Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா வீட்டோவை பயன்படுத்தும்; மஹிந்தவிற்கு வாக்குறுதி

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 12, 2011

Mahinda%20and%20Chines%20presiden1t.jpg

மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு சீனப் பிரதமர் இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார்.

போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது.

http://www.eelanatha...%AE%A4%E0%AE%BF

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவிற்கு,

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே......

பின்னாலே தெரிவது அடிச்சுவடு

முன்னாலே இருப்பது அவன் வீடு

நடுவினிலே நீ விளையாடு

நல்லதை நினைத்தே நீ போராடு

நல்லதை நினைத்தே போராடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே.....

உலகத்தில் திருடர்கள் சரி பாதி

ஊமைகள் குருடர்கள் அதில் பாதி

கலகத்தில் பிறப்பதுதான் நீதி

மனம் கலங்காதே மதிமயங்காதே

கலங்காதே, மதிமயங்காதே

மனதுக்கு மட்டும் பயந்துவிடு

மானத்தை உடலில் கலந்துவிடு

இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

இரண்டினில் ஒன்று பார்த்துவிடு

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டுனில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே.............

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் போராட்ட இயக்கங்கள் (விடுதலைப் புலிகள் உட்பட) கம்னியூசிய கொள்கையின் அடிப்படையில் சோசலிச தமிழீழம் என்று உச்சரித்து.. இந்த கம்னிசிய நாடுகளுக்கு அவற்றின் போராட்ட குழுக்களுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால் இறுதியில் சீனா.. ரஷ்சியா (முன்னாள் கம்னிசிய நாடு) பர்மா (மியாண்மார்), வியட்நாம், கியூபா, வெனிசுலா என்று எல்லா கம்னிசிய கம்மனாட்டிகளும் பெரும் இன அழிவிற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தோடு கைகோர்த்து நின்றனர். இன்று முதலாளித்துவ நாடுகள் மட்டுமே போர்க்குற்றம் பற்றியும் பேசுகின்றன. கம்னிசிய கம்மனாட்டிகள்.. போர்க்குற்றவாளிகளுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கின்றனர்.

இதனை ஈழத் தமிழ் இந்திய ஆதரவு கம்னிசிய.. மாக்சிய கட்சிகள் கண்டிக்குமா.. சீனா போன்ற கம்னிசிய சித்தாந்தத்தில் திழைத்திருக்கும் நாடுகளுக்கு எமது நிலையை விளக்குமா..???! எமக்கு நீதி கிடைக்க வழி செய்வார்களா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்பிரச்சனையின் போதும் வேறும் சில பிரச்சனையின் போதும் சீனா ரஷ்யா எதிர்த்த போதும் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது யுத்தம் மேற்கொள்ளப்பட்டதே !

  • தொடங்கியவர்

1985 ஆம் ஆண்டு இலங்கை மீதான தீர்மானம் தோற்கடிப்பில் சீனா

1985 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தொடரில் திம்பு பேச்சை ஆதரித்தும் அதே வேளை அந்த வேளையில் இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட படுகொலைகளை கண்டித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையின் உப குழு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது. (Draft Resolution on Sri Lanka (L65) 1985) இந்த தீர்மானம் சாம்பியா, ரொமானியா, உட்பட பல ஆபிரிக்க நாடுகளின் துணையுடன் சீனாவும் சேர்ந்து தோற்கடித்தது. அது மட்டுமன்றி சீனா இன்னொமொரு கருத்தை அப்போதே கூறியது அதாவது அமெரிக்கா தலையிடக்கூடாது எனவும் கூறியது.

ஆகவே சீனா இருபத்தைந்து வருடத்துக்கு முன்பே தனது குனத்தை ஐ. ந. வில் காட்டி இருக்கு. என்ன செய்யலாம் தமிழ் நாட்டு தமிழர்கள் தான் சீனாவுக்கு ஏதாவது செய்யவேண்டும்.

ஈராக்பிரச்சனையின் போதும் வேறும் சில பிரச்சனையின் போதும் சீனா ரஷ்யா எதிர்த்த போதும் அமெரிக்கா தலைமையில் ஈராக் மீது யுத்தம் மேற்கொள்ளப்பட்டதே !

அதேபோன்று இலிபியாவிலும் கூட நடந்தது. அங்கும் சீனா 'உறுதியளித்த' வீட்டோவை பயன்படுத்தவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.