Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதிர்காமர் எதிர்பார்த்திருப்பார்: பொக்ஸ்

Featured Replies

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டுமென கதிர்காமர் எதிர்பார்த்திருப்பார்: பொக்ஸ்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இப்போது இருந்திருந்தால், யுத்தத்தின் இறுதியின் போதான இருதரப்பினரதும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்திற்கொண்டு, அவை முழுமையாக விசாரிக்கப்படவும் அவற்றுக்குப் பொறுப்பான தனி நபர்கள் எவருமிருப்பின் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டுமெனவும் எதிர்பார்திருப்பார் என பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியம் பொக்ஸ் இவ்வாறு கூறினார்.

தனக்கும் லக்ஷ்மன் கதிர்காமருக்கும் இடையில் நிலவிய நெருக்கத்தை சுட்டிக்காட்டி அவர் உரையை ஆரம்பித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

16 வருடங்களுக்குமுன் நான் லக்ஷ்மன் கதிர்காமரை முதன்முதலில் சந்தித்தேன். 1995 ஆம் ஆண்டு நான் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சில் பிரதிச் செயலராக இருந்தேன். அவர் (கதிர்காமர்) இங்கு இலங்கையில் வெளிவிவகார அமைச்சராக இருந்தார். திறமையான சட்டத்தரணியாக, விளையாட்டு வீரராக, அரசியல்வாதியாக விளங்கிய அவருக்கு தவலறிந்த அபிப்பிராயம் அல்லது அது தொடர்பான சுவாரஷ்யமான கதையொன்று இல்லாத விடயமென எதுவும் இல்லை.

நாம் நெருங்கிப் பணியாற்றிய காலங்களில் நெருக்கமான சகாக்களாகவும் நல்ல நண்பர்களாகவும் மாறினோம். லக்ஷ்மன் கதிர்காமர், சாதாரண இலங்கையர்கள் மீது மேற்கொண்ட வன்முறைகளை உலகளவில் தீவிரமாக கண்டித்தவராக நினைவுகூரப்பட்டார். ஒரு தமிழர் என்ற வகையில் உள்நாட்டு அரசியல் பரிணாமத்தின் சிக்கல்தன்மையை மிக நன்றாக புரிந்துகொண்டிருந்தார்.

ஒருமுறை, பெரும்பான்மையாக சிங்கவர்களைக் கொண்ட அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக பதவி வகிப்பதன் மூலம் அவர் தமிழர்களுக்கு துரோகியா என பிபிசியினால் கேட்கப்பட்டார். அப்போது இலங்கையிலுள்ள மக்கள் முதலில் இலங்கையர்கள். அதன்பின் பிறப்பினால் வந்த எமது சொந்த இனம், மதம் என்பன உள்ளன அவர் பதிலளித்தார்.

பொதுச் சேவையை தெரிவு செய்வதிலுள்ள தனிப்பட்ட ஆபத்தை அவர் முழுமையாக புரிந்துகொண்டிருந்தார். அந்த உண்மையான ஆபத்து குறித்து நாம் அடிக்கடி பேசியுள்ளோம். ஆனால் கதிர்காமரைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர் தான் தெரிவு செய்த பாதையை இலகுவில் மாற்றிககொள்ளாத ஒரு மனிதராக அவரை நினைவுகூருவர்.

நாம் இணைந்து பணியாற்றிய ஆரம்பத்தில், ஹோட்டல்களில் நடந்த இரகசிய சந்திப்புகள் நினைவுக்கு வருகின்றன. இடமும் நேரமும் கடைசி நேரத்தில் மாற்றப்படும். எப்போதும் முடிவற்ற கடலாக மெய்ப்பாதுகாவலர்கள் இருப்பார்கள். அந்தளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. எமது நோக்கம் குறித்து லண்டனிலும் கொழும்பிலும் பரவலான சந்தேகம் நிலவியது. உலகின் மறுபக்கத்திலுள்ள ஒரு முன்னாள் காலனியான ஒரு தீவின் மீது பிரித்தானிய கனிஷ்ட அமைச்சர் ஒருவர் எதற்காக இந்தளவு அக்கறை கொள்கிறார்?, அவரின் உண்மையான நிகழ்ச்சி நிரல் என்ன? வெளிவிவகார அமைச்சரின் உண்மையான நோக்கம் என்ன என்பன போன்ற சந்தேகங்கள் நிலவின.

