Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மண்வாசனையுடன் தொடர் அழகாய் போகிறது.

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003இல் போயிருந்தபோது

என் மகள் 3 வயது என்னிடம் சில்லறை வாங்கி வைத்துவிட்டு கேட்டது

ஏனப்பா

அநத் இடத்திலிருந்து ( தாண்டிக்குளம்)

இந்த இடம் வரை (முகமாலை)

ஒருத்தரும் பிச்சை கேட்டு வரவில்லை.

எனது பதில் இது தலைவருடைய இடம்

அவர் எல்லோரையும் பார்ப்பார். கையேந்த விடார்.

இன்று நிலைமை. வேதனை தருகிறது. :(:(:(

  • தொடங்கியவர்

நான் 2003இல் போயிருந்தபோது

என் மகள் 3 வயது என்னிடம் சில்லறை வாங்கி வைத்துவிட்டு கேட்டது

ஏனப்பா

அநத் இடத்திலிருந்து ( தாண்டிக்குளம்)

இந்த இடம் வரை (முகமாலை)

ஒருத்தரும் பிச்சை கேட்டு வரவில்லை.

எனது பதில் இது தலைவருடைய இடம்

அவர் எல்லோரையும் பார்ப்பார். கையேந்த விடார்.

இன்று நிலைமை. வேதனை தருகிறது. :(:(:(

உண்மை விசுகு. :(:( இது என்னை நெருஞ்சியாகக் குத்தியது

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003இல் போயிருந்தபோது

என் மகள் 3 வயது என்னிடம் சில்லறை வாங்கி வைத்துவிட்டு கேட்டது

ஏனப்பா

அநத் இடத்திலிருந்து ( தாண்டிக்குளம்)

இந்த இடம் வரை (முகமாலை)

ஒருத்தரும் பிச்சை கேட்டு வரவில்லை.

எனது பதில் இது தலைவருடைய இடம்

அவர் எல்லோரையும் பார்ப்பார். கையேந்த விடார்.

இன்று நிலைமை. வேதனை தருகிறது. :(:(:(

விசுகு உங்களிற்கு அந்த பாக்கியமாவது கிடைத்தது ஆனால் எனக்கு 96ம் ஆண்டு கடைசியாய் அந்த நாட்டை விட்டு அவசரமாக வெளியேறிபின்னர் போக சந்தர்ப்பமே கிடைக்வில்லை2001 சமாதான காலங்களில் பலரும் கேட்டார்கள் ஏன் வரவில்லையென..2003ம் ஆண்டு சூசையுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது ஏன்மச்சான் வரேல்லை ஏதாவது அண்ணைக்கு டிமிக்கி குடுத்திட்டியா எண்டான். இல்லை கஸ்ரோவை அனைத்துலகத்திடம்மிருந்து; தூக்கும்வரை வரமாட்டேன் என்று சொல்லியிருந்தேன்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு உங்களிற்கு அந்த பாக்கியமாவது கிடைத்தது ஆனால் எனக்கு 96ம் ஆண்டு கடைசியாய் அந்த நாட்டை விட்டு அவசரமாக வெளியேறிபின்னர் போக சந்தர்ப்பமே கிடைக்வில்லை2001 சமாதான காலங்களில் பலரும் கேட்டார்கள் ஏன் வரவில்லையென..2003ம் ஆண்டு சூசையுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது ஏன்மச்சான் வரேல்லை ஏதாவது அண்ணைக்கு டிமிக்கி குடுத்திட்டியா எண்டான். இல்லை கஸ்ரோவை அனைத்துலகத்திடம்மிருந்து; தூக்கும்வரை வரமாட்டேன் என்று சொல்லியிருந்தேன்.

நாம் இருவரும் எதிரிகள் சாத்திரி

இதே காஸ்ரோவை நான் தாண்டிக்குளத்தில் சந்தித்துவிட்டுத்தான் உள் நுழைந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருக்கு நன்றிகள் கோமகன்..! கையேந்திய அந்த அக்காவின் நிலைமையை நினைத்தால்..! :(

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள்.

