Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.

(முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது)

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகள் நிறைந்து கிடக்கிறது. இதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வியுதவிக்கான வேண்டுதல்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற சகல இடங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக இன்னும் இயங்குகின்ற முகாம்களில் வாழும் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது.

செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி முகாமில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இம்மாணவர்களுக்குத் தேவையான கற்கை உபகரணங்களான கொப்பி பேனா போன்றவையே மிகுந்த தட்டுப்பாடாக உள்ளது. இவற்றைத் தமக்கு வழங்கமாறு அம்மாணவர்கள் வேண்டுகின்றனர்.

வாழும் முகாமில் அடிப்படை வசதிகள் பெறுதலே மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இருக்க கற்றலை வளப்படுத்த இவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். வெளியில் இருந்து இயங்கும் நிறுவனங்களும் சரி தமிழர்களின் வாக்குகளை வென்றவர்களும் சரி இம்மாணவர்களைத் திரும்பியும் பார்க்காதுள்ளனர். சில பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இம்மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் தொடர்பாக கேட்கப்பட்டும் இன்னும் முன்னேற்றம் எதனையும் காணாத நிலையே.

17.08.2011 அன்று மட்டக்களப்பில் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். தற்போதைய பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள மர்ம மனிதர்களின் தொல்லைகள் தொடர்பாக இந்நிகழ்வு நிகழ்ந்திருந்தது.

இந்நிகழ்வுக்கு கலந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரு CRகொப்பியும் பேனாவும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தது. யோகேஸ்வரன் அவர்களின் அலுவலக வட்டாரங்களிலிருந்து கிடைத்த தரவுகளின் படியும் நேரடியாகப் பார்த்தவர்களின் தரவுகளின்படியும் 8000ஆயிரம் (எண்ணாயிரம் CRகொப்பிகள்) பெட்டிகள் உடைக்கப்படாமல் உறங்குகின்றது.

ஒரு கொப்பியின் விலை 135ரூபா 135,00/= X 8000 = 1080000,00/=

அண்ணளவாக ஒருமில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொப்பிகள் யோகேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தில் உறங்குகின்றன. இத்தொகையை வழங்கிய உறவுகள் மக்களுக்குப் பயன்படத்தானே உதவினார்கள். ஆனால் பொலித்தீன் கழற்றப்படாத கட்டுகளில் உறங்கும் கொப்பிகள் அடுத்த தேர்தல் வரை அப்படியே யோகேஸ்வரனின் அலுவலக அறையில் உறங்கப்போகின்றனவா ? அடுத்த தேர்தலுக்கிடையில் கொப்பிகள் கறையான் அரித்து மண்ணுக்குப் போக முன்னர் ஏன் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்று மீள்குடியேறிய ஊர்களில் கல்வி கற்கும் வசதிகளற்ற மாணவர்களுக்கு வழங்கக்கூடாது ?

மெனிக்பாம் முகாமிற்கு இப்போது சென்றுவரக்கூடிய அனுமதியிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான அனுமதியினைப் பெற்றுச் சென்று கூட அந்த மாணவர்களுக்குக் கறையானுக்கு இரையாகப்போகிற கொப்பிகளை வழங்கலாமே…..?

ஆனந்தகுமாரசாமி முகாமில்வதியும்குடும்பமற்றும்மாணவர்களின்மொத்தஎண்ணிக்கை:-

மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153)

மாணவர்கள்: 5வயதிலிருந்து 10வயதுவரை = 837 (ஆண்கள்: 369, பெண்கள் : 468)

11வயதிலிருந்து 18வயதுவரை = 1194 (ஆண்கள்: 587, பெண்கள் : 607) மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 2031.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியுதவியை எதிர்பார்க்கும் சில இடங்கள் பற்றி:

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர் இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் முழுமையாக இடம் பெயர்ந்து பல மாதங்களுக்குப் பின் மீண்டும் குடியேறினர்.

இப்பிரதேசத்தில் உள்ள மக்களில் அனேகமானோர் யுத்தப் பாதிப்புக்களுக்கு உள்ளானவர்களாகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் கல்வியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன. இதற்கான முக்கிய காரணம் கற்றலுக்கான வளங்கள் இங்கு குறைவாகக் காணப்படுவதும் மக்களின் வறுமை நிலையுமேயாகும்.

மண்முனைதென்மேற்குபிரதேசசெயலாளர்பிரிவு.

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 15500

மொத்தச் சனத்தொகை – 23988 (2007 ஆம் ஆண்டு)

கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 24

போரதீவுப்பற்றுபிரதேசசெயலாளர்பிரிவு

மொத்தக் குடும்பங்கள் (அண்ணளவாக) – 18000

மொத்தச் சனத்தொகை – 38282 (2007 ஆம் ஆண்டு)

கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகள் – 43

இப்பகுதிகள் யோகேஸ்வரன் அவர்கள் எவரினதும் அனுமதியின்றியே போய் உதவக்கூடிய ஊர்கள்.

எங்களுக்காக எஞ்சிய சொத்து கல்வி மட்டுமே. எங்கள் இனத்தின் நம்பிக்கையும் உயிர்ப்பும் அதுவே. அக்கல்வியை வளப்படுத்த யோகேஸ்வரன் அவர்கள் கருணை காட்டுவாராக. தமிழர்களின் வாக்குகளை வென்ற தமிழ் அரசியல்வாதி நீங்கள் என்ற உரிமையோடு கேட்கிறோம் உங்களிடம் உறங்கும் கொப்பிகளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குங்கள்.

இன்னும் மக்களுக்குப் பகிரப்பட வேண்டியவை நிறையவே உங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் தோண்டியெடுத்து உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கமில்லை. மனிதாபிமானத் தேவைகளைப் புரிந்து உரிவர்களுக்கானதை வழங்குங்கள். இம்மக்களின் சேவையே உங்களை அடுத்து வருகிற தேர்தல்களிலும் தொடர்ந்து வாழ வைக்கப் போகிறது.

Edited by shanthy

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.