இந்நாட்டின் சாதாரண மக்களின் நலன்கள், பாதுகாப்பு, மற்றும் எதிர்காலம் குறித்தவைதான் அவை என்பதை ஒருவரும் நம்பத் தயாராக இருக்கவில்லை. ஒருமுறை அருகிலுள்ள விமான நிலையமொன்றுக்கு வருமாறும் குறுகிய அறிவித்தலில் கொழும்புக்கு வரத் தயாராக இருக்குமாறும் என்னை லக்ஷ்மன் கோரினார். நான் அழைப்பு எதுவும் வராது, நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்று தீர்மானிப்பதற்கு முன் 5 நாட்களை பாங்கொக்கில் கழித்தேன். அந்த காலத்தில் அந்தளவு ஏமாற்றங்களை நாம் அனுபவித்தோம்.

1996-1997 காலப்பகுதியில் நாம் பொக்ஸ் உடன்படிக்கை என்று அறியப்பட்ட உடன்படிக்கைக்காக நாம் அயராத பணியாற்றினோம். அவரின் இணைப் பங்களிப்புக்காக அதை பொக்ஸ்/ கதிர்காமர் உடன்படிக்கை என்பது மேலும் பொருத்தமாக இருக்கும். ஆனால் அவர், அந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படுவதை பார்ப்பது மாத்திரம் தனக்குப் போதும் என்று கருதக்கூடிய மனிதர்.

எல்.ரி.ரி.ஈ.யுடனான எந்த தொடர்பு குறித்தும் எதிர்க்கட்சிக்கு அறிவிப்பதற்கு அரசாங்கம் உறுதியளித்தது. பதிலுக்கு எதிர்க்கட்சி அதை முழு நம்பிக்கையுடன் கையாளும் என உறுதியளித்தது. எல்;.ரி.ரி.ஈ. வன்முறைகளைக் கைவிட்டு, நாட்டின் பிரிவிணைக்கு ஒரு அரசியல் தீர்வு காண முற்பட்டால் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை இது ஏற்படுத்தும் என லக்ஷ்மனும் நானும் உண்மையாக நம்பினோம்.

ரணில் விக்கிரமசிங்க இந்த செயன்முறைக்கு ஆதரவளித்தார். 1997 பொதுத்தேர்தலில் போராடுவதற்காக நான் பிரிட்டனுக்கு விமானமேறிய தினத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அதில் கையெழுத்திட்டார். அந்ததத் தேர்தலில் நாம் தோற்றுவிடுவோம் என்று அவ்வேளை தெரிந்திருந்தது. அப்படியிருந்தும் நாம் அதை (சமாதான செயன்முறை) செய்தோம். அதன்பின் வந்த தொழிற்கட்சி அரசாங்கம் இல்கை விடயத்தில் அல்லது நாம் ஆரம்பித்த அரசியல் செயன்முறையில் சொற்ப ஆர்வத்தையே காட்டியது.

பின்னர் அந்த ஒப்பந்தம் காற்றில் பறந்தது. மேலும் வன்முறைககள், அவலங்கள், மேலும் மரணங்கள் கொண்ட சக்கரம் சுழன்றது. அதன்பின் நான் மீண்டும் இலங்கையில் காலடி வைக்க மற்றொரு தசாப்த காலம் சென்றது. அந்த தசாப்தம் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக்கூட மிக வலியை ஏற்படுத்துவதாகும்.

மீண்டும் நான் 2007 நவம்பரில் இலங்கைக்கு வந்து பல பாகங்களுக்கு விஜயம் செய்தேன். பல அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்தேன். அரசியல் சூழல் மாறியிருந்தது. ஐ.தே.கவின் பெரும் எண்ணிக்கையானோர் மத்திய அரசாங்கத்தில் இணைந்திருந்தனர். அத்துடன், ஜே.வி.பி. அதன் ஆரம்ப நிலையிலிருந்து முன்னேறியிருந்தது.<

இந்த மாற்றங்களை லக்ஷ்மன் கதிர்காமர் எப்படி வரவேற்றிருப்பார்?

