Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூரோ தாக்குப்பிடிக்குமா?

Featured Replies

  • தொடங்கியவர்

கிரேக்க நாடு இந்த வார இறுதியில் தனது கடனில் சறுக்குமா??

இந்த வார இறுதியில் ஜெர்மனி உட்பட்ட நாடுகள் கிரேக்க நாட்டை மேலும் பண உதவிகள் செய்யாமல் கையை விடலாம் என சிலர் எதிர்வு கூறுகின்றனர். உலக சந்தைகள் இதை எதிர்பார்த்து வெள்ளிக்கிழமை சரிந்தன.

கனடாவின் நிதி அமைச்சர் கிரேக்க நாட்டை யூரோ குழுமத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றார். கிரேக்க நாடு செய்யும் செலவு குறைப்பு காணாது என கூறினார்.

Greek official angrily dismisses default rumor as country prepares for mass protests

http://www.washingtonpost.com/business/markets/greek-pm-papandreou-heckled-as-anti-austerity-protesters-plan-demonstrations/2011/09/09/gIQA14PZEK_story.html

  • Replies 117
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கனடா நிதி அமைச்சருக்கு, விளங்கினது ஐரோப்பாகாரனுக்கு விளங்கேல்லை.

கிரேக்கன் வைன், அடிச்சு... கூத்தடிப்பான்...,

அதுக்கு இப்ப... காசு காணாதாம்.

போடா..., போடா.... புண்ணாக்கு, போடாத தப்புக் கணக்கூ....

  • தொடங்கியவர்

புளூம்பேர்க் செய்தி நிறுவம் இதுவரை கிரீசை ஐரோப்பிய யூனியனில் இறுக்கமாக வைத்திருந்த ஜேர்மனி கையை விட உத்தேசித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Germany Readies Surrender Over Greece

After almost two years of fighting to contain the region’s debt crisis and providing the biggest share of three European bailouts, German Chancellor Angela Merkel is laying the groundwork for what markets say is almost a sure thing: a Greek default.

“It feels like Germany is preparing itself for a debt default,” Jacques Cailloux, chief European economist at Royal Bank of Scotland Group Plc in London, said in an interview. “Fatigue is setting in. Germany could be a first mover or other countries could be preparing too.”

Officials in Merkel’s government are debating how to shore up German banks in the event that Greece fails to meet the budget-cutting terms of its aid package and is unable to get a bailout-loan payment, three coalition officials said Sept. 9. The move capped a week of escalating German threats that Greece won’t get the money unless it meets fiscal targets, and as investors raised bets on a default.

http://finance.yahoo.com/news/Germany-Readies-Surrender-bloomberg-2533229394.html?x=0&sec=topStories&pos=1&asset=&ccode=

  • தொடங்கியவர்

- யூரோ வலயத்தில் இருந்து வெளியேறுவதை விட கிரேக்க நாடு தனது கடனை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்படுவது நல்லது என கூறப்படுகின்றது

- கிரேக்க நாட்டின் கடன் பத்திரங்கள் 98 வீத பெறுமதியை இழந்துள்ளன. அதாவது முதலீட்டாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதை காட்டுகின்றது.

- 2008 ஆம் ஆண்டில் லீமன் பிரதர்ஸ் Lehman Brothers வங்கியை காப்பாற்றாமல் விட்டு அது பெரிய பிரச்சனையாகியது போன்று இதுவும் ஆகலாம் என ஒரு சாரார் கருத்துதெரிவிக்கின்றார்கள்.

Greek default preferable to quitting the euro

http://www.theglobeandmail.com/globe-investor/investment-ideas/breaking-views/greek-default-preferable-to-quitting-the-euro/article2162949/

  • தொடங்கியவர்

Societe Generale and Credit Agricole ஆகிய இரண்டு பிரெஞ்சு வங்கிகள் இன்று மூடி என்ற நிறுவனத்தால் தரம்குறைக்கப்பட்டது. இது தொடரும் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

Credit Agricole, Societe Generale Ratings Cut by Moody’s

http://www.businessw...by-moody-s.html

இத்தாலியின் பண நெருக்கடியை சமாளிக்க அது சீனாவை நாடியுள்ளது. கையில் மூன்று த்ரிலியங்கள் டாலரை வைத்திருக்கும் சீனா நிபந்தைனைகளை விதிக்கின்றது.