நான் உண்மையிலேயே அழுதுவிட்டேன்.என்னை பொறுத்தவரை யாழில் பிறந்தாலும் வன்னிமண் என் சொந்த மண்.அங்கு அனேகமாக வந்தேறு குடிகள்தான். நீங்கள் கூறியதுபோல எந்த வீட்டிற்கு போனாலும் முதலில் கிணற்றை காட்டுவார்கள்.ஏன் தெரியுமா? கால் முகம் அலம்பிவிட்டு வா உனக்கு நாங்கள் உணவு தரப்போகின்றோம்(இதுதான் அதன் அர்த்தம்)வன்னியில் எந்த வீட்டிலும் பச்சையரிசிச்சோறும் கத்தரிக்காய் உப்பவியலும் எப்பவும் தயாராக இருக்கும்.இதைவிட ஒரு அனுபவம்.ஒரு வீட்டிற்கு அடிக்கடி எனது வேலையின் நிமித்தம் செல்வேன்.அவர்களை பழைய வன்னியார் என்றழைப்பார்கள் காரணம் வந்தேறுகுடிகள் அல்ல அவர்கள் வாழ்ந்த இடம் பனங்காமம்(அங்குதான் பண்டாரவன்னியனின் ராசதானி உண்டு).அங்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது வழக்கம்.ஒவ்வொரு முறையும் தண்ணீர் தரும் போது புளியும் மணலும் போட்டு மினுக்கி கிணற்றில் தண்ணீர் எடுத்துவந்துதான் தருவார்கள் இப்படித்தான் மக்களை வன்னி மக்கள் உபசரித்தவர்கள் அவர்கள் வாழ்வு ஏன் தான் இப்படியாயிற்றோ தெரியாது.

  • தொடங்கியவர்

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள்.

நான் உண்மையிலேயே அழுதுவிட்டேன்.என்னை பொறுத்தவரை யாழில் பிறந்தாலும் வன்னிமண் என் சொந்த மண்.அங்கு அனேகமாக வந்தேறு குடிகள்தான். நீங்கள் கூறியதுபோல எந்த வீட்டிற்கு போனாலும் முதலில் கிணற்றை காட்டுவார்கள்.ஏன் தெரியுமா? கால் முகம் அலம்பிவிட்டு வா உனக்கு நாங்கள் உணவு தரப்போகின்றோம்(இதுதான் அதன் அர்த்தம்)வன்னியில் எந்த வீட்டிலும் பச்சையரிசிச்சோறும் கத்தரிக்காய் உப்பவியலும் எப்பவும் தயாராக இருக்கும்.இதைவிட ஒரு அனுபவம்.ஒரு வீட்டிற்கு அடிக்கடி எனது வேலையின் நிமித்தம் செல்வேன்.அவர்களை பழைய வன்னியார் என்றழைப்பார்கள் காரணம் வந்தேறுகுடிகள் அல்ல அவர்கள் வாழ்ந்த இடம் பனங்காமம்(அங்குதான் பண்டாரவன்னியனின் ராசதானி உண்டு).அங்கு அடிக்கடி தண்ணீர் குடிப்பது வழக்கம்.ஒவ்வொரு முறையும் தண்ணீர் தரும் போது புளியும் மணலும் போட்டு மினுக்கி கிணற்றில் தண்ணீர் எடுத்துவந்துதான் தருவார்கள் இப்படித்தான் மக்களை வன்னி மக்கள் உபசரித்தவர்கள் அவர்கள் வாழ்வு ஏன் தான் இப்படியாயிற்றோ தெரியாது.

நன்றிகள் நீலப்பறவை. உண்மை எப்பொழுதும் உறைப்பது அதை ஏற்கஏனோ எமது மனம் மறுக்கின்றது. வன்னியுடன் நெருக்கிய தொடர்புகளை வைத்துருப்பவர்ளுக்குத்தான் அதன் வலி தெரியும் மற்வர்களுக்கு அது வெறுஞ்செய்தி மட்டுமே :(:(:(

http://www.youtube.com/watch?v=mfjQkk3i7Ys&feature=player_embedded

வெட்ட வெட்ட தழைப்போம்.ஆழிப்பேரலையின் பின் எப்படி கட்டியெழுப்பினோம்.முடியும் ஆனால் ராணுவம் வெளியேற வேண்டும்.அரச இயந்திரம் ஸ்தம்பிக்க வேண்டும்.அதன் பின் எங்களால் முடியும்.இதுதான் பலரது கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்ட வெட்ட தழைப்போம்.ஆழிப்பேரலையின் பின் எப்படி கட்டியெழுப்பினோம்.முடியும் ஆனால் ராணுவம் வெளியேற வேண்டும்.அரச இயந்திரம் ஸ்தம்பிக்க வேண்டும்.அதன் பின் எங்களால் முடியும்.இதுதான் பலரது கருத்து.

நன்றி

இணைப்புக்கும் ஊக்கத்துக்கும்

உலகை அவர்களுடன் இணைப்போம் முதலில். தூரத்தை சுருக்குவோம். அங்கு நடப்பவை அனைத்தும் சில கணங்களில் உலகை வந்தடைய செய்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

"என்ரடவுளே!!!!! நான் ஆரோடையும் கனக்க கதைக்கிறேல தம்பி நீர் வெளிநாடு எண்டபடியால் உம்மை நம்பிறன்".

