Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு நடுநிலை வகிக்க இந்தியா திட்டம் - காலக்கெடுவை விலக்குமாறும் கூட்டமைப்புக்கு அழுத்தம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு நடுநிலை வகிக்க இந்தியா திட்டம் - காலக்கெடுவை விலக்குமாறும் கூட்டமைப்புக்கு அழுத்தம்?

[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 16:59 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடுநிலை வகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதன்போது, அரசியல்தீர்வு தொடர்பாக 10 நாட்களுக்குள் எழுத்து மூலம் பதிலளிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு வழங்கியுள்ள காலக்கெடுவை விலக்கி கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியா கோரும் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேவேளை, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இந்த ஆண்டு இறுதிப் பகுதியில் சிறிலங்காவுக்கு வரவுள்ள நிலையில், அதற்கு முன்னர் இணக்கப்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு இந்தியா எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.com/view.php?20110807104439

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என்னும் ஒருமுறை இந்திய துரோகம் இளைக்குமா ...........?பொறுத்திருந்து பார்ப்போம், கண்டிப்பாக சிங்களவனுக்கு ஒருபோதும் துரோகம் இளைக்காது இந்தியா என்பது உறுதி.

தமிழருக்கு என்னும் ஒருமுறை இந்திய துரோகம் இளைக்குமா ...........?பொறுத்திருந்து பார்ப்போம், கண்டிப்பாக சிங்களவனுக்கு ஒருபோதும் துரோகம் இளைக்காது இந்தியா என்பது உறுதி.

இந்தியா போர்க்குற்ற விசாரணை வருமுன் தீர்வு என்று எதையாவதை தமிழர் தலையில் கட்டி விட துடிக்கிறது. இதற்கெல்லாம் ஒத்துபோக நம்ம சிங்கள துரைகள் என்ன சுத்த மடையர்களா?.

பொறுத்திருங்கள். போர்குற்ற விசாரணைக்கு பின் தான் தமிழருக்கு அரசியல் விடிவு

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்ற விசாரணையில் குற்றவாளியாக காணப்படும் ஒரு தரப்பு இந்தியா, தமிழ் மக்களுடன் ஒரு சமரசத்திற்கு வந்ததேயாக வேண்டும் தமிழரின் பேரம் பேசும் சக்தியாக உருவெடுத்துள்ள போர் குற்ற விசாரணை ஒரு துருப்பு சீட்டு நாம் இந்த நிலையில் சரியான தீர்வு நோக்கி நகர வேண்டும் அதை விடுத்து மாகாணம், மாவட்டம் என்று குறுகிய வட்டத்திற்குள் சிக்க கூடாது, இந்த விடயத்தில் த.தே கூ அவசரப்படக்கூடாது.

எமது மக்கள் சிந்திய கண்ணீரும் அவலமும் சாதாரணமானதல்ல, அந்த சில நொடிக்கொளைக்கலம் நினைத்து பார்க்க முடியாத கொடூரத்தை மனக்கண்ணில் கொண்டுவருகிறது, வாழ்நாள் முழுவதும் மனதில் இருந்து எம்மை அழுத்தும் குற்ற உணர்வும் கையாலாகாத்தனமும் இந்த பாவத்தை நடத்திய அம்மையார் புற்று நோயில் அழுந்த்துவது போல் எமது மனங்களை அரித்து கொல்வதற்கு முன் எமது மக்களுக்கு ஒரு நல்ல நிரந்ததர தீர்வை பெற்று கொடுப்பதன் மூலமே அந்த காயங்களை ஆற்ற முடியும்.

உலக அரசியல் நமது சார்பாக திரும்புகிறது, அண்மையில் முன்னாள் அவுஸ்திரேலியா பிரதமர் ஒரு சாதாரண உரையாடலில் தென் ஆசியாவில் வலுத்துவரும் சீன ஆதிக்கம் பற்றி எதேச்சையாக கூறிவிட்டார்,இவர் கடந்த காலத்தில் சீனா தொடர்பாக கிலாரியிடம் தெரிவித்த கருத்து விக்கி லிக்சில் வெளியாகி சர்ச்சைக்கு ஆளானார், அண்மையில் சனல் நான்கின் இலங்கையின் கொலைக்களத்தை பார்வையிட்டு விட்டு தனது அதிதிருப்தியை வெளியிட்டதுடன் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்,

தற்போதைய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இவராவார் .

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும், தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க முற்படுகிறார்கள் அதற்கு தமிழக உறவுகள் அனுமதிக்ககூடாது, இந்தியாவிற்கு இப்பொழுது வேறு தெரிவில்லை எப்படியாவது ஈழத்தில் நடந்த இன அழிப்பு தொடர்பான விசாரணையை என்ன விலை கொடுத்தாவது நிறுத்த வேண்டும் அதற்கு ஒரு விலை உண்டு.

எமது மக்களுக்கு சரியான தீர்வு வழங்கப்படாவிட்டால்

எமது மக்களின் கொடூர மரணம் எமது மக்களின் கண்ணீர் இவற்றிற்கு காரணமானவர்களை விட அந்த இழப்புகளை உணர்வுபூர்வமாக அனுபவித்த நாங்கள் தான் இந்த பாவத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் மீள இயலாது.

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சக இந்தியாவை தமிழன் எப்படி நம்புவது?

  • கருத்துக்கள உறவுகள்

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்..

மன்மோகன் சிங்: கலோ மிஸ்டர் ராஜபக்சே ஏதோ தமிழர்களுக்கு அங்க ஊர் பஞ்சாய்த்து எலக்சன் உரிமைய தரபோறீங்களாமா? உண்மையா?

ராஜபக்சே: மிஸ்டர் மனங்கெட்ட சிங் . நீங்க தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கணும் என்று ஏதோ பேப்பரில்லை பேட்டி அளித்தீர்களாமே அதாலதான்..

மன்மோகன் சிங்: நாங்க ஆயிரம் சொல்லுவமய்யா உனக்கு எங்க போச்சு புத்தி?

ராஜபக்சே: ஐயம் வெரி சொறி.

மன்மோகன் சிங்: சரி போகட்டும் . அறிவித்து போட்டீர்கள்.. கிந்தியாவின் வற்புறுத்தலா என கொஞ்சம் பிரிபிக்ஸ் சேர்த்து போடுங்கள் அப்பதான் மாங்கா மடையர்கள் நம்புவார்கள் . கொஞ்சம் நாங்க பில்டப்பை ஏத்த முடியும் புரியுதா?

ராஜபக்சே : சரி ஜீ.. இந்த உலக நாடுகள் அழுத்தம்?

மன்மோகன் சிங்க்: என்ன ஸ்கூலு பிள்ளைகள் மாதிரி.. தெரிவுகுழு அமை .. அதற்கு துணையாக பொறிவுக்கு ழு அமை.. பேச்சுவார்த்தை என்று சும்மா ஒரு 50 வருசம் இழு.. நாங்க செய்யல?

  • கருத்துக்கள உறவுகள்

பிராந்திய சுய நலத்துடன் செயல்படும் இந்தியாவுக்கு எப்போதும் மறைமுகமான நோக்கங்கள் உண்டு.

எனவே இலங்கை விடயத்தில் இந்தியாவால் ஒருபோதும் நடு நிலை வகிக்க முடியாது.

ஈழ தமிழருக்கு திருப்திகரமான தீர்வு இந்தியாவால் கிட்டாது. எந்த ஒரு பேச்சு வர்த்தைக்கும்

அத்தியாவசியமான (அத்திவாரமான) பேரம் பேசும் திறனும் அரசியல் அழுத்தம் கொடுக்கும்

வல்லமையும் தமிழரிடம் இப்போது இல்லை.

இப்போது அமெரிக்கா தானும் ஒரு நிரந்தர பிரதிநிதியை பேச்சுவாத்தைகளுக்கு அனுப்ப வேண்டும். இதை கூட்டமைப்பு அமெரிக்காவிடம் கேட்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.