Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த துஷாவின் இடுப்பின் கீழ் பகுதி முற்றாக செயலிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது. அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது. தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார். துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது.

ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவரின் உயிரை டாக்டர்கள் காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து அவர் மயக்க நிலையில் இருந்தார், இரண்டு வாரங்களுக்கு முன் தான் அவருக்கு உணர்வு திரும்பியது. அதன் பிறகு தான் அவரின் கால்கள் உணர்வற்று இருப்பதை டாக்டர்கள் உணர்ந்தனர்.

தொடர்ந்து வழங்கப்பட்ட சிகிச்சைகளின் பின்பே, அவரால் இனிமேல் நடக்க முடியாது என்றும், இடுப்புக்குக் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்றும் டாக்டர்கள் இப்போது தெரிவித்துள்ளனர்.

www.seithy.com

மிக வருத்தம் தரும் வேதனையான தகவல் இது. ஒரு வன்முறைக் கும்பலால் ஒரு பெண் குழந்தையின் வாழ்வே சவாலாகிவிட்டது (இதில் வாழ்வே சூனியாமாகிவிட்டது என்று எழுதவில்லை;)

வன்முறைக் கும்பலின் தாய் தந்தையரை கட்டி வைத்து உதைக்க வேண்டும்

.

துஷா குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அறிவியல் உலகம் இப்படியான நரம்புப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகாணும் என்று நம்புவோம்.

.

துஷா குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அறிவியல் உலகம் இப்படியான நரம்புப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகாணும் என்று நம்புவோம்.

இதை வாசித்து பாருங்கள்

hospitalnews

பாவிகள் ஒரு தளிரின் எதிர்காலத்தை முடக்கப் பண்ணியுள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக வருத்தம் தரும் வேதனையான தகவல் இது. ஒரு வன்முறைக் கும்பலால் ஒரு பெண் குழந்தையின் வாழ்வே சவாலாகிவிட்டது (இதில் வாழ்வே சூனியாமாகிவிட்டது என்று எழுதவில்லை;)

வன்முறைக் கும்பலின் தாய் தந்தையரை கட்டி வைத்து உதைக்க வேண்டும்

என்னைப் பொறுத்த மட்டில் இந்தப் பிள்ளையை தேவை அற்று வெளியில் கூட்டிப் போய் இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கும் பெற்றோர் மீது தான் வெறுப்பாய் இருக்கிறது..

இதற்கு முன்பு ஒரு செய்தியில் படித்திருக்கிறேன். அந்தப் பிள்ளையின் மாமனாரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வற்கு அவரது கடைக்கு கூட்டிப் போனார்களாம். அந்த சமயத்தில் தான் இந்த நிகழ்வு நடந்து இருக்கிறது..ஆகவே பெற்றோரும் கொஞ்சம் பொறுப்பு உணர்வோடு நடக்க வேண்டும்..ஏன் அவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு ஒரு போண் கிடைக்க இல்லையா...?நேரில் போய் சொன்னால் தான் வாழ்த்துக்களை நம்மவர்கள் ஏற்றுக் கொள்வார்களா...?இனி அந்தப் பிள்ளையின் வாழ்கை பூராவும் யார் கண்ணீர் விடப்போவது....? :(:(

.

நம்பிக்கை தருவதாக உள்ளது நிழலி. இணைப்பிற்கு நன்றி.

அந்தப் பெற்றோரின் மனநிலையில் இருந்து பார்க்க வேதனையாக உள்ளது. :(

எலிகளின் சேதமடைந்த முள்ளந்தண்டு நரம்புகளை வளர்த்து பின் இணையவைத்து வெற்றி கண்டுள்ளார்கள். மனிதர்களிற்கும் இது வெற்றியளித்தால் மிகப் பெரிய கொடையாக இருக்கும்.