ஆ!!! என்ன சொன்னான் எல்லாம் உடன கிடைக்குதே எங்களுக்கு ரெண்டு பக்கமும் இடிதம்பி இப்பதான் ஒருமாரிநிமிர்றம். என்ர ரெண்டு பெடியளும் மாவீரராய் போட்டாங்கள், பெடிச்சியும் இருக்கிறாளோ இல்லையோ தெரியாது மனிசிக்காறிக்கு இதால கொஞ்சம் மண்டகுழம்பிப் போச்சு. இப்ப வைத்தியம் பாக்கிறன், எல்லாம் முறிகண்டியான் பாப்பான் எண்ட துணிவிலை இருக்கிறன்.எனக்கு மனசு வலித்தது.

"எவ்வளவு ஆண்ணை நான் தரவேணும்"?

"ரீ 15 ரூபாய் தாரும்".

பொக்கற்றுக்குள் கையை விட்டேன் நூறு ரூபா வந்தது. "அண்ணை இதை வைச்சிருங்கோ".

"நில்லும் மிச்சம் தாறன்".

"இல்லை மிச்சத்தையும் வைச்சிருங்கோ".

"இல்லைதம்பி உழைச்சு வாறது தான் நிக்கும். நீர் மிச்சத்தை கொண்டுபோம்".

" சரி மிச்சத்துக்கு ஏதாவது வடை றோல்ஸ் தாங்கோ" "அப்பிடி எண்டால் தாறன்".

விரைவாக பாசல் கட்டித் தந்தார். பாசலை வாங்கிக் கொண்டு கடை வாசலை விட்டு வெளியேறினேன்.சிறிது தூரம் சென்றிருப்பேன், தம்பி என்று ஒரு குரல் என்னை நிறுத்தியது.அங்கே ஒரு நடுத்தரவயதுள்ள பெண்ணும் ஒரு சிறுவனும் நின்றிருந்தார்கள். "தம்பி நாங்கள் கிளிநொச்சில இருந்து இடம்பெயர்ந்தனாங்கள்.இங்கை உமையாள் புரத்திலை இருக்கறம், என்னம் நிவாரண நிதி கிடைக்கேல தம்பி. சொல்ல வெக்கமாய் இருக்கு, நேற்றேல இருந்து நானும் பிள்ளையும் என்னம் சாப்பிடேல. பஸ் வெளிக்கிடுவதற்கு ஆயுத்தமாக கோர்ண் அடித்தது. மனைவி பரபரப்பது தெரிந்தது. கையில இருந்த பாசலை அந்தப்பெண்ணிடம் கொடுத்தேன்." இதை சாப்பிடுங்கோ அக்கா எனக்கு பஸ்வெளிக்கிடப்போகுது".

" அப்ப தம்பி உங்களுக்கு நீங்கள் சாப்பிட வாங்கிக் கொண்டு போறியள் போலகிடக்கு, உங்கடை அவாவும் பஸசுக்கை இருந்து உங்களைப் பாக்கிறா எனக்கு வேண்டாம்".

என்று வெள்ளேந்தியாக சொன்னாள். எனக்கு அக்காவின் ஞாபகம் ஏனோ வந்து மறைந்தது. தன்பசியிலும் மற்றவனை உபசரிக்கும் வன்னியின் பண்பு அவள் பொய் சொல்பவளாக எனக்குத் தெரியவில்லை

எனக்குக் கண்கலங்கியது. கடவுளே இவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஏன் இவர்களுக்கு இந்த நிலை எல்லோருக்குந் தானே சாப்பாடு போட்டார்கள் இண்டைக்குக் கூசிக்கூசி அல்லவா சாப்பாட்டுக்குக் கைஏந்துகிறார்கள். எனக்கு வியர்வையுடன் கண்ணீரும் வந்து கண் எரிந்தது.சிறிய துவாயால் முகத்தை இறுக்கமாய் துடைத்தபடி பஸ்சை நோக்கி விரைந்தேன். நான் பஸ்சுக்குள் ஏறியதும் கொண்டக்ரர் விசில் அடித்துக் கொண்டே, "

.

.

..

.

.

.

.

..

.

.

.

.

.

.

.

.

.

.

. ஆழுதேவிட்டேன்....................................................................................................... என் மக்கள்......................................................... நெருஞ்சி முள்ளு ஆழமாக குத்திவிட்டது கோமகன்..........................!