(முன்குறிப்பு :- எப்ப பார் தமிழர்களின் பிரதிநிதிகளாக விளங்கும் த.தே.கூட்டமைப்பைத் திட்டுவதே உங்கள் வேலையாய்ப் போச்சென்று திட்டாதீர்கள். மக்கள் முன் சொல்லப்பட வேண்டியவற்றை மக்களாகிய நாங்களே சொல்ல வேண்டியுள்ள கடமை இருக்கிறது)

கண்ணால் காண்பதுவும், காதால் கேட்பதுவும் பொய்யாகலாம்.

யோகேஸ்வரன் அவர்கள் பல நல்ல பணிகளை செய்துவருவதை நேரடியாக அறிவேன். குறிப்பாக சம்பந்தன் தவிர்ந்த ஏனைய கிழக்குத் தமிழீழ கூட்டமைப்பினர் கூடிய விவேகத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

யோகேஸ்வரன் அவர்கள் இன்று நேற்றல்ல, அரசியலுக்கு வரும் முன்னரே சமூக சேவையில் தைரியமாக நேர்மையாக ஈடுபட்டு வருகிறார். அவர் இன்று அவர் வாழும் பகுதி மக்களுக்கு பலமாக உள்ளார். இதனால் அங்கு வாழ்வே சமூக சேவையென்று ஏமாற்றிப் பிழைப்பு நடத்தும் சில கும்பல்களுக்கு யோகேஸ்வரன் எதிரியாகின்றார். அவர்களின் சொற்களைக் கேட்டு அவர்மீது சேறு வீசுவதை தவிர்க்கவும்.

இன்று பல புலம்பெயர் சமூகங்கள் அவருக்கு நிதியளிக்கின்றன. சிலவேளை பொருட்களாகக் கொடுக்கும் போது. அவற்றை ஒரேடியாக வீண் செய்யாமல் பாதுகாத்து வறியவர்களுக்கு கொடுப்பது வழமை. ஆனால் உங்களுக்கு கொப்பிகள் தேவையென்றால் பொறாமைப்படாமல் அவரிடம் கேட்டால் தந்திருப்பார்.

ஆனால் மர்ம மனிதர்களின் தொல்லைகள் தொடர்பாக நிகழ்வுக்கு கலந்து கொண்டிருந்த ஊடகவியலாளருக்கு ஒரு CR கொப்பியும் பேனாவும் அன்பளிப்புச் செய்யப்பட்டது என்பதை தவறு என்று சொல்லலாம். ஆனால் தமிழ் ஊடகவியலாளர்கள் பெரும்பாலானவர்கள் வறியவர்கள் தான். அவர்களை, குறிப்பாக இக்காலகட்டத்தில், ஊக்கப்படுத்துவதை தவறென்று கருதாமல் இருப்பது நல்லது. அவர்கள் தொழிலுக்குத் தேவையான ஒன்றையே கொடுத்துள்ளார்.

எனவே சேவை செய்வதிலும் பொறாமைப்பட்டு சேறு வீசி கீழ்த்தர அரசியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் (நேசக்கரம்) செய்யும் சேவை பாராட்டுக்குரியது.

இக்காலகட்டத்தில் யோகேஸ்வரனின் சமூகப் பணிகளில் குறை கண்டுபிடித்து, அதைப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல.

அவர் தைரியமாக சில வேலைகளை செய்துவருகிறார். பலரால் அதைச் செய்யமுடியவில்லை!

என்னடா.......... கவிதை எழுதுறதுக்கு வந்திட்டு ..இங்க என்ன வேலை எண்டு கேட்க மாட்டியள் என்று நம்பிறன்! :)

ஆராவமுதன்... ஆசான்... தயவு செய்து தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

உண்மையான தமிழுணர்வுடன் தம் இனம் கஷ்டப்படுகிறதே ஏதாவது பண்ணவேணும் எண்டு நினைக்கிற ஆட்களுக்கு யார் மீதும் சேறு பூசோணும், யாரையாவது விமர்சிக்கோணும் எண்டு யோசிக்கத் தெரியாது. முடிஞ்சவரை உதவோணும் எண்டுற எண்ணத்தைவிட வேற எதுவுமே மனசில இருக்காது. ஆனாலும்... எங்கட வோட்டுக்களைப் பாவித்து பதவிக்குப் போனபின்... அதன் மூலம் பெற்றுக்கொண்ட அனுகூலங்களை பொதுநலனுக்காக பாவிக்காமல் கிடப்பில் போடுவதை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்!!!!!!

எனக்கும் அந்த உரிமை இருக்கு............ உங்களுக்கும் அந்த உரிமை இருக்கு.

மனதைத் தொட்டுச் சொல்லுங்கோ!!! த.தே.கூட்டமைப்பு தன் முழு வலுவினை எமது தமிழ் இனத்துக்காக செயற்படுத்தி இருக்கிறதா.... இற்றைவரை????????????

எங்கட ??? வோட்டுக்களைப் பாவித்து பதவிக்குப் போனபின்... அதன் மூலம் ???? பெற்றுக்கொண்ட அனுகூலங்களை ???? பொதுநலனுக்காக பாவிக்காமல் கிடப்பில் போடுவதை யார் வேண்டுமானாலும் தட்டிக் கேட்கலாம்!

கற்பனையில் கவிதை வடிக்கலாம்.

ஆனால் கற்பனைகளுடன் ஒரு விவாதத்தை திசைதிருப்புவது அழகல்ல.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது, வெற்றுக் கவிதைகளுக்கு உதவலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் கவிதை வடிக்கலாம்.

ஆனால் கற்பனைகளுடன் ஒரு விவாதத்தை திசைதிருப்புவது அழகல்ல.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது, வெற்றுக் கவிதைகளுக்கு உதவலாம்.

ஆராவமுதன் அவர்தான் ஏட்டுச்சுரைக்காய். விடுங்கோ. ஆனால் விதை போட்டு தண்ணிஊத்தி முளைக்கவிட்டு பந்தல் போட்டு வளர்த்த சுரைக்கொடி பூத்து நிற்கிறது அதற்கான ஆதாரங்கள் தந்தால் அந்த கொப்பிகளை உங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு பெற்றுக்கொடுக்கு முடியுமா?????முடியுமெண்டால் இங்கு வந்து பகிரங்கமாக எழுதுங்கள் விபரங்களும் பகிரங்கமாகத் தரப்படும்..முடியவில்லையா??.வெறும் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது. நீங்கள் எழுதியதுதான்.வெறும் கருத்துக்களும் கறிக்குஉதவாது நன்றி வணக்கம்

சே ...திகதி முடிஞ்ச குப்பிகூட கிடைக்கிதில்லை

Edited by sathiri

முடியும் என்பது உரிவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் ஒன்றை தனது முயற்சியால் சேகரித்தவர் நல்ல காரணங்களுக்காக அவற்றை வைத்திருந்தால், அவரது உரிமையை மீறி காரியம் செய்வது உடன்பாடற்ற விடயம்.

