Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனுக்கு படிக்க வந்திட்டீங்களோ... அப்ப இது தான் வாழ்க்கை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே! நண்பரே!

இணைப்புக்கு நன்றிகள் நெடுக்ஸ்!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான்.. வெட்டுப்புள்ளி எல்லாம் தாண்டி.. படிச்சு பட்டமளிப்பு விழாவெல்லாம் கண்டிட்டு.. பெரும் கனவோட.. பிரித்தானியா படிப்பு நல்லமெண்டு சொல்ல.. தந்த அக்காடமிக் கொலசிப்பில மயங்கி.. அவுஸில.. யு எஸ் ஸில கிடைச்ச அட்மிசன்களையும் விட்டிட்டு.. கட்டுநாயக்கா தாண்டி பிளேனில கால் வைக்கேக்க.. சொர்க்கத்துக்குப் போறன் என்று தான் நினைச்சனான்.

அந்தக் கனவு 13 மணித்தியாலத்தில தலைகீழானது வந்து கீத்துறோவில இறங்கினதோட..! அந்தக் கனவு படுகுழியில் புதைந்து போனது நான் பார்த்த முதல் வேலையோட. அதுவும் யுனி லண்டனில இருந்து 250 மைல்களுக்கு அப்பால். அங்க கறுப்புத் தலைகளை காண்பதே அரிது. ஒரு வேலை ஏஜென்சியில பதிஞ்சு வந்த இரண்டாம் கிழமையே வேலைக்கு போயிட்டன். செய்த வேலை.. குளிருக்க நின்று வெட்டின மரங்களை கிரேனில.. லொறில லோட் பண்ணுறது. அதுக்கு நிரப்பி கொடுத்த விண்ணப்பம் மட்டும் 7 பக்கம் கொண்டது.

அட இந்த வேலையைக் காட்டிலும் பெற்றாவில வண்டில் தள்ளி இருக்கலாம் அது மேல் என்று நினைச்சன்..! அதுக்குப் பிறகு.. கோழி வெட்டிற இடம்.. பக் பன்ற இடம்.. ரேக்கி வெட்டிறது பக் பன்றது.. பாண் சுடுற பேக்கரி.. இப்படி எல்லாம் செய்தன். அப்புறம்.. சும்மா சுப்பர் மார்க்கட்டுக்கு அப்பிளை பண்ணினன். தம்பிரான் புண்ணியத்தில.. ஒரு இன்ரவியூவோட வேலை கிடைச்சிட்டு. அதில நல்லா நின்று பிடிச்சு அந்த யுனி முடிக்கும் வரை அதில வேலை செய்தன். நம்ம சமூக சேவையை பாராட்டி படம் கூட எடுத்து மாட்டி இருந்தாங்க. அதில வெள்ளைக்காரனுக்கு நன்றி சொல்லனும்..! பொதுவா கடையை விட்டு போகேக்க நற் சான்றிதழ் தாறதில்ல. எனக்கு அப்படி ஒன்றை அடிச்சு தந்ததோட.. வேற யுனிக்கு போற இடத்திலும் வேலை தேடித் தர ஒருவரை நியமிச்சார் வெள்ளை மனேஜர். என்ன நான் மாறி வந்த இடம்.. லண்டன்..! அது ஆசிய மனேஜர்களின் அடாவடித்தனம் கூடிய இடம் என்று எனக்கு அப்ப தெரியாமல் போச்சு. நான் செய்த ஒரே தவறும் லண்டனுக்கு வந்தது தான். அந்த வெள்ளை மனேஜர் பலமாக முயன்று கூட இடமாற்றத்தை லண்டனில பெற்றுத் தர முடியல்ல. காரணம்.. அது ஆசியர்கள் அதிகம் இருந்த இடம். அவங்க தங்கட ஆக்களையே வேலைக்கு போடுறதுதான் அதிகம்..!

