Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடி கொளுத்தி ஒரு ஊர்ப்பொங்கல்

Featured Replies

pongal11ns.jpg

பிள்ளையள் தைப்பொங்கலைப் பற்றிப் பத்து வசனம் எழுதுங்கோ, இது தமிழ் வகுப்புப்பாடம்.

“தைத்திருநாள் என்று சொல்லும் இனிய தமிழ்ப் பொங்கல்” என்று பெருங்குரல் எடுத்துப்பாடும் சங்கீத வகுப்பு,

பொஙகல் திருநாளைப் பற்றிச் சித்திரம் வரையவும் இது சித்திர வகுப்பு.

இப்பிடித்தான் எங்கட சீனிப்புளியடி பள்ளிக்கூடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும்.

தைப்பொங்கல் வரப்போகுது என்பதின் அறைகூவல் தான் அது. இப்பிடித்தான் எங்களுக்குத் தைப்பொங்கல் வருவது தெரியும்.

பாட இடைவேளை நேரத்தில மைதானத்துக்குப் போய் நீண்ட சதுரப்பெட்டியாக இரண்டு காலாலும் செம்பாட்டு மண்ணைக் கிளறிக் கோலம் போட்டு நடுவில சூரியன் மாதிரிப் படம் வரைஞ்சு விடுவோம். ஓரமாய்க் கிடக்கிற கல்லிலை பெரிய கல்லாப் பார்த்து மூண்டை எடுத்து வைத்து பழை ரின்பால் பேணியை அவற்றின் மேல் வைத்து விட்டு குருமணலை அந்தப் பேணியில் நிறைத்துவிட்டு பொங்கலை வேகவைப்பது போல கல் இடுக்குகளில் வாய் வைத்து ஊதுவது போலப் பாவனை செய்வோம். இதுதான் தைப்பொங்கல் விளையாட்டு.

என்ர அம்மாவும் சீனிபுளியடியில ரீச்சரா இருந்தவ. பள்ளிக்கூடம் முடிஞ்சு வீடு திரும்பும் போது எங்கட வீட்டுக்கு அயலில் இருக்கும் பிள்ளையளையும் என்னையும் கூட்டிக்க்கொண்டு வீடுதிரும்புவது அவரின்ர வழக்கம். கிட்டத்தட்ட முப்பது நிமிட நடைபயணம்.

விசுக்க்கு விசுக்கொண்டு அம்மாவும் மற்ற ரீச்சர்மாரும் கதைச்சுக்கொண்டு நடந்துகொண்டு போகவும் பின்னால் நானும் கூட்டாளிமாரும் கே கே எஸ் றோட்டின்ர ரண்டு பக்கமும் விடுப்பு பார்த்துகொண்டே போவோம். தைப்பொங்கல் சீசனில கடைநெடுக மண் பானையளும் அலுமினியப் பாத்திரங்களும் அடுக்கிவச்சிருக்கும்.

கோபால் மாமாவின் கடைப்பக்கம் நெருங்கும் போது எங்கட கண்கள் தானா விரியும்.

ஊரில் இருக்கின்ற கடையளுக்க அவற்ற கடைதான் பென்னான் பெரியது, புதுக்கடையும் கூட.

ஒரு பக்கம் கரும்புக்கட்டுகள், இன்னொரு பக்கம் மண் மற்றும் அலுமினியப்பாத்திரங்கள், ஓலையால் செய்த கொட்டப் பெட்டிகள் நிறைஞ்ச்சிருக்கும்.

ஆனா என்ர கண் போறது வேற இடத்தில,

வட்டப்பெட்டி, சரவெடி, மத்தாப்பு, பூந்திரி (கை மத்தாப்பு),ஈக்கில் வாணம் (ஈர்க்கு வாணம்), அட்டை வாணம் (சக்கர வாணம்), வெடிப்புத்தகம் என்று சம்பியன், ஜம்போ, யானை, அலுமான் (ஹனுமான் வெடியை இப்பிடித்தான் அழைப்போம்) என வகை வகையான தயாரிப்புகளில கலர் கலரா ஒருபக்கம் குவிஞ்சிருக்கும். கோபால் மாமா " எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு போ" என்று சொல்லுவது போல ஒரு பிரமை வரும் அந்த நேரத்தில.

