலக்கல் என இரத்தின மற்றும் தங்கநகை வியாபார வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திருமண மோதிரம் விபத்தில் மரணமடைந்த இளவரசி டயானாவுக்குச் சொந்தமானதாகும். அவருக்கு இளவரசர் சார்ள்ஸினால் அது வழங்கப்பட்டது. மேற்படி மோதிரத்திலுள்ள இரத்தினபுரியிலுள்ள நிமல் பத்திரன என்பவருக்குச் சொந்தமான இரத்தினக்கல் சுரங்கத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகும் என நம்பப்படுகிறது.

இந்த நீலக்கல் விலைமதிப்பற்றது என இலங்கை இரத்தினக்கல் மற்றும் நகை வியாபாரிகள் சங்கம் நேற்று தெரிவித்தது. இந்த கல்லின் பெறுமதி குறித்து பல விவாதங்கள் உள்ளன. ஆனால் எம்மால் அதன் பெறுமதியையை கணிக்கமுடியாது என இச்சங்கத்தின் நிர்வாக இயக்குநர் எம். மெக்ககி ஹாசிம் தெரிவித்தார்.

இரத்தினக்கற்களின் பெறுமதி அவற்றின் நிறம், தெளிவு, பளபளப்பு, அளவு, சர்வதேச சந்தையிலுள்ள கேள்வி, மற்றும் ஏனைய பல விடயங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என அவர் கூறினார். இந்த திருமண நிச்சயதார்த்த மோதிரத்திலுள்ள நீலக்கல்லின் பெறுமதி சுமார் 600,000 அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என அண்மையில் சில செய்திகள் தெரிவித்தன. எனினும் அக்கல்லின் பெறுமதி அதைவிட அதிகமாக இருக்கலாம் என்கிறார் மெக்கி ஹாசிம்.

‘நீலக்கல் போன்ற இந்த அரிய கல் அரச குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருக்கும்போது அதன் பெறுமதி மிக அதிகரிக்கும். எனவே அதன் விலையை தீரமானிப்பது கடினம்.’ ஏன அவர் தெரிவித்தார். நீலக்கல் உற்பத்தியில் முதன்மை பெற்ற நாடாக இலங்கை விளங்குகிறது. இளவரசர் சார்ள்ஸ்-கேட் மிடில்டன் திருமணத்தையடுத்து இலங்கை இரத்தினக் கற்களுக்கான கேள்வி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

www.saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் இன்று!

இனி அரமாளிகைக்குள் சுதந்திரம் இல்லை அது இல்லை இது இல்லை என்று விண்ணாணம்போட்டு பிரிவது என்றோ?????

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்டை மணந்தார் வில்லியம்: லண்டனில் விழாக்கோலம்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 29, 2011, 11:41[iST]

லண்டன்: ராஜ குடும்பத்தாரும், உலக பிரபலங்களும் புடைசூழ இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன்னை இன்று மணந்தார்.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம்(28), கேட்(29) திருமணம் இன்று நடந்தது.

இந்தத் திருமணம் புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது. முதலில் மணமகன் வில்லியம் வந்திறங்கினார். அடுத்து அவரது தந்தை சார்லஸும், கெமிலாவும் வந்தனர். பின்னர் ராணி எலிசபெத், தனது கணவர் பிலிப்புடன் வந்தார்.

எங்கே கேட் என்று கண்கள் தேட, சரியாக 11 மணிக்கு தேவாலயத்தில் அழகாக வந்திறங்கினார் மணமகள் கேட். கேட்டை பார்த்தவுடன் வழியிருந்தவர்களும் சரி, ஆலயத்தில் கூடியிருந்தவர்களும் மகிழ்ச்சி கரகஷோம் எழுப்பினர்.

ராணி எலிசபெத்தின் ரோல்ஸ ராய்ஸ் காரில் வந்தார் கேட். வழி நெடுகிலும் நின்ற மக்களுக்கு கையசைத்தவாறே வந்தார்.

பின்னர் வில்லியம், கேட் திருமணம் புராடஸ்டன்ட் முறைப்படி நடந்தது. மணமக்கள் மோதிரம் மாற்றிக் கொண்டு புதிய பந்தத்தில் இணைந்தனர். இந்த நூற்றாண்டின் பிரபலமான திருமணமாக இது கருதப்படுகிறது.