அதுசரி காலாவதியான குப்பியுடன் தான் உங்கள் வாழ்க்கை சென்றதோ?

அதை வைச்சுத்தான் திரும்ப திரும்ப கடிக்கிறன். இல்லாட்டி கதைவிட இயலாதே :lol:

அதை வைச்சுத்தான் திரும்ப திரும்ப கடிக்கிறன். இல்லாட்டி கதைவிட இயலாதே :lol:

:)

கற்பனையில் கவிதை வடிக்கலாம்.

ஆனால் கற்பனைகளுடன் ஒரு விவாதத்தை திசைதிருப்புவது அழகல்ல.

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது, வெற்றுக் கவிதைகளுக்கு உதவலாம்.

ஆராவமுதன்..... கவிதை என்று பெயரை வைச்சுக்கொண்டு கவிதைகளை கற்பனையிலோ... என்னத்திலயோ... எழுதவாறவனுக்கு ஊரில நடக்கிறது தெரியாது; ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்று எதை வேணுமானாலும் நீங்கள் சொல்லலாம்! அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. :)

ஆனால், உண்மை உண்மைதானே!

சாந்தி அக்காவும்...சாத்திரி அண்ணாவும்... அந்த கல்வி உபகரணங்கள் தொடர்பாக குறிப்பிட்ட விடயங்களுக்கு உரிய பதிலை வழங்குங்கள்.

காரணங்கள் தேடினால் ஆயிரம் கிடைக்கும்.

உரியதை உரிய நேரத்தில் செய்தால்தான் அது உதவி!

இப்பொழுது இருக்கும் பொருட்களை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவிவிட்டு மேலதிகமாக முயன்று இன்னும் பல உதவிகளை செய்வது ஒரு சமூக சேவையாளனுக்கு அழகு! அதைவிடுத்து ...... இப்படியா???????????? :huh:

அதுக்கு நீங்கள் வக்காளத்து வேற..... :(

... ஆட்டைக் கடித்து!!!!!!! பின் மாட்டைக் கடித்து!!!!!!!!! .... இப்போ ............???????????????

ஓய் நெல்லை! ... உனக்கேன் உந்த தேவையில்லாத வேலை????????? பேசாமல் இரு!! ... சிறிதரனுக்கு வெடி விழுந்து தலை தப்பியது, இப்போ யோகேஸ்வரனுக்கு ...??????????? ... முடியுமானால் ஒரு மலர்வளையம் ஆடர் பண்ணி விட்டு தயாராக இரு!!!!! ... வேறொன்றும் கதையாதே .... மறக்காதே 100000யூரோ! .... கம்ணு இரு

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆராவமுதன்,

இனி களத்தில் கருத்தாடல்களில் பங்கேற்பதில்லையென்ற முடிவோடுதானிருந்தேன். தவிர்க்க முடியாத நிலமையில் இங்கு எழுதுகிறேன்.

கண்ணால் காண்பதுவும், காதால் கேட்பதுவும் பொய்யாகலாம்.

இப்படி எழுதியிருக்கிறீங்கள்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா மீது யோகேஸ்வரன் பொய்யான குற்றச்சாட்டினை 23.02.2011 அன்று ஒரு இணையம் ஊடாக வெளியிட்டிருந்தார். பார்த்திருப்பீர்கள். திருமதி.கலாமதி பத்மராஜா இந்து மாமன்றம் பற்றி (யோகேஸ்வரன் அரசியலுக்கு வரமுதல்) நிர்வாகம் பற்றி கேட்ட சில கசப்பான விடயங்களுக்கு பழிவாங்கும் முகமாக அரசியலுக்கு வந்த பின்னர் கலாமதியை ஊடகமொன்றில் தாக்கியது யோகேஸ்வரனின் கண்ணாலா காதாலா பொய்யாகியது ?

கலாமதி அவர்களின் மறுப்பு உண்மையை ஊடகங்களும் இருட்டடிப்புச் செய்துவிட்டிருந்தது. மட்டு வாழ் எழுத்தாளர்கள் இணைந்து யோகேஸ்வரனின் பொய்யான கருத்துகளை நிராகரித்த செய்திகூட ஒளிக்கப்பட்டது எங்களது ஊடகங்களால்.

(இதுபற்றி யோகேஸ்வரனிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்) கலாமதியின் விடயம் பற்றி இங்கு கதைத்து கருத்தை திசைதிருப்ப விரும்பவில்லை.

யோகேஸ்வரனிடம் கொப்பிகளை வாங்கி தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்குங்கள். பல முயற்சிகளின் பின்னர் தான் இவ்விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. அவரில் பொறாமைப்பட்டு கொப்பிகளை வாங்கி நாங்களென்ன திரும்பி பள்ளிக்கூடமா போகப்போகிறோம் ? மற்றைய மட்டு த.தே.கூ உறுப்பினர்களிடம் இவரது வழங்கல் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஏன் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் ஆராவமுதன் ? அவரது துணிச்சல் செயற்பாட்டில் சந்தேகத்தையோ தவறான செய்தியையோ தர வேணுமெண்ட எண்ணமில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவரால் மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கறையானுக்கு இரையாக்காமல் பகிரப்பட வேண்டுமென்ற நல்நோக்கில் தான் சொல்லப்பட்டுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களிடம் தான் நாம் உரிமையுடன் கேட்க முடியும்.

பிரதேச செயலர்கள் கூட பலர் யோகேஸ்வரனிடம் இவ்வுதவிகளை வேண்டியும் சாதகமான பதில் எதுவும் வழங்கப்படவில்லை.