அவரின் கடை வரும்போது நடைவேகம் தானாகக் குறைந்து விடுப்புப் பார்க்கும் எங்களை

" கெதியா வாங்கோ பிள்ளையள்" என்று உறுக்கல் கொடுத்துவிட்டு அம்மா எட்டி நடக்கும் போது

"என்ன தங்கச்சி, பொங்கலுக்கு ஒண்டும் வாங்கேல்லையே" எண்டு கடைக்குள்ள இருந்து குரல் கொடுப்பார் கோபால் மாமா.

" இல்லையண்ணை, பிறகு உவர அனுப்பிவிடுகிறன்" என்று அம்மா சொன்னாலும் அவர் விடமாட்டார்.

" சாமான்கள் தீரமுன் கொண்டுபோ பிள்ளை" எண்டு சொல்லி பார்சல் போட ஆரம்பித்துவிடுவார்.

என்ர கண் பூந்திரிப்பக்கம் போவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு இரண்டு பக்கற் சம்பியன் பூந்திரிப் பெட்டியையும் பார்சலில் போடுவார். மணிபேர்சைத் திறந்து கொண்டுருக்கும் அம்மாவின் கையைச் சுறண்டி அட்டை வாணம் பக்கம் காட்டுவேன். யாரும் பார்க்காதவாறு என்ர கையில ஒரு கிள்ளுக்கொடுத்து விட்டு "பேசாம இரு அப்பா வாங்கிக்கொண்டு வருவார்" என்று சன்னமாகச் சொல்லிவிட்டுக் கடையிலிருந்து நகருவார்.

பொங்கலுக்கு முதல் நாள் அப்பா தாவடிசுந்தரலிங்கம் கடையிலிருந்து ஒரு சம்பியன் வட்டப் பெட்டி வெடியும் அஞ்சாறு அட்டை வாணமும், ரண்டு பூந்திரிப் பக்கற்ரும் வாங்கிவருவார்.

அண்ணனுக்குத் தான் வெடிப்பெட்டி. நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்க அலுமான், சம்பியன் வெடியளத் தொடவே பயம். (பின்னாளில ஆமியின்ர ஷெல், குண்டுகளுக்குப் பிறகு பழகிபோச்சு)

யானைப் படம் போட்ட வெடியளும் உண்டு. அந்த் வெடிகளில ஒரு பக்கற்றில அம்பது வெடி இருந்தால் பத்து வெடி தேர்றதே அபூர்வம். யானை வெடிகள் பெரும்பாலும் புடுக் எண்ட சத்ததோட நூந்து போகும்.

வெடிக்காத அந்த வெடியளை எடுத்து அவற்றின் கழுத்தை நெரித்திருக்கும் நூல்கட்டை அவிட்டுவிட்டு நூந்துபோன திரியை மேல எழுப்பீட்டு திரியில நெருப்ப வைத்தால் மத்தாப்பு போல அழகாகச் சீறிவிட்டு தன்ர சாவைத்தழுவிக்கொள்ளும்.

ஒரு பத்துப் பதினஞ்சு வயசுப் பொம்பிளைப் பிள்ளையின்ர குடும்பி போலச் சணல் கயிறைத் திரித்து இலேசாகத் தணல் வைத்தால் கனநேரம் அது அணையாமல் இருக்கும். அதுதான் வெடிகளுக்கும் பற்றவைக்கும் நெருப்பாக இருக்கும்.

திலகப்பெரியம்மாவின்ர பெடியள் வெடிகொழுத்துறதில விண்ணர்கள்.

கிழுவந்தடியில 100 சரவெடியைக் கட்டிவிட்டு அடிநுனியில் இருக்கும் வெடியில் நெருப்பை வைத்தால் பட படவெண்டு வெடித்துக்கொண்டே போகும்.

அவையின்ர வீட்டில செல்வராசா எண்டு வேலைகாரப் பெடியன் ஒருவன் இருந்தவன்.

தான் பெரிய சாதனை வீரன் எண்டு நினைச்சுக் கொண்டு ஒரு அலுமான் வெடியை எடுத்து அதன் அடிகட்டையை இரண்டு விரலுக்குள்ள வச்சு வெடிப்பான். படுத்திருக்கும் ஊர் நாய்களுக்கு மேல்

அட்டை வாணத்தைக் கொழுத்திப்போடுவான். வள் வள் என்று பெருங்குரல் எடுத்து செல்வராசாவைத் திட்டிதீர்த்தவண்ணம் அவை ஓடி மறையும்.

எங்களூரைப் பொறுத்தவரையில் தீபாவளி வருசப்பிறப்பை விட தைப்பொங்கல் தான் விசேசம்.

