Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுவால் அழிந்த தமிழ் வரலாறு.

Featured Replies

தமிழ் மக்களின் வாழ்வை சீரழித்து வரும் விடயங்கள் என்று பட்டியலிட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல்இ சாதிஇ மதம் என்று பலரும் பட்டியலிட்டுக் காட்டுவது வழமையாக இருந்தது. இந்த மூன்று விடயங்களும் இப்பொழுதும் சமுதாயத்தை சீரழித்து வருவதை நிறுத்தியதாகக் கூற முடியாது. ஆனால் இவைகளை வேகமாக முந்திக் கொண்டு மதுபானமும் தொடர் நாடகங்களும் சமுதாயத்தை சீரழிப்பதில் இப்போது முதன்மை இடத்தைப் பிடித்துவிட்டன. இக்கட்டுரை மதுபானம் பற்றிப் பேசுகிறது அடுத்த கட்டுரை தொடர் நாடகத்தைப் பற்றிப் பேசும்.

யாரும் எதிர் பார்க்காமல்இ எந்த அறிஞரும் முன்னெதிர்வு கூறாமல் இவை இரண்டும் சமுதாயத்தின் தலைமைச் சீரழிவுக் கருவிகளாகிவிட்டதால் இவை பற்றிய தனியான கவனமெடுத்து சிந்திக்க வேண்டியிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல்இ மதம்இ சாதி ஆகியன நேரடி உயிர் கொல்லிகளாக மாற பெருந்தொகையான மக்கள் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

இவர்களுடைய புலப்பெயர்வுக்கான காரணங்களை எல்லாம் பேசி காலத்தை அழித்துக் கொண்டிருக்க கண்ணுக்குத் தெரியாத அருவமாக மதுபானமும்இ தொடர் நாடகங்களும் மக்கள் வாழ்வை கன வேகத்தில் சூறையாடிவிட்டன. உலக வரலாற்றில் போரால் சீரழிந்த இனம்இ இயற்கை அனர்த்தத்தால் சீரழிந்த இனம் என்றுஇ சீரழிந்த ஒவ்வொரு இனங்களுக்கும் ஒவ்வொரு பெயர் கொடுத்திருப்பார்கள். உலகில் மதுவால் அழிந்த சமுதாயம் எதுவெனத் தேடுவீர்களானால் அது தமிழினம்தான் என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரும். அந்த நிகழ்வுகளை இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

காதல்இ வீரம் என்று நாம் புகழ்ந்து போற்றும் சங்ககால சமுதாயம் ஒட்டு மொத்தமாக அழிந்து ஆரியர்களின் கையில் வீழ்ந்தமைக்கு தலைமைக் காரணம் மதுபானம்தான் என்கிறது தொல்காப்பியம். பொய்யும் வழுவும் தோன்றி பின் ஐயர் வகுத்தனர் கரணம் என்ப என்ற பாடல் மூலம் தொல்காப்பியரே இதை உறுதி செய்துள்ளார்.

மதுவினால் ஒழுக்கம் சீரழிந்து சமுதாயமே பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது ஐயர்கள் என்னும் ஆரியர்கள் மிக இலகுவாக அவர்களை அடிமைப்படுத்தினர். திருக்குறள்இ திரிகடுகம்இ ஆசாரக்கோவைஇ இன்னாநாற்பதுஇ இனியவை நாற்பது போன்ற நீதி நூல்களால் சமுதாயத்தை திருத்துவதற்கான அத்தனை பணிகளையும் பலர் செய்தனர்இ அவைகளால். சமுதாயம் ஓரளவு காப்பாற்றப்பட்டாலும் தமிழர்கள் என்ற சுயம் அழிந்து போனதை எந்த நீதி நூல்களாலுமே மீட்க முடியாது போய்விட்டது.

இதுபோல சோழர்காலத்திற்குப் பிறகு வந்த அன்னிய ஆட்சியான நாயக்கர் காலத்திலும் தமிழ் மக்கள் மிகப்பெரிய குடிகார இனமாக இருந்திருக்கிறார்கள். மதுவின் உளவியலால் அழிந்துஇ எதிர் மறையாக சிந்தித்து ஐரோப்பியர்களின் கைகளில் அடிமையாக விழுந்தனர். அதனால் நானூறு வருடங்களாக அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.

இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்தைஇ தமிழருக்கான தன்மானத்தை மீட்டெடுக்கப் போராடிய சில மன்னர்கள் இருந்ததை மறுக்க இயலாது. எல்லோரையும்இ எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக நாம் குறை கூற முடியாது. தீமைகளிடையே நன்மைகளும் இருப்பது போலவே இத்தகைய தன்மான முள்ள அரசர்களும் நம்மிடையே இருந்துள்ளனர். ஆனால் இலங்கையாகட்டும்இ தமிழகமாகட்டும் இரு இடங்களிலுமே இப்படியான மன்னர்களை இவர்களோடு இருந்தவர்களே காட்டிக் கொடுத்து தூக்குக் கயிற்றில் தொங்க வைத்தார்கள். காட்டிக் கொடுத்த அத்தனைபேரையும் மதுவுக்கு அடிமையாக்கியே எதிரிகள் காரியம் சாதித்தார்கள்.

இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னனான சிறீவிக்கிரமராஜசிங்கன் சிங்களவனல்ல தமிழன்தான். சிறந்த கூரிய புத்தியுடையவனான இவன் தனது ஆட்சியின் பிற்காலத்தில் மிகப்பெரிய குடிகாரனாக இருந்தான். 15 ம் நூற்றாண்டில் இலங்கை வந்த ஐரோப்பியர் 18 ம் நூற்றாண்டுவரை கைப்பற்ற இயலாதிருந்த கண்டி இராட்சியத்தை கைப்பற்ற மதுபோதையால் மழுங்கிப் போன இவனுடைய மூளையும் ஒரு காரணம். மது போதை தலைக்கேறி தனது பிரதானி ஒருவனுடைய பிள்ளையை கண்ட துண்டமாக வெட்டி உரலில் போட்டு இடிக்கச் செய்யுமளவிற்கு இவனுடைய அறிவு மழுங்க மதுவே பிரதான காரணம்.

யாழ். குடாநாட்டை சூரியக்கதிர் மூலம் சிங்கள இராணுவம் கைப்பற்றியதாகக் கூறப்படுவது பெரிய விடயமல்ல. குடாநாடு சென்று சகல நிலமைகளையும் ஒரு தடவை சுற்றிப்பாருங்கள். மதுபானம் அங்கு அரசனாக கொலுவீற்றிருப்பதைக் காண்பீர்கள். இராணுவத்துடன் இணைந்து மதுபானத்தை எடுத்துச் செல்லும் ஈழத் தமிழரையும் அங்கு காண்பீர்கள். போதைமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் சிங்கள இராணுவம் கணிசமான வெற்றி பெற்றிப்பதை நீங்கள் காண்பீர்கள். இப்படி போதையூட்டியவர்களை வைத்தே சகல தகவல்களையும் அவர்கள் பெற்றுவிடுகிறார்கள் என்பதையும் அங்கு நடைபெறும் சம்பவங்களால் உணர்வீர்கள்.

எப்போதுமே அன்னியர்களின் ஆட்சிஇ நம்பிக்கை வரட்சி போன்றன மக்களை மதுபானத்திற்கு அடிமையாக்குகிறது. இன்றுள்ள தமிழ் மக்களிடையே எதிர் காலம் என்ன என்ற கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது யாருக்குமே கடினமானதுதான். பிள்ளைகள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு தயாராகஇ தாய் நாட்டில் அமைதி கால் நூற்றாண்டுகளாக முடிவில்லாமல் இழுபட்டுப்போக அந்த விடையில்லாத வெற்றிடத்தில் மதுபானமே அமர்ந்து விடுகிறது. வெளி நாடுகளில் இருபது வருடங்களாக மாடாக உழைத்து கண்ட மிச்சம் என்ன என்ற கேள்விக்கு மன அமைதி தரும் பதில் கூற முடியாத நிலையில் இருக்கும் மக்களை மதுபானம் இலகுவாக அடிமை கொண்டுவிடுகிறது.

