Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொதிக்கிறது திருமலை...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் மாணவர்கள் படுகொலை

சம்பவ துயரத்தில்

கவலைமிகுந்து நண்பி ஒருவர் எழுதி

மின்னஞ்சல் ஊடாக அனுப்பிய கவிதையைக்

கள உறவுகளோடு பகிர்கிறேன்

உங்கள் குருதியில் திலகமிட்டு......

இடியென வந்தது உங்கள்

உயிர் உறைந்த செய்தி....

மங்கிய ஒரு மாலையில்

நீவிர் மறைந்தே போனீர்களா?....

நிச்சயமாக இல்லை

நீங்கள் மறைக்கப்பட்டுப் போனீர்கள்....

வேர் விடும் முன்னே

விதைகளை கிள்ளி

இனமதை சுத்திகரிக்க

யார் இட்டார் கட்டளை?...

மனிதத்தை கொன்ற

கொடூர தேசத்திற்கு

இனி என்ன மன்னிப்பு?....

உயிர் பெறுமதி அறியா

கோழை இனவெறியர்களே…

பலமிருந்நால் வேங்கைகளுடன்

மோதுங்கள்.....

பாவப்பட்ட அப்பாவிகளுக்கா

உங்கள் தோட்டா?....

வாழும் உரிமை கூட

யாப்பில் இல்லா

அரச பயங்கரவாதமே....

தழிழ் தாய் சாட்சியாக

உனக்கடிக்கின்றோம்

சாவு மணி...

அடுத்த துளி

தழிழ் இரத்தம்

சிந்தப்பட முன்பு....

ஜனநாயக போர்வைக்குள்

அட்டூழியங்கள்

அரங்கேற்றப்பட முன்பு......

மாணவர்களே....

எழுவோம் நாம்

நிஜமான வேங்கைகளாய்....

உங்கள் குருதியில்

திலகமிட்டு சொல்கின்றோம்...

“எம்மால் நாளை பிறக்கும்

நம் தேசம்”

கவியாக்கம்- மாது

  • Replies 107
  • Views 10.6k
  • Created
  • Last Reply

கயவர்களின் கருவிக்குத் தம்முயிர்களை இழந்திட்ட மாணவர்கள் ஐவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்.:cry:

  • தொடங்கியவர்

திருமலையில் பூரண கதவடைப்பு நிர்வாகம் முழுமையாக முடக்கம்

படுகொலையுண்ட மாணவர்களுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி

தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று புதன்கிழமையும் திருகோணமலை நகரில் பூரண கதவடைப்பு இடம்பெற்றது.

பாடசாலைகள் இயங்கவில்லை. அரச, மாகாண சபை ஆகியவற்றின் திணைக்களங்கள் செயற்படவில்லை. திருமலை நகரசபை இயங்கவில்லை. வங்கிகள் செயற்படவில்லை. கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் தொடர்ந்தும் ஸ்தம்பித நிலையில் காணப்பட்டன.

செல்வநாயகபுரம் பகுதியில் பறக்கவிடப்பட்ட கறுப்புக் கொடிகளை படையினர் சிலர் பலாத்காரமாக அகற்றியதாகக் கூறப்பட்டது. திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உடனடியாக திருகோணமலை மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயவர்தனவுடன் தொடர்புகொண்டு, இவ்வாறான செயல்கள் இடம்பெறுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களான எஸ்.

சஜேந்திரன், யோ.ஹேமச்சந்திரன், ம.ரஜீகர், த.சிவானந்தா, லோ.றொகாந்த் ஆகியோரின் பூதவுடல்கள் அவரவர் வாசஸ்தலங்களில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளன.

மக்கள் பெரும் எண்ணிக்கையில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொது அமைப்புகள், பாடசாலைகள் சார்பில் மலர் வளையங்கள் சாத்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று வியாழக்கிழமை பகல் திருகோணமலை இந்து மயானத்தில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்பாக பூதவுடல்கள் அவரவர் வீடுகளிலிருந்து திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரிக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கு அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளன. அஞ்சலி நிகழ்வுகளின் பின்னர் ஐந்து பூதவுடல்களும் ஊர்வலமாக இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தகவல்: தினக்குரல்

  • தொடங்கியவர்

200601050010jo.jpg

200601050023ze.jpg

200601050039sy.jpg

திருகோணமலையில் சிங்கள இராணுவத்தால் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் இறுதி ஊர்வலம் இன்று வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் பங்கேற்று அரச பயங்கரவாதத்துக்குப் பலியான தங்களது மாணவச் செல்வங்களுக்கு இறுதி வணக்கத்தை கண்ணீருடன் செலுத்தினர்.