திருமணத்தைக் காண ஏராளமான வெளிநாட்டவரும், பத்திரிக்கையாளர்களும் லண்டனில் குவிந்தனர்.

ராஜ திருமணத்தை முன்னிட்டு லண்டன் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த திருமணம் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகள் மற்றும் யூ டியூபில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

லண்டனில் உள்ள பிரபல தேவாலயமான வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு) திருமணம் நடந்தது. அதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

ஸ்கை நியூஸ், பிபிசி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்த ராஜ திருமணத்தை காண சுமார் 6 லட்சம் பேர் கூடுதலாக லண்டனுக்கு வந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமணத்தின் போது கேட் மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட ‘ஹேர் பின்னை' இலங்கை சார்பில் அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு பரிசாக வழங்கியது. முன்னதாக 1981ம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது. அதன் பிறகு டயானாவுக்கு கொடுக்கப்பட்டது போன்ற நீலக்கல் மோதிரங்கள் விற்பனை சக்கைபோடு போட்டது. தற்போது மீண்டும் நீலக்கல் பரிசாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த திருமணத்திற்கு உலக ராஜ குடும்பத்தினர், காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைக்கவில்லை.

இந்தத் திருமணத்தை 1,900 பேர் நேரடியாக கண்டு களித்தனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர்.

இதற்கிடையே திருமணத்திற்காக மக்களின் வரிப்பணம் தண்ணீராக செலவளிக்கப்படுவதாக இங்கிலாந்தின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

திருமணத்தின்போது டுவிட்டருக்கு தடை:

இளவரசர் வில்லியம், கேட் திருமணம் நடக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டது. தேவாலயத்தில் டுவிட்டரை பிளாக் செய்யும் கருவி பொருத்தப்படுகிறது. ராஜ குடும்பத்தார் தான் இந்த ஏற்பாட்டை செய்யுமாறு கூறியதாகவும், அதற்கு பாதுகாவலர்கள் ஒப்புதல் அளி்த்துள்ளதாகவும் யாஹூ தெரிவித்துள்ளது.

இதை ஒரு போலீஸ் அதிகாரியும் உறுதிபடுத்தியுள்ளார். தேவாலயத்தில் திருமணம் நடக்கையில் செல்போன்கள் ஒலிக்காமல் இருக்க ஜாமர்களும் பொருத்தப்படிருந்தன.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் இன்று!

இனி அரமாளிகைக்குள் சுதந்திரம் இல்லை அது இல்லை இது இல்லை என்று விண்ணாணம்போட்டு பிரிவது என்றோ?????

552347195-prinz-william-kate-middleton.9.jpgk%252Bw.jpg

தகப்பன் சார்ள்ஸும், டயனாவும் கலியாணம் கட்டும் போது அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.டயானாவின் எதிர்பார்ப்புக்கு.... சார்ள்ஸால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்டது.ஆனால்... வில்லியம், கேட் தம்பதியர் ஒருவருக்கொருவர் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் போல் உள்ளது.

அரசனாயிருந்த்தால் என்ன.... ஆண்டியாய் இருந்தால் என்ன..... படுக்கையறையில் பிரச்சினை வராமல் பாத்துக் கொண்டால்... பிரச்சினை ஏற்படாது.

கலியாணத்துக்கு வயசு ஒரு பிரச்ச்சனையே இல்லை. 18 வந்தாலே போதும்.

வாழ்த்துக்கள்.

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செருப்பு போட்டு இருக்கிறா எண்டு பார்க்கிறார் போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

552347195-prinz-william-kate-middleton.9.jpgk%252Bw.jpg

தகப்பன் சார்ள்ஸும், டயனாவும் கலியாணம் கட்டும் போது அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.டயானாவின் எதிர்பார்ப்புக்கு.... சார்ள்ஸால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்டது.ஆனால்... வில்லியம், கேட் தம்பதியர் ஒருவருக்கொருவர் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் போல் உள்ளது.

