Jump to content

ஷோபாசக்தி பதில்கள் - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தி பதில்கள்

ஷோபாசக்தி

இனி ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். வாசகர்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களின் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

பொதுவாக உங்கள் பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாதது போல உள்ளது. ஆனால் உங்கள் சிறுகதைகள் பல தமிழ்ச்சூழலில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இலக்கியம் அல்லது கலை குறித்து உங்கள் அபிப்பிராயம்தான் என்ன?

பேச்சுகளில் கலை சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் கெடுதலில்லை. ஆனால் எனது கதைகளில் அந்த அக்கறை இருக்கிறதல்லவா, அதுதான் முக்கியமானது.

இலக்கியம் / கலை குறித்தெல்லாம் பொதுவான அளவுகோல்கள் எதுவுமில்லை. ஒவ்வொரு உயிரியுடைய வாழ்வியல்/ அரசியல் தன்னிலைகளே இலக்கியம் குறித்த வித்தியாசம் வித்தியாசமான அளவுகோல்களை தம்மளவில் உருவாக்குகின்றன. எல்லோருக்குமான மகத்தான இலக்கியம் என்று இங்கே எதுவுமில்லை. எடுத்துக்காட்டாக நவீன தமிழ் இலக்கியத்தின் முதன்மையான முகங்களில் ஒன்றாக சுஜாதாவை இப்போது தூக்கி நிறுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் சுஜாதாவின் இலக்கியம் நவீன இலக்கியமல்ல, அது நச்சு இலக்கியம். சுஜாதா சுயசாதிப்பற்றுடன் பார்ப்பன சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டது இவர்களுக்கு வெறும் செய்தியாக மட்டுமேயிருக்கலாம். சுஜாதா உரையாடல் எழுதிய திரைப்படங்களில் ஆண்திமிர் வக்கிர வசனங்களை எழுதியதும், விளிம்புநிலை மக்கள் மீதான காழ்ப்பு நிறைந்த சொல்லாடல்களை உமிழ்ந்ததும் இவர்களிற்கு புறக்கணிக்கப்பட கூடிய செய்தியாக இருக்கலாம். ஆனால் சுஜாதாவின் மதவாத, சாதியவாத பிற்போக்குத்தனங்களின் விளைவுகளாகவே இவற்றை நான் எச்சரிக்கையுடன் அணுகுவேன். அவரது அதே பிற்போக்குத்தனம் அவரது எழுத்திலுமிருந்தது. அவரது எழுத்து வெகு சாதாரணமான வணிக எழுத்து. வணிக எழுத்தில்கூட சுஜாதாவைக் காட்டிலும் பாலகுமாரன் சற்றே ஆழமானவர் என்றே நான் சொல்வேன். பாலகுமாரனுக்கு எப்போது நவீன இலக்கிய முகத்தைப் பொருத்தப்போகிறார்களோ தெரியவில்லை. நவீன இலக்கியத்திற்கு சுஜாதாவின் பங்களிப்பாக ஒரே ஒரு புத்தகத்தை இவர்கள் துணிந்து சொல்லட்டும் பார்க்கலாம். நா. முத்துக்குமாருக்கும் கனிமொழிக்கும் 'கணையாழி' இதழில் அறிமுகம் கொடுத்தார் என்பதற்காக சுஜாதா நவீன இலக்கியத்தின் முகமென்றால் வாழ்நாள் முழுவதும் எழுதுபவர்களை உற்சாகப்படுத்துவதையே இயக்கமாகக்கொண்டிருக்கும் அய்யா தி.க.சியை என்னவென்பது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் சுஜாதாவை உச்சமாகக் கொண்டாடுவது ஒரு போக்கு எனில் அதை கடுமையாக நிராகரிக்கும் போக்கும் சமாந்தரமாகவே நிகழ்கிறது. அசோகமித்திரனை இலக்கிய உச்சமாகக் கொண்டாடும் தரப்பு இங்கே வலுவாகயிருக்கிறது. ஆனால் என்னை அசோகமித்திரனது ஒருவரி கூடக் கவருவதில்லை. கே. டானியலின் நாவல்களை நான் பக்கம் பக்கமாக மனப்பாடமாக்கி வைத்துள்ளேன். ஒருவரது வாழ்நிலை / அரசியல் கருத்துநிலை போன்றவையே இலக்கியத்தில் அவரது மனதுக்கு நெருக்கமான பிரதிகளை வரித்துக்கொள்கின்றன.

நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காதபோதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்தும் அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்துதான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக்கொள்கிறேன்.

நான் அடிக்கடி சொல்வதுதான்: என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்.

உங்கள் ஆரம்பகால படைப்புகள் எந்த இதழில் பிரசுரமாயின? முதல் முயற்சிகள் தொகுக்கப்பட்டுள்ளதா?

எனது ஆரம்பகால எழுத்து முயற்சிகள் புலிகள் அமைப்பில் நான் இருந்தகாலத்தில் நிகழ்ந்தவை. இயக்கத்தின் கருத்தியல் சார்ந்தே சில கவிதைகளை 1984- 1986 காலப்பகுதிகளில் எழுதியிருக்கிறேன். அவை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'ஈழமுரசு', 'செய்திக்கதிர்' போன்ற பத்திரிகைகளில் வெளியாகின. நாடகங்கள் எழுதி நடத்தியிருக்கிறேன். இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பு நீண்ட இடைவெளி. 1997ல் பாரிஸில் 'அம்மா' என்ற சிறுபத்திரிகையை தோழர் மனோ தொடக்கியபோது முதல் இதழிலிருந்து கடைசி இதழ்வரை (13 இதழ்கள்) தொடர்ச்சியாக எழுதினேன். 1999லிருந்து 'எக்ஸில்' பத்தரிகையில் தொடர்ச்சியாக எழுதினேன். அவற்றில் எழுதிய கதைகள் எல்லாம் 'தேசத்துரோகி' தொகுப்பில் வெளியாகியுள்ளன. கட்டுரைகள் தொகுக்கப்படவில்லை.

இன்று புத்தகங்களைச் பெரிய அளவில் சந்தைப்படுத்தும் உயிர்மை, காலச்சுவடு போன்ற நிறுவனங்கள் இருக்கும் போது நீங்கள் 'கருப்பு பிரதி'யில் பதிப்பிக்கின்றீர்கள். என்ன காரணம்?

பெரிய அளவில் சந்தைப்படுத்துவதுதான் நோக்கமெனில் காலச்சுவடையும் உயிர்மையையும் அணுகியும் பிரயோசனமில்லை. நேராகவே 'கிழக்கு' பதிப்பகத்தை அணுகவேண்டியதுதான். ஆனால் இந்த சந்தைப்படுத்தல் 'டெக்னிக்' தீவிர இலக்கிய / அரசியல் நூல்களிற்கு பெருமளவில் உதவுவதில்லை. பதிப்பகத்திற்கும் சந்தைப்படுத்தலிற்கும் அப்பால் நூலின் தன்மையே விற்பனையை நிர்ணயிக்கும் காரணியாகச் செயற்படும் நிலையே தமிழில் இன்னும் இருப்பதாகக் கருதுகிறேன்.

'கருப்புப் பிரதிகள்' நீலகண்டன் நீண்டகாலமாக எனது அரசியற் தோழர். அவர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தோழர்களுடன் இணைந்து நடத்திக்கொண்டிருக்கையில் எனக்கு அறிமுகமானவர். பெரியாரியல் எங்கள் இருவரையும் நெருக்கமாக்கியது. தொடர்ச்சியான உரையாடல்களின் ஊடாகவும் அவ்வப்போதான செயற்பாடுகள் மூலமாகவும் நாங்கள் இருவரும் நெருங்கிய தோழர்களாயுள்ளோம். ஈழத்து எழுத்துகளின் மீதும் புலம்பெயர்ந்த எழுத்துகளின் மீதும் அவர் தீவிர ஈடுபாடுடையவர். புலம் பெயர்ந்தவர்களின் சில புத்தகங்களையும் அவர் சிறப்பாக வெளியிட்டுள்ளார். இவையே என்னையும் கருப்புப் பிரதிகளையும் இணைத்துவைத்துள்ளது.

நீலகண்டனிடம் பெரியளவில் முதலீடும் பிற வசதிகளும் இல்லாதபோதும் அவர் பதிப்பிக்கும் நூல்களை மட்டுமல்லாது 'விடியல்' போன்ற வேறு பதிப்பகங்கள் வெளியிடும் அவரது அரசியலுக்கு உடன்பாடான நூல்களையும் 'தலித் முரசு' போன்ற இதழ்களையும் சுமந்துசென்று தமிழகம் முழுவதும் இலக்கியக் கூட்டங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் விற்பனை செய்து வருபவர் நீலகண்டன். அவருக்கு நூற்பதிப்பு என்பது ஓர் அரசியல் செயற்பாடே தவிர வியாபாரமல்ல. எனக்கு இவ்வாறான ஒரு பதிப்பாளரே பொருத்தமானவர்.

இலக்கிய சர்ச்சைகளுக்கு பதில் சொல்லாமல் இருந்தால்தான் என்ன? எவ்வகையான சர்ச்சைகளை விமர்சனங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்?

இலக்கிய சர்ச்சைகளில் எல்லாம் நான் இறங்குவதில்லையே. ஏனெனில் இலக்கியம் சார்ந்த எனது கோட்பாடு அறிவு மிகக் குறைவானது. ராஜ்கவுதமன், எம்.ஏ. நுஃமான், அ.மார்க்ஸ், தமிழவன், ராஜன்குறை, ஜெயமோகன், பிரேம், பிரம்மராஜன் போன்ற இலக்கிய விமர்சகர்கள் விரிந்தளவு இலக்கிய வாசிப்பு உள்ளவர்கள். அவர்களைப் போன்றவர்கள் இருக்கும் இலக்கிய விமர்சன உலகில் எனக்கென்ன வேலை. இங்கே நான் குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் நான் தீவிரமாகப் பின்தொடர்ந்து பயிலும் ஏராளமான தீவிரமான இலக்கிய விமர்சகர்கள் நம்மிடையே உண்டு. என்னுடைய வேலை இலக்கிய சர்ச்சையில் ஈடுபடுவதல்ல. இவர்களைப் பயில்வதும் பயின்றதை என்னில் உரசிப்பார்ப்பதுமே என்னுடைய வேலை. அதன்வழியே என்னுடைய இலக்கிய எழுத்துகளை நெறிப்படுத்திக்கொள்வதே எனது குறி.

எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் இலக்கியம் குறித்து ஏதாவது குறிப்பிட்டிருந்தால் அந்தக் கருத்து இலக்கியத்தை மையப்படுத்தியதாக இருக்காது. அதாவது இலக்கியத்தின் உள்ளேயிருக்கும் படைப்புத்திறன் சார்ந்த நுண் அலகுகளை நான் பேசியிருக்கமாட்டேன். ஏனெனில் அது எனக்குத் தெரியாது. அரசியலுக்கும் இலக்கியத்துக்குமான ஊடாட்டங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்தே பேசியிருப்பேன். மலேசியாவில் 'வல்லினம்' ஏற்பாடு செய்த கூட்டத்தில் நவீன இலக்கியம் என்ற தலைப்பில் பேசுங்கள் எனச் சொல்லிவிட்டீர்கள். நான் தலைப்பையே தலைகீழாக்கி 'தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?' என்று பேசினேன். இலக்கியப் பிரதிகளிற்குள் இருக்கும் அரசியலைப் பேசினேன். படைப்புத்திறன் சார்ந்த ஏரியாவிற்குள்ளேயே நான் நுழையவில்லை.

நான் அரசியல் விவாதங்களில் முனைப்பாக ஈடுபடுவதைத்தான் நீங்கள் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். எவ்வகையான 'சர்ச்சை'களைக் கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன் என்றால் எதையும் விட்டுவைக்க விரும்பவில்லை. நேரம் ஒத்துழைக்கும்வரை முடிந்தளவு எல்லாவித அரசியல் விவாதங்களிலும் எனது கருத்தைப் பதிவு செய்துவிடவே விரும்புகிறேன். சர்ச்சைகளும் பதில்களும் என்று ஏன் பார்க்கிறீர்கள்? அதை உரையாடலாகப் பாருங்கள். சுதந்திரமான அரசியல் உரையாடலின் அருமையை ஈழத்தவர்கள் போல உணர்ந்தவர்கள் வேறுயாருமில்லை. ஏனெனில் அது அவர்களிற்கு அகத்திலும் புறத்திலும் கடுமையாக மறுக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதால் எனது படைப்புத்திறன் நாசமாகப் போவதெனில் அது அப்படியே போகட்டும். அரசியல் விவாதங்களாலும் உரையாடல்களினாலுமே எனது அரசியல் நிலைப்பாட்டை நான் செம்மை செய்து கொள்கிறேன். அந்த நிலைப்பாட்டிலிருந்துதான் என்னுடைய இலக்கிய எழுத்துகள் உருவாகின்றன. அரசியல் உரையாடலகளும் விவாதங்களும் இல்லையெனில் எனது எழுத்தும் இல்லை.

சரி அவதூறுகளிற்கும் வேலைமெனக்கெட்டுப் பதிலளித்துக்கொண்டிருக்க வேண்டுமா என நீங்கள் கேட்கக்கூடும். அது யார் அவதூறு சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது. வெறுமனே வம்புக்கு கணனியில் நாலெழுத்தைத் தட்டி நம்மை வம்புக்கு இழுப்பவர்கள் குறித்துக் கவலையில்லை. அதைப் புறக்கணிக்கலாம். ஆனால் 'வினவு' இணையத்தளம் அல்லது 'கீற்று' இணையத்தளம் போன்று தொடர்ச்சியான அரசியற் செயற்பாடுகளில் இருப்பவர்கள் நம்மீது அவதூறு செய்யும்போது அவற்றிற்குப் பின்னே இருப்பது வெறும் வம்பளப்பு மட்டுமே என நான் கருதமாட்டேன். நமது கருத்துநிலைகளை அவர்கள் அவதூறுகளால் தகர்க்க நினைக்கும்போது அதற்கு நான் இடம் கொடுக்கமாட்டேன். அவ்வளவு வலுவான எய்ட்ஸையே எதிர்த்துக் கட்டுப்படுத்துகிறார்கள், இந்த புகைபோன்ற அவதூறுகளைத் தோலுரித்துக்காட்ட முடியாதா என்ன!

உங்கள் படைப்புகளுக்குத் தமிழ்ச்சூழலில் எவ்வகையான ஆரோக்கியமான விமர்சனங்கள் எழுந்துள்ளன? தமிழ்நாட்டில் பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்களை மறுக்கும் மனம் உண்டு. உங்களுக்கு அது நிகழ்ந்ததா?

"தமிழ்நாட்டில் பொதுவாகவே புலம்பெயர்ந்தவர்களை மறுக்கும் மனம் உண்டு" என்பதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். இது மிகவும் மேலோட்டமான ஒரு குற்றச்சாட்டு. எல்லா இடங்களிலும் உள்ளதைப் போலவே தமிழகத்து இலக்கியத்திலும் வெவ்வேறு கருத்துநிலை சார்ந்து இலக்கியத்தரப்புகள் உள்ளன. இந்தத் தரப்புகள் தமிழகத்திற்குள்ளேயே ஒரு தரப்பை மறுப்பதும் இன்னொருதரப்பை ஆதரிப்பதும் உள்ளன. சுந்தர ராமசாமியையும் அசோகமித்திரனையும் முற்றாக நிராகரிக்கும் தரப்புகள் அங்கு உள்ளன. தலித் இலக்கியத்தை வெறும் பிரச்சார இலக்கியமென வம்படியாகப் பேசுபவர்கள் அங்கிருக்கிறார்கள். பெண்ணிய எழுத்துகளைக் கடுமையாக நிராகரிக்கும் தரப்பைக்கூட நாம் அறிவோம். இதுபோலவே புலம்பெயர்ந்த இலக்கியத்தின் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை மறுப்பவர்களும் இதற்கு எதிர்மாறாக மறுக்கப்படும் தரப்பை ஆதரிப்பவர்களும் அங்குண்டு. இங்கே தமிழகம் / தமிழகத்திற்கு வெளியே என்ற அளவுகோல்கள் உபயோகிக்கப்படுவதில்லை. அரசியல் - கலை மீதான அவரவரது சொந்த கருத்துநிலைகளின் அடிப்படையிலேயே இந்த மறுப்புகளும் விருப்புகளும் இயங்குகின்றன என்றேதான் நான் கருதுகிறேன். இது தவிர்க்க முடியாதது.

எனக்கு மறுப்பு நிகழ்ந்ததா எனக் கேட்டிருந்தீர்கள். எனது அரசியல் நிலைப்பாடு சார்ந்து எனது எழுத்துகள் தமிழ்த் தேசிய அணிகளால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதேவேளையில் அவர்கள் என்னைத் தொடர்ந்து படிக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்வைத் தருவது. தமிழகத்து சிறுபத்திரிகைகளும் இலக்கிய விமர்சகர்களும் மட்டுமல்லாமல் தமிழகத்து வணிகப் பத்திரிகைகளும் 'கொரில்லா' நாவல் வெளியான நாளிலிருந்து இன்றுவரை என்னை எப்போதும் உற்சாகப்படுத்தியே வருகிறார்கள். ஈழத்தவன் எனபதால் புறக்கணிப்பை நான் பெறவில்லை, மாறாகச் சற்றுத் தகுதிக்கு மீறிய அங்கீகாரத்தையே அவர்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன்.