மாணவர்களின் உடல்கள் இன்று காலை அவர்களது வீடுகளிலிருந்து மதச் சடங்குகள் முடிவடைந்த பின்னர் சிறீ கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

கல்லூரி மைதானத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மேடையில் மாணவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. கல்லூரி அதிபர் எம்.இராஜரட்ணம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மும்மதப் பிரதிநிதிகள் மாணவர்களின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்தனை நடத்தினர்.

அதன் பின்னர் கறுப்புக் கொடிகள், கண்டன பதாகைகள் கட்டப்பட்ட திறந்த லொறியில் மாணவர்கள் உடல்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. மடத்தடி சந்தியிலிருந்து திருகோணமலை இந்து சுடுகாட்டு மைதானம் வரை முக்கிய வீதிகளுடாக இந்த ஊர்வலம் சென்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் பங்கேற்று கண்ணீர் வணக்கம் செலுத்தினர்.

கல்லூரி மைதானத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டபோது 1 கிலோ மீற்றர் நீளத்துக்கு மக்கள் அணிவகுத்து நின்றிருந்தனர்.

மயான மையத்துக்கு ஊர்வலம் வந்தடையை ஒரு மணிநேரத்துக்கும் மேலானது. ஊர்வலப் பாதையில் குவிக்கப்பட்டிருந்த அனைத்து சிறிலங்கா படையினரும் விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தனர்.

தகவல்: புதினம்

  • தொடங்கியவர்

சோகமயமாக திருகோணமலை காட்சி மாணவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று படுகொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு குழுக்கள் நியமனம்

(நமது திருகோணமலை, ஈச்சிலம்பற்று நிருபர்கள்)

திருகோணமலை பெரிய கடை கடற் கரைப் பகுதியில் கடந்த திங்களன்று இரவு ஐந்து தமிழ் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும், நேற்று திருகோணமலை நகரில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மக்கள் அனைவரும் சோகமே உருவாகக் காணப்படுகின்றனர். மாணவர்கள் எவரும் பாடசாலைக்குச் செல்லவில்லை. அரச அலுவலகங்களும் செயலிழந்து

காணப்பட்டன. அதேவேளை, வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுக் கிடந்ததுடன் வாகனப் போக்குவரத்தும் ஸ்தம்பித்திருந்தது.

இந்தப் படுகொலைகளை கண்டித்து திருகோணமலையின் புற நகர்ப் பகுதிகளான தம்பலகாமம், மூதூர் கிழக்கு, மூதூர் தெற்கு ஆகிய இடங்களிலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட மாணவர்களான லோகிதாசன் றொஹான், சண்முகராஜா கஜேந்திரன், தங்கத்துரை சிவானந்தா, யோகராஜா ஹேமச்சந்திரன், மனோகரன் ரஜீஹர், ஆகியோரின் பூதவுடல்கள் நேற்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தபோது பெருந்தொகையான மக்கள் அங்கு சென்று தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினார்கள்.

இந்தப் பூதவுடல்களை இன்று காலை இவர்கள் கல்வி பயின்ற திருகோணமலை இந்துக் கல்லூரியில் பொது மக்களின் அஞ்சலிக்கென வைப்பதற்கான ஏற்பாடுகள் அமைப்புக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் காயங்களுக்கு இலக்கான இரு மாணவர்களும் தொடர்ந்தும் திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியான மாணவர்களின் பூதவுடல்கள் இன்று தகனம் செய்ய இருப்பதனால் இன்றைய தினம் கடை அடைப்பு போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலையினை உருவாக்கி கறுப்புக் கொடிகளை பறக்க விட்டு மாணவர்கள், பொது மக்கள், மற்றும் அனைவரும் இவர்களுக்கான அஞ்சலியினை செலுத்துமாறு இறுதி அஞ்சலிக்கான அமைப்புக் குழுவினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் கடமைக்கு சென்ற பின்னர் இறுதிக் கிரியை நடைபெறும் இடத்திற்கு வருமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல்: வீரகேசரி