வானம் பார்த்த பூமியாக விவசாயக்கிராமங்களே யாழ்ப்பாணத்தில் அதிகம் ஆக்கிரமிப்புச் செய்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் உள்ள தமிழுணர்வாளர்கள் தைபொங்கலைத்தான் தமிழரின் வருடப்பிறப்பாகக் கருதுகினம்.

பொங்கலுக்கு முதல் நாளே வெடிச்சத்தம் கிளம்பிவிடும். சின்னம்மாவின் மகன் துளசி அண்ணாவும், வெடிகளை வெடிக்க வைப்பதில் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து அவற்றை அமுல்படுத்துவதில் கெட்டிக்கார்.

பழைய மண்ணெண்ணை பரலுக்குள்ள வெடிச்சரத்தைப்போட்டு விட்டு கொள்ளிக்கட்டையைப் போடுவார். அமுக்கமான அந்த நெருக்கத்துக்குள்ள இருந்து அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அந்தத் சத்ததோட ஒப்பிடேக்க ஆமிக்கறன்ர ஷெல் பிச்சை வாங்கோணும்.

அட்டைவாணத்தைக் கொளுத்திவிட்டு நிலத்தில இலாவகமாகச் சுழற்றிவிடுவார்.

சுழன்று சுழன்று ஓடிக் கொண்டு வண்ணசக்கர ஒளியைக் கக்கிகொண்டே தொலைவில் போர் கருகி ஓய்ந்துவிடும்.

நிலத்தில் ஒரு டப்பாவை வைத்து விட்டு ஈர்க்கு வாணத்தை எடுத்து அதன் மேல் சாய்வாகவைத்து நெருப்பை அவர் பற்றவைக்கும் போது வானத்தில் சென்று வெடித்து பூத்தூவ வேண்டியாது தன் விதியை நொந்தபடி தரை மட்டத்தில் சாய்வாகச் சென்று வெடிக்கும்.

றேட்டில போற வாற சைக்கிள்காரற்றை திட்டு வசவுகள் தான் இதற்காக அவருக்குக்கிடைக்கும் கெளரவ விருதுகள். ஒருமுறை அவர் ஏறிந்த சக்கரவாணம் படுத்திருந்த ஒரு கிழவியின் மேல் விழுந்து " ஐயோ அம்மா" என்று அந்தக் கிழவி தைப்பொஙகல் முதல் நாள் இருட்டுகுள்ள ஓடினது இப்பவும் நினைவிருக்கு.

திருஞானசம்பந்தரின் கதையை “ஞானக்குழந்தை” என்ற பெயரில் படமா எடுத்து ரவுணில இருக்கும் லிடோ தியேட்டரில வந்த நேரம் அது. சம்பந்தருக்குக் கடவுள் வந்து காட்சி கொடுத்தது போல எனக்கும் முன்னால் கடவுள் வந்தா நான் நிறையப் பூந்திரியும், அட்டைவாணமும் கேட்பேன் என்று சின்னப் பிள்ளையா இருக்கேக்க நினைப்பேன்.

ஒருமுறை இலங்கை அரசாங்கம் வெடிகளை எங்கட பிரதேசத்திற்கு அனுப்பத் தடை செய்துவிட்டது. திலகமாமியின்ர பெடியன் சுரேஸ் ஒரு பழைய லொறியின்ர சீற்பாகம் ஒண்டை நீண்ட துண்டாக வெட்டி எனக்கொன்று அவனுகொன்றாக வைத்துக் கொண்டான். அதைத்தூக்கி நிலத்தில் அடிக்கும் போது படார் என்று வெடிபோல்ச் சத்தம் எழுப்பும். அதுதான் எங்களின் தற்காலிக வெடி.

இலங்கை அரசாங்கம் இந்ததடையை நிரந்தரம் ஆக்கியபோது வெடிவரத்து முற்றாக இல்லாமல் போனது.

ஒரு விளையாட்டுத்துப்பாக்கியை வாங்கி அதில் பொட்டுவெடி என்று சொல்லப்படும் வெடிறேலைப் பொறுத்தி வெடிப்போம். அந்தத் துப்பாக்கி பழுதானால் அந்த வெடி றோலை ஒரு கொங்கிறீற் கல் மேல் வத்துவிட்டு இன்னொரு கல்லால் ஓங்கி அடிக்கும் போது இதேபோல வெடியெழுப்பும்.

பொங்கல் நாள் வந்துவிட்டால் விடிய நாலு மணிக்கே எழுந்து ஆயத்தஙகளைத் தொடங்கிவிடுவோம்.