இங்கே இன்னொரு விடயத்தைக் குறிப்பிட என்னை அனுமதியுங்கள். கடந்த மாதம் நோர்வேயில் தமிழ்த் திரைப்பட விழாவொன்று நடைபெற்றிருந்தது. விழாவை நடத்தியவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள். திரையிடலுக்கு நான் திரைக்கதையில் பங்களித்து உரையாடல் எழுதிய செங்கடல் படமும் தேர்வானது. திரைப்பட விழாவிற்கு நோர்வேக்கு தயாரிப்பாளர் செல்வதாகயிருந்து அது இறுதி நேரத்தில் ரத்தாக என்னை திரைப்பட விழாவிற்கு அழைக்கும்படி இயக்குனர் திரைப்பட விழாக் குழுவினரிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் என்னை அழைப்பதற்கு விழாக்குழுவினர் மறுத்துவிட்டனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: "ஷோபாசக்தி புலிகளிற்கு எதிரானவர் அதனால் அவர் வருவதை நாங்கள் விரும்பவில்லை" என்பதே. புறக்கணிப்பு எப்படியெல்லாம் செயற்படுகிறது பார்த்தீர்களா. நான் எழுதிய, நடித்த திரைப்படம் அவர்களிற்குத் தேவை, ஆனால் நான் தேவையில்லை. இவ்வளவிற்கும் செங்கடல் திரைப்படம் இலங்கை - இந்திய அரசுகளை நேரடியாக விமர்சிக்கிறது எனக் காரணம் சொல்லி அந்தப் படம் கடந்த ஆறுமதங்களாக இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டிருக்கிறது. மறுப்பு அயலிலிருந்துதான் வருமென்பது இல்லை. அது நம்மிடையேயிருந்தும் வரும்.

http://www.vallinam.com.my/issue30/shobabathilgal.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் செயல்பாடுகள் மட்டும்தான் உங்கள் இலக்கியமெனில் எப்படி உங்களால் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் பேசமுடியும்?உங்களுக்குத் தார்மீகமாக அதற்கு உரிமை இருக்கிறதாக கருதுகிறீர்களா?

கார்த்திகேயன்

--------------------------------------------------------------------------------

தோழர், என்னுடைய இலக்கியம் மட்டுமல்ல ஒவ்வொருவரது இலக்கியப் பிரதிகளிற்குள்ளும் அரசியல் உள்ளது. அதை நுட்பமாகக் கட்டவிழ்த்துப் பார்ப்பதுதான் பின்நவீனத்துவ அறிதல்முறை நமக்கு வழங்கியிருக்கும் கொடை. இவ்வகையான விமர்சனமுறையினை நீங்கள் அறிமுகம் செய்துகொள்வதற்காக சுஜாதாவின் 'மஞ்சள் இரத்தம்' கதை குறித்து ரவிக்குமாரும் சுராவின் 'புளியமரத்தின் கதை' குறித்து ராஜன் குறையும் புதுமைப்பித்தன், மௌனி பிரதிகள் குறித்து அ. மார்க்ஸ் எழுதிய மறுவாசிப்புக் கட்டுரைகளையும் இமையத்தின் 'கோவேறு கழுதைகள்' குறித்து ராஜ்கவுதமன் எழுதிய விமர்சனத்தையும் தேடிப் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

சுஜாதா பார்ப்பன சாதிப்பற்றும் அதை வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளும் திமிரும் உடையவர் என்பது நீங்கள் அறிந்ததே. அசோகமித்திரன் தமிழகத்தில் பார்ப்பனர்கள் யூதர்களைப் போல அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்கிறார்கள் என ஓர் ஆங்கிலப்பத்திரிகையின் நேர்காணலில் அழுதுவடிந்ததையும் தந்தை பெரியாரின் 'முரளி பிராமணாள் கபே'க்கு எதிரான போராட்டத்தை கொச்சை செய்து எழுதியதையும் நீங்கள் படித்திருக்கலாம். இவர்களது இந்தச் சாதியச் சாய்வுகள் இவர்களது இலக்கியப் பிரதிகள் முழுவதுமே விரவிக்கிடக்கின்றன.

சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் மிகச் சிக்கலான பரிமாணங்களைக் கொண்டவை. 'பார்ப்பனர்' என்ற வார்த்தையைத் தவிர்த்து 'பிராமணர்' என்ற சொல்லாடலை உபயோகிப்பதே பார்ப்பனியம்தான் என்பார் பெரியார். பார்ப்பனர்களை 'பிராமணர்கள்' என விளிப்பதை பஞ்சமா பாதகங்களில் ஒன்றென வரையறுத்தவர் அவர். அன்றாடச் சொல்லாடல்களிலிருந்து கலை - இலக்கியம், அரசியல் வரைக்கும் நமது சாதிய எதிர்ப்புப் பிரக்ஞை எப்போதும் விழிப்புடனிருக்கவேண்டும். எனவே இவர்கள் குறித்துப் பேசுவது எனது தார்மீக உரிமை மட்டுமல்ல எனது வரலாற்றுக் கடமையும் அதுவே.

ஷோபா சக்தி,

உங்கள் நாவல்களும், சிறுகதைகளும்தான் உங்கள் அடையாளம், ஆனால் அதைத்தவிர மற்றவற்றை மட்டுமே செய்கிறீர்கள் (அரசியல் வேண்டாமென்றில்லை, சமீபகாலமாக அதைமட்டுமே செய்கிறீர்கள். தத்துவம், அரசியல் பேசினாலும் சீரான இடைவெளியில் படைப்புகளை எழுதும் ஜெயமோகன்) நீங்கள் இலக்கிய எழுத்தாளர் என்று உங்களுக்கு தெரியுமா அல்லது அது வாசகர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையா? இலக்கியம் பக்கம் எப்போது திரும்ப போகிறீர்கள், அடுத்த நாவல் எப்போது?

அரங்கசாமி. K.V

--------------------------------------------------------------------------------

அன்பான அரங்கசாமி,

ஜெயமோகனதும் எனதும் வாழ்க்கைச் சூழல் மட்டுமல்லாது எங்களது இலக்கிய நுழைவுக்கான வழிகளும் வெவ்வேறானவை. மிக இளமைப்பருவத்திலிருந்தே எழுத்தாளராவது என்ற உறுதியுடனும் அதற்கான உழைப்புடனும் இருந்தவர் அவர். அவரது அக்கறைகளில் எழுத்தே முதன்மையானது. அரசியலை எப்போதும் ஒரு கலைஞனின் எழுத்தாளனின் உள்ளுணர்வுடன்தான் அணுகுவதாகச் சொல்பவரவர்.

நான் முற்றுமுழுதான இயக்க - கட்சிப் பின்னணியிலிருந்து இலக்கியத்துக்கு வந்தவன். இலக்கியத்தை, கலையை ஓர் அரசியலாளனின் உள்ளுணர்வோடு எச்சரிக்கையோடு அணுகுபவன். எனது அக்கறைகளில் இலக்கியம் முதன்மையானதும் அல்ல. எனது வாசிப்பு, எழுத்து, இயங்குதளம் எல்லாமே நேரடி அரசியலோடு பின்னிப்பிணைந்தவை.

உங்களின் என்மீதான அக்கறைக்கு நன்றி. இவ்வருட இறுதிக்குள் அடுத்த நாவலைக் கொண்டுவந்துவிடலாம்... அதுவும் எனது அரசியல் துண்டுப் பிரசுரங்களின் தொகுப்பாகவேயிருக்கும்.

ஷோபா சக்திக்கு வணக்கம். இலங்கைமீது பொருளாதார தடை கொண்டுவரவேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை எடுபடுமா?

நந்தவனம் சந்திரசேகரன், தமிழ் நாடு

--------------------------------------------------------------------------------

எடுபடாது. பொருளாதார தடைவந்தாலும் அதனால் பட்டினிகிடக்கப் போவது ராஜபக்ச குடும்பமா என்ன. அவர்கள்தான் பலதலைமுறைக்குக் கொள்ளையடித்து வைத்திருக்கிறார்களே. போததற்கு இப்போது கேபியும் வெளிநாடுகளிலுள்ள புலிகளின் மூலதனங்களையும் சொத்துக்களையும் ஓசைப்படாமல் ராஜபக்ச குடும்பத்திற்கு மாற்றிக்கொடுத்து வருவதாகவும் செய்திகள் கசிகின்றன. அவ்வாறு இலங்கையின்மீது பொருளாதாரத் தடைவந்தால் துன்பப்படப்போவது பொதுசனமே. குறிப்பாகத் தமிழ் மக்களே. ஈராக் மீது பொருளாதார தடைவிதிக்கப்பட்டபோது வறியவர்களும் குழந்தைகளுமே அதிகமாகப் பாதிக்கப்பட்டார்கள். மருந்தில்லாமல் இறந்த குழந்தைகள் பல்லாயிரம். கியூபா மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளால் கியூபா மக்கள் அனுபவிக்கும் வறுமையையும் பற்றாக்குறையையும் துயரத்தையும் நான் நேரடியாகவே பார்த்துள்ளேன்.

ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் போர்க்குற்றவாளிகள் (மகிந்த ராஜபக்ச, கொத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேகா... முதலியவர்கள்) மீது நடவடிக்கை எடுக்குமாறு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை மிகச் சரியானது. இது நடைமுறைச் சாத்தியப்படுவதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லையெனினும் இவ்வாறான உலகம் தழுவிய பரப்புரை இயக்கம் இலங்கை ஆளும்வர்க்கத்தை அம்பலப்படுத்த உதவும். எனினும் இன்றைய இலங்கையின் ஆளும்வர்க்கத்தை வேரறுக்கும் சக்தி இலங்கை மக்களின் கைகளில் மட்டுமே உள்ளது. அந்தச் சக்தி அலாவுதீனின் பூதம்போல அற்புத விளக்கில் கட்டுண்டு கிடக்கிறது. அந்தச் சக்தியைத் தட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்தின் முற்போக்காளர்களுக்கும் இடதுசாரிகளுக்குமே முதன்மையானதாக இருக்கிறது. இதைவிட வேறு அரசியல் வழிகள் இலங்கையைப் பொறுத்தவரை பயன்தரப்போவதில்லை என்றே நான் கருதுகிறேன்.

சோபா,

சீமானுடன் என்னதான் நீங்கள் முரண்படுகிறீர்கள். எதற்கு தொடர்ந்து அவரை கிண்டல் செய்கிறீர்கள்? உண்மை தமிழரை உங்களுக்குப் பிடிக்காதா?

செங்கதிரோன்.

-------------------------------------------------------------------------------

என்ன செங்கதிரோன்! சீமான் உண்மைத் தமிழரென்றால் நாங்கெல்லாம் என்ன டூப்ளிகேட் தமிழரா? விடுதலைப் புலிகள் விசயத்தில் உண்மைத் தமிழன் பொய்த் தமிழனாக மட்டுமே இருக்கிறார் என்பதுதான் முதன்மைப் பிரச்சினை. ஈழப் போரட்டம் குறித்து அவர் பேசுவதில் 99 விழுக்காடனவை உண்மைக்குப் புறம்பானவையே. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் முண்டிவிழுங்கி 'அதை ஊகத்திற்கே விட்டுவிடலாம்' எனச் சொல்பவரின் அரசியல் நேர்மை குறித்து எதைச் சொல்ல. சீமான் பிரபாகரனை வரலாற்றுப் புருஷனாகவும் தேசியத் தலைவராகவும் கொண்டாடுபவர். நான், பிரபாகரன் ஒரு விடுதலை இயக்கத் தலைவருக்கான பண்புகளைக் கொண்டவரல்ல அவர் வெறும் யுத்தப்பிரபுவே (War Lord) எனச் சொல்லி வருபவன். இதுதான் அடிப்படை முரண். மற்றப்படிக்கு சிங்கள இனவாத அரசுக்கு எதிராக சீமான் ஒலிக்கும் குரலின் மீது எனக்கு எந்த விமர்சனமுமில்லை. முதற்தடவையாகச் சீமான் தி.மு.க. அரசால் கைதுசெய்யப்பட்டபோது அதை நான் கண்டித்து எழுதியிருக்கிறேன். ஆனால் "தமிழ் மீனவனை அடித்தால் சிங்கள மாணவனை அடிப்போம்" எனப் பேசும் சீமானின் 'நோன்சென்ஸ்' பேச்சுகளை நான் இரசிப்பதாயில்லை.

ஷோபா சக்தி அவர்களே, உங்களை நீங்கள் என்னவாக அடையாளம் காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பசுபதி அப்பண்ணன்

--------------------------------------------------------------------------------

'துரோகி' என்ற அடையாளம்தான் எனது மக்களில் பெரும்பான்மையானவர்களால் என்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. நானும் நீண்டநாட்களாக அதை விரும்பிச் சுமந்துகொண்டிருக்கிறேன்.

எனக்காக நான் விரும்பியிருந்த அடையாளம் நாடக நடிகனே. பத்துவயதிலிருந்தே மேடையேறி நடித்திருக்கிறேன். எனது பதினெட்டாவது வயதில் விடுதலைப் புலிகள் நடத்திய 'விடுதலைக் காளி' தெருக்கூத்தில் நிலாந்தனின் இயக்கத்தில் நடித்தேன். கிட்டத்தட்ட 300 தடவைகள் கிராமம் கிராமமாக நடத்தப்பட்ட நிகழ்வது. அதுவே எனது இறுதி நடிப்பாயும் போனது. பதின்ம வயதுகளில் என்னைப் போலவே நாடக ஈடுபாடுகொண்டிருந்தவரும், சக இயக்கப் போராளியுமான வாசுதேவன் இயக்கத்திலிருந்து நீங்கி லண்டன் சென்றதும் அவருக்கு அவைக்காற்று கழகத்தின்மூலம் வாய்ப்புகள் கிடைத்தன. இன்று அவர் தேர்ந்த, முன்னணி நாடக நடிகர். எனக்கு 1993ல் தாய்லாந்தில் பிரஞ்சுப் போலிப் பாஸ்போர்ட் கிடைக்காமல் இங்கிலாந்து போலிப் பாஸ்போர்ட் கிடைத்திருந்து நான் லண்டன் சென்றிருந்தால் இன்று நாடகத்துறையில் வாசுதேவனுக்கு கடும் போட்டியாளனாக இருந்திருப்பேன். பிரான்ஸில் அவ்வாறான வாய்ப்புகள் கிடையாது. லண்டனிலிருப்பது போலவோ கனடாவிலிருப்பது போலவோ தமிழ் நாடக இயக்கம் ப்ரான்ஸில் இல்லை.

நான் பெற்ற 'அகதி', 'துரோகி' அடையாளங்கள் என்மீது சுமத்தப்பட்டவை. நான் இழந்த அடையாளம் நாடக நடிகன் என்பது. இதை எங்காவது பதிவு செய்யவேண்டுமென கனநாளாகத் துடித்துக்கொண்டிருந்தேன். வசமாகச் சிக்கினீர்கள் பசுபதி.

http://www.vallinam.com.my/issue31/shobabathilgal.html

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ், துபாய்

--------------------------------------------------------------------------------

கேள்வி : உங்களுக்கும் சாருவுக்கும் என்ன பிரச்சனை?

பதில் : ஏன் வந்து தீர்த்து வைக்கப்போகிறீர்களா? வேலையைப் பாருங்க பாஸ்.

கேள்வி : நீங்கள் ஒரு அகதியாக ஆனதை எப்படிப் பார்க்கிறீர்கள்? அந்த அடையாளத்தை விரும்புகிறீர்களா?

பதில் : இது கேள்வி! இந்தக் கேள்விக்கு ஏற்கனவே சில பத்திரிகைகளில் பதிலளித்துள்ளேன் எனினும் சற்று விரிவாக இப்போது சொல்லிவிடுகிறேன்.

1983ல் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் அகதிகளாக மேற்கிற்குப் புலம்பெயரத் தொடங்கினார்கள். அப்போது நான் அவ்வாறு அகதிகளாகப் போகிறவர்களைப் பழித்துக் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். "நாங்கள் தமிழீழத்திற்காக இரத்தம் சிந்திப் போராடிக்கொண்டிருக்கும் போது தப்பியோடும் கோழைகளே" என்பது மாதிரியிருக்கும் அந்தக் கவிதைகள். கவிஞர் செழியன் எழுதிய 'பெர்லினுக்கு ஒரு கடிதம்' என்ற கவிதை அப்போது மிகவும் புகழ் பெற்றிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ். போராளியான செழியனின் கவிதை 'எம்மவர் குருதியின் சுவடுகள் / உறைந்துபோகும் முன்னரே /எங்கள் தேசத்து இளைஞர்களின் / சடலங்களின் மேல் நடந்து / பெர்லின் விமான நிலையத்தில் / வந்து இறங்கும் /அகதிகள் கூட்டத்தில் / என்னைத் தேடி நீ அலையாதே" என்பதாக முடியும். அந்தக் கவிதை அப்போது எனக்குக் கொள்கை விளக்கக் கையேடு. இப்போது நான் பாரிஸில், செழியன் கனடாவில்.

1986 பிற்பகுதியில் நான் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்னும் புலம்பெயருவது என்ற சிந்தனையே என்னிடமிருக்கவில்லை. அப்போது யாழ்ப்பாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இராணுவத்தால் அபாயம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் புலிகள் இயக்கத்தால் ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்தன. நான் என்னுடைய இயக்க வாழ்வின் கடைசி எட்டு மாதங்கள் ஞானம் அம்மானின் அணியில் இருந்தேன். ஞானம் அம்மான் இயக்கத்திலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே நானும் வெளியேறினேன். ஞானம் அம்மானைக் கிட்டு பிடித்துக் கொண்டு போக முயன்ற போது ஞானம் அம்மான் சயனைட் அருந்தி மரணமானார். அப்போது ஞானம் அம்மானுக்கு 23 வயது. எனக்குப் பத்தொன்பது வயது. ஞானம் அம்மானின் இயற் பெயர் காண்டீபன். 'முறிந்த பனை' நூலில் அவரின் மரணம் குறித்த பதிவுகளுள்ளன. எனக்கும் புலிகளால் பிரச்சினையிருந்தது. அவர்களது சிறையில் கொஞ்ச நாட்கள் அடைபட்டுக் கிடந்தேன். புலிகளின் அப்போதைய ஆயுதப் பொறுப்பாளர் ஜொனியின் பரிந்துரையால் விடுதலையானேன். அப்போதும் என்ன இடர் நேர்ந்தாலும் நாட்டை விட்டு வெளியேறுவதில்லை என்ற முடிவோடுதான் இருந்தேன். எனது முன்னைநாள் தோழர்களால் தொந்தரவு இருப்பினும் அது கொலை அளவிற்கு போகாது என்பது எனது கணிப்பு.