  • தொடங்கியவர்

16384450200919811762752.th.jpg

16735450201034811762752.th.jpg

16781750200609811762752.th.jpg

பஸ்சின் ஜன்னலின் ஊடாக உப்புக்காற்று கமறியது.தூரத்தே வெண்பரப்புகளாக உப்பு விளைந்திருந்தது. உப்பை எடுக்க பாத்தி பாத்தியாக கட்டியிருந்தார்கள். சில இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. எனக்கு அவை இரத்தமாகத் தெரிந்தது. கண்ணைக்கசக்கி விட்டுப் பார்த்தேன். அந்த நீர் குட்டையில் நாரைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. எங்களையும் தானே பல நாரைகள் மீன்பிடித்தன. பஸ் ஆனையிறவு படைமுகாமை நெருங்கியது தெரிந்தது. வீதியின் இரண்டுபக்கமும் உயர்த காவல்கோபுரங்கள் இருந்தன, அதில் சிங்கங்கள் குந்தியிருந்தன. படைமுகாம் பரந்து விரிந்திருந்தது. ஆவலுடன் எட்டிப் பார்த்தேன். இந்தப் படைமுகாமின் பாதுகாப்பு அரண்களைப் பற்றி உலகின் இராணுவ வல்லுனர்கள் சிலாகித்துப் பேசி, ஓர் மரபுவான்படைமூலமே இந்த படைமுகாமை தகர்க்கமுடியும் என்று பெரிய சான்றிதளே கொடுத்திருந்தார்கள்.ஆனால் நாங்கள் சரித்திரத்தையல்லவா மாற்றியமைத்தோம். இதே வீதியால்தானே துட்டகைமுனுக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். உலகின் இரண்டாவது பெரிய தரையிறக்கத்தையல்லா செய்து வெற்றிக்கொடி நாட்டினோம். குடாரப்புத் தரையிறக்கம் பல இராணுவல்லுனர்களை பொறிகலங்க வைத்தது. சிங்களமும் குப்பற வீழ்ந்தது. நாங்கள் அதிகம் பேசவில்லை, செய்து விட்டு அடுத்தவேலையைப் பார்த்தோம். ஆனால், இப்போ காதுபிய்யுமளவுக்கு ஓரே இரைச்சல்.மீண்டும் குடிமனைகள் வரத்தொடங்கின.பஸ் வேகமெடுத்து வீதியின் இரண்டு பக்கமும் தென்னைமரங்கள் நின்றதற்கான அறிகுறிகள் தெரிந்தன. ஆனால், மேலே பலகருகி மொட்டையாக நின்றன.தென்னைகளை வைத்து பளை வரத்தொடங்கிவிட்டது என்று அனுமானித்தேன். தூரத்தே ஒருசிலர் வீழ்ந்த தென்னை ஓலைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் பனை வடலி ஓலைகளால் நேர்த்தியாக வேலி போட்டிருந்தார்கள். பனைகளும் பல கற்பிளந்து நின்றன. புதிய வடலிகளும், தென்னம்பிள்ளைகளும் உருவாகிக்கொண்டிருந்தன. ஆனால், இவைகள் வளர்ந்து எப்போது பலனைத் தரப்போகின்றன?? மனது வலித்தது. சிங்கம் பாத்துப் பாத்தல்லவா எழும்பமுடியாதவாறு கடித்து குதறியுள்ளது. பஸ் மீண்டும் பயணிகளை ஏற்றி இறக்கி போய்கொண்டிருந்தது. பாதையின் அருகே மீண்டும் பழைய புகையிரதப்பாதை இணைந்து வந்து கொண்டிருந்தது. பற்றைகளுடன் மேட்டுப் புட்டியாக வீதியுடன் ஒட்டிவந்தது புகையிரதப் பாதையை திருத்திக் கொண்டிருந்தார்கள். தூரத்தே வீதியின் இரண்டுபக்கமும் உயர்ந்த காவற்கோபுரங்களும், மண் அணைகளும் தெரிந்தன. அவை என்ன என்று அப்பாவியாக மனவியிடம் கேட்டேன். முகமாலை இராணுவப்படை தளத்தை நெருங்குகின்றோம் என்றா. என் முகத்தில் கலவரரேகை படர்ந்தது. பஸ் வேகத்தைக் குறைத்து மெதுவாகச்சென்றது.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தொடரை வாசிக்கவே முடியாமல் போய்விட்ட்து.

ஆறுதலாய் ஒருநாள் வாசிக்க வேண்டும்.

தொடருங்கள் கோமகன்.

நானும் முன்னர் ஒருமுறை போகும் போது, முகமாலை முகாமை அண்மிக்கும் போது, கலக்கமுற்றது நினைவுக்கு வருகிறது.