"Indeed, we have recently been able to promote robust functional regeneration into the adult rodent spinal cord of severed sensory roots........."

http://neurowww.cwru.edu/faculty/silver/index

இவர்களின் research publication (The Journal of Neuroscience, July 12, 2006)

http://www.jneurosci.org/content/26/28/7405.full.pdf

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பிட்ட இந்தச் செய்தியின் படி.. (உண்மையான diagnostic condition பற்றி தெரியாத நிலையில்) இந்தக் குழந்தையின் முண்ணான் எனப்படும் முள்ளந்தண்டில் உள்ள மூளையின் நீட்சிப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது கால ஓட்டத்தில் சீரடைவது என்பது பாதிப்பின் தன்மையைப் பொறுத்தது. கடுமையான நரம்புக்கலங்களின் நிரந்தர இழப்பு.. அவற்றை புதுப்பிக்க மாட்டாது என்பதால்.. அதனை இயற்கையாக சீர்செய்வது கடினம். ஆனால் இன்று பல அதிநவீன செயற்கை சிகிச்சை முறைகள் இந்த நிலையை சரி செய்ய அல்லது முயற்சிக்க இருக்கின்றன. அதுமட்டுமன்றி தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் கூட சிலரை இந்த நிலையில் இருந்து மீட்டிருக்கிறது. அது பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அமையும்.

இந்தக் குழந்தை செய்தி ஊடகங்களின் அதிக கவனத்தைப் பெற்றிருப்பதால்.. இவர் மீதான கவனிப்பு அதிகம் இருக்கும். அது ஆறுதல் அளிக்கும் விடயம். ஆனால் எம்மவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையானோர்... காசநோய் தாக்கத்துக்கு உள்ளாகி முண்ணான் பாதிப்படைந்த நிலையில்.. இதே நிலையை எட்டி இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். இளம் வயதினரும் இதில் அடங்குவர். தெற்காசிய ஆபிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளாக வருவோர் சரியான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாததால்.. அவர்களில் இந்த நிலை அதிகம் அவதானிக்கப்பட்டுள்ளது. அவை செய்தியாவதில்லை. பாதிக்கப்பட்ட பலர் கண்ணீரோடு வாழ்க்கையை தொலைத்துவிட்டோம் என்று வாழ்வதைக் கண்டிருக்கிறேன். ஆறுதல்களும் கூறி இருக்கிறேன். அதில் ஒரு இளைஞர் நீண்ட நாட்கள் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியின் பின் ஓரளவுக்கு கால்களை இயக்க முடிந்ததையும் அவதானித்திருக்கிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காயம் பட்ட செய்தி கேள்விப் பட்ட பிறகு, கனகாலத்துக்குப் பிறகு ஒரு நல்ல பிரார்த்தனை இந்தக் குழந்தைக்காகச் செய்தேன். உயிர் பிழைத்ததற்காக மகிழ்ச்சி. மற்ற படி குழந்தை நல்ல கரங்களில் இருக்கிறது என நம்புகிறேன். இதுவே எங்கள் ஊராக இருந்திருந்தால் இன்னும் பல ஊனமுற்ற பிஞ்சுகள் போல கஷ்டப் பட்டிருக்கும். நெடுக்குச் சொல்லும் அதே நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. மூலக் கலங்களில் (stem cells) இருந்து வளர முடியாத திசுக்களை வளர்க்கும் ஆய்வுகள் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் நடக்கிறது. முண்ணாண் (spinal cord) பாதிப்புகள் பற்றித் தான் இந்த ஆய்வுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.மனித ஆய்வுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது இது போன்ற மிக இளம் நோயாளிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம் என நினைக்கிறேன். இந்தக் குட்டியின் உறவினர்கள் நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உரிய மருத்துவர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். நவீன மருத்துவ நுட்பங்கள் சிகிச்சைகள் பற்றி அறிந்து மருத்துவர்களிடம் குணமாக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும். நெடுக்குப் போன்றவர்கள் இது மாதிரி விடயங்களில் இந்தக் குடும்பத்துக்கு உதவ வேணும். நாங்கள் உடன் வருவோம்!

துஷா குணமடைய வேண்டும்.

யாயினி - ஏன் குழந்தைகளை வெளியே எங்கும் அழைத்துசெல்லாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துஷா குணமடைய வேண்டும்.

யாயினி - ஏன் குழந்தைகளை வெளியே எங்கும் அழைத்துசெல்லாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியுமா?