சில மாதங்களிலேயே இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் யுத்தம் தொடங்கிச் சில நாட்களிலேயே புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கினார்கள். நாட்டுக்குள் அமைதிப்படை அட்டகாசம் செய்தது. நான் இயக்கத்திலிருந்து விலகியிருந்தது அமைதிப் படைக்கு செய்தியல்ல. நான் இயக்கத்தில் இருந்தேன் என்பதுதான் அவர்களுக்கு முக்கியம். இரண்டு அதிகாலைகளில் என் வீடு சுற்றிவளைக்கப்பட்டது. இரண்டு தடவைகளும் தப்பிவிட்டேன். இந்திய அமைதிப்படையுடன் தேடுதல் வேட்டையில் 'திறீ ஸ்டார்' என அழைக்கப்பட்ட தமிழ்ப் போராளிக் குழுக்களும் இணைந்துவிட்டார்கள். இந்தியனை ஏமாற்றினாலும் நம்முடைய பொடியளிடம் தப்பிக்க முடியாது என்று நான் அஞ்சினேன். புலம் பெயர்ந்து அகதியாகச் செல்லும் முடிவை எடுத்தேன். என் அச்சம் துயரமான முறையில் நிரூபணமானது. நான் எனது கிராமத்திலிருந்து புறப்பட்டு கொழும்புக்கு வந்து சேர்ந்த சில நாட்களில் எனது அயல்வீட்டவனும் என்னுடன் புலிகள் இயக்கத்தில் இருந்தவனும் எனது உற்ற நண்பனுமான கொடி என்ற ரவிக்குமார் இந்திய அமைதிப்படையோடு இணைந்து செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் உயிருடன் வாகனத்தில் கட்டியிழுக்கப்பட்டு கொல்லப்பட்டான் என்ற சேதி என்னை வந்தடைந்தது. கவிஞர் செழியன் புலிகளால் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார். நான் இந்திய அமைதிகாக்கும் படையால் துரத்தப்பட்டேன்.

அகதி அடையாளத்தை விரும்புகிறீர்களா எனக் கேட்டீர்கள். வேறு எந்த வழியும் அப்போது என் முன்னால் இருக்கவில்லை, இப்போதுமில்லை.

--------------------------------------------------------------------------------

முத்துகிருஷ்ணன் தனூஷ்கோடி

--------------------------------------------------------------------------------

கேள்வி : திரு ஷோபா சக்தி அவர்களே, இன்னும் எவ்வளவு காலத்துக்கு விடுதலைப்புலிகளை பற்றியே குற்றம் சாற்றிக்கொண்டிருப்பது? இந்த நேரத்தில் பழைய கதைகள் தேவையா? ராஜபக்ஷேவை பற்றி எப்போது அதிகமாக பேச போகிறீர்கள்.

பதில் : அன்பான முத்துகிருஷ்ணன், விடுதலைப் புலிகளின் குற்றத்தின் நிழல் நமது சமூகத்திலிருந்து முற்றாக விலகும்வரை அதைப் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது. முன்பு புலிகளை விமர்சித்தபோது போராட்ட காலத்தில் விமர்சிக்கக் கூடாது என்றார்கள். இப்போது விமர்சித்தால் புலிகள் இல்லாத போது பழைய கதைகள் பேசலாமா என்கிறீர்கள். அப்போது எப்போதுதான் புலிகளைப் பற்றிப் பேச அனுமதிப்பீர்கள்? புலிகள் என்பது பிரபாகரனோ அல்லது ஓர் இராணுவ அணியோ அல்ல. அது சனநாயக மறுப்பையும் ஆயுதக் கலாசாரத்தையும் அதிதீவிர வலதுசாரி அரசியலையும் முப்பது வருடங்களாக ஈழச் சமூகத்தில் கட்டமைத்து வைத்திருந்த ஒரு பாஸிச அரசியல் போக்கு. அந்தப் போக்கு நமது சமூகத்தை ஆழ ஊடுருவிச் சிதைத்துள்ளது. பிரபாகரனின் மறைவுடனோ புலிகளின் இன்மையுடனோ இந்த அரசியல் போக்கு மறைந்துவிடவில்லை. அந்தப் போக்கு குறிப்பாகப் புலம் பெயர் தேசங்களில் அவிழ்த்துப்போட்டு ஆடுகிறது. அந்தப் பாஸிசக் கலாசாரத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறையும்வரை நாம் அது குறித்துப் பேசத்தான் வேண்டியிருக்கிறது. எனது பங்கிற்கு நான் ஒரு ஆணியை அளிக்க விரும்புகிறேன்.

'ராஜபக்சவைப் பற்றி எப்போது அதிகமாகப் பேசப் போகிறீர்கள்?' எனக் கேட்டிருக்கிறீர்கள். அன்பான தோழா! இலங்கை அரசின் இனவாதத்தையும் மனித உரிமைகள் மீறல்களையும் குறித்து இலக்கியத்தில் என்னைவிட அதிகம் எழுதிய இன்னொருவரைக் காட்டிவிடுங்கள் பார்க்கலாம். நாவல்களாகவும் சிறுகதைகளாகவும் உரைச்சித்திரங்களாகவும் நாடகமாகவும் திரைப்படமாகவும் நான் கடந்த பதினைந்து வருடங்களாக அவற்றை விடாமல் எழுதிவருகிறேன். எனக்கு அடுத்ததாக அதிகம் எழுதியவரை நீங்கள் காட்டினாலும் அவர் நான் எழுதியவற்றில் பாதியளவுதான் எழுதியிருப்பார் அல்லவா?

இலங்கை அரசின் பேரினவாதம் குறித்து பிறமொழி ஊடகங்களிலும் என்னளவிற்கு பேசிய இலக்கிய எழுத்தாளர் எவரும் இல்லை என்பதும் உண்மையல்லவா. நேரமிருந்தால் எனது வலைப்பக்கத்தில் 'நேர்காணல்கள்' பகுதிக்குச் சென்று படித்துப்பாருங்கள். அனைத்தும் அங்கே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. சிங்கள இதழியலாளர்களால் வெளியிடப்படும் 'லக்பீம' பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலின் தலைப்பு: Can Sinhalese live in peace when minorities suffer?

இலங்கை அரசு குறித்தும் ராஜபக்ச குறித்தும் நான் சொல்பவற்றைவிட நான் ஒரு வார்த்தை புலிகள் குறித்துப் பேசினால் அதுதான் புலியாதரவாளர்களை எரிச்சல்படுத்துகிறது. என்னுடைய பிரபலமான "நான் புலிகளை நூறு சதவீதம் எதிர்க்கிறேன், இலங்கை அரசை இருநூறு சதவீதம் எதிர்க்கிறேன்" என்ற பிரகடனம் இணையங்களில் வாழைப்பழ காமெடி ரேஞ்சுக்குப் படாதபாடு படுகிறது. குற்றம் என்னிடமில்லைத் தோழா. நீ இலங்கை அரசை விமர்சிக்கிறாயோ இல்லையோ புலிகளைப் பற்றிப் பேசாதே என்ற மன அவசம் தான் இவ்வாறு சாரமற்ற கேள்விகளை உங்களைக் கேட்க வைக்கிறது.

சென்ற மாதம் இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நான் நிகழ்த்திய உரை கீழேயுள்ள தொடுப்பிலுள்ளது. பேஸ்புக்கிலும் டிவிட்டிரிலும் பிரச்சினையைப் பேசுவதைவிட அதைச் சம்மந்தப்பட்டவர்கள் முன்னிலையில் பேசுவது முக்கியமானதல்லவா? நிதானமாக இந்த உரையைப் படியுங்கள். ஏதாவது கேள்வியிருந்தால் வல்லினத்திற்கு அனுப்பிவையுங்கள். அடுத்த இதழில் பதிலளிக்கிறேன். எனது உரை: http://www.shobasakthi.com/shobasakthi/?p=881

--------------------------------------------------------------------------------

வேலாயுதம் (பாஸ்கி), தமிழ்நாடு

--------------------------------------------------------------------------------

கேள்வி : சகோதரரே, நான் உங்கள் வாசகன். அதாவது சிறுகதைக்கு. உங்கள் 'ம்' நாவலை வாசித்து உங்களை வாசிப்பது வீண் என்று நினைத்தேன். எவ்வளவு கொடூரமான மனம் உங்களுக்கு. பெண்ணியம் பேசும் நீங்கள் உங்கள் நாவலில் ஒரு சிறுமி தன் தகப்பனால் கற்பிணியாக்கப்படுவதை நியாயப்படுத்துகிறீர்கள். இதில் உங்கள் அரசியல் என்ன?

பதில் : வணக்கம் சகோதரா, நான் த. ஜெயகாந்தனின் இரண்டு பழக்கங்களைக் கடுமையாகப் பின்பற்றி வந்தேன். தன்னுடைய புனைகதைகள் குறித்து வரும் விமர்சனங்களிற்கு ஆசான் பதிலளிப்பதில்லை. "என்னுடைய கதை சொல்லாத எதை நான் கதைக்கு வெளியில் சொல்லிவிட முடியும்" என்பார் ஆசான். நானும் ஆசானைப் பின்பற்றி வருகிறேன். ஒரேயொருமுறை மட்டும் யமுனா ராஜேந்திரன் கொடுத்த ஆய்க்கினையால் 'ம்' நாவல் குறித்துச் சிலவற்றை அவருக்குச் சொல்ல நேரிட்டது. யமுனாவுடைய விமர்சனமும் உங்களது கேள்வியும் தற்செயலாக ஒரேமாதிரியாக அமைந்துவிட்டதால் அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்குமான பதிலாக இங்கே பதிவு செய்கிறேன்.

"ஈழத்தின் வன்முறையினால் மனப்பிறழ்வுற்ற ஒரு நபர் தனது பெற்ற குழந்தையை கர்ப்பமாக்கியதனை, அப்பெண் குழந்தையின் கண்களில் காதல் தெரிவதை எழுதுகின்ற ஷோவின் 'ம்' நாவலது சித்திரிப்பும் குழந்தைகள் மீதான காதல் எனும் அளவில் சமூக விரோதமானதுதான். அதைச் சித்தரிக்கும் ஷோபாசக்தியும் சமூகவிரோதிதான்" எனத் தீர்ப்பிடுகிறார் யமுனா.

யமுனாவோடு இலக்கியம் பேசிப் புண்ணியமில்லை. யமுனாவுக்குப் புரிந்த மொழியிலேயே இதை விளக்க முயற்சிக்கிறேன். பிரதாப் போத்தனும் ஷோபாவும் நடித்த 'மூடுபனி' என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். அத்திரைப்படத்தின் நாயகன், பாலியல் தொழிலாளர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்வான். அப்படிக் கொலை செய்வதை அவன் நியாயம் என்றும் நம்புவான். அவன் கொலைகாரனாவதற்குரிய புறச் சூழல்களையும் அவனின் ஆழ்மனச் சிக்கல்களையும் இயக்குநர் திரைப்படத்தின் அடிநாதமாகச் சித்திரித்தும் காட்டியிருப்பார். அதற்காகப் படத்தை உருவாக்கிய பாலு மகேந்திரா பாலியல் தொழிலாளர்களைக் கொலை செய்வதை நியாயப்படுத்துகிறார் என்றோ பாலு மகேந்திரா ஒரு சமூகவிரோதியென்றோ எந்த முட்டாளாவது சொல்வானா.

நல்லவன் X கெட்டவன், நன்மை X தீமை, தியாகம் X துரோகம் போன்ற இருமை எதிர்வுகளைக் கட்டமைத்துத் தட்டையாக இலக்கியப் பிரதிகளை உருவாக்கும் இலக்கியமுறைமை விக்டர் ஹியுகோ, பால்சாக் காலத்தைச் சேர்ந்தவை. இன்றைய இலக்கியம் பல்வேறு அடுக்குகளையும் சிடுக்குகளையும் கலைத்துப்போட்டு இந்த இருமை எதிர்வுகளைக் கடந்து வாசகர்களோடு பேச முயல்வது. எம்.ஜி. ஆரின் ரசிகர்கள் திரைப்பட அரங்கினுள் நம்பியாரைத் தும்பு பறக்கத் திட்டுவதுண்டு. அந்த இரசிக மனோநிலையில் நவீன இலக்கியப் பிரதிகளை அணுகினால் இப்படியான பாரதூரமான விமர்சன விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு. (எதிர்ப்பதும் எமது மரபு/ சத்தியக்கடதாசி.com/ 2008)

பி.கு: ஆசானிடமிருந்து பின்பற்றிய இரண்டாவது பழக்கத்தை நிறுத்திப் பத்து வருடங்களாகின்றன.

--------------------------------------------------------------------------------

கிருஷ்ணன், சென்னை

--------------------------------------------------------------------------------

கேள்வி : ஷோபா, கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்த நான் இவ்வருடம் தமிழகம் வந்தேன். அதுவரை எனக்கு இணைய வாசிப்பு மட்டும்தான். உங்களின் அகப்பக்கம் பார்ப்பதுண்டு. இங்குத் தமிழக நண்பர்கள் தமிழில் முக்கியமான எழுத்தாளர்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா என சொல்கிறார். ஒவ்வொருவரையும் வாசித்தேன். எனக்கு பிடிக்கவில்லை. உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் : அன்பான கிருஷ்ணன், சாரு நிவேதிதா என்கிற புதுமையான கதைசொல்லி இல்லாமற்போய் 10 வருடங்களாகின்றன. வெறும் இலக்கிய வம்புகளையும் பாலியல் அறியாமைகளையும் அவர் இப்போது 'கோணல்' பக்கங்களாக எழுதி அதையே தொகுத்து நாவல் என்கிறார். அவரது கடைசி நாவலான 'தேகம்' அதனது பின்னட்டையில் சொல்லப்படுவதுபோல வாதைகளின் நாவலல்ல. அந்த நாவலே வாதைதான். தமிழ் இலக்கிய உலகம் சரியான எதிர்வினையை தொடர்ந்து அவருக்கு ஆற்றிவருக்கிறது... மௌனம்! சாரு இந்த இருள்வெளியிலிருந்து மீளவேண்டும். தல மலைக்கு மாலை போட்டிருக்குதாம். அய்யப்பனாவது நல்ல புத்தியை வழங்கட்டும். சாரு முதலில் அவரைச் சூழவுள்ள அரைகுறை அல்லக்கைககளை விரட்டிவிட்டாலே பாதி தேறிவிடுவார்.

என்னைப் பொறுத்தவரையில் ஜெயமோகன் எழுதும் இலக்கியம் குறித்த கட்டுரைகள் அவரது புனைகதைகளைவிட முக்கியமானவை என்பேன். அவரளவிற்கு நுணுகி ஆராய்ந்து இலக்கியத்தின் அழகியல் கூறுகளையும் இலக்கிய நுட்பங்களையும் இலக்கியங்களின் செல்நெறியையும் எழுதிய இன்னொரு ஆளுமை தமிழில் கிடையாது. மனிதர்களை அவதானிப்பதில் அவர் 'எந்திரன்' போலயிருக்கிறார். கிடைக்கும் ஓர் இடைவெளியில் வித்தியாசம் வித்தியாசமான மனிதர்கள் குறித்துப் பலவற்றைக் கிரகித்துவிடுகிறார். "பொதுவாக ஊர்ச் சண்டியர்களிடம் ஒரு சிறிய உடல் ஊனம் இருக்கும்" என்று ஒருமுறை எழுதியிருப்பார்... அது கல்வெட்டு. இந்த நுட்பமான பார்வைதான் இலக்கிய அழகியலின் அடிப்படை.

எஸ்.ராவின் எழுத்துகளைப் படிக்கும்போது ஆஸ்பத்திரியில் யாரோ நோயாளியைப் பார்க்கச் சென்றது போலவே எனக்கொரு பீலிங். என்னுடைய வாசிப்பு அலைவரிசையில் எஸ்.ரா பொருந்துவதாகயில்லை. ஆனால் இன்று மிக அதிக இளைய வாசகர்களைப் பெற்றிருப்பவர் எஸ்.ரா தான். 'பாரிஸ் அறிவாலயம்' புத்தகக் கடையில் ஒரு நாளைக்குப் பத்துப் பேராவது எஸ்.ராவின் நூல்களைத் தேடி வருகிறார்கள். ஒருமுறை இயக்குனர் சசி எனக்கு எஸ்.ராவின் 'கதாவிலாசம்' நூலைப் பரிசளித்துவிட்டு அந்தப் புத்தகம் குறித்து இரண்டு மணிநேரங்கள் பரவசத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

எல்லோருக்கும் பிடித்தமாதிரி எவராலும் எழுதிவிட முடியாதல்லவா. டால்ஸ்டாயின் எழுத்துகளைப் பிடிக்காதவர்களைக் கூட நான் சந்தித்திருக்கிறேன். பிடிக்கவில்லையானால் வேறு எழுத்தாளர்களைத் தேடிப் படியுங்கள். புனைகதையாளர்களில் என்னுடைய வாசிப்பு அடிப்படையிலான எளிய பரிந்துரை: கு.அழகிரிசாமி, இலங்கையர்கோன், ப.சிங்காரம், பூமணி, கே.டானியல், பிரேம் - ரமேஷ், எஸ்.பொ, சு.வெங்கடேசன் (காவல் கோட்டம்), ஜெயகாந்தன், ஆதவன் தீட்சண்யா, தோப்பில் முகமது மீரான், ச. தமிழ்ச்செல்வன், நாஞ்சில் நாடன், குமார செல்வா.

.

இவர்களும் பிடிக்கவில்லையெனில் சொல்லுங்கள் இன்னொரு பட்டியல் தருகிறேன். தமிழ் இலக்கியம் பாலையல்ல, அது நெய்தல். முத்துகள், வலம்புரிச் சங்குகள், தங்க மீன்கள், சுறாக்கள், திமிங்கலங்கள் இவ்விடம் கிடைக்கும்.

--------------------------------------------------------------------------------

நோர் ரஷிடா, மலேசியா

--------------------------------------------------------------------------------

கேள்வி : உலகில் எத்தனை நாடுகளுக்குப் பயணித்துள்ளீர்கள் ஷோபா, உங்களை கவர்ந்த நாடு எது? ஏன்? மலேசியா வந்துள்ளீர்களா? ஷோபா, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கூற முடியுமா? உறவுகள்... விருப்பங்கள்...

பதில் : ஸ்கண்டிநேவியா தவிர்த்து முழு மேற்கு அய்ரோப்பிய நாடுகளுக்கும் கிழக்கு அய்ரோப்பாவில் சேர்பியா, செக் ஆகிய நாடுகளிற்கும் கியூபா, கம்போடியா, லாவோஸ், சிங்கப்பூர், ஹொங்கொங், ஆகிய நாடுகளிற்கும் பயணித்திருக்கிறேன். தாய்லாந்தில் மூன்று வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன். மலேசியாவிற்கு மூன்று தடவைகள் வந்துள்ளேன். கடைசித் தடவை 'வல்லினம்' நவீனின் அழைப்பில் வந்தேன். அந்தப் பயணத்தில் நானும் சிங்கை இளங்கோவனும் மஹாத்மனும் செய்த நடுநிசி அமர்க்களத்தில் ஜலான் மஸ்ஜிட் இந்தியா ஏரியாவே சும்மா அதிர்ந்துதில்ல!

