Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீட்டுக்கு வாறவங்கள் கேக்கிற கேள்விகள் தலைய சுத்தவைக்குது – யாழ்ப்பாணத்தில் இருந்து கனகண்ணை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

118 பக்கங்கள் இருக்கின்றன.. படிக்க வெளிக்கிட்டால் விடிஞ்சிடும்..! :(

நிற்க.. அருகிலுள்ள இந்திய உதாரணத்தை எடுத்துக்கொண்டாலும்..

மாநிலங்கள் மொழிவாரி அடிப்படையிலேயே அங்கு பிரிக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு அங்கே தனிக்கட்சிகள் இருந்தாலும் மொழியின் அடிப்படையிலேயே அவர்களின் அரசியலும் அமைந்திருக்கிறது. முஸ்லிம்களுக்கென்று தனியான இட ஒதுக்கீடுகள் ஏதும் அங்கே இல்லை. கனடாவிலும்கூட மொழி அடிப்படையில்தான் (ஆங்கிலம், பிரெஞ்ச்) அரசியலேதவிர மத அடிப்படையில் அல்ல.

இலங்கை மட்டும் விதிவிலக்காக முயல்வது ஆச்சரியமாக இருக்கிறது. :rolleyes:

இனம், தேசியம் என்பவற்றிற்கு இலகுவான வரைவிலக்கணம் கூறமுடியாது என்பது உண்மைதான். இனம் தேசியம் எல்லாம் மொழி அடிப்படையில் மட்டும் என்றிருந்தால், மலையகத்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வித்தியாசம் இருந்திருக்கக்கூடாது. தலைவர் பிரபாகரன் கூட, அவரது வன்னிச் செய்தியாளர் மாநாட்டில் மலையகத் தமிழர்களின் பிரச்சினையை அவர்களின் தலைவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார்.

தேசியவாதத்தைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை உள்ளது:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67438

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர் (அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைக்கின்றார்களா தெரியாது) தாங்கள் தனித்துவமான இனம் என்று சொல்லி அரசியல் செய்வதில்லை (முஸ்லீம் லீக் கட்சி என்று ஒன்று இருந்தாலும், அது பெரியளவு ஆதரவுத் தளத்தை வைத்திருக்கவில்லை). ஆனால் இலங்கையில் சோனகர் (முஸ்லிம்கள் என்ற அடையாளம் போராட்ட காலத்தில்தான் பரவலாக அறிமுகமானது) ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து வேலை செய்திருந்தாலும், போராட்ட காலத்தில் தங்களை தமிழரின் போராட்டத்துடன் அரசியல் ரீதியாக இணைத்துக்கொள்ளவில்லை. இயக்கங்களில் முஸ்லிம்கள் சேர்ந்திருந்தாலும், பிற்காலத்தில் இயக்கங்களில் இருந்து விலக்கப்பட்டதற்கு அவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை, யதார்த்தத்தை உணராமல் மனிதாபிமானம் போன்ற சொற்களை பயன்படுத்தி விதண்டா வாதம் செய்யும் போக்கால் தான் தமிழன் அழிந்து கொண்டிருக்கிறான். தமிழனின் பின்னடைவுகளுக்கு இவை தான் முக்கிய காரணம். ஒன்றும் செய்யவும் தெரியாது, செய்பவர்களில் குறை கண்டுபிடிப்பதில் விண்ணர்கள்.

யாராவது ஒரு முஸ்லிம் இன்றுவரை அவன் தமிழினத்துக்கு செய்த பச்சைத் துரோகங்களை, பெருமளவு தமிழர் காணிகளை அபகரித்ததை, ....., சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழனை அழிச்ச வரலாறுகளை, தவறு என்று சுட்டிக்காட்டி, அல்லது இவற்றை தாம் செய்தோம் என்று கூரியிருப்பானா?