மதுபானத்தை நிறுத்துங்கள் என்று கூறுவதைவிட அதை நிறுத்துவதற்குரிய பின்னணிகளை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுவதே இனிப் பொருத்தமான வாதமாகும். மக்கள் தமது வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்குரிய சூழலை உண்டு பண்ண வேண்டும். கடைசிவரை வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற தகவலை மக்களுக்குக் கொடுக்க வேண்டும். கலைகளினூடாகவும் ஊடகங்களினூடாகவும் இந்தக் காரியத்தை திட்டமிட்டு செய்ய வேண்டும். சமுதாயவியல் அறிஞர்கள் என்று எவரும் இல்லாத பேதைச் சமுதாயமாக நாம் தொடர்ந்தும் இருந்தால் இந்தச் சிக்கலில் இருந்து விடுபட முடியாது. இருந்தால் மதுபானத்தில் இருந்து அடுத்த கட்டமான போதை வஸ்த்துக்குள் இளைய தலைமுறை வீழவதைத் தடுக்க முடியாமல் போகும். சமூகத்தைக் காக்க வேண்டிய பணிகளில் யாரும் பொறுமை காத்தல் கூடாது. காரியங்களை செய்யாமல் காத்திருப்பது நன்மைக்குரிய செயல் அல்ல அதுதான் சுடுகாட்டுக்குப் போகும் வழி என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மது அருந்துவோர் கூடாதவர்கள் மது அருந்தாதவர் நல்லவர் என்ற கோணத்தில் இதை அணுகுதல் கூடாது. கடந்த காலங்களில் நீதி நூல்கள் விட்ட தவறே இங்குதான் இருக்கிறது. நல்லவர் கூடாதவர் என்றது ஒரு விடயம்இ மதுபானம் அருந்துவது அருந்தாமல் விடுவது என்பது இன்னொரு விடயம். இரண்டையும் இந்த விவகாரத்தில் ஒன்றாக்கி குழப்பம் விளைவித்ததுதான் சமயவாதிகள் விட்ட தவறு. மேலைநாட்டு அரசுகள் அப்படி ஒரு கோணத்தில் மதுபானம் தொடர்பான விடயங்களை கையாளவில்லை. அதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலை நாடுகளில் பெரும்பாலானவர்கள் மது அருந்துகிறார்கள். மது அருந்துபவர்கள் எல்லாம் தீயவர்கள் என்றால் இந்த நாட்டில் எல்லோருமே தீயவர்கள்தான். ஐரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் எல்லோருமே மதுக்கிண்ணத்துடன் நிற்கும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அதை வைத்து அந்தத் தலைவர்கள் எல்லோருமே தீயவர்கள் என்று சொல்ல முடியாது.

நீதி நூல்களிலும்இ சமயங்களிலும் வகுக்கப்பட்ட பஞ்சமா பாதகங்களில் ஒன்று என்ற கோணத்தில் இதைப் பார்க்க முடியாது. கி.பி 300 ம் ஆண்டில் வாழ்ந்த மனிதனை மிரட்ட பாவித்த நரகலோகத்தையும்இ கன்மக் கோட்பாடுகளையும் இன்றைய மனிதனிடம் பேச முடியாது. அவைகளின் காலம் முடிவடைந்துவிட்டது. புதிய உலகில் மதுபானம் மனிதனுடன் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவருகிறது. அதை நம்மால் முற்றாகத் தடுக்க இயலாது. ஆனால் அதைக் கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஆன்மீக hPதியாக இன்றைய மனிதனுக்கு சொல்ல இயலாது. ஆகவேதான் சட்டத்தினால் அது தடுக்கப்படுகிறது. போதை வஸ்த்து கடத்தினால் மரணதண்டனை என்ற சட்டத்தை சிங்கப்பூர் போன்ற நாடுகள் விமானத்தில் இருக்கும்போதே அறிவித்துவிடுகின்றன. அவர்களுடைய ஆன்மீகத்தால் முடியாது என்றபடியால்தான் அவர்கள் மரணதண்டனைக்கு வந்திருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் குறிக்கப்பட்ட வயதுக்குட்பட்டவர்களுக்கு கடைகளில் மதுபானம்இ சிகரட் போன்றவைகளை விற்க முடியாதென சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கடைகளில் வார இறுதியில் மதுபானம் விற்க தடை இருக்கிறது. மதுபானம் விற்பதற்கான விசேட அனுமதிகள் எல்லாம் சட்டங்களினால் வரையறை செய்யப்பட்டுள்ளன. உளவியல்இ பொருளாதாரம்இ எதிர்கால சமுதாய உருவாக்கம் போன்றவற்றுக்கு அமைவாக இந்த சட்டங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

