Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி!

Posted by admin On May 6th, 2011 at 1:10 pm / No Comments

இந்தியா உதவக் கூட வேண்டாம். குறைந்த பட்சம் இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? என்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலை பற்றி ஐ.நா. குழு அறிக்கையும் மத்திய அரசின் கடமையும் என்ற திராவிடர் கழக பொதுக்கூட்டம் அண்மையில் புரசைவாக்கம் தானா தெருவில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா.மனித உரிமை குழு தலைவராக இருந்த நவிப் பிள்ளை 2009ஆம் ஆண்டே சுட்டிக் காட்டினார்.

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை எதிர்த்தது முதலில் ஸ்விட்சர்லாந்து தான். காரணம் அந்த நாடு இராணுவத்தை வைத்துக் கொள்ளாத நாடு யுத்தத்தில் காயமடைவோரை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் காப்பாற்றுகின்ற நாடு.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னது ஸ்விட்சர்லாந்து. இலங்கைக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்த நாடு இந்தியா.

இந்தியாதான் முதலில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். இலங்கைக்கு ஆதரவாக சீனா செயல்பட்டது ரஷ்யா செயல்பட்டது. கியூபாவும், வெனிசுலாவும் இலங்கையை ஆதரித்தது.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மூன்றாயிரம் அமெரிக்கர்களை கொன்றதற்கே 40 நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டிற்கே தெரியாமல் பின்லேடன் கதையை முடித்தது அமெரிக்கா.

மூன்று லட்சத்து முப்பதாயிரம் தமிழர்கள் இலங்கையிலே கொல்லப்பட்டார்களே. எந்த நாடாவது கேள்வி கேட்டதா? இந்தியாவைச் சார்ந்த தமிழன் கொல்லப்பட்டானே இந்தியா கேட்டிருக்க வேண்டாமா? இந்தியாவில் தமிழ்நாடு இல்லை என்று கருதிவிட்டது.

முள்ளி வாய்க்கால் பகுதி யுத்தமற்ற பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதி. அந்தப் பகுதியில் இருந்த அவ்வளவு தமிழர்களையும் இலங்கை இராணுவம் அழித்தது.

இதைப் பார்க்க ஐ.நா.குழு வருகிறோம் என்று சொன்னால் உங்களுக்குப் பாதுகாப்புத் தர முடியாது என்று இலங்கை சொல்லிவிட்டது. அதேபோல யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற வந்த செஞ்சிலுவை சங்கத்தையும் நாட்டைவிட்டே வெளியேறு என்று சொல்லிவிட்டது இலங்கை.

எகிப்தில் லிபியாவில் மக்கள், ஆளும் அரசை எதிர்த்துப் போராடினால் அதற்கு அமெரிக்க அரசு ஆதரவு தருகிறது. காரணம் என்ன? ஈழத்தில் எண்ணெய் வளம் இல்லை. ரத்தம் தான் இருக்கிறது என்ற காரணத்திற்காக அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வில்லையா? ஏன் உலக நாடுகள் எதிர்த்தன? விடுதலைப் புலிகளைப் பார்த்து அச்சப்பட்டனர்.

உலகிலேயே மக்களுக்காகப் போராடிய ஒரே ஒரு அமைப்பிற்கு மட்டும் முப்படைகள் இருந்தன. தரைப்படை, விமானப்படை, கப்பற்படை வைத்திருந்த அமைப்பு பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்பு.

பிரபாகரன் முப்படைகளையும் வைத்திருந்தததோடு நான்காவது படையையும் வைத்திருந்தார். அது தான் தற்கொலைப் படை. பெண் புலிகளை பெண் தற்கொலைப் படையை வைத்திருந்த ஒரே அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு தான்.

சொந்த மண்ணில் கௌவுரமாக வாழ நினைத்தார்கள் நிம்மதியாக வாழ நினைத்தார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ் சொல்கிறார். இந்தியா எங்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கிறது என்று. இப்படி மஹிந்த ராஜபக்ஷ் சொல்லியிருப்பது இந்தியாவுக்கு அவமானம் இல்லையா? குறைந்த பட்சம் இலங்கைக்கு துணை போகாமலாவது. இந்தியா இருக்க வேண்டாமா?

மஹிந்த ராஜபக்ஷ்வை எப்பொழுது தண்டிக்கப் போகிறீர்கள் என்ற குரல் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களிடையே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

உள்ளூர் அரசியலைப் பற்றிப் பேச வேண்டாம். வெறும் ஈழமக்களுடைய பிரச்சினைகளை மட்டும் பேசுவோம் வாருங்கள். இதற்கு எத்தனைக் கட்சிகள் தயாராக உள்ளன? இவ்வாறு சுப.வீரபாண்டியன் பேசினார்.

saritham

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

சு.ப. வீரபாண்டியன், வீரமணி எல்லோரும் முள்ளிவாய்க்காலில் தமிழனின் கடைசி இரத்தம் வடியும் மட்டும் முதலைமைச்சர் கருணாநிதியின் நண்பர்களாயிருந்தவர்கள். அன்று கொடுக்காத குரலை.... இன்று கொடுத்து என்ன பிரயோசனம்?

