Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கை நிறைவேற்றுமாறு உத்தரவு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

26 ஆகஸ்ட் 2011

தூக்குத் தண்டனை விவாகரம் தமிழக சட்ட மன்றத்தில் பேச அனுமதி மறுப்பு -தமிழகம் முழுக்க போராட்டம்.

இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் முருகன், சாந்தன் , பேரறிவாளன் ஆகியோர் தூக்கிடப்படலாம் என்ற செய்தி பரவியுள்ள நிலையில் இன்று தமிழக சட்டமன்றத்தில் இன்றூ புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி - ‘’சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை குறீத்து அவையில் விவாதத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக தனக்கு பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால் சபாநாயகர் ஜெயக்குமார் இந்தப் பிரச்சனையை அவையில் எழுப்ப அனுமதியில்லை. வேண்டுமென்றால் என் அறையில் தனிப்பட்ட முறையில் வந்து பேசுங்கள் என்றார். இதனால் டாக்டர் கிருஷ்ணசாமி அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தார். அவைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடுவதற்காக உத்தரவு வேலூர் சிறைக்கு வந்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் தூக்கிலிடும் நிலைமை உள்ளது. தமிழக சட்டமன்றத்தில் அவர்களை காப்பாற்ற கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தால் மட்டுமே அவர்கள் உயிரை காப்பாற்ற முடியும். கடந்த ஒரு வருடமாக இந்த பிரச்சினையை சட்டசபையில் எழுப்ப முயற்சி செய்து வருகிறேன். ஏற்கனவே 2 முறை இதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இன்றும் அனுமதி கேட்டேன். சபாநாயகர் அனுமதி வழங்க வில்லை. எனவே நான் வெளிநடப்பு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுக்க போராட்டம்.

.....................................................

பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் அவரது இல்லத்திலேயே சாகும்வரை உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற உண்ணா நிலை போராட்டத்தை துவங்கியுள்ளனர். பல் வேறு அரசியல் கட்சிகள் மனித் உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் அங்கு ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றத்தைச் சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கான தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரும் கடிதம் வேலூர் சிறைக்கு வந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுக்க பல் பல் வேறு அமைப்புகள் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கோரி தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வந்தன. இன்று நீதிமன்றத்தை நாடி தூக்கை தடுத்து முயர்ச்சியும் அவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதலே தமிழகம் முழுக்க அதிரடி விரைவுப்படையினர் தங்களின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். முக்கிய பிரமுகர்கள் திவீர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசு நிறுவனங்கள் தூதரகம், வங்கி, பௌத்த மடாலயம், உள்ளிட்ட பகுதிகளில் அதிரடிப்படை நிறுத்தப்பட்டுள்ளனர். வேலூர் சிறையைச் சுற்றி அதிரடிப்படை பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வேலூர் சிறையதிரிகளும் சிறைத்துறை ஐஜி யும் வேலூரில் முகாமிட்டு சிறையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் இன்றே முறையீடு செய்தால் மட்டுமே மூவரின் உயிரையும் காப்பாற்றும் சாத்தியங்கள் உள்ள நிலையில், நாளையும், நாளை மறு நாளும் நீதிமன்ற விடுமுறை நாளாகும் இது தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடும் சக்திகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அற்புதம்மாள் சாகும் வரை உண்ணாவிரதம்.

முருகன், சாந்தன். பேரறிவாளன் ஆகியோரின் தூக்கிலிடக் கோரும் உத்தரவு வேலூர் சிறைக்கு வந்து விட்ட நிலையில் பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி நேற்று மாலையிலிருந்து சாகும்வரை உண்ணாவிரதத்தை துவங்கியிருக்கிறார். வீட்டிலிருந்த படியே உண்ணாவிரத்தை துவங்கியிருக்கும் அவரை பல பிரமுகர்கள் சந்தித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலாலிதா மனது வைத்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றினால் இந்த தூக்குத் தண்டனையை நிறுத்த முடியும் என்னும் நிலையில் அவர் முதல்வரிடம் வேண்டியும். இந்திய அரசிடம் தூக்கை நிறுத்தக் கோரியும் இந்த போராட்டத்தை துவங்கியுள்ளார்.