புலம் பெயர் தமிழ் மக்களும் இந்த சட்டவிதிகளுக்குள் வந்தாலும்இ அவர்கள் தமிழர்கள் என்பதால் தமிழ் சமுதாயத்திற்குரிய அளவில் மேலும் சில விதிமுறைகள் அவசியமாக இருக்கின்றன. இன்று தமிழர் நடாத்தும் சகல கொண்டாட்டங்களிலுமே மதுபானம் இருக்கிறது. திருமணம்இ பிறந்தநாள் போன்ற விழாக்களில் அது ஒரு கலாச்சார அடையாளமாகவே மாறிவிட்டது. கூர்ந்து கவனித்துப்பார்த்தால் தமிழ் மக்கள் செய்யும் ஒவ்வொரு காரியங்களிலுமே மதுபானம் மிகக் கச்சிதமாக நுழைந்து விடுகிறது. மத ஆசாரங்களுடன் கூடிய திருமண வீட்டில் சம்பெயின் உடைப்பது கூட இன்று தமிழ் கலாச்சாரமாகிவிட்டது. இது தமிழனின் வெற்றியல்ல தமிழனை மதுபானம் வென்றதற்கான அடையாளம்.

மற்றைய சமுதாயங்களை எடுத்துக் கொண்டால் மதுபானத்தை கட்டுப்படுத்துவதற்கான சட்டங்கள் பெருகியபடியே இருக்கின்றன. டேனிஸ் வெளிநாட்டு அமைச்சு உலகமெல்லாம் உள்ள தனது காரியாலயங்களில் புகைத்தலை முற்றாகத் தடை செய்துவிட்டது. புகையிரதங்களில் கூட புகைத்தல் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புகைத்தல் புற்று நோயை உண்டு பண்ணும் என்ற உண்மையை இப்போது வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள். போதையூட்டும் சகல விடயங்களுமே வெளி நாடுகளில் சட்டங்களால் இறுக்கப்பட்டு வருகின்றன.

இதைக் கூர்ந்து பார்த்து நாமும் புதிய சமுதாய சட்டங்களை உருவாக்குதல் வேண்டும். பிள்ளைகள்இ குடும்பங்கள் ஒன்று கூடும் கொண்டாட்டங்களில் இருந்து மது பானத்தை முற்றாக அகற்ற வேண்டும். அழைப்பிதழ் தரும்போதே மதுபானம் நீக்கப்பட்ட விழாஎன்பதை கீழே அச்சடிக்க வேண்டும். யார் மீதும் கோபமோ வெறுப்போ இதற்குக் காரணமல்ல சமுதாயத்தின் நெறி குறித்து நாம் சிந்திப்பதால் இப்படி செய்கிறோம் என்று உண்மையைப் புரிய வைத்தல் வேண்டும்.

மேலும் இது குறித்து பலமான கருத்தாடல்களை ஊடகங்களின் மூலம் வளர்க்க வேண்டும். இலங்கையை வாலகம்பா என்ற சிங்கள அரசனிடமிருந்து கைப்பற்றிய ஐந்து தமிழர்கள் மதுவில் மூழ்கி ஆட்சிக் கதிரைக்காக ஒருவரை ஒருவர் குத்திக் கொன்றுஇ கடைசியில் எஞ்சிய ஒரு தமிழன் சிங்கள அரசனின் வயதான மனைவி சோமாவதியை தூக்கிக் கொண்டு தமிழ் நாட்டுக்கு ஓடிஇ சிங்களவரிடம் மறுபடியும் ஆட்சியை ஒப்படைத்தான். இந்தக் கதையை நாம் மறந்துவிடக் கூடாது. நம்மை என்றும் ஆளும் இனம் என்ற ஸ்தானத்தில் இருந்து வீழ்த்தி ஆளப்படும் இனமாக வைத்திருக்கக் காரணமாயிருப்பது மதுதான் என்பதை மறந்துவிடலாகாது.