ஊடகவியலாளர்கள் யாரும் ஏழைகளாக இருக்கிறோம் எங்களுக்கு கொப்பிகள் தாருங்கள் என்று போவதில்லை. போனதுமில்லை. அவர்கள் யாவரும் செய்தியாளர்களாக இருப்பது மாதம் பெரிய சம்பளத்துடன் வெளிநாட்டு உள்நாட்டு செய்திச் சேவைகள் பத்திரிகைகளில். இது பழையகாலத்து பாவலர்கள் அரசனிடம் போய் பாவுரைத்து தங்கக்காசு பெறுவது போன்ற நிலமையில் எழுதுகிறீர்கள்.

ஆராவமுதன், உங்களுக்கு அவரிடமிருந்து பெற்று வழங்கக்கூடிய கொப்பிகளை மண்முனை போரதீவுப் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுங்கள்.

மேற்படி விடயம் தொடர்பான தகவல் பரிமாறப்பட்டதன் நோக்கம் மக்களுக்கு உதவி கிடைக்க வேணும் என்றதற்காகவே. மற்றும் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை புரிந்து கொள்ளுங்கள்.

பிற்குறிப்பு:-

கலாமதியின் விடயம் தொடர்பான ஆவணங்கள் தேவையெனில் தரப்படும். கலாமதி செய்யாததை செய்ததாக ஊடக அறிக்கை விட்டு கலாமதியை சங்கடத்தில் ஆழ்த்திய யோகேஸ்வரனின் அதிகார ஆழுமை பலருக்கு பலவாறாக நிகழ்ந்திருக்கிறது. கலாமதி வெளியில் சொல்லியிருக்கிறார் பலர் சொல்லாமல் பயந்து கொண்டிருக்கிறார்கள். (யோகேஸ்வரனின் மகனார் பிள்ளையானிற்காகவும் யோகேஸ்வரனுக்காகவும் பயந்து)

இக்காலகட்டத்தில் யோகேஸ்வரனின் சமூகப் பணிகளில் குறை கண்டுபிடித்து, அதைப் பெரிதுபடுத்துவது நல்லதல்ல.

அவர் தைரியமாக சில வேலைகளை செய்துவருகிறார். பலரால் அதைச் செய்யமுடியவில்லை!

ஆசான் ஐயா,

உங்கள் சேவையை மதிக்கிறது போல யோகேஸ்வரனின் சேவைகளை மதிக்கிறோம். அவரில் குறை கண்டுபிடிப்பதாக தவறாக கருதாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

மக்கள் பிரதிநிதி மக்களால் தெரிவு செய்யப்பட்டவரிடம் மக்கள் கேள்வி கேட்பது தவறா ?

முடிந்தால் மண்முனை போரதீவு மீள் குடியேறிய மாணவர்களுக்கு 8000கொப்பிகளில் கொஞ்சத்தையேனும் வழங்க வையுங்கள்.

உரியதை உரிய நேரத்தில் செய்தால்தான் அது உதவி!

கவிதை உங்களது இந்த நிலைப்பாடு தான் எனதும். உரியவர்கள் புரிந்து கொண்டாலே தவிர எங்களால் எதுவும் செய்ய முடியாதுதானே.

...

ஆறும் அது ஆழமில்ல(லை)!!!!!

அது தேடும் கடலும் ஆழமில்ல(லை)!!!!

ஆழம் எது ஐயா????? அந்த ....!!!!

.....

... புலம்பெயர் தேசத்தில் இருக்கும் எங்கள் சனங்கள், இப்ப கொஞ்சம் ஜனநாயக பண்புகளை பின்பற்ற தொடங்கப் பார்க்கிறார்கள் ... என்ன, நாம் யாரையும் கேள்விகள் கேட்கலாம்!! நாம் சொல்வதுகள் தான் ஆதாரங்களாக இருக்குமாம்!!! ... ஆனால் ... ஏன் தெரியவில்லை மற்ரவன், நம்மைப் பார்த்து கேள்வி கேட்கும் போதும், தெரிந்தவைகளை ஆதாரங்களாக சொல்லும் போதும் ... ஏற்க மறுக்கிறோம்!!! ... கொய்யோ, முறையோ என்று போடு போடென்று போட்டு ... இறுதியில் 100000யூரோவும் கேட்கிறோம் .... என்ன ஞாயம்????????

... அண்மையில் ஓர் ஆலயம், கிழக்கு மழை அவலங்கள் சமயம் பல உதவிகளை யோகேஸ்வரனின் வழிகாட்டுதலில் செய்தார்கள்! எனக்கும் அதில் சில பங்குண்டு. இங்கு இச்செய்தி எழுதப்பட்ட பின் கிழக்கை சேர்ந்த சிலருடன் கதைத்தேன், உண்மை என்னவென்றால் ... ஓர் முன்னாள் கூட்டமைப்பு பா.உ, பின் மகிந்தவின் சிந்தனையில் இணைந்தவர்,இப்படியாக சிலரை பாவித்து கூட்டமைப்பிற்கு எதிராக பொய்ப்பிரச்சாரங்களை மகிந்தவின் சிந்தனைக்கு ஏற்ப மேற்கொண்டிருக்கிறார். அவரின் நோக்கம் தமிழர்களுக்கு என்று ஒரு கட்சி தேவையில்லை என்பதே!!! இன்று வவினியாவில் சிங்கள இராணுவ பாதுகாப்பில் இருக்கும் கிழக்கை பிறப்பிடமாக கொண்ட அவர், காய்களை நகர்த்துகின்றார்.

யாழும் இதற்கு பலி ஆக வேண்டுமா???? முன்பும் சிறிதரனையும் யாழில்தான் இலக்கு வைக்கத் தொடங்கப்பட்டது!!!! இப்போ யோகேஸ்வரன்!!! நாளை?????????

... சிலருக்கு உபயோகப்படும் எதிர்காலத்தில் .... யாருக்கும் இங்கிருந்து மலர்வளையம் அனுப்புவதாயின் ....

http://www.interflora.co.uk/flowers-florists-delivery-reeth/town/

... தொடர்பு கொள்ளுங்கள்!!!

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்களை வசதிக்கேற்ப திரித்து, அர்த்தமற்ற விதண்டாவாதத்தை மட்டுமே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.

இதில் அருகில் இருப்பவர்களைவிட எங்கோ ஓடிச்சென்ற ஒருவர் "உரியதை உரிய நேரத்தில் செய்தால்தான் அது உதவி!" என கதை அளப்பதற்கும், அதற்கு வக்காலத்து வாங்க முண்டியடிப்பதையும் மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

மொத்தத்தில் அர்த்தமற்ற விதண்டாவாதத்தை மட்டுமே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பா.உ.யோகேஸ்வரனின் தொடர்புபட்ட செய்தி என்பதால் இங்கு இணைக்கிறேன்.