2ஆம் இணைப்பு:- மூவரின் மரணதண்டனையை நிறுத்த இன்று நீதிமன்றத்தில் வழக்கு. ராம்ஜெட்மலானி ஆஜர்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனை வருகிற அக்டோபர் ஏழாம் தேதிக்குள் நிறைவேற்ற வேலூர் மத்திய சிறைக்கு உத்தரவு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், நேற்று நள்ளிரவு தமிழ் அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நாம் தமிழர் சீமான் இல்லத்தில் நடந்தது. இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக அனைவரும் தெரிவித்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி அவசர மனு ஒன்றை தாக்கல் செய்வதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெட்மலானியை களமிரக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்கை நிறைவேற்றுமாறு உத்தரவு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

25-08-2011 - 13:18

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குமர நிழலில் நிறுகும் சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு வேலூர் சிறைக்கு இன்று மாலை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் மூவருமே தங்கள் மீது கருணை காட்டுமாறு இந்திய ஜனாதிபதியிடம் கோரியிருந்த நிலையில் அவர்களின் கருணை மனுக்கல் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீதான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு வேலூர் மத்திய சிறைக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் அவர்கள் தூக்கிடப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவித்தாலும் தமிழகம் முழுக்க இந்த தூக்கிற்கு எதிராக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. இன்னும் இவர்களைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் உதவியை நாட இறுதி முயர்சி எடுக்கப்படலாம் தமிழக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்க தரப்பிலோ அல்லது சிறைச்சாலை தரப்பிலோ, நீதித்துறை மட்டத்திலோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/66185/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை.. ராஜீவ் காந்தியை போர்க்குற்றவாளியாக்கி அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்காமல்.. மறப்போம் மன்னித்தோம் என்று செயற்பட நாம் எப்போது முயன்றோமோ அப்போதே.. இவர்களை தூக்கில் இட்டுவிட்டோம். காலம் கடந்த சில முயற்சிகளை நீண்ட உறக்கத்தின் பின் விழித்தெழுந்து தமிழர்கள் செய்ய விளைகிறார்கள். அவற்றிற்கு எல்லோருக்கும் பொதுவான ஆண்டவன் தான் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து இந்த அப்பாவிகளைக் காக்க வேண்டும். அத்தோடு.. சட்டத்தின் வழியில் போய் தான் ஒரு இடைக்கால தடையைப் பெற்று.. இந்த மரண தண்டனையில் இருந்து தற்காலிகமாக வேணும் இவர்களைச் தப்பச் செய்ய வேண்டும்... அல்லது அந்த 3 பேருக்கும் ஏதாவது ஒரு நோயை உருவாக்கி மரண தண்டனை வழங்குவதை பிற்போடச் செய்ய வேண்டும்... அல்லது சிறை உடைப்பைச் செய்து காக்க வேண்டும்... அல்லது வெகுஜனப் போராட்டம் மூலம் நாட்டை ஸ்தம்பிக்கச் செய்து காக்க வேண்டும். இவை அனைத்தும் வென்றி கண்டால் கூட அது தற்காலிக வெற்றிகளாகவே இருக்கும்.

எப்போது ராஜீவ் காந்தியையும் அவரின் குடும்பத்தையும்.. அவர்களின் செல்வாக்குள்ள காங்கிரஸையும் ஈழத்தில் அவர்கள் செய்த கொடூரத்திற்காக.. மன்னித்து... மறந்து செயற்பட்டமோ அப்பவே நாங்கள் நிற்கதியாகிவிட்டோம்.. இந்த விடயத்தில் மட்டுமல்ல.. எமது போராட்டத்திலும் கூட..! :rolleyes::(

Edited by nedukkalapoovan

இந்த காங்கிரசின் அணுகுமுறை சிங்களத்தின் 'கிரீஸ் பூதம்' போன்றது போலவே உள்ளது. ஒன்றை திசைதிருப்ப இன்னொன்றை அழித்துவிட்ட மாதிரி.