அதைவிட மேலாக தமிழன் சொத்துக்களை கொள்ளையடித்த, கோவிலினுள் மாட்டை வெட்டியெறிந்த ஒரு முஸ்லிம் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், பள்ளிவாசல் முதல் அனைவரும் முஸ்லிம் மீது தாக்குதல் என்று கூக்குரலிடுவார்களே தவிர அவன் செய்த அயோக்கியத்தனத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இத்தகைய கூட்டத்துக்கு கொடிபிடிக்கும் கூட்டமும், கொடிபிடிப்பவர்களுக்கு கொடிபிடிக்கும் கூட்டமும் தான் தமிழினத்தின் முதலாவது பலவீனம்.

மேம்போக்காக விடயங்களைக் கதைத்து உணர்ச்சிகர அரசியல் செய்து ஒன்றையும் சாதிக்கமுடியாது என்பதை முள்ளிவாய்க்கால் அவலங்களிற்குப் பின்னரும் புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனையானது.

தமிழர் - முஸ்லிம் பிரச்சினைகளுக்கு இருபக்கமும் தவறு இருக்கின்றது என்பதை இருபக்கமும் ஏற்றுக்கொண்டு, புரிந்துணர்வுடன் செயற்பட முடியாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் ஒருவரை ஒருவர் நம்பாமல் சந்தேகக் கண்ணுடன் அரசியல் செய்வதுதான். அதனால்தான் சிங்களவர் தமிழருக்கும், முஸ்லிம்களுக்கும் எதுவித உரிமைகளையும் கொடுக்காது இலங்கைத்தீவில் ஏகபோக உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளமுடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழர்களே!தமிழர்களில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியது போல் தமிழர்களில் ஒரு பகுதியினர் முஸ்லிம்களாக மதம் மாறியுள்ளனர்.அவர்கள் தனியான இனம் என்றால் அரபு மொழியையே தாய் மொழியாக பேசியிருக்க வேண்டும் அப்படி இல்லையே.ஆபிரிக்க நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழுகிறார்கள் அவர்கள் அந்த மொழியைப் பேசி அந்த இனமாக வாழுகிறார்கள்.மதத்தால் மட்டுமே அவர்கள் முஸ்லிம்களாகுகிறார்கள்.சோமாலியாவின் முஸ்லிம் குடிமகன் தன்னைச் சோமாலியன் என்கிறானே ஒழிய அராபியன் என்று சொல்வது இல்லை.மத்தால் மட்டுமே அவன் முஸ்லிம்.

இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் தமிழர்கள் என்று தமிழர்கள் சொன்னால் போதுமா. முஸ்லிம்கள் (சோனகர்/இஸ்லாமியர்) தாங்களும் தமிழர்கள் என்று பெருமிதத்துடன் சொல்லவேண்டுமல்லவா!

இனம், தேசியம் என்பதெல்லாம் மிகவும் சிக்கலானது. வரைவிலக்கணங்களைப் பாவித்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லமுடியாது. சோமாலியாவில் இருப்பவர்கள் தங்களைப் பெருமையாக சோமாலியன் என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் தங்களைப் பெருமையாக இந்தியன் என்றும் அடையாளப்படுத்துகின்றார்கள் என்பது உண்மைதான். எனினும் இலங்கையில் பிறந்த/பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்கள் பெருமையாக இலங்கையன்/சிறிலங்கன் என்று சொல்லுவதில்லை. அதே வேளை சிங்களவர்களும், முஸ்லிம்களும் தாம் இலங்கையர்/சிறிலங்கன் என்று சொல்வதற்கான காரணம் என்ன?

இன/தேசிய அடையாளம் என்பது ஒரு உரிமைகளுக்காக ஒன்றிணைந்து முழுமூச்சாக செயற்படுபவர்களைக் குறிக்கின்றது. தமிழ் மொழியால் ஒன்றுபட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இலங்கைத் தமிழர்களுக்கான பிரச்சினைகள் வேறு வேறானவை. அதனால்தான் அவர்கள் வெவ்வேறு தேசியங்கள் ஆவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரம்தான் இருந்தாலும் தொப்பி பிரட்டிகளை நம்ப ஏலாது, எல்லாம் சரிவாறகடைசி நேரத்தில் தொப்பியை பிரட்டி எல்லாத்தையும் குழப்பி போடுவாங்கள். :lol: :lol: :lol:

உவங்களை அணைச்சு கொண்டு போறது வேலியில போற ஓணானை தூக்கி வேட்டிக்குள்ள விடுற கதை. :lol:

பளுது என கண்டால் விலத்திதான் போக வேணும். இல்லாவிடில் மேல விளுந்து பிறாண்டும். :lol:

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இனம், தேசியம் என்பவற்றிற்கு இலகுவான வரைவிலக்கணம் கூறமுடியாது என்பது உண்மைதான். இனம் தேசியம் எல்லாம் மொழி அடிப்படையில் மட்டும் என்றிருந்தால், மலையகத்தமிழர், இலங்கைத் தமிழர் என்ற வித்தியாசம் இருந்திருக்கக்கூடாது. தலைவர் பிரபாகரன் கூட, அவரது வன்னிச் செய்தியாளர் மாநாட்டில் மலையகத் தமிழர்களின் பிரச்சினையை அவர்களின் தலைவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றுதான் சொல்லியிருந்தார்.

மலையகத்தமிழரின் வருகையை வைத்து ஈழத்தமிழரின் உரிமைகளை மறுதலிக்கும் பிரச்சாரம் ஒன்று பல தசாப்தங்களாக நிலவி வருகின்றது. இன்றும் குறிப்பிடத்தகுந்த அளவு தமிழக மக்கள் "பிழைக்கப் போன இடத்தில் நாடு கேட்பது சரியா" என்று கேட்பவர்களாக உள்ளார்கள். சிங்களவர்களும் (உண்மையை அறிந்திருந்தாலும்) தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தேறிய கள்ளத்தோணிகள் என்று தமிழனிடம் வாதிடத் தயங்குவதே இல்லை.

தலைவர் பிரபாகரன் அவர்களின் கூற்று இத்தகைய போலிப் பிரச்சாரங்களை மறுத்துரைக்கும் ஒரு முயற்சியாகக் கொள்ளலாம். ஆனால் மலையகத் தமிழருக்கென்று ஒரு தேசியம் இல்லை என்பதே நிதர்சனம்.

டிஸ்கி: பூர்வீகத் தமிழரின் தேசியத்தையே சிங்களவன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். :rolleyes:

தேசியவாதத்தைப் பற்றி ஒரு நீண்ட கட்டுரை உள்ளது:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67438

இணைப்புக்கு நன்றிகள்.

தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர் (அவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அழைக்கின்றார்களா தெரியாது) தாங்கள் தனித்துவமான இனம் என்று சொல்லி அரசியல் செய்வதில்லை (முஸ்லீம் லீக் கட்சி என்று ஒன்று இருந்தாலும், அது பெரியளவு ஆதரவுத் தளத்தை வைத்திருக்கவில்லை). ஆனால் இலங்கையில் சோனகர் (முஸ்லிம்கள் என்ற அடையாளம் போராட்ட காலத்தில்தான் பரவலாக அறிமுகமானது) ஆரம்பத்தில் தமிழரசுக் கட்சியில் இணைந்து வேலை செய்திருந்தாலும், போராட்ட காலத்தில் தங்களை தமிழரின் போராட்டத்துடன் அரசியல் ரீதியாக இணைத்துக்கொள்ளவில்லை. இயக்கங்களில் முஸ்லிம்கள் சேர்ந்திருந்தாலும், பிற்காலத்தில் இயக்கங்களில் இருந்து விலக்கப்பட்டதற்கு அவர்கள் முஸ்லிம்கள் என்பதுதான் முக்கிய காரணம்.