அவர் அனைத்து பிரஜைகளும் அவர்களின் இன, மத வேறுபாடின்றி சமத்துவமாக மதிக்கப்படும் ஐக்கியப்பட்ட இலங்கை தொடர்பான எதிர்காலம் குறி;த்து நம்பிக்கை கொண்டிருந்தார். அவர், அரசியல் சீர்திருத்தம், ஊடகச் சுதந்திரத்துடன் கூடிய சுயாதநீ நீதிச்சேவை முறைமை குறித்து அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். உலகின் மிக கொடிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான எல்.ரி.ரி.ஈ. தோற்கடிக்கப்பட்டதை சந்தேகத்திற்கிடமின்றி அவர் வரவேற்றிருப்பார். அந்த அமைப்பு, சிறார்களை சிப்பாய்களாக அல்லது தற்கொலை குண்டுதாரிகளாகவும் மாற்றும், வன்முறையையும் கொலையையும் நியாயபூர்வமான கருவியாகக் கருதும் ஒரு அமைப்பாகும். ஆனால் சட்டத்தின் முன்னாலான பொறுப்புடைமைக் கொள்கையில் அவர் உறுதிகொண்டவர்.

அவர் என்னைப் போலவே, யுத்தத்தின் இறுதியின்போதான இருதரப்பினரதும் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல் குற்றச்சாட்டுகளை தீவிரமாக கருத்திற்கொண்டு அவை முழுமையாக விசாரிக்கப்படவும் அவற்றுக்குப் பொறுப்பான தனி நபர்கள் எவருமிருப்பின் சட்டத்தின்முன் கொணரப்பட வேண்டுமெனவும் எதிர்பார்திருப்பார். அவர் என்னைப் போலவே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அனைத்து சாட்சியங்களையும் ஆராய்ந்து அரசாங்கத்துக்கு நம்பகமான இறுதி சிபாரிசுகளை செய்யும் என எதிர்பார்த்திருப்பார். இச்சிபாரிசுகள் பொறுப்புடைமை செயன்முறையை பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவதுடன் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் உதவும்.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/24483-2011-07-10-00-25-40.html

  • கருத்துக்கள உறவுகள்
:lol: கதிர்காமர் இருந்திருந்தால் இன்று நடந்துவரும் யுத்தக்குற்றங்களுக்கான வெளிநாட்டு அழுத்தங்கள் யாவற்றையும் சாதுரியமாக முறியடித்திருப்பார். அவ்வளவுதான், சந்திரிக்காவின் சமாதான யுத்தத்தை உலகெங்கும் ஏற்றுமதி செய்த ஒரு கோடரிக்காம்பா மகிந்தவின் யுத்தக் குற்றங்களை வெளிக்கொணரப்போகிறதென்று எதிர்பார்க்கிறார் லியாம் பொக்ஸ் ?? நல்ல வேடிக்கைதான் போங்கள் !!
  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமருக்கும், லியாம் பொக்ஸ் அவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு!

இருவரும் எலும்புத் துண்டுகளுக்காக விலை போய் விட்டவர்கள்!

ஒரே மனம் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் சொறிந்து கொள்வதில் என்ன தவறு?

  • தொடங்கியவர்

- கதிர்காமர் ஒரு நல்ல 'இலங்கையர்', ஆனால் பொக்ஸ் அவர்கள் உட்பட பலரும் அவரை ஒரு 'தமிழர்' எனவே பார்க்கிறார்கள். அந்த கோணத்தில் எமது பிரச்சாரம் காணாது.

- மொத்தத்தில் சிங்கள உள்நோக்கத்தை புரியாதவராக இல்லை புரிந்தும் தெரியாதவராக பொக்ஸ் உள்ளார் இல்லை நடிக்கின்றார்.

- இருந்தும் போர்குற்ற விசாரணைகளில் கண்ணும் கருத்தாக உள்ளது போல பேசியுள்ளார்

நிச்சயம் சிங்களம் இவரை தாம் போர்குற்ற விசாரணைகளில் இருந்து தப்பிக்க வழிகள் கேட்டிருக்கும். உண்மையில் பூட்டிய அறையுள் இவர் மகிந்தருக்கு என்ன சொல்லியிருப்பார் என்பதே மூடுமந்திரம்!

அதேவேளை சிங்களம் இவருடன் தனது 'நல்லிணக்க அறிக்கையை' இரகசியமாக சமர்ப்பித்து அதை அங்கீகரிக்க ஆலோசனையும் கேட்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமருக்கும், லியாம் பொக்ஸ் அவர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு!

இருவரும் எலும்புத் துண்டுகளுக்காக விலை போய் விட்டவர்கள்!

ஒரே மனம் கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் சொறிந்து கொள்வதில் என்ன தவறு?

