Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

- புலத்தில் இருந்து ஓர் புலம்பல் VIII - எங்களால் முடிந்தது

Featured Replies

(எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க ) :wink: :P

ஆஹா நித்திலாவா? என்னால நம்பவே முடியாமல் இருக்கு :oops: :oops: :roll: :P

  • Replies 244
  • Views 31.3k
  • Created
  • Last Reply

அதே தான் அண்ணா அடிச்சா ஆள் மிஞ்சும் ஆனா அடிவாங்கிறவருக்கு நல்ல கொழுக்கட்டை கிடைக்கும்தெரியாதா :roll: :wink: (எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க ) :wink: :P

அப்ப அவங்களை கிச்சன் பக்கம் விடக்கூடாது என்றீங்க..! :lol:

முகத்தார் படிச்சுப்படிச்சு சொன்னவர்...இப்பதானே வருகுது பூரிக்கட்டை சமாச்சாரமெல்லாம்..! :wink: :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் வீட்டில 3 பேருக்கு சாத்தின அனுபவம் தான் நீங்க எதுக்கும் அண்ணி கிச்சனில இருக்கம் போது வம்பு பண்ணாம இருங்க

நித்தி.. இப்படி எல்லாம் நடக்குதா.. றொம்பப்பெருமையா இருக்கு.. தொடருங்க.. 999 க்கு அடிக்கடி வேலையே.. :wink: :P

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

ஆகா இப்ப தான் நித்தி எழுதியதை படித்தேன். 3 பேருக்கு சாத்தா?? அப்பா, அண்ணா , தம்பி எல்லாரும் நலமே இருக்கிறார்களா நித்தி??

அப்ப அவங்களை கிச்சன் பக்கம் விடக்கூடாது என்றீங்க..! :D

முகத்தார் படிச்சுப்படிச்சு சொன்னவர்...இப்பதானே வருகுது பூரிக்கட்டை சமாச்சாரமெல்லாம்..! :wink: :lol:

முகத்தார் படிச்சுப் படிச்சா சொன்னாரு :roll:

அவர் தான் அனுபவித்தத ரைப்பண்ணி ரைப்பண்ணியல்லவா சொன்னாரு :wink: :P

  • தொடங்கியவர்

புலத்தில் இருந்து ஓர் புலம்பல் - சுவையருவி

hoppers.jpg

சனிகிழமை காலை 6 மணி, 04 - 03 - 2006

அட ராஜன் வீட்டில் என்ன இன்று அதிசயமாக குடும்பமே அதிகாலையிலேயே எழுந்து வேலை செய்கிறார்கள்?!!

என்ன தான் நடக்கின்றது என்று பார்க்கலாம், வாங்கோ??

"ராதி இப்பவே சொல்லுறன் இது சுவையருவில குடுக்க வேண்டிய அப்ப மா. என்னுடைய மானத்தை வாங்கிபோடாதிங்கோ" மேற்சட்டையை போட்டவாறு மனைவின் அப்பமா கலவையில் சந்தேகம் கொண்டவனாக ராஜன்.

ராதிகா: "என்னங்க நீங்க, இப்பிடி கேட்கின்றீர்கள்?"

ராஜன்: "அதில்லை, இப்ப கொஞ்ச நாளா யாழ் களத்திற்கு போறிங்கள் தானே? அதில இருந்து வீட்டில சமையல் அந்த மாதிரி என்ன?"

ராதிகா: "இங்ச இதில எதுக்கு யாழ்களத்தை இழுக்கிறியள்?"

மா குழைப்பதை விட்டுவிட்டு கணவனை முறைத்து கேட்கிறாள்.

ராஜன்: "ச்சா ச்சா களத்தில நல்ல சமையல் குறிப்புகள் தான் போடுகினம்.ஆனா பாருங்கோ, போடுறபடி நீங்கள் செய்வதில்லை தானே?"

ராதிகா: "என்ன??"

ராஜன்: "இல்லை களத்தில சுண்டல் என்று ஒரு சின்ன பெடியன், நல்லா சமையல் குறிப்புகள் போடுகின்றான். அதை படிச்சனிங்களா என்று கேட்டேன்!"

ராதிகா: "ஓம். இங்ச உங்களுக்கு விசயம் தெரியுமே சுண்டல் அவுஸ்தெரேலிய பெடியனாம் என்ன?"

ராஜன்: "கிளிங்சுது போ போய் ஒரு கிழமையில யார் யார் எங்க இருக்கினம் என்று தெரிந்துவிட்டதா?"

ராதிகா: "இப்ப உங்களுக்கு அப்ப மா வேணுமா இல்லையா?