ஒருமுறை விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகள் மாநாடு ஒன்றிற்கு சென்னையிலிருந்து நானும் நண்பர்களும் ரயிலில் பயணப்பட்டோம். மதியவேளை, கடுமையான வெப்பம். ரயில் பெட்டிக்குள் காலோடு கால் சேர்த்து வைக்க முடியாதளவிற்கு கடும் நெரிசல். நரகத்தை நோக்கிய பயணம்போல அந்தப் பயணம் இருந்தது. ஓடும் ரயிலுக்குள் ஒரு குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. பயணிகளில் ஒருவர் குழந்தையின் தாயாரிடம் ஆதுரத்துடன் விசாரிக்க, இன்னொருவர் குழந்தைக்கு விசிறிவிட, இன்னொரு பயணி தனது பையிலிருந்து வேட்டியை எடுத்து ரயிலுக்குள்ளேயே குழந்தைக்கு ஒரு தூளி கட்ட அந்த ரயில் பெட்டியே அந்தக் குழந்தையைத் தாலாட்டியது. இத்தகையவொரு காட்சியை வேறெந்த நிலத்தில் காண முடியும்! விழுப்புரத்திற்கு ரயில் வந்தபோது மழை கொட்டிக்கொண்டிருந்தது. தமிழகம் அளவிற்கு என்னைக் கவர்ந்த இன்னொரு நாடு இல்லை. தமிழக மக்களின் சகிப்புத்தன்மையையும் விட்டுக் கொடுத்துப் போகும் இயல்பையும் பார்த்து நான் வியந்து நிற்பது தெளிவதற்குள் எனக்கு விசா முடிந்துவிடுகிறது. ஏதோவொருவகையில் காந்தியாரையும் பெரியாரையும் தமிழகத்தின் கூட்டு நனவிலி மனது தனக்குள் பொதிந்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை என்று குறிப்பாக ஏதுமில்லை. 'சித்தன் போக்கு சிவன் போக்கு' என்பார்களே அதுபோல வாழ்க்கை கழிகிறது. தனிப்பட்ட கவலைகள், ஏமாற்றங்கள் என்றெல்லாம் ஏதுமில்லை. எப்போதும் மகிழ்ச்சியைக் கற்பனை செய்து உள்ளத்தில் நிறுத்தி உற்சாகமான மனநிலையிலேயே என்னை வைத்திருப்பேன். சலிப்பு, விரக்தி என்றெல்லாம் நூல்களில் படித்துள்ளேனே தவிர ஒருபோதும் உணர்ந்ததில்லை. எனது எழுத்தாற்றல் என்னைக் கைவிடாதவரை என்னைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நல்லாசிரியர்களையும், உலகம் முழுவதும் அருமையான நண்பர்களையும், எளிதில் வெற்றிகொள்ளக் கூடிய நோஞ்சானான எதிரிகளையும் பெற்றிருக்கிறேன். வேறென்ன வேண்டும்!

http://www.vallinam.com.my/issue32/shobabathilgal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஆட்கள் கேட்ட கேள்விகள் மாதிரி இல்லை!

தங்களை பற்றி தாமே புளுகுவதற்கு கேள்விகளை உருவாக்கி பின்பு பிதற்றுவதுபோல் உள்ளது.

தினமுரசு என்ற பத்திரிகையும் இப்படியான புறம்போக்கு வேலையை செய்வதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் ஆட்கள் கேட்ட கேள்விகள் மாதிரி இல்லை!

தங்களை பற்றி தாமே புளுகுவதற்கு கேள்விகளை உருவாக்கி பின்பு பிதற்றுவதுபோல் உள்ளது.

தினமுரசு என்ற பத்திரிகையும் இப்படியான புறம்போக்கு வேலையை செய்வதுண்டு.

என்ன இப்படி சொல்லி போட்டிங்கள்,

நீங்கள் எங்க வேலை செய்கிறிர்கள்? எப்பவும் கடுப்பாதான் பதில் போடுறீங்கள்,

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஆட்கள் கேட்ட கேள்விகள் மாதிரி இல்லை!

தங்களை பற்றி தாமே புளுகுவதற்கு கேள்விகளை உருவாக்கி பின்பு பிதற்றுவதுபோல் உள்ளது.

தினமுரசு என்ற பத்திரிகையும் இப்படியான புறம்போக்கு வேலையை செய்வதுண்டு.

நிச்சயமாக. தனக்கு சாதகமான புகழ் பரப்பக்கூடிய கேள்விகளுக்கு மட்டும் விடையளித்துள்ளார்.யாழ் களத்தில் இவர் சம்பந்தமான விவாதங்களை பார்த்தாலே புரியும். அத்துடன் ஈழத்தவர்கள் யாரும் கேள்வி கேட்டதாக தெரியவில்லை.இனி மேல் வருகிறதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக. தனக்கு சாதகமான புகழ் பரப்பக்கூடிய கேள்விகளுக்கு மட்டும் விடையளித்துள்ளார்.யாழ் களத்தில் இவர் சம்பந்தமான விவாதங்களை பார்த்தாலே புரியும். அத்துடன் ஈழத்தவர்கள் யாரும் கேள்வி கேட்டதாக தெரியவில்லை.இனி மேல் வருகிறதோ தெரியவில்லை.

மலேசியாவில் இருந்து வரும் வல்லினம் சஞ்சிகைக்கு கேள்விகளை எழுதிப் போட்டால் தெரிந்துவிட்டுப் போகின்றது.

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

இதெல்லாம் ஆட்கள் கேட்ட கேள்விகள் மாதிரி இல்லை!

தங்களை பற்றி தாமே புளுகுவதற்கு கேள்விகளை உருவாக்கி பின்பு பிதற்றுவதுபோல் உள்ளது.

தினமுரசு என்ற பத்திரிகையும் இப்படியான புறம்போக்கு வேலையை செய்வதுண்டு.

சரியாச் சொன்னீங்க!!!

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

(இப்பிடிச் சிரிப்பான்களைப் போட்டுக்கொண்டே இருக்கவேணும் போல இருக்கு)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பரீசில்தான் இருக்கின்றேன். இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அதெல்லாம் ஒரு ரகம். பக்கத்தில் போகக்கூடாது.

புலி என்ற ஒன்று இல்லாதுவிட்டால் வெறும் பைத்தியக்காரக்கூட்டம் மட்டுமே. ஏதோ புலிகளின் பெயரால் பிழைப்பு நடாத்துகிறார். அதற்குள் நல்ல தெடவெட்டான பகையாளி கிடைக்கவில்லையாம். ஊத்தைப்பன்றிக்கு யானை வழிவிட்ட கதைதான். பிழைச்சுப்போகட்டும் பாவம். புலிகள் இருந்தும் வாழ்வளித்தார்கள். இல்லாமலும் வாழ்வளிக்கிறார்கள். இனி நான் சொன்னனான்தானே அல்லது எங்களுக்கு முன்பே தெரியும் அல்லது இப்படி செய்திருந்தால் புலிகள் பிழைத்திருக்கலாம் என்ற எழுதி வாழவேண்டியதுதான்.

தனது வீட்டுக்கு...

தனது நாட்டுக்கு....... எந்தவிதத்திலும் உதவாதவன் எதைப்படித்தென்ன?

எந்த பதவி வகுத்தும் என்ன?

எதை ஆண்டும் என்ன? :(:(:(

Link to comment
Share on other sites

உதையெல்லாம் விளங்க கொஞ்சம் அது வேண்டும்.அது இல்லாததால் தான் அதில் இருந்தீர்கள்.

பாரிசில் இருந்து நீர் கண்டுகொள்ளவில்லை உலகம் கண்டு பிறமொழிகளிலும் மொழி பெயர்கின்றார்கள்.எனக்கு பிடிக்கவில்லை என நாணயமாக சொல்லலாம் அதைவிட்டு கண்டுகொள்வதில்லை என்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் கண்டு பிறமொழிகளிலும் மொழி பெயர்கின்றார்கள். .

புலி என்ற ஒன்று இல்லாதுவிட்டால் வெறும் பைத்தியக்காரக்கூட்டம் மட்டுமே. ஏதோ புலிகளின் பெயரால் பிழைப்பு நடாத்துகிறார். அதற்குள் நல்ல தெடவெட்டான பகையாளி கிடைக்கவில்லையாம். ஊத்தைப்பன்றிக்கு யானை வழிவிட்ட கதைதான். பிழைச்சுப்போகட்டும் பாவம். புலிகள் இருந்தும் வாழ்வளித்தார்கள். இல்லாமலும் வாழ்வளிக்கிறார்கள்.

:(:(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பரீசில்தான் இருக்கின்றேன். இதையெல்லாம் கண்டுகொள்வதே இல்லை. அதெல்லாம் ஒரு ரகம். பக்கத்தில் போகக்கூடாது.

புலி என்ற ஒன்று இல்லாதுவிட்டால் வெறும் பைத்தியக்காரக்கூட்டம் மட்டுமே. ஏதோ புலிகளின் பெயரால் பிழைப்பு நடாத்துகிறார். அதற்குள் நல்ல தெடவெட்டான பகையாளி கிடைக்கவில்லையாம். ஊத்தைப்பன்றிக்கு யானை வழிவிட்ட கதைதான். பிழைச்சுப்போகட்டும் பாவம். புலிகள் இருந்தும் வாழ்வளித்தார்கள். இல்லாமலும் வாழ்வளிக்கிறார்கள். இனி நான் சொன்னனான்தானே அல்லது எங்களுக்கு முன்பே தெரியும் அல்லது இப்படி செய்திருந்தால் புலிகள் பிழைத்திருக்கலாம் என்ற எழுதி வாழவேண்டியதுதான்.

தனது வீட்டுக்கு...

தனது நாட்டுக்கு....... எந்தவிதத்திலும் உதவாதவன் எதைப்படித்தென்ன?

எந்த பதவி வகுத்தும் என்ன?

எதை ஆண்டும் என்ன? :(:(:(

நன்றாக சொன்னீர்கள், கன போர் புத்துக்காள் இப்பதான் வெளிக்கிடினம், புது webs, தங்க முடியலடா இவங்கட கூத்து

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

ராமஸ்வாமி - தமிழகம்

நீங்கள் விடுதலைப் புலியா?

நீங்க என்ன க்யூ பிராஞ்சா? உங்களுடைய பெயரே சரியில்லையே!

காசிதாசன் - தமிழகம்

ஷோபா எல்லா ஊர்கள் குறித்தும் கூறினீர்கள். எல்லா நாடுகளையும் சுற்றியுள்ளதாகச் சொன்னீர்கள். உங்கள் தாயகத்துக்கு செல்லும் ஐடியா இல்லையா? அதை நீங்கள் நேசிக்கவில்லையா? மீண்டும் அங்குச் செல்லும் எண்ணம் இல்லையா? அதை நீங்கள் இழப்பாகக் கருதவில்லையா?

அன்பான காசிதாசன், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது உண்மையானால் கூட இளம் வயதிலேயே பிரிந்து வந்துவிட்ட எனது கிராமமும் நட்புகளும் உறவுகளும் குறித்த ஏக்கமான நினைவுகள் எப்படி இல்லாமலிருக்க முடியும். தாயகத்தைப் பிரிந்தது இழப்பு எனினும் தாயத்தில் நான் இருந்திருப்பின் என்னுடைய வாய்க்கு யாராவது என்னை அப்போதே போட்டுத் தள்ளியிருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்போது இளமையைக் கடந்துகொண்டிருக்கிறேன். இனியும் அய்ரோப்பியப் பனியிலும் குளிரிலும் இந்த அல்லைப்பிட்டியானின் உடல் தாக்குப் பிடிப்பதும் சந்தேகமே. என் தாயகத்து மக்களோடு வாழ்ந்து நான் எழுதி வெளியிட வேண்டிய விடயங்கள் குறித்தும் மனதிற்குள் ஓர் இரகசியப் பட்டியல் உண்டு. எனினும் சிங்கள ஊடகவியலாளர்களே ராஜபக்ச அரசாங்கத்திற்குத் தப்பி (ஊடகச் சுதந்திரத்தை நசுக்கும் நாடுகளில் உலக அளவில் இலங்கைக்கு நான்காவது இடம்) அய்ரோப்பாவிற்கு அகதிகளாக ஓடிவந்துகொண்டிருக்கையில் நான் அங்கே செல்வது சரியாகயிருக்குமா என்ற கேள்வி என்னை அலைக்கழிப்பதையும் நான் மறைப்பதற்கில்லை. திரும்பி ஊருக்குச் செல்லும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்வியைப் போல என்னைச் சதா திணறடிக்கும் கேள்வி வேறொன்றில்லை. உண்மையிலேயே அது எனக்குத் தெரியவில்லை என்பதுதான் இந்த விநாடியில் எனது நேர்மையான பதில்.

நோர் ரஷிடா - மலேசியா

மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்... ஏன்?

அய்ரோப்பாவிற்கு வர நான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மலேசியாவிற்குள்ளால் ரூட் போடலாமா என்ற முயற்சியில் மலேசியாவிலிருந்து விமானம் ஏற முயற்சித்ததுண்டு. மலேசியப் பாஸ்போர்ட் ஒன்றில் வெற்றிகரமாக விமானத்தைப் பிடித்துவிட்டாலும் பராக் விமான நிலையத்தில் அகப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். முதலிரு மலேசியப் பயணங்களும் அவ்வகையானவை. மலேசியாவில் என்னைக் கவர்ந்தவை எங்களைவிட நீங்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவது, Oil Palm மரத்திற்கு நீங்கள் 'செம்பனை' எனப் பெயரிட்டு அழைப்பது எவ்வளவு அழகு! நீங்கள் 'பசியாறியாச்சா' எனக் கேட்கையிலேயே அந்தத் தமிழின் அழகிலேயே வயிறு நிறைந்துவிடுகிறது. ("தண்ணி சாப்பிடுகிறீர்களா" என நீங்கள் கேட்கும் முறையின் மீது மட்டும் எனக்குச் சற்றே விமர்சனமுண்டு, நம்பி ஏமாந்திருக்கின்றேன்.) எதிர்வரும் சனவரியில் மலேசியாவில் நடக்கவிருக்கும் பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைத்திருக்கிறார்கள். வரத் திட்டமிட்டுள்ளேன்.

சண்முகசுந்தரம் - லண்டன்

ஷோபா உலகில் வேறெங்கும் தமிழ் எழுத்தாளர்கள் இல்லையா? உங்கள் பட்டியலில் பெரும்பாலும் தமிழக எழுத்தாளர்களே நிரம்பி வழிகிறார்களே? ஏன் உங்கள் மீது இத்தனை அவதூறுகள்? அதை நீங்கள் விரும்புகிறீர்களா?

பெரிய 'சிக்கல்' சண்முகசுந்தரமாக இருப்பீர்கள் போலயிருக்கிறதே. நான் மட்டுமல்ல கூர்மையான தமிழ் இலக்கிய வாசகர் எவர் பட்டியலிட்டாலும் தமிழக எழுத்தாளர்கள்தான் அங்கே அதிகமாக இடம் பெறுவார்கள். நாடுவாரியாக பிரதிநிதித்துவம் கொடுக்க இதுவொன்றும் அய்.நா அவை கிடையாது, இலக்கியம் தோழா இலக்கியம்! அவர்கள் அளவிற்கு நாமும் சாதிப்பதெனில் நாம் தீயாக வேலை செய்யவேண்டும். வாசிக்கவும் கற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் எழுதவும் சோம்பிக் கிடந்தால் நகத்தையும் பேனையும் தவிர நம்மிடம் வேறொன்றும் வளராது.

ஏன் இத்தனை அவதூறுகள் எனில், நமது சமூகத்தில் உறுதியாக நிறுவப்பட்டிருக்கும் 'புனித' மரபுகளையும் கலாசாரத்தையும் செல்வாக்குப் பெற்றிருக்கும் அரசியல் போக்குகளையும் வழிபடப்படும் அரசியல் திருஉருக்களையும் ஈவிரக்கம் இல்லாமல் கவிழ்த்துப் போட முயன்றால் பாராட்டையா நாம் எதிர்பார்க்க முடியும். அவதூறுகள்தான் வரும். அது நமது எதிர்ப்பு அரசியலுக்கு நாம் செலுத்தவேண்டிய தவிர்க்க முடியாத விலை.

தந்தை பெரியார் எதிர்கொள்ளாத தாக்குதல்களையும் அவதூறுகளையுமா நான் சந்தித்துவிட்டேன். செருப்பு, கல்வீச்சுகள் உட்பட பெரியாரும் அவரோடு துணைநின்றவர்களும் எதிர்கொண்ட அவமதிப்புகளும் அவதூறுகளும் கொஞ்சநஞ்சமா! பெரியாரை பிரிட்டிஷாரின் ஏஜெண்ட என்றார்கள். பெரியார் இந்திய சுதந்திர நாளைத் துக்கதினமாகப் பிரகடனம் செய்தபோது 'தேசத்துரோகி' என்றார்கள். பெரியார் வெறுமனே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்திய சாதிப்பற்றாளர் என்றார்கள். நாகம்மையாரை ' தேவடியாள்' என எழுதினார்கள். ஒழுக்கக்கேட்டில் விஞ்சியவர் நாகம்மையா, மணியம்மையா எனப் பகிரங்கமாகப் பட்டி மன்றம் கூட நடத்தினார்கள். இதெல்லாம் ஆதிக்கசாதிப் பிற்போக்காளர்களின் வக்கிரங்கள் என விட்டுத்தள்ளினாலும் சில வருடங்களுக்கு முன்பு நமது ரவிக்குமார் பெரியார் மீது தொடர் அவதூறுகளைப் பொழிந்து தள்ளியதை நாம் மறந்துவிட முடியுமா! பெரியார் ஜெர்மனியில் நிர்வாண சங்கத்திற்குச் சென்றதையும் அவர்களோடு நின்று நிர்வாணமாகப் புகைப்படம் பிடித்துக்கொண்டதையும் பெரியாரின் காமக்கூத்து என்றல்லவா காலச்சுவட்டில் எழுதினார் ரவிக்குமார். பெரியார் செய்தவற்றில் இலட்சத்தில் ஒரு பங்கையாவது செய்ய முயற்சிக்கும் பேராசை எனக்குண்டு. எனவே அவதூறுகளை எதிர்கொள்ளுவது தவிர்க்க முடியாதது.