அரசனாயிருந்த்தால் என்ன.... ஆண்டியாய் இருந்தால் என்ன..... படுக்கையறையில் பிரச்சினை வராமல் பாத்துக் கொண்டால்... பிரச்சினை ஏற்படாது.

அது திருமணத்திற்கு முன்பு டயானாவிற்கு தெரியாதோ?????

படுக்கையறைக்குள் அதிக பிரச்சனை வராது................... அடுத்த வீட்டு படுக்கைஅறை விடயங்களை எங்கள் வீட்டுக்குள் புகுத்தும்வரை!

ஏதோ இணையும்நாளில் அவதூறுகளை பொழிவது அழகல்ல!

பதினாறும் பெற்று பெருவாழ்வு தாமும் வாழ்ந்து................ அடுத்தவனையும் வாழவிட வேண்டும் என்பதே எனது வாழ்த்தும் ஆசையும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்களும்...உவங்கடை கண்டறியாத கலியாணங்களும்..........ரீவிக்காரங்கள் ரேடியோக்காரங்கள் பேப்பர்க்காரங்களும் தங்கடை வருமானத்துக்கு வழிபாக்கிறாங்கள்.....அதை சுத்திநிண்டு வேடிக்கை பாக்குதுகள் லூசுக்கூட்டங்கள்.

...

தகப்பன் சார்ள்ஸும், டயனாவும் கலியாணம் கட்டும் போது அவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.டயானாவின் எதிர்பார்ப்புக்கு.... சார்ள்ஸால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் திருமண வாழ்வில் கசப்பு ஏற்பட்டது.ஆனால்... வில்லியம், கேட் தம்பதியர் ஒருவருக்கொருவர் ஈடு கொடுக்கக் கூடியவர்கள் போல் உள்ளது.

அரசனாயிருந்த்தால் என்ன.... ஆண்டியாய் இருந்தால் என்ன..... படுக்கையறையில் பிரச்சினை வராமல் பாத்துக் கொண்டால்... பிரச்சினை ஏற்படாது.

சாள்ஸ் 1970களில் கமிலாவை விரும்பியது, அதன் பின்பு டயானாவின் சகோதரியை காதலித்த காலத்தில் தான் டயானாவை ஒருதரம் பார்க்க நேர்ந்த பின்பு தான் சாள்ஸ் டயானா இடையே காதல் ஏற்பட்டதாகவும், டயானாவை திருமணம் செய்த பின்பு 1986ல் சாள்ஸ் மீண்டும் கமிலாவுடன் தொடர்பு வைத்திருந்திந்தார் என்று வாசித்த ஞாபகம்.

எது எப்படி இருப்பினும், வில்லியம் கேட்க்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லுகின்றார்கள்.இவர்களின் மணவிழாவை கோடி மக்கள் கண்டு களித்ததாக ஊடகங்கள் கொக்கரிக்கின்றன.

வீதிவீதியாக இவர்களின் மணக்கோலத்தை கண்டு மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடியதாக ஊடகங்கள் ஏதோ புதிய உலகத்தை பார்தமாதிரி விவரிக்கின்றன.

யார் இவர்கள்?

ஏன்?

இதன் பின்னணி என்ன?

இவர்களை ஏன் எல்லோரும் வாழ்த்துகின்றார்கள்?

இவர்களால் இந்த உலகிற்கு என்ன நன்மை?

விடயம் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லவும்.

சீரழிந்து போய்க் கிடக்கும் பிரித்தானிய அரச குடும்பத்தையும், அரச குடும்பம் ஒன்று தேவை தானா என்று கேள்வி எழுப்பும் சிந்திக்கத் தெரிந்தவர்களின் குரலை அடக்கவும், அரச பரம்பரையைத் தூக்கி நிறுத்தப் போகும் தூண்களாக இவர்கள் சித்தரிக்கப் படுகின்றார்கள்.இவர்களால் உலகுக்கு நன்மைகள் குறைவு.ஆனால் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராசியத்துக்குப் பல பொருளாதார நன்மைகள் உண்டு!

