Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலையின் இரண்டாம் வருடம் – விடை பகரப்படாத வினாக்கள் : சபா நாவலன்

Featured Replies

genocideweek.jpg

அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது.

கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது.

இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரின் அழிப்பிற்கான காலகட்டம் தான்.

மக்களின் குருதியறைந்து, கொலைகளுக்கு நியாயம் சொல்லுகின்ற ஒரு புதிய கூட்டம் மாரிகாலக் காளான்கள் போல கோரமாய்ப் பரவிக்கொண்டிருக்கும் இக்கட்டான உலக சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு புறத்தில் இராட்சத வியாபாரிகள் ஆயிரமாயிரமாய் கொலைகளை நிகழ்த்திவிட்டு “வீர சிம்மாசனத்தில்” வீற்றிருக்க அவர்களின் பின்னால் இன்னும் ஆயிரம் “புதிய நியாயங்களோடு” குட்டி வியாபாரிகள் மக்களைச் சூறையாட அணிவகுத்து நிற்கின்றனர்.

வட கிழக்கு பௌத்த சிங்கள மயமாவதற்குக் கூட இலங்கை அரசின் தமிழ் உளவாளிகளும் அரசின் புலம் பெயர் நீட்சிகளும் நியாயம் சொல்கின்றன. நாளாந்த உணவிற்காக, குழந்தை செத்துப் போகாமல் வளர்வதற்காக அநாகரிகமான இராணுவத்திற்கு உடலை விற்கும் தமிழ்ப் பெண்களின் சோக வரலாறுகள் நெஞ்சைப் பிழிகின்றன.

புலம் பெயர் அரசியல் பொழுது ஒன்றாய், ஒரு குடையின் கீழ் அணிதிரள்வோம் என்ற குரல்களோடு எழுகிறது. முள்ளிவாய்க்காலில் மகிந்த அரசும் பேரினவாதமும் மனிதப்பிணங்களைக் குவித்துக்கொண்டிருந்த வேளையில் புலம் பெயர் சூழலில் ஈழக் கனவிம் கருப்பைக்குள் நெருப்பைச் சுமந்துகொண்டு லட்சம் லட்சமாய் ஐரோப்பிய, அமரிக்கத் தெருக்களில் தமிழீழ முழக்கங்களோடு ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்து பார்த்திருக்கிறோம்.

இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்கங்ளுக்குள்ளும் தம்மைச் செருகிக்கொண்டுள்ளனர்.

அரச உளவாளிகள் தமக்கு மனிதாபிமான முலாம் பூசிக்கொள்கின்றனர். தமக்கு “வேறு எதிர்ப்பு அரசியல் உணர்ச்சியிருப்பதாக” விரல்களை நீட்டி முழக்கமிடுகின்றனர். ராஜ மரியாதையோடு, இலங்கை விமான நிலயத்தில் வந்திறங்கும் கே.பியின் முகவர்கள் கூட தமது இலட்சியம் தமிழீழம் தான் எனக் கூறுகின்றனர்.

இந்த நிலையில் தான் இனப்படுகொலை நிகழ்வு இன்னொரு மாவீரர் நிகழ்வாக, இன்னொரு ஒன்று கூடலாக புலி சார் அமைப்புக்களால் கொண்டாடப்படுகிறது. இன்று வரை நாடுகடந்த தமிழீழமும், பிரித்தானியத் தமிழர் பேரவையும் ராஜபக்சவிற்கு எதிரார ஓரணியில் திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளன.

வன்னிப் படுகொலைகள் நிகழ்த்தப்பட்ட வேளையில் இலட்சோப இலட்சமாய் ஐரோப்பியத் தெருக்களில் ஒன்றிணைந்தும் ஏன் இனப்படுகொலையை நிறுத்த முடியவில்லை?

மூன்று லட்சம் பொது மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு, சிறுகச் சிறுக அழிக்கப்பட்ட போது ஏன் ஒன்றிணைவு மட்டும் பலனளிக்கவில்லை?

அமரிக்க சட்டலைட்டுகள் படம்பிடித்துக்கொண்டிருக்கும் போது நிகழ்த்தப்பட்ட அழிவுகள் இன்னும் ஏன் உலக மக்களின் கவனத்திற்கு வரவில்லை?

இன்றும் சூறையாடப்படும் வட-கிழக்கு மக்களின் அவலத்தை ஏன் நிறுத்த முடியவில்லை, குறைந்த பட்சம் அவர்களின் குரல் உலகிற்குக் கேட்கும் வண்ணம் எம்மை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை?