மகேன் விஜய் - தமிழ்நாடு

அண்ணா, பின் நவீனத்துவ எழுத்து என்றால் என்ன? அதை நான் பயில எந்த நூலை எல்லாம் படிக்கலாம்? பின் நவீனத்துவ புனைவுகளில் முக்கியமானவை எது?

ஏங்க இந்தக் கேள்விகளையெல்லாம் என்னிடம் கேட்கச் சொல்லி யாருங்க உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறாங்க! தமிழ்நாட்டில்தானே இருக்கிறீர்கள், அப்படியே அ. மார்க்ஸுக்கோ பிரேமுக்கோ ராஜன்குறைக்கோ ஒரு போனைப் போட்டுக் கேட்க வேண்டியதுதானே. கண்டிப்பாக நான்தான் பதில் சொல்லியாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இன்னும் சில காலங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்போதுதான் 'மூலதனம்' முதலாவது பாகம் படித்துக்கொண்டிருக்கிறேன். இதை முடித்துவிட்டு இனி 'இருப்பியல்' படித்து 'அமைப்பியல்' படித்து 'அந்நியமாதல்' படித்து அங்கிருந்து பின்நவீனத்தும் நோக்கிச் செல்ல எப்படியும் ஒரு இருபது வருடங்களாவது எடுக்கும். அதுவரை நீங்களும் சும்மாயிருக்காதீர்கள், 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை'யை வாசிப்பதிலிருந்து தொடங்குங்கள்.

நரேன்

அண்ணா, ஒரு பதிலில் தங்களுக்கு அசோகமித்திரன் கவரவில்லை என்றீர்கள். சென்ற முறை ஜெயமோகனின் இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை என்கிறீர்கள். ஜெயமோகன் அசோகமித்திரனை தமிழின் ஒரு சிகரமாக கொண்டாடுகிறார். அவ்வாறெனின் அவர் இலக்கிய பார்வையை நீங்கள் ஏற்பீர்களா? எவ்வகையில் அவர் கட்டுரைகள் முக்கியத்துவம் பெருகின்றன?

நண்பா! ஜெயமோகனின் இலக்கியம் குறித்த கட்டுரைகள் முக்கியமானவை என்றுதான் சொன்னேனே தவிர அவை வேத வசனங்கள் என்று சொல்லவில்லை. இலக்கியத்தின் நுண் தடங்களையும் வெற்று வார்த்தைகளால் கட்டப்பட்ட இரும்புக் கோட்டைப் பிரதிகளிற்குள் ஒளிந்திருக்கும் போலி இலக்கியத்தையும் அவர் நுட்பமாக அவிழ்த்துக்காட்டுகிறார். அந்தளவில் அவரது இலக்கிய அழகியல் குறித்த கட்டுரைகள் தன்னிகரற்றவை என்கிறேன். ஆரம்பகால எழுத்தாளர்களிற்கு மட்டுமல்ல, அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களிற்கும் அவரது வழிகாட்டல் அவசியமானது. இந்த விடயத்தில் ஜெயமோகனை எழுத்தாளர்களின் எழுத்தாளர் என்று சொல்லக் கூட நான் தயங்கப் போவதில்லை.

ஓர் அழகியல் கலையில் தேர்ச்சி பெற்றவர் அதை ஆழமாக உணர்ந்தவர் கண்டிப்பாக சமூக, அரசியல் பார்வைகளிலும் பிழைபடாமலிருப்பார் என்றில்லை. கிட்டத்தட்ட ஜெயமோகனின் எல்லாவித சமூகவியல், அரசியல் எடுத்துரைப்புகளையும் நான் நிராகரிக்கக் கூடியவனாகவேயிருக்கிறேன். குறிப்பாக பெரியார் ஈவெரா குறித்து அவர் சொல்லும் வார்த்தைகள் எதிர் விவாதத்திற்குக் கூடத் தகுதியற்றவை.

'ஜே.ஜே:சில குறிப்புகள்' படித்திருக்கிறீர்கள்தானே. அதைப் படிக்கும் போது வாய்விட்டுச் சிரித்தவாறே ரசித்துப் படித்தவர்களை நான் அறிவேன். குறிப்பாக நாவலில் வரும் தனித் தமிழ்ப் பற்றாளன், ஜே.ஜேயை சே. சே எனத்தான் அச்சிடுவேன் என நிபந்தனை போட்டபோது வெடித்துச் சிரித்தவர்களுண்டு. ஆனால் நான் அந்த நூல் முழுவதையும் வயிறு பற்றி எரியவே வாசித்து முடித்தேன். அதேபோல பி.ஏ. கிருஷ்ணனின் 'புலிநகக்கொன்றை'யைப் படித்து முடித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுக்குச் சரியான பெயர்: கொலைவெறி. ஒவ்வொரு தன்னிலைகளும் ஒரே பிரதியை வெவ்வேறு விதமாக வாசிக்கவும் உணரவும் முடியும். தன்னிலை என்பது சமூகத்தின் ஏற்றத்தாழ்வான - அநீதியான விதிகளால், அந்த விதிகளால் இயக்கப்படும் தனிமனித இருப்பால் உருவாக்கப்படுவது. அங்கேயிருக்கிறது அசோகமித்திரனை மட்டுமல்ல கே. டானியலையும் பிடிப்பதற்கும் பிடிக்காமல் விடுவதற்குமான சூக்குமம்.

http://www.vallinam....abathilgal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி

Link to comment
Share on other sites

நோர் ரஷிடா - மலேசியா

மீண்டும் மலேசியா வரும் எண்ணம் உண்டா? மலேசியாவில் உங்களை கவர்ந்த அம்சம் என்ன? முதலில் நீங்கள் இருமுறை வந்ததாகச் சொன்னீர்கள்... ஏன்?

அய்ரோப்பாவிற்கு வர நான் படாதபாடு பட்டுக்கொண்டிருந்த காலத்தில் மலேசியாவிற்குள்ளால் ரூட் போடலாமா என்ற முயற்சியில் மலேசியாவிலிருந்து விமானம் ஏற முயற்சித்ததுண்டு. மலேசியப் பாஸ்போர்ட் ஒன்றில் வெற்றிகரமாக விமானத்தைப் பிடித்துவிட்டாலும் பராக் விமான நிலையத்தில் அகப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டேன். முதலிரு மலேசியப் பயணங்களும் அவ்வகையானவை. மலேசியாவில் என்னைக் கவர்ந்தவை எங்களைவிட நீங்கள் பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழ் பேசுவது, Oil Palm மரத்திற்கு நீங்கள் 'செம்பனை' எனப் பெயரிட்டு அழைப்பது எவ்வளவு அழகு! நீங்கள் 'பசியாறியாச்சா' எனக் கேட்கையிலேயே அந்தத் தமிழின் அழகிலேயே வயிறு நிறைந்துவிடுகிறது. ("தண்ணி சாப்பிடுகிறீர்களா" என நீங்கள் கேட்கும் முறையின் மீது மட்டும் எனக்குச் சற்றே விமர்சனமுண்டு, நம்பி ஏமாந்திருக்கின்றேன்.) எதிர்வரும் சனவரியில் மலேசியாவில் நடக்கவிருக்கும் பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அழைத்திருக்கிறார்கள். வரத் திட்டமிட்டுள்ளேன்.

http://www.vallinam....abathilgal.html

மிக மோசமாக malai , மற்றும் ஆங்கிலம் கலந்து , பேசுவார்கள் அவர்களின் தமிழ் புரிவதற்கு கஷ்டமாகவும் இருக்கும்

அனேகமானவர்களிற்கு தமிழ் எழுத வாசிக்க தெரியாது , தமிழில் கேட்டாலும்

ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பார்கள், தமிழ் மொழியை கதைக்க விரும்பமாட்டார்கள் வெளி இடம்களில்,

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு மாதமும் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்தாளர் ஷோபாசக்தி பதில் அளிப்பார். கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

shoba-big.jpg

கனடாவில் நடந்த கூட்டமொன்றில் "எழுத்தாளனும் ஒரு போராளிதான்" என்ற வகையில் ஒரு கருத்தை சொல்லியிருந்தீர்கள். ஒரு நல்ல எழுத்தாளனுக்கு இந்த விதி பொருந்தும். ஆனால் செயலில் ஒன்றும் எழுத்தில் இன்னொன்றுமாக செயல்படும் போலி எழுத்தாளர்களுக்கு இந்த விதி பொருந்தாதே. பல்கிப் பெருகும் இந்தப் போலிகளில் பலர் உங்கள் நண்பர்களாக இருக்கிறார்களே?

செல்வன் - கனடா

நான் உங்களது குற்றச்சாட்டை மறுக்கிறேன்!! சேரன், கி. பி. அரவிந்தன், க. வாசுதேவன், தமிழ்நதி, யமுனா ராஜேந்திரன் ஆகியோர் ஒருபோதும் எனது நண்பர்களாக இருந்ததில்லை.

இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மார்க்ஸிச அறிவு ஏற்படுவது எதிர்காலத்தில் ஆரோக்கியமானதா?

ஜெ. நிவர்சன்

மார்க்ஸியத்தின் அடிப்படைகள் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியல் அய்ரோப்பியச் சூழலில் உருவாகியவை. கார்ல் மார்க்ஸுக்கும் தனக்குமான கால இடைவெளியில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை ஆய்வு செய்து எழுத இன்னும் எழுபது மார்க்ஸுகள் தேவை என்றார் லெனின். நாங்கள் இப்போது லெனின் காலத்திலிருந்து நூறு வருடங்களைக் கடந்து வந்துவிட்டோம். இந்தக் கால இடைவெளியோடு இந்தியா - இலங்கை போன்ற சாதியச் சமூகங்களிற்கான குறிப்பான பண்பாட்டுப் பிரச்சினைப்பாடுகளையும் பின்காலனியச் சூழல் தோற்றுவித்திருக்கும் குறிப்பான தேசிய இன முரண்களையும் நாம் கவனத்தில் எடுத்தாக வேண்டும். நமது மார்க்ஸியப் பேராசான்கள் கிட்டத்தட்டப் புரட்சிக்கு நாளே குறித்திருந்தார்கள். 'ஜெர்மனியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி தெரிகிறது' என நம்பிக்கையோடு எழுதினார் ஏங்கெல்ஸ். எனினும் தனக்கு ஏற்பட்ட அத்தனை வரலாற்று நெருக்கடிகளையும் சமாளித்துக்கொண்டு நம் காலத்தில் ஏகாதிபத்தியங்களாக உருக்கொண்டு உலகமயமாக்கல் என்ற பெயரில் தேசிய எல்லைகளைக் கடந்து மூலதனத்தைப் பாய்ச்சுவதையும் முதலாளித்துவம் செய்திருக்கிறது. தேசங்களின் இறையாண்மையையே மூலதனம் சவால் செய்யும் காலம் இது.

எனவே இந்தக் குறிப்பான பிரச்சினைகளைக் கவனத்தில் எடுத்தே இன்றைக்கான மார்க்ஸியத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஈழப் போராட்டத்தின் தொடக்க காலத்திலிருந்தே 'மண்ணுக்கேற்ற மார்க்ஸியம்', 'கீழை மார்க்ஸியம்' என்றவாறான விவாதங்கள் நடத்தப்பட்டுத்தான் வந்தன. எனினும் அவ்வகையான உரையாடல்கள் தொடராமலேயே போய்விட்டன. வர்க்கப் புரட்சி அல்லது ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு நோக்கி மார்க்ஸிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் அதீத கனவுகள் குறித்தெல்லாம் நான் பேசவில்லை. இலங்கையின் இன்றைய அரசியல் சூழலையும், உலகமயமாக்கலின் நச்சுச் சூழலையும் புரிந்துகொள்வதற்கும் அதிகாரத்தை நோக்கிய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவும் மார்க்ஸிய சித்தாந்தம் நமக்கான அறிவுசார் கருவிகளில் ஒன்று.

கம்யூனிஸம் மனித குலத்தின் மனசாட்சி என்றார் கபிரியல் பெரி. ஒருவர் கம்யூனிஸ்டாகத் தன்னை அடையாளம் கண்டுகொள்வது அரசியல் செயற்பாடுகளிற்கு அப்பால் தனிப்பட்ட முறையில் பரந்த சமூகப் பார்வையையும் போர்க்குணத்தையும் நேர்மைத்திறத்தையும் எளிமையையும் அவருக்கு அளிக்கும் என்பது எனது நம்பிக்கை. எனது இந்த நம்பிக்கையை நான் சந்தித்த பல கம்யூனிஸ்டுகள் எனக்கு நிரூபணமும் செய்திருக்கிறார்கள்.

ஷோபா, உங்கள் வாதங்களெல்லாம் சரி. என்னுடைய கேள்வி ஒன்றுதான். தமிழர்களுக்கென ஒரு நாடு உருவாக நீங்கள் விரும்புகிறீர்களா இல்லையா? இப்போது எம் மக்களுக்காகப் போராடியவர்கள் இல்லாத சூழலில் அவர்கள் அனாதைகள் போல இன்னலுக்குள்ளாக்கப்படுகிறார்களே… அதற்கு என்ன பதில்?

மிருதன்

எங்களுக்கென ஒரு நாடு உருவாக வேண்டும் என்ற விருப்பத்தில்தானே நானும் என்போன்ற ஆயிரக்கணக்கானவர்களும் ஈழப் போராட்டத்தில் எங்களை இணைத்துக்கொண்டோம். தோழா! நாங்கள் கேட்டது தமிழீழம், கிடைத்ததோ கிறீஸ் பூதம். இந்த எதார்த்தச் சூழலிலிருந்துதான் என்னால் உங்களது கேள்விக்குப் பதிலளிக்க முடியும்.

இன்றைய உலக அரசியற் சூழலில் தமிழீழம் என்பது சாத்தியமே இல்லை என்பதுதான் உண்மை. ராசதந்திரப் போராட்டத்தால் தமிழீழத்தைப் பெற்றுவிடலாம் என நாடு கடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் சொல்லிவருவதெல்லாம் எந்தவித அரசியற் தர்க்கத்திற்கும் உட்படாத வீணபேச்சுகளே. பிரபாகரன் மீண்டும் வருவார், அய்தாம் கட்ட ஈழப்போரில் கொழும்பு சிதறும் என்றவாறெல்லாம் தமிழகத்துத் தமிழ்த் தேசிய இயக்கங்கள் கற்பனைகளைப் பேசுவது தமிழகத்தில் அவர்களது அரசியற் செல்வாக்கை சிறிதளவு வளர்க்க மட்டுமே தற்காலிகமாகப் பயன்படலாம். இதற்காக இன்று மரணதண்டனைக்கு எதிராக அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் இலங்கை இனவாத அரசிற்கு எதிரான அவர்களது போராட்டச் செயற்பாடுகளையும் நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றாகாது. தமிழர்களும் சிங்களர்களும் இனிச் சேர்ந்துவாழ முடியாது என அவர்கள் அறிக்கையிட்டுத் தமிழீழமே தீர்வென அவர்கள் முழுங்குவதை, இலங்கையின் இனமுரண்களின் உள்ளார்ந்த சிக்கல்களை அவர்கள் புரிந்துகொள்ளாமல் எளிமையான அரசியல் கற்பனாவாதங்களில் அவர்கள் மூழ்கியிருப்பதாகவே புரிந்துகொள்ள முடியும்.

இலங்கைத் தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். ஆனால் அந்த உரிமையை நாம் கனவிலிலும் நெருங்க முடியாதவாறே இன்றைய அரசியல் சூழல்கள் அமைந்துள்ளன. இலங்கையில் இன்னும் நாடாளுமன்ற சனநாயகம் நீடிப்பது மட்டுமே இன்று தமிழர்களிற்குள்ள சிறிய நம்பிக்கைக் கீற்று. எனினும் நாட்டின் மொத்த சனத்தொகையில் நமது சனத்தொகை வீதம் பத்து விழுக்காட்டை அண்மித்ததாகவேயுள்ளது. வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் குவித்தாலும் இருபதிலிருந்து முப்பதுவரையான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் இருப்பார்கள். தமிழர்களின் அரசியல் உரிமைகள் குறித்த எந்த முன்னெடுப்பும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைச் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தோற்கடிக்கப்படும்.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குவதுமே இன்றைய சூழலில் ஓரளவாவது சரியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால் மகிந்த அரசு அதற்குத் தயாரில்லை.

ஆக ஈழத் தமிழர்களின் அரசியலை இனி எவ்வாறு முன்னே நகர்த்திச் செல்வது என்பது உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல சம்மந்தர், ஆனந்தசங்கரி போன்ற தலைவர்களிற்கும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. எனக்குத் தெரிந்து காகிதத்திலுள்ள ஒரு வேலைத்திட்டம் என்றளவிலாவது இதற்கொரு தீர்வை வைத்திருப்பவர் தோழர் ரயாகரன் மட்டுமே. அவரது 'தமிழரங்கம்' இணையத்தளத்திற்குச் சென்றீர்கள் என்றால் அவரது வேலைத்திட்டத்தை நீங்கள் பார்வையிடலாம். ஆனால் அதன் பின்பு உங்களுக்கு மனநிலை பிறழ்ந்தால் அதற்கு நானோ வல்லினம் ஆசிரியர் குழுவோ பொறுப்பல்ல.

முப்பது வருட யுத்தம் தமிழர்களின் அரசியலை முட்டுச்சந்துக்குள் நிறுத்தியுள்ளது. மறுபுறத்தில் அந்த யுத்தம் மிருகத்தனமான வலுவுள்ள ஒரு பேரினவாதியை நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியுள்ளது. புலிகள் இருந்தால் இந்த நிலை தோன்றியிராதல்லவா என்று ஒருவர் கேட்கக் கூடும். வரலாற்றை 'ரீவைண்ட்' செய்ய முடியாது. புலிகளின் தவறான அரசியல் அணுகுமுறைகள் தான் அவர்களை அழித்தது. அந்தத் தவறான அரசியலின் விளைவு அழிவு அல்லாமல் தமிழீழமாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. தமிழீழத்தை விடுங்கள், தமிழர்களிற்கு ஓர் அற்ப அரசியல் உரிமையைப் பெற்றுத்தரும் வலுவைக் கூடப் புலிகளின் அரசியல் கொண்டிருக்கவில்லை. அவ்வாறான உரிமைகள் கிட்டும் சந்தர்ப்பங்களை எல்லாம் அவர்கள் இல்லாமல் செய்யததைத்தான் அவர்களது 'அரசியல் வலு இன்மை' என்கிறேன்.