அரிசி இடிக்கும் உலக்கை, கோதுமை மாவை (சிலர் அரிசி மா, தினை மா பயன்படுத்துவார்கள்) எடுத்துக்கொண்டு நடு முற்றத்துக்குப் போய் கூட்டித் தெளித்த அந்த முற்றத்தில் உலக்கையை நீட்டிவைத்து மாவை அதன் மேல் தூவிச் சதுரவடிவப்பெட்டியாகக் கோலம் அமைப்போம். அதன் நடுவில் தான் பொங்கல் வேலை ஆரம்பிக்கும்.

சூரியன் வருவதற்கு முன்பு பொங்கிவிட்டுக் கணக்காச் சூரியன் வரும்போது வெடியைக் கொழுத்திப்போட்டு வாழையிலையில் கற்பூரத்தைக்காட்டிப் படைப்போம்.

முந்தின காலத்தில மண்பானைகள் தான் பொங்குவதற்கு அதிகம் பயன்படும். ஆனால் காலவோட்டத்தில அலுமினியப்பானை இந்தை ஓவர்ரேக் பண்ணிவிட்டுது.மண்பானையில் பொங்கும் போது பானை உடைந்தால் அபசகுணம் என்பார்கள்.

ஒருமுறை எங்கள் வீடுப் பானை பொங்கும் போது சிறிய ஒட்டை ஏற்பட்டு பொங்கும் போதே தண்ணீர் இலேசாகப் பெருகத் தொடங்கியது. வாழைபழத்தையும் கோதுமைமாவையும் பிசைந்து இலாவகமாக அந்த ஓட்டையை அடைத்துவிட்டார் அப்பா.

பானையில் இருந்து பால் பொங்கி வழிஞ்சாத் தான் நல்லது என்று அம்மம்மா அடிக்கடி சொல்லுவா.

காகஙளுக்கும் படையல் இருக்கும், ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவஙகள் விட்டால் தானே.

சரி சரி, நேரமாயிட்டுது, பொங்கலுக்கும் சாமான் வேண்ட வேணும்.

நான் நடக்கப் போறன்.

ஹிம், இந்த நாட்டில வெடிகொளுத்தாம, எலக்ரிக் குக்கரில தான் பொங்க வேணும்.

(இது நான் என்ர மனதுக்குள்ள சொல்லிகொள்வது)

கானாபிரபாவின் கட்டுரையினைப் படிக்கும் போது ஞாபகம் வருகிறதே,ஞாபகம் வருகிறதே ..........

சிறுவனாக நான் இருக்கும்போது, எனது வீட்டுத்தைப்பொங்களில் சக்கரைப்புக்கை,வெள்ளைப்புக்

அமெரிக்காவில் பொங்கல் விழா

pongalvizha3sq.png

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கட்டுரை கானாபிரபா. இப்பொழுது புலம் பெயர்ந்த நாட்டில் வசிக்கும் எங்களுக்கு, இனி எப்ப ஊரிலைப்போல பொங்கலைக் கொண்டாடி வாழமுடியுமோ?.

எங்க யாழ்கள உறுப்பினர் பலரைக் காணவில்லை. நீங்கள் ஆங்கிலேயர்களின் புதுவருடத்திற்கும், ஆரியர்களின் தீபாவளிக்கும் தான் பதில் அளிப்பீர்களோ?.

..பழைய நினைவுகளை திருப்பி வைக்க தூண்டியதிற்கு நன்றிகள் பல கானாபிரபா...

பொங்கலுக்கு முதல் கிழமையே அடுப்புக்கள் பக்கத்து வீட்டு பெரியம்மா செய்து எமது வீட்டுக்கும் தருவார்கள். பொங்கலன்று காலையில் கோலம் போட்டு கரும்பு கட்டி வெடி கொளுத்துவது என்றால் சந்தோசம்.. வெடி என்றால் பயம் தான். வீட்டிற்குள் இருந்து தான் வேடிக்கை பார்ப்பது தான் நம்ம வேலை. வீதியில் போகவும் பயமாய் இருக்கு. ஆனால் பொங்கலுக்கு முதல் இரவு அப்பா சில வெடிகள் வேண்டித்தருவார். வீட்டிற்குள்ளே கொளுத்துவது. பெயர்கள் ஞாபகம் இல்லை. அதுவும் மேசைக்கு மேல் ஏறி தான் பார்ப்பது. ஒரு முறை அண்ணா ஒரு பேணியில் வைத்து கொளுத்தின வெடி பேணி வந்து பொங்கல் பாணைக்கு வந்து விழுந்தது. நல்ல ஏச்சு வேண்டினார்.. பொங்கலுக்கு அடுத்த நாள் பலரை கைகளில் கட்டுக்களுடன் காணலாம். பொங்கல் வெடி கொளுத்தி விரல்களில் காயங்களுடன் திரிவார்கள்.