இந்த இருவர்களும் ஐ.நா.வுக்கு, தமிழ்நாட்டில் இருகோடி கையெழுத்து வாங்கித்தர முடியுமா?

அது தான்... தற்ப்போதைய தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

<_< சுபவீரபாண்டியன் ஒரு அரசியல் விபச்சாரி. தன்னைத்தமிழின ஆர்வளர் என்று காட்டிக்கொண்டே பணத்துக்காகக் அதே தமிழையும் காட்டிக் கொடுக்கத் தயங்காத விபச்சாரி. முள்ளிவாய்க்காலில் தமிழினம் துடி துடிக்க கொல்லப்பட்டபோது அந்தக் கொலைக்கு தன்னாலான அனைத்து ஆதரவையும் கொலைகாரக் காங்கிரஸுக்கு கருணாநிதி வழங்கிக்கொண்டு இருந்தபோது எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அவனை ஆதரித்து, "இனக்கொலையா, அப்படியொன்றும் நடக்கவில்லையே" என்கிற கருணாநிதியின் பிதற்றலை வழிமொழிந்த கயவன். இவனும், வீரமணி, வைரமுத்து போன்றவர்களும் பணத்திற்காக தங்கள் இன மானம், ரோஷம், போன்ற எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு தங்கள் பைகளை நிரப்பக் காத்திருக்கும் வியாபாரிகள், விபச்சாரிகள்.

வைரமுத்து பனத்திற்காக ஈழத்தமிழனின் சோகத்தை கவிதையாகப் படித்துவிட்டு, கருணாநிதியின் "செம்மொழி மாநாட்டிற்கு" தார்மீக ஆதரவு எனும் பெயரில் கோடிக்கணகான ரூபாய்களுக்கு விலை போனவன்.

இவர்களைப் போலப் பல பணத்துக்காக இனத்தைக் காட்டிக்கொடுக்கும் விபச்சாரிகள் இருக்கிறார்கள்.

பணத்துக்கான இனத்தைக் காட்டிக்கொடுப்பவனும், தாயைக் கூட்டிக்கொடுப்பவனும் ஒன்றுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாம்... சால்வை கட்டிக் கொண்டு...... வெறும் சோற்றுக்கு அலையும் பிண்டங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுலபமாக இந்தியாவைக் குற்றம்சொல்லும் இந்த நயவஞ்சகர்கள் இந்திய மத்திய அரசுக்குக் கவிழாமல் முண்டுகொடுத்த தங்கள் தலைவரான கருணாநிதியை இலகுவாக மறந்துவிடுகிறார்கள்.

கருணாநிதி உண்மையாகவே தனது ஆதரவை விலக்கியிருந்தால் சோனியா யோசித்திருப்பாள். ஆனால் காசுக்கா எல்லாவற்றையும்தான் அவன் கவிழ்த்துவிட்டானே?? செய்யும் கொலைகளை எல்லாம் உடந்தையாக இருந்து பார்த்து ரசித்துவிட்டு இப்போது என்ன இன மானம் பேச வேன்டியிருக்கு.

இவர்களின் அரசியலையும், ஈழப் பிரச்சினையையும் கலக்க வேண்டாமா. அந்தக் கோதாரி அரசியலுக்காகத்தானேயடா எங்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்தீர்கள். உங்கள் அரசியலுக்காகத்தானே எங்க்சளை சாகடித்தீர்கள். பிறகு எப்படி "ஈழத்தமிழர் பிரச்சினையற்ற" உங்கள் உள்ளூர் அரசியைப் பேசாமலிருக்க முடியும். <_<

... நாம் எல்லாவற்றையும் மறப்போம் ... நாளை இவர்களை மீண்டும் எம் பணத்தில் கூப்பீட்டு, கை நிறைய கொடுத்து, ஊர் உலாக்காட்டி, ... இறுதியாக ஒரு பொங்கு தமிழிலையோ, ஓர் மாவீரர் நாள் நிகழ்விலையோ பேச விடுவோம் ............ எறிவார்கள் ... நாமோ விசிலடிக்கப்பழகியவர்கள், தொடர்ந்து அடிப்போம் ... யூதனுக்கு அடுத்த மூளை உள்ளவர்கள் நாங்களல்லவா??????? <_<

Edited by Nellaiyan

... நாம் எல்லாவற்றையும் மறப்போம் ... நாளை இவர்களை மீண்டும் எம் பணத்தில் கூப்பீட்டு, கை நிறைய கொடுத்து, ஊர் உலாக்காட்டி, ... இறுதியாக ஒரு பொங்கு தமிழிலையோ, ஓர் மாவீரர் நாள் நிகழ்விலையோ பேச விடுவோம் ............ எறிவார்கள் ... நாமோ விசிலடிக்கப்பழகியவர்கள், தொடர்ந்து அடிப்போம் ... யூதனுக்கு அடுத்த மூளை உள்ளவர்கள் நாங்களல்லவா??????? <_<

இந்தியா, இலங்கைக்குத் துணை போகாமலாவது இருக்க வேண்டாமா? – சு.ப.வீரபாண்டியன் கேள்வி!