இருவரும் கட்டாய ஆட்சேர்ப்பில் அரசுடன் சேர்க்கப்பட்டவர்கள் :lol:

  • தொடங்கியவர்

Idiotic British Defence Secretary Liam Fox believes that Racist Rajapakshe government will implement a ‘Political Package’

Idiotic British Defence Secretary Liam Fox believes that Racist Rajapakshe government will implement a ‘Political Package’. The Sri Lankan President promised a ’13+ Amendment’ once the LTTE is killed and the west including the British Polititians turned away when more than 40,000 Tamil Civilians and LTTE leaders who surrendered with white flag after UN negotiated a surrender deal with SL government were killed by Sri Lankan forces.

But after two years of killing of more than 40,000 Tamil Civilians now the Racist Sinhala government will not even implement the current constitution in full, and are continuing to discriminate and treat the Tamils as second class people of this island.

Fox added that he is eagerly waiting for the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) final report in November adding that the recommendations made by the final report will play a key role in strengthening accountability, peace and reconciliation as Sri Lanka moves forward.

He added that true peace needs freedom from fear, freedom of expression including a free press and broadcast media and the freedom to dissent within the law. “It requires an inclusive political solution that addresses the underlying causes of conflict and takes into account the legitimate grievances and aspirations of all the people of this island.” Fox added that the above mentioned principals need to be upheld by today’s politicians to achieve the aspirations of Lakshman Kadirgamar. “The aspirations he held for Sri Lanka went well beyond the domestic agenda, which is all too often the focus of international attention. He wanted his country to play a full role in regional and global politics.”

http://www.uktamilnews.com/index.php/archives/33707

இங்கிலாந்து காரன் ஊழல்,விலை போதல் என்பவற்றில் சளைத்தவர்கள் இல்லை.

அதுதான் நீயுஸ் வேல்ட் பேப்பரும். கள்ள வேலை ,ஒட்டு கேட்டல்

என்பவற்றால் மூடும் அளவுக்கு போய் விட்டார்கள்.

பொக்ஸ் ம் அதுதான்.

காசு வாங்கி பேசுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தம் இவர் இன்னும் கதிர்காமரிலேயே நிற்கிறார்

இவர் எதைத்தருவார் தமிழருக்கு என்று புரிகிறது. :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

கதிர்காமரைக் கொன்றது யார்? :unsure:

ஆக மொத்தம் இவர் இன்னும் கதிர்காமரிலேயே நிற்கிறார்

இவர் எதைத்தருவார் தமிழருக்கு என்று புரிகிறது. :(:(:(

இவர் சங்க காலப்பெரும் புலவர் கதிகாமர் புகழ் பாடுவதற்கு காரணம் இந்தமுறை பசை ஒட்டவில்லைப் போலிருக்கு. பிளேக்கும் கதிர்காமருடன் நல்ல ஒட்டு. கதியகாமர் தமிழருக்கிதிரான பிரசாரத்திற்கு கொடுத்த பணத்தில் இப்படி தனி நட்புகள் வளர்ப்பதை ராஜா(பட்சா) கூட்டம் அவதானித்திருப்பார்கள் போல்லுல்லது. அம்மா போனவுடன் அவர்கள் காய் முற்றமுன் பிடுங்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை பயங்கரவாதிகளாக மேற்கு நாடுகளுக்கு சித்தரித்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் கதிர்காமர்.சந்திரிக்கா ஒருவரையும் நம்பாமல் இவரையே வெளிநாட்டமைச்சர் பதவி கொடுக்குமளவுக்கு சிங்கள விசுவாசம் மிக்க நாயாக செயற்பட்டவர்.அவரைப்பற்றி ஒரு பிரிட்டிஸ் பிரஜை தமிழ் மக்களுக்கு பாடமெடுப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

லியம் பாக்ஸ் என்பவன் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி. முன்னர் ஐ. தே. க. இவனை காசுகொடுத்து சில வேலைகளுக்கு அமர்த்தியிருந்தது.

இந்தியாவில் ஒரு ராம் போல், இங்கிலாந்தில் லியம் பாக்ஸ். பணம், பொருள், போதை, பெண்களைப் பெற்றுக்கொண்டு சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு இவர்கள் செய்யும் ஊழியம் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் தமது முன்னைய பதவியை வைத்து எங்காவது நடுநிலையாளர்கள் வேடத்தில் உட்புகுந்து குழப்ப முயற்சிப்பார்கள்.

இவ்வாறான கைகூலிகள் நடுநிலையாக பேசமாட்டார்கள்.

கதிர்காமரைக் கொன்றது யார்? :unsure:

அந்தக் கதிர்காமரைக் கொன்றது சிங்கள - அயல் நாட்டு அரச பயங்கரவாதிகள் தான் என்பது இந்த லியம் பாக்ஸ் உக்கு தெரியமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.