அப்பதான் கண்டன்.. லண்டன் எவ்வளவு குப்பை என்று..! :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பேசாமல் கனடாவுக்குப் போட்டிருக்கலாம்..! :rolleyes: ம்ம்ம்.. இப்ப நினைச்சு என்ன பண்ணுறது..!! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பேசாமல் கனடாவுக்குப் போட்டிருக்கலாம்..! :rolleyes: ம்ம்ம்.. இப்ப நினைச்சு என்ன பண்ணுறது..!! :D

கனடாவில் மக்மாஸ்ரர்.. யோர்க் இரண்டுக்கும் அனுமதி கிடைத்தது. அதுவும் ஒவ்வொரு விண்ணப்பத்தையும் பரிசீலிக்க 50 டொலர் வரை கட்டனும் என்ற சொல்ல அதையும் கட்டினன்..! கனடாகாரங்க பகற் கொள்ளைக் காரங்கப்பா..! யூகே காரன் கொஞ்சோண்டு என்றாலும்.. கொலசிப்பாவது தாறான்... விண்ணப்ப பரிசீலனை இலவசம்.! :lol::D

யூகே வந்ததால இதுவரை 18,000 பவுன்ஸ் வரை கொலசிப் அல்லது கட்டண விலக்கு கிடைச்சிருக்குது. இதையே கனடா என்றால் அதையும் புடுங்கி இருப்பாங்க..! எனக்கு லண்டன் பிடிக்கல்ல.. அதற்காக யூகே யை குற்றம் சொல்லமாட்டன். நமக்கு தனிப்பட்ட முறையில் சலுகை தந்து உதவி செய்த மக்கள் உள்ள நாடு. :)

Edited by nedukkalapoovan

ரேக்கி வெட்டிறது பக் பன்றது..

இது என்ன வேலை? கேள்விப்பட்டதேயில்லை.

நானும் லண்டனுக்கு கள்ளப் பிளேன் எடுக்கும் பொழுது, ஏதோ சந்திரனுக்கு பக்கத்தில் இருக்கும் சொர்க்கத்திற்குப் போகப்போகிறேன் என்றுதான் நினைத்து வந்தேன். நிறைய எதிர்பார்ப்புகள்.

பிளேனில் ஆங்கில கன்னிகள் வந்து என்னைச் சுற்றி 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்' பாடி கும்மி அடிப்பதாக வேறு கனவுகள் வந்தது.

லண்டனுக்கு வந்து நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். அத்திவாரத்திற்கு கிடங்கு கிண்டி concrete போடுவது, பெரிய ware house களிற்கு 'ஸெல்ப்' அடிப்பது. வீடுகள், தோட்டங்கள் துப்பரவாக்குதல், இந்திய சிற்றுண்டிகள் சமைக்கும் வேலை, பெற்றோல் நிலையம், கடை வேலைகள், KFC இல் கோழி பொரித்து விற்பது. நிறைய கூலி வேலைகளும் செய்திருக்கிறேன்.

வெள்ளி சனி இரவுகளில் KFC இல் 'கஷியர்' ஆக வேலை பார்ப்பதுதான் தலையிடியாக இருந்தது. அதுவும் நான் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் குற்றங்களுக்கு பெயர் போன இடங்களாக இருந்தன. காப்பிலிகள் கஞ்சாவும் தண்ணியும் அடித்துப் போட்டு வந்து ஒரே ரகளை பண்ணுவார்கள்.

எல்லாத் தொழிலிலும் பெற்ற அனுபவங்கள் இப்பொழுது நன்றாகவே கைகொடுக்கின்றன .

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன வேலை? கேள்விப்பட்டதேயில்லை.

Turkey (ஊரில வான்கோழி எண்டுவினம்) அதை வெட்டி பதப்படுத்திற தொழிற்சாலை..! :lol::D

அவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு 7 பவுண் தருவார்கள். உண்மையில் 10 பவுண்.. 3 பவுணை வேலை எடுத்துத் தரும் ஏஜென்சிக் காரன் புடுங்கிடுவான். :(

இது என்ன வேலை? கேள்விப்பட்டதேயில்லை.