சுபவி ஐயா அவர்களே மேற்கூறப்பட்டதிற்கு நீங்கள் இனியாவது சுய புத்தியோடு, பொருளாசைகளை தூக்கி வீசிவிட்டு கொஞ்சம் முக்கலாம் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிறேன்,

நீங்கள் பச்சை குத்தவேண்டும் என்பதற்காக நான் இதை எழுதவில்லை. பேராசிரியர் சு.ப.வீரபாண்டியன் தமிழினத்துக்காக சிறை சென்றவர், அதையும் மறக்கவில்லை. ஆனால் 2009 இல் மத்திய அரசின் முடிவுதான் எனது முடிவும் என்று கருணாநிதி உறுதியாகக் கூறிவிட்டு மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகத்தின் பின்னர் ஈழத்தில் போர் ஓய்ந்து விட்டது, சமாதானம் வந்துவிட்டது என்று கருணாநிதி கூறிய அனைத்துப் பொய்களையும் ஆம் என்று ஆமோதித்து கருணாநிதியுடனேயே இறுதிவரை இருந்து கொண்டவர்.

கருணாநிதியைச் சுற்றி அன்று இருந்த இந்த தமிழ் உனர்வாளர்களும், கவிஞர்களும் என்ன செய்தார்கள்?? எப்போதாவது, "தலைவா, இப்படிச் செய்ய வேண்டாம், தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று சொல்லி அவரைத் தடுக்க முடியாமல் போய்விட்ட பிறகு இவர்களின் ஆதரவு இருந்தால்த்தான் என்ன, இல்லாவிட்டால்த்தான் என்ன??

இழவு வீட்டில் வந்திருந்து, "மவனே, நான் யாருன்னு தெரியுமில்ல, கொன்னுபுடுவேன்" என்று வீரவசனம் பேசும் ஆட்கள் இனித் தேவையில்லை.

இவர் 2009 இல் செய்ததற்கும் இப்போது பேசுவதற்கும் இடையே ஏதாவது தொடர்பிருக்கிறதா??

2009 இல் ஆயிரக்கணக்கில் தமிழினம் வேட்டையாடப்பட்டபோது அதைக் கண்டுகொள்ளமல் இவரது கண்ணை மறைத்தது எது ??

இப்போது இவர் பேசுவது யாரைத் திருப்திப்படுத்த ?? போகவேண்டாம், கருணாநிதி ஒரு கள்ளன் என்று எத்தனை பேர் சொன்னார்கள், அத்தனையும் தூக்கிக் கடாசி விட்டுத்தானே கருணாநிதியிடம் போய் சரணடைந்தார்கள்??

மானத்தையும், இனவுணர்வையும் தெலுங்கனின் சேட்டுக்கடையில் அடகுவைத்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இப்போது வருகிறார்கள் ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேடதாரிகளை இனம்கண்டு கொள்ளுங்கள் நண்பர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

2 வருடம் நித்திரை கொண்டுவிட்டு இப்ப எழும்பிப் பேசுகிறார்கள். தேர்தல் முடிஞ்சு போச்சு.ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது.தினம் ஒரு கூட்டம் போட்டு ஏதாவது பேசணும். இவ்வளவு நாளும் கனிமொழி குற்றம் செய்யவில்லை ராசா குற்றம் செய்யவில்லை என்று ஊர்ஊராக கூட்டம் போட்டுப் பேசினார்.இப்ப நிலமை கைக்கு மேலே போயிட்டுது.எலக்சன் முடிவும் என்னமாதிரி இருக்குமோ தெரியாது.அதானால கருணாநிதி சொல்லியிருப்பார் இனி பழயைபடி ஈழப்பிரச்சனையைக் கிளறினால்தான் மக்களின் கவனத்தைத் திசை திருப்பலாம் என்று.அதற்கான முன்னோட்டங்கள்தான் இது.விரைவில் ஈழத்தமிழருக்காக கலைஞர் ஒரு பெரிய போராட்டம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ், தமிழன் என்று பேசும் தகுதியை இழந்து வெறும் உயிரற்ற உடலங்களாக(சடலங்களாக) எதையாவது அப்பப்போ உளறிக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பின் பங்காளிகள் பட்டியலில் இடம்பெறும் தகுதியை மட்டும் கொண்டவர்களே இவர்போன்றோர். இவர்களால் இப்போது செய்யக்கூடியது ஒன்றேயொன்றுதான். முடிந்தால் தமிழ் சிறியின் கோரிக்கையை செய்துகாட்டுவாரா? எப்படி அவர் செய்வார். பிறகு கரு நா நிதி கைகோர்த்துள்ள காங்கிரசைப் பகைப்பதாகிவிடுமே. பச்சை துரோகிகளை நாம் வாழ் நாளில் கண்டுவருகிறோம்.......................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டு அரசியல் அஞ்சாநெஞ்சங்கள் இப்ப கொஞ்ச நாளாய் இலங்கைத்தழிழரிலை இனியில்லையெண்ட கரிசனையாய் இருக்கினம் .

ஏனெண்டு தெரியேல்லை?ஏதோ பெரியவிசயம் கிடக்கு போலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.