இதே கருத்தை அண்மையில் நான் ஒரு கூட்டத்தில் பேசியபோது பார்வையாளர் தரப்பிலிருந்து 'புலிகளின் போராட்டத்தால் தமிழர்களின் பிரச்சினை சர்வதேச அரங்கிற்கு எடுத்தச் செல்லப்பட்டிருக்கிறதே என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. அதனால் வெளிநாட்டில் புலிகளிற்குக் காசு சேர்த்தவர்களைத் தவிர வேறு யாருக்கு என்ன நன்மை? நமது முப்பது வருடகாலத்தின் மொத்த இழப்புகளும் வெறும் சர்வதேசக் கவனத்தைப் மட்டுமே பெற்றுத் தந்திருக்கிறது எனில் அதற்காக நாம் கொடுத்தது அநியாய விலை. ஒருமுறை வரதராஜப் பெருமாள் சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகிறது; ஒரு நல்ல உழவன் என்பவன் யாரெனில் விளைச்சலை வீடுகொண்டு வந்து சேர்ப்பவனே நல்ல உழவன். ஆனால் பிரபாகரன் என்ற உழவன் வயலை ஆழ உழுதான். பின்பு வயலில் விதைகளையிட்டு விட்டு மறுபடியும் ஆழ உழுதான். பயிர் பச்சை தோன்றிய போது அதையும் ஆழ உழுதான்.

எழுத்தாளர்கள் சிலரின் எதோ ஒன்றை படித்துவிட்டு அவருடைய மற்ற நூல்களை வாங்கினால் அதில் மோசமான படைப்பும் இருக்கின்றது. குறைவாக எழுதினாலும் உங்களுடைய 'ம்' மற்றும் 'கொரில்லா' மாதிரி காலத்திற்கும் பெயர் சொல்வது போன்று மட்டும் எழுதினால் போதாதா? ஏன் அவர்களுக்கு இந்த படைப்பு (அ) கவிதை சரியாக வரவில்லை என்று தெரியாதா? எழுத்தாளரின் எழுதிய எல்லாவற்றையும் வாசகரின் தலையில் திணிப்பது சரியா?

முத்துக்கிருஷ்ணன், தனுஷ்கோடி

எனது எழுத்துகளை மோசம் என்பவர்கள் உண்டு. என்னால் கொண்டாடப்படும் 'காவல் கோட்டம்' நாவலை குப்பையென்று எஸ்.ரா. எழுதினார். ராஜன் குறையால் கொண்டாடப்பட்ட 'தாண்டவராயன் கதையை' என்னால் படிக்கவே முடியவில்லை. ஆக இந்த மோசம் / மோசமில்லை எல்லாம் ஆளாளுக்கு வேறுபடும். 'பாழி' யையே எதிர்கொண்டதல்லவா இந்த இலக்கிய உலகம். நீங்கள் இப்படிச் சலித்துக்கொண்டால் எப்படி! தைரியமாக இருங்கள்.

டச்சு மொழி பேசுபவர்கள் வெறும் ஒன்றரைக் கோடி மக்கள்தான். ஆனால் அந்த மொழியில் ஒரு வெற்றிகரமான நாவலை ஓர் எழுத்தாளன் எழுதிவிட்டால் அவனது ஆயுளுக்கும் சோற்றுப் பிரச்சினை தீர்ந்தது. கேரளாவில் எழுத்தாளனின் வீடு தேடிவந்து அவனது கையால் குழந்தைகளுக்கு ஏடு தொடக்கி வைக்க மக்கள் வரிசையில் நிற்கிறார்களாம். தமிழ் வாசகர்கள் எங்களுக்கு எதைக் கொடுத்தீர்கள்? வயிற்றுப்பாட்டுக்காக மோசமான வணிகச் சினிமாக்களில் வசனம் எழுதவல்லவா நீங்கள் புதுமைப்பித்தனிலிருந்து இன்று வரைக்கும் எழுத்தாளர்களை அனுப்பிவைக்கிறீர்கள்.

சரி உங்களது ரூட்டிலேயே வரலாம் எனத் தீர்மானித்து இலக்கியப் புத்தக வெளியீடுகளிற்கு மிஷ்கின் முதல் குஷ்பூ வரை அழைத்து வந்தோம். திரளாக வந்த நீங்கள் குஷ்பூவை பார்த்துவிட்டு மிஷ்கினிடம் ஓட்டோகிராப் வாங்கிச் சென்றீர்களே தவிர புத்தகம் வாங்கவில்லை. ஒரு புத்தகத்தை ஆயிரம் பிரதிகள் அச்சிட்டுவிட்டு அதைப் பத்து வருடங்கள் கட்டிச் சுமக்கும் நிலையில்தான் பதிப்பாளர் இருக்கிறார். நீங்கள் என்னவென்றால் திணிப்பு என்கிறீர்கள்.

தேர்வு என்ற ஒன்று கையிலிருக்கும் போது திணிப்பு என்று ஏன் பெரிய வார்த்தையை எல்லாம் உபயோகிக்கிறீர்கள். வாங்கிய புத்தகத்தை உங்களால் படிக்க முடியவில்லை என்றால் வேறு யாராவது நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள். யாராவது ஒருவருக்கு அந்தப் புத்தகம் பிடித்தே தீரும். எத்தகைய மோசமான புத்தகத்துக்கும் ஒரு அர்ப்பணிப்பான வாசகர் எங்கேயாவது இருக்கத்தான் செய்வார். 'ராஸலீலா'வைக் கூட ரசித்துப் படித்த ஒன்றிரண்டு பேரை நான் அறிவேன். எனவே தைரியமாக இருங்கள்.

ஷோபாசக்தி அண்ணா, உங்களை அதிகம் கவர்ந்த, தமிழ் நாவல் எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர், கவிதை எழுத்தாளர், இணையதளம், சினிமா விமர்சகர், மொழிப்பெயர்ப்பாளர், விமர்சகர்… என பட்டியலிடுங்கள் பார்ப்போம்.

அபி, சென்னை

அதிகம் கவர்ந்தவர்களா? அவர்கள் எல்லோரும் கனடாவில்தான் இருக்கிறார்கள். என்னவொரு சிறப்பான விருந்தோம்பல்!

ஷோபா சக்தி, உங்களுக்கு பிராமணர்களைப் பிடிக்காதா? பிராமண எதிர்ப்பு எதற்காக? எனக்குத் தெளிவான வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும்.

மஹேஸ், திருச்சி

தனிப்பட்ட முறையில் எந்தப் பார்ப்பனரோடும் எனக்கு இதுவரை விரோதமில்லை. ஆனால் இவ்வாறெல்லாம் மிரட்டிக் கேட்டீர்கள் என்றால் எனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவேண்டிவரும்.

என்னைப் போன்றவர்கள் 'பார்ப்பனப் பத்திரிகையாளர்கள்' என அடிக்கடி விளித்து எழுதுவதைப் படித்திருப்பீர்கள்.

இது சோ ராமசாமி, வாஸந்தி, மாலன் போன்றவர்களையே குறிக்குமல்லாமல் அது ஒருபோதும் சின்னக் குத்தூசி அய்யாவைக் குறிப்பிடாது. பார்ப்பனராகப் பிறந்தாலும் சொந்தச் சாதிக்குத் துரோகம் செய்தவர் அவர். ஆதிக்க சாதிகளில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் அவர்களது சொந்தச் சாதிகளுக்குத் துரோகம் செய்தே ஆகவேண்டும்.

இதோடு இணைத்துச் சொல்லத்தக்கதாக இன்னொரு சம்பவமும் எனக்கு ஞாபகத்தில் வருகிறது. சில ஆண்டுகளிற்கு முன்பு புதுவிசை இதழ் நேர்காணலில் பெண் படைப்பாளிகள் பற்றிய கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் "தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாக்கியிருக்கிறார்கள், மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்கதாக ஒரு இருபதுபேர்கள் இருப்பார்கள்" என்று நான் சொன்னேன். இங்கே மாமிகள் என நான் குறிப்பிடுவது பார்ப்பனியக் கருத்தியல் எல்லைக்குள் இயங்கும் பார்ப்பன சாதியினரையே தவிர அந்தக் கருத்தியல் எல்லையை உடைத்துக்கொண்டு வந்த எழுத்தாளர்களை அல்ல. தோழர்கள் வ. கீதாவையோ அ. மங்கையையோ மோனிகாவையோ நான் மாமிகள் என்ற வரையறைக்குள் சொல்வதில்லை. எனது இந்தக் கருத்து தனது சாதிக்குத் துரோகம் செய்துவிட்டு வெளியே வந்த ஒருவருக்கு எந்த வருத்தத்தையும் அளிக்க நியாயமில்லை என்றே இப்போதும் நினைக்கிறேன்.

ஆனால் எனது அந்தக் கருத்துக்கு நான் முற்றிலும் எதிர்பாராத இடமொன்றிலிருந்து ஆதங்கம் எழுந்தது. தோழர் லதா ராமகிருஷ்ணன் எனது கருத்துக்கு ஓர் எதிர்வினையை எழுதியிருந்தார். அந்த எதிர்வினைக்கு "கழித்துவிடப்பட்ட ஒரு மாமியின் கடிதம்" என அவர் தலைப்பிட்டிருந்ததாக ஞாபகம். நான் கடுமையாக வருத்தமுற்றேன். வழமையாகவே எதிர்வினைகளை அல்வா போல எதிர்கொண்டு ஒன்றுக்கு இரண்டாகப் பதிலளிக்கும் நான் லதாவின் எதிர்வினைக்கு பதிலேதும் எழுதவேயில்லை. மாமி என்ற வரையறைக்குள் லதா தன்னை எவ்வாறு சிக்கவைத்துக்கொண்டார் என்ற கேள்வி என்னை இப்போதும் அலைக்கழித்தவாறேயிருக்கிறது. பார்ப்பனிய ஆதிக்கக் கருத்தாக்கத்தின் மீதான எதிர்ப்புணர்வை தனிநபர்கள் மீதான எதிர்ப்பாகக் கருத வேண்டியதில்லை.

ஏன் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதற்கு வரலாற்று ஆதாரத்தோடு பதில் வேண்டும் எனக் கேட்டிருக்கிறீர்கள். நிரம்பிய வரலாற்று ஆதாரங்களுடன் அம்பேத்கர் ஒரு இலட்சம் பக்கங்களில் இது குறித்து ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்.

அறுபது வருடங்கள் ஒருநாள் விடாமல் பெரியார் இது குறித்துப் பேசியிருக்கிறார். உங்களது நோக்கம் இது குறித்து வரலாற்றுரீதியாக அறிந்துகொள்வதே என்றால் அவற்றைத் தேடிப் படியுங்கள். வரவேற்று வாழ்த்துகிறேன்.

உங்களுக்கு எத்தனை காதலிகள்?

கு.நா.அழகேசன், துபாய்

ஊரொச்சம் உடையார் வீடு பட்டினி!

உங்கள் சிறுகதைகள் உலகத்தரமிக்க எழுதுக்களோடு ஒத்திருக்கிறது என தாராளமாகச் சொல்லலாம். உலக இலக்கியங்களோடு உங்கள் பரிட்சயம் பற்றி விளக்குங்கள்?

நரேன்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி இலக்கியங்கள் வழியாக (குறிப்பாக ருஷ்ய இலக்கியங்கள்) மிகச் சொற்பமாகவே உலக இலக்கியங்களுடனான எனது பரிச்சயம் இருக்கிறது. தமிழ்மொழி வாசிப்பின் வழியாக மட்டுமே எனது எழுத்துமுறையை நான் உருவாக்கிக்கொண்டேன். கு. அழகிரிசாமியிலிருந்து யோ. கர்ணன் வரை நான் கற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு எழுத்தாளரிடமும் ஒரு விசயம் இருந்துகொண்டேயிருக்கிறது. என்னை வழி நடத்திச் செல்லும் ஆதர்ச எழுத்துகள் லியோ டால்ஸ்டாயுடையவை.

http://www.vallinam....abathilgal.html

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஷோபாசக்தி கேள்வி பதில்கள் அடுத்த இதழில் (டிசம்பர் 2011) நிறைவுபெறுகின்றது. எனவே, வாசகர்கள் இம்மாதம் 15-ம் தேதிக்குள் கேள்விகளை editor@vallinam.com.my என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பிவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

shoba-big.jpg

எல்.டி.டி.ஈ தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நினைக்கிறீர்களா?

சீனிவாசன் - தமிழ்நாடு

இதற்குப் பதிலளிக்கக் கடப்பாடுடையவர்கள் நாடு கடந்த அரசாங்கம், நெடியவன் குழு, புலிகள் ஆதரவு ஊடகங்கள் போன்றவைதான். ஆனால் அவர்கள் மக்களைச் சுத்தலில் விட்டிருக்கிறார்கள். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பது போன்ற பிரமையை தங்களது அரசியல் இலாபங்களிற்காக அவர்கள் திட்டமிட்டே வளர்த்து வருகிறார்கள். அரசியல் விமர்சகர்களும், ஒருதொகை எழுத்தாளர்களும் உண்மையை அறிந்திருந்தும் அதைப் பேசினால் அவர்கள் தனிமைப்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் வாயைத் திறக்கப் பஞ்சிப்படுகிறார்கள். எனக்கு அவ்வாறான அச்சம் ஏதுமில்லை. பிரபாகரன் கொல்லப்பட்ட உடனேயே அது குறித்து நான் தீராநதியில் 'பிரபாகரன் ஜீவிக்கிறார்' என்று கட்டுரை எழுதினேன். பிரபாகரன் இறந்துவிட்டதை நான் தெரிவித்தேன்.

அவரின் தவறான அரசியல் நிலைப்பாடுகளிற்காக இறந்தும் அவர் விலைசெலுத்த நேர்ந்திருக்கிறது. அவரது அரசியலைப் பின்தொடர்ந்த மனிதர்கள் அவரின் மரணத்தை அறிவிக்கக் கூடத் தைரியமற்றவர்களாக உள்ளார்கள். பிரபாகரன் என்ற பெயரை வைத்து இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் மக்களிடம் சுருட்டுவதில்தான் அவர்களின் கவனம் உள்ளது. எத்தனையோ போராளிகளின் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றிவைத்த அந்த மனிதருக்கு ஒற்றை மெழுகுவர்த்தியாவது ஏற்றி அஞ்சலிக்க எவரும் தயாரில்லாதது வரலாற்றின் துயரம்!

இம்மாதக் காலச்சுவடு இதழில் செங்கடல் படம் பற்றி (ஷுட்டிங்) கண்ணன் எழுதிய விமர்சனம் குறித்து உங்கள் கருத்து?

ரவி - கனடா

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் நடத்தப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் படத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சனல் 4 காட்சியிலிருந்து கடற்புலித் தளபதி சூசையின் இறுதிச் செய்திவரை செங்கடலில் பதிவாகியுள்ளன. அவற்றில் ஒன்றே டில்லியில் நடந்த எழுத்தாளர்களின் போராட்டமும். எழுத்தாளர்கள் நடத்திய போராட்டம் பத்துநிமிடங்கள் வரை திரைப்படத்தில் இணைக்கப்பட்டிருப்பதாக கண்ணன் சொல்வதே தவறு. டில்லிப் போராட்டக் காட்சி 30 வினாடிகள் மட்டுமே படத்தில் வருகிறது.

தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களெல்லாம் ஏமாற்றப்பட்டு டில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு துணை நடிகர்கள் ஆக்கப்பட்டார்கள், அங்கு நடந்தது போராட்டமல்ல, ஷுட்டிங்கே என்றெல்லாம் கேஸ் பைல் பண்ணி கண்ணன் கலாச்சார கான்ஸ்டபிள் வேலை பார்ப்பது குறித்து இனிச் சொல்லவேண்டியவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட எழுத்தாளத் தோழர்களே.

நான் செங்கடல் இயக்குனரிடம் இவ்வாறு சொன்னேன்: செங்கடல் மூலம் எழுத்தாளர்களின் டில்லிப் போராட்டம் குறித்த செய்தி இன்னும் நான்கு தேசங்களுக்கும் நான்கு மொழிகளிற்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதைக் குறித்து நமது எழுத்தாள நண்பர்கள் உற்சாகம் கொண்டிருப்பார்களே தவிர கண்ணன் போல அவர்களும் கோணல் பார்வை பார்க்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னயிருந்தாலும் ஒரு எழுத்தாளரின் பார்வைக்கும் ஒரு தொழிலதிபரின் பார்வைக்குமிடையே வேறுபாடு கண்டிப்பாக இருந்தேயாகும். போராட்டத்தில் கலந்துகொண்ட சில எழுத்தாளர்களும் கண்ணனின் கண்கள் வழியே இந்தப் பிரச்சினையைப் பார்த்து எதிர்ப்புத் தெரிவிப்பார்களெனில் அதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. அந்தக் குறிப்பிட்ட காட்சியில் கணனித் தொழில் நுட்பத்தின் மூலம் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களின் முகத்தை மாஸ்க் செய்துவிடலாம். அது அர்த்தபூர்வமானதாகவும் அதேசமயம் திரையில் சம்திங் டிபரெண்டாகவும் இருக்கும்.

நண்பரே,

//அவதூறுகளை நியாயப்படுத்த வினவு இணையத்தளத்திற்கு ‘வர்க்கப் போராட்ட‘ முழக்கம்// இவ்வாறு ஒரு கட்டுரையில் எழுதியுள்ள நீங்கள் வினவு தளத்தின் வேறு எந்தக் கட்டுரையையும் படிப்பதில்லையா? ஏதோ வினவு உங்களை விமர்சிக்க மட்டும் ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்பதை போல பேசுவது நியாயமா? ஈழப் போராட்டம்இ பார்ப்பன எதிர்ப்புஇ உலகமய எதிர்ப்பு மற்றும் பல்வேறு சமூகப்பிரச்சினைகளில் போர்க்குணத்துடன் போராடும் ஒரு செயல்பாட்டை இப்படி சிறுமைப்படுத்துவதில் என்ன சுகம் காண்கிறீர்கள்? அந்தத் தோழர்கள் உங்களைப் போன்று எழுத்து ஒன்றே தவம் என்று கிடக்கும் ஒற்றை காரிய செயல்பாட்டாளர்கள் இல்லையே? தோழர் கணேசனை தெரியுமா? ஒரு கல்லூரி வாசலில் மாணவர்களை ஈழப்போராட்டத்துக்காக அறைகூவி அழைத்த போதுஇ போலீஸ் அவரை கடத்தி சென்றுஇ வயிற்றை லத்திக் கம்பால் குத்தி கூழாக்கியது. ஒரு சிறு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் உங்களைப் போன்ற ஒற்றைக் காரிய செயல்பாட்டாளர்களால் எப்படி எளிதாக கடந்து போக முடிகிறது? கொஞ்சம் அசல் மார்க்சியர்களையும் திறந்த மனதோடு பாருங்கள்.