ராஜன்: "இன்று சிட்னியில சிலருக்கு பலன் சரியில்லை என்பது மட்டும் உறுதி, சரி சரி கெதியா செய்து தாங்கோ. நான் கொண்டு போக முதல் சுவையருவி முடிய போகுது"

குளித்துவிட்டு வெளியே வந்த புவனேஸ்வரி,

"டேய் 6 மணிக்கே சுவையருவி ஆரம்பமாகுதா?கதை விடுறியா?"

ராதிகா: "அப்பிடி கேளுங்க மாமி, வேலையை செய்யவிடாம பக்கத்தில நின்றுகொண்டு தொண தொணக்கிறார்"

ராஜன் (தனக்குள்ளே): "மாசத்தில இன்று ஒரு நாள் தான் காலமை எழும்பி வேலை செய்வது. இதுக்கே இப்பிடி அலட்டுகினம்"

சுவையருவி நடக்கும் இடம். ஈழத்தின் மேல் பற்று கொண்ட தமிழர்களில் சிலர் (பலருக்கு இன்னும் தூக்கம் கலையவில்லை) சிற்றுண்டி விற்பதற்கும், சமைப்பதற்கும் தேவையானவற்றை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

ராஜன் தனது அப்பமா கலவையுடன் வருகிறார்,

சிவா: "வணக்கம் ராஜன், வாங்கோ"

ராஜன்: "வணக்கம் சிவ அண்ணே, என்ன வேலையள் ஆரம்பாச்சு போல?"

சிவா: "ஓமோம் செய்ய வேண்டியது நிறைய கிடக்கு தானே, அது தான் காலமையே தொடங்கினா தான் சரி"

ராஜன்: "சில சனம் காலமை சாப்பாடுக்கே வரும் தானே"

சிவா: "ஓம் எங்கட சனத்தில சிலதுக்கு வழமையான சாப்பாட்டு கடையில தான் சாப்பிடவேணும். சிலர் நல்ல ஆக்கள் என்ன. நாங்கள் ஒரு நல்ல காரியத்திற்காக நடத்திறது என்று குறை நிறை சொல்லாம வந்து வாங்கி கொண்டு போவினம்"

ராஜன்: "நான் கேட்க வேண்டும் என்று நினைத்தனான் அண்ணே, சுவையருவி நடக்கிறா நாளில மற்ற கடைக்காரர் ஏதாவது உதவி செகிறவையா?"

சிவா: "சிலர் நல்ல மனமா உதவி செய்வினம். பலர் அன்று பார்த்து நாங்கள் என்ன சாப்பாடு சமைக்கிறமோ அதை அவையளும் செய்வினம் என்ன? இதுகளை கதைச்சா மனிசனுக்கு மண்டை தான் காயும் ராஜன்"

ராஜன்: "ஆனா என்னை பொருத்த வரையில் இன்பதமிழ் ஒலி வானொலி நல்ல உதவி செய்யினம் என்ன சிவா அண்ணே?"

சிவா: "ஓமோம் அவைக்கு எப்பவும் நன்றி சொல்ல வேணும், ராஜன் குறை நினைக்காம இந்த கொத்துரொட்டி அலுவலை பாருங்கோ தம்பி. நான் புரியாணி வேலையை ஆரம்பிக்க போறன்"

இருவரும் தமது வேலைகளில் மும்மரமாக இருக்கின்றார்கள். இன்னும் சில ஈழப்பற்றாளர்கள் அவரவருக்கென கொடுக்க பட்ட வேலைKஅலை செய்து கொண்டு இருக்கும் போது, மக்கள் வரத் தொடங்குகின்றனர்.

ராஜன் கொத்துரொட்டி வேலையில் இருக்கும் போது செல்லப்பா என அழைக்கப்படும் முதியவர் வருகிறார்.

செல்லப்பா: "தம்பி எப்பிடி சுகம்?"

ராஜன்: "இருக்கிறம். சொல்லுங்கோ?"

செல்லப்பா: "என்னத்த சொல்ல மனிசி இண்டைக்கு சுவையருவில தான் சாப்பாடு என்று சொல்லிபோட்டா. அதுதான் ஏதோ நம்மளால முடிந்த உதவிகளை செய்துவிட்டுச் சாப்பாட்டையும் வாங்கிக்கொண்டு போகலாம் என்று..."

ராஜன் (மனதிற்குள்) : "உதவியா? உபத்திரம் பண்ணாமல் இருந்தாலே போதுமே"

செல்லப்பா: "தம்பி ராஜன் உங்களை போல சின்ன பெடியள் இப்பிடி வந்து உதவி செய்வதை பார்க்க சந்தோசமா கிடக்குது"

ராஜன்: "உங்கட பிள்ளைகள் வருவதில்லையா?"

