Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முன்னாள் போராளிகளுக்கு எதிரான தீண்டமை கொடுமை

Featured Replies

இன்று தமிழர் தாயகத்தில் உள்ள 'புதுவித' அடக்குமுறை என்னவென்றால், 'வன்னிப் பெருநிலப்பரப்பில் போரினால் பாதிக்கப்பட்டு, போரின் வலி சுமந்து மீண்ட மக்களுக்கு எதிராகவும், எமக்காகப் போராடி, தமது அவயவங்களை இழந்த/வாழ்வை இழந்த முன்னாள் போராளிகளுக்கு எதிராகவும், மாவீரர் குடும்பங்களுக்கு எதிராகவும்,

எம் மக்களின் மறு சாரார் காட்டும் 'தீண்டாமை'யே அது.

இதுவே இன்று எம்மைப் பீடித்திருக்கும் பெரும் நோய். 'அவர்களு'டன் தொடர்புவைத்தால் இராணுவ அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டுமோ என்று அஞ்சி எம் மக்களே - எம் மக்களை, எம் முன்னாள் போராளிகளை, மாவீரர் குடும்பங்களை ஒடுக்கும், வெறுக்கும், புறக்கணிக்கும் கொடுமையை, தீண்டத் தகாதவர்களாக அவர்களை எண்ணி, வலியால் துடிக்கும் அவர்களுக்கு அன்பு, ஆதரவு அழிக்காமல் விலகிப்போகும் கொடுமையை, இந்தத் 'தீண்டாமையை' நாம் உடனடியாக ஒழித்தாக வேண்டும். துடைத்து அழித்தாகவேண்டும்.

இந்தத் 'தீண்டாமைக்' கொடுமையால் பாதிக்கப்பட்டு ஒரு சில முன்னாள் போராளிகள், வன்னியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் வாழ்வதற்கு வேறு வழியின்றி தற்கொலைசெய்த வேதனை நிறைந்த செய்திகளைப் படிக்க, நினைக்க, வெறுமையும் வலியும் நாட்களை நிறைக்கிறது. இரவுகள் உறக்கத்தை தொலைக்கின்றன. இதில் தாயக மக்களை தவறு சொல்லவும் மனம் வருகிறதில்லை.

ஏனெனில் வன்னியில் இருந்து மீண்ட எம் மக்கள், மற்றும் முன்னாள் போராளிகளுடன் தொடர்புவைத்திருக்கும் ஏனைய மக்களை இராணுவம் அச்சுறுத்துகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே. ஆகையால் அவர்களைத் தவறு சொல்லவும் மனம் வரவில்லை. அவர்கள் பயத்திலும் ஒரு சிறு நியாயம் இருக்கிறது. ஆக, இதற்கும் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம்தான் ஏதாவது செய்தாகவேண்டும். ஒதுக்கப்படும், புறக்கணிக்கப்படும் எம் மக்கள் ஒரு சாராரின் தேவைகளை இப்போதைக்கு நாம்தான் பொறுப்பெடுத்து, நிறைவேற்றவேண்டும்.

குறிப்பாக, புலம்பெயர் நாடுகளில் உள்ள, தாயக ஊர்கள் ஒவ்வொன்றினதும் பெயர்களில் இயங்கும் - சங்கங்கள், தாயக கல்லூரிகள், பள்ளிக்கூடங்களின் பெயர்களில் இயங்கும் பழைய மாணவர் சங்கங்கள் நினைத்தால் இவ்விடயத்தில் பெரும் சேவை ஆற்றலாம்.