(பெயர் இல்லை)

அன்பான பெயர் இல்லாத் தோழரே. எனது நீண்ட பத்தியிலிருந்து கடைசி வாக்கியத்தை மட்டும் நீங்கள் பிய்த்தெடுத்துச் சுட்டிக் கேள்வி கேட்பது சரியற்றது. நான் எழுதியது இதுவே: //மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழகத்து அரசியல் சூழலில் தவிர்க்கவே முடியாத தரப்பு. அவர்களது நீண்ட அரசியல் வரலாற்றில் கருத்து மாறுபாடு உள்ளவர்கள் கூட அவர்களது எண்ணற்ற களப் போராட்டங்ளை மதிக்கவே செய்வார்கள். ம.க.இ.கவினரின் அரசியல் முன்னோக்கில் உடன்படாதவர்கள் கூட அவர்களது உழைப்பைக் கனம் செய்வார்கள். வினவு இணையத்தளமோ ம.க.இ.கவின் மானத்தை வாங்கியது. பாட்டாளி வர்க்கத்திற்கு ‘கற்று‘க் கொடுப்பதற்கு அவதூறுகளும் ஆபாசமும் வினவுவிற்குத் தேவைப்பட்டன.//

தோழரே! ம.க.இ.க மீது எனக்கு நீண்டநாட்களாகவே தோழமையுணர்வும் மதிப்புமுண்டு. அதைப் பல இடங்களிலும் பதிவு செய்துள்ளேன். குறிப்பாக ஈழப் போராட்டம் குறித்து அவர்களது நிலைப்பாடு மிக முக்கியமானது எனப் பல இடங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளேன். எனினும் செங்கடல் படம் இலங்கை இந்திய அரசுகளுக்கு ஆதரவானது என்றும் இயக்குனர் லீனா மணிமேகலை குறித்தும் என்னை டக்ளஸ் தேவானந்தாவின் ஏஜெண்ட் என்ற பொருள்படவும் அவர்கள் அவதூறுகளை எழுதிக் குவித்தது கடுமையான கண்டனத்துக்குரியது. குறிப்பாக லீனா மணிமேகலையின் கவிதை நூலுக்கு தடையைக் கோரிய இந்துத்துவா அமைப்பைக் கண்டித்து நடத்தப்பட்ட கூட்டத்தில் ம.க.இ.கவினர் நடந்துகொண்ட முறை சகிக்க முடியாதது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது ம.க.இ.கவினர் வாரிச் சொரிந்த வசைகள் வக்கிரங்களே தவிர புரட்சிகர முழங்கங்களல்ல.

எனினும் அண்மைக்காலங்களாக வினவு இணையத்தளத்தில் இத்தகைய அவதூறுகளும் வக்கிரங்களும் யாரைக் குறித்தும் எழுதப்படாமலிருப்பது ம.க.இ.க வெளியீடுகளின் நீண்டநாள் வாசகன் என்ற முறையில் எனக்கு நிறைவைத் தருகிறது. 'சுயவிமர்சனம் ஏற்பது' என்ற அரசியல் கலைச்சொல்லையே உருவாக்கியவர்கள் ம.க.இ.கவினர்தான். அதை அவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள் என்றே நம்புகின்றேன்.

ஷோபா சக்தி, நான் பெரியாரைத் தொடர்ந்து செல்ல நீங்கள் ஒரு முக்கியக் காரணி. உங்கள் வாசிப்பில் நீங்கள் பெரியார் கருத்தோடு ஒருமுறைகூட முரண்பட்டதில்லையா? அதே போல அ.மார்க்ஸ் வெளியிடும் பல்வேறு கருத்துகளோடு நீங்கள் உடன்படுகிறீர்களா?

அதியன், துபாய்.

அன்புள்ள அதியன், பெரியார் அறுபது வருடங்கள் களத்தில் இயங்கியவர். பல்வேறுவிதமான அரசியல் சூழல்களிற்குள்ளாலும் நெருக்கடிகளுக்குள்ளாலும் பயணித்தவர். அந்தக் குறிப்பான சூழல்களில் குறிப்பான கருத்துகளைத் தெரிவித்தவர்/ செயற்படுத்தியவர். இந்தப் புரிதலோடு பெரியாரை அணுகும்போது அவரோடு நான் முரண்படுவதேயில்லை. மாறாக ஒவ்வொரு தடவையும் பெரியார் தனது காலத்தைத் தாண்டிய சிந்தனைகளால் என்னை ஆச்சரியப்படுத்தியவாறே உள்ளார்.

அ. மார்க்ஸோடு சில விடயங்களில் உடன்படாதிருந்திருக்கிறேன். குறிப்பாக அவர் எழுதிய "இளையராஜா சனாதனத்தை அசைத்தாரா இசைத்தாரா" என்ற கட்டுரையில் எனக்கு முற்றிலும் வேறு கருத்துகளிருந்தன. அண்மையில் கூட 'அ. மார்க்ஸ்: சில மதிப்பீடுகள்' நூலில் 'பின்நவீனத்துவம் வரை என்னைத் தொடர்ந்து வந்த ஷோபாசக்தியால் காந்தியாரைப் பற்றிய எனது சிந்தனைகளைத் தொடர முடியாமற் போயிற்று" என்று மார்க்ஸ் எழுதியிருந்தாரே.

ஷோபா சக்தி, இது நான் உங்கள் மேல் வீசும் குற்றச்சாட்டு இல்லை. தோழமையுடன்தான் சொல்கிறேன் அல்லது கேட்கிறேன். பல சமயம் நீங்கள் இந்து மதத்தைச் சாடுகிறீர்கள். ஆனால், நீங்கள் ஒரு கிருஸ்துவர். உங்கள் குருவும் ஒரு கிருஸ்துவர். பெரியார் இந்து மதத்தில் இருந்துகொண்டுதான் அதில் உள்ள பிற்போக்கை எதிர்த்தார். முதலில் உங்கள் மதத்தில் உள்ள பிற்போக்கை எதிர்க்காமல் இந்துமதத்தில் உங்களுக்கு என்ன வேலை? அதே போல இஸ்லாம் மதத்தைத் தூக்கிப் பேசுகிறீர்கள். இஸ்லாம் மதத்தை ஒரு வன்முறை மதம் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? ஷோபா மற்றவர்களிடம் சொல்வதுபோல கிண்டல் செய்து என் கேள்வியில் தப்பிக்காதீர்கள். என் இரண்டு கேள்விக்கும் நேர்மையான பதில் தேவை.

இந்தியன், இந்தியா

ஏன் இந்து மதத்தை எதிர்க்கிறீர்கள் என்று நீங்கள் கேட்காததால் வர்ணாசிரம், சாதி என்றெல்லாம் நீண்டதொரு விளக்கத்தை அளிக்கும் சுமையை எனக்குக் குறைத்துள்ளீர்கள்.

நமது சாதியச் சூழலில் கிருத்துவ மதத்தை இந்து மதம் உட்செரித்துக்கொண்டது. இன்றைய கிருத்துவம் இந்து மதத்தின் இன்னொரு கிளைப்பிரிவே என்று சொல்வேன். எனவே கிறித்துவ மதத்தில் சாதி உட்பட இந்து மதத்தின் அனைத்துப் புண்களும் புரையோடிப்போயுள்ளன. இந்த இருமதத்தினரின் பண்பாட்டு கூறுகளும் சாதியத்தால் ஆக்கப்பட்டவை.

இஸ்லாம் சாதியத்தை விலக்கிவைத்துள்ள மதம். அதன் பண்பாட்டுக் கூறுகளில் சாதியம் கிடையாது. ஆகவேதான் சாதி இழிவிலிருந்து விடுபட இஸ்லாமையும் பவுத்தத்தையும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஒரு மாற்றாக முன்வைத்தார்கள். இஸ்லாம் மட்டுமல்ல இந்துத்துவமும் கிருத்தவமும் கூட ஓர்புறத்தில் அன்பையும் அமைதியையும் போதித்துக்கொண்டே மறுபுறத்தில் கொடிய தண்டனைகளையும் புனிதப் போர்களையும் ஊக்குவிக்கும் மதங்களே. குறிப்பான அரசியல் சூழல்களில் பெரியார் இஸ்லாமையும் பவுத்தத்தையும் ஏன் சில சமயங்களில் கிறித்துவத்தையும் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பரிந்துரைந்தார். ஆனால் அவர் இறக்கும்போதுகூட 'கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன்' என்று கூறியவாறே இறந்துபோனார்.

தம்பி உங்களுக்குப் பிடித்தத் திரைப்படங்கள் எவை?

வசந்தபாலன், அவுஸ்திரேலியா.

The Great Dictator, Bread and Roses, Chicago, Frida, Enter the Dragon, Good Bad and Ugly, நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், நவராத்திரி, தில்லானா மோகனாம்பாள், தண்டிக்கப்பட்ட நியாயங்கள், ஒருதலை ராகம், அழியாத கோலங்கள், பசி, கருத்தம்மா, ஆடுபுலி ஆட்டம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, காதல் கொண்டேன், பொன்மணி, வாடைக்காற்று, புரகந்த களுவர, பாலம யற்ற, மதிலுகள், செம்மீன், ஆரதனா என்று ஏராளமுண்டே.

கனடாவுக்குச் சென்றபோது அ. முத்துலிங்கத்தைப் பார்த்ததாக அறிகிறேன். அந்த இனிய அனுபவம் பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன். ஆசையாக இருக்கிறது.

கணேஷ், சிங்கப்பூர்

அதை குமுதம் தீபாவளி இலக்கியச் சிறப்பிதழில் அ. முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சோபா, வல்லினத்தில் உங்கள் பதில்களை இப்போதுதான் மொத்தமாகப் படித்து முடித்தேன். உங்களுக்கு வாழ்த்து கூறி தனிப்பட்ட முறையில் ஒரு கடிதம் எழுதலாம் என்றிருந்தபோது ஒரு பதில் மனதை பாதித்தது. அந்த பதிலின் வழி நீங்கள் இலங்கை இலக்கியத்தை மதிக்கவில்லை என்றுதான் தோன்றியது. இலங்கை இலக்கியம் உங்கள் போற்றுதலுக்குறியதாக இல்லையா? செங்கை ஆழியான், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எண்ணற்ற இலங்கை நாவலாசிரியர்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

அசான் கனி, நோர்வே.

ராஜேஸ்வரி ஒரு புனைகதை எழுத்தாளராக என்னைக் கவர்ந்தவரல்ல. செங்கை ஆழியானின் வாடைக்காற்றையும் காட்டாறையும் ஆச்சி பயணம் போகிறாவையும் மறக்க முடியுமா என்ன! பாலமனோகரன், தாமரைச் செல்வி, இராசரத்தினம், இலங்கையர்கோன், அ.செ. முருகானந்தம், ரஞ்சகுமார், உமாவரதராஜன், ஓட்டமாவடி அரபாத், திருக்கோவில் கவியுகன், கௌரிபாலன், மு.தளையசிங்கம், சட்டநாதன், கோகிலா மகேந்திரன், அருள் சுப்பிரமணியன் என்று எண்ணற்றவர்களை வாசித்து என்னை நான் உருவாக்கிக்கொண்டேன். என்னவொரு துர்ப்பாக்கியம் பாருங்கள்...இங்கே நான் குறிப்பிட்டவர்களில் ராஜேஸ்வரியைத் தவிர வேறுயாரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவேயில்லை. எஸ்.பொவும், டானியலும் எனது ஆசான்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கவிதை எழுதிய அனுபவம் உண்டா சோபா உங்களுக்கு? அல்லது கவிதை வாசிப்பனுபவம். உங்களுக்குப் பிடித்த கவிஞர்?

விசித்திரா

அதெல்லாம் உண்டு. கவிதை வாசிப்புப் பெருகிய ஒரு தருணத்தில் நான் கவிதை எழுதுவதை நிறுத்திக்கொண்டேன். அவ்வாறு வாசிப்புப் பெருகும் தருணத்தில் இன்றெழுதிக்கொண்டிருக்கும் பல கவிஞர்கள் தாங்களும் கவிதைகள் எழுதுவதை நிறுத்திக்கொள்வார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குண்டு. வ.ஐ.ச. ஜெயபாலன், இளவாலை விஜேந்திரன் இருவரும் என் மனதிற்கு நெருக்கமான கவிஞர்கள். எனது உணர்வுகளை அவர்கள் எழுதியிருப்பதாகவே அவர்களைப் படிக்கும்போது நான் உணர்வேன். பிரேம் - ரமேஷ் மற்றும் மனுஷ்யபுத்திரன் என் கொண்டாட்டத்துக்குரிய கவிஞர்கள். ம. மதிவண்ணனின் கவிதைகள் நெருப்பு. அவரது கவிதைகளிற்குள் நுழைந்து ஒவ்வொரு தடவையும் சூடுபட்டே திரும்புகிறேன். மாலதி மைத்ரியும் சுகிர்தராணியும் லீனா மணிமேகலையும் ஆழியாளும் தமிழ்க் கவிதையின் மறுபாதிகள். ஏழு கடல்களையும் சர்ப்பங்களையும் காவல்களையும் மாயப் பொறிகளையும் தாண்டிச் சென்று உயிர் இரகசியத்தைக் கவர்ந்து வந்து நமக்கு அளிப்பவர்கள் அவர்கள். எளிய மனிதனின் அந்நியமாதலையும் தமிழகத்தின் சிறுநகரங்களின் ஆன்மாவையும் நான் முகுந்த் நாகராஜனின் கவிதைகளில் தரிசிக்கிறேன்.

http://www.vallinam.com.my/issue35/shobabathilgal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் சாதியத்தை விலக்கிவைத்துள்ள மதம்

ஆகா என்ன விளக்கம்....அண்ணே உலகம் சுற்றியிருக்கிறார் ஆனால் மத்திய கிழக்கு நாட்டிற்கு போகவில்லை போலகிடக்கு...அங்கு போய் ஒரு வருடம் வாழ்ந்திருந்தால் இன்னும் கூட அனுபவம் வந்திருக்கும்...அதிக கதை எழுதியிருக்கலாம் .இஸ்லாமிய ஆதிக்கவர்க்கம் என்ன என்பது புரிந்திருக்கும்...சியா முஸ்லிம்கள் சன்னி முஸ்லிகள் இன்னும் பல உண்டு.

Link to comment
Share on other sites

இஸ்லாம் சாதியத்தை விலக்கிவைத்துள்ள மதம். அதன் பண்பாட்டுக் கூறுகளில் சாதியம் கிடையாது. ஆகவேதான் சாதி இழிவிலிருந்து விடுபட இஸ்லாமையும் பவுத்தத்தையும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் ஒரு மாற்றாக முன்வைத்தார்கள். இஸ்லாம் மட்டுமல்ல இந்துத்துவமும் கிருத்தவமும் கூட ஓர்புறத்தில் அன்பையும் அமைதியையும் போதித்துக்கொண்டே மறுபுறத்தில் கொடிய தண்டனைகளையும் புனிதப் போர்களையும் ஊக்குவிக்கும் மதங்களே. குறிப்பான அரசியல் சூழல்களில் பெரியார் இஸ்லாமையும் பவுத்தத்தையும் ஏன் சில சமயங்களில் கிறித்துவத்தையும் கூட ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பரிந்துரைந்தார். ஆனால் அவர் இறக்கும்போதுகூட 'கடவுளைக் கற்பித்தவன் அயோக்கியன்' என்று கூறியவாறே இறந்துபோனார்.

மதங்கள் பற்றிய அறிவு புல்லரிக்குது போங்க.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

'ஷோபா சக்தி பதில்கள் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. அடுத்தமாதம் முதல் ஆதவன் தீட்சண்யா வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் கூறுவார். வாசகர்கள் விரைந்து கேள்விகளை அனுப்பலாம்' - ஆசிரியர் குழு

shoba-big.jpg

ஷோபா, உங்களின் முந்தைய பேட்டியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள் 'ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுசீட்டு எடுப்பேன்' என்று (ஈழ நாட்டு கடவுசீட்டு). உங்கள் மீது எமக்கு மிக பெரிய மரியாதை உருவானது. இன்று உங்களது பேட்டி - எழுத்து நமது தமிழர்களை காட்டி கொடுப்பது போன்றே உள்ளது, உங்களின் கீழ்தரமான விளம்பரத்திற்கு நம்மை நாமே காட்டிகொடுப்பது நல்லதா.... என்று திருத்துவீர்கள் உமது இந்த கையாலாகததனத்தை..?

பாண்டியன் - சிங்கப்பூர்

ஈழம் கிடைத்தால் மட்டுமே கடவுச்சீட்டு எடுப்பேன் என நான் எப்போதும் சொன்னதில்லையே. லீனா மணிமேகலைதான் என்னுடைய கதையை வைத்து 'கடவுச் சீட்டு' என்றொரு படம் எடுக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார்.

அன்புள்ள பாண்டியன்! தமிழர்களைத் தமிழர்களுக்கே காட்டிக்கொடுப்பது மிக அவசியமான வேலையாக இருக்கிறது. ஏனெனில் அவர்கள் கற்பிதங்களிலும் பிரமைகளிலும் பழங்காலப் பெருமைகள் பேசியும் கிட்டத்திட்ட அழியப்போகும் இனமாக ஈழத்தில் இருக்கிறார்கள். எனவே தமிழர்கள் அவர்களது சமகால நிலையை மாயைகளை விலக்கி உள்ளதை உள்ளபடியே அறிய அவர்களை அவர்களிற்கே காட்டிக்கொடுக்க வேண்டியுதுள்ளது. ஏச்சு வேண்டியோ பேச்சு வேண்டியோ இந்த வேலையை செய்தே ஆகவேண்டியிருக்கிறது. 'உன்னையே நீ அறிவாய்' என்றாரல்லவா சோக்ரட்டீஸ். அதுதான் இந்தக் காட்டிக்கொடுப்பு.