  • தொடங்கியவர்

திருமலையில் திங்கள் இரவு சிறிலங்கா கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் புகழுடலுக்கு நேற்று ஆயிரக் கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று திருமலை கோணேஸ்வர இந்துக்கல்லு}ரி விளையாட்டு மைதானத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. அஞ்சலிக் கூட்டமும் இரங்கலுரைகளையும் தொடர்ந்து கடற்படை தளவீதி, பிரதானவீதி, புகையிரத வீதி போன்றவற்றினுடாக புகழுடல்கள் எடுத்துச் செல்லப்பட்டு இன்று பிற்பகல் திருமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதேவேளை இப்படுகொலையைக் கண்டித்து திருமலையில் பல பொது அமைப்புக்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனால் சிறிலங்காப் படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி இருப்பதோடு வீதியால் செல்லும் மக்கள் மீது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டும் வருகின்றனர்.

தகவல்: ஈழநாதம்

  • தொடங்கியவர்

மாணவர்கள் கொலையை அடுத்து திருமலையில் இயல்புநிலை பாதிப்பு!

திருகோணமலை கடற்கரை வீதியில் நேற்றுமுன்தின மிரவு 5 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நேற்று திருகோணமலையில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், பாடசாலைக ளுக்கு மாணவர்களும், அலுவலகங்களுக்கு ஊழியர்க ளும் செல்லாததால், அவையனைத்தும் இயங்கவில்லை.

இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து எந்த வொரு அமைப்பும் அழைப்பு விடுக்காதபோதிலும், மக் களால் இந்தக் கதவடைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து இன்று பூரண கதவடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பினை திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவையும், பொங்குதமிழ் சமூகமும் விடுத்துள்ளன.

இந்த ஐந்து மாணவர்களது மரணங்களும் - குண்டுவெடிப்பி னாலும், துப்பாக்கிப் பிரயோகத் தினாலுமே இடம்பெற்ற தாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தம்மைப் பிடித்த கடற்படையினர் தம்மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதிலேயே ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டதாக காயமடைந்த மாணவன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது -

சம்பவம் இடம்பெற்ற கடற்கரை வீதிக்கு நாம் செல்வது வழக்கமாகும். நேற்று முன்தினமும் அவ்வாறு அங்கு சென்றவேளை அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் எம்மை பிடித்துச் சென்றனர்.

இவ்வாறு எம்மைப் பிடித்துச் சென்ற கடற்படையினர் எம்மீது 20 நிமிடங்கள் விசாரணை நடத்திய பின்னர் - தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதெனத் தெரிவித்து எம்மீது சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். இதனால் எனது சகமாணவர்கள் ஐவர் உயிரிழந்ததுடன் நாம் இருவரும் காயமடைந்தோம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை வைத்திய பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் மறுத்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என உறவினர்கள் கையயாப்பமிட்டாலே சடலங்கள் தரப்படுமெனத் தெரிவித்தபொலிஸார் - பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பை அடுத்து சடலங்களை உறவினர்களிடம் கையளித்தனர்.

இதன்பின்னர் வைத்தியசாலையிலிருந்து ஐந்து மாணவர்களின் சடலங்களும் உறவினர்களால் அவர்களின் இல்லங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இவர்களது சடலங்கள் நாளை வியாழக்கிழமை திருகோணமலை இந்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் தியாகிகள் அரங்கில் வைக் கப்பட்டு, இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று இறுதி நிகழ்வுகளுக்காக ஒன்றாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.

மாணவர்களின் இறுதி நிகழ்வுகளின் பின்னர் திருகோணமலையிலிருந்து இராணுவத்தினர் முற்றுமுழுதாக வெளியேறும் வரை தொடர்ச்சியான கதவடைப்புக்கு திருமலை தமிழ் மக்கள் பேரவை, பொங்கியயழும் மக்கள் சமூகம் ஆகியன அழைப்பு விடுத்துள்ளன.

இதேவேளை, மாணவர்களின் படுகொலையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, மாணவர் சமூகம் உட்பட பல்வேறு அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்துள்ளன.

பதிப்புத்திகதி 04 ம் நாள் சனவரி 2006

தகவல்: நமது ஈழநாடு

  • தொடங்கியவர்

திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படை துண்டுப்பிரசுரம்! இராணுவத்தினர் பெரும் பீதி!!

றுசவைவநn டில சுயயஎயயெn வுhரசளனயலஇ 05 துயரெயசல 2006

இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து தமிழ் இளைஞர்களின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்ற இன்றை நாளில் திருமலையிலும் பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பல பொது மக்களிடமும் அதில் என்ன எழுதப்பட்டுள்ளது என இராணுவத்தினர் விசாரித்துள்ளனர்.