வன்னி நிலப்பரப்பைச் சேர்ந்த குடும்பங்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களது குடும்பங்கள் எத்தனைபேர் ஒவ்வொரு ஊர்களிலும் மீளக் குடியமர்ந்துள்ளனர் என்ற விவரம், தரவுகளை சேகரிப்பது - பின் உதவுவது என்பது இந்த பழைய மாணவர் சங்கங்கள், ஊர்ச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு மிக எளிதான காரியமாக இருக்கும். ஆகையால் ஆண்டுதோறும் நடத்தும் கலைவிழா, ஒன்றுகூடல் போன்றவற்றைத் தவிர்த்து எம் உறவுகளின் துயர் தீர்க்க இந்த சங்கங்கள் அனைத்தும் விளைந்திடவேண்டும். இந்தப் 'புது' ஒடுக்குமுறையை நாம் இன்றே அழித்து ஒழிக்கவேண்டும். போரின் வலி சுமந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியும் நாம் தாமதித்தல் கூடாது. நம் மக்களை நாமே இனியும் இழத்தல் ஆகாது. இந்த இழப்பின் பழி என்றும் தீராது

நண்பர்களே... நீங்கள் வாழும் நாடுகளில் எல்லாம் இந்த ஊர்ச்சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் போன்றவற்றைத் தொடர்புகொண்டு இந்த வேண்டுகோளை முன்வையுங்கள். தாமாகவே முன்வந்து இதனை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் சங்கங்கள், ஒன்றியங்களைப் பாராட்டுங்கள். மற்றவர்களுக்கு கோரிக்கை விடுங்கள். செயல் திட்டங்களை உருவாக்க நீங்களும் இணைந்து உழையுங்கள்.

செந்நீரைக் கொட்டியவர்களை தொடர்ந்து கண்ணீரும் சிந்த விடுவோமாயின் நாமோ, நம் சந்ததியோ வாழ்வில் என்றும் நிம்மதி அடைய முடியாது. எம் சந்ததி வாழாது போய் விடும்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட சிற்றூர்கள் எங்கணும் உள்ள கிணறுகள் அனைத்தும் பிணங்கள் போடப்பட்டதால் அனைத்தும் தூர்வாரவேண்டிய நிலை. தூர் வாராமல் இருப்பதால் தண்ணீர் இல்லாத நெருக்கடி. நீருக்குத் தட்டுப்பாடு. தூர் வார்வதற்கு இலகுவாக மோட்டார் இயந்திரங்கள் எதுவும் எம்மக்களிடம் இல்லை. ஆக்கிரமிப்பாளன் எம் மக்களுக்கு எதுவும் செய்யமாட்டான் என்பது தெரிந்ததே.

ஆங்காங்கே மிதிவெடிகள், கண்ணிவெடிகள் புதைந்துள்ளன என்றும், அவற்றை அகற்ற உதவுகிறோம் என்றும் முதலைக் கண்ணீர் வடித்தபடி இரங்கல் போர்வையில் எம் மண்ணை ஆக்கிரமித்துள்ள இந்தியனுக்கோ கிணறுகளில் வழியும் பிணங்கள் பிரச்சனை அல்ல. தேவையும் அல்ல. அவர்களின் தேவை வேறு.

கனடியத் தமிழர்கள் ஒரு சிலர் கொடுத்த நிதியின் உதவியால் பல கிராமங்களுக்கான கிணறுகளைத் தூர் வாரும் மோட்டார் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இன்னும் பல கிராமங்களுக்கு இந்தத் தேவை இன்றும் உள்ளது. இதையும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் செய்தாகவேண்டும். எம் மக்களுக்கு உதவ நாமன்றி வேறில்லை.

இவையே எம் முன் இப்போது இருக்கும் தலையாய பணி என்பதைப் புரிந்தவர்கள் நீங்கள். இருப்பினும் இந்தக் குறிப்பு ஒரு நினைவூட்டல் மட்டுமே. செயற்படுங்கள் என் மக்களே..!

என் பங்குக்கு இரண்டு மாவீரர் குடும்பங்களை என் குடும்பமாகத் தத்தெடுத்து நிதி உதவி புரிந்துவருகிறேன். அந்தக் குடும்பங்களின் குழந்தைகள், என் மகன்கள் குறித்து கேட்டு நலம் விசாரிக்கும்போது ஏற்படும் உவகையை என் உள்ளம் வேறெப்போதும் உணர்ந்ததில்லை. அனுபவித்ததில்லை. அந்த மகிழ்வை நீங்கள் ஒவ்வொருவரும் அனுபவித்தாகவேண்டும் என்பது என் அவா. 'அது' ஒன்றே தரும் சிறு நிறைவை நாம் எம் மனங்களில் சுமந்துகொண்டு எம் இலக்கு நோக்கிப் பயணிப்போம்.