ஆக, “ஒரு குடையின் கீழ் இணைதல்” என்பது மட்டும் போதுமானதா?

http://inioru.com/?p=21238

  • தொடங்கியவர்

இரண்டு வருடங்கள் வெற்றுச் சுலோகங்களோடு கடந்துபோயின. அரச உளவாளிகள் புற்று நோய் போல புலம் பெயர் நாடுகளின் ஒவ்வொரு அங்கங்கங்ளுக்குள்ளும் தம்மைச் செருகிக்கொண்டுள்ளனர்.

அரச உளவாளிகள் தமக்கு மனிதாபிமான முலாம் பூசிக்கொள்கின்றனர். தமக்கு “வேறு எதிர்ப்பு அரசியல் உணர்ச்சியிருப்பதாக” விரல்களை நீட்டி முழக்கமிடுகின்றனர். ராஜ மரியாதையோடு, இலங்கை விமான நிலயத்தில் வந்திறங்கும் கே.பியின் முகவர்கள் கூட தமது இலட்சியம் தமிழீழம் தான் எனக் கூறுகின்றனர்.

http://www.youtube.com/watch?v=kjV-OtEoKNA&feature=player_embedded#at=123

... முதலைக் கண்ணீர் வடிக்கும் இரு சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகளை ... அதிலும் ஒருவர் தான் முன்னால் புலியாம் (யாழிலும் முதலைக்கண்ணீர் வடிக்க வெளிக்கிட்டு குட்டுடைபட்டு காணாமல் போனவர்!!!!!)... இவ்விணைப்பில் .... இவர்கள் மக்களுக்கு அடையாலம் காட்டப்பட வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்

(யாழிலும் முதலைக்கண்ணீர் வடிக்க வெளிக்கிட்டு குட்டுடைபட்டு காணாமல் போனவர்!!!!!).

ஹோ .. கு இஸ் திஸ் பிளாக் சிப்? அடுத்த மாதம் முதலில் இருந்து சுளுக்கெடுக்கும் பணி தொடரும்..

டிஸ்கி:

எனக்கு தற்சம்யம் வேறு முக்கிய பணிகள் உள்ளன... :(

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=kjV-OtEoKNA&feature=player_embedded#at=123

... முதலைக் கண்ணீர் வடிக்கும் இரு சிறிலங்கா புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரிகளை ... அதிலும் ஒருவர் தான் முன்னால் புலியாம் (யாழிலும் முதலைக்கண்ணீர் வடிக்க வெளிக்கிட்டு குட்டுடைபட்டு காணாமல் போனவர்!!!!!)... இவ்விணைப்பில் .... இவர்கள் மக்களுக்கு அடையாலம் காட்டப்பட வேண்டும் ...

இந்தக் கேள்வி நேரம் நானும் பாத்தேன் நெல்லையன்!

அடியும் விளங்கவில்லை! நுனியும் விளங்கவில்லை!

எங்களைக் குழப்புவதற்கென்றே தயாரிக்கப் பட்டது போல!

  • தொடங்கியவர்

ஹோ .. கு இஸ் திஸ் பிளாக் சிப்? அடுத்த மாதம் முதலில் இருந்து சுளுக்கெடுக்கும் பணி தொடரும்..

டிஸ்கி:

எனக்கு தற்சம்யம் வேறு முக்கிய பணிகள் உள்ளன... :(

... அது தன்னை முன்னால் புலியாம்!!!!!!!!!!!!????????????????(...சில நாளுக்கு முன், ரெலோ அழிப்பிற்கு மன்னிப்பு வேற கேட்டுதாம்!!!!!!!) ..._ ... அது புலியும் இல்லை, பூணையுமில்லை!!!! ... சிங்கம்!!!! ... புலி வேசம் போடப்பட்ட ..... என்ன, புலிகளுக்குள், புலிகளின் பலவீனத்தை பயன்படுத்தி யுத்த நிறுத்த காலத்தில் உள் நுளைக்கப்பட்டவர் .... இன்று ஓஓஓஒவென்று முதலைக் கண்ணீருடன் ... யாராவது இழிச்சவாய்கள் அகப்படாமலா போய் விடப்போகிறார்கள் .. (முன்பு சில இழிச்ச வாய்கள் இவர் போன்றோரின் வலையில் வீழ்ந்தது போல)???? .... பயோ டேட்டாவே இருக்கிறது!!!

சபா நாவலனின் அடுத்த தலையங்கம்-

டெலோ இயக்க போராளிகள் அழிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்.