இன்று திருகோணமலையில் வெளியடப்பட்டுள்ள பொங்கியெழும் மக்கள் படையினரின் துண்டுப்பிரசுரத்தில்,

எமது தமிழ் மாணவர்கள் மிகக்கொரூரமான முறையில் சிறீ லங்கா இராணுவத்தினரால் தாக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெறித்தனமான குரோத செயலானது தமிழ் மக்களை பெரும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இதற்கு ஈடாக பெரும் தொகையான சிங்களக்காடையர்களும், சிறீ லங்கா இராணுவத்தினரதும் உயிர்கள் வெகுவிரைவில் எம்மால் பறிக்கப்படும்.

எமது தமிழீழ, தமிழ் மக்கள் மாலை நேரங்களில் இனி நடமாடுவதைத்தவிர்க்கவும். அத்தோடு தமிழீழ இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த எமது மக்கள் படையுடன் இணைந்துகொள்ளுங்கள். என இந்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல்: சங்கதி

  • தொடங்கியவர்

5students1funeral33zt.jpg

5students1funeral50av.jpg

5students1funeral99gx.jpg

5students1funeral106am.jpg

மனதை உருக்கும் காட்சிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

மனதை உருக்கும் காட்சிகள்,,,,,,,,

திருமலையில் பொங்கி எழும் மக்கள் படை துண்டுபிரசுரத்தை வெளியிட்டுள்ளது, அதில் இந்த அட்டூழியத்தை செய்த படைகள் பழிக்கு பழி வாங்கப்படுவார்கள் அதனால் மக்கள் மாலை வேளைகளில் வீதிகளில் தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்,,

, :idea: :idea:

இந்த அப்பாவி மாணவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்குகாக அந்த கொலையை செய்த சிங்கள காட்டுமிராண்டிகளின் உடல்கள் சிதறி இந்த பெற்றோர்கள் அழுவதைப்போன்று அந்த சிங்கள் நா***ளின் பெற்றோர்கள் கதறி அழவேண்டும்,,,,,,,,, :evil: :evil: :evil: :evil: :evil:

  • தொடங்கியவர்

திருமலை மாணவர் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று ஹர்த்தால்; துக்கதினம்

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வவுனியாவில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் துக்கதின ஏற்பாடுகளுக்கு அனைத்துத்தரப்பினரும் பூரணஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் இன அழிப்பு சிந்தனையில் வன் போக்கு கொண்ட ஸ்ரீலங்காவின் புதிய இராணுவ உயர் பீடம் பதவி ஏற்ற பின் தமிழீழமெங்கும் இந்தப் படுகொலைகள் கோலோச்சுகின்றன.

சமாதானம் பேசவந்த ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியால் கூட இத்தகைய வன் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போனமை கண்டு தமிழ் மக்கள் மனவேதனையும் கொதிப்பும் அடைந்துள்ளனர். தமிழ் மாணவர் சமூகம் தம்மையும் தமது மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக மௌனமுறை தழுவிய போராட்டங்களில் இருந்து விடுபட்டு ஆயுத ரீதியான போராட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியத்தை இச் செயல்கள் வலியுறுத்துகின்றனவா?

அண்மையில் தமிழ்ப் பிரதேசம் எங்கும் நடைபெற்ற மக்கள் போராட்டங்களையே கடுமையாக விமர்சிக்கும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுவும் சர்வதேச சமூகமும் இப் படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகின்றன என்பதை தமிழ் மக்கள் சமூகம் உன்னிப்பாக எதிர்பார்த்தபடியே உள்ளது.

ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத இராணுவமும் அதனோடு சேர்ந்து இயங்கும் பரா இராணுவ குழுக்களும் தொடர்ந்தும் இத்தகைய இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தமிழ் மாணவர் சமூகம் வன்மையாக கண்டிக்கின்றது. திருமலை படுகொலையை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக அஞ்சலி செலுத்தும் பொருட்டு, வவுனியா மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை முழுநாளும் பூரண கதவடைப்பும் ஹர்த்தாலில் ஈடுபட்டும் இல்லங்கள், திணைக்களங்கள், வியாபார நிறுவனங்கள் தோறும் கறுப்புக் கொடிகள் பறக்க விட்டும் துக்கதினம் அனுஷ்டிக்கும் படியும் ஒடுக்கப்பட்டு வரும் தமிழ் மக்கள் சார்பாக வவுனியா மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொள்கின்றது.