இது பெரியார் ஈவெரா சொன்னது: "நாம் ஒழுக்கத்தையும், நியாயத்தையும், சட்டத்தையும் நம்பி வெகு காலம் நாசமாக்கி விட்டோம். இப்போதும் தேசத்தையும், தேசியத்தையும் நம்பி மறுபடியும் வெகு காலம் பாழாக்கி வருகிறோம். இவைகளை நம்புவது, இவைகளுக்கு கட்டுப்படுவது, இவைகளுக்காக பாடுபடுவது எல்லாம் முட்டாள்தனம் என்பதை உணர்ந்தோம். இனி மனித சமூக விடுதலைக்கும், ஒரு மனிதனை மற்றொரு மனிதன் அடக்கி அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதை ஒழிப்பதற்கும், ஒரு மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் அனுபவித்துக்கொண்டு சோம்பேறியாய் வாழ்வதை அழிப்பதற்கும் பாடுபடவேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன். இது குற்றமானால் இது பாபமானால் இந்தக் குற்றத்தையும், பாபத்தையும் குஷாலாக ஒவ்வொருவரும் செய்யவேண்டியதுதான், வரவேற்க வேண்டியது தான்"

நீங்கள் ஒரு தீவிர சினிமா ரசிகராயிருக்கிறீர்களே... படம் பார்த்து அழுகிற வழக்கம் உள்ளதா?

ராணி, மலேசியா.

உண்டு. ஆனால் அண்மையில் ஒரு திரைப்படத்தை குறித்து எழுதப்பட்டிருந்ததைப் படித்தே மனம் விட்டு அழுததுண்டு. 'தெய்வத் திருமகள்' படம் குறித்து 'காட்சிப் பிழை' இதழில் வெளியான விவாதக் கட்டுரையைப் படித்து மனம் நொந்து கண்ணீர் சிந்தினேன். 'அங்காடித்தெரு' ஆனாலும் 'ஆடுகளம்' ஆனாலும் 'காட்சிப்பிழை' குழுவினர் என்னைக் கலங்கடித்தே வருகிறார்கள்.

சோபாசக்தி உங்களை நோக்கிவரும் எல்லாக் கேள்விகளுக்கும் (அவதூறுகளுக்கும்) சலிப்பின்றி பதிலளிக்கிறீர்களே இது தேவையா?

நந்தன், கனடா.

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கும் அய்ம்பதாவது ஆள் நீங்கள். இதிலெல்லாம் என்ன சலிப்புள்ளது. எல்லாம் ஒரு பழக்கத்தில் வருவதுதான்.

LTTE இயக்கத்திலிருந்த காலத்திலும், 'தொழிலாளர் பாதை' விற்றுத் திரிந்த காலத்திலும் எத்தனையோ விதமான கேள்விகளையும் எத்தனையோ விதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். "கரையானின் இயக்கம்" என்று முகத்துக்கு நேரே திட்டியிருக்கிறார்கள், 'தொழிலாளர் பாதை' விற்ற காலங்களில் காறித் துப்பியிருக்கிறார்கள். அடித்து விரட்டியிருக்கிறார்கள். அடியையும் வாங்கிக்கொண்டு அந்த இடத்திலேயே அடித்தவர்களுக்கு கருத்துப் பிரச்சாரமும் செய்திருக்கிறோம்.

நாம் ஒரு கருத்தைப் பரப்புரை செய்யும் போது பலவிதமான எதிர்க் கருத்துகளை மட்டுமல்லாமல் அவதூறுகளையும் சேர்த்தே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் நாம் பிரச்சாரம் செய்யும் கருத்து மிகச் சிறுபான்மையின் கருத்தாகவும் சமூகத்தின் பொதுப்புத்திக்கு எதிராகவுமிருந்தால் நமக்கு பொறுப்பு இன்னும் அதிகமாகிறது. ஒவ்வொரு தனிமனிதர்களுடனும் சாத்தியமுள்ள வழிகளிலெல்லாம் எனது கருத்துகளை நான் உரையாட முயற்சிக்கிறேன். அவர்களிடம் எனது கருத்தை எடுத்துச் செல்லும் சிறிய சந்தர்ப்பத்தையும் தவறவிடக் கூடாது என்பதுவே எனது நிலைப்பாடு.

வீதியில் நின்று பத்திரிகை விற்கும்போது அல்லது இயக்கத்துக்காக மக்களிடம் ' பங்களிப்பு' கேட்கப் போகும்போது மக்கள் நான்கு விதமாகவும் கேள்விகளைக் கேட்கத்தான் செய்வார்கள். சில கேள்விகளின் அடிப்படையே தவறாயிருக்கும். சில கேள்விகள் முழுவதுமான வதந்திகளின் அடிப்படையிலிருக்கும். அவை எல்லாவற்றுக்கும் நான் பொறுமையாகப் பதில் சொல்லிப் பழகியிருக்கிறேன். இப்போது அதே மக்கள், பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் அதே மாதிரியான கேள்விகளை வைக்கிறார்கள். நான் அதே பொறுப்புணர்வுடன் அவர்களுக்குப் பதிலளிக்கவும் அதன் மூலம் அவர்களோடு உரையாடலைத் தக்கவைக்கவும் முயற்சிக்கிறேன்.

இதனால் எனது புனைவு சார்ந்த முயற்சிகள் ஒருபோதும் கெட்டுப் போதில்லை. நான் அதிகம் எழுதவில்லை எனில் எனக்கு நேரம் இல்லையென்று பொருளாகாது. அதற்குப் பொருள் தற்சமயம் என்னிடம் சரக்கு இல்லையென்பதே.

விமல் குழந்தைவேலின் கசகறணம் நாவல் படித்துவிட்டீர்களா? நாவல் குறித்து உங்களது அபிப்பிராயம் என்ன?

மதுவந்தி, யாழ்ப்பாணம்.

படித்துவிட்டேன். அது பயங்கரமான கசகறண அனுபவமாயிருந்தது.

ஒரு நாவலில் அல்லது கதையில் கதைசொல்லி வட்டார வழக்கைக் கையாள்வது கதைசொல்லிக்கு ஒரு வகையில் வசதிதான். அந்த வசதியை நான் பலதடவைகள் உணர்ந்திருக்கிறேன். கதையின் மடிப்புகள் அறுபடும் போதும், தாவிச் செல்லவும், முன்னே பின்னே கதையில் காலங்களில் ஊடாடவும் வட்டார வழக்கு வசதியானதுதான். முக்கியமாக வட்டார வழக்கு கதைக்கு ஒருவித நம்பகத்தன்மையை வழக்குகிறது. ஆனால் வட்டார வழக்கில் கதை சொல்வதில் ஒரு எல்லையுமுண்டு. ஒரு கட்டத்திற்கு மேல் வட்டார வழக்கு நமக்கு ஒத்துழைக்காது. மொழியின் கட்டற்ற சாத்தியங்களுக்கு வட்டார வழக்குத் தடையாகிவிடும்.

வட்டார வழக்கில் நவீன கவிதை எழுதுவதைக் குறித்து சிந்திக்கும்போது அது சாத்தியமேயில்லை எனத் தோன்றுகிறதல்லவா.

வட்டார வழக்கின் இனிமை என்பது அதை அப்படியே எழுதுவதில்லை இல்லை. அதை இலக்கியத்துக்கான கருவியாக மாற்றுவதுதான் சவால். வட்டார வழக்கால் நாவலுக்கு உருவாகும் ஒருவித நம்பகத்தன்மை நாவலை இறுக்கமாகக் கட்டியமைப்பதாலேயே சாத்தியமாகும். நாவல் இறுக்கமாகக் கட்டப்படாது அலம்பல் செய்தால் வாசகருக்கு இலக்கிய அனுபவம் கிடைக்காது, பிரதியில் வெறும் வட்டார வழக்கு அகராதியும் சில தகவல்களும் மட்டுமே கிடைக்கும். கசகறணத்தில் அது கிடைக்கிறது.

விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், புயலிலே ஒரு தோணி, ஒரு புளிய மரத்தின் கதை, மோகமுள், பொய்த்தேவு, ஜெ. ஜெ. சில குறிப்புகள், தலைமுறைகள், கிருஷ்ணப் பருந்து, மானுடம் வெல்லும்... இது ஜெயமோகன் தமிழில் சிறந்த நாவல்களாகக் கருதும் பட்டியல். நீங்கள் இவ்வாறு ஒரு பட்டியல் போட்டால் எப்படி இருக்கும். தைரியமாகப் போடுங்க பிரதர்.

மலர்நாதன், சென்னை.

இந்தப் பட்டியலுடன் பெருத்த முரண்பாடில்லை. நான் பட்டியலிட்டால் விஷ்ணுபுரமும், ஜே.ஜே: சில குறிப்புகளும் பட்டியலில் இருக்காது. வெக்கையும், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகமும், காவல் கோட்டமும் பட்டியலில் சேர்ந்துகொள்ளும். எஸ். பொவும், கே. டானியலும் கண்டிப்பாக அந்தப் பட்டியலில் இருப்பார்கள். ஒரு மாறுதலுக்காக நான் எனக்குப் பிடித்த ஈழத்து நாவல்களைப் பட்டியலிடுகிறேனே.

சடங்கு - எஸ்.பொ.

கோவிந்தன் - கே. டானியல்

ஒரு தனிவீடு - மு. தளையசிங்கம்

நிலக்கிளி - பாலமனோகரன்

வாடைக்காற்று - செங்கை ஆழியான்

சுமைகள் -தாமரைச்செல்வி

குருதிமலை - தி.ஞானசேகரன்

புதியதோர் உலகம் - கோவிந்தன்

நட்டுமை - ஆர்.எம்.நெளசாத்

செக்குமாடு - வ.அய்.ச.ஜெயபாலன்

இந்த வாசகர் கேள்வி பதிலில் எனது கேள்வி இறுதியானதாக இருக்கட்டும். வல்லினத்தில் கடந்த மாத றியாஸ் குரானாவுடனான உரையாடலை கவனித்திருப்பீர்கள். அவர் அதில் இரு வகையான கேள்விகளை உங்கள் முன் வைக்கிறார். ஒன்றாவது தங்களின் இலங்கை - இந்திய ஒப்பந்த பரிந்துரை பற்றியது மற்றது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தங்கள் மௌனம் தொடர்பானது. இவை இரண்டுக்கும் பொதுவாக 'விளிம்பு நிலை மக்களின் பக்கம் அவர் கொண்டிருந்த அக்கறையை இப்போது சந்தேகிக்க வேண்டியிருக்கிறது' எனவும் குறிப்பிடுகிறார். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

ம. நவீன் - மலேசியா

ஆம், இலங்கை - இந்திய உடன்படிக்கை குறித்து நான் இவ்வாறு வல்லினத்தில் சொல்லியிருந்தேன்: "இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளபடி இலங்கையின் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து வழங்குவதுமே இன்றைய சூழலில் ஓரளவாவது சரியான தீர்வாக இருக்கமுடியும். ஆனால் மகிந்த அரசு அதற்குத் தயாரில்லை."

தோழர் றியாஸ் குரானா இலங்கை - இந்திய உடன்படிக்கை முஸ்லீம்கள், மலையகத் தமிழர்களது நலன்களைக் கவனத்தில் எடுக்கவில்லை என்கிறார். அவர்களது உரிமைகளை மட்டுமல்ல தமிழர்களது நியாயமான உரிமைகளையும் வழங்குவதற்கு அந்த உடன்படிக்கையில் சத்து இல்லை என்பதுதான் எனது கருத்தும்.

ஆனால் இன்று இலங்கைத் தீவின் அரசியல் அதிகாரம் அனைத்தும் மத்தியில் குவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அந்த உடன்படிக்கையில் உள்ளவாறு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிற்கு வழங்கப்பட்டால் அதிகாரம் ஓரளவாவது பரவலாக்கப்படலாம் என்றே கருதுகிறேன். இன்றைய இலங்கையின் இனமுரண்பாடு அரசியல் ஓரளவாவது சமரசத்தை நோக்கி முன்னேறுவதானால் 13 வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உடன்படிக்கையில் குறிப்பிட்ட அனைத்து அதிகாரங்களும் மகாணசபைகளுக்கு வழங்குவதே முன்னேற்றத்திற்காக முதற்படியாக இருக்கும். இதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இருக்கவே முடியாது.

வேறுவழிகள் இருக்க முடியாது என்று நான் அழுத்திச் சொல்வதற்கான காரணம் இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துமாறு இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்றே கிடைக்கும் செய்திகளிலிருந்து அனுமானிக்கக் கூடியதாயிருக்கிறது. இந்திய அரசிடம் ஓரளவாவது பணிய வேண்டிய நிர்ப்பந்தமும் இலங்கை அரசுக்கு இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அதன் குறைபாடுகளுடன் சேர்த்தே நான் இவ்வாறு முன்னிறுத்திச் சொல்வதற்கான காரணம், வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டால் மற்றைய ஏழு மாகாணங்களுக்கும் இந்த உரிமைகள் வழங்கப்படும். அந்த வகையில் இது அனைத்து இலங்கை மக்களுக்கும் அரசியல் முன்னேற்றத்துக்கான சிறுபடியெனினும் முதற்படியாக அமையும். மத்தியிலிருக்கும் அசைக்க முடியாத அதிகாரம் சற்று மாகாண அலகுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். இந்த அமைப்புக் கிட்டத்தட்ட இந்தியாவிலிருக்கும் மாநில - மத்திய அரசியல் கட்டமைப்பைக்கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தொடர்ந்து சிங்களப் பேரினவாத அரசுகள் ஏன் மறுத்துவருகின்றன என்றும் மாகாணசபைகளுக்கு காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு சிங்கள இனவாத அமைப்புகள் ஏன் கடுமையான எதிர்ப்பை இருபத்தைந்து வருடங்களாகத் தெரிவித்து வருகின்றன என்றும் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். மாகாண சபைகளுக்கு இலங்கை - இந்திய உடன்படிக்கையில் உள்ளவாறு பூரண அதிகாரங்களை வழங்குவது நாட்டைப் பிரிப்பதற்குச் சமமானது என அவர்கள் கூக்குரலிடுகிறார்கள். நான் அவ்வாறெல்லாம் கற்பனைகள் செய்யாவிட்டாலும் இது இனமுரணை தீர்ப்பதற்கான முதற்படியாக இருக்கும் எனக் கருதுகிறேன். திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வ கட்சிக் குழு அமைக்கப்பட்டபோது தமிழ் அறிவுச் சமூகமும் இதையே வலியுறுத்தியது. இந்த உடன்படிக்கையிலுள்ள வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு என்ற சரத்தில் கிழக்கின் பெரும்பான்மை மக்களுக்கு உடன்பாடில்லை என்பதையே கடந்துபோன அரசியல் நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. வடக்கு - கிழக்கு மகாண சபைகளை உச்ச நீதிமன்றம் சட்டரீதியாக பிரித்தே விட்டது. கிழக்கு மகாணசபை இப்போது தனி அலகாகத்தான் இயங்குகிறன்றது. எனவே இது குறித்த அச்சங்களும் தேவையற்றவை.

இந்த விடயம் குறித்து றியாசிடம் மாறுபட்ட கருத்து இருப்பின் அதை அவர் ஓர் அரசியல் வரைவாக பொதுவெளியில் வைப்பது தமிழ் - முஸ்லீம் சமூகங்கள் இடையேயான பகைமறப்புச் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு நிச்சயம் ஒரு கனதியான பங்களிப்பாக இருக்கும்.

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முஸ்லீம் - மலையக இலக்கியங்கள் புறக்கணிக்கப்பட்டது குறித்து நான் மவுனம் சாதித்தேன் என்ற றியாஸின் கருத்துகள் சரியற்றவை. அந்த மாநாடுக்கு முன்பும் பின்பும் நான் எனது கருத்துகளை எழுதியிருந்தேன். மாநாடுக்கு முன்பு நாங்கள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்தோம். அந்த அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டோம்: "இலங்கையின் எல்லாச் சமூகத்தளங்களிலும் இருந்தும் எழுத்தாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்க வேண்டுமென விரும்புகிறோம். குறிப்பாக தலித்துகள், பெண்கள், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் போன்ற விளிம்புநிலையினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் எழுத்தாளர்கள் மாநாட்டில் முன்நிலைப்படுத்தப்பட வேண்டுமென மாநாட்டு அமைப்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறோம்."

மாநாடு பல சிக்கல்களையும் எதிர்கொண்டு நடத்தப்பட்டது. மாநாடு முடிந்ததன் பின்பாக ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டேன். அதில் இவ்வாறு குறிப்பிட்டேன்: "மாநாட்டில் சில தரப்புகளிற்கு உரிய இடம் வழங்கப்படவில்லை, தீவிர இலக்கியம் நோக்கிய கவனக் குவிப்பு போதாது, மரபு என்ற பெயரில் மூடத்தனங்கள், மாநாட்டில் கம்பவாரிதியாரின் அரற்றல்கள் போன்ற விமர்சனங்கள் கணக்கிலெடுக்கப்பட வேண்டியவையும் எதிர்வரும் காலங்களில் சரி செய்யப்பட வேண்டியவையுமே. எல்லாப் பெரிய நிகழ்வுகளிலும் இவ்வாறான விடுபடல்களும் நமது அரசியல்சரிகளிற்கு எதிரான செயற்பாடுகளும் இருக்கவே செய்கின்றன. இவற்றை தொடர்ந்த விமர்சன கலாசாரத்தால் நாம் நேர்செய்ய முற்படுவோம். ஆனால் இத்தகைய தனி நிகழ்வுகளை முன்வைத்து ஒட்டுமொத்த மாநாட்டையும் சேறடிக்கும் பேச்சுகள் விடலைத்தனமானவை மட்டுமே."

அந்தக் கட்டுரைக்கான தொடுப்பு இது: http://www.shobasakthi.com/shobasakthi/?p=812

இந்த இதழுடன் எனது கேள்வி - பதில் பகுதி முடிவடைகிறது. கடந்த ஆறுமாதங்களாக வாசகத் தோழர்களுடன் உரையாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த 'வல்லினம்' தோழர்களுக்கு மிக்க நன்றி. ஆர்வத்தோடும் சில சமயங்களில் துடுக்கோடும் கேள்விகளை அனுப்பிய வாசக நண்பர்களுக்கும் வல்லினத்தில் வெளியான பதில்களை இணையங்களில் பகிர்ந்துகொண்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.

வணக்கம்.

- ஷோபாசக்தி

http://www.vallinam.com.my/issue36/shobabathilgal.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.