மதுவை அருந்தும் எவரையும் இக்கட்டுரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. மது அருந்த வேண்டாமெனவும் புத்திசொல்ல வரவில்லை. மதுவால் அழிந்த தமிழ் வரலாற்றை ஒரு தடவை சிந்தித்துப் பாருங்கள் என்று மட்டும் தயவுடன் கேட்கிறது.

அலைகள்

நர்மதா அருமையான கட்டுரையை இங்கு இனைத்து உள்ளீர்கள்... நன்றிகள்

மதுவால் ஒரு குடும்பம் அழிந்து இப்போ நமது கலாச்சாரத்தையும் அழித்தும் வருகின்றது என்பது கவலைக்குரிய விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடி குடியை கெடுக்கும் என்பார்கள்..அது குடியை மட்டுமல்ல சுற்றியுள்ள சமூகத்தையும் கெடுக்கும் என்பதை தெளிவாக காட்டி நிற்க்கிறது. கட்டுரைக்கு நன்றிகள் (உங்களுக்கும் அலைகளுக்கும் )

குடி குடியை கெடுக்கும் என்பார்கள்..அது குடியை மட்டுமல்ல சுற்றியுள்ள சமூகத்தையும் கெடுக்கும் என்பதை தெளிவாக காட்டி நிற்க்கிறது. கட்டுரைக்கு நன்றிகள் (உங்களுக்கும் அலைகளுக்கும் )

ஒரு பிளானேடைதான் இந்த கட்டுரையை வைச்சிருக்கிறீயள் எல்லாம் நம்மடை கூட்டத்தை தாக்கிற மாதிரிக் கிடக்கு .........icon_cry.gificon_cry.gif

மது மட்டும் அல்ல சூது ஆட்டமும் தமிழனை பிடித்த பீடை தான்....

ஒரு பிளானேடைதான் இந்த கட்டுரையை வைச்சிருக்கிறீயள் எல்லாம் நம்மடை கூட்டத்தை தாக்கிற மாதிரிக் கிடக்கு .........icon_cry.gificon_cry.gif

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

புலத்தை பொறுத்தவரையில் அதற்கு அடிமைபடாமல் அளவோடு இருக்கும்வரை அது ஒரு பெரிய பிரச்சனையல்ல என்பதே எனது கருத்து.

சின்னப்பு உங்களுக்கு சப்போட்டா சொல்லியிருக்கு. காசை மறக்காம அனுப்பி விடுங்க.

சிலபேர் குடிப்பதற்க் ஏத்தனையோ காரணம் சொல்லுவார்கள் பார்த்திருக்கிறேன்..பட் தாங்கள் தான் காரணம் என்று எவரும் சொன்னதில்லை...

குடிக்கிறதில் கூட அளவாக குடித்து வாழுவோம் என்பவர்கள்..சில காலகட்டத்தின் பின் மாறி விடுவர்.. :?

எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்று கூறுவது தமிழனின் ஆணவத்தைக் காட்டுகிறது...

ஆணவத்தை விட்டு விட்டு, இனி மேலாவது ஆகவேண்டியதை பார்ப்போம்.....

எவ்வளவு குடிச்சாலும் நான் ஸ்டெடியாக இருப்பேன் என்று கூறுவது தமிழனின் ஆணவத்தைக் காட்டுகிறது...

ஆணவத்தை விட்டு விட்டு, இனி மேலாவது ஆகவேண்டியதை பார்ப்போம்.....

ராஐா லுக்கு அதுக்கு பேர் ஆணவம் இல்லம்மா தில்லு இப்ப பாரும் நம்மட கூட்டுவள் அது தானப்பா முகம் சாட்றீ டங் சின்னக்குட்டியார் பெரியப்பர்

தனிய ஆளுக்கு 1 போத்தல் 69 ஐ தாட்டுப்போட்டு ஐம் எண்டு நிப்பினம் அதுவும் டங் அப்பா கலந்தடிக்கிறதில மன்னன்

நம்பமுடியாதா ம் நம்மட பார்ட்டியில ஒருக்கா கலந்து கொள்ளுமன்

:P :P :P :P :P :P :P :P :P :P :P

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

ஐயோ ஐயோ ஐயோ ஆளுக்காள் இப்பிடியே குடியை விட்டா நம்மட நிலமை :cry: :cry: :cry: :cry:

ஓய் டங் முகம் சின்னக்குட்டீ பெரிசு எங்கையப்பா போய்டீங்கள்

கடவுளே இந்த நேரம் பாத்து ஓருவரையும் கானேல்லையே

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

யோவ் லுக்கு விட்டது தான் விட்டீர் சிகரெட்டை விட்டிருக்கலாமேம

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நர்மதா தகவலுக்கு நன்றி

;மதுவால் எத்தனை குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றார்கள் காரணம் (குடி)

ஏன் சிங்களராணுவம் என்ன செய்கின்றவர்கள் தெரியுமா :twisted: :twisted: :twisted: ?