அதையேதான் நானும் சொல்கிறேன். தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் தங்களை ஒரு அலகாகக் காட்டிக்கொள்வதில்லை. ஆனால் இலங்கைத்தீவில்தான் இந்த நிலை. ஏன்? :unsure:

இதனை விளங்கிக் கொள்ள இந்திய அரசியலைச் சற்றுப் பின்னோக்கிப் பார்ப்போமானால்... :rolleyes:

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்று, பின்னர் உலகப் போர் முடிய இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும் நிலைவருகிறது. அதுவரை இந்திய விடுதலை என்று முழங்கிவந்த முகமது அலி ஜின்னா கடைசி நேரத்தில்பாகிஸ்தானைத் தனியாகப் பிரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். சுதந்திரத்தை எட்டும்வரை இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தவில்லை. இறுதி நேரத்தில் சைக்கிள் கேப்பில் கடாவெட்டி பாகிஸ்தானைப் பிரித்துக் கொள்கிறார் (இந்நாள் பங்களாதேஷ் உள்ளடங்கலாக). :rolleyes:

தற்போதைய இலங்கை முஸ்லிம்களின் அரசியலை உற்றுநோக்கும்போது இரண்டுக்கும் ஏதோ ஒரு ஒற்றுமை தெரியவில்லை? :rolleyes::wub:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் தமிழர்கள், முஸ்லிம்களை தேசிய இனங்கள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மைதான். முன்னர் சிறுபான்மையினம் என்றாவது சொன்னார்கள், ஆனால் மகிந்தவோ சிறுபான்மை இனம் என்று ஒன்றில்லை. எல்லோரும் இலங்கையரே என்று சொல்லி தேசிய கீதத்தையும் சிங்களத்தில் மட்டும் பாடச் சொல்லிவிட்டார்!

மலையகத்தமிழர் ஒரு தேசிய இனமாகக் கருதப்படாவிட்டால், அவர்களை ஈழத் தமிழருக்குள் அடக்கலாமா? அல்லது மகிந்த சொல்லுவது இலங்கையர் என்ற அடையாளத்துடன் மட்டுப்படுத்தலாமா?

இந்தியா என்று ஒரு நாடு 100 வருடங்களுக்கு முன்னர் இல்லாதிருந்தும், தற்போதைய இந்தியாவில் உள்ளவர்கள் இந்தியர்கள் என்று தம்மை பெருமையாக அழைப்பதற்கு அடிப்படைக் காரணம் காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் nation building ஐ ஊக்குவித்ததுதான். இதுபோன்றுதான் தென்னாபிரிக்காவிலும், ரக்பி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் மூலம் கறுப்பர், வெள்ளையர்களை இணைத்து தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கின்றார்கள்.

ஆனால் நாங்களோ முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் தமிழர்களே என்று ஒரு பக்கத்தால் வெறும் உதட்டளவில் சொல்லிக்கொண்டு, அதே வாயால் அவர்களை "தொப்பி பிரட்டி" என்றும் "தோட்டக் காட்டார்" என்றும் சொல்லுவோம்.

சிங்களவர்கள் எவ்வாறு தமிழர்களை ஒரு தேசிய இனம் என்று ஒத்துக்கொள்ளவில்லையோ, அதுபோலத்தான் தமிழர்களும் முஸ்லிம்களையும் மலையகத்தவர்களையும் தேசிய இனங்கள் என்று ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாம் உணவுச் சங்கிலி போலத்தான்!

அது போக, தமிழர்கள் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம்களை தமிழர்கள்தான் என்று சொல்லுவதற்கு அரசியல் தேவை உள்ளது. அப்படிச் சொல்லாவிட்டால், தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான வட-கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை நாமே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடும் அல்லவா. முஸ்லிம்களை தனி இனமாக தமிழர்கள் ஏற்காததற்கும், ஹமாஸ் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கும் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். ஆனால் தற்போதைய உலக அரசியல் போகும் போக்கில் இவ்வாறான கொள்கைகள் காலக்கிரமத்தில் காணாமல் போய்விடும் அல்லது இவற்றைப் பற்றிக் கதைப்பதற்கு தேவையான நிலை இல்லாமல் போய்விடும் :D

மலையகத் தமிழர், வடக்குத் தமிழர், கிழக்குத்தமிழர், தமிழ்பேசும் முஸ்லிம்கள், தமிழ்நாட்டுத் தமிழர் எல்லோருமே தமிழர் எனும் தேசிய இன அடையாளத்தின் பேரில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்..! :rolleyes:

இந்த ஒருங்கிணைப்பு சாத்தியம், முஸ்லிம்களைத் தவிர. இதற்கு முஸ்லிம்களை வடக்கிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள் என்று சப்பைக் காரணம் சொல்ல முடியாது. ஏனெனில் வெளியேற்றியவர்கள் புலிகள். அவர்களை அழித்தாகிவிட்டது. இன்னும் ஏன் பிரச்சினை? :rolleyes:

ஆக, புலிகள் விரட்டியது பிரச்சினை இல்லை. சைக்கிள்கேப்பில் கட வெட்டுவது மாத்திரமே குறிக்கோள்..! :D

இந்தியா என்று ஒரு நாடு 100 வருடங்களுக்கு முன்னர் இல்லாதிருந்தும், தற்போதைய இந்தியாவில் உள்ளவர்கள் இந்தியர்கள் என்று தம்மை பெருமையாக அழைப்பதற்கு அடிப்படைக் காரணம் காந்தி சுதந்திரப் போராட்ட காலத்தில் nation building ஐ ஊக்குவித்ததுதான். இதுபோன்றுதான் தென்னாபிரிக்காவிலும், ரக்பி, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் மூலம் கறுப்பர், வெள்ளையர்களை இணைத்து தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கின்றார்கள்.

ஆனால் நாங்களோ முஸ்லிம்களும், மலையகத்தமிழர்களும் தமிழர்களே என்று ஒரு பக்கத்தால் வெறும் உதட்டளவில் சொல்லிக்கொண்டு, அதே வாயால் அவர்களை "தொப்பி பிரட்டி" என்றும் "தோட்டக் காட்டார்" என்றும் சொல்லுவோம்.

நீங்கள் கூறும் இந்தியாவிலும் இன்னும் தமிழர்களை மதராசி என்று ஏளனம் செய்வதும், மராட்டியர் / இந்திக்காரர் பிடுங்கலும் இன்னும் பிரபலமாக நடந்துகொண்டிருக்கிறது. அதற்காக அவர்கள் தங்களை இந்தியர் என்று அடையாளப்படுத்தவில்லையா? தென்னாபிரிக்காவில் kaffir என்று அழைக்கப்படுவதில்லையா? :unsure:

ஆக தொப்பி பிரட்டி என்று அழைத்துவிட்டான் என்று கூறி தனித்தேசியம் பேசுவது ஏற்புடையதன்று. அவ்வாறு பார்த்தால், வடபகுதித் தமிழரும்தான் யாழ்ப்பாணிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ஈழத்து முஸ்லிம்கள் தமிழ்தேசியத்தின்பால் ஒன்றிணையும்போது இத்தகைய வார்த்தைப்பிரயோகங்கள் மறைந்துபோகும்.

சிங்களவர்கள் எவ்வாறு தமிழர்களை ஒரு தேசிய இனம் என்று ஒத்துக்கொள்ளவில்லையோ, அதுபோலத்தான் தமிழர்களும் முஸ்லிம்களையும் மலையகத்தவர்களையும் தேசிய இனங்கள் என்று ஒத்துக்கொள்ளவில்லை. எல்லாம் உணவுச் சங்கிலி போலத்தான்!

இது ஏற்புடையதல்ல.. இப்படிப்பார்த்தால் நாளைக்கு வடமராச்சிக் காரர் தாங்கள் ஒரு தேசிய இனம் என்பார்கள். காரணம் வடமராச்சி எனும் நிலப்பரப்பில் வாழ்கிறோம் என்று. :D

நியாயமான கோரிக்கைகளை அநியாயமான கோரிக்கைகளுடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. உலகில் தேசிய இனம் என்பதற்குரிய செறிவான வரைவிலக்கணங்கள் உள்ளன. அவற்றுள் மொழி முதன்மையானது. அதைப் பேசுவதால் முஸ்லிம்கள் தமிழ்தேசியத்துள் அடங்குகிறார்கள் (அவர்களோ வேறு யாராவதோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்).