Italy, China didn't discuss bond buying-source

http://www.reuters.c...E78C0GK20110913

Edited by akootha

  • தொடங்கியவர்

நான்கு நாடுகளின் மத்திய வங்கிகள் யூரோ வங்கிகளின் உதவிக்கு விரைந்தன

அமெரிக்க, இங்கிலாந்து, ஜப்பான், சுவிஸ் நாட்டு மத்திய வங்கிகள் யூரோ நாட்டு மத்தியவங்கிகளுக்கு பணம் வழங்கின. இதன் மூலம் சில காலத்திற்கு யூரோ நாட்டு வங்கிகளின் பணப்பிரச்சனை தள்ளிப்போடப்பட்டுள்ளது, ஆனால் முடியவில்லை.

Major central banks come to Europe’s aid

Japan and the Swiss National Bank made similar announcements Thursday as markets opened in North America. All four central banks said in statements on their websites that they were working in co-operation with the U.S. Federal Reserve.

http://www.theglobeandmail.com/report-on-business/international-news/major-central-banks-come-to-europes-aid/article2167031/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்பட்டு பஞ்சப்பரதேசி சோம்பேறியளை மடியிக்கை வைச்சுப்போட்டு இப்ப நல்லாய் யோசிக்கினம்......

  • தொடங்கியவர்

(புலம்பெயர்) தமிழர்கள் கற்க வேண்டிய பாடம் - பணத்தை சேமியுங்கள், உழையுங்கள், படியுங்கள். இலவச பணம் பெறும் இந்த வங்கிகள் இந்த வருட இறுதியில் பாரிய நெருக்கடியை சந்திக்கலாம்.

இதையும் பாருங்கள்:

250 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து தமிழன் உழைப்பதற்காக புறப்பட்டான். பர்மாவில் அவன் அகதியாக்கப்பட்டான், இலங்கை மலைநாட்டில் வாக்குரிமை பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டான். ஆனால் இலங்கையில் இருந்து அகதியாக புறப்பட்ட தமிழன் 25 வருடங்களில் உழைப்பாளியாக மாறினான். இன்று டென்மார்க்கின் மிகச்சிறந்த உழைக்கும் வர்க்கம் என்று புகழ்பெற்று, நமக்கு முந்தி வந்த பாகிஸ்தானியர், துருக்கியரை முந்தி 25 வருடங்களில் டேனிஸ்காரருக்கு அடுத்த இனமாக இரண்டாவது இடத்தை எட்டித் தொட்டான் ஈழத் தமிழன். எப்படி..?

அன்று தமிழ் பெண்கள் கழுத்தில் இருந்த 10 பவுண் தாலியை பிடுங்குவதற்காக சிங்கள இனவாதம் யூலைக்கலவரம் நடாத்தியது. இன்று சங்கிலியன் சிலையை உடைத்துவிட்டு இரண்டு பவுண் சங்கிலியை பிடுங்கினாலே போதுமென கிறீஸ் பூதத்தை ஏவுகிறது. ஆனால் இன்று 50 முதல் 100 பவுணுக்கு தமிழர்கள் தாலிக்கொடி போடும் காலம் வந்துவிட்டது. இது தப்பல்ல மிகப்பெரிய சாதனை என்று கூறுகிறார்கள் டேனிஸ் மக்கள்.

ஏன்..?

இன்று உலகம் பூராவும் உள்ள புலம் பெயர் தமிழர்கள் சராசரி வீட்டுக்கு 100 புவண்களையாவது வைத்திருக்கிறார்கள் என்று கணிப்புக்கள் கூறுகின்றன. இன்று அமெரிக்க டாலர் ஐந்து குறோணருக்கு கீழே போய்விட்டது. அமேயர் வங்கி படுத்துவிட்டது. டென்டென்ஸ்க வங்கி ஆட்டம் கண்டுவிட்டது. உலகில் எத்தனையோ வங்கிகள் வங்குரோத்தாகிவிட்டது. அமெரிக்க பொருளாதாரத்தையே நிமிர்த்த முடியாமல் அதிபர் ஒபாமா தள்ளாடுகிறார்.

http://www.alaikal.com/news/?p=82274

Edited by akootha

  • தொடங்கியவர்

இத்தாலியின் கடன்பெறு தகமை குறைக்கப்பட்டதை அந்த நாடு குறைகூறியது.