இந்த வாழ்க்கை நமக்கு திரும்பி கிடைக்குமா? திரும்பி கிடைத்தாலும் முன்பு இருந்த சந்தோசம் வருமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர் திருநாளை

"மீள் / நீள்" நினைவுகளோடு

கட்டுரையாய்த் தந்தமைக்கு நன்றிகள் ....

"...ம்......".....

அது மட்டும்தான்

எங்கள் நிலைமைகளினூடு

சொல்ல முடிகிறது...

"மீன்டும் தொடங்கும் மிடுக்கு"

(நன்றி-மகாகவி)

ஆக

எமது வாழ்வு

எமக்குக் கிடைக்க

வேண்டுவோம்;

செயலாற்றுவோம்....

  • தொடங்கியவர்

நன்றி அரவிந்தன், கந்தப்பு, ரமா, மேகநாதன்.

ரமா குறிப்பிட்ட பொங்கல் அடுப்பு செய்யும் விதத்தையும் மூலக் கட்டுரையில் தற்போது எழுதி இணைத்துள்ளேன்.

பார்க்க

http://kanapraba.blogspot.com/

பழையா நினவுகளை மீட்டியமைக்கு நன்றி கானப்பிரபா.

ம்ம் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முதலே அடுப்பு செய்து காய வைச்சு வளவு எல்லாம் கூட்டி பெருக்கி. பொங்கல் அன்று முற்றம் எல்லாம் மெழுகி கோலம் போட்டு வெடிகொளுத்தி கொண்டாடும் பொங்கலை எப்படி மறக்க முடியும். பொங்கல் பொங்கி வரும் போது

"பொங்கலோ பொங்கல்

பொங்கல் இன்று பொங்கல்

எங்கள் வீட்டு பொங்கல்

எங்கும் ஒரே பொங்கல்"

என்று பாடி பொங்கல் கொண்டாடியதை எப்படி மறக்க முடியும்.எனக்கு வெடி கொளுத்த சரியான பயம் அதால நான் வெடிகொளுத்துற பக்கம் போறது இல்லை. ஒரு பொங்கலுக்கு இப்படித்தான் மாமா வெடி கொளுத்தி போட்டார் அது வெடிக்க இல்லை. அப்ப ஏன் வெடிக்க இல்லை என்று கையால போய் தொட்டார். அது வெடித்து கையில் 3 விரல்கள் அரைவாசியோடை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் இன்று நம் இளைஞர்களால் Sothall திரையரங்கில் வெடிகொளுத்தி திரையை எரித்து அட்டகாசமாக பொங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது...

  • தொடங்கியவர்

நன்றி ரசிகை மற்றும் மீரா

  • கருத்துக்கள உறவுகள்

பழையா நினவுகளை மீட்டியமைக்கு நன்றி கானப்பிரபா.

ம்ம் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முதலே அடுப்பு செய்து காய வைச்சு வளவு எல்லாம் கூட்டி பெருக்கி. பொங்கல் அன்று முற்றம் எல்லாம் மெழுகி கோலம் போட்டு வெடிகொளுத்தி கொண்டாடும் பொங்கலை எப்படி மறக்க முடியும். பொங்கல் பொங்கி வரும் போது

"பொங்கலோ பொங்கல்

பொங்கல் இன்று பொங்கல்

எங்கள் வீட்டு பொங்கல்

எங்கும் ஒரே பொங்கல்"

என்று பாடி பொங்கல் கொண்டாடியதை எப்படி மறக்க முடியும்.எனக்கு வெடி கொளுத்த சரியான பயம் அதால நான் வெடிகொளுத்துற பக்கம் போறது இல்லை. ஒரு பொங்கலுக்கு இப்படித்தான் மாமா வெடி கொளுத்தி போட்டார் அது வெடிக்க இல்லை. அப்ப ஏன் வெடிக்க இல்லை என்று கையால போய் தொட்டார். அது வெடித்து கையில் 3 விரல்கள் அரைவாசியோடை இல்லை.

அதான் இப்ப யாழகளத்தில வந்து கொழுத்தி போடுறிங்களாக்கும்... :o:o

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா அண்ணா நன்னா இருக்கு....வாழ்த்துக்கள்... :o:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.