தகவல்: தினக்குரல்

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry: :cry: :cry:

திருமலையில் 5 காவலரண்கள் மாணவர்களால் அடித்துடைத்து எரியூட்டப்பட்டன.

திருமலையில் இன்று 5 காவலரண்கள் மாணவர்களால் எரியூட்டப்பட்டன. உட்துறைமுகவீதிஇ உட்கரைவீதிஇ கடற்கரை வீதியில் அமைந்துள்ள சிறீலங்கா இராணுவத்தினரது காவலரண்களே மாணவர்களால் எரியூட்டப்பட்டுள்ளன.

சிறீலங்கா காவலரண்களுக்குச் சென்ற மாணவர் குழுவினர் காவலரண்களை அடித்துடைத்து பின்னர் தீ மூட்டி எரித்துள்ளனர்.

காவலரண் ஒன்றுடன் இருந்து அரச மரத்தையும் தறித்துள்ளனர். இதனை அடுத்து படையினர் குவிக்கப்பட்டு புத்தர் சிலைகளுக்கு அருகில் உள்ள அரசமரங்களையும் பாதுகாத்து வருகின்றனர் என திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பதிவு

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள் :lol:

இறந்த மாணவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். :cry: :cry: :cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதிட வார்த்தையில்லை

நெஞ்சு கொதிக்கிறது

கொல்லப்பட்ட மாணவர்களுக்கு

எனது கண்ணீர் அஞ்சலிகள் :cry: :cry: :cry:

யார்தான் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பது..??! :?:

சிறுவர்களைப் பாதுகாக்கப் புறப்பட மேற்குலக ரட்சகர்கள் இன்னும் ஒரு அறிக்கை கூட எவரையும் கண்டித்துவிடவில்லையே..! அரசுகள் படுகொலை செய்தால் அவை நியாயம்..அந்த உயிர்களுக்கு ஐநா சபையில் யுனிசெப்பில் உயிரெடுக்க அனுமதி அளிச்சிருக்கோ..???! :shock: :roll: :shock:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, ஐயோ தாங்கமுடியவில்லை. அவர்களின் பெற்றோர்கள், பிள்ளைகள் படித்து முன்னுக்கு வந்ததினை எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பினம். இப்பொழுது, எனக்கே தாங்கமுடியவில்லை என்றால் அவர்களுக்கு எப்படியிருக்கும்?.

தமிழ் தேசத்துரோகிகளே இப்ப எங்கே போய் விட்டிர்கள்?. உங்களுக்கு மனச்சாட்சி இல்லையா?. இன்னும் நீங்கள் எலும்புத்துண்டுக்காக இனவெறியர்களுடன் கைகுழுக்கப்போறிர்களா?

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுப் படியே திருமலையில் ஐந்து மாணவர்களும் படுகொலை செய்யப்பட்டனர் - சண்டே ரைம்ஸ் திடுக்கிடும் தகவல்

பாதுகாப்பு அமைச்சின் அலோசகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரின் உத்தரவின் பெயரில் திருமலைக்கு அனுப்பப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரே கடந்த திங்கட்கிழமை ஐந்து தமிழ் மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்ததாக 'சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.சண்டே ரைம்ஸின் நேற்றைய பதிப்பில் 'பாதுகாப்பு நிலவரம்" பகுதியிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸவுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ இந்தியாவுககு பயணம் மேற்கொண்டிருந்த வேளை இந்த குழுவை இந்த குறிப்பிட்ட அதிகாரி திருகோணமலைக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்ற மர்மம் தொடர்கின்றது. இராணுவமும் பாதுகாப்பு தரப்பும் தெரிவித்திருக்கும் விடயங்களுக்கும் ஏனைய சகல தரப்பினர்கள் தெரிவிக்கும் தகவல்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றது.