அநேகமாக இது மேலும் காங்கிரஸ் தமிழகத்தில் இருந்து அந்நியப்படித்தியதாகவே முடியும்.

மூவரை தூக்கிலிட உத்தரவிட்டு சிறை அதிகாரிக்கு வந்த கடிதம்

1.jpg

தோழர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர் தோழர்கள் கயல்விழி, வடிவாம்பாள் மற்றும் சுஜாதா காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

imagecom.jpeg

நீண்டகாலம் சிறையில் வைத்திருந்தவர்களை தூக்கில் ஏற்றுவது, காந்தியத்தை பின்பற்றுவதாக பிதற்றிக் கொல்லும் அந்த பலகார மாதாவிற்கே வெளிச்சம்.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நிலைமையை சீர் குலைத்து, ஐனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த தான் காங்கிரஸ் இதை கையில் எடுத்தார்களே தெரியா,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காந்திய நாடு என்ன்று பிதட்டிக்கொள்ளும் எம்மவர்கள் சிலர் இனியாவது திருந்தட்டும்.

நான் தூக்குதண்டனையை முற்றாக நிராகரிப்பவன் எங்கே மனித உரிமைகள் அமைப்புக்கள் சீனா விடயத்திலும் ஈரான் விடயத்திலும் வாய்கிழிய பேசும் இந்த அமைப்பு ஏன் இதற்க்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை ......?

எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்! - பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

தனது மகன் பேரறிவாளன் உயிரை விடுவதற்கு முன்பே தான் தனது குடும்பத்துடன் வேலூர் சிறைச்சாலைக்கு முன்பாக தற்கொலை செய்து கொள்வேன் என பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அறிவித்துள்ளார்.

அத்துடன், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காபபாற்ற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேரறிவாளன், முருகள் மற்றும் சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கில் இடுவதற்கான திகதி குறிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று (26.08.11) போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட போதே பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் அவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 'சாதாரண பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பற்றரியை வாங்கிக் கொடுத்ததற்கா எனது மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளனர். இது என்ன அநியாயம். செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 வருடமாக சிறையில் வாடி வருகிறான்.

எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே நானும், எனது குடும்பத்தினரும் வேலூர் சிறைச்சாலை முன்பாக; தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவோம்.

முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்கள் தான் எனது மகனை காப்பாற்றி என்னிடம் தர வேண்டும். அவரால்தான் இது முடியும். அவரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம்' என கண்ணீத் மல்கத் தெரிவித்துள்ளார் ..

http://ponguthamil.c...6B-C901D7D8FD0E}

Edited by akootha

இதைச் செய்தால், முதல்வர் பெயர் காலமெல்லாம் இருக்கும்!

தூக்கு தண்டனைக்கு எதிரான தமிழகம்!

'இப்போது நாம் வருத்தப்பட வேண்டியது கொடியவர்களின் தீமையைக் காட்டிலும், நல்லவர்கள் என்போரின் மௌனத்​​துக்காக!’ என்று உரக்க முழங்கியபடி, தூக்குத் தண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்​டங்களும் போராட்டங்களும் நடக்க ஆரம்பித்துள்ளன. இதனால், மௌனத்தை உடைக்க வேண்​டிய கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறது மத்திய அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், ஆகியோரின் கருணை மனுக்களை சமீபத்தில் குடியரசுத் தலைவர் நிராகரிக்க... கட்சிப் பாகுபாடு இன்றி, அனைத்துத் தலைவர்களும் கண்டனக் குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் எந்தப் போராட்டம் என்றாலும், அது பொதுவாக சென்னை அல்லது கோவையை மையம்கொண்டே ஆரம்பமாகும். ஆனால், இந்த முறை வீதிக்கு வந்து முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தது ஓசூர்வாசிகள்தான்.

காவல் துறையினர் அனுமதி மறுத்ததையும் மீறி, கடந்த 13-ம் தேதி, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் திரண்ட தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சியினர், ''20 ஆண்டுகளுக்கும் மேல் அநியாயமாக சிறையில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்தவர்களை, இரக்கம் இல்லாமல் தூக்கில் இடுவதா? மத்திய அரசின் இந்த அராஜக முடிவை தமிழக அரசு, ஆளுநர் மூலம் முறியடிக்க வேண்டும்!'' என்று கொந்தளித்தனர்.