  • தொடங்கியவர்

23016810150160812736496.th.jpg

26194722116743792015410.th.jpg

28252222116953458661110.th.jpg

பஸ்சின் வேகம் குறைந்ததால் வடிவாக முகமாலை படைமுகாம் கண்முன்னே விரிந்தது. வீதியின் ஆரம்பத்தில் பலமான மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட காவலரண்களுடன் கூடிய மந்திகளும், அதனைத் தொடர்ந்த மேலதிகாரிகளின் குடியிருப்புகளும், பின்பு வந்த படைத்தளத்தின் கம்பீரமும், அடிவயிற்ரை சில்லிடச் செய்தது. இந்தப் படைமுகாம் யாழ்ப்பாணத்திற்கு நுளையும் முதலாவது முன்னரங்கக் காவலரண் பகுதியாகும். இந்தபடைமுகாமை பற்றிப் பல கதைகள் கேள்விப்பட்டு இருக்கின்றேன். இதில் உள்ளே போனவர்கள் உயிருடன் திரும்பியதில்லை அமெரிக்காவின் குவான்ட்தமொனோ ( QUANTAMONO )சித்திரவதைக்கூடத்திற்கு இணையான இந்தப் படைமுகாமில் , இரவில் பலபெண்களின் அலறல் சத்தம் பலரது நித்திரையைக் கலைத்தது. மறுநாள் அடையாளம் காணப்படாத உடலங்கள் படைமுகாமைச் சுற்றிய சுற்றாடலில் கிடைக்கும். பஸ்சினுள் திரும்பி மற்றயவர்களின் முகத்தைப் பார்த்தேன் ஒருவரது முகத்திலும் எந்தவித சலனத்தையும் காணமுடியவில்லை. எல்லோரும் தங்களது அலுவல்களில் இருந்தார்கள். இவர்களுக்கு இதெல்லாம் பழகிவிட்டதோ? எனக்குத்தான் இதெல்லாம் புதிதாக இருந்து அலப்பல் பண்ணுகின்றனோ? பஸ் முகாமைக் கடந்து வேகமெடுத்தது. வீதியின் இருமருங்கிலும் கற்பிழந்த தென்னைகளிடையே எமது பாரம்பரிய கல்வீடுகள் வரத்தொடங்கின. பல வீடுகள் குரோட்டன்கள், கமுகு மரங்கள், மயில்க்கொன்றை மரங்கள், அலரி மரங்கள், என்று செளிப்பாகவும், சிலவீடுகள் பாழடைந்த நிலையிலும் காணப்பட்டன. அனேகமாக இந்த வீடுகளில் இருந்தவர்கள் இடம்பெயர்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த முகாமில் வாடுகின்றார்களோ??????? நினைவுகளால் மனது கனத்தது. நேரம் 11 மணியை கடந்து இருந்தது. பஸ் உசன், மிருசுவில் என்று சிறிய ஊர்களைக் கடந்து கொண்டிருந்து. பலர் அதில் ஏறி இறங்கினார்கள். களைத்த மனதிற்கு பஸ்சனுள் ஒலித்த பாடல்கள் இதமாக இருந்தன. நித்திரையின்மையால் கண்கள் கள்ளுக் குடித்த மாதிரி சிவத்து போயிருந்தன. போட்டிருந்த உடுப்பு வியர்வையினால் தோய்ந்து மணக்கத்தொடங்கியது.

"என்னம் எவ்வளவு நேரம் ஓட்டம்?"

என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன்

"இன்னும் ஒரு மணித்தியால ஓட்டத்தில பரித்தித்துறை".

எனது முகத்தில் சந்தோசம் குடிகொண்டது. படிக்கின்ற காலத்தில் அங்கு போனதிற்குப் பிறகு எனக்கும் பரித்தித்துறைக்குமான தொடர்புகள் விடுபட்டுபோய்விட்டது. பஸ் கொடிகாமம் பஸ்நிலையத்தில் தன்னை நிலைநிறுத்தியது . கொண்டக்ரர் தேத்தண்ணி குடிக்கப் போனார். எனக்கும் கீழே இறங்கவேண்டும் போல இருந்தது,

மனைவியைக் கள்ளப்பார்வை பார்த்தேன். எனது பார்வையைப் புரிந்து கொண்ட அவா என்னை முறைத்துப்பார்த்தா. நான் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐன்னலினூடாக வேடிக்கை பார்க்கத்தொடங்கினேன்.

கொடிகாமம் பஸ்நிலையத்தில் பெரியமாற்ரங்களை காணமுடியவில்லை. கொடிகாமம் சந்தை பரபரப்பாகக் காணப்ட்டது. முதன்முதலாக நீண்டகாலத்திற்குப்பிறகு தட்டிவானை இங்கு கண்டேன். பழமை மாறாது அப்படியே நின்றது அதன்பின் தட்டியில் வாழைக்குலைகளும், பினாட்டு கடகங்ளும் , புழுக்கொடியல் கடகங்களும்,ஏறிக்கொண்டிருந்தன. நான் மிகவும் ஆவலாகப் பார்த்தேன். வந்த கொண்டக்ரரிடம் அண்ணை இந்ததட்டிவான் எந்தரூட்டிலை இப்பபோகுது என்று குழந்தைத்தனமாகக் கேட்டேன்.என்னை ஒரு பார்வை பார்த்தார் கொண்டக்ரர். எனக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது. அவரின் உதட்டில் புன்னகை தவழ்ந்தது.