நானும் லண்டனுக்கு கள்ளப் பிளேன் எடுக்கும் பொழுது, ஏதோ சந்திரனுக்கு பக்கத்தில் இருக்கும் சொர்க்கத்திற்குப் போகப்போகிறேன் என்றுதான் நினைத்து வந்தேன்.

.

நான் துபாயில் இருந்து கனடாவுக்கு பிளேன் எடுக்கும் போதும் இப்படித் தான் கனவு கண்டன். இறங்கினவுடன் ஏதோ ஒரு கிராமத்துக்கு வந்தமாதிரி இருந்தது. அதுவும் பியர்சன் விமான நிலையம் துபாய் விமான நிலையத்துடன் ஒப்பிடும் போது எங்கள் ஊர் கள்ளுக் கொட்டில் மாதிரி இருந்தது. துபாய் எப்பவும் Colorful லாக இருக்கும். சாமம் மூன்று மணிக்கும் பரபரப்பாக இருக்கும் நகரம் அது. ஆனால் கனடா தூங்கி வழியும் ஒரு நாடு.

துபாயில் உழைத்த அதே அளவு சம்பளம் தான் இங்கும் கிடைக்குது. ஆனால் வரி என்ற பகல் கொள்ளையால் கையில் கிடப்பது துபாயில் கிடைத்ததை விட குறைவு. பிள்ளைகளுக்கு படிக்க இங்கு நல்ல வசதி என்றபடியாலும் சில மேலதிக அரசியல் உரிமைகள் இருக்கு என்பதாலும் கனடாவில இருக்க வேண்டி இருக்கு

என்ன வென்றாலும் துபாயில் இருக்கும் மலையாள ஓமனக் குட்டிகள் மாதிரி இங்கு இல்லை. :(

என்ன வென்றாலும் துபாயில் இருக்கும் மலையாள ஓமனக் குட்டிகள் மாதிரி இங்கு இல்லை. :(

லண்டனில் மலையாள ஓமனக்குட்டிகளுக்கும், பாகிஸ்தானத்து பஞ்சவர்ணக் கிளிகளுக்கும், குஜராத்து கொஞ்சும் குமரிகளுக்கும் ஒன்றும் பஞ்சமில்லை. பல தேசத்து அழகிகளும் பவனி வரும் இடம்.

சொல்லப்போனால் லண்டனில் புண்பட்ட வாழ்க்கைக்கு ஒத்தடம் இட்டு ஆறுதல் ஆறுதல் அளிப்பது அவர்களின் தரிசனம்தான். :)

என்ன செய்வது பண்பாடு, கலாச்சாரங்களை கட்டிக் காப்பதற்காக கற்பைக் காக்க வேண்டியுள்ளது. :(

என்ன செய்வது பண்பாடு, கலாச்சாரங்களை கட்டிக் காப்பதற்காக கற்பைக் காக்க வேண்டியுள்ளது. :(

இவ்வளவு நேரம் உண்மையைச் சொல்லி போட்டு கடைசியில பொய்யை சொல்றீங்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ். பழைய வேலைகளை நினைவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றிகள். நான் லண்டனுக்கு வெளியே சில்லறை வேலைக்குப் போகவில்லை. அத்தோடு தமிழர்களின் சிபார்சு மூலம் வேலைகளும் வரவில்லை. கடின உழைப்பைப் பார்த்து மனேஜராக இருந்த கறுப்பன் பாடசாலை, யூனிவேர்சிட்டி விடுமுறை காலங்களில் உடனடியாகவே வேலை தருவான். நல்ல நண்பர்களைப் பெற சில்லறை வேலைகள்தான் (odd jobs) உதவியது.