முகநூல் தோழர்கள், உறவுகளே! நான் உங்கள் எல்லோரிடமும் கெஞ்சி இரந்து பிச்சையாய் கேட்பது இது ஒன்றைத்தான். எம் மக்களின் துயரை நாம் எப்பாடு பட்டாயினும் தீர்த்தாக வேண்டும். அவர்கள் கண்ணீரைத் துடைக்க எம்மைத் தவிர வேறெவரும் இல்லை.

உரிமைகளை வென்றெடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் எம் மக்களை, முன்னாள் போராளிகளை, மாவீரர் குடும்பங்களை - உயிரோடு, வாழ்வுக்கான பிடிப்போடு வாழ வைக்கவேண்டும். இழப்பையும் வலியையுமே சந்தித்த அவர்கள் வாழ்வில் ஓர் ஒளியை நாம் ஏற்றியே ஆகவேண்டும். இது இன்றைய காலத்தின் கட்டாயம். சிந்தியுங்கள். இணையுங்கள். செயல்படுங்கள். நன்றி.. என் உறவுகளே!

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

செந்நீரைக் கொட்டியவர்களை தொடர்ந்து கண்ணீரும் சிந்த விடுவோமாயின் நாமோ, நம் சந்ததியோ வாழ்வில் என்றும் நிம்மதி அடைய முடியாது. எம் சந்ததி வாழாது போய் விடும்.

இப்ப குற்றவுணர்வு கூடப் பலரிடம் இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரியும், தெரிந்தும் தெரியாதது மாதிரியும் இருக்கப் பழகியாச்சு.

  • தொடங்கியவர்

இப்ப குற்றவுணர்வு கூடப் பலரிடம் இல்லை. பார்த்தும் பார்க்காதது மாதிரியும், தெரிந்தும் தெரியாதது மாதிரியும் இருக்கப் பழகியாச்சு.

நான் தென் தமிழீழத்தில் வினாயகபுரம் கிராமத்தில் முன்னொரு முறை ஒரு வீரத்தாயை சந்தித்தேன்......அவரின் 5 பிள்ளைகளை போராட்டத்தில் இழந்தவர்..தன் மகளின் கணவரையும் இராணுவம் கொன்று விட்டது..இப்போது என்ன செய்வது என்று என்று தெரியாது என்றார்???

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் போராட்ட வலுவால் தம்மை வளர்த்துக் கொண்ட புலம்பெயர் உறவுகள் ஆதிக்கப்போட்டியில் சிக்குண்டு தேசமக்களின் துயரத்தில் குளிர்காய்கிறார்கள். ஆதிக்கப்போட்டியில் காட்டும் ஆர்வத்தில் ஒரு 10 வீதமேனும் தேசமக்களின் நலனில் காட்டுவதற்கு தயங்குகிறார்கள். ஆக மிஞ்சிப்போனால் அங்கு அவர்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் ஒட்டுக்குழுக்கள் விடுகின்றன இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் இரத்தபந்த உறவுகளாக அவர்கள் இருந்தால் இப்படி அலட்சியமான பதில் வருமா? ஏதோ வழியில் அவர்களுக்கான உதவியை அல்லது அவர்களுடைய நலனுக்காக அந்நிய நாட்டு நண்பர்களின் உதவியை பெற முயலமாட்டார்களா? இப்போதெல்லாம் பேருக்கும், ஊருக்கும்தான் தேசியம் சார்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களே தவிர வேறு எதற்காகவும் தம்மை வருத்துவோரை காண்பது அரிதாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வெள்ளியன்று ஒட்டுசுட்டான் பிரதேசத்திலிருந்து 9 குடும்பங்கள் உதவிகோரி அப்பகுதி கிராமசேவகரது கையெழுத்து அத்தாட்சியுடன் எமது ஊர்ச்சங்கத்தின் முகவரிக்கு கடிதம் போட்டிருந்தனர். அவர்களுக்கு அவர்களின் குடும்ப எண்ணிக்கையை கருத்திலிலெடுத்து அதற்கேற்ப 2 லட்சம் ரூபாக்கள் இன்று அனுப்பவிருக்கிறோம்.