அது போக, தமிழர்கள் வட-கிழக்கில் வாழும் முஸ்லிம்களை தமிழர்கள்தான் என்று சொல்லுவதற்கு அரசியல் தேவை உள்ளது. அப்படிச் சொல்லாவிட்டால், தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஒன்றான வட-கிழக்கு தமிழரின் தாயகம் என்பதை நாமே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிவிடும் அல்லவா. முஸ்லிம்களை தனி இனமாக தமிழர்கள் ஏற்காததற்கும், ஹமாஸ் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கும் அடிப்படைக் காரணம் ஒன்றுதான். ஆனால் தற்போதைய உலக அரசியல் போகும் போக்கில் இவ்வாறான கொள்கைகள் காலக்கிரமத்தில் காணாமல் போய்விடும் அல்லது இவற்றைப் பற்றிக் கதைப்பதற்கு தேவையான நிலை இல்லாமல் போய்விடும் :D

வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை தமிழ் தேசியத்தின் கீழ வரவேண்டும் என்றுதான் நானும் சொல்கிறேன். புலிகள் விரட்டிவிட்டார்கள், தொப்பி பிரட்டி என்று அழைத்துவிட்டார்கள் போன்ற காரணங்களுக்காக சிங்களவருடன் இணைந்து செயற்படுவது ஏற்புடையதன்று. காட்டிக்கொடுத்ததால் என் தாத்தாவை புலிகள் சுட்டுக்கொன்றார்கள். அதனால் நான் காலம் முழுவதும் தமிழ் தேசியத்துக்கு எதிரி என்று ஒரு மாற்றுக்கருத்து மேதாவி சொல்வதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை. நீங்கள் பிரதேச வேறுபாடுகளையும் தேசம் (nation), இனம் என்பதையும் ஒரேதட்டில் வைக்கப் பார்க்கின்றீர்கள்!

வன்னி யுத்த இறுதிக் காலத்தில், கடுங்குளிரையும் பொருட்படுத்தாது புலம்பெயர் நாடுகளில் திரண்ட தமிழர்கள் பல்வேறு பிரதேசங்களையும் மதங்களையும் சார்ந்தவர்கள். இவர்கள் இப்படித் திரண்டதற்குக் காரணம் தங்களை தமிழ்த் தேசிய இனமாக உணர்ந்ததினால்தான். அதே வேளையில் எம்மீது அனுதாபம் இருந்தும் (இல்லாமல் இருந்தும்) தமிழ்பேசும் முஸ்லிம்கள் இப்படியாகத் திரளவில்லை. அதற்கு அடிப்படைக் காரணம் அவர்கள் எங்களிலிருந்து தங்களை வேறுபடுத்திப் பார்ப்பதினால்தான்.

மகிந்த எல்லோரையும் இலங்கையர் என்ற சொல்லுவதனால் தேசிய உணர்வுள்ள தமிழர்கள் இலங்கையர் என்று சொல்லப் போவதில்லை. அதேபோல் நாம் முஸ்லிம்களை தமிழர்கள் என்று சொல்லுவதினால் அவர்கள் தமிழர்கள் என்றாகிவிடமாட்டார்கள். மேலும் கடந்த முப்பதாண்டுகளில் (வடக்கில் மட்டுமல்ல, கிழக்கில் நடந்த பல சம்பவங்களாலும்) தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி வேற்றுமைகள் வந்துவிட்டன. எனவே தமிழர்கள் என்ற குடைக்குள் ஒருங்கிணைப்பது சாத்தியம் என்பது வெறும் கனவு. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது!