"இப்ப இதெல்லாம் குறைவு தான் தம்பி, இங்கை இருந்து மருதங்கேணி, ஆளியவளைக்குப் போகும். கேள்வியைப் பார்த்தால் இப்பவே ஏறிப்போகப்போறீர் போல கிடக்கு".

நான் சிரித்தேன். மனைவி முறைத்துப் பார்த்தா

"கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு வாறியளே?"

"ஏன் பிள்ளை தெரியாததைத் தானே அவரிட்டைக் கேட்டனான்".

பஸ் கொடிகாம் பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்டு பரித்தித்துறை நோக்கிச் செல்லும் பாதையில் திரும்பியது. அந்தப் பாதை மிகவும் ஒடுக்கமாக இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் நின்று தான் விலத்த வேண்டியிருந்தது. நேரம் 11.30 ஆகியிருந்தது. பஸ் வேகமெடுத்தது. இரண்டுபக்கமும் ஏழ்மையும் பணமும் (ஓலைக்குடிசைகளும் கல்வீடுகளும்) மாறிமாறி வந்து கொண்டிருந்தன. பலவீடுகளில் கப்பிக் கிணறுகள் எட்டிப்பார்த்தன. சில வீடுகளில் ஆர்பிக்கோ பிளாஸ்ரிக் தண்ணீர்தொட்டிகளின் கூடிய கிணறுகளும் எட்டிப்பார்த்தன. அனேகமாக அவைகள் யூரோக்கள் அல்லது டொலர்களின் ஆதிக்கம் பெற்றவையாக இருக்கவேண்டும். ஆனால் என்னால் ஆடுகாலும் துலாவுடன் கூடிய கிணறுகளை காணாதது வேதனையாக இருந்தது. சில வேளைகளில் அதுவும் பங்கர்சென்றிக்குப் போய்விட்டதோ? இருந்தால் போல ஒரு வெளி வரத்தொடங்கியது. ஆரம்பத்தில் கவலரண் போட்டு மந்திகள் குந்தியிருந்தன. இது என்ன என்று மனைவியிடம் கேட்டேன். இது தான் முள்ளிவெளி என்றா. முள்ளிவெளி கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் இருந்து. முடிவிலும் மந்திகள் குந்தியிருந்தன, இலவு காத்த கிளிகளாக இதுகளின் வாழ்க்கையும் போகின்றது. வீதியின் இரண்டு பக்கமும் பனைகளும் வீடுகளும் தோட்டங்களுமாக மாறிமாறி வந்தன. பஸ் வேகமாக முன்னேறி நெல்லியடி பஸ்நிலையத்தில் வந்து நின்றது. அருகே பரித்தித்துறை வீதி நெளிந்தது. நெல்லியடி ஒரே இரைச்சலாக இருந்தது. இந்த நெல்லியடிக்கும் எமக்கும் ஒரு பெரியகதையே உள்ளது.இதே நெல்லியடியில்தான் சிங்கம் திக்கிமுக்காடி அலறியது, ஒருவனின் காற்றோடு கலப்பால். சிங்கம் மட்டுமாஅலறியது? சுற்றுப்பட்டிகளும் தான். நாங்கள் எங்களையும் ஆயுதமாக்குவோம் என்றதும் இந்த இடத்தில் தான். நேரம் 12 மணியாகியிருந்து பஸ் பரித்தித்துறை வீதியில் வேகமெடுத்தது. காதைப்பிளக்கும் மிகையொலிகோர்ண்களால் நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன். இப்போழுது பஸ்சிற்குள் பத்துப்பேரே இருந்தோம். மனைவியின் முகத்தல் மகிழ்சி. மந்திகைசந்தியைக் கடந்து கொண்டிருந்தது பஸ். ஒடுக்கமாக வந்த வீதி பரித்தித்துறை வருவதை எனக்கு உணர்த்தியது. இரண்டு பக்கமும் இருந்த கட்டிடங்களும் வீடுகள் சிலவும் செல்அடியில் சிதிலமாகக் கிடந்தன. பஸ் முதலாம் கட்டைச்சந்தியை தாண்டியது.

"இதில இருந்தும் எங்கட வீட்டக்குப் போகலாம்" என்று மனைவி எனது பிராக்கைக் கலைத்தா.

"அப்ப இதில இறங்குவம்" என்று எழும்பினேன்.

"இல்லை, பஸ்நிலையத்தில் இறங்குவம்".

"சரி".

வேகமெடுத்த பஸ் பஸ்டிப்போவை கடந்து, சிறிதுதூரம் ஓடி பரித்தித்துறை பஸ்நிலையத்தில் நின்றது.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன்.

நீண்ட இடைவெளியை குறையுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே தொடருங்கோ................................. இடையில மனைவிட்ட வேண்டி கட்டியிருப்பிங்கள் போல...................