குழந்தைகளை வெளியில் கூட்டிப் போகக் கூடாது என்று சொல்ல இல்லை...அன்றைய பொழுது தேவை இல்லாமல் தானே கூட்டிப் போய் இப்படி ஆகி இருக்கிறது என்ற பொருள் படவே என் கருத்தை முன் வைத்தேன்.உண்மையாகவே சில பெற்றோர் பிள்ளைகளை கடை தெருக்களுக்கு கூட்டிப் போனால் பிள்ளை எங்கே நிக்கிறார்கள் என்று கூட கவனிக்க மாட்டார்கள்..பிள்ளைகள் எங்காவது ஒரு மூலையில் போய் நிற்பார்கள்,பெற்றோர் எங்கோ ஓர் மூலையில் நிற்பார்கள்.நன்கு அவதானித்த படியால் எழுதிறன்..அவே.அவே அனுபவிச்சால் தானே தெரியும் அதன் வலிகள்.நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

துஷா சீக்கிரம் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்...16 வயதிற்கு உட்பட்ட ரவுடிக் கூட்டத்தை பெத்தெடுத்த தாய்,தகப்பனை முன்னால் வைத்து ஒன்றிரண்டு பேரை சுட்டுக் சுட்டுக் கொள்ள வேண்டும்...அதற்குப் பிறகு மற்றப் பிள்ளைகளை ஒழுங்காய் வளர்ப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காயம் பட்ட செய்தி கேள்விப் பட்ட பிறகு, கனகாலத்துக்குப் பிறகு ஒரு நல்ல பிரார்த்தனை இந்தக் குழந்தைக்காகச் செய்தேன். உயிர் பிழைத்ததற்காக மகிழ்ச்சி. மற்ற படி குழந்தை நல்ல கரங்களில் இருக்கிறது என நம்புகிறேன். இதுவே எங்கள் ஊராக இருந்திருந்தால் இன்னும் பல ஊனமுற்ற பிஞ்சுகள் போல கஷ்டப் பட்டிருக்கும். நெடுக்குச் சொல்லும் அதே நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. மூலக் கலங்களில் (stem cells) இருந்து வளர முடியாத திசுக்களை வளர்க்கும் ஆய்வுகள் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் நடக்கிறது. முண்ணாண் (spinal cord) பாதிப்புகள் பற்றித் தான் இந்த ஆய்வுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.மனித ஆய்வுகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது இது போன்ற மிக இளம் நோயாளிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்புகள் அதிகம் என நினைக்கிறேன். இந்தக் குட்டியின் உறவினர்கள் நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம் உரிய மருத்துவர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். நவீன மருத்துவ நுட்பங்கள் சிகிச்சைகள் பற்றி அறிந்து மருத்துவர்களிடம் குணமாக்கும் வாய்ப்புகளை ஆராய வேண்டும். நெடுக்குப் போன்றவர்கள் இது மாதிரி விடயங்களில் இந்தக் குடும்பத்துக்கு உதவ வேணும். நாங்கள் உடன் வருவோம்!

இங்கிலாந்தைப் பொறுத்தவரை குழந்தைகள் மீதான மருத்துவ கவனமும் பெண்கள் மீதான மருத்துவக் கவனமும் மூத்தோர் மேலான மருத்துவக் கவனமும் நல்ல நிலையில் இருக்கின்றன. இப்படியான மருத்துவ பிரச்சனைகளில் சீனியர் கென்சன்ரன்ஸ் கூடி தான் பொது முடிவெடுத்துச் செயற்படுவார்கள். ஏதேனும் தவறுகள் நிகழுமிடத்தில் அது பெரிய பிரச்சனையாகி விடும் என்பதால்.. தனி ஒருவர் ஆலோசனை சொல்லவோ அதன்படி செயற்படவோ முடியாது.

இந்தக் குழந்தையின் மீது தீவிர கவனம் எடுத்திருக்கிறார்கள் என்பதை அவரை இட்டு செய்திகளை கிரமமாகக் கண்காணித்து பிரசுரிப்பதில் இருந்தே தெரிகிறது. மூத்த வைத்திய ஆலோசகர்கள் பெற்றோருக்கும் இவை குறித்து விளக்கம் அளித்திருப்பர். தேவையான அதிநவீன சிகிச்சை முறைகளை தேவை ஏற்படின் இங்கிலாந்தில் பாவிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அந்த வகையில் நாம் இங்கு வைத்தியர்களுக்கோ பெற்றோருக்கோ.. பெரிசாக யாருக்கும் ஆலோசனை சொல்ல வேண்டி வராது. எம்மை விட நன்கு தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த பலர் இருக்கிறார்கள். வைத்தியர்களுக்கும் அந்தக் கடப்பாடு உண்டு. நிச்சயம் அவர்கள் இந்தக் குழந்தையை கைவிட மாட்டார்கள் என்பதை நிச்சயமாக நம்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

துஷா சீக்கிரம் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.