தப்பிலி சொன்னது மாதிரி நான் முதன்முதன் பார்த்தவேலை காள்ஸ்டனில் உள்ள கென்ரக்கியில்.வெள்ளி,சனி இரவு சிக்கினை கடித்துவிட்டு சிலவேளை சரியில்லை என்று மூஞ்சைக்கும் எறிவார்கள்.நான் நண்பர்களிடம் சொல்லுவன் ஒருகாப்பிலியையாவது எனது பணத்தில் எனது நாட்டைப்பார்க்க வா என கூட்டிக்கொண்டுபோய் சாத்து சாத்தென ஆசை தீர சாத்தவேண்டும் என்று.

பின்னர் சிலவருடங்களில் சிற்றியில் உள்ள ஒரு கொட்டேலில் வேலை கிடைத்துவிட்டது.கஸ்டப்பட்டு உழைத்து பீஸ் கட்டத்தான் சரி.

நான் நீஸ்டனில் இருந்து நைற்பிறிட்சிற்கு ஒவ்வொரு ஞாயிறுகாலையும் கார் வேண்டமட்டும் சைக்கிலில் போனதை இப்பவும் நம்பமுடியாமல் இருக்கின்றது.சில வருடங்களின் முன் லண்டன் போனபோது காரில் போய்ப்பார்க்க, என்னவென்று அவ்வளவுதூரம் சைக்கிலில் போனேன் என ஒருவரும் நம்பவில்லை.

கனடாவுடன் ஒப்பிடும்போது லண்டன் 19 நூற்றாண்டில் தான் நிற்கின்றது வீடுகளும் ரோட்டும்.

பலரின் தகவல்களுக்கும் நன்றிகள். இவை தாயகத்தில் உள்ள ஊடகங்களிலும் வரவேண்டும், வேறு பெயர்களில் :D

பல நாடுகளிலும் அடுத்த தலைமுறை கூட ஒருவித ஏமாற்ற நிலையை அடைந்துள்ளது :

- பல துறைகளில் 'நேர்முகப்பரீட்சை' மூலம் தட்டி விடுவார்கள்

- ஒரே படிப்பு இருந்தாலும், அதே அளவு சம்பளம் இல்லை! வேலை உயர்வு இல்லை!

எமது தலைமுறை discrimination தாங்கிகொண்டாலும் அடுத்த தலைமுறை எம்மை நொந்தும் கொள்ளலாம்.

பலரின் தகவல்களுக்கும் நன்றிகள். இவை தாயகத்தில் உள்ள ஊடகங்களிலும் வரவேண்டும், வேறு பெயர்களில் :D

பல நாடுகளிலும் அடுத்த தலைமுறை கூட ஒருவித ஏமாற்ற நிலையை அடைந்துள்ளது :

- பல துறைகளில் 'நேர்முகப்பரீட்சை' மூலம் தட்டி விடுவார்கள்

- ஒரே படிப்பு இருந்தாலும், அதே அளவு சம்பளம் இல்லை! வேலை உயர்வு இல்லை!

எமது தலைமுறை discrimination தாங்கிகொண்டாலும் அடுத்த தலைமுறை எம்மை நொந்தும் கொள்ளலாம்.

நீங்கள் கூறுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்த கனடாவில் வாழும் அடுத்த தலைமுறை (30 வருடம் ஒரு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், இப்ப இருக்கும் இருபதுகளை வயதில் கொண்ட) இங்கு நல்ல வேலைகளில் இருப்பதை கண்டுள்ளேன்

என் அலுவலகத்திலும் பல வெள்ளைகளை விட எனக்கு அதிகமாக தருகின்றார்கள். முதலாளித்துவ உலகில், இனத்துவ பாகுபாடுகளை விட அதிகம் 'வருமானம்' தரக் கூடிய Resources இனைத்தான் நாடுவார்கள்

இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாடுகளில் தாமாகவே தொழில்களை உருவாக்கும் தொழிலதிபர்களாக, உற்பத்தியாளர்கள் ஆக வரவே அதிக சந்தர்பம் உண்டு

நீங்கள் கூறுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்த கனடாவில் வாழும் அடுத்த தலைமுறை (30 வருடம் ஒரு தலைமுறை என்று எடுத்துக் கொண்டால், இப்ப இருக்கும் இருபதுகளை வயதில் கொண்ட) இங்கு நல்ல வேலைகளில் இருப்பதை கண்டுள்ளேன்

என் அலுவலகத்திலும் பல வெள்ளைகளை விட எனக்கு அதிகமாக தருகின்றார்கள். முதலாளித்துவ உலகில், இனத்துவ பாகுபாடுகளை விட அதிகம் 'வருமானம்' தரக் கூடிய Resources இனைத்தான் நாடுவார்கள்

இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறை புலம்பெயர் நாடுகளில் தாமாகவே தொழில்களை உருவாக்கும் தொழிலதிபர்களாக, உற்பத்தியாளர்கள் ஆக வரவே அதிக சந்தர்பம் உண்டு

கனடாவில் நல்ல வேலை என்றால் என்பதில் பலரும் வேறுபடுவோம், அத்துடன் நாம் ஒவ்வொருவரும் எமது முன்னைய தலைமுறை என்ன வேலை செய்தது? எவ்வளவு உழைத்தார்கள்? எமது சக நண்பர்கள் எவ்வளவு உழைக்கின்றனர் என்பதை ஒப்பீட்டு பார்ப்பது வழமை.

கனடாவிலே தமிழர்களும் புதிய குடிவரவாளர்கள் என்ற ரீதியில் பலரும் தகுதிகள் இருந்தாலும் அதற்கேற்ப வேலைகள் செய்வதில்லை. அனுபவம் இல்லை, மொழி பிரச்சனை, 'ஒரு வலைப்பின்னல்' இல்லாமை என்பன பொதுவாக கூறப்படுவன. நிச்சயமாக 'ஒதுக்கிவைத்தலும்' (discrimination) அதில் ஒன்று.

ஆகவே புதிய குடிவரவாளர்கள் மணிக்கு 10.25 என்ற அடிப்படை வேலைகளையும் சம்பளம் குறைந்த வேலைகளையும் மேற்ரும் ஒன்றிற்கு அதிகமான வேலைகளையும் செய்கிறார்கள்.

பலரும் வீடு வருமானம் குறைவான பகுதிகளிலேயே வாழ்கின்றனர். http://www3.thestar.com/static/googlemaps/starmaps.html?xml=081030_income.xml

பெற்றோரின் உழைப்பால் வசதியால் உயர்கல்வி பெறுவோர் அதிகம். எனவே, அடுத்த தலைமுறை நல்ல வேலைகள் பெற்று கூடுதலாக உழைக்கின்றனர். ஆனாலும், உயர் பதவிகள் வகிப்பதிலும், சமமான சம்பளங்கள் மறுக்கப்படுவதையும் பாரபட்சம் காட்டப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன:

http://www.osstf.on.ca/Default.aspx?DN=7832,7218,491,355,365,Documents

நேர்முகப்பரீட்சைகள் மூலம் மட்டுமே இறுதியாக பல தெரிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை இலகுவாக திறமைகள் இருந்தும் பலரையும் 'தட்டிவிடலாம்'. கனடாவில் டொராண்டோ பல்கலைக்கழகம் மருத்துவத்துறையில் கூடுதலாக எடுபடுபவர்கள் யூதர்கள், வைத்தியர்ரக வந்தாலும் ஒரு துறையில் பட்டம் பெற யூதராக இருந்தாலே பெரும்பாலும் சாத்தியம்.