எந்த இனமும் தனக்கான இனம் எது தேசியம் எது என்று அடையாளப் படுத்துவதற்கு முழு உரிமை கொண்டது. இன்னொரு இனம் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற இனத்தை இப்படித்தான் நீ அடையாளம் கொள் என்று கேட்பதற்கு உரிமையற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இனம், தேசியம் என்பதெல்லாம் மிகவும் சிக்கலானது. வரைவிலக்கணங்களைப் பாவித்து இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லமுடியாது. சோமாலியாவில் இருப்பவர்கள் தங்களைப் பெருமையாக சோமாலியன் என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் தங்களைப் பெருமையாக இந்தியன் என்றும் அடையாளப்படுத்துகின்றார்கள் என்பது உண்மைதான். எனினும் இலங்கையில் பிறந்த/பூர்வீகத்தைக் கொண்ட தமிழர்கள் பெருமையாக இலங்கையன்/சிறிலங்கன் என்று சொல்லுவதில்லை. அதே வேளை சிங்களவர்களும், முஸ்லிம்களும் தாம் இலங்கையர்/சிறிலங்கன் என்று சொல்வதற்கான காரணம் என்ன?

மேற் கூறப்பட்ட கருத்து மூலம் தங்கள் எண்ணம் வெளிப்படுகிறது. தமிழர்கள் ஏன் தங்களைச் சிறிலங்கன் என்று சொல்ல வேண்டும்.சிறிலங்கா என்ற சொல் மகாவம்சத்தில் கூட இருக்கவில்லை.ஆனால் ஈழம் என்ற சொல் இருக்கிறது. சிங்களவர்கள் தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சூறையாடி அதனைச் சிறிலங்கா என்று அழைப்பதன் மூலம் அது சிங்களநாடு என்று நிறுவப்பார்க்கிறார்கள்.தமிழர்களையும் இவ்வாறு சொல்ல வைப்பதன்; மூலம் தமிழர்களின் தாயகக் கோட்பாட்டையே சிதைக்கப் பார்கிறார்கள்.முஸ்லிம் அரசியல்வாதிகள் சிறிலங்கா அரசோடு கூடிக்குலாவி சலுகைகளைப் பெறுவதும் தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சு வார்த்தை என்ற வரும் போது தங்களுக்கும் தனியான உரிமை வேண்டுமென்று சைக்கிள் கைப்பில் கடா வெட்டுவதும் அவர்கள் கை வந்த கலை. இலங்கையில்முதலில் நடந்த இனக்கலவரம் சிங்களவருக்கம் முஸ்லிம்களுக்கும் இடையில்தான் நடைபெற்றது.
  • கருத்துக்கள உறவுகள்

எந்த இனமும் தனக்கான இனம் எது தேசியம் எது என்று அடையாளப் படுத்துவதற்கு முழு உரிமை கொண்டது. இன்னொரு இனம் தனக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்ற இனத்தை இப்படித்தான் நீ அடையாளம் கொள் என்று கேட்பதற்கு உரிமையற்றது.

அது சரிதான்.. அப்படியானால் சிங்களவனுடன் இணைந்த தமிழ்பேசும் முஸ்லிம் இனத்தைத் தமிழன் எதிரியாக வரிப்பதில் தவறில்லை. மொத்தத்தில் புலிகள் செய்தது சரியே என்கிறது உங்கள் வாதம்..! :D

மகிந்த எல்லோரையும் இலங்கையர் என்ற சொல்லுவதனால் தேசிய உணர்வுள்ள தமிழர்கள் இலங்கையர் என்று சொல்லப் போவதில்லை. அதேபோல் நாம் முஸ்லிம்களை தமிழர்கள் என்று சொல்லுவதினால் அவர்கள் தமிழர்கள் என்றாகிவிடமாட்டார்கள். மேலும் கடந்த முப்பதாண்டுகளில் (வடக்கில் மட்டுமல்ல, கிழக்கில் நடந்த பல சம்பவங்களாலும்) தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள இடைவெளி அதிகமாகி வேற்றுமைகள் வந்துவிட்டன. எனவே தமிழர்கள் என்ற குடைக்குள் ஒருங்கிணைப்பது சாத்தியம் என்பது வெறும் கனவு. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது!

இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் கற்றுக்கொண்ட பாடத்தை தமிழர்கள் மனதில் நிறுத்திச் செயற்பட வேண்டும்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.