அன்று மாலையே மதுரை தலைமைத் தபால் நிலையம் அருகில் பெரும் கூட்டமாகத் திரண்ட தமிழீழ ஆதரவாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள், ''சாந்தன், முருகன், பேரறிவாளன் மட்டும் இன்றி, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அஃப்சல் குரு மற்றும் புல்லர், மகேந்திரநாத் தாஸ் ஆகியோர் மீதான தண்டனைகளையும் ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!'' என்று மதுரையைக் குலுங்க வைத்தனர்.

நாம் தமிழர் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும்இணைந்து கடந்த 16-ம் தேதி, தி.நகர் முத்துரங்கன் சாலையில் நடத்திய பொதுக் கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொண்ட இளைஞர் கூட்டம், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்​தெடுத்தது. தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் சார்பற்ற இயக்கங்கள், தமிழின உணர்வாளர்கள், பொதுமக்கள் அடுக்கடுக்காகப் போராட்டத்தில் குதிக்க... தமிழகத்தில் எழும் இந்த ஆவேச அலையை, உலக நாடுகளும் உற்று நோக்க ஆரம்பித்து இருக்கின்றன.

கடந்த 18-ம் தேதி, மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னையில் இருந்து வேலூர் சிறைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செல்லும் போராட்டம் நடந்தது. நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் பேரணியைத் தொடங்கிவைக்க... சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, வழி நெடுகிலும் உள்ள கிராம மக்களிடம் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு ஆதரவு தேடியபடி சிறையை நோக்கி சீறிப் பாய்ந்தனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சிறைக் காவலர்கள் கொஞ்சம் ஆடிப்போனார்கள்.

கடந்த 19-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சென்னை மெமோரியல் ஹால் முன்பு திரண்டு கண்டனக் குரல் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, கோவை குஜராத் சமாஜ் மண்டபத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு கருத்தரங்கம் நடந்தது. உலக மனிதாபிமானக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு திரண்ட கூட்டத்தில் அந்த மண்டபமே பிதுங்கியது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பெரியார் திராவிடர் கழகம் கு.இராம கிருஷ்ணன், தோழர் பாமரன், தோழர் பிரிட்டோ போன்றோர் கோவையைக் கிடுகிடுக்க வைத்தனர்.

கடந்த 20-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து​கொண்டார் வைகோ. மக்கள் சக்தி கட்சி, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல அமைப்​புகள் ஒன்று திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், 'நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பனியன் அணிந்திருந்தனர். கொளத்தூர் மணி, ஓவியர் சந்தானம், பேராசிரியர் சரஸ்வதி, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் ஆகியோருடன் மேடை ஏறிய வைகோ, மத்திய அரசுக்கு எதிராக முழங்கிவிட்டு, ''முதல்வர் அவர்களே... நீங்கள் மனது வைத்து இந்த மூன்று உயிர்களைக் காப்பாற்றினால், காலம் எல்லாம் இந்த தமிழ்ச் சமூகம் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும். வரலாற்றில் உங்கள் பெயர் பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்...'' என்று ஜெயலலிதாவுக்கு மனம் உருக கோரிக்கை வைத்தார்.

26 தமிழர் உயிர் பாதுகாப்புக் குழு அமைத்து அதில் 23 பேரின் உயிரைக் காப்பாற்றக் காரணமாக இருந்த பழ.நெடுமாறனை ஒருங்கிணைப்​பாளராகக்​கொண்டு 'மூன்று தமிழர்கள் உயிர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இதில், ம.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் பலரும் பாகுபாடு பார்க்காமல் ஒன்றிணைந்து உள்ளனர். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தூக்கினை ரத்து செய்யக் கோரி, 22-ம் தேதி, சென்னை எம்.ஜி.ஆர். நகரில் இந்த இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடந்தது. மேலும், 26-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்தி, மத்திய அரசுடன் மல்லுக்கட்டப் போகிறது இந்த இயக்கம்.