  • தொடங்கியவர்

அண்ணே தொடருங்கோ................................. இடையில மனைவிட்ட வேண்டி கட்டியிருப்பிங்கள் போல...................

ஐய்யோ புலி அதை ஏன் கேக்கிறீர். என்ரபயணமே அவான்ர கையிலை டீலே அதுதான். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறைவரையும் எங்களைக் கூட்டி வந்திட்டியள் கோமகன்..எப்ப மீதி இடம் கூட்டிப்போகப் போகிறீர்கள்..அங்கங்கு கண்ணீரை வரவைத்தாலும் அழகாகப்போகிறது பயணம்...தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஐய்யோ புலி அதை ஏன் கேக்கிறீர். என்ரபயணமே அவான்ர கையிலை டீலே அதுதான். :D:D

கிட்டதட்ட எல்லாருக்கும் இதே நிலைதான் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டதட்ட எல்லாருக்கும் இதே நிலைதான் :lol::lol:

நான் அவனில்லை

என்று சொல்லத்தான் ஆசை..............? :wub:

  • தொடங்கியவர்

நான் அவனில்லை

என்று சொல்லத்தான் ஆசை..............? :wub:

இப்ப என்னதான் சொல்ல வாறியள் விசுகர் :o:o:o

  • கருத்துக்கள உறவுகள்

மறைமுகமாய் சொல்லுறார்......அவருக்கும் நிறை அனுபவங்கள் இருக்கு போல... :D

  • தொடங்கியவர்

22796710150170902971496.th.jpg

26982222112461459110310.th.jpg

28244210150234053156496.th.jpg

பஸ் நிண்டதும் எல்லோரும் இறங்கும்வரை பாத்துக் கொண்டிருந்தோம்.கடைசியாக நாங்கள் எமது சாமான்களுடன் இறங்கினோம். எனக்குப் பின்பக்கம் நன்றாகப் புளித்து விட்டது, அவ்வளவு குலுக்கல். பரித்தித்துறை பஸ்நிலையம் அந்தமத்தியானத்திலும் களைகட்டி இருந்தது. பஸ்நிலையத்தில் நவீனசந்தைக் கட்டிடத்தை திரும்பவும் கட்டிக் கொண்டிருந்தார்கள். சந்தையை தற்காலிகமாக பஸ்வந்து நிண்ட இடத்துக்குப் பக்கத்திலேயே வைத்திருந்தார்கள். மீன் சந்தையையும் முனைக்கு போகும் வழியில் வைத்திருந்தார்கள். நான் இறங்கின புழுகத்தில ஒரு சிகரட்டை எடுத்து பத்தவைத்தேன். எங்கள் நகரங்களில் இது முக்கியமானதொரு துறைமுகப்பட்டினம். தமிழர்களின் புகழை ஆழப்பதித்து வைத்தநகரம். பல அறிஞர்களையும் பல கடலோடிகளையும் எமக்குத் தந்த நகரம். யோசனையில் நின்றிருந்த என்னை மனைவியின் குரல் இடைமறித்தது.

"உங்களுக்கு எங்கையாவது முனியடிச்சுப்போட்டுதோ"

"என்ன சொல்லுறீர் விளப்பமாய் சொல்லுறது"

" இல்லை கொழும்பில இருந்து வெளிக்கிட்ட தொடக்கம் ஒரு மார்க்கமாத்தான் நிக்கிறியள்."

"அதுசரி, உமக்கெங்கை தெரியப்போகுது என்ர வலியள்?. நான் என்ன உம்மைப்போல வரியத்துக்கு ஒருக்கா வாறனானே?"

"இதில நில்லுங்கோ நான் ஓட்டோ பாக்கிறன்."

" ஏன் பிள்ளை கனதூரமோ?"

அவாவின் பார்வை என்னைச் சுட்டது.

" இந்த நக்கல் எல்லாம் வேண்டாம் நில்லுங்கோ வாறன்".

நானும் புகையைத் தொடர்ந்தேன். கோப்பாய் என்றால் நான்தான் ராசா, வழிகாட்டி. இது எனக்கு புதிய இடம் அவாசொல் கேட்டு நல்லபிள்ளையாக நின்றேன். ஒரு ஓட்டோ டறைவருடன் மனைவி வந்தா. நான் ஓட்டோவிற்கு எவ்வளவு என்று கேட்டேன். டறைவர் என்னைப்பார்து சிரிக்க, நான் முழித்தேன்.

"இவைன்ர குடும்பம் எனக்கு தண்ணிபட்டபாடு தம்பி. உள்ளுக்கை ஏறுங்கோ. நான்முந்தி இவைக்கு கார் எல்லாம் ஓடினான், இப்ப கார் ஓட்டோவாய் சுருங்கீட்டுது. நீங்கள் எவ்வளவு காசு எண்டு கேட்டது எனக்கு துண்டா பிடிக்கேல".