முடிந்தால் நெல்லையன் அதையும் இங்கு இணைத்துவிடுங்கள்.நான் இணத்தால் தூக்கிவிடுவார்கள்.பின்னோட்டங்களையும் முடிந்தால் வாசியுங்கோ.எப்போ உண்மைகளை ஒப்புக் கொள்ளப்போகின்றார்களோ தெரியாது.

  • தொடங்கியவர்

ஐயா அர்ஜுன், அந்த ரெலோ இயக்க சிறிசபாரட்னத்தால் கேவலமாக திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டட ... ரெலோவின் வெற்றிகளுக்கு காரணமான தாஸ் அணியினர் ... மிக வஞ்சகமான முறையில் யாழில் படுகொலைகள் செய்யப்பட்டார்கள் ... இதே சிறிசபாரட்னம் அழிக்கப்படுவதற்கு முன்னுக்கு ... ... அதற்கு மேல் இந்த தாஸ் அணியினரது படுகொலையை எதிர்த்து ஊர்வலம் சென்ற பொதுமக்களும் கல்வியங்காட்டில் சுட்டுக்கொல்லப்பட்டதையும் ... சேர்ந்து எழுதச் சொல்லுங்கள்!!!!

... இயக்க அழித்தொழிப்புகளுக்கு ... சுழிபுரத்தில் புளொட்(அர்ஜுனின் முன்னால் தோழர்கள்) சார்ந்த கும்பலினால் நடாத்தப்பட்ட படுகொலைகளுக்கு பின்... நடந்த மிக பெரிய படுகொலை தாஸ் குழுவினரின் படுகொலைகளே!!! ... அட இந்த தாஸ் அணியினரது படுகொலைகளுக்கு இன்னும் இந்த ரெலோக்கள் மன்னிப்பு கேட்காத நிலையில் ....!!!!!!!!!!!!!!!!!!

தம்பி நெல்லையன் நீ எழுதும் அனைத்துவிடயங்களும் ஊர் அறிந்தவை.

புளொட் தலைமை அரசைவிட,புலியை விட எங்களுக்குத்தான் பயந்தது என்ற விடயம் உங்களுக்கு எப்படித்தெரியும். அவர்கள் பயந்தது தான் கடைசியில் உண்மையும் ஆனது.

குற்றமென்றால் அது யார் செய்தாலும் குற்றம் தான்.தாங்கள் செய்தது மாத்திரம் குற்றமில்லை என உலகிற்கு தெரிந்த உண்மை இவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கை.

நடந்தவிடயங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும்.நான் இருந்தவீட்டில் தான் செல்வம் அடைக்கலநாதன் பொபியை கூட்டிக்கொண்டு உமாவை சந்திக்க வந்தார்.(பொபியை இந்தியா கூட்டிக்கொண்டுவந்தது புளொட்தான்.மென்டிசை கொன்றதற்கு அதுவும் ஒரு காரணம் சொன்னார்கள்)வெளியில் சிவப்பு மாருதி காரில் சுதனும்,இன்னொருவரும் இருந்தார்கள் அவர்கள் இருவரும் தான் தாசை சுட்டவர்கள்.இப்போது இருக்கும் இடமும் தெரியும்.

கருணாவும்,பிள்ளையானும்,இனியபாரதியும் இன்னமும் விடுதலைப்புலிகளா?.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெல்லையன் நீ எழுதும் அனைத்துவிடயங்களும் ஊர் அறிந்தவை.

புளொட் தலைமை அரசைவிட,புலியை விட எங்களுக்குத்தான் பயந்தது என்ற விடயம் உங்களுக்கு எப்படித்தெரியும். அவர்கள் பயந்தது தான் கடைசியில் உண்மையும் ஆனது.

குற்றமென்றால் அது யார் செய்தாலும் குற்றம் தான்.தாங்கள் செய்தது மாத்திரம் குற்றமில்லை என உலகிற்கு தெரிந்த உண்மை இவர்களுக்கு தெரியாமல் இருப்பதுதான் வேடிக்கை.

நடந்தவிடயங்கள் அனைத்தும் எனக்கும் தெரியும்.நான் இருந்தவீட்டில் தான் செல்வம் அடைக்கலநாதன் பொபியை கூட்டிக்கொண்டு உமாவை சந்திக்க வந்தார்.(பொபியை இந்தியா கூட்டிக்கொண்டுவந்தது புளொட்தான்.மென்டிசை கொன்றதற்கு அதுவும் ஒரு காரணம் சொன்னார்கள்)வெளியில் சிவப்பு மாருதி காரில் சுதனும்,இன்னொருவரும் இருந்தார்கள் அவர்கள் இருவரும் தான் தாசை சுட்டவர்கள்.இப்போது இருக்கும் இடமும் தெரியும்.