செல்லப்பா: "அவைக்கு எங்க நேரம் கிடைக்குது? பிள்ளையள் பாவம் 5 நாளும் வேலை வேலை என்று போட்டு, ஏதோ சனி, ஞாயிறில தானே ரெஸ்ட் எடுக்குதுகள்"

ராஜன்: "ஓமோம்"

(மனதிற்குள் : "நாங்கள் எல்லாம் 5 நாளும் சும்மா இருந்து போட்டு தானே இஞ்ச வந்து நிற்கிறம்"

செல்லப்பா: "தம்பி போன முறை கலக்ஸன் எப்பிடியாம்?? இந்த காசு விசயங்கள் எப்பிடி தம்பி நடக்குது?"

ராஜன்: "எனக்கு இதை பற்றி எல்லாம் அவ்வளவாக தெரியாது. அங்க பாருங்க அதில தான் நிர்வாகி நிற்கிறார். அவரிட்டை கேளுங்கோவன்"

(மனதிற்குள்): "என்னடா மனிசன் இதை கேட்கவில்லையே என்று பார்த்தேன்

செல்லப்பா: "இல்லை தம்பி மனிசி தேடுவா, நான் கிளம்புறன், அது சரி தம்பி கடசியில ஒரு ஊர்காரர் தானாமே இஞ்ச வேலை செய்வது. பலர் பெயருக்கு தானே இங்க வந்து போட்டு போறதாம்"

ராஜன்: "இங்கு ஒரு நல்ல விடயத்திற்காக எல்லாரும் வேலை செய்யிறம். இதில ஊர் பிரச்சனை, கிராமா பிரச்சனை எல்லாம் வேண்டாம். உங்கள அன்ரி தேட போற, சாப்பாடு வாங்கிட்டிங்களா?"

செல்லப்பா: " ஓம் வாங்கிட்டன்"

ராஜன்: "என்ன அது ஓ 2 வடையா?? சரி சரி போய்ட்டு வாங்க"

செல்லப்பா அவ்விடத்தை விட்டு நகர ராஜன் மனதிற்குள் "நல்லது செய்ய வந்தா இப்பிடி எத்தனை செல்லப்பாக்களை சகித்து கொள்ள வேண்டி இருக்கு!!"

சுவயருவி இனிதே நடந்து நிறைவேற,புலம்பலுக்கு ஒரு சிறு இடைவேளை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. :P (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா..நல்லா எழுதிறீங்க......நல்ல நகச்சுவையா இருக்கு..தொடர்ந்து எதிர் பார்க்கிறம்....

ராஜன் வீட்டு புலம்பல் சூப்பர்..... :wink: தொடருங்கள் தூயா.... வாழ்த்துக்கள்...!

சுண்டல் அண்ணாவைப் பற்றிய தகவலும் தெரிந்தது.... :wink: :)

ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ?

  • தொடங்கியவர்

ம்ம்ம் நேற்று நல்ல புரியானி போட்டஙகப்பா.... ஒரு வெட்டு வெட்டினோம்ல... :oops: :oops: :oops:

உங்களை வேலை செய்ய தேடுகிறார்களாம்? போகவில்லையா? சாப்பிட தான் போய் இருக்கிங்க போல ;) சாப்பிடுறதும் ஒரு வகையான பங்களிப்பு தானே ;)

ராஜா வீட்டு புலம்பல் நல்லாயிருக்கு. ஆமாம் இந்த சுவையருவிக்கு நீங்க போறதில்லயா தூஊஊஊஊஊஊஊயாஆஆஆஆஆஆஅ?

சுவையருவி நடக்கும் இடத்திற்கு போவதிலை. ஆனால் ராஜனின் மனைவியை போல் உதவிகள் செய்வதுண்டு. ஆனால் எங்கட குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயம் உதவிக்கு போவார்கள். பதிலுக்கு மிக்க நன்றி.

இப்படி சுவையருவி நடத்தினமா.. நல்ல விசயங்கள்.. தெரியப்படுத்திறியள் நன்றி தூய்்ஸ்.. பறவாய் இல்லையே.. றாஜன் வீட்டில யாழைப்பற்றிக்கதைக்கினம்.. ம் ம்.. :P (தூய்ஸ் சில இடங்களில ஒரு சில எழுத்துப்பிழை இருக்கு.. மறுபடி ஒரு தரம் பாத்தியள் என்றால் பிடிச்சுப்போடுவியள்.)

ஏதோ சில நல்ல விடயங்களை உலகுக்கு தெரியபடுத்தின பெருமை/புண்ணியம் கிடைக்குமே அக்கி .

யாழை பற்றி யார் தான் கதைக்கவில்லை

எழுத்துபிழைகளை முடிந்தவரை திருத்திவிட்டேன். இப்ப அருவி என்ன பிழை இருக்கு என்று பார்க்கின்றார். கண்டு பிடித்து மாற்றிவிடுகிறோம்.

à¡ ! «Õ¨Á ¦¾¡¼Õí¸û . Å¡úòÐì¸û

  • தொடங்கியவர்

தூயா..நல்லா எழுதிறீங்க......நல்ல நகச்சுவையா இருக்கு..தொடர்ந்து எதிர் பார்க்கிறம்....