மூன்று தமிழர்கள் உயிர் காப்பதை மட்டுமல்லாமல்... 'இனி யாருக்குமே மரண தண்டனை வேண்டாம்’ என்ற முழக்கத்துடன் தமிழகம் கொந்தளித்து வருகிறது!

மூலம்: ஜூனியர் விகடன் - ஆவணி 28, 2011

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனை தேதி குறிப்பு

26 ஆகஸ்ட், 2011 - 11:48

110826114705_hang_noose_304x171_bbc_nocredit.jpg

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவரும் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஆயுட் தண்டனையாக குறைக்கப்பட்டது.ராஜீவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற தற்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

BBC Tamil

Edited by thanga

  • கருத்துக்கள உறவுகள்

செப்டெம்பர் 9 ம் திகதி இந்த துக்க செய்தியை உலகத் தமிழினம் கேள்விப் பட முன்னர், தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என்னும் நம்பிக்கை உலகத் தமிழர் மத்தியில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குக்கு எதிர்ப்பு நடிகர், நடிகைகள் போராட்டம்-சென்னையில் ரயில் மறியல்

மகன் பேரறிவாளன் உயிரை விடுவதற்கு முன்பே, நான் எனது குடும்பத்துடன் வேலூர் சிறைச்சாலை முன்பு தற்கொலை செய்து கொள்வேன். முதல்வர் ஜெயலலிதாதான் எனது மகனைக் காபபாற்றித் தர வேண்டும் என்று பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் குமுறல் வெளியிட்டுள்ளார். சாந்தன், முருகன் ஆகியோரைத் தூக்கிலிட நாள் குறிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டையில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில்..

சாதாரண பொம்மைகளில் பயன்படுத்தப்படும் பற்றரியை வாங்கிக் கொடுத்ததற்கா எனது மகனுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளனர். இது என்ன அநியாயம். செய்யாத குற்றத்துக்காக எனது மகன் 21 வருடமாக சிறையில் வாடி வருகிறான்.

எனது மகன் உயிரை விடுவதற்கு முன்பே, நானும், எனது குடும்பத்தினரும், வேலூர் சிறை முன்பு தற்கொலை செய்து கொண்டு மாண்டு போவோம்.

எனது மகனை முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள்தான் காப்பாற்றி என்னிடம் தர வேண்டும். அவரால்தான் இது முடியும். அவரைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம் என்றார் கண்ணீர் மல்கினார் குயில்தாசன்.

கலெக்டரை முற்றுகையிட்டு போராட்டம்:

கோவையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சித் தலைவரை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு போராட்டம் நடத்த சட்ட மாணவர்கள் வந்தனர். அப்போது அவர்களை பொலிஸார் தடுத்து வெளியேயே நிறுத்தினர். ஆனால் மாணவர்கள் திமுதிமுவென உள்ளே புகுந்தனர்.

அங்கு விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கலெக்டர் என்னவென்று விசாரிக்க வெளியே வந்தார். இதைப் பார்த்த மாணவர்கள் கலெக்டரை சிறை பிடித்து முற்றுகையிட்டு ஆவேசமாக கோஷமிட்டனர். பின்னர் போலீஸார் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர்.

சென்னையில் ரயில் மறியல்:

இதேபோல சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரம் செல்லும் மின்சார ரயிலை மறித்து சட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ரயில் முன்பு தலைவைத்துப் படுத்து அவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் போராட்டம்:

இதேபோல சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூக்குக்கு எதிர்ப்பு நடிகர், நடிகைகள் போராட்டம்:

இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சென்னையில் இயக்குநர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாரதிராஜா பேசுகையில்:

பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கில் இடுவதை எதிர்த்து திரையுலகினர் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரமும், தகுதியும் முதல்வருக்கு உள்ளது. எனவே, தூக்கு தண்டனையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைத்துறையினர் கடிதம் எழுதுகின்றனர்.

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுக்கவும் திரைத்துறையினர் முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார்.

http://www.tamilthai.com/?p=25084

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.