எங்களால் முடிந்ததுக்கும் மேலாக நாங்கள் செய்தபடிதான் இருக்கின்றோம்.

ஆனால் ஒரு பகுதி புலம் பெயர்மக்களே தொடர்ந்து சுமைகளை ஏற்பது நீண்டகாலப்பார்வைக்கு உகந்ததல்ல.

பிரபாகரன் இருக்கும் மட்டும் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பு இருந்தது.

புலத்தில் மாவீரர்களுக்கு மாத்திரம்தான் மதிப்பு. ஊனமுற்று வாழும் போராளிகளின் மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் புலத்தில் பல செயல்பாட்டாளர்களின் பெயர்களில் உள்ளது. அதனைக் கொண்டே போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்ற முடியும். தனியே ஒருத்தரும் பணம் சேர்த்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிக் கருத்துக்கூற ஒருவரும் விரும்புவதில்லை.

உதாரணமாக முன்பு புலிகளின் பணத்தில் ஒரு செயல்பாட்டாளரின் பெயரில் 7 மில்லியன் பவுண்களுக்கு ஒரு பெற்றோல் நிலையம் வாங்கப்பட்டது. இப்பொழுது அது அவர் பெயரில்.

தலைவர் இருக்கிறார் என்பது கூட புலிகளின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே இந்தப் பிணம் திண்ணிக் கழுகுகளால் திட்டமிட்டே பரப்பப்பட்டது. என்றோ ஒருநாள் இவர்களும் குடும்பங்களும் வீதிக்கு வருவது தவிர்க்க முடியாதது.

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் புலத்தில் பல செயல்பாட்டாளர்களின் பெயர்களில் உள்ளது. அதனைக் கொண்டே போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்ற முடியும். தனியே ஒருத்தரும் பணம் சேர்த்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிக் கருத்துக்கூற ஒருவரும் விரும்புவதில்லை.

உதாரணமாக முன்பு புலிகளின் பணத்தில் ஒரு செயல்பாட்டாளரின் பெயரில் 7 மில்லியன் பவுண்களுக்கு ஒரு பெற்றோல் நிலையம் வாங்கப்பட்டது. இப்பொழுது அது அவர் பெயரில்.

போராட்டதிற்கு எதிரான செயற்பாடுகளையும் முன்னெடுப்பவர்களும் இவர்கள் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபாகரன் இருக்கும் மட்டும் வாழும் மாவீரர் குடும்பங்களுக்கு மதிப்பு இருந்தது.

புலத்தில் மாவீரர்களுக்கு மாத்திரம்தான் மதிப்பு. ஊனமுற்று வாழும் போராளிகளின் மறுவாழ்வு மறுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் புலத்தில் பல செயல்பாட்டாளர்களின் பெயர்களில் உள்ளது. அதனைக் கொண்டே போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் காப்பாற்ற முடியும். தனியே ஒருத்தரும் பணம் சேர்த்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. இதைப்பற்றிக் கருத்துக்கூற ஒருவரும் விரும்புவதில்லை.

உதாரணமாக முன்பு புலிகளின் பணத்தில் ஒரு செயல்பாட்டாளரின் பெயரில் 7 மில்லியன் பவுண்களுக்கு ஒரு பெற்றோல் நிலையம் வாங்கப்பட்டது. இப்பொழுது அது அவர் பெயரில்.

தலைவர் இருக்கிறார் என்பது கூட புலிகளின் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே இந்தப் பிணம் திண்ணிக் கழுகுகளால் திட்டமிட்டே பரப்பப்பட்டது. என்றோ ஒருநாள் இவர்களும் குடும்பங்களும் வீதிக்கு வருவது தவிர்க்க முடியாதது.

இது முற்றிலும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.