நல்லா குடி சிகரெட் கஞ்சா கட்டு எல்லாம் அடிச்சுப் போட்டுத்தான் எங்கட அப்பாவி மக்களை வெட்டு பாலியல்வன்முறை சூடு இந்த போதையில் நின்று தான் Üடுதலாக செய்வார்கள் :evil: :evil:

மதுவை யாராலையும் அழிக்க முடியாது ? மக்களைத்தான் அழிக்க முடியும் ? குடித்தக் குடித்து எவ்வளவு மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் :cry: :cry:

நர்மதா தகவலுக்கு நன்றி

;மதுவால் எத்தனை குடும்பங்கள் பிரிந்து இருக்கின்றார்கள் காரணம் (குடி)

ஏன் சிங்களராணுவம் என்ன செய்கின்றவர்கள் தெரியுமா :twisted: :twisted: :twisted: ?

நல்லா குடி சிகரெட் கஞ்சா கட்டு எல்லாம் அடிச்சுப் போட்டுத்தான் எங்கட அப்பாவி மக்களை வெட்டு ********சூடு இந்த போதையில் நின்று தான் Üடுதலாக செய்வார்கள் :evil: :evil:

மதுவை யாராலையும் அழிக்க முடியாது ? மக்களைத்தான் அழிக்க முடியும் ? குடித்தக் குடித்து எவ்வளவு மக்கள் பாதிக்க பட்டு இருக்கின்றார்கள் :cry: :cry:

ஐயோ ஐயோ ஊரே எதிராக்கதைக்கிறாங்களே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அய்யா, நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி ஒரு ஆண்டு ஆகிறது... பாழாய்போன இந்த சிகரெட் சனியன் தான் விட்டு தொலைய மாட்டேன் என்கிறது....

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ ஊரே எதிராக்கதைக்கிறாங்களே

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

ஓய் கீதா உமக்கு எத்தனை தடவை சொல்லுறது க......பு என்ற வார்த்தையை பாவிக்க வேண்டாம் எண்டு

ஓய் பாலியல்வன்முறை எண்டு எழுதுமோய்

ம...பாாாாா

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சின்னப்பு

நாம் நிற்கின்றோம். என்ன செய்வது என்று சொல்லுங்கள். முடித்து வைக்கின்றோம். நாம் றோயல் பமிலியில் ஒரு அவமானம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பமா?? :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப சின்னப்புக்கு றொம்பத்தான் கோவம் வருகின்றது ஏன் :P

கட்டுரையில் சொன்ன ஒரு விசயம் குறிப்பிடத்தக்க ஒன்று..! நல்லவன் கெட்டவன் என்பதை வெறும் குடியை மட்டும் வைத்துத் தீர்மானிக்கக் கூடாது என்பதுதான். குடி எவ்வகையில் இருப்பினும் அது மனிதனுக்கு ஆகாதது. ஆனால் அதை மட்டும் வைத்து மனிதர்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று தீர்மானிக்க முடியாது. குடித்தாலும் மனதால் பண்பட்டவர்களும் இருக்கிறார்கள்..இருந்தும் அவர்கள் குடியால் தங்களைத் தாங்களே வீணே அழித்தும் கொள்கிறார்கள்..! குடிக்காமலே மனதால் மற்றவர்களை வருத்தி அழிப்பார்களும் இருக்கிறார்கள்..! இதில் எவர் நல்லவர் எவர் கெட்டவர்..! மூடிய மனதுக்குள் இருப்பதைக் காணும் சக்தி வரும் வரை இவை கொஞ்சம் சிரமமான விடயம் தான்..! தமிழர்கள் அழிவதற்கு காரணம் குடியை விட தனக்குள் தானே பொறாமையை வளர்த்துக் கொள்வதும் முழுக்க முழுக்க சுயநலத்தொடு செயற்படுவதுமே..!