ஆனாலும் தனிப் பட்ட முறையில், மண வாழ்வு காணும் இந்த இளம் குருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

Edited by Punkayooran

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் தனிப் பட்ட முறையில், மண வாழ்வு காணும் இந்த இளம் கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

புன்கையூரான் யாழில் கருத்து எழுதி எழுதி கலியாண தம்பதிகளை வாழ்த்தும் பொழுது கருத்துக்கள் வாழ்க என்று எழுதுகிறார் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

புன்கையூரான் யாழில் கருத்து எழுதி எழுதி கலியாண தம்பதிகளை வாழ்த்தும் பொழுது கருத்துக்கள் வாழ்க என்று எழுதுகிறார் :D:D

அட, சும்மா.... இருங்க புத்தன். :rolleyes:

ஆனைக்கும் அடி சறுக்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செருப்பு போட்டு இருக்கிறா எண்டு பார்க்கிறார் போலிருக்கு.

நான்..... நினைச்சன், துடையிலை இருக்கிற மச்சத்தை பாத்தார் எண்டு..... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

புன்கையூரான் யாழில் கருத்து எழுதி எழுதி கலியாண தம்பதிகளை வாழ்த்தும் பொழுது கருத்துக்கள் வாழ்க என்று எழுதுகிறார் :D:D

நன்றிகள் புத்தன்! கருத்துக்கள், குருத்துக்களாக மாறி விட்டன!!!

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் இன்று!

இனி அரமாளிகைக்குள் சுதந்திரம் இல்லை அது இல்லை இது இல்லை என்று விண்ணாணம்போட்டு பிரிவது என்றோ?????

அது திருமணத்திற்கு முன்பு டயானாவிற்கு தெரியாதோ?????

படுக்கையறைக்குள் அதிக பிரச்சனை வராது................... அடுத்த வீட்டு படுக்கைஅறை விடயங்களை எங்கள் வீட்டுக்குள் புகுத்தும்வரை!

ஏதோ இணையும்நாளில் அவதூறுகளை பொழிவது அழகல்ல!

பதினாறும் பெற்று பெருவாழ்வு தாமும் வாழ்ந்து................ அடுத்தவனையும் வாழவிட வேண்டும் என்பதே எனது வாழ்த்தும் ஆசையும்!

யோவ்.... மருது,

இப்ப, என்ன சொல்ல வாறீங்கள்.... :rolleyes::D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அட, சும்மா.... இருங்க புத்தன். :rolleyes:

ஆனைக்கும் அடி சறுக்கும். :D

தமிழ் சிறி, ஆளின்ர சைஸை வச்சுச் சொல்லிறீங்க போல!!!

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

புன்கையூரான் யாழில் கருத்து எழுதி எழுதி கலியாண தம்பதிகளை வாழ்த்தும் பொழுது கருத்துக்கள் வாழ்க என்று எழுதுகிறார் :D:D

நன்றிகள் புத்தன்! கருத்துக்கள், குருத்துக்களாக மாறி விட்டன!!!

புத்தன் எழுதியது மட்டும் திறமோ......

புங்கையூரானை, புன்கையூரான் எண்டு எழுதிப் போட்டு மற்றவையிலை பிழை பிடிக்க வந்திட்டார். :D:lol:

எந்தச் செய்தியை போட்டாலும் இந்த இழவாத்தான் இருக்கின்றது. பண்டாரவன்னியனை கட்டபொம்மனை தூக்கில் போட்ட வம்சம். சிங்களவனுக்கு முந்திய எதிரிகள். இருந்தும் அவங்கள் நாடுகளில் எங்கள் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சாள்ஸ் 1970களில் கமிலாவை விரும்பியது, அதன் பின்பு டயானாவின் சகோதரியை காதலித்த காலத்தில் தான் டயானாவை ஒருதரம் பார்க்க நேர்ந்த பின்பு தான் சாள்ஸ் டயானா இடையே காதல் ஏற்பட்டதாகவும், டயானாவை திருமணம் செய்த பின்பு 1986ல் சாள்ஸ் மீண்டும் கமிலாவுடன் தொடர்பு வைத்திருந்திந்தார் என்று வாசித்த ஞாபகம்.