கருணாவும்,பிள்ளையானும்,இனியபாரதியும் இன்னமும் விடுதலைப்புலிகளா?.

தாசண்ணனை பொபி சுடும்போது நான் அருகில் இருந்தேன்................ ஸ்ரீசபாரத்னம் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பதாவும் அவர் தாசை உடனடியாக சந்திக்கவிரும்புவதாகவும் வடமாரட்சிக்கு தகவல் ஆனுப்பபட்ட பின்பு.................... தனக்கு ஆப்படிக்க பொபியும் ஸ்ரீசபாரத்தினமும் முடிவுசெய்துவிட்டாகள் என்பதை கொஞ்சமாக உணர்ந்த தாசண்ணை ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்பு தனது நண்பனான கிட்டண்ணனிடம் இந்திய றோ பின்புலத்தில் இருக்கலாம் புளட்டும் ரெலோவும் சேர்ந்து புலிகளை அழிக்க பாரிய திட்டம் தயாரகிவிட்டது இதன் முதல் கட்மாக உனது நண்பன் என்ற ரீதியில் என்னை போட போகிறார்கள் எதற்கும் உண்மையை அறிய சென்று வருகிறேன் என்று சென்ற போதுதான்..............

யாழ்பெரியாஸ்பத்திரி கன்ரீனுக்கு அருகில் நடந்து சென்று பொபியிடம் (ஸ்ரீசபாரத்தினத்திற்கு) என்ன நடந்தது என்று வினாவியவாறே செல்லும்போது பொபியின் பாதுகவலரால் 9ம்ம் பிஸ்ரலால் நான்கு தடவைகள் சுடப்பட்டார்.

பின்பு வலிகாமத்திற்கு பொறுப்பாக இருந்த பொபியை யாழ்மாவட்ட பொறுப்பாளராக ஸ்ரீசபாரத்தினம் அறிவித்தபோது அதை வடமராட்சி ரெலோ உறுப்பினர்கள் மறுத்ததோடு தமக்கும்ரெலோவிற்கும் சம்மந்ததமில்லை என்று சொன்னார்கள்................ அவர்களுக்குள் வந்த இழுபறியே குறித்த நாளில் தீட்டிய திட்த்தின் படி புலிகளை அழிக்கும் திட்டம் பின்போடபட்டது.

பாண்டியன் நான் கொக்கா.......................! அந்த நாட்களிலேயே புலிகளின் சில உறுப்பினர்கள் புளட்டிலும். ஈபிஆர்ல்வ்விலும். ரெலோவிலும் இருந்தார்கள் அவர்கள் தப்பி ஒடிவந்து தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே...............

றோ கொடுத்த பெருந்தொகையான ஆயுதங்கள் மன்னார் கரைக்கு வந்துகொண்டிருந்தபோது மன்னார் கடற்கரையில் வைத்து 13ரெலோ உறுப்பினர்களை சுட்டுவிடுட்டு ஆயுதங்களை புலிகள் கைபற்றினார்கள் இது தீடிரென திட்மிட்டு நடத்தபட்ட தாக்குதல் இது பின்பு 1990ம் ஆண்டு மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ் சூறாவத்தை எனும் இடத்தில் சாவடைந்த மேஜர் சூட்டி தலமையில் நடந்தது............. இவர் உண்மையிலேயே ஒரு லெப்ரினன் கேணல் 1987ம் ஆண்டு புலிகளுக்குள் நடந்த ஒரு சிறு பிரச்சனை கரணமாக இயக்கத்தைவிட்டு விலத்தியவர் பின்பு சில பேச்சுவார்த்தைகளின் மூலம் 2வது நாள் மீண்டும் புலிகளுடன் சேர்ந்துகொண்டார் அதுவே இவரை மேஜர் தரத்திற்கு கொண்டுவந்திருக்கலாம்?????

இவ்வளவு நடந்த பின்பும் சகோதர யுத்தங்கள் சரியானது என்ற சிந்தனை எம்மிடம் இருக்குமானால், ஒரு நாளும் இந்த இனத்திற்கு விடுதலை கிடைக்காது. எந்தவித போராட்ட வடிவமானாலும் பல அதிகாரத் தலைமைகள் தோன்றி ஒருவரை ஒருவர் அழித்து கடைசியில் தானும் அழிந்து' ஈழத் தமிழனை இன்றிருக்கும் நிலையை விட மோசமான நிலைக்கு கொண்டு செல்லும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=85379&pid=659324&st=0&#entry659324

Edited by thappili

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.