மிக்க நன்றி ஜெனனி.

ராஜன் வீட்டு புலம்பல் சூப்பர்..... :wink: தொடருங்கள் தூயா.... வாழ்த்துக்கள்...!

சுண்டல் அண்ணாவைப் பற்றிய தகவலும் தெரிந்தது.... :wink: :)

சுண்டல் அதை பார்க்கவில்லை போல ;) ஆள் புரியாணி மயக்கத்தில இருக்கிறார் போல ;). நன்றீ அனிதா.

à¡ ! «Õ¨Á ¦¾¡¼Õí¸û . Å¡úòÐì¸û

நன்றி செந்தில். :P

சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops:

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

சும்மா சொல்ல கூடாது. உங்களுக்கு எல்லாம் நல்ல மனசு தான். என்னுடைய எழுத்துபிழைகளை பார்த்தும் என்னை பாராட்டுகின்றீர்களே :oops: :oops: :oops:

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பத்தியும் பேசுறாங்களா? :oops: :oops:

தூய்ஸ் எனக்கும் நேரம் கடைக்கும் போது நானும் வந்து உதவி செய்யிறன்...அப்புறம் ஒவn;வாரு வாட்டியும்...கட்டாயம் சாப்பிட வருவம்ல.... :oops: :P

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

என்ன தல டென்ஷன் ஆகிறிங்க... :):D

தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க :P :P

சுண்டலில ஏதும் கோபமா பபா இல்லை சுண்டல் சமையல் குறிப்பு போடுறத மட்டும் சொல்லி சுண்டலின்இமேஜை வாரிட்டீங்களே :P :):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். :P

அருவி.. எழுத்துப்பிழை பற்றி. நொட்டைக்காக சொல்லவில்லை.. நான் விட்ட பிழையை பிறர் கவனிக்காது கருத்துச்சொல்ல யாரோ சுட்டிக்காட்டிய நினைவு.. அதற்காத்தான் கூறினேன்... நிறைய தட்டச்சுச்செய்யும் போது.. மாறி பிழை வருவது எனது சொந்த அனுபவம். அதைத்தான் சுட்டிக்காட்டினேன். :P

இது எழுத்துப்பிழைக்காகச் சொல்லப்படவில்லை தமிழினி. தூயா எடுத்துக் கொண்ட கருத்திற்காகச் சொல்லியிருந்தேன். பதிவை இடும் போது இப்படி ஒரு கருத்து வரும் என நினைத்திருக்கவில்லை. இப்போது மாற்றிவிட்டேன் அதன் மூலம் தெளிவாகியிருக்கும் என்று எண்ணுகிறேன். அக்கருத்து உங்கள் மனதை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள் :(:(

என்ன தல டென்ஷன் ஆகிறிங்க... :(:(

யாருப்பா ரென்ஷன் ஆகினது. :roll: :roll: :roll: :roll:

துயாவின் -புலத்திலிருந்து புலம்பல்- நன்றாக இருக்கு!8)

வழமையா எல்லா இடத்திலயும் - எல்லாரும் செய்யுறத பப்ளிக் ல போட்டு உடைக்கிறீங்க -!

பேசாமல் தலைப்பை - தூயாவின் "புலத்திலிருந்து ஒரு போட்டு கொடுத்தல்" என்று மாத்திடுங்க-! :wink: :wink:

தூயா புலம்பல்ஸ் அந்தமாதிரிப் போகுது..

தூயா புலம்பல் இன்று வாசித்தேன்

நன்றாய் இருக்கின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் தூயா.

தாமும் செய்யமாட்டார்கள் மற்றவர்கள் செய்யவந்தாலும் ஏதாவது நொட்டை சொல்லும் எம்மவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ.

பொதுவாக அனைவரும் எழுத்துப்பிழைகள் விடுகிறார்கள். அதை அறிந்து திருத்திக்கொள்வதைப் பார்க்க மகிழ்வாக இருக்கிறது.

தூயா பபா நல்லா எழுதுறீங்க தொடர்ந்து எழுதுங்க :P :P

சுண்டலில ஏதும் கோபமா பபா இல்லை சுண்டல் சமையல் குறிப்பு போடுறத மட்டும் சொல்லி சுண்டலின்இமேஜை வாரிட்டீங்களே :P :lol::lol:

ஆகா சுண்டல் பேசம இருக்க, நீங்களே சொல்லிகாட்டி என்னை மாட்டி வைக்கிறிங்களே ;) நன்றி நித்தி , எப்பிடி சுகம்??

மிக்க நன்றி அருவி.

எழுத்துபிழைகளை கண்டுபிடிக்க உதவி செய்ததிற்கு மிக்க நன்றி :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.