எனினும் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் நிரூபிக்கப்பட்டள்ளது. இதை விட தற்போது அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலையில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகளுக்டகும் தெரியாமல் அங்கு 24 பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை கொண்ட குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழுவிற்கு முதன்மை காவற்துறை அதிகாரி தலைமை வகிக்கின்றார். பாதுகாப்பு அமைச்சின் ஆலோகரும், முன்னாள் காவற்துறை மா அதிபருமான ஒருவரே இதற்கான உத்தரவை வழங்கியுள்ளார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத சக்திகளை கடுமையான முறையில் கையாளுமாறு இவர் உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ அரசு தலைவருடன் இந்தியாவுக்கச் சென்றிருந்தவேளை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என எச்சரிந்திருந்தார். குறிப்பிட்ட இந்த அதிகாரியை அவரின் செயற்பாடுகள் குறித்து தெரிந்து ஆலோசனை வழங்குவதோடு அவர் பணிகளை நிறுத்திக் கொள்ளுமாறும் அவர் எச்சரித்துள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும்;, அந்த முன்னாள் காவல்துறை அதிகாரியின் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக குறிப்பிட்ட அலோசகர் தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் சர்ச்சைககுரிய விதத்தில் பேட்டிகள் அளித்துவருவதும், கவனத்தில் எடுக்கப்பட்டது.

இந்த பேட்டிகளின் போது இவரால் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவும், அதே நேரம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைகளை பெறாத முறையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளனஎனவும் சண்டே ரைம்ஸின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டள்ளது.

http://www.sankathi.net/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்செய்தி மேலே ஒருவரால் இணைக்கப்பட்டுள்ளது..

எனவே இதனை நீக்கியுள்ளேன்.

குற்றச்சாட்டை ஒரு அதிகாரி மேல் போட்டு அரசாங்கம் தப்பிப்பதாகதான் தெரிகிறது... நல்லா தலையைப் போட்டு உடைச்சு இப்பதான் கதைகண்டுபிடிச்சிருகாங்களப்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலை மாணவர்கள் படுகொலை: விசாரணை தொடக்கம்

சிறிலங்கா இராணுவத்தினரால் திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் நேற்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

திருகோணமலை நீதிபதி வி.இராமகமலன் முன்னிலையில்ல் இந்த விசாரணை நடைபெற்றது.

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட றஜீகரின் தந்தை மருத்துவர் கே. மனோகரன் அரை மணி நேரம் சாட்சியமளித்தார்.

மாணவர் சிவானந்தாவின் தாயார் தங்கதுரை, அவரது சகோதரி சுபாஜினி சித்ரவேலு இருவரும் கண்ணீர்விட்டு கதறியழுதபடியே சாட்சியமளித்தனர். இதையடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை மற்ற மாணவர்களின் பெற்றோர், உறவினர்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட உள்ளது.

தமிழ் மாணவர்கள் படுகொலை தொடர்பிலான தகவல் அறிந்தோர் தகவல்களை கையளிக்கலாம் என்றும் திருமலை நீதிபதி அறிவித்துள்ளார்.

முன்னதாக இராணுவத்தினரின் தாக்குதலில் படுகாயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் 2 மாணவர்களிடமும் திருமலை நீதிபதி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையினர் சேர்ப்பு

திருகோணமலையில் மேலும் 600 ஊர்க்காவல் படையின சேர்க்கப்பட உள்ளதாக கிழக்குப் பிராந்திய காவல்துறை பிரதி மா அதிபர் றோகான் அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது:

ஊர்க்காவல் படைக்கு 300 பேர் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளனர்.

அவர்கள் அனைத்து வீதித் தடைகளிலும் பயன்படுத்தப்படுவர். இந்தப் பகுதியிலிருந்து ஊர்க்காவல் படைக்கான இளைஞர்கள் தெரிவு செய்யப்படுவதால் பிரச்சனைகளை அவர்கள் நன்கு அறிவார்கள் என்றார் அவர்.

இதனிடையே உப்புவெளியில் செவ்வாய்க்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறை சோதனைச் சாவடி தாக்குதலுக்குள்ளானதாகவும் ஒரு காவல்துறை சார்ஜண்ட் காயமடைந்து திருகோணமலை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தகவல் மூலம்-புதினம்.கொம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படையினர் அச்சுறுத்தலால் மூதூர் பிரதேச மக்கள் இடம்பெயர்வு

மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு பொதுமக்கள் சிறிலங்கா இராணுவத்தினரின் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ந்து மக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றனர். பள்ளிக்குடியிருப்பு, கலைமகள் இந்துக் கல்லூரி, கிளிவெட்டி மகா வித்தியாலயம் தங்கபுரம் அ.த.க பாடசாலை போன்ற பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் சுமார் 350ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அகதிகளாக தங்கியுள்ளனர்.

பாரதிபுரம், மேன்காமம் 58 மைல்கல் எல்.வி-03 போன்ற பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்களே இவ்வாறு தங்கியுள்ளனர்

தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.