கனடாவில் உள்ள பெரிய ஐந்து வங்கிகளில் அதிகமான அளவு தமிழர்கள் வேலைசெய்கிறார்கள். பலரும் திறமைகள் இருந்தும் 100000+ வேலைகள் செய்வதில்லை, காரணம் மறுக்கப்படுவது.

அதேவேளை தனிப்பட்ட தொழில் செய்பவர்கள் எனப்பார்த்தாலும் கனடாவின் கட்டிட துறையில், உணவுத்துறையில் இத்தாலியர்கள், நகைத்தொழில் - யூதர்கள் என துறைகளும் இனம் சம்பந்தப்பட்டவையாக உள்ளது.

எம்மவர்கள் தொழில்துறையிலும், இந்த தலைமுறை, கூடுதலாக இன்னொரு தொழிலதிபருக்கு கீழேயே வேலைசெய்வது அதிகம். காரணம், அந்தந்த துறைகள் அவரவர்கள் தனது சுற்று வட்டாரத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே.

இங்கு தாயகத்தில் படித்து குடும்ப வைத்தியராக செய்பவரின் மகள் எல்லாதகுதிகளும் கொண்டிருந்தும் மருத்துவத்திற்கு எடுபடவில்லை.

பின்னர் தந்தையார் ஒரு கருத்தரங்கில் தற்செயலாக அந்த நேர்குகப்பரீட்சை நடாத்தியவாறு சந்திக்க நேர்ந்தது. அவர் ஏன் தனது மகள் எல்லா தகுதிகளும் ( படிப்பில் உயர் சராசரி, உதவி வேலைகள்,..) இருந்தும் எடுபடவில்லை என கேட்டதற்கு உங்கள் மகள் தனது தந்தை ஒரு வைத்தியர் சென சொல்லியிருந்தால் தெரிவுசெய்யப்பட்டிருப்பாரம் என்றார். அவர் இப்பொழுது மகளை அவுஸ்திரேலியா அனுப்பி படிப்பிகின்றார்.

முதல் தலைமுறையில் மட்டுமல்லாது அடுத்த தலைமுறையிலும் கூட குறைந்த சம்பள கொடுப்பனவுகள் உள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன.

Blacks, Brownies and Yellows… Not as equal as the rest when it comes to salaries

http://thezieglersblog.com/2011/03/blacks-brownies-and-yellows-not-as-equal-as-the-rest-when-it-comes-to-salaries/

Edited by akootha

இந்த இணைப்பை இங்கே உள்ள நாம் பார்ப்பதை விட ஊரில் இருந்து கொண்டு வெளிநாடுதான் சொர்க்கம் என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு வைத்தால் கற்பனையில் மிதப்பவர்கள் தரையில் நடக்க வாய்ப்பிருக்கு... :rolleyes::unsure:

வீட்டில் வெளிநாட்டு மோகம் இருந்தவர்களுக்கு இங்கே வரும் வாய்ப்பிற்கு முதல, சிவனே என்று நான் பாட்டுக்கு நிம்மதியாக இருந்தேன், 18 வயது வரமுன்பு ஸ்பொன்சர் பண்ணிக் கூபிடலாமாம் என்று ஒரு கதையத் தொடக்கி, 3 மாதங்களுக்குள் கண்ணைக் கட்டி நடுக்காட்டில கூபிட்டு விட்டுவிட்டார்கள் கிறாதகர்கள்! <_<:(

பட்ட கஷ்டங்களையும், ஏமாற்றங்களையும் சொல்ல வார்த்தைகள் அகராதியில் இருக்குமா தெரியாது. அவை ஒவ்வொன்றும் வாழ்க்கையில் படித்த ஒவ்வொரு படிப்பினைகள்.