இந்த நல்லவன் கெட்டவன் தீர்மானம் கூட சிலர் தங்களை உயர்வாகக் காட்ட பயன்படுத்தும் சுயநலத்தின் வெளிப்பாடே அன்றி சமூக அக்கறை என்று நேரடியாகச் சொல்லிவிட முடியாது..! தமிழர்களினது எழுத்தும் சொல்லும் சுயநலம் மிக்கதாகவே அதிகம் இருக்கிறது.

உண்மையில் நல்லவன், கெட்டவன், நல்லது தீயது இவற்றைத் தீர்மானிக்க வேண்டியது தனி மனிதனிலும் அவன் சார்ந்த சமூகமே..! ஒருவனால் அவன் செயலால் மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை எனும் போதும் பிறருக்கும் அவனுக்கும் நன்மை எனும் போதும் அவன் செயல் சொல் நல்லவை என்று வரையறுக்கப்படும்..! தமிழர்கள் தங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லட்டும்..எத்தனை பேர் சுயநலமில்லாமல் சமூக நன்மை கருதி தங்கள் சொல் செய்லை வரையறுத்துக் கொள்கிறார்கள் என்று..???! :P :idea:

சின்னப்பு

நாம் நிற்கின்றோம். என்ன செய்வது என்று சொல்லுங்கள். முடித்து வைக்கின்றோம். நாம் றோயல் பமிலியில் ஒரு அவமானம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பமா?? :twisted: :twisted:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

ஊனம் ஊனம் ஊனம் யாருங்கோ??

உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லைங்கோ.

உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒண்டும் குறையில்லே

உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை.

இரண்டுகால்கள் உள்ளவனும் கெடுக்கிறான்

சிலர் ஒற்றைக்காலில் நல்ல படியும் நடக்கிறான்.

வைர முத்துக்கள்

ஊனம் ஊனம் ஊனம் யாருங்கோ??

உடம்பில் உள்ள குறைகளெல்லாம் ஊனம் இல்லைங்கோ.

உள்ளம் நல்ல இருந்தா ஊனம் ஒண்டும் குறையில்லே

உள்ளம் ஊனப் பட்டா உடம்பிருந்தும் பயனில்லை.

இரண்டுகால்கள் உள்ளவனும் கெடுக்கிறான்

சிலர் ஒற்றைக்காலில் நல்ல படியும் நடக்கிறான்.

வைர முத்துக்கள்

பாத்தீங்களே :P :P :P :P :P :P :P :P :P

மழை... இரு...எண் மந்தி கொப்பிளக்கப் பாயாாாாாாாதுதுது

:P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

ஏனப்பு அழுகின்றீர்கள்? ஆனந்தக் கண்ணீரோ?

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

ம்ம் நாங்கள் எதுக்கு ஒன்று கூடணும்..கூடி பிரியோசனமே இல்லை..அவரவர் நினைத்தால் தான்..ஐ மீன் தானாக பழக்கத்தை விட நினைத்தாலே ஒழிய...வேற யாரும் தலை கீழா நின்றாலும் விட முடியாது கீதா தங்கா...அனுபவத்தில சொல்றேன்.. :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் நாங்கள் எதுக்கு ஒன்று கூடணும்..கூடி பிரியோசனமே இல்லை..அவரவர் நினைத்தால் தான்..ஐ மீன் தானாக பழக்கத்தை விட நினைத்தாலே ஒழிய...வேற யாரும் தலை கீழா நின்றாலும் விட முடியாது கீதா தங்கா...அனுபவத்தில சொல்றேன்.. :evil: :evil: :evil: :evil: :evil:

அப்போ உங்கள் ஆத்தக்காரன் றொம்பக் குடியா அதான் அனுபவம் போல தெரிகின்றது ? :cry: :P

கீதா எழுதியது:

சிகரெட் தானே இன்னும் Üடாது நீங்கள் மனசு வைச்சால் சிகரெட்டையும் விடுவிங்கள் விட்டால் நாங்கள் நன்று Üடுவோம் :P

கீதாக்கோ

நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள்??????? :roll: :roll:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.