-------

எது எப்படி இருப்பினும், வில்லியம் கேட்க்கு வாழ்த்துக்கள்

07charlescamilla.jpg

குட்டி,

சார்ள்ஸின், மரம் தாவுற குணத்தாலை தான்...... தாய்க்கிழவி எலிசெபெத் மகாராணி 62 வருசத்துக்கு மேலையும், ராணியாக இருக்கிறா.

மச்சம் சாப்பிடாத வெள்ளிக்கிழமை கலியாணம் கட்டியபடியால்.... அடுத்த, மகாராணியாக வர வில்லியம் கேட்க்கு சான்ஸ் இருக்குது. :)

கமீலா பார்க்கரிலை என்ன, அழகு இருக்கோ.... :wub: சார்ள்ஸிக்குத்தான் வெளிச்சம்.

சார்ள்ஸ் எப்பவும் இளவரசராகவே.... இருந்திட்டுப் போக வேண்டியது தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் எழுதியது மட்டும் திறமோ......

புங்கையூரானை, புன்கையூரான் எண்டு எழுதிப் போட்டு மற்றவையிலை பிழை பிடிக்க வந்திட்டார். :D:lol:

யானைக்கும் அடி சறுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லுகின்றார்கள்.இவர்களின் மணவிழாவை கோடி மக்கள் கண்டு களித்ததாக ஊடகங்கள் கொக்கரிக்கின்றன.

வீதிவீதியாக இவர்களின் மணக்கோலத்தை கண்டு மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடியதாக ஊடகங்கள் ஏதோ புதிய உலகத்தை பார்தமாதிரி விவரிக்கின்றன.

யார் இவர்கள்?

ஏன்?

இதன் பின்னணி என்ன?

இவர்களை ஏன் எல்லோரும் வாழ்த்துகின்றார்கள்?

இவர்களால் இந்த உலகிற்கு என்ன நன்மை?

விடயம் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லவும்.

குமாரசாமி அண்ணை, உங்கள் கேள்வியில் உள்ள எரிச்சலும், ஏக்கமும் எமக்கும் புரிகின்றது.

நான் யாழ்ப்பாணம் போன போது, சங்கிலிய மன்னனின் அரண்மனை வாயிலின் முன் நின்று.... ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்தேன்.

அதன் பின்னால்.... கார் கராஜ் மாதிரி ஏதோ... ஒண்டு, கறுப்பு எண்ணை வடிந்தபடி இருந்தது.

எங்களிடம் புராதன மன்னனின் கடைசி எச்சத்தையும் பாதுகாக்கும் பழக்கம் இல்லை.

பல்லு உள்ளவன் பகோடா சாப்பிடுறான். பல்லு இல்லாதவன், பாடு தான்.... திண்டாட்டம்.

இவர்களுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்லுகின்றார்கள்.இவர்களின் மணவிழாவை கோடி மக்கள் கண்டு களித்ததாக ஊடகங்கள் கொக்கரிக்கின்றன.

வீதிவீதியாக இவர்களின் மணக்கோலத்தை கண்டு மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடியதாக ஊடகங்கள் ஏதோ புதிய உலகத்தை பார்தமாதிரி விவரிக்கின்றன.

யார் இவர்கள்?

ஏன்?

இதன் பின்னணி என்ன?

இவர்களை ஏன் எல்லோரும் வாழ்த்துகின்றார்கள்?

இவர்களால் இந்த உலகிற்கு என்ன நன்மை?

விடயம் தெரிந்தவர்கள் தயவுசெய்து பதில் சொல்லவும்.

கு.சா.அண்ணா, உங்களை மாதிரித்தான் எனக்கும் எல்லாக் கேள்விகளுக்குப் பதில் தெரியாது.

'இவர்களால் இந்த உலகிற்கு என்ன நன்மை?' என்ற கேள்விக்கு மட்டும் சிறிய பதிலைத் தர முனைகிறேன்.

royal_family.jpg

உந்த அரச குடும்பத்து ஆட்கள் எல்லாரும் இந்த நாட்டு மக்கள் கட்டும் வரிப் பணத்தில் தான் இருக்கிறார்கள். ஒரு சிலரைத் தவிர பொது மக்களுக்குத் தெரியிறமாதிரி ஒரு நன்மையையும் செய்ததாகக் காண இல்லை. டயானா மட்டும் கொஞ்சம் விதிவிலக்காக இருந்தவர் என்றே சொல்லலாம். [அவரின் சமூக சேவையால் தமிழர்கள் பயனடையாவிடாலும்] உலகில் பல பாகங்களில் உள்ள பாதிக்கப் பட்ட மக்கள் பலனடந்தார்கள். அவரின் பொது நல சேவை மூலம் சாதாரண மக்களும் பலனை அடையவேண்டும் என்று நினைத்தார்.