வரும் போது எப்படி ஒரு விரக்த்தியான மனநிலையில் இருந்தேனோ பல வருடங்கள் ஓடியும், வாழ்க்கை முறைகள் மாறியும் இன்னும் அதே மனநிலை தான். நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் லண்டனில் வாழ நினைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். :)

பலரின் தகவல்களுக்கும் நன்றிகள். இவை தாயகத்தில் உள்ள ஊடகங்களிலும் வரவேண்டும், வேறு பெயர்களில் :D

பல நாடுகளிலும் அடுத்த தலைமுறை கூட ஒருவித ஏமாற்ற நிலையை அடைந்துள்ளது :

- பல துறைகளில் 'நேர்முகப்பரீட்சை' மூலம் தட்டி விடுவார்கள்

- ஒரே படிப்பு இருந்தாலும், அதே அளவு சம்பளம் இல்லை! வேலை உயர்வு இல்லை!

எமது தலைமுறை discrimination தாங்கிகொண்டாலும் அடுத்த தலைமுறை எம்மை நொந்தும் கொள்ளலாம்.

இந்த discrimination ஐ அழித்தொழிப்பது determination.

பழைய தோழிகளில், எக்ஸ்கியுஸ் மீ தொழில்களில் இருந்து கற்ற பாடங்கள் நேர்முக தேர்வுக்கு நன்றாகவே உதவுகின்றது. நான் படிக்கும் பொழுது கஷ்டப்பட்டு செய்த வேலைகள் தற்சமயம் வாழ்வுக்கு உரமூட்டுகின்றன. எனது அலுவகத்தில் project development முகாமையாளருக்கும் எனக்கும் சிறிதளவுதான் சம்பள வித்தியாசம்.

இப்பெல்லாம் இங்குள்ள இளைய தமிழ் தலைமுறையினர்கள் 6 இலக்கத்தில் சம்பளம் பெறுகிறார்கள்.

நிழலி கூறியது மாதிரி முதலாளித்துவ உலகில், இனத்துவ பாகுபாடுகளை விட அதிகம் 'வருமானம்' தரக் கூடிய Resources இனைத்தான் நாடுவார்கள். சில பல காலங்களில் இந்த நிற பேதமெல்லாம் அடிபட்டுப் போகும்.

இந்த discrimination ஐ அழித்தொழிப்பது determination.

நல்ல வசனம், ஒரு பொன்மொழி!

முதலாளித்துவ உலகில், இனத்துவ பாகுபாடுகளை விட அதிகம் 'வருமானம்' தரக் கூடிய Resources இனைத்தான் நாடுவார்கள். சில பல காலங்களில் இந்த நிற பேதமெல்லாம் அடிபட்டுப் போகும்.

வருமானம் தரக்கூடிய resources உள்ள இடத்தில் போட்டியும் கடுமையாக இருக்கும். அதேவேளை முதலீடும் அதிகம் தேவையாக் இருக்கும். மேலும் natural resources என்று பார்க்கும் பொழுது பெரிய நிறுவனங்கள் அவற்றை தமது அரச ஆதரவுடன் ஆழும். உதாரணத்திற்கு உலகின் மிகச்செல்வந்த நிறுவனங்கள் மசகு எண்ணெய் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், Exxon Mobile, Chevron, BP, Shell அதேவேளை இவை அரசுகளின் வரி மானியத்தையும் பெறுகின்றன.

மேலும் தற்போதைய பொருளாதார மந்த நிலை நீடிக்கும் பொழுது வெள்ளை இனத்தவர்கள் தமது மக்களுக்கே இயல்பாக நல்ல வேலைகளை ஒதுக்குவார்.

புலம்பெயர்ந்த நாங்கள் அவர்கள் கடினப்படுவதைப்போல இரண்டு மடங்கு உழைப்பதன் மூலம் சில உயர் பதவிகளை அடையலாம். இல்லை கிடைக்கும் சந்தர்பங்களை, பாடசாலையிலும் சரி இல்லை வேலைத்தலத்திலும் சரி திறமையாக செய்து காட்டவேண்டும். இல்லை புதிய துறைகளாக இருக்க வேண்டும் (nano thech, bio medical engineering etc.)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.