இத்தாலி அரசின் கடன்பெறு தகமை நிலைமை குறைக்கப்பட்டமை, அரசியல் காரணங்களின் அடிப்படையில் நடைபெற்றதென அந்நாட்டின் அரசு குறை கூறியது.

Standard & Poor's நிறுவனம் இத்தாலியின் கடன்பெறு தகமையை நேற்றுக் குறைத்ததைத் தொடர்ந்து, இத்தாலி அரசு இந்தக் கருத்தை வெளியிட்டது.

உண்மையான பொருளாதார நிலைமையைவிட, ஊடகங்களில் வெளியான செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதென இத்தாலியின் அரசு குறை கூறியது.

இத்தாலியின் அரசு, அரச செலவினத்தைக் கட்டுப்படுத்துவதிலும், நிதி நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதிலும், சிரமத்தை எதிர்கொள்ளுமென Standard & Poor's குறிப்பிடுகிறது.

ஸ்பெய்ன், அயர்லாந்து, கிறேக்கம், போர்த்துக்கல், சைப்பிறஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளின் கடன்பெறு தகமைகளும் இந்த ஆண்டு குறைக்கப்பட்டன.

ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப் பிரச்சினை பரவும் ஆபத்துக் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9318

  • தொடங்கியவர்

யூரோ நாணயத்தை இல்லாதொழிக்க கிரேக்கத்தில் வாக்கெடுப்பு

பொருளாதார வங்குரோத்தடைந்த கிரேக்கம் தனது நாட்டில் அமலில் உள்ள யூரோ நாணயத்தை இல்லாதொழிக்கும் புதிய வாக்கெடுப்பை நடாத்தலாம் என்று கிரேக்கத்தில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிரேக்க ஆட்சித்தலைவர் ஜோர்ஜ் பபன்டரு மேற்கண்ட முடிவுக்கு வந்திருப்பதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது. யூரோ நாணயத்தால் தமது நாட்டின் பொருளாதார பின்னடைவை சீர் செய்ய முடியாத நிலையில் சொந்த நாணயத்தையே மறுபடியும் அமல் செய்ய கிரேக்கம் எண்ணியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கடன் கொடுப்பதற்கு விதித்துள்ள தடைகள் கிரேக்கத்தில் பாரிய எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இந்த நெருக்கடியையும், பொருளாதார நெருக்கடியையும் ஒன்றாக சமாளிப்பதானால் கிரேக்கத்திற்கு வேறு வழியில்லை என்றும் அது சுட்டிக் காட்டியுள்ளது.

அதேவேளை அமெரிக்க தனது கடன் பத்திரங்களின் பெறுமதிகளை வீழ்ச்சியடைய செய்தது போல இத்தாலியும் நேற்று வீழ்ச்சியடைய செய்தது. டென்மார்க்கைவிட ஐந்து மடங்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது இத்தாலியின் கடன் பெறுமதி பத்திரங்களின் நிலை என்று யூஸ்க் வங்கி பொருளியல் நிபுணர் ரீனா வன்த பிரண்ட்சன் தெரிவித்தார். தற்போது இத்தாலியின் தரம் — போனது பாரதூரமான பின்னடைவு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.alaikal.com/news/?p=82926

  • தொடங்கியவர்

கிறேக்க நாட்டின் கடன் நிலை குறித்து ஆராய்வதற்கு அனைத்துலக நிதி அதிகாரிகள் அங்கு செல்கிறார்கள்.

கிறேக்கம், அதன் கடன்களைக் குறைப்பதில் பெற்றுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஆணையகம், ஐரோப்பிய மத்திய வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றின் அதிகாரிகள் இன்று அந்நாட்டிற்குச் செல்கிறார்கள்.

பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் அந்நாட்டு அரசுக்குத் தேவையான மேலதிக கடனை வழங்குவதற்கு இந்த அதிகாரிகளின் ஆய்வின் முடிவு முக்கியமானதாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு, கிறேக்கத்திற்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்ட 110 பில்லியன் யூறோ கடனில் இருந்து, அடுத்த கட்டமான எட்டு பில்லியன் யூறோவை வழங்குவதா என்பது குறித்து நாளை அந்த அதிகாரிகள் கிறேக்க அதிகாரிகளுடன் பேச்சுக்களை ஆரம்பிப்பார்கள்.

கிறேக்கத்திற்கு மேலதிக உதவிகளை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இரண்டு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

கிறேக்கத்திற்குக் கடன் வழங்கிய தனியார் முதலீட்டாளர்களும், அவர்கள் வழங்கிய கடன்களின் ஒரு பகுதியை அறவிட முடியாத கடனாக அறிவிக்கவேண்டுமென சில நாடுகள் கருதுவதாகத் தெரியவருகிறது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9423

  • தொடங்கியவர்

நெருக்கடியில் உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு உதவி வழங்கும் நிதியம் ஒன்றுக்கு ஜேர்மனியின் நாடாளுமன்றம் அங்கிகாரம்

ஐரோப்பிய நிதி நெருக்கயைத் தணிப்பதற்கு உதவி வழங்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ள நிதியத்திற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்டமூலத்தினை ஜேர்மனியின் நாடாளுமன்றம் அங்கிகரித்தது.

ஜேர்மனியின் சான்சலர் அங்கெலா மேர்க்கலின் அதிகாரத்தினை இந்த முடிவு உறுதிப்படுத்தியுள்ளது.

ஜேர்மனியின் நாடாளுமன்றத்தின் மேற்சபை, இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியில் உள்ள கிறேக்கம் போன்ற யூரோ வலய நாடுகளுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதைப் பல ஜேர்மனியர்கள் எதிர்க்கிறார்கள்.

மீட்பு நிதியை, 440 பில்லியன் யூரோ என்ற அளவுக்கு அதிகரிப்பதற்கு, பதினேழு நாடுகளும் அங்கிகாரம் வழங்கவேண்டும். இதுவரை பத்து நாடுகள் அதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளன.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9455

  • கருத்துக்கள உறவுகள்

(புலம்பெயர்) தமிழர்கள் கற்க வேண்டிய பாடம் - பணத்தை சேமியுங்கள், உழையுங்கள், படியுங்கள். இலவச பணம் பெறும் இந்த வங்கிகள் இந்த வருட இறுதியில் பாரிய நெருக்கடியை சந்திக்கலாம்.

இதையும் பாருங்கள்:

250 வருடங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து தமிழன் உழைப்பதற்காக புறப்பட்டான். பர்மாவில் அவன் அகதியாக்கப்பட்டான், இலங்கை மலைநாட்டில் வாக்குரிமை பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டான். ஆனால் இலங்கையில் இருந்து அகதியாக புறப்பட்ட தமிழன் 25 வருடங்களில் உழைப்பாளியாக மாறினான். இன்று டென்மார்க்கின் மிகச்சிறந்த உழைக்கும் வர்க்கம் என்று புகழ்பெற்று, நமக்கு முந்தி வந்த பாகிஸ்தானியர், துருக்கியரை முந்தி 25 வருடங்களில் டேனிஸ்காரருக்கு அடுத்த இனமாக இரண்டாவது இடத்தை எட்டித் தொட்டான் ஈழத் தமிழன். எப்படி..?

அன்று தமிழ் பெண்கள் கழுத்தில் இருந்த 10 பவுண் தாலியை பிடுங்குவதற்காக சிங்கள இனவாதம் யூலைக்கலவரம் நடாத்தியது. இன்று சங்கிலியன் சிலையை உடைத்துவிட்டு இரண்டு பவுண் சங்கிலியை பிடுங்கினாலே போதுமென கிறீஸ் பூதத்தை ஏவுகிறது. ஆனால் இன்று 50 முதல் 100 பவுணுக்கு தமிழர்கள் தாலிக்கொடி போடும் காலம் வந்துவிட்டது. இது தப்பல்ல மிகப்பெரிய சாதனை என்று கூறுகிறார்கள் டேனிஸ் மக்கள்.

ஏன்..?

இன்று உலகம் பூராவும் உள்ள புலம் பெயர் தமிழர்கள் சராசரி வீட்டுக்கு 100 புவண்களையாவது வைத்திருக்கிறார்கள் என்று கணிப்புக்கள் கூறுகின்றன.

இது பற்றி ஒரு திரி ஆரம்பித்து விவாதிப்பதால் பெரும் தகவல்களை நாம் பெறமுடியும் அகோதா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு நன்றி அகோதா.

  • தொடங்கியவர்

கிரேக்கத்தில் பல்லாயிரக்கணக்கான கடைகளுக்கு மூடுவிழா

கிரேக்கத்தின் பொருளாதாரம் முறிவடைந்தது பழைய கதையாகும். இதிலிருந்து மீண்டெழுவதற்காக கிரேக்க அரசால் அறிவிக்கப்பட்ட மீதம் பிடித்தல் கொள்கை பொது மக்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட கொள்வனவு சக்தி வீழ்ச்சி ஆயிரக்கணக்கான கடைகளை பூட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் 68.000 கடைகள் பூட்டப்பட்டுள்ளன. வரும் ஆறு மாத காலத்தில் 53.000 கடைகள் மூடப்படவுள்ளன. தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் 16 வீதமாக இருக்கிறது அடுத்த ஆண்டு 26 வீதமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. கிரேக்க அரசு அரசதிணைக்களங்களில் 30.000 பேருக்கு உடனடி வேலை நீக்கக் கடிதங்களை வழங்கவுள்ளது.

http://www.alaikal.com/news/?p=84095

Greece to miss 2011-2012 deficit targets

Greece won’t meet its 2011-2012 deficit targets imposed by international lenders as part of the country’s bailout, the Finance Ministry said Sunday.

The country’s deficit this year is expected to reach 8.5 per cent of gross domestic product, or €18.69-billion ($25.2-billion U.S.) – higher than the targeted €17.1-billion ($23.1-billion), which would have been 7.8 per cent of GDP, the ministry said.

http://www.theglobeandmail.com/report-on-business/international-news/greece-to-miss-2011-2012-deficit-targets/article2188050/

  • தொடங்கியவர்

பிரிட்டனில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி

கடந்த 1930 ம் ஆண்டுக்கு பின்னர் பிரிட்டனில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டன் மத்திய வங்கி ஆளுனர் மேர்வின் கிங் தெரிவித்தார். பிரிட்டன் கடன் வழங்கும் துறையில் ஏற்பட்ட பின்னடைவை நிறைவு செய்வதற்கு உடனடியாக மக்கள் மன்றில் இருந்து 75 பில்லியன் ஸ்டேளிங் பவுண்சை உவிந்தாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

குறுங்காலத்தில் இப்பணத் தொகையைத் தேடத் தவறினால் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரிட்டன் மீட்பது கடினமாகும் என்றும் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் கொன்ஸ்சவேட்டிவ் மாநில மாநாட்டில் பேசும்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நெருக்கடி பிரிட்டனை வெகுவாக பாதிக்கப் போகிறது என்று தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது. அது இவ்வளவு விரைவாக வரும் என்பது யாருமே எதிர்பாராத விடயமாகும்.

http://www.alaikal.com/news/?p=84450

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதார நிபுணர் தோழர் அகூதா சொன்னால் சரியாகத்தான் இருக்கும் :icon_idea:

  • தொடங்கியவர்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமுகமாக பிரான்ஸ் – ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து புதிய பொருளாதார திட்டமொன்றை இம்மாதம் முன் வைக்கவுள்ளன. பிரான்சிய அதிபர் ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் நடாத்திய பேச்சுக்களின் பின்னர் இந்தத் தகவலை வெளியீடு செய்துள்ளார்.

தற்போது யூரோ நாணயத்தை பாவிக்கும் கிரேக்கம், இத்தாலி, போத்துக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகள் மீட்க முடியாத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளன. இதேபோல இங்கிலாந்து 1930 ற்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. இந்த நிலையில் ஸார்க்கோஸி அறிவிக்கவுள்ள புதிய தீர்வு இப்போதய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்ற வாரம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் பேசும்போது நமது ஐரோப்பிய தலைவர்கள் நினைத்தால் ஒரு சில வாரங்களில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியிருந்தார். அந்த வேண்டுதலுக்கான பதிலே இன்று வெளியாகியுள்ளது.

புதிய திட்டங்களின்படி யூரோ நாணய பாவனையில் உள்ள மத்திய மூலதன அடித்தளத்தை சுழலவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. உலக பொருளதாரம் இந்த இடத்திற்கு என்றோ வரும், அப்போது எய்வதற்காக வைத்திருந்த நாகாஸ்திரத்தை ஸார்க்கோஸி வெளியே எடுக்கவுள்ளார்.

இதை இலகுவாக விளங்குவதானால் தாலிக்கொடியை விற்று கடன் அடைத்த கதை என்று கூறலாம். நூறு பவுணில் தாலிக்கொடியை பதுக்கி வைத்துக் கொண்டு பட்டினியில் கிடந்து என்ன பயன் என்ற இடத்திற்கு அஞ்சலா மேர்க்கலும் – ஸார்க்கோஸியும் வந்துள்ளார்கள்.

http://www.alaikal.com/news/?p=84732

  • தொடங்கியவர்

கிரேக்கத்தை நோக்கி பெருந்தொகை பணம் நகர்கிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருக்கும் கிரேக்கத்திற்கு கிடைக்குமா இல்லை கிடைக்காதா என்று குழப்பமாகக் கருதப்பட்ட பாரிய கடன் உதவி கிடைக்கவுள்ளதாக இன்றைய கிரேக்கத்தின் காலைத் தினசரிகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் குறுங்கால அடிப்படையில் கிரேக்கத்தின் பொருளாதார பிரச்சனை தீர்வுக்கு வருவதாகவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம், ஐரோப்பிய மத்தியவங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றன கொட்டும் பணம் வரும் நவம்பர் மாதம் கிரேக்கத்தை வந்தடையும். கிரேக்கத்திற்கு உடனடியாக எட்டு பில்லியன் யூரோ கிடைக்கவுள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 5.8 பில்லியன் யூரோவையும், சர்வதேச நாணய நிதியத்தின் 2.2 பில்லியன் யூரோவையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் மூலம் தற்காலிகமாக பிரச்சனை தீர்ந்தாலும் கிரேக்கத்தின் கடன் சுமை 60 வீதம் உயர்வடைகிறது.

http://www.alaikal.com/news/?p=84873

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடன் வாங்கி சுகம் காண இன்னும் பல...வரிசைகளில்............

  • தொடங்கியவர்

எல்லா நாடுகளும் சேர்ந்து ஏகமனதாக வாக்களித்தாலே பணம் தரலாம் என்ற நிலையில் சிலவேக்கிய நாடு முதற்கட்ட வாக்களிப்பில் அதற்கு எதிராக வாக்களித்துள்ளது.

Slovak parliament rejects euro rescue fund in first vote

Slovakia's parliament on Tuesday brought down the government by rejecting a plan to expand the euro zone's EFSF rescue fund, crucial to containing a spreading debt crisis.

However, the outgoing finance minister, Ivan Miklos, said the plan could still be approved by the end of the week.

Prime Minister Iveta Radicova had made the issue into a vote of confidence to try to prevent one of her coalition partners, the liberal Freedom and Solidarity (SaS) party, from opposing the EFSF, but in vain.

http://ca.reuters.co...E79A6DN20111011

Edited by akootha

தகவலுக்கு நன்றிகள் அகூதா.

  • தொடங்கியவர்

யூரோ சோன் உதவித் தொகையை சுலோவாக்கியா மறுத்தது

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குப்பட்ட நாடுகளுக்கு பாரிய தொகை பணம் உதவியாக வழங்கப்பட்டு வருகிறது. இப்பணத்தை வேண்டுவதில்லை என்ற தீர்மானத்தை சுலோவாக்கிய பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இப்பணத்தை வேண்டுவதற்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாராளுமன்றில் ஆளும் கட்சி நம்பிக்கை தன்மையையும் இழந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் திருமதி இவாற்ஸ் றடிகோவா கேட்டுள்ளார். இன்றைய நிலையில் கைக்கு வரும் உதவிப்பணத்தை கைவிட்டுவிட்டு பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள முடியாது என்பது அவருடைய வாதமாக உள்ளது. ஆனால் தற்போதய அரசு பதவி விலகி தேர்தலை நடாத்த உடன்பட்டால் மட்டுமே ஆதரவு வழங்க முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பொருளாதாரத்தில் வங்குரோத்து அடைவதும், அவற்றை மீட்க பெரிய உதவி வழங்கப்படுவதும் தற்காலிகமான நிகழ்வாக இருக்கிறது. ஆனால் இந்த நிதி உதவி மேற்கண்ட நாடுகளை ஐரோப்பிய ஒன்றிய வல்லரசுகள் விலை கொடுத்து வாங்கியதைப் போன்ற அதிகார மாற்றத்தை எதிர் காலத்தில் உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

எரிவாயுவை ஐரோப்பாவுக்கு மலிவு விலையில் வழங்கி ஐரோப்பாவின் ஈரல் குலையை பிடிக்க ரஸ்யா எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது பழைய கதை. ஆனால் இப்போது போகும் யூரோ சோன் உதவியிலும் அதைப்போன்ற ஆபத்து கலந்திருப்பதை இதுவரை யாரும் குரலெடுத்து பேசவில்லை.

http://www.alaikal.com/news/?p=84973

  • தொடங்கியவர்

சுலோவாக்கியா ஐரோப்பிய ஒன்றிய நிதியைப் பெற முடிவு

ஐரோப்பிய ஒன்றியத்தால் யூரோ சோன் உதவித்திட்டத்தில் வழங்கும் உதவிகளை பெற விருப்பமில்லை என்று நேற்று அறிவித்த சுலோவாக்கியா இன்று அந்தர் பல்டியடித்து அந்த நிதியத்தை பெற முன்வந்துள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பொன்றில் சுலோவாக்கிய அரசு தோல்வியடைந்தது தெரிந்ததே. இப்போது பிரதான எதிர்க்கட்சித் தலைவரும், மேலும் மூன்று எதிர்க்கட்சிகளும் இந்த நிதியத்தை வாங்க ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். பிரதான எதிர்க்கட்சி தலைவர் றொபேட் பிசோ தனது ஆதரவை இன்று வெளிப்படையாக அறிவித்துள்ளார். இவர் ஆதரவு வழங்கும் முடிவுக்கு வர முக்கிய காரணம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை 2012 மார்ச் 10 ம் திகதி நடாத்த ஆளும் கட்சி உடன்பட்ட காரணத்தினாலேயே எதிர்க்கட்சிகள் இந்த நிதியத்தை பெறுவதற்கான பிரேரணைக்கு ஆதரவு வழங்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நிதி ஒரு நாட்டின் தேர்தலையே தீர்மானிக்குமளவுக்கு பலம் பெற்றுள்ளமை கவனிக்கத்தக்கது.

இந்த நிதியை பெற்றால் நாட்டில் பொது மக்களுக்கு வழங்கும் பல்வேறு உதவிகளை வெட்ட வேண்டும், பலரை வேலை நீக்கம் செய்ய வேண்டும். பாடுபட்டு, உழைத்து முன்னேறும் வேகத்தை நாட்டுக்கு கொடுக்க வேண்டும். எனவேதான் நிதியை பெறுவதற்கு பாராளுமன்ற அங்கீகாரம் அவசியமாக உள்ளது. இதற்காக பல சீர் சிருத்தங்களை செய்த கிரேக்கம் தொடர் போராட்டங்களை சந்தித்து வருவது கவனிக்கத்தக்கது.

http://www.alaikal.com/news/?p=85070

  • கருத்துக்கள உறவுகள்

வாங்குகிறார்கள் சரி?

திருப்பித்தருவார்களா?

இல்லை என்றால் என்னசெய்வது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.