Aids மருத்துவமனையில் பணியாற்றியவர்களுடனும், நோயாளிகளுடனும் கையில்கையுறை இல்லாமலே கைகுலுக்கி பலருடன் ஆதரவாக பேசியவர்.

http://www.youtube.com/watch?v=82CwE5cd28o&feature=related

International Campaign to Ban Landmines, அரசு சார்பற்ற இந்த அமைப்பிற்கு ஆதரவு ஆதரவளித்து, அங்கோலா என்ற நாட்டில் நிலக் கண்ணிவெடிகளை அகற்றும் பணியிலும் தனது பங்களிப்பை நேரடியாகவே வழங்கியவர் என்பதும் தெரிந்ததே. இந்த அமைப்பிற்கு 1997ல் நோபல் பரிசும் கிடைத்தது.

http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1997/

http://dsc.discovery.com/guides/history/unsolvedhistory/diana/photogallery/hearts/hearts.html

இதுவரை எந்த அரச குடும்பத்தினரும் இது போல் செய்ததில்லை. செய்வார்களா என்றும் நம்பிக்கை இல்லை.

இன்றும் பலரை 'மக்களின் இதயங்களில் உள்ள ராணி யார்?' என்று கேட்டால் அவர்கள் டயானா என்று சொல்வதும் உண்மை. இன்று அவர் உயிரோடு இல்லாததால் அவரின் மகனின் திருமணத்திற்குப் பல கோடி மக்கள் வாழ்த்தி இருப்பார்கள், மற்றும் படி இன்னும் பலர் அரண்மனையில் திருமணத்திற்கு வரிசை கட்டி நிக்கிறார்கள் அவர்களுக்கு இந்தளவுக்கு ஆரவாரம் இருக்குமா என்பது சந்தேகம்.

07charlescamilla.jpg

குட்டி,

சார்ள்ஸின், மரம் தாவுற குணத்தாலை தான்...... தாய்க்கிழவி எலிசெபெத் மகாராணி 62 வருசத்துக்கு மேலையும், ராணியாக இருக்கிறா.

மச்சம் சாப்பிடாத வெள்ளிக்கிழமை கலியாணம் கட்டியபடியால்.... அடுத்த, மகாராணியாக வர வில்லியம் கேட்க்கு சான்ஸ் இருக்குது. :)

கமீலா பார்க்கரிலை என்ன, அழகு இருக்கோ.... :wub: சார்ள்ஸிக்குத்தான் வெளிச்சம்.

சார்ள்ஸ் எப்பவும் இளவரசராகவே.... இருந்திட்டுப் போக வேண்டியது தான்.

சிறி அண்ண, கமிலாவைப் பார்த்தல் குதிரையின் சாயல் அடிக்கும், சார்ல்ஸ்க்குப் பிடித்த விளையாட்டு போலோ எனப்படும் விளையாட்டு, அதை குதிரையில் இருந்து தான் விளையாடுவார்கள் அதனால் தானோ என்னவோ.... :lol::D:rolleyes:

2063914.jpg?v=1&c=IWSAsset&k=2&d=77BFBA49EF878921F7C3FC3F69D929FD65B081ED771364E329A5F09131D5DC83850CB3A36ED41100A7CFF610D5B4FC25

நேற்றுக் கூட பார்த்து இருந்தீர்கள் என்றால் தெரிந்தது இருக்கும், சார்ல்ஸ் கமிலா சென்ற குதிரை வண்டியில் ஒரு குதிரை தான் கட்டி இருந்தது, எல்லாம் கமிலா வண்டியில் உள்ளார் என்ற தைரியத்தில் தான். :D:lol:

Edited by குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.