தேவையில்லாமல் வாயை குடுத்திட்டனோ?

"தம்பி முதல்தரம் வாறிங்களோ."

"ஓம், உங்களுக்கு எப்படித்தெரியும்"?

என்னில ஏதாவது எழுதிஒட்டி இருக்கோ?

"இல்லைதம்பி முந்தி இவா தனிய வாறவா. இப்ப ரெண்டுபேரும் வாறியள், அதுதான் கேட்டனான். மனைவி சிரிச்சுக்கொண்டே,

"அண்ணை விட்டால் இவர் கதைச்சுக் கொண்டு இருப்பர் நீங்கள் ஓட்டோவை எடுங்கோ".

ஓட்டோ எங்களை சுமந்து கொண்டு அம்மன் கோயில் அடியால் திரும்பியது. அந்தவீதி மிகவும் ஒடுக்கமாக இருந்தது. ஓட்டோ சனத்திற்குள் மெதுவாகவே போனது. பரித்தித்துறைக்கு பெருமை சேர்பதில் அதன் வடையும், தோசை, தோசைக்கறி, எள்ளுப்பா, அப்பம், போன்றவையும் அடங்கும். எல்லோரும் தான் இவைகளைச் செய்வார்கள். ஆனால், இவர்களின் தொழில்நுட்பம் யாருக்கும் வராது. இன்றும் அப்பத்தட்டிகள் இங்கு பிரபல்யம். அப்பத்தட்டி என்பது, ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருந்தன. சிலவீடுகளில் நாங்கள் போன வீதியில் அப்பத்தட்டி வைத்திருந்தார்கள். இடத்தை வடிவாகப் பாத்துக் கொண்டு வந்தேன், பின்பு தனிய வந்து வாங்கி சாப்பிட. பரித்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த "அப்பத்தட்டி" ஊறிப்போன விடையம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம்பரியமாகவும், பெண்களுக்குப் பொழுதுபோக்குடன் கூடிய, தங்கள் சிறிய போருளாதரத் தேவைகளை நிறைவேற்றும் முறமையாகவே பார்க்கின்றார்கள். ஓட்டோ கல்லூரி வீதிசந்தியைக் கடந்தது.

"இதால போனால் காட்லிக் கல்லூரிக்குப் போகலாம். அங்கால போனால் மெதடிஸ் கல்லூரிக்கும் போகலாம்"

"அப்ப நீர் படிச்ச வடஇந்து மகளிர் கல்லூரி?"

"அதுக்கு இடப்பக்கம் திரும்பிபோகவேணும்".

ஓட்டோ சந்தியை கடந்து ஒழுங்கையில் இறங்கியது. ஒழுங்கையின் இரண்டு பக்கமும் கிடுகுவேலியும், மதிலும் மாறிமாறி வந்தன. வழியில் ஆடுகளும், குட்டிகளும் இப்பிலிப்பில் குழையைக் கடிச்சடியே வந்தன. அவைகள் பொட்டுக்குள் போகமல் இருக்கக் கழுத்தில் முக்கோணத் தடி கட்டி இருந்தார்கள். அதைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அந்த ஆடுகள் உயரமான பெரிய செவிகளுடன் மேய்ந்தன. எனக்குக் கனகாலத்திற்குப் பிறகு ஊர் ஆடுகளைப் பார்க்கப் புதினமாக இருந்தது. ஓட்டோ ஆவோலை பிள்ளையார் கோயிலடியால் திரும்பியது.

"என்னம் கனதூரம் போகவேணுமோ?"

"இல்லை வீடு கிட்டீட்டுது."

எனக்கு மாமி, அன்ரி, மாமாவைப், பாக்கிற அவதி. மாமாவையும் அன்ரியையும் இப்பொழுதுதான் முதன்முதலாகப் பார்கப்போகின்றேன். அவர்களுக்கு நான் மனைவியைக் கலியாணம் செய்தது செய்தியாகத்தான் தெரியும். அத்துடன் மனைவியின் தங்கைச்சி பிள்ளைகள் குடும்பத்துடன் குன்னூரில் ( இந்தியா ) இருந்து பள்ளிவிடுமுறைக்கு வந்திருந்தார்கள். அந்தப் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முதன்முதலாக அம்மாச்சியைப் பார்க்கப்போகின்றார்கள். சிந்தனையில் இருந்த என்னை ஓட்டோ நின்ற ஒலி நிஜத்திற்கு கொண்டு வந்தது. அப்போது நேரம் மதியம் 1 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் ஓட்டோவிலிருந்து இறங்கி சாமான்களை இறக்கினேன்.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

பயணக்க் கதை நல்லாயிருக்கு முக்கியமான இடத்தில நிற் பாட்டிவிடீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.