Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிந்திப்போமா????????????????????

Featured Replies

அண்மையில் இந்தியாவின் தமிழ் மக்களுக்கான செய்தி தமிழர்கழுக்கு சந்தோசத்தைத் தரவில்லை. முருகன் பேரறிவாளன் சாந்தன் ஆகியோருக்கான தூக்குத்தண்டனையைப் , பத்து வருடங்களின் பின்பு உறுதி செய்து , தாம் தமிழர்களுக்கு என்றுமே ஜென்மவிரோதி என்ற செய்தியைப் பலமாக எமது மனங்களில் ஆழமாக முத்திரை குத்தியுள்ளது .

நாம் முள்ளிவாய்கால் அவலங்களின் போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிகரான நிலையை இப்போது அடைந்துள்ளோம் . நாம் வெறும் உணர்சி நிலையில் இருந்து முடிவுகளை எடுப்பதை விட , உணர்வு பூர்வமாகவும் விவேகமாகவும் எம்மை உளப்பூர்வமாக மாற்றுவதன் மூலம் ஒரு அதிர்வலைகளை இந்தியாவிற்கு வருங்காலத்தில் கொடுக்கமுடியும் .

அதாவது.............

இந்தியாவிற்கான பொருளாதரத் தடை கட்டமைப்புகளைப் புலம்பெயர் சமூகத்தில் ஏற்படுத்துதல் . கேட்க சிரிப்பாகவும் இருக்கலாம் . நாம் இங்கு உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளைக்குப் போதுமான மாற்றீடுகள் இங்கு நிறையவே உண்டு . இலங்கைப் பொருட்களை எப்படி நிராகரித்து இலங்கையை சர்வதேசத்தின் முன் துகில்உரித்தோமோ ? அப்படியே இந்தியாவும் எமது நிகழ்சிநிரலில் கொண்டு வரவேண்டும். இது ஒவ்வொருவர் மனதிலும் ஏற்படும் மனமாற்ரத்தினாலேயே சாத்தியமாகும். உதரணமாக , இந்தியாவிற்கான சுற்ருலா , விமானப்பறப்பு , இந்திய விமானக்கம்பனிகள் , திரைபடத்துறையில் படம் எடுக்கறேன் பேர்வழி என்று போவது , இந்திய உணவுப்பொருட்கள் , என எல்லாவற்ரையும் நிராகரித்து எமக்கு என்றொரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கவேணும். சிந்திப்போமா?????????? உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள் .

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான சிந்தனை. ஆனா நாக்குப் பழகிப் போச்சுது. கண் பழகிப் போச்சு. காது பழகிப் போச்சு. அதனால... எப்பிடி மாறமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மரணதண்டனை என்னும் போராட்டத்தை.... பதாகைகள் மூலம் ஒவ்வொரு பெரியநகரங்களிலிலும் முன்னெடுக்க வேண்டும். அத்துடன் பிரபல பத்திரிகைகளுக்கும் இம் மூவருக்கும் மரண தண்டனை 9ம் திகதி விதிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும். இதன் மூலமாவது இந்தியாவின் ஐ.நா. சபை நிரந்தர உறுப்பினர் என்னும் ஆசை நிறைவேறாமல் போக வேண்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொருள்களை புறக்கணிக்கிறதென்பதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமானதல்ல ஏனெண்டால் சிறிலங்கா பொருள்களையே எங்கடையாக்கள் மக்கள்கடைகள் உட்பட புறக்கணிக்கமுடியவில்லை. ஆனால் உடனடியாக புலம் பெயர் தமிழர்கள் எதிர்ப்பு இந்திய அரசை அடையவேண்டுமாயின். ஒவ்வொரு நாட்டின் மனிதவுரிமை அமைப்புகளின் உதவிகளுடன் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் இந்திய விசா கொடுக்கும் தனியார் பயண நிறுவனங்களின் முன்னால் நின்று பொதுமக்களிற்கு இடைஞ்சல் தராதவண்ணம் கவனயீர்ப்பு நிகழ்வுகள் துண்டுப்பிரசுரங்களை வினயோகித்தால்.இந்தியாவிற்கு பயணம் செல்லவிருக்கின்ற பயணிகள் கவனத்தை திருப்புதலோடு இந்திய தூதரகங்களின் வாசலில் நின்று கோசங்களை எழுப்பினால் அவை உடனடி பலனை தரலாம். அதே நேரம் காங்கிரஸ் ராகுலை அடுத்த பிரதமராக்குவதற்கு அவரை மனிதாபிமானியாக கட்டுவதற்கு ராகுல் காந்தியே தூக்கிலிட உத்தரவு கிடைத்தவர்களிற்கு கருணை காட்டும்படி ஒரு சினிமா அரங்கேறி அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்படலாம்.

இது மரணதண்டனையுடன் நின்றுவிடும் விடயமல்ல,இன்னமும் எப்படி எல்லாம் எல்லாம் தொடரப்போகுதோ தெரியாது?

எமக்கு ஒரு அரசியல்தீர்வு கிடைக்கும் வரை எமது நிலைமாறபோவதில்லை.

என்னைப் பொறுத்தவரையில் மாற்றம் தேவைப்படுவது எங்கள் சிந்தனைகளிலும் செயல்பாட்டிலும் தான்.இன்றும் அரசியலாய்வாளர்கள் என்ற பெயரில் நஞ்சையும் பொய்யையும் கக்கிக்கொண்டு இல்லாத இடத்திற்கு வழி காட்ட நிற்கின்றார்கள்.

முள்ளிவாய்காலுடன் எமது போராட்டத்தை சுயவிமர்சனதிற்கு உட்படுத்தி அதிலிருந்து புதுஅத்தியாயம் தொடங்கியிருக்கலாம் ஆனால் பணத்துடன் உள்ளவனும் பதவியில் உள்ளவனும் எதற்கும் தயாரில்லை,கருணாநிதியை குறைசொல்லமுதல் எங்களில் இருக்கும் சுயநலவாதிகளை இனம் கண்டு நடந்தாலே பாதித்தூரம் தாண்டியதுமாதிரி.

யாழிலேயே இன்னமும் பலர் கனவுலகில்தான் இருக்கின்றார்கள்.ஒருவனை கண்முடிநம்புவதும் பின்னர் எமக்கு சாதகமாக அவன் நடக்காதமட்டில் அவனை திட்டுவதுமாகவே பலர் பொழுதுபோகின்றது.தாங்களாக எதுவும் செய்யவும் எவரும் தயாரில்லை.உலகமாக பார்த்துஎதுவும் செய்தால்தான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொருட்களை நிராகரித்தோமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.