மட்டக்களப்பில் காணி சுவீகரிப்பு சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றச்சாட்டு – உண்மையில்லையென மறுக்கிறார் பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா

23.02.2011ம் திகதி சுவிசில் இருந்து வெளியாகும்.

இணையத்தளத்தல் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லையென மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் மறுக்கிறார். அத்துடன் உண்மையான தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக அச்செய்தியில் குறிப்பிட்டபடி காணி சுவீகரித்த வேளை பிரதேச செயலாளராக தான் கடமையில் இருக்கவில்லை எனவும்

அத்துடன் அக்காணி சுவீகரிக்கப்படும்போது அப்பிரதேசம் ஈச்சமரக் காடுகளையும், சிறிய முட் புதர்களையும் செடி கொடிகளையும் கொண்ட காட்டுப்பிரதேசமாக காணப்பட்டதாகவும் இதனால் அக்காணி துப்பரவு செய்யப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடமைப்பதற்காக அப்போது பதவியிலிருந்த பிரதேச செயலாளரினால் சுவீகரிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கூறுவதைப் போன்று உதயநகர் பகுதியைச் சேர்தவர்கள் வீடமைத்து குடியிருக்கவில்லை. மேலும் உதயநகர் பகுதியில் குறிப்பிடப்பட்ட மக்கள் குடியிருந்திருந்தால் எக்காரணம்கொண்டும் அக்காணி சுவீகரிக்கப்பட்டிருக்க மாட்டாது. இது ஒரு முக்கிய விடயமாகும். அவர்கள் காணியில் குடியிருக்காத நிலையிலேயே காணி சுவீகரிக்கப்பட்டிருந்தது. இது எல்லோரும் அறிந்த விடயமாகும். மேலும் சுனாமி வீடமைப்புத் திட்டத்திற்கு இடையூறாக சுவீகரிக்கப்பட்ட காணியினை சத்துருக்கொண்டான், கொக்குவில், திராய்மடு பகுதி மக்கள் அத்துமீறி பிடித்த நிலையிலேயே அம்மக்களை காணியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதைப்பற்றிய உண்மை நிலையினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அரச உயர் அதிகாரிகளும் அறிந்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் அரச நடைமுறைகள் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே குறித்த காணி சுவீகரிக்கப்பட்டதே தவிர ஒழுங்கற்ற முறையில் எந்த அரச அதிகாரிகளும் காணி சுவீகரிப்பில் ஈடுபடவி;ல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

......................................................................................................................................................................................

மட்டுவாழ் எழுத்தாளர்களின் மறுப்புக்கடிதம்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு மட்டு வாழ் தமிழ் எழுத்தாளர்கள் விடுக்கும் ஓர் அன்பான வேண்டுகோல்

“சுனாமி வேளை உறுதிக்காணி சவீகரிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கையால் பதில் காணி வழங்க ஏற்பாடு”

என்ற தலையங்கத்தில் தமிழ்வின் இணையத்தளத்தில் தங்களால் வெளியிடப்பட்ட செய்தியைப் படிக்கும்போது பல இடங்களில் முன்னுக்குப்பின் முரணாகவும் விளக்கப்பாடு இன்றியும் அத்துடன் உண்மைக்குப் புறம்பாகவும் காணப்படுகின்றது இதனால் குறித்த செய்தியை எழுதி வெளியிட்ட தங்களிடம் பதிலை எதிர்பார்த்து மட்டு வாழ் தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்கள் சில கேள்விகள்.

(1) கத்தோலிக்க ஆயர் 67 பேருக்கு தனது உறுதிக்காணியை வழங்கி வீடு கட்டிக் கொடுத்தார் என கூறப்பட்டுள்ளது இதில் உறுதிக்காணி என்பது உண்மையா? இதை உறுதிப்படுத்துவீர்களா?

(2) 1990 ஆம் ஆண்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்கள் 2004 ஆம் ஆண்டுவரை ஏன் தங்களது இடத்திற்கு திரும்பவில்லை? அத்துடன் சுனாமி நேரம் சிலபேர் அங்கு வசித்ததாக கூறியிருக்கிறீர்கள் இதையும் தங்களால் உறுதி செய்ய முடியுமா? எமது மாவட்ட உயர் அதிகாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியவர்கள் இதை யாராலும் மறுக்க முடியாது நீங்கள் உட்பட.

(3) மட்டக்களப்பில் உயர் காரியாலயங்களில் உயர் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பல ஏக்கர் காணி இருந்தும் அவற்றை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்க வழங்கவில்லை என கூறியிருக்கிறீர்களே இந்த உயர் காரியாலயம் என்பது என்ன? அத்துடன் அவைகளில் உயர் உத்தியோகம் பார்ப்பவர்கள் என்பது யாரைக் குறிக்கின்றது?

(4) காணி சுவீகரிப்பு அறிவித்தல் இரண்டு வருடங்களுக்கு முன் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டதென கூறியிருக்கிறீர்கள் அது எப்போதென கூற முடியுமா? அத்துடன் விசாரணை செய்த மனித உரிமைக் குழு என்ன தீர்ப்பு கூறியதென நீங்கள் சொல்லவில்லை ஆனால் பிரதேச செயலாளர் அங்கு வந்த மக்களை அச்சுறுத்தியதாகவம் பொலிசாரைக் கொண்டு தாக்கியதாகவும் கூறியிருக்கிறீர்களே இதையும் நிரூபிக்க முடியுமா?

(5) குறித்த மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் முறையிட்டும் மலையக மக்கள் என்பதால் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவி;ல்லை என கூறியிருக்கிறீர்கள் அப்படியானால் முன்பிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களுக்கு எதிரானவர்கள் என கூறுகிறீர்களா?

(6) பிரதேச செயலாளருக்கு சாதகமான தீர்ப்பு வரவேண்டும் என்பதற்காக நீதிமன்றமே நீதிக்கு முறம்பாக செயற்பட்டதாக கூறியிருக்கிறீர்களே அப்படியானால் நீதி மன்றத்தையும் இந்த இடத்தில் குற்றம் சாட்டுகிறீர்களா?

(7) இந்த நில சுவீகரிப்பு விடயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு குறித்த மக்கள் மனுகொடுத்ததாக கூறியிருக்கிறீர்கள் ஆனால் அவர்கள் என்ன பதில் கூறினார்கள் என சொல்லவில்லையே அப்படியானால் பிரதேச செயலாளரின் சவாலை அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் எனபதுதானே அர்த்தம்.

(8) ஆனால் நீங்கள் சொல்வதை முஸ்லிம் அமைச்சர் கிஸ்புல்லா மாத்திரம் செவிமடுத்து குறித்த மக்களுக்கு காணி வழங்குமாறு பிரதேச செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறியிருக்கிறீர்களே அப்படியானால் ஏன் அவர் அரசாங்க அதிபர் மற்றும் முதலமைச்சரிடம் இது விடயமாக பேசவில்லையா?

(9) பிரதேச செயலாளர் மிகவும் மோசமான காணியை மிகவும் தூரமான இடத்தில் குறித்த மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறீர்கள் அப்படியானால் எந்த இடத்தில் எப்படிப்பட்ட காணி எனக் கூறமுடியுமா?

(10) தமிழ் இனத்திற்கு எதிராக அரச அதிகாரிகள் செயற்படுவதாக கூறியிருக்கிறீர்களே அவ்வாறாயின் அந்த இடத்தில் சிங்கள மக்களையோ அல்லது முஸ்லிம் மக்களையோ குடியேற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்களா?

(11) இறுதியாக குறித்த பிரதேச செயலாளரின் முறையற்ற செயலுக்காக அவரை வேற இடத்திற்கு இடமாற்றம் செய்ய அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறீர்களே அப்படியாமால் அந்த அரசியல் வாதி நீங்கள் தானா? அரசியல் வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

தவறு செய்கின்ற அரச அதிகாரிகளை விசாரித்து தண்டனை வழங்க அதற்கான அமைப்புகள் இருக்கும்போது சட்ட சபையில் அங்கத்தவராக இருக்கும் நீங்களே சட்டத்திற்கு புறம்பாக செயற்படலாமா? ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறான நாகரீகமற்ற முறையில் ஒரு அரச அதிகாரி மீது தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் யாரோ மொட்டைக் கடதாசி எழுதுவதைப் போன்ற வாசகங்களுடன் அறிக்கை இடுவதா?

இவரைப் போன்றவர்களை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ததற்காக தமிழ் எழுத்தாளர்களாகிய நாங்களும் வெட்கித்து தலை குனியவேண்டியுள்ளதை நினைத்தால் வேதனையாக இருக்கின்றது.

பல வருடங்களுக்கு முன்பு இந்து இளைஞர் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற செயற்பாடு பற்றி குறித்த பிரதேச செயலாளர் தன்னிடம் கேட்டதற்காக பழிவாங்கும் நோக்கோடு பிரதேச செயலாளர் மீது இவ்வாறு நடந்துகொள்வதானது பாராளுமன்ற உறுப்பினரான தங்களுக்கு எந்த வகையிலும் நன்மை பகிக்காது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள் ஐயா அவர்களே.

இப்டியே ஆளாளுக்கு குறைபுடிகாதீங்க மிஸ்டர்.சாத்திரம்..!

அப்புறம் என்ன... தேதி முடிஞ்ச குப்பியா? உப்புத்தண்ணில ..விழுந்தாமட்டுமே குப்பியோட வீரியம் குறையும்னு நானு சொன்னா... நீங்க ஏற்கவா போறீங்க?

இது நான் குறை பிடிக்கல்லீங்கோ..ஏற்கனவே வெளியான செய்திகள்தானுங்கோ.மத்தபடி அந்த கொப்பி கரையான் புடிச்சாலேன்ன. மழையிலை நனைஞ்சு நாசமாய் போனால் எனக்கென்ன. ஆனால் அது பிரயோசனப்பட்டால் நல்லது என்கிற ஆதங்கம்தான்.மத்தபடி குப்பியை நான் உப்பத்தணியிலையெல்லாம் போட்டு ஆராச்சி செஞ்சது கிடையாது. செய்து பாக்க இப்பஅதுவும் இல்லை.

........... சோழியன் குடுமி சும்மா ஆடுமா? ......... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

கருத்துக்களத்தில் பல பிரிவுகளும், உபபிரிவுகளும் உள்ளன. அவை ஆக்கங்களை/கருத்துக்களை வகைபிரித்து இணைப்பதற்குத்தான்.

ஊர்ப்புதினம் பகுதி செய்திகளை இணைப்பதற்கே. அங்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை புதிய செய்திகளாகப் பதியாதீர்கள். ஏற்கனவே இணைக்கப்பட்ட செய்தியை மறுபடியும் இணைக்காதீர்கள். எனவே, செய்திகளை இணைக்கும் போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும்.

:lol: :lol: :lol::icon_idea:

ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்களை வசதிக்கேற்ப திரித்து, அர்த்தமற்ற விதண்டாவாதத்தை மட்டுமே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.

இதில் அருகில் இருப்பவர்களைவிட எங்கோ ஓடிச்சென்ற ஒருவர் "உரியதை உரிய நேரத்தில் செய்தால்தான் அது உதவி!" என கதை அளப்பதற்கும், அதற்கு வக்காலத்து வாங்க முண்டியடிப்பதையும் மட்டுமே காணக்கூடியதாக உள்ளது.

மொத்தத்தில் அர்த்தமற்ற விதண்டாவாதத்தை மட்டுமே இங்கு காணக்கூடியதாக இருக்கிறது.

விதண்டாவாதம்??? அதை நீங்களே செய்துகொண்டு மற்றவர்களைச் சாடுவது எவ்வகையில் நியாயம்?

ஆராவமுதன்.........! இங்கு யாருக்கும் யாரும் எதிரியல்ல. உறவுகள் என அன்புடன் அழைக்கின்றோம்! ஒரு நல்ல விசயத்துக்காக கருத்துக்கூற முனைவதை இப்படியா எடுத்துக்கொள்வது??????????? ^_^

கதையளக்கிறதும் வக்காளத்து வாங்கிறதும் எங்கள் வேலை இல்லை.

அதுசரி....., உண்மையைச் சொன்னால் உறைக்குதே...............!

ஏன்......??? :D

எங்கையோ இடிக்குதே...... ஆராவமுதன்??????????? :rolleyes:

(1) எது உண்மை? (2) எது நல்லது? (3) சேறு வீசுவது நல்லதா? (4) இவற்றை நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்?

(5) ஒரு பொருளை குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

(6) ஒருவர் தனது முயற்சியால் பெற்றவற்றை, அதைக் குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று அந்த ஊரையே, அந்த ஊரின் இன்றைய நிலைமைய நேரடியாக அறியாதவர்கள் சொல்வது எதனடிப்படையில் நியாயம்?

(7) ஒருவர் தனது முயற்சியால் பெற்றவற்றை, அதை துஷ்ப்ரயோகம் செய்யாதவரை, அதைக் குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று ரோட்டில் போய் வருபவர்கலேல்லாம் சொல்வது எதனடிப்படையில் நியாயம்?

(8) ஒரு பொருளை குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

(9) ஒருவர் தனது முயற்சியால், தனக்கு தெரிந்தபடி, தான் விரும்பும் மக்களுக்கு நன்மை, உதவி செய்வது உங்களை எப்படி பாதிக்கிறது?

(10) சரி, நீங்கள் அவருக்கு எப்போதாவது உதவி செய்திருக்கலாம்! அதற்க்காக அவர் காலம் முழுவதும் உங்கள் சொற்படிதான் ஆடவேண்டும் என நினைப்பது எப்படி நியாயமாகும்?

(11) சேவையையும் அரசியாலாக்குவது தான் நீங்கள் செய்ய முனையும் நல்ல விடயமா?

தைரியம், துணிவு, நேர்மை இருந்தால் வளவவென்று ஆளுக்காள் வக்காலத்து வாங்குவதுடன் விடயத்தை திசை திருப்பாமல், தொடர்ந்து விதண்டாவாதம் செய்யாமல் நேரடியாக மேலுள்ள 11 கேள்விகளுக்கு தனித்தனியாக பதில் அளிக்கவும். நேரடியாக பதில் அளிக்கவும்.

ஆரம்பத்திலிருந்து முழுமையாக வாசிப்பவர்களுக்கு, யார் சேறு வீச ஆரம்பித்தார்கள்?, இடையில் புகுந்து உளறிக்கொட்டுபவர்கள் யார்? அவர்கள் ஏன் புதுப்புது விடயங்களை இணைத்து திசை திருப்ப முயற்சித்தார்கள்? எனவே அவர்களின் உள்நோக்கம் என்ன? தொடர்ந்தும் இடையில் புகுந்து விதண்டாவாதம் புரிபவர்கள் யார்? தொடர்ந்தும் இடையில் புகுந்து ஈன வேலைகள் செய்பவர்கள் யார்? என்பது விளங்கும்.ஆரம்பத்திலிருந்து முழுமையாக வாசிப்பவர்களுக்கு, இவை நன்கு விளங்கும்.

தமிழர்களுக்கு உதவா(த)தா…? 8000CRகொப்பிகளும் பேனாக்களும்..! உறங்குமிடம் த.தே.கூ.பா.உ. யோகேஸ்வரன் அலுவலகம்.

அண்ணளவாக ஒருமில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான கொப்பிகள் யோகேஸ்வரன் அவர்கள் அலுவலகத்தில் உறங்குகின்றன. இத்தொகையை வழங்கிய உறவுகள் மக்களுக்குப் பயன்படத்தானே உதவினார்கள். ஆனால் பொலித்தீன் கழற்றப்படாத கட்டுகளில் உறங்கும் கொப்பிகள் அடுத்த தேர்தல் வரை அப்படியே யோகேஸ்வரனின் அலுவலக அறையில் உறங்கப்போகின்றனவா ? அடுத்த தேர்தலுக்கிடையில் கொப்பிகள் கறையான் அரித்து மண்ணுக்குப் போக முன்னர் ஏன் பாதிக்கப்பட்ட செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமிமுகாம் மாணவர்களுக்கு அல்லது கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்று மீள்குடியேறிய ஊர்களில் கல்வி கற்கும் வசதிகளற்ற மாணவர்களுக்கு வழங்கக்கூடாது ?

எங்களுக்காக எஞ்சிய சொத்து கல்வி மட்டுமே. எங்கள் இனத்தின் நம்பிக்கையும் உயிர்ப்பும் அதுவே. அக்கல்வியை வளப்படுத்த யோகேஸ்வரன் அவர்கள் கருணை காட்டுவாராக. தமிழர்களின் வாக்குகளை வென்ற தமிழ் அரசியல்வாதி நீங்கள் என்ற உரிமையோடு கேட்கிறோம் உங்களிடம் உறங்கும் கொப்பிகளை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்குங்கள்.

இன்னும் மக்களுக்குப் பகிரப்பட வேண்டியவை நிறையவே உங்களிடம் இருக்கிறது. அதையெல்லாம் தோண்டியெடுத்து உங்களை சிக்கலில் சிக்க வைக்கும் நோக்கமில்லை. மனிதாபிமானத் தேவைகளைப் புரிந்து உரிவர்களுக்கானதை வழங்குங்கள். இம்மக்களின் சேவையே உங்களை அடுத்து வருகிற தேர்தல்களிலும் தொடர்ந்து வாழ வைக்கப் போகிறது.

நீங்கள் எழுதியிருக்கும் சில விசையங்கள் வெறும் அநுமானங்கள். சில இங்கே வந்திருக்க தேவைதான என்பது நிச்சயமில்லை. நீங்கள் இதற்கடுத்து எழுதியிருக்கும் விசையங்களை வைத்து பார்த்தால் உங்களுக்கு யோகேஸ்வரனுடன் நேரடி தொடர்பு வைக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கும். ஆனால் யாராவது ஒருவர் நேசகரத்திலிருந்து அவருக்கு கொப்பிகளை தானம் செய்யகேட்டு எழுதி, அவர் நேசகரத்திற்கு மனச்சாட்சியான பதிலை தராமலிருந்திருக்கிறாரானால் நீங்கள் இந்த திரியை தொடரலாம். அல்லாவிடில் நீங்கள் அவருக்கு பதிலளிக்க காலக்கெடு கொடுத்துவிட்டு, யாழ் முகாமைத்துவத்திற்கு அறிவித்து இந்த திரியை தற்காலிகமாக பூட்டுவிக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

(1) எது உண்மை? (2) எது நல்லது? (3) சேறு வீசுவது நல்லதா? (4) இவற்றை நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்?

(5) ஒரு பொருளை குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

(6) ஒருவர் தனது முயற்சியால் பெற்றவற்றை, அதைக் குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று அந்த ஊரையே, அந்த ஊரின் இன்றைய நிலைமைய நேரடியாக அறியாதவர்கள் சொல்வது எதனடிப்படையில் நியாயம்?

(7) ஒருவர் தனது முயற்சியால் பெற்றவற்றை, அதை துஷ்ப்ரயோகம் செய்யாதவரை, அதைக் குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று ரோட்டில் போய் வருபவர்கலேல்லாம் சொல்வது எதனடிப்படையில் நியாயம்?

(8) ஒரு பொருளை குறித்த நேரத்தில், குறித்த மக்களுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

(9) ஒருவர் தனது முயற்சியால், தனக்கு தெரிந்தபடி, தான் விரும்பும் மக்களுக்கு நன்மை, உதவி செய்வது உங்களை எப்படி பாதிக்கிறது?

(10) சரி, நீங்கள் அவருக்கு எப்போதாவது உதவி செய்திருக்கலாம்! அதற்க்காக அவர் காலம் முழுவதும் உங்கள் சொற்படிதான் ஆடவேண்டும் என நினைப்பது எப்படி நியாயமாகும்?

(11) சேவையையும் அரசியாலாக்குவது தான் நீங்கள் செய்ய முனையும் நல்ல விடயமா?

தைரியம், துணிவு, நேர்மை இருந்தால் வளவவென்று ஆளுக்காள் வக்காலத்து வாங்குவதுடன் விடயத்தை திசை திருப்பாமல், தொடர்ந்து விதண்டாவாதம் செய்யாமல் நேரடியாக மேலுள்ள 11 கேள்விகளுக்கு தனித்தனியாக பதில் அளிக்கவும். நேரடியாக பதில் அளிக்கவும்.

ஆரம்பத்திலிருந்து முழுமையாக வாசிப்பவர்களுக்கு, யார் சேறு வீச ஆரம்பித்தார்கள்?, இடையில் புகுந்து உளறிக்கொட்டுபவர்கள் யார்? அவர்கள் ஏன் புதுப்புது விடயங்களை இணைத்து திசை திருப்ப முயற்சித்தார்கள்? எனவே அவர்களின் உள்நோக்கம் என்ன? தொடர்ந்தும் இடையில் புகுந்து விதண்டாவாதம் புரிபவர்கள் யார்? தொடர்ந்தும் இடையில் புகுந்து ஈன வேலைகள் செய்பவர்கள் யார்? என்பது விளங்கும்.ஆரம்பத்திலிருந்து முழுமையாக வாசிப்பவர்களுக்கு, இவை நன்கு விளங்கும்.

ஆராவமுதன்!

உங்களது 11 கேள்விகளுக்கும் என்னால் உறுதியாகப் பதிலளிக்க முடியும்!

ஆனால்... அவற்றிற்குப் பதிலளித்தால் நானும் விதண்டாவாதம் பண்ணுகின்றமாதிரி ஆகிவிடும்.

ஒரு நல்ல விடயத்துக்காக ஒரு எதிர்பார்ப்புடன்கூடிய கருத்தினை முன்வைத்தது.....

கஷ்டப்படும் எம் உறவுகளுக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான்!

இது யார்மீதும் சேறு பூசுவதற்கோ அன்றி வீண்பழி சுமத்துவதற்கோ இல்லை!

ஏற்கனவே சொல்லவேண்டியதெல்லாம் சொல்லியாச்சு! இதற்குமேல் சொல்லிப் புரியவைக்கவேண்டிய விடயங்கள் எதுவுமில்லை என்று நினைக்கின்றேன்!

உங்களால் முடிந்தால் , ஒரு நல்ல விடயத்துக்கு துணை நில்லுங்கள்....!!! இல்லாவிட்டால் பரவாயில்லை.

உண்மையான நல்லுள்ளத்தோடு நல்லெண்ணத்தோடு ஒரு வேண்டுகோளை முன்வைக்கும்போது அதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை... இப்படி ஏன் செய்கின்றீர்கள் ஆராவமுதன்???

உங்களின் எண்ணங்கள் கருத்துக்கள் அனைத்தையும் அறிந்தே நான் இதைச் சொல்கின்றேன்.ஒரு தெளிவான சிந்தனையுள்ள ஒருவர் தாங்கள்...! ஆனால்... இந்தவிடயத்தில்...????

இந்த விடயத்தில் நீங்கள் பார்க்கும் பார்வையும்... நாங்கள் பார்க்கும் பார்வையும் வித்தியாசமான கோணத்தில் இருப்பதே இந்த முரண்பாடான கருத்துப் பரிமாற்றங்களுக்குக் காரணம்!

சரி........ முரண்படுவதை விடுத்து, அந்த உதவிகளை அவர் விரும்பிய வகையில் (தாங்கள் குறிப்பிட்ட மாதிரி) உரியவர்களுக்குச் சென்றடைகின்றதா என்பதனை யாழ் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள். எல்லோருமாக மகிழ்ச்சியடைவோம்!

அதுவரைக்கும்............ இந்தத் திரியில் இதுவேதான் என் இறுதிக் கருத்தாக அமையும்.

"நன்றே செய்.... அதையும் இன்றே செய்"

ஆராவமுதன்!

உங்களது 11 கேள்விகளுக்கும் என்னால் உறுதியாகப் பதிலளிக்க முடியும்!

ஆனால்... அவற்றிற்குப் பதிலளித்தால் நானும் விதண்டாவாதம் பண்ணுகின்றமாதிரி ஆகிவிடும்.

அதுவரைக்கும்............ இந்தத் திரியில் இதுவேதான் என் இறுதிக் கருத்தாக அமையும்.

மீண்டும் விதண்டாவாதம் செய்வது, அடிப்படை இல்லாமல் கற்பனையில் கதையளப்பது, முதலைக்கண்ணீர் வடிப்பது மட்டுமே தெரியும் என்று தெளிவாக நிரூபித்துள்ளீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.