Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

Featured Replies

சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் பிரச்சினைக்குள் சிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள புலம்பெயர் புலி ஆதரவாளர்கள், மீண்டுமொருமுறை சனல் 4 தொலைக்காட்சியினை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களை மேற்கோள் காட்டி மேற்படி சனல் 4 தொலைக்காட்சி போலி வீடியோ ஆவணமொன்றினைத் தயாரித்துள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர், இந்த நடவடிக்கை விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கூற்றுக்கிணங்க அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட பணத்தைக் கொண்டு தீட்டப்பட்ட சதித்திட்டமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்த காலத்தின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொதுமக்களைக் காப்பாற்றி அவர்களுக்கு பாதுகாப்பளித்து வந்த இராணுவத்தினர், ஒருபோதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் குடும்பங்கள் இன்றும் அரசாங்கத்தின் பாதுகாப்பில் நலமுடன் வாழ்ந்து வருகின்றார்கள். கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவி, பிள்ளைகள் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனின் குடும்பம் உள்ளிட்ட 11,000 முன்னாள் போராளிகள் பாதுகாக்கப்பட்டமை அதற்கு சிறந்த உதாரணமாகும்.

அத்துடன், புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மரணிக்கும் வரையில் அவர்களை இராணுவமும் அரசாங்கமுமே பாதுகாத்து வந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ ஆவணத்தை முற்றாக நிராகரிப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/23113--4-.html

  • கருத்துக்கள உறவுகள்

புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

சீரியஸான நேரத்திலும் சிரிக்காம காமெடி பண்ணும் இவர் எப்பவுமே ஒரே டமாஸ்தான் :) :)

தாம் என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சிங்களக் காட்டுமிராண்டிகள் - தாம் எப்படி பொய்களை, காசு பணத்தை வீசி உலகை ஏமாற்றுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

பண்டிக்கு நித்திரையிலும் குப்பையைக் கிண்டுற மாதிரித் தான் கனவு வருமாம்.

எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நிரூபிக்கப் பட்ட போர்க்குற்றவாளிகளின் கருத்தை நாம் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை!!!

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்பிடியே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்பதே எல்லோரது அவாவும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 வீடியோ புலி ஆதரவாளர் நிதியில் தயாரான போலி ஆவணம்: கோட்டாபய

புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாக தமையனிடம் அறிக்கை கொடுத்தவரும் இவரே.

புலிகளின் அடுத்த தலைவராக தன்னைத்தானே அறிவித்த கே.பியை கைதுசெய்து தன்னுடன் வைத்திருப்பவரும் இவரே.

வெளிநாட்டுப்புலிகளின் தலைவர் நெடியவனை உள்ளே பிடித்து போட்டாச்சு என்று சொன்னவரும்இவரே.

பின்னர் என்ன இப்படி இன்னும்புலிகள்இருப்பதாக கதைவிடுகிறார்.........???

இவர் இப்பிடியே பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்பதே எல்லோரது அவாவும்..! :D

உண்மை தான். இவர் இப்படி சொல்லாவிட